Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19125
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/07/23 in all areas

  1. 📸 Watch this video on Facebook https://fb.watch/oNyWt9N9rF/?mibextid=j8LeHn ஒரு மாடு வீதியைக் கடக்க எவ்வளவு அவதானம்.
  2. இருந்தாலும் சுரேனைவிட திறமாகத் தான் இருக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
  3. 1) பேச்சுவார்த்தை நடத்துவது நன்மையானதா அல்லது தீமையானதா? 2) பேச்சுவார்த்தை நன்மையானது என்றால் யார், யாருடன் பேசலாம்? 3) பிரித்தானியாவில் இருந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களுக்கு மேற்குலகின் அனுசரணை இன்றி பேச்சுவார்த்தை நடாத்த முடியுமா? 4) பேச்சுவார்த்தை தீங்கானது என்றால், அங்குள்ள தமிழர்களுக்கு பயன்படுவகையில் உதவ எங்களுக்கு உள்ள மாற்று வழி என்ன? (இந்தக் கேள்விகள் உங்களுடன் முரண்படுவதற்காக அல்ல. )
  4. ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இருந்தால் நல்லதுதான். எப்படியோ அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரிதான். நல்லதையே சிந்திப்போம்.
  5. பாட்டுப்பாடாவா பார்த்துப்பேசவா ......! 😍
  6. நாங்க ரெடி நீங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க. நாளைக்கே எமது தூதராக @goshan_che யை அனுப்பி வைக்கிறோம்.
  7. ஏதோ ஒரு புள்ளியில் எல்லா தரப்பினரும் சந்திக்கத்தானே வேணும். அது சரி இலங்கை ஜனாதிபதியுடன் உலகையே ஆளும் இந்த யாழ் கருத்துக்களத்தினர் ஒரு சந்திப்பை மேற்கொண்டால் என்ன?
  8. கனடாவில் கொலை அமெரிக்காவில் கொலை முயற்சி முழு தகவல்களும் இரட்டை ஏஜென்ட் மூலம் அம்பலம்.
  9. நான் நினைக்கிறேன் அது கட்டுரையாளர் கிண்டலுக்காக சொன்னது என்று. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் - அப்படி சொல்லி தானே தமிழர்களிடம் காசு கொள்ளை அடித்தவர்கள்.
  10. பெண்பிள்ளை: உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடும் முன் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்வீர்களா ........! பையன்: இல்லை...... ஏனென்றால் எங்களின் அம்மா மிகவும் நன்றாகவே சமையல் செய்வார்......! 😂
  11. போரில் மாண்ட தலைவனுக்கு அஞ்சலி செலுத்த திராணியற்ற கோழைகள்!! ஆண்டவர் என்றாலும் மாண்டபின் வந்தவருண்டோ.? December 4, 2023 (மௌன உடைவுகள் -58) ” MANKIND MUST PUT AN END TO WAR BEFORE WAR PUTS AN END TO MANKIND “. -JOHN F. KENNEDY – ” மனித குலத்திற்கு யுத்தம் முடிவு கட்டுவதற்கு முன் , யுத்தத்திற்கு மனிதகுலம் முடிவுகட்ட வேண்டும்.” இன்றைய உலகிற்கு பொருத்தமான இந்த ஜதார்த்தமான வார்த்தைகள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடிக்கு சொந்தமானவை. கென்னடியின் கருத்தை அமெரிக்கா காற்றில் பறக்கவிட்டு எதிர்மறையாக மனித குலத்தை அழித்து தசாப்தங்களாக யுத்தத்தை காப்பாற்றிவருகிறது. உக்ரைன்…… பாலஸ்தீனம்……… பட்டியலில் இலங்கை…… முன்னால் உள்ளது. 30 ஆண்டுகால யுத்த வலிகளை சுமந்த இலங்கை மக்களை – மனித குலத்தை தொடர்ந்தும் அழிக்க “துவாரகா” என்ற பெயரில் ஒரு பூதம் புறப்பட்டு இருக்கிறது. மனித குலத்தை யுத்தம் அழிக்கும் முன், யுத்தத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இருதரப்பு யுத்தப்பிரியர்களால் தோற்கடிக்கப்பட்டன. அழிந்தது மனிதகுலம். அழிவுக்கு பின்னர் ஈழத்தமிழர்கள் மத்தியில் கொஞ்சமாவது எஞ்சிக்கிடக்கின்ற மானிடநேயத்தை, மத நம்பிக்கை பண்பாட்டு பாரம்பரியங்களை மட்டும் அல்ல கொல்லப்பட்டவர்களை மீண்டும் ஒருமுறை சாகடித்தே தீருவோம் என்று ஒரு கூட்டம் கங்கணம் கட்டி நிற்கிறார்கள் . கவிஞர் காசி.ஆனந்தன் வார்த்தைகளில் “தலைமகள் துவாரகா களமாட வருகிறாள்”. “என்.ஜி.ஓ. அமைத்து புலத்தில் நிதிசேகரித்து நிலத்தில் அரசியல் செய்ய சகோதரி வருவார் ” என்று கூறுகிறார் போராளிகள் கட்சி க.இன்பராசா. “துவாரகாவின் உரைக்கு பின்னால் பிரபாகரன் இருக்கிறார்” .இது பழ.நெடுமாறன். இவர்களைப்போன்று இன்னும் சிலர் வாயில் வருவதை உளறித்தள்ளுகிறார்கள். எனினும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களில் அதிகப்பெரும்பான்மையினரும், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த பொய்க்கும், புரட்டுக்கும், புனைகதைக்கும் எதிராக குரல்கொடுத்து வருகிறார்கள். இது மாற்று கருத்தாளர்களுக்கு எதிராக புலிகளே வளர்த்து விட்ட “புனை கதை கலாச்சாரம்” இப்போது அவர்களில் ஒருபகுதியினர் அதற்கு எதிராக போராட வேண்டிய நிலை. இந்த விவகாரம் தொடர்பாக பல் பக்க நோக்கு தேவைப்படுகிறது. இது துவாரகா உண்மையா? பொய்யா? அசலா ? நகலா? என்பதற்கு அப்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை விதைக்க வேண்டிய அவசிய தேவையைக்கொண்டது. ஆயுதப்போராட்ட காலத்தில் புறநானூற்று பெரும் புகழ்பாடி அப்பாவி இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்தவர்கள், கேவலம் களத்தில் வீரச்சாவடைந்த தங்கள் தலைவர் குடும்பத்திற்கு பொதுவெளியில் அஞ்சலி செலுத்தவும், போரில் மாண்டதை ஏற்கவும் திராணியற்ற கோழைகளாக நிற்கிறார்கள். இது தனிநபர் வழிபாடு மீதான பக்தி அரசியல் தர்மசங்கடம். தூவாரகா ஏன் சுவிஸில் உயிர்த்தெழுந்தாள்….? உயிர்த்த தின கட்டுக்கதையால் நன்மை அடையப்போகிறவர்கள் யார்….? இதற்கு பின்னணியில் உள்ள பிராந்திய, சர்வதேச அரசியல் சதி என்ன….? இவர்களுக்கு பின்னால் காசி.ஆனந்தன் – பழ.நெடுமாறன் கும்பல் ஏன் ஒத்தோடுகிறது….? யாருடைய இருப்பை தக்க வைக்க துவாரகா தேவைப்படுகிறாள்……? இதற்கு பின்னால் உள்ள பண மோசடி எதுவரை போகும்…..? இப்படி துவாரகா விவகாரத்தில் பதில்களைத் தேடவேண்டிய கேள்விகளே அதிகம்? இது ஒன்றும் புதிதல்ல. இது புலிகளின் அரசியல் பொதுநிலை. பதில்களற்ற கேள்விகளோடு கடந்த முப்பது ஆண்டுகளை கடத்திய அரசியல் சூனியத்தில் இதைத்தவிர போராட்டத்தின் எச்சமாக வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்? துவாரகா மேட் இன் சுவிஸ்……! ——————————– பிரபாகரன் குடும்பத்தை மறுபிறப்பு – மீள் உருவாக்கம் செய்வதற்கு சுவிஸைப்போன்று வாய்ப்பான வேறு ஒரு நாடு உலகில் இருக்கமுடியாது. உலகில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பு சுவிஸில் தடைசெய்யப்படவில்லை. அல்கைதா, ஐ.எஸ்.எஸ். இயக்கங்களே தடைசெய்யப்பட்டுள்ளன. ஹாமாஸ் தடைபற்றி அரசியல் மட்டத்தில் தற்போது பேசப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய சூழலில் பிரபாகரன் குடும்பத்தை உயிர்ப்பித்தல் இதன் சூத்திரதாரிகளுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதால் சுவிஸ் சூழல் மட்டுமே இவர்களுக்கு இப்போதைக்கு சாதகமானது. குறிப்பிட்ட மாறுவேடக்காரி சுவிஸில் அகதி அந்தஸ்து பெற்றவர் என்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணம் இலகுவானது. புலிகளைத் தடைசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எல்லை கடந்த நிதிசேகரிப்பை செய்வதற்கு இது உதவும்.. வெளியாருக்கு அடையாளம் தெரியாத கறுப்புக்கண்ண்ணாடி காரில், முக்காடு போட்டு முகம் மறைத்து முடிந்ததைச் செய்ய முடியும். இதில் இதுவரை பெண் என்றால் பேயும் இரங்கும் வலையில் சிலர் சிக்கியிருக்கிறார்கள். காசி.ஆனந்தனுக்கு எலும்பு முறிவு வைத்தியம் செய்ய மிதுஷியா இந்தியா போனாலும் ஆச்சரியம் இல்லை. இதன் முக்கிய பின்னணி “பணப்பறிப்பு” என்பதால் மாபியாக்களுக்கான காசுமரம் சுவிஸில் காய்க்க காலநிலை பொருத்தமாக உள்ளது. போராட்ட காலத்தில் அதிக நிதிப்பங்களிப்பை வழங்கிய மக்கள் சுவிஸ் தமிழர்கள். தாலிக்கொடி நடராஜா முரளிதரன் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம் முதல் இந்த கட்டாய நிதி திரட்டல் ஆரம்பமானது. துரதிர்ஷ்டவசமாக புலத்திலும், நிலத்திலும் புலிகளால் இருந்த அச்சுறுத்தல் காரணமாக இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க மக்கள் தயங்கினர். சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்தின் காலத்திலும் 2009வரை இது தொடர்ந்தது. மக்களை அச்சுறுத்தும் புலிகளின் பாணி, தமிழீழ அடையாள அட்டை அச்சுறுத்தல், விடுமுறைக்கு ஊருக்கு போகும்போது முகமாலையில் சுவிஸில் பணம் வழங்கியதை உறுதிப்படுத்த வேண்டிய நிலை, அதிகபணம், தாலிக்கொடி, நகைகள் போன்றவற்றை முன்கூட்டிய ஏற்பாட்டில் திட்டமிட்டு உண்டியலில் போடவைத்து மற்றையவர்களுக்கு மண்டைச்சலவை செய்த உளவியல் போன்றவற்றிற்கு பின்னால் பிராபாகரன் குடும்பம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று கூறுகின்றவர்கள் இருந்தார்கள் /இருக்கிறார்கள். தங்களை படைப்பாளிகள், வெளியீட்டாளர்கள், தொகுப்பாளர்கள், கலைஞர்கள், நாடககாரர்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டும், ஜெனிவாவுக்கு காவடி எடுத்துக் கொண்டும் இருப்பவர்கள் முரளியின் அட்டூழியங்களுக்கு மௌனம்காத்தது போன்று இன்றும் காக்கிறார்கள். உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், கல்விக்கழகம், கலைபண்பாட்டுக்கழகம் , இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்றவற்றின் மரியாதைக்குரிய மனிதர்களாக இவர்கள் இன்னும் நடமாடுகிறார்கள். சர்வதேச, மற்றும் ஐரோப்பிய டயஸ்போரா அமைப்புக்களும் இது விடயத்தில் ஊமையாகிவிட்டன. சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் 13 புலி சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் போதுமான சாட்சியங்களை அரசதரப்பால் சமர்ப்பிக்க முடியவில்லை. மக்கள் கட்டாயத்தின் பேரில் நிதி செலுத்தினார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் கட்டாயப்படுத்தி, போலியான ஆவணங்களை தயாரித்து, கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வங்கிக்கடன்களை பெற்றுக்கொடுத்து இருந்தார்கள். அதை வட்டியுடன் திருப்பி செலுத்துவதை இயக்கம் பொறுப்பெடுத்து இருந்தது. 2009 க்குப் பின்னர் இதில் ஏற்பட்ட சிக்கல் பல குடும்பங்களை பிரித்தது , குடும்ப வன்முறை அதிகரித்தது, பிள்ளைகள் பராமரிப்பு இல்லங்களில் வளர்ந்தார்கள். நீதி மன்றத்தில் ஆதாரம் இல்லை என்பதற்காக புலிகள் சட்டப்படி குற்றமற்றவர்களாக இருக்கலாம் , சுவிஸ் மக்கள் மன்றத்தில்….? சுவிஸ் அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அழைத்து வரப்பட்ட சுமார் 150 பேர் நீதிமன்றம் முன் சுவிஸ் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். 5,200 பேர் சந்தேகநபர் சுவிஸ் புலிப்பொறுப்பாளர் குலத்திற்கு ஆதரவாக கையொப்பமிட்ட மனுவை புலிகளின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலி ஆவணங்களை தயாரித்தது மட்டும் குற்றமாக கொள்ளப்பட்டது. சுமார் 55,000 க்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வாழ்கின்ற சுவிஸில் இவர்கள் வெறும் 10 வீதம் . இந்த நிலையில்தான் துவாரகா என்று காட்சிப்படுத்தக்கூடிய ஒருவர் சுவிஸில் கிடைத்ததும் நிலத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்களின் துரதிஷ்டம். மறு பிறப்பின் பின்னணி அரசியல் …..! ———————————————————————– “துவாரகா ” நாடகத்தின் தயாரிப்பாளர்கள் இந்திய மத்திய ஆட்சி அதிகாரத்தின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவின் பச்சை இந்துத்துவ மதவாத அரசியலை முற்று முழுதாக நியாயப்படுத்துபவர்கள். இதில் இரண்டு விடயங்கள் மறைந்துள்ளன ஒன்று: ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்ற காட்டப்படுவதன்மூலம் குறுக்கு வழியில் இந்திய மத்திய அரசின் ஆதரவை ஈழப்போராட்டத்திற்கு பெறமுடியும் என்று கூறுபவர்கள். இவர்கள்தான் பழ.நெடுமாறன்- காசி ஆனந்தன் அணி, மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களின் டெல்லி சந்திப்புகள் இதற்கு சான்று. இவர்களை இந்திய முன்னாள் புலனாய்வாளர்கள் நெறிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர்கள் பிராபாகரன், பொட்டம்மான் குடும்பம் இறுதி யுத்தத்தில் தப்பிவிட்டார்கள் என்று காசுக்கு கதையளப்பவர்கள். இந்தியாவே அவர்களை காப்பாற்றியது என்று கூறுபவர்கள். இத்தனைக்கும் இவர்கள் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு எதிரான வட இந்திய கருத்தியலைக்கொண்டவர்கள். ஆனால் தடை நீக்கம் முக்கியமல்ல புலிகள் இந்தியாவுக்குள் சட்டரீதியாக நுழையவும், ஒன்று கூடவும் தடையில்லை என்றும், இந்தியா உதவிகளை வழங்கவும் தடையில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த கால்கழுவும் அரசியலே காசி.ஆனந்தனுடையது. இதன் மூலம் இந்தியாவுக்கும் இவர்களுக்கும் இடையிலான தொடர்பை மையப்படுத்தி பிராபாகரன் குடும்பம் உயிரோடு இருக்கிறது என்ற அச்சத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்துவது. இது சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகள் புலிகளின் மீள் உருவாக்கம் பற்றி உரத்து பேச களம் அமைக்கிறது. இதனூடாக வடக்கு கிழக்கில் நெருக்கடியை ஏற்படுத்தி அதிலிருந்து கட்சி அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வது. இரண்டு: சீனாவுக்கு எதிரான இந்திய சார்பு நிலைப்பாடு. உண்மையில் இந்தியா ஈழப்போராட்டத்தில் தலையிட்டு வளர்த்தும், அழித்தும் விட்ட செயற்பாடுகளுக்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. இதை விடுதலைப்புலிகளைவிடவும் அதிகம் தெரிந்திருப்பவர்கள் எவரும் இருக்கமுடியாது. இந்த நிலையில் இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக தமிழ்த்தேசிய அரசியல் சீன எதிர்ப்பு அரசியல் பேசுகிறது. உண்மையில் இவர்கள் இரு பிராந்திய வல்லரசுகளையும், ஆதிக்க சக்திகளையும் ஒன்றாகப்பார்க்காமல் எடுப்பார் கைப்பிள்ளையாக இந்தியாவின் சீன எதிர்ப்பு கொள்கையேயே தத்தெடுத்துள்ளனர். இதை பிரபாகரனின் வருகையின் மூலம் இப்படி நியாயப்படுத்துகின்றனர்: “புலிகளின் மீள்வருகை இந்தியாவுக்கு பாதுகாப்பு, புலிகள் இருக்கும் வரை சீனா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வாலாட்ட முடியாது”. இது இன்றைய சீனாவின் உலகமயமாக்க சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல் பட்டுவீதி கடற்பரப்பு ஆதிக்கத்தில் குருடனுக்கு யானைகாட்டிய கதை. இலங்கையின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு துவாரகாவின் அசல், நகல் தெரியும். அதை வெளிப்படையாக பேசுவது புனிதமான பாராளுமன்ற கோயில் வழிபாட்டுக்கு தெய்வப்பழியாகிவிடும். ஒரு கட்சி உண்மையை போட்டுடைத்தால் மறுகட்சிக்கு வாக்கு பெட்டி உடைக்கப்படும்போது அதன் விளைவு வெளிப்படும். ஈழப்போராட்டம் எவ்வாறு பொய்மைகாளால் கட்டிவளர்க்கப்பட்டு வியாபார அரசியலானதோ அந்த நிலை தொடர்வதையே இவர்கள் விரும்புவார்கள். அதையே செய்கிறார்கள். சர்வதேச அரசியல் தாக்கம்….! ——————————- யுத்தம் முடிவடைந்த கையோடு காணாமல் ஆக்கப்ப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் திரும்பிவந்தார்கள், சிலர் வெளிநாடுகளில் அரசியல்தஞ்சம் கோரினார்கள். இன்னும் சிலர் இலங்கை சிறைகளில் -முகாம்களில் இருப்பது தெரியவந்தது. இந்த சில்லறை நிகழ்வுகளுக்கு அப்பால் போர்க்குற்ற விசாரணை, வெள்ளைக்கொடி விவகாரம், யுத்தமீறல்கள், இனப்படுகொலை என்ற பல குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தின் – நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை அரசு மீது வைக்கப்பட்டது. ஆனால் வேடதாரி துவாரகாவோ ” அப்பாவும், அம்மாவும்” சுகமாக இருக்கிறார்கள் என்று கூறி ஊர் வாயை அடைக்க முயற்சித்துள்ளார். யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பிராபாகரன் – மதிவதனி தம்பதியரின் மகன் பாலச்சந்திரன் கொலை பல கேள்விகளை எழுப்பியது. பல ஆவணங்கள், முறைப்பாடுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லா விசாரணை பனல்களுக்கும் சேர்க்கப்பட்டது. இப்போது பிரபாகரன், பொட்டம்மான் குடும்பம் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் உயிரோடு இருக்கின்றன…..? சர்வதேசம் இந்த விசாரணையை தொடர்வதா ? அல்லது பிரபாகரன் குடும்பம் திரும்பிவிட்டது என்று விசாரணைகளை இரத்துசெய்வதா? இலங்கை அரசு எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து முக்கிய புள்ளிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறப்போகிறது, பயங்கரவாதத்திற்கும், புலிகள் மீதான தடை க்கும் சாதகமான சூழலை துவாரகா இலங்கைக்கு வழங்கியுள்ளார். போராளிகள் கட்சியின் கதிரை அரசியலுக்கு இவை மூலதனம். அதன் மூலமான பக்க விளைவுகளுக்கு நிவாரணம் வழங்க புலம்பெயர்ந்த மக்களின் நிதியியல் என்.ஜி.ஓ. தோல்வி அடைந்த ஆயுதப்போராட்டம் ஒன்றின் அடையாளங்களை போராடியவர்களை கொண்டே எப்படி வேரோடு அழிப்பது என்பதற்கு உலகில் மிகப்பிந்திய உதாரணம் இதை விடவும் வேறு என்ன இருக்கமுடியும்.? “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் “. https://arangamnews.com/?p=10203
  12. பார்த்தசாரதியின் வருகை பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கிறார் என்றும் தன்னை ஏமாற்றப்பார்க்கிறார் என்றும் இந்திரா காந்தி தன்னைப்பற்றிக் காட்டமாக வெளியிட்ட கருத்துக்கள் ஜெயாரைக் கலவரமடையச் செய்யவில்லை. அவரது திட்டமே அதுதான். அத்திட்டத்தின்படி பாரத்தசாரதியை மீண்டும் கொழும்பிற்கு வந்து இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு ஜெயார் அழைத்தார். கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த பார்த்தசாரதி, ஜெயார், காமிணி திசாநாயக்கா மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோருடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தினார். இவர்களுடனான பார்த்தசாரதியின் பேச்சுக்கள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தங்களைத் தாமே ஆளக்கூடிய, அதிகாரம் மிக்க பிராந்தியங்களை உருவாக்குவது தொடர்பாகவே அமைந்திருந்தது. தமிழர்கள் தனிநாடு ஒன்றே தீர்வு எனும் நிலைக்கு வந்திருப்பதால் அரசு முன்வைக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை தமிழர்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஜெயாரிடமும் அவரது அமைச்சர்களிடம் தெரிவித்தார் பார்த்தசாரதி. கார்த்திகை 10 ஆம் திகதி நிறைவுபெற்றிருந்த பார்த்தசாரதியின் இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின் நோக்கமே மாகாணம் ஒன்றிற்குள் இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உள்ளடக்குவதற்கான ஜெயாரின் சம்மதத்தினைப் பெற்றுக்கொள்வதுதான். ஆனால், இப்பேச்சுக்களை கால அவகாசம் எடுக்கும் நோக்கத்திற்காகவே பாவிக்க நினைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் இணைப்பை அம்மாவட்டங்களில் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதன் மூலமாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் உறுப்பினர்களின் சம்மதத்தின் மூலமாகவும் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று கூறினார். ஜெயாரின் பரிந்துரைகளை கார்த்திகை 10 ஆம் திகதி ஜனாதிபதிச் செயலகப் பிரிவு அறிக்கை வடிவில் வெளியிட்டது. இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டில் நிலவும் வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஜனாதிபதி கருதுவதாகவும் அவ்வறிக்கை கூறியது. மேலும், தமிழர்கள் இப்பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு பிரிவினைவாதத்தினைக் கைவிட்டு விடவேண்டும் என்றும், திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கையின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விட்டுவிடவேண்டும் என்றும் ஜெயார் எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கை கூறியது. இரண்டிற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மாகாணம் ஒன்றிற்குள் இணைப்பதற்கு ஜெயார் இணங்கியிருப்பதாக நினைத்த பார்த்தசாரதி, அது ஒரு சாதகமான விளைவு என்று கருத்துப்பட பிராந்திய அதிகாரசபைகளுக்கான தனது விருப்பத்தினை வெளிப்படுத்தி தனியான அறிக்கையொன்றினை வெளியிட்டார். "ஒன்றுபட்ட இலங்கைக்குள், தகுந்த அதிகாரங்களைக் கொண்ட பிராந்திய அலகுகளை உருவாக்குவது குறித்தே இப்பேச்சுக்கள் அமைந்திருந்தன" என்று அவரது அறிக்கை கூறியது. ஆனால், ஜெயாரின் திட்டத்தினை போராளி அமைப்புக்கள் தெளிவாகப் புரிந்திருந்தன. "ஜெயாரின் காலம் கடத்தும் தந்திரமே இந்தப் பரிந்துரைகள்" என்று புலிகள் அமைப்பு இதனைச் சாடியிருந்தது. மேலும், ஜெயாரின் பொறிக்குள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டு விடக்கூடாதென்று எச்சரித்திருந்ததுடன், தனிநாடு எனும் தமது கோரிக்கை பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டது என்றும் கூறியது. இந்திராவைச் சந்தித்த ஜெயார் பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள் இந்தியா சென்றிருந்த ஜெயாரை தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டிருந்தார் இந்திரா. தனது சகோதரருடன் கார்த்திகை 21 ஆம் திகதி தில்லி பயணமானார் ஜெயார். வெளிவிவகார அமைச்சர் ஹமீதும் ஏனைய அதிகாரிகளும் இருநாட்களுக்கு முன்பாகவே தில்லிக்குப் பயணமாகியிருந்தனர். இவர்களுடன், பார்த்தசாரதியின் அழைப்பினை ஏற்று தொண்டைமானும் தில்லிக்குப் பயணமாகியிருந்தார். அதே காலப்பகுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தில்லிக்கு அழைத்திருந்த இந்திரா, இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்தும், தமிழர்களின் அப்போதைய நிலைப்பாடு குறித்தும் தனக்கு விளக்கமளிக்குமாறு கோரியிருந்தார். ஆகவே, அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் சென்னையிலிருந்து தில்லிக்குப் பயண்மாகியிருந்தனர். இவர்களுடன் இணைந்துகொள்ள கொழும்பிலிருந்து கலாநிதி நீலன் திருச்செல்வமும் சென்றிருந்தார். முன்னணியினருக்கான அழைப்பு ஜெயாரை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், போராளி அமைப்புக்களை அசெளகரியத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. ஆகவே, வழமைபோலவே இந்தியா மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார் ஜெயார். அமிர்தலிங்கத்திற்கு அரசுத் தலைவர் ஒருவருக்கு நிகரான அந்தஸ்த்தை இந்தியா கொடுத்திருப்பது குறித்து இலங்கையின் அரச ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைதிருந்தன. மேலும், இந்திரா காந்தி தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாகவும் அவை குற்றம் சுமத்தின. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசியல் நிலைப்பாட்டினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் பார்த்தசாரதி அவர்களுடன் கார்த்திகை 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தினார். அவருடன் பேசிய முன்னணியின் தலைவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பது, தமிழ்பேசும் காவல்த்துறையினை அமைப்பது ஆகிய இருவிடயங்களில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாரில்லை என்று தெரிவித்தனர். பார்த்தசாரதி பின்னர் தொண்டைமானையும் சந்தித்துப் பேசினார். அரசுத்தலைவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தில்லியின் அசோகா விடுதியில் ஜெயாரைச் சந்தித்தார் பார்த்தசாரதி. ஜெயாரின் பரிந்துரைகளுக்கான முன்னணியின் பதிலை ஜெயாரிடம் அவர் விளக்கினார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைத்து மாகாணங்கள் ஒன்றிற்குள் உள்வாங்குவதான ஜெயாரின் பரிந்துரையினை முன்னணியினர் ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் ஜெயாரிடம் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் இணைப்பென்பது மாகாணம் ஒன்றிற்கு வெளியேயும் பரவுவதற்கான சம்மதத்தினையும் முன்னணியினர் கோரியிருந்தனர். மேலும், திருகோணமலைத் துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை முன்னணியினர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், ஆனால் துறைமுகப் பகுதியின் எல்லைகள் சரியான முறையில் நிர்ணயிக்கப்படவேண்டும் என்று கோரியிருப்பதாகவும் பார்த்தசாரதி ஜெயாரிடம் தெரிவித்தார். அதன் பின்னர், முன்னணியினர் ஜெயாரின் பரிந்துரைகளுடன் முரண்படும் விடயங்கள் குறித்து பார்த்தசாரதி அவரிடம் விளக்கினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதை முன்னணியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், தமிழ் பொலீஸ் படையொன்றினை உருவாக்குவது குறித்த முன்னணியின் கோரிக்கையினையும் அவர் ஜெயாரிடம் முன்வைத்தார். அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொறுப்பினை அம்மக்களிடமே விட்டுவிடுவதாக முன்னணி கூறியிருப்பதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். முன்னணியினரின் நிலைப்பாட்டிற்கு ஜெயவர்த்தன வழங்கிய பதில் 1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான இணைப்பினை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நடத்தலாம், ஆனால் மாகாணங்களுக்கு வெளியே இணைப்பு பரவுவதனை அனுமதிக்க முடியாது. 2. வடக்குக் கிழக்கு மகாணங்களை ஒருபோதுமே இணைக்க அனுமதிக்க முடியாது. 3. தமிழ் பொலீஸ் படையினை அமைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், குறிப்பிடத் தக்க சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு தரப்பட முடியும். தமது வேண்டுகோள்களுக்கு ஜெயார் வழங்கிய பதிலை பார்த்தசாரதியூடாக அறிந்தபோது அமிர்தலிங்கம் கோபமடைந்தார். "வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பிலோ, தமிழ் பொலீஸ் படையின் உருவாக்கத்திலோ எம்மால் எதனையும் விட்டுக் கொடுக்க முடியாது" என்று பார்த்தசாரதியிடம் தெரிவித்தார் அமிர். "இவற்றில் விட்டுக்கொடுப்புக்களை நான் மேற்கொண்டால், சென்னைக்குத் திரும்பிச் செல்வதே எனக்கு இயலாது போய்விடும்" என்று அவர் கூறினார். கொதித்துப்போயிருந்த அமிர்தலிங்கத்தை ஆசுவாசப்படுத்த பார்த்தசாரதிக்கு அதிக நேரம் தேவைப்பட்டிருந்தது. பேச்சுக்களின் பலவீனமான நிலையினை உணர்ந்துகொள்ளத் தலைப்பட்ட பார்த்தசாரதி, தனது நடைமுறையினை மாற்றத் தலைப்பட்டார். அதன்படி, இந்திரா காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்றை அவர் ஏற்படுத்தினார். பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மாநாடு நடக்கும் நாளுக்கு ஒருநாள் முன்னதாக, கார்த்திகை 23 ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜெயாரிடம் பேசிய இந்திரா, ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், இலங்கையைப் பிரிக்கும் எந்த முயற்சியினையும் தான் முற்றாக எதிர்ப்பதாகவும் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு ஒன்றினைப் பற்றிச் சிந்திக்குமாறு அவர் ஜெயாரைக் கேட்டுக்கொண்டார். தமிழ் அகதிகளால் இந்தியா எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வு தொடர்பாகவும் ஜெயாரிடம் அவர் விளக்கினார். இந்திராவுக்குப் பதிலளித்த ஜெயார், தன்பக்க நியாயங்களைக் கூறினார். தமிழர்களை இலங்கையினை கட்டுப்படுத்திவிடுவார்கள் என்று சிங்களவர்கள் பயப்படுவதாக அவர் கூறினார். தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்க சிறிமா முயல்வதால், தனது அரசியல் பலம் ஆட்டங்கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுநலவாய மாநாடு கார்த்திகை 24 ஆம் திகதி ஆரம்பமானது. மாநாட்டில் பேசிய ஜெயார், இந்திராவை வேண்டுமென்றே சீண்டிப் பேசினார். மகாத்மா கந்தியுடனும், நேருவுடனும் தான் மேற்கொண்ட பேச்சுக்களை நினைவுகூர்ந்த ஜெயார், அவர்களை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். காந்தியின் அகிம்சையினையும் நேருவின் பக்கச்சார்பின்மையினையும் தாம் விருப்பத்துடன் கடைக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். "நீண்டகாலம் வாழும் வரம் எனக்குக் கிடைத்தால், எமது மக்கள் எவருக்கும் அடிபணியாது வாழும் நிலையினை உருவாக்குவேன். இலங்கையில் அனுக்குண்டு ஒன்று வெடித்தால் அங்கிருக்கும் 15 மில்லியன் மக்களும் இறக்கலாம். இலங்கையினை ஆக்கிரமிக்க எவர் நினைத்தாலும், அங்குவாழும் 15 மில்லியன் மக்களும் போரிட்டுச் சாவார்களே அன்றி, அடிமைகளாக வாழ மாட்டார்கள்" என்று இந்தியா தனது நாட்டை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது எனும் தொனிப்பட பேசி முடித்தார். தொண்டைமான் மறுநாள் இந்திரா காந்தியைச் சென்று சந்தித்தார். ஜெயவர்த்தனவின் பேச்சினை மேற்கோள் காட்டிப் பேசிய தொண்டைமான், "ஜெயார் உங்களின் தகப்பனாரை வெகுவாகப் பாராட்டிப் பேசினார், உங்களுக்கு அது பூரண திருப்தியைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். தொண்டைமானின் பேச்சைக் கேட்ட இந்திரா கோபத்தில் வெடித்தார். "அந்த வயோதிபர் எனது தந்தையைப் புகழவில்லை. நான் எனது தகப்பனாரைப் போழ ஆட்சிசெய்யவில்லை என்று முழு உலகிற்கும் கூறி எள்ளி நகையாடுகிறார்" என்று கூறினார். மார்கழியில் அமெரிக்கா சென்றிருந்த இந்திரா, நியு யோர்க் நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களுடன் பேசிய இந்திரா ஜெயாரின் பேச்சுக் குறித்து பிரஸ்த்தாபித்தார். "நான் விரும்பினால் உடனடியாகவே இலங்கை மீதான ஆக்கிரமிப்பை நடத்த முடியும், ஆனால் சிங்களவர்கள் மத்தியில் பாதுகாப்பின்றி வாழும் மலையகத் தமிழர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதனாலேயே தயக்கமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.
  13. யாழில் சிலரை பார்க்க பரிதாபமாக உள்ளது. இதை விட சொல்ல ஏதும் இல்லை. ஒரு விடயத்தை திறந்த மனதோடு அணுகலாம், ஆனால் மலை போல் ஆதாரம் இருந்த பின்னும், கற்பனையில் உழல்கிறார்கள். @பாலபத்ர ஓணாண்டி நேற்று காசி ஆனந்தன் முதல் சேரமான் வரை ஒரு லிஸ்டை திண்ணையில் வெளியிட்டு இருந்தார். இந்த லிஸ்டில் உள்ளோர் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் யாழில் ஆரம்பம் முதலே தெளிவை உருவாக்கி, நான் உட்பட பலரை உரை வர முன்னமே சரியான பாதையில் வழி நடத்திய, @வைரவன், @MEERA @நன்னிச் சோழன். @நந்தன் ஆகியோருக்கு நன்றி🙏.
  14. அப்ப இனி இந்திய யுடியுப் கூட்டம் இந்தியா அமெரிக்கா மீது அந்த தடை இந்த தடை கடைசியில் அமெரிக்கன் பயந்து விட்டான் என்று அலம்பரை பன்னபோரான்கள் அதை நினைக்கத்தான் வேர்க்குது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.