Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    26
    Points
    8907
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31986
    Posts
  3. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5896
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/20/24 in all areas

  1. "இண்டைக்கு கார்த்திகை விளக்கீடு மச்சான், வீட்டிலை மரக்கறி, எங்க சாப்பிடப் போகிறாய்?" என்று கேட்டான். "எனக்கு மரக்கறி பிரச்சினையில்லை" என்று நான் கூறவும். "இல்லை, பிள்ளைகளுக்கும் மரக்கறியெண்டால் இறங்காது, வா கொத்து ஏதாவது சாப்பிடுவம், அப்படியே பிள்ளைகளுக்குக் எடுத்துக்கொண்டுவரலாம்" என்று நண்பன் கூறவும், சரியென்றேன். அவனது வீட்டிலிருந்து கச்சேரி நோக்கிப் போகும் வழியில், வைத்தியசாலை வீதியில் யு.எஸ் ஹோட்டல் என்று ஒரு அசைவக உணவகம் இருக்கிறது. சில மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் முதலாவது மாடியில் உணவகமும் அதற்கு மேல் நிகழ்வுகளுக்கான மண்டபமும் இருக்கிறது. கட்டடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலிருந்து மற்றைய உணவகங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது நண்பனின் அலுவலக மேலாளர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிங்களவர், யாழ்ப்பாணத்தில் வசிப்பவர். தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். நண்பனைக் கண்டதும் சத்தமாகச் சிங்களத்தில் பேசினார். நண்பனுடன் அவர் பேசிக்கொண்டிருக்க, அப்பகுதியைச் சுற்றி நோட்டமிட்டேன். அந்த உணவகங்களின் முன்னாலும் பல சிங்களவர்களைக் காணக் கிடைத்தது. வான்கள், கார்கள் என்று ஓரளவிற்கு வசதிபடைத்த தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் என்பது தெரிந்தது. அவரிடம் பேசும்போது, "இப்பகுதியில் ஓரளவிற்கு நல்ல கொத்து எங்கு வாங்கலாம்?" என்று நண்பன் கேட்கவும், "ஏன், யு.எஸ்ஸை முயற்சி செய்து பாருங்கள், அல்லது இன்னும் இரண்டு மூன்று இடங்கள் எனக்குத் தெரியும்" என்று அந்தச் சிங்களவர் கூறினார். நான் திகைத்துப் போனேன். ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் நல்ல உணவு கிடைக்கும் இடங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்றால், அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு அங்கு ஒற்றிவிட்டார்கள் என்பது புரிந்தது. அவர் கூறியவாறே யு.எஸ் உணவகத்திற்குச் சென்று ஆட்டுக் கொத்தும், கோழிக்கறியும் கேட்டோம். இடையே குடிப்பதற்கு ஜிஞ்சர் பியரும் கேட்டோம். சாப்பாடு அருமை. குளிர்ந்த சோடாவோடு சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருந்தது. அந்த உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தமிழர்களாக இருக்கலாம், ஆனாலும் பேச்சு வழக்கில் வேறுபாடு தெரிந்தது. மிகவும் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துகொண்டார்கள். அடிக்கொருமுறை சேர் என்று அழைத்தார்கள். நண்பன் இக்கடைக்கு அடிக்கடி வந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் அதற்கான கட்டணத்தையும், பணியாளருக்கான "சந்தோசப் பணத்தையும்" நண்பனே கொடுத்து (நான் கொடுக்கிறேன் என்று நான் கூறியும் பிடிவாதமாக மறுத்து, உனக்கு செலவுசெய்ய நான் சந்தர்ப்பம் ஒன்றைத் தருவேன், அப்போதுச் செய்தால்ப் போதும் என்று கூறிவிட்டான்) பிள்ளைகளுக்கும் தேவையான உணவினை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீடு வந்தோம். இரவு ஒன்பதரை ஒன்பதே முக்கால் ஆகுகையில் மீண்டும் என்னை மைத்துனரின் வீட்டின் முன்னால் இறக்கிவிட்டான் நண்பன். நான் உள்ளே போகும்வரை அப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு காத்து நின்றான். கேட் உட்பகுதியால் பூட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து அதனைத் திறக்க என்னால் முடியவில்லை. பலமாக கேட்டினைத் தட்டிப் பார்த்தேன், எவரும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. நண்பன் இன்னமும் அங்கு நிற்பது தெரிந்தது, "நீங்கள் போங்கோ, நான் கோல்பண்ணிப் பார்க்கிறேன்" என்று கூறி அவனை அனுப்பிவைத்தேன். ஆனாலும் வீட்டிலிருந்து எவரும் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நான் தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தனது கார்த்திகை விளக்கீட்டினை வீதிக்கு வந்துபார்ப்பது போல பாசாங்கு செய்துகொண்டு என்னை யாரென்று நோட்டம் விடுவது எனக்குத் தெரிந்தது. தோளில் பாரிய பையொன்று தொங்க, முன்பின் தெரியாத ஒருவர் பக்கத்து வீட்டின் முன்னால் இரவு 10 மணிக்கு நிற்கிறார் என்றால் சந்தேகம் வரத்தானே செய்யும்? சயன்ஸ் சென்ட்டர் எனும் பிரபல டியுஷன் நிலையத்திற்கு மிக அருகிலேயே மைத்துனரின் வீடு. இரவு வகுப்பு முடிந்து மாணவர்களும் போயாயிற்று. வீதியில் வெளிச்சம் இருந்தாலும் எப்போதாவது அவ்வீதியூடாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியைத் தவிர ஆளரவம் மிகவும் குறைவான வீதியது. என்னடா செய்யலாம்? இப்படியே காலை மட்டும் வீதியில் நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று ஒரு பக்கம் யோசனை. ஆனால், எவராவது சந்தேகத்தின் பேரில் என்னைப் பொலீஸில் போட்டுக்குடுத்தால் என்னசெய்வது என்கிற பயமும் உள்ளுக்குள் இருந்தது. ஆனால் ஒரேயொரு ஆறுதல், மைத்துனர் வேலை முடிந்து 10:30 மணிக்குத்தான் வீடுவருவார். அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று அப்படியே வீதியில் நின்றுகொண்டேன். அதிஸ்ட்ட‌வசமாக மைத்துனரின் மனைவி வீட்டின் முன்கதவினைத் திறந்துபார்க்கவும், நான் பலமாக அவரை அழைத்து, "கேட்டை ஒருக்கால் திறவுங்கோ" என்று கேட்டேன். "அடகடவுளே, எவ்வளவு நேரமாய் உதிலை நிக்கிறியள்?" என்று கேட்டார். நானும், "இப்பத்தான், ஒரு அரைமணித்தியாலம் இருக்கும்" என்று கூறிச்சிரித்தேன். "கேட்டைத்திறந்து வந்திருக்கலாமே?" என்று கேட்கவும், திறக்க முயற்சித்தேன் ஆனால் முடியாமற்போய்விட்டது என்று கூறவும் சிரித்துவிட்டார். மறுபடியும் அலங்கார குமுழைத் திருகிக்கொண்டு நின்றிருக்கிறேன் என்பது புரிந்தது. குளித்துவிட்டு மாமியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பழைய கதைகள், நீண்டகால தொடர்பில்லாத உறவினர்கள், எவரெவர் இப்போது எங்கிருக்கிறார்கள் என்கிற கேள்விகள் என்று சம்பாஷணை தொடர்ந்தது. மைத்துனர் இரவு 10:30 இக்கு வந்ததும் இரவுணவு அருந்திவிட்டு, வீட்டின் மண்டபத்தில் பாய் தலையணையுடன் படுத்திருந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு 12:30 - 1 மணிக்குத் தூங்கியிருப்போம் என்கிற நினைவு. யாழ்ப்பாணத்தில் எனது முதலாவது நாள் நிறைவிற்கு வந்தது.
  2. கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. Posted on January 8, 2024 by சமர்வீரன் கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)
  3. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  4. மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களாலும் தென்னை மரங்களாலும் சூழப்பட்ட கட்டடம் அது. வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. திறக்கத் தெரியவில்லை. குமுழியைத் திருகித் திருகிப் பார்க்கிறேன், முடியவில்லை. நண்பன் காரில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "கூப்பிட்டுப் பாரடா" என்று சொல்லவும், கொஞ்சம் சத்தமாக கேட்டைத் தட்டினேன். உள்ளிருந்து பெண்ணொருவர் வந்து திறந்துவிட்டார். அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் குமிழையையே இவ்வளவு நேரமும் திருகியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "நீங்கள் போட்டு வாங்கோ, நான் ஆட்டொ பிடித்து போய்க்கொள்கிறேன்" என்று நண்பனைப் பார்த்துக் கூறினேன். "இல்லை, நீ முடிச்சுக்கொண்டுவா. நான் நிக்கிறன். இண்டைக்கு உன்னோட யாழ்ப்பாணம் சுத்துறதுதான் வேலை" என்று அன்புடன் கட்டளையிட்டான். சரியென்று கூறிவிட்டு கட்டடத்தினை நோக்கி நடந்தேன். உள்ளே சென்றதும் என்னை அமரச் சொல்லிட்டு யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். சித்தியின் பெயரைச் சொன்னேன், சிட்னியில் இருந்து வருகிறேன் என்றும் கூறினேன். இருங்கள், வந்துவிடுவா என்று கூறப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், சித்தி வந்தார். சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் அவரை ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவமே மாறி, நலிந்து, தோல் சுருங்கி, மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். பேசுவதே அவருக்குக் கடிணமாக இருந்தது. சிறிதுநேரம் அவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, "எப்படி அன்ரா இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய புன்முறுவல், "83 வயதில் இருக்கும் ஒருவர் எந்தளவு சுகநலத்துடன் இருக்கமுடியுமோ, அந்தளவு சுக நலத்துடன் இருக்கிறேன்" என்று சொன்னார். "அப்படித் தெரியவில்லையே?" என்று கேட்டேன். அதற்கும் ஒரு புமுறுவல். பல விடயங்களை அவர் மறந்திருந்தார். அவர் தொடர்பாக நான் கூறிய விடயங்களை அதிசயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். "அப்படியெல்லாம் நடந்ததா?" என்று அடிக்கடி கேட்டார். எனது அன்னை, தம்பி, அக்கா என்று நெருங்கிய உறவுகள் தொடர்பாக அவருக்கு நினைவு இருக்கிறது. ஏனையவர்கள் தொடர்பாக அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், நான் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே எனது குடும்பம் பற்றி கேட்பார், ஒரே பதிலைச் சொல்லுவேன். ஒருசில நிமிடங்களின் பின்னர் அதே கேள்விகள், நானும் சலிக்காமல் அதே பதில்களைக் கூறுவேன். நான் திருமணம் முடித்ததைக் கூட அவர் மறந்திருந்தார். அடிக்கடி, "முடிச்சிட்டீரா, எத்தனை பிள்ளைகள்?" இதுதான் அவர் அடிக்கடி கேட்ட கேள்விகள். சிறிது நேரம் பேசிவிட்டு அமைதியானார். "என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை, நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பல யோசனைகள்" என்று கூறினார். மீண்டும் அதே மெளனம். அவர் வலியினால் அவஸ்த்தைப்படுவது தெரிந்தது. ஒரு 35 - 40 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அதன்பின்னர் அவரால் தொடர முடியவில்லை. "கஸ்ட்டமாக இருக்கிறதோ, அறைக்குத் திரும்பப் போகிறீர்களோ?" என்று கேட்டேன். "ஓம், கனநேரம் இதில இருக்க ஏலாது, நாரி நோகுது" என்று சொன்னார். கொண்டுவந்த சில பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை மெது மெதுவாக உருட்டிக் கொண்டு உள்ளேயிருக்கும் மண்டபம் போன்ற பகுதிவரை செல்ல‌, அங்கிருந்த பெண்ணொருவர், "இனி விடுங்கோ அண்ணா, நாங்கள் அவவைக் கூட்டிச் செல்கிறோம்" என்று சொன்னார். நான் சித்தியிடம் விடைபெற்றுத் திரும்ப, அவரிடம் யாரோ, "ஆரது சிஸ்ட்டர்?" என்று கேட்பதும், "அது என் அக்காவின் மகன், அவுஸ்த்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான்" என்று அவர் கூறுவதும் கேட்டது. வாயிலில் காரில் பொறுமையுடன்ன் காத்திருக்கும் நண்பனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  5. அவர் இருப்பது பாஷையூர் திருக்குடும்பக் கன்னியாஸ்த்திரிகள் மடம். அவரது பெயர் சிஸ்ட்டர் கிறிஸ்டபெல். யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் கணித ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றியவர். பின்னர் வன்னியில் உளநலம் பாதிக்கப்பட்டோருக்கான மனோதத்துவ நிபுணராக இறுதிவரை பணிபுரிந்தவர். தற்போது ஓய்வெடுத்திருக்கிறார்.
  6. இதை நான் மிகப் பெரிய பகிடி என்று சொன்னால் இந்தத் திரியும் கிழித்துத் தொங்க விடப்படும். 😂 உள்ளூரில் வெள்ளைச் சீனிக்கு மாற்றீடாக பனஞ்சீனியைப் பாவிக்கலாம். அதற்காகப் புரளிகளைப் பரப்பக் கூடாது.
  7. ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ........! 😍
  8. பாஷையூரிலிருந்து நாம் படித்த பாடசாலையான பத்திரிசியார் கல்லூரி வழியால் சென்றோம். பழைய நினைவுகள் வந்து போயின. நான் படிக்கும் காலத்தில் இருந்த உயர் வகுப்புக்கள் இருந்த பகுதி முற்றாக காணாமற்போயிருந்தது. பாடசாலையின் மத்திய வகுப்புக்கள் இருந்த பகுதிக்கு அதனை மாற்றியிருப்பதாக நண்பன் சொன்னான். ஒரு சில கட்டடங்களைத்தவிர 80 களில் இருந்ததுபோன்றே அப்பகுதி தெரிந்தது. அப்படியே சேமக்காலை வீதிவழியாக கடற்கரை வீதிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதி நோக்கிச் சென்றோம். அப்பகுதியில் பாரிய மாற்றம் ஏதும் இல்லை. சின்னக்கடைக்கும் பண்ணைப்பகுதிக்கும் இடையில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. சிறியதுதான், ஆனாலும் அவர்களின் பிரசன்னம் நன்றாகவே தெரிந்தது. அப்படியே புதிதாகக் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாண மாநகரசபைக் கட்டத்தையும் பார்த்துக்கொண்டே பண்ணைப்பகுதிக்கு வந்தோம். சுற்றுலாத்தளம் போல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் நிறைந்தும் காணப்பட்டது. கோட்டையின் பின்பகுதியில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்த பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, அதில் வந்தவர்கள் அப்பகுதியில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கொத்துரொட்டிக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள், ஐஸ் கிறீம் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் கடைகள் என்று அப்பகுதியெங்கும் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களில் தமிழர்களைவிடவும் சிங்களவர்களே அதிகமாகக் காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தைச் சென்று பார்ப்பதென்பது அவர்களைப்பொறுத்தவரையில் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு என்றே நினைக்கிறேன். நான் யாழ்ப்பாணம் வந்த ரயிலில்க் கூட பெருமளவு சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். பலவிடங்களில் இவர்களின் பிரசன்னம் இருந்தது. பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பாதையில் கடற்படை முகாமிற்கு சற்று முன்னர் வாகனத்தை நிறுத்திக்கொண்டோம். இறங்கி, இருபக்கமும் தெரிந்த இயற்கை அழகை மாலைச் சூரியன் மங்கும் வேளையில் படமெடுத்தேன். ரம்மியமாகவிருந்தது. இதேபகுதியை பலமுறை யூடியூப் தளத்தில் பலர் பதிவேற்றியிருக்கிறார்கள். மிகவும் அழகான‌ பகுதி. என்னைப்போலவே வேறு சிலரும் அப்பகுதியில் நின்று படமெடுப்பது தெரிந்தது. அன்று கார்த்திகை விளக்கீடு. யாழ்நகரெங்கும் வீடுகளின் முன்னால் விளக்குகள் ஏற்றப்பட்டு மிகவும் அழகாகத் தெரிந்தது. நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அவனது வீட்டிலும் பிள்ளைகள் விளக்கீடு வைத்திருந்தார்கள். வீட்டின் முன்னால், முற்றத்தில், மதிலின் நீளத்திற்கு என்று பல விளக்குகள். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததற்குப் பின்னர் இன்றுதான் விளக்கீட்டினை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊரை விட்டு எப்போதுமே நீங்கியதில்லை என்கிற உணர்வு ஒருகணம் வந்துபோனது. ஊரில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.கைலாசபிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் அவனது வீடு. கோயிலின் சுற்றாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்பகுதி விளக்கீட்டில் தெய்வீகமாகக் காட்சியளித்தது. பின்னர் அவனது பிள்ளையை வகுப்பிலிருந்து கூட்டிவர கட்டப்பிராய்ப் பகுதிக்குச் சென்றோம். போகும்போது நல்லூர்க் கோயிலூடாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை நல்லூரே யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று எண்ணுவதுண்டு. கோயிலின் கம்பீரமும், அழகும் என்னைக் கவர்ந்தவை. அதனைப் பார்க்கும்போதே மனதிற்கும் இனம்புரியாத சந்தோசமும், பெருமையும் ஒருங்கே வந்துபோகும். இரவு விளக்கு வெளிச்சங்கள் கோயிலை இன்னும் அழகுபடுத்த, காரில் பயணித்தவாறே சில படங்களையெடுத்தேன். நாளை மாவீரர் நாள். நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பாரிய பந்தல்கள் இடப்பட்டு மக்கள் அப்பகுதியில் கூட்டமாக நின்று மாவீரர் நாள் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. பந்தலின் முன்னால் நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள். இளைஞர்கள் விருப்புடன் வந்து அப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும்போது மக்களின் மனோநிலை எப்படியிருக்கிறதென்பது புரிந்தது. கட்டப்பிராயில் பருத்தித்துறை வீதியிலேயே வகுப்பு நடைபெற்றது. வாகனத்தை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த இரவு வேளையிலும் பருத்தித்துறை வீதி மக்களும் வாகனங்களும் நிறைந்து காணப்பட்டது. குறுகலான வீதி, ஆனாலும் இருபுறமும் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காது, இலாவகமாக வீதியின் இடதுபக்கமும், வலதுபக்கமுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே மோட்டார்சைக்கிள்கள், முச்சக்க வண்டிகள், நடந்துசெல்லும் மனிதர்கள் என்று ஒரே கலேபரம். நண்பனின் பிள்ளை வகுப்பு முடிந்து வந்ததும், அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வீடு வந்தோம்.
  9. மருதனார் மடம் விலை நிலவரம்கள்..
  10. இந்தியாவில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்த வசதி உபயோகமானது. ஆனால் பிரச்சனை என்ன என்றால் இந்தியா அகதிமுகாமை விட்டு இந்த கடவுச்சீட்டில் இலங்கைக்கு ஏதும் அலுவலாக சென்றால் திரும்பி வர முடியாதாம். இது உண்மையா பொய்யா என தெரியவில்லை. அகதி முகாமில் உள்ள ஒருவர் கூறினார். இந்திய அகதி முகாமில் மிக நீண்ட காலமாக உள்ளவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் சுதந்திரம் பல வழிகளில் மறைமுகமாக மட்டுப்படுத்தப்பட்டது. உண்மையை சொல்லப்போனால் இவர்களுக்கு மீண்டும் இலங்கை வந்து வாழ்வது மிக கடினமானது. இதற்கான அடிப்படை தேவைகள், பொருளாதார கட்டமைப்புக்கள் எதற்கும் உத்தரவாதம் இல்லை. இங்கு இன்னோர் சவால் என்ன என்றால் இந்தியாவில் பிறந்த மற்றும் குழந்தை பருவத்தில் பெற்றோரினால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் திருமண வயதை அடைந்து விட்டார்கள். இப்படியான பிள்ளைகளை கரை சேர்ப்பது பெற்றோருக்கு அவர்கள் சக்தியை மீறிய கடினமான பொறுப்பு. இங்கே மத நிறுவனங்கள் சிறிதளவு ஆதரவு கொடுக்கின்றன.
  11. விடுதலை புலிகளின் 40 வருட செயல் பாடுகளை தோல்வியில் முடிந்ததை போல திரைக்கதை வசனம் அமைக்கும் மாக்கள் கூட்டம் இதையும் தான் கொஞ்சம் கேட்கலாமே. தலைவர் கணிப்பின்படி ஒரு இளைய சமூகம் சரியாகவே சிந்திக்கிறது.
  12. கொழும்பு செல்லும் விமானம் சற்றுச் சிறியது. பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். இந்தியாவிலிருக்கும் பெளத்த யாத்திரீகர் தலம் ஒன்றிற்குச் சென்றுவருகிறார்கள் என்று தெரிந்தது. சில முஸ்லீம்கள், ஒரு சில தமிழர்கள். இரண்டரை மணித்தியாலப் பயணம் என்றாலும், இரவுணவும், குடிக்க மென்பான‌மும் தந்தார்கள். ஓரளவிற்கு மரியாதையுடன் பேசினார்கள். கட்டுநாயக்காவில் இறங்கியதும் பல்வேறு உணர்வுகள். முதலில் பயம், பின்னர் எமக்கு நடந்த அநீதிகள், அதைத் தொடர்ந்து எமது அழிவுகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் இலங்கையின் கோட்டை கொத்தளங்கள் என்றெல்லாம் நினைவிற்கு வந்துபோனது. இலங்கைக்கு வந்தாயிற்று, அவர்கள் சொல்வதன்படியே ஆடவேண்டும். உணர்வுகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிடு என்று மனம் சொல்லியது. ஆகவே அப்பாவியாக சுங்க அதிகாரிகளின் பக்கம் சென்றேன். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் பதிந்து தந்தான் ஒருவன். நன்றி என்று சொல்லிவிட்டு பொதியை எடுக்கும் பகுதிக்குச் சென்றேன். சில நிமிடங்களில் பொதி வந்து சேர்ந்தது. எடுத்துக்கொண்டே வெளிச்செல்லும் பகுதி நோக்கிச் செல்கையில் எனக்கு முன்னால் சென்ற இளைஞன் ஒருவனை விமானப்பட வீர‌ன் ஒருவன் விசாரிப்பது தெரிந்தது. ஆகவே, அவன் பின்னால் எனது நேரத்திற்காகக் காத்து நின்றேன். அவனை அனுப்பிவிட்டு என்னைப் பார்த்தான். கடவுச்சீட்டை அவனிடம் கொடுத்தேன், வாங்கிப் பார்த்துவிட்டு நீ போகலாம் என்று சொன்னான். வெளியே வந்தேன். வெளியில் சித்தப்பா. கண்டதும் கைலாகு கொடுத்து வரவேற்றார். அவர் ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் பொதிகளை ஏற்றிக்கொண்டு அவரது வீடு அமைந்திருக்கும் கொட்டகேன நோக்கிச் சென்றோம். யாழ்ப்பாணாத்திற்குப் போகுமுன் ஒருநாளை கொழும்பில் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதன்படி அக்காவைச் சென்று சந்தித்தேன். மதிய உணவு, ஷொப்பிங் என்று சில மணிநேரங்கள் சென்றது. பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக சில பொருட்களைக் கொள்வனவு செய்தேன். பற்பசை, பல்துலக்கி, சவர்க்காரம், டியோட்ரண்ட், ஷேவிங் ரேஸர் இப்படி இந்தியாதிகள். பின்னேரம் தூக்கம். காலையில் 4 மணிக்கு எழுந்தாயிற்று. புகையிரதம் 5:45 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து கிளம்பிவிடும், தவறவிடக் கூடாது என்று சொல்லிக்கொண்டேன். அந்தக் காலை வேளையில் கொழும்பு சுறுசுறுப்பாகவே இருந்தது. இதேவகையான பல காலை வேளைகளில் கொழும்பின் பல தெருக்களில் அலைந்து திரிந்த காலம் ஒன்றிருந்தது. என்னுடன் பிளட்போம் சீட்டை எடுத்துக்கொண்டு சித்தப்பாவும் உள்ளே வந்தார். இன்னும் நேரம் இருந்தது. உள்ளே அலைமோதியது கூட்டம். எங்குதால் செல்கிறார்களோ தெரியவில்லை, கூட்டம் கூட்டமாகச் சிங்களவர்கள் பயணிக்கிறார்கள். எம்மைச் சிங்களவர்கள் என்று எண்ணி சிலர் வந்து தாம் போகவேண்டிய புகையிரதம் எந்த பிளட்போமுக்கு வரும் என்றும் கேட்டார்கள். மேலே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அட்டவணையினைப் பார்த்து முடிந்தவரையில் அவர்களுக்குக் கூறினோம். எமது புகையிரதத்தை இன்னும் காண‌வில்லை. ஆனால் இன்னொரு பிளட்போமுக்கு யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி வந்திருந்தது. பெருத்த கூட்டம் ஒன்று அதனுள் அவசரப்பட்டு ஏறுவது தெரிந்தது. நாம் நிற்பது சரியான பிளட்போம தானா என்று சித்தப்பாவைக் கேட்டேன். எனது பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு ரயில் அதிகாரியொருவரிடம் அவர் வினவினார். நீங்கள் யாழ்தேவிக்கு பணம் செலுத்தியிருக்கிறீர்கள். அது வந்துவிட்டது. இன்டர் சிட்டி மட்டுமே இங்கு வரும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று கூறினார். அவசர அவசரமாக பொதிகளை இழுத்துக்கொண்டு படிகளால் ஏறி யாழ்தேவி பிளட்போமிற்குள் இறங்கி புகையிரதத்தினுள் நுழைந்துவிட்டோம். ஒருவாறு இருக்கை தேடி அமர்ந்து, சித்தப்பாவிற்குக் கைகாட்டி அனுப்பிவைத்தேன். புகையிரதம் நகரத் தொடங்கியது.
  13. ஒருவாறு 13 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தில்லியில் இறங்கினோம். மிகவும் விசாலமான, நவீன விமானநிலையம். ஆனால், இறங்கியவுடன் முகத்தில் அறையும் துர்நாற்றம். பனிப்புகார்போன்று நகர் முழுவதையும் மூடிநின்ற புகை, சுவாசிக்கவே சிரமப்பட்டவர்கள் சில‌ர் இருந்தார்கள். குறைந்தது 4 முறைகளாவது இருக்கும், தில்லி விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி இறங்க வழி பார்த்துக்கொண்டிருந்தார் விமானி. இடைக்கிடையே தனது சிரமத்துக்கான காரணம் பற்றிக் கூறிக்கொண்டதுடன், 50 ‍- 100 மீட்டர்களுக்குமேல் எதையும் பார்க்கமுடியாது என்றும் கூறினார். அவரது சிரமம் அவருக்கு. கொழும்பில் பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு அவதிப்படுவது போல இந்தியர்கள் இறங்கினார்கள். ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு, தலைகளுக்கு மேலால் பொதிகளை இறக்கிக்கொண்டு, ரொம்பவே அவதிப்பட்டார்கள். விட்டால் இன்னொரு விமானம் ஏறிவிடுவார்கள் போலிருந்தது. நானும் அந்தச் சிங்களவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தோம். நாம் பரவாயில்லை போலிருக்கிறதே என்று எண்ணியிருப்பார். ஒருவாறு சுங்கப்பகுதிக்கு வந்தேன். சீருடை அணிந்த எல்லைப்படை வீரர்கள் எனது பொதிகளை ஸ்கானர் ஊடாகச் சோதித்தார்கள். போதாதற்கு "எல்லாவற்றையும் வெளியே எடு, உனது பொதியினுள் கண்டெயினர் இருக்கிறது" என்று ஒருவன் கோபமாகச் சொன்னான். இன்னுமொருவன் "போன், இடைப்பட்டி, சப்பாத்து, பணப்பை என்று எல்லாவற்றையும் எடுத்துவை" என்று சொல்ல, இன்னுமொருவன் பொதியை திற என்று சொல்ல திக்கு முக்காடிப்போனேன். ஆங்கிலம் பேசமாட்டார்களோ? சைகையிலேயே எல்லாம் நடந்தது. ஹிந்தியில் கேட்டான், "எனக்கு உனது பாசை தெரியாது" என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை, எனது சித்திக்கு நான் எடுத்துச்சென்ற என்ஷுவர் மாப்பேணிகளையும், சிக்கன் சூப் கண்டெயினரையுமே அவன் கேட்கிறான் என்பது புரிந்தது. எனக்குத் தெரிந்த வழியில் அவனுக்கு புரியப்படுத்த முயன்றேன். இறுதியாக வெளியே எடுத்துத் திறந்து காட்டினேன். சரி, மூடி வை என்றான். ஒருவாறு அவர்களிடம் இருந்து தப்பித்து கொழும்பு செல்லும் விமானத்திற்குக் காத்திருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று எண்ணி, அப்பகுதி நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த விமானம் வருவதற்கு இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கிறது என்று கடிகாரம் சொன்னது. பெரிய விசாலமான விமான நிலையம். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் (எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா, அவவேதான்). ஆனால், திக்கு எது திசை எதுவென்று ஒருவருக்கும் சொல்லமாட்டார்கள் போல. சர்வதேசப் பயணிகளுக்கான பகுதி எதுவென்று அறிவதற்குள் களைத்துவிட்டேன். தெரியாமல் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டேன். அங்கு ஒருவரும் இல்லை, ஒரேயொரு ஆயுதம் தாங்கிய எல்லைப்படை வீரரைத் தவிர. என்னைக் கண்டவுடன் உடனேயே கோபத்துடன் ஓடிவந்தார். ஹிந்தியில் ஏதோ கேட்டார். ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டிருக்கலாம். மெதுவாக காற்சட்டைப் பையில் இருந்த பாஸ்போட்டை அவருக்குக் காண்பித்து, சிட்னியிலிருந்து வருகிறேன், இலங்கை போக வேண்டும், வழிதெரியவில்லை என்று சைகையில் கேட்டேன். அங்கிருந்து கீழே செல்லும் படிகளைக் காட்டி, கீழே போ, அங்கு கூறுவார்கள் என்பதுபோல சைகையில் ஏதோ சொன்னார். புரிந்ததுபோல இறங்கத் தொடங்கினேன். ஒருவாறும் கொழும்பு செல்லும் விமானத்தின் பகுதிக்கு வந்தாயிற்று. இன்னும் நேரம் இருக்கிறது. சரி, கழிவறைக்குப் போகலாம் என்று எண்ணி, பயணப்பையினைத் தோளில்ப் போட்டுக்கொண்டு உள்ளே சென்றேன். இன்னும் ஊரில் இருக்கும் பழைய காலத்து மிஷனறி வகை கழிவறைகளை வைத்திருந்தார்கள். அருகில் தவறாது தண்ணீர் எடுக்கும் குழாயும், பக்கெட்டும். நவீன கழிவறைகளும் இருந்திருக்கலாம், நான் கவனிக்கவில்லை. உபாதையினைக் கழிக்க புதியது பழையது என்று பார்த்தால் முடியுமா? ஒருவாறு கொழும்பு விமானத்தின் பயணிகளை அழைத்தார்கள். ஒவ்வொருவராக கடவுச்சீட்டைப் பார்த்துவிட்டு விமானம் நோக்கி நடக்கச் சொன்னார்கள். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டால், விமானத்தின் கத‌விற்கு ஒரு சில மீட்டர்கள் முன்னால் அதே எல்லைக்காவல் வீரர்கள். இரு ஆண்களும் ஒரு பெண்ணும். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்றால் என்னவென்று அவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நலம் என்று தோன்றியது. மிக மோசமாக நடந்துகொண்டார்கள். "ஏய், ஓ" என்று அதட்டல்கள். அவர்களது மொழி புரியாத ஒருவர் என்றால், சொல்லத் தேவையில்லை. என்னை அந்தப் பெண் படைவீரர் பரிசோதித்தாள். கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்துக்கொண்டே, பொதியைத் திற என்று கூறினாள். பொதியின் மேற்பகுதி அறுந்துவிட்டதால் என்னால் மழுமையாக அதனைத் திறக்க முடியவில்லை. முடிந்தவரையில் உள்ளே இருந்தவற்றை அவளுக்குக் காண்பிக்க முயன்றேன். "எங்கேயிருந்து வருகிறாய்?" என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வினவினாள். சிட்னி என்றேன். "எங்கே போகிறாய்?" என்று கேட்டாள், கொழும்பு என்று பதிலளித்தேன். பயணப்பொதிக்குள் இருக்கும் சொக்லெட் பெட்டிகளைக் கண்டுவிட்டாள், "இவற்றை யாருக்காகக் கொண்டுபோகிறாய்?" என்று கேட்டாள். பின் தானே "ஓ, பிள்ளைகளுக்கா?" என்று அவளே கேட்கவும் நானும் ஆமென்று விட்டேன். என்ன நினைத்தாளோ தெரியாது, "இல்லையில்லை, நீ எதனையும் திறந்துகாட்டவேண்டாம், உனது பிள்ளைகளுடன் விடுமுறையினை சந்தோஷமாகக் கொண்டாடு" என்றுவிட்டுப் புன்னகைத்தாள். பரவாயில்லை, ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று தோன்றியது. அவளுக்குப் பலமுறை நன்றிகூறிவிட்டு விமானத்தின் உள்ளே சென்றேன்.
  14. பயண நாள். கார்த்திகை 24, காலை மனைவி விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். வழமையான விமான நிலைய சடங்குகளுக்குப் பின்னர் 58 ஆம் இலக்க வாயிலுக்குப் போகச் சொன்னாள் எயர் இந்தியா விமானப் பணிப்பெண். சில நூறு பேராவது இருக்கும். அப்பகுதியெங்கும் இந்தியர்கள். ஒருகணம் நான் நிற்பது சிட்னி விமானநிலையம்தானோ என்று எண்ணவைக்கும் வகையில் இந்தியர்களின் சத்தம். பெரும்பாலும் ஹிந்தி, இடையிடையே மலையாளம் அல்லது தெலுங்கு. தமிழ் மருந்திற்கும் இருக்கவில்லை. 10 மணிக்கு எம்மை விமானத்தினுள் அனுமதிக்கவேண்டும், 11 மணிவரை விமானம் ஆயத்தமாக இருக்கவில்லை. நின்ற பல நூற்றுக்கணக்கான இந்தியர்களையும் என்னையும் இரு வரிசைகளில் நிற்கச் சொன்னாள் இன்னொரு பணிப்பெண். முதலாவது வரிசை பணக்காரப் பயணிகளுக்கானது, பிஸினஸ் கிளாஸ். அதன்பின்னர் சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள். சிலர் அதுவரை தம்முடன் நடந்துவந்த தம்து பிள்ளைகளை திடீரென்று இடுப்பில் தூக்கி வைப்பதையும் காண முடிந்தது. இறுதியாக, என்னைப்போன்ற‌ சாதாரணமானவர்களை அழைத்தார்கள். உள்ளே சென்று, இருக்கையின் இலக்கம் பார்த்து அமர்ந்துகொண்டேன். மூன்றிருக்கை அமைப்பில், ஒரு கரையில் எனது இருக்கை. எனதருகில் ஒரு இந்தியப் பெண்ணும் அவரது சிறிய வயது மகனும் அமர்ந்துகொண்டார்கள். சிறுவன் அருகிலிருந்து என்னை உதைந்துகொண்டிருந்தான். எதுவும் பேசமுடியாது, பேசாமல் இருந்துவிட்டேன். அப்பெண்ணினது கணவனும் இன்னொரு கைக்குழந்தையும் எமக்குப் பின்னால் உள்ள வரிசயில் அமர்ந்திருந்தார்கள். அக்குழந்தை தொடர்ச்சியாக அழுதபடி இருந்தது. இடைக்கிடையே அக்குழந்தையை அப்பெண் தூக்கியெடுப்பதும், கணவரிடம் கொடுப்பதுமாக அவஸ்த்தப்பட்டுக்கொண்டிருந்தாள். கணவன் விமானப் பணிப்பெண் ஒருத்தியிடம் ஏதோ சொல்லியிருக்க வேண்டும், என்னிடம் வந்து "சேர், உங்கள் இருக்கையினை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சென்று அமர முடியுமா?" என்று கேட்டாள். எனக்குப் புரிந்தது, "சரி, செய்யலாமே" என்று எழுந்து மாறி இருந்தேன். அதன்பின்னர் எவரும் என்னை உதைக்கவில்லை. நான் இருந்த வரிசையில் மூன்று இருக்கைகள். நான் யன்னலின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன். நடுவில் எவரும் இருக்கவில்லை. மூன்றாவது இருக்கையில் ஒருவர் அமர்ந்துகொண்டார். இந்தியராக இருக்கமுடியாது. தமிழராக இருக்கலாம். சிலவேளை சிங்களவராகவும் இருக்கலாம், பேசவில்லை. 55 வயதிலிருந்து 60 வரை இருக்கலாம். கறுப்பான, மெலிந்த , சிறிய தோற்றம் கொண்ட மனிதர், தனியாகப் பயணம் செய்கிறார் போல. மதிய உணவு பரிமாறப்பட்டபோது, சலித்துக்கொண்டேன். நன்றாகவே இருக்கவில்லை. பாதி அவிந்தும், மீது அவியாமலும் இருந்தது உணவு. வேறு வழியில்லை, சாப்பிட்டே ஆகவேண்டும். அவசர அவசரமாக உள்ளே தள்ளிவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணி, "நீங்கள் இந்தியரோ ?" என்று கேட்டேன். "இல்லை, இலங்கை" என்று கூறினார். "ஓ. அப்படியா, இலங்கையில் எங்கே?" என்று கேட்டேன். "கொழும்பு" என்று அவர் கூறினார். "நான் யாழ்ப்பாணம்" என்று கூறினேன். சிட்னியில் என்ன செய்கிறோம், எத்தனை வருடங்களாக வாழ்கிறோம் என்று சில விடயங்களைப் பகிர்ந்துவிட்டு மீண்டும் மெளனமானோம். அவர் தூங்கிவிட்டார். நானோ எனக்கு முன்னால் திரையில் தெரிந்துகொண்டிருந்த விமானத்தின் பறப்பின் பாதையினை வேறு வழியின்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
  15. 2018 இன் பயணம் அதிக கனதிகளின்றி, குறைவான மனப்பதிவுகளுடன் முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் எனது கடந்த கார்த்திகை மாத இறுதிநாட்களின் பயணம் அப்படிப்பட்டதல்ல. எனது சித்தியின் உடல்நிலை கவலைக்கிடகமாக மாறிப்போனது. நினைவுக‌ள் குழம்பிப் போய், ஒரு சில விடயங்கள் மட்டுமே மனதில் இன்னும் எஞ்சி நிற்க, உடலாளும், மனதாலும் அவர் பலவீனமான நிலையில் இருந்தார். இருமுறை கால்தவறி வீழ்ந்துவிட்டதால் வயதான அவர் உடலில் சத்திரசிகிச்சை மூலம் தகடுகள் பொறுத்தப்பட்டு முறிவுகள் சரிசெய்யப்பட்டிருந்தது. நடக்கப்பதற்கான உடல்வலுவின்றி சக்கர நாற்காலியில் அவரைப் பராமரித்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பார்த்துவந்தவர்களில் ஒருசிலர் "உன்னைப்பற்றித்தான் அடிக்கடி கேட்கிறா, ஒருக்கால்ப் போய் பார்த்துவிட்டு வா" என்று கூறினார்கள். ஆகவே, போவதென்று முடிவெடுத்தேன், தனியாக ! அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன. இறுதியாக ஒரு சமரசம், "சரி, நீங்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டை நிற்கவேணும், அதுக்கு ஓமெண்டால் நீங்கள் போய்வரலாம்" என்று அனுமதி கிடைத்தது. எனக்கும் அது சரியாகப் பட்டது. ஆகவே சரி என்றேன்.
  16. ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று கட்டமாக ஹைல்புறோன் நகரில் வழக்கு நடத்தப்பட்டது. எனது மகன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டான், நாளைக்கு (09.01.2024) டாடோவின் வழக்கின் முடிவு அறிவிப்பார்கள். வரப் போறீங்களோ?” “ஓம், வாறன்” “ விவசாயிகள் போராட்டம் நாளைக்குத் தொடங்கினம். ரக்ரர்களைக் கொண்டுவந்து றோட்டுகளை ப்ளக் செய்யலாம். வெள்ளெனவாப் போறது நல்லது. ஏழு மணிக்கு நான் உங்களை பிக் அப் பண்ணுறன்” நீதிமன்றத்தின் உள்ளே போகும் முன் கைத்தொலைபேசி உட்பட அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு ‘லொக்கரில்’ என்னைக் கொண்டே பூட்ட வைத்து திறப்பை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். கூடவே உடல் எல்லாம் தடவிப் பார்த்து விட்டு, “ நீங்கள் பார்க்க வந்த ஆட்கடத்தல் வழக்கு 106வது மண்டபத்தில், ஒன்பது மணிக்குத் தொடங்குகிறது” என்று தகவலைத் தந்தார்கள். கைவிலங்கு போட்டபடியே முகமதுவையும் லூக்காவையும் பொலிஸார் அழைத்து வந்தார்கள். முதல் வரிசையில் முகமதுவும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். இரண்டாவதில் லூக்காவும் அவனது சட்டத்தரணியும் மூன்றாவதில் எல்விஸும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். “போதைப் பொருட்களை முகமது பாவிப்பதால் அவனுக்கு, தான் என்ன செய்கிறேன் என்று சில சமயங்களில் தெரிவதில்லை. சம்பவத்தன்றும் ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்குப் பயணிக்கும் போதும் அவன் போதைப் பொருள் எடுத்திருந்தான்” என்பதை முகமதுவின் சட்டத்தரணி தனது தொகுப்புரையில் வலியுறுத்தி இருந்தார். “லூக்கா சம்பவம் நடந்த அன்று போதைப் பொருள் உட்கொண்டிருந்தான்” என லூக்காவின் சட்டத்தரணி சொன்னார். எல்விஸ் முகமதுவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி . முதலாளி சொன்ன வேலையைத்தான் அவர் செய்தார். மற்றும்படி குற்றச் செயல்களில் அவர் ஈடுபடவில்லை” என எல்விஸின் சட்டத்தரணி குறிப்பிட்டார். “நடந்த சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்,வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். அழகானதும் ஒழுங்கானதுமான வாழ்க்கை எனக்கு இருந்தது. போதைப் பழக்கத்தால் எல்லாவற்றையும் நான் வீணடித்து விட்டேன். எனக்கு எனது பழைய வாழ்க்கை வேண்டும். நல்லபடியாக நான் வாழ வேண்டும். லூக்கா காரை ஓட்டி வந்ததைத் தவிர அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தயவு செய்து அவனுக்கு தண்டனை தந்து விடாதீர்கள்” என முகமது குறிப்பிட்டான். “போதைப் பொருள் பாவித்ததால் தடுமாறி விட்டேன். மன்னித்து விடுங்கள்” என லூக்கா சொன்னான். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்” என எல்விஸ் சொன்னான். அரச சட்டத்தரணியான லுஸ்ரிக் தன்னுடைய முடிவுரையில், “டாலிபோ மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். உடல் வலிகளால் சிரமப்படுகிறார். அதிகளவு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார். இப்பொழுது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது. சினிமாவில் வருவது போல்தான் நிஜத்தில் டாலிபோ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முகமது போதைக்கு அடிமையானவர் என்பது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் கண்ட வழி. இது லூக்காவிற்கும் பொருந்தும். சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்தில் பார்த்ததை அறிக்கையில் விபரித்திருக்கிறார்கள். ஆகவே முதலாவது,இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளுக்கு முறையே ஏழு,ஐந்து,இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என முடித்தார். நீதிபதி தோமாஸ் பேர்க்னர் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “டாலிபோவை ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்கு கடத்தியது, அவரைச் சித்திரவதை செய்தது, மரண பயத்தை ஏற்படுத்தியது என்பவை நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே முகமதுவுக்கு ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது…” நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது முகமது மேசையில் தன் கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். வாசிப்பை நீதிபதி இடைநிறுத்த, அவனின் சட்டத்தரணி முகமதுவை சமாதானம் செய்தார். அதன்பின்னர் நீதிபதி தனது வாசிப்பைத் தொடர்ந்தார் “முகமது போதைப் பொருள் பாவித்ததாகக் கருத முடியாது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என வைத்திய அறிக்கை சொல்கிறது. இதில் முகமது போதைப்பொருள் பாவிப்பவரா இல்லையா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் போதைப்பொருளில் இருந்து விடுபட மருத்துவ உதவி பெறுவதற்கு முகமதுவுக்கு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பளிக்கப்படுகிறது” ஒருநாள் மட்டும் போதைப் பொருள் பாவித்தேன் என்ற லூக்காவின் கூற்றை இங்கே ஏற்றுக் கொள்ள முடியாது. கடத்தல், சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருடங்களும் ஆறு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. முகமது சொன்னார் என்பதற்காக அவற்றைச் செய்திருந்தாலும் எதற்காகச் செய்கிறேன் என்று எல்விஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே எல்விஸுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன். ஆனாலும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதி இரண்டு வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்கள் நன்னடத்தையாக மாற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், எல்விஸ் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” வழக்கு முடிந்து விட்டது. ஆனால், டாடோ உண்மையில் தனது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தானா? அல்லது பணத்தை பதுக்கி வைத்து விட்டு திவால் என அறிவித்தானா? டாடோவிடம் பணம் இல்லை, நிறுவனம் திவால் என்றால் இருபத்தைந்தாயிரம் யூரோக்களை வங்கியில் எடுப்பதற்கு அவனது மனைவி ஏன் போனாள்? உண்மையிலேயே டாடோவின் மனைவி அவனைப் பிரிந்து போய் விட்டாளா? அல்லது எல்லாம் ஆறிய பின்னர் குறோஸியாவில் சொகுசாக குடும்பமாக வாழப் போகிறார்களா? இது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இங்கே முகமதுவின் நிலை அபாயகரமானது. தண்டனை முடிந்து வந்தாலும் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். அவனது தாயும் சகோதரியும் பேர்லினில் வாழ்வதால் எங்கேயும் அவனால் மறைந்து வாழ முடியாது. மாபியாக்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? Photos Thumilan Selvakumaran
  17. முகமதுவின் கார் பேர்லினை அடையும் போது இருட்டி விட்டிருந்தது. கார் முகமதுவின் இருப்பிடத்துக்கு வந்தவுடன், முகமதுவும், லூக்காவுமாக டாடோவின் முகத்தை மூடி, வாகனத்தில் இருந்து இறக்கி, வீட்டுக்குள் இழுத்துப் போனார்கள். முகம் மூடப்பட்டிருந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதை டாடோவால் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்த அறை முழுவதும் பொலித்தீன் விரிக்கப் பட்டிருந்தது. அதன் மேலே மரம் வெட்டும் வாள், சுத்தியல், துளையிடும் இயந்திரம், கத்தி, பேஸ்போல் துடுப்பு... போன்ற பல பொருட்கள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. அதை எல்லாம் ஒழுங்கு செய்து வைத்தது எல்விஸ். தொலைபேசியில் அழைத்து முகமது அவனுக்குச் சொன்ன வேலைகள் அவை. முகமூடி அகற்றப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு உள்ளாடை மட்டும் அணிந்திருந்த டாடோ பொலித்தீன் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு மரண பயம் தரும் வகையில் அவன் முன்னால் தாக்குதலுக்குத் தேவையான பல வகையான ஆயுதங்கள். டாடோ அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகள் இருந்ததால் அவற்றை அழித்து விடும்படி முகமது, எல்விஸ்ஸிடம் சொன்னான். எல்விஸ் அவற்றை எல்லாம் ஒரு பொலித்தீன் பையில் போட்டுக் கட்டி காட்டுக்குள் எறிந்து விட்டு வந்தான். பயணக் களைப்புத் தீர்ந்ததன் பிற்பாடு தரையில் இருந்த டாடோவின் முன்னால் முகமது வந்து நின்றான். முதலில் அவன் கையில் எடுத்த ஆயுதம் துளையிடும் இயந்திரம். டாடோவின் பின்புறம் போய் நின்ற முகமது ஒன்றி்ல் இருந்து எண்ணும்படி டாடோவுக்குச் சொன்னான். துளையிடும் இயந்திரத்தின் சத்தம், கட்டளையிடும் முகமதுவின் அதிகாரக் குரல். டாடோ எண்ண ஆரம்பித்தான். ஒன்று, இரண்டு…. டாடோ இருபது என்று சொல்லும் போது, அவனின் பிடரியை அண்டிய முதுகில் முகமது ஒரு துளை போட்டான். வலி தாங்காமல் துடித்த டாடோவிடம் “சத்தம் போடாமல் தொடர்ந்து எண்ணு” என்று சத்தமாகச் சொன்னான். வலியுடன் டாடோ தொடர்ந்து எண்ணினான். முகமது என்ன கணக்குப் போட்டானோ தெரியாது 20,40,60,.. என ஒவ்வொரு இருபதுக்கும் டாடோ முதுகில் ஒவ்வொரு துளையாகப் போட்டுக் கொண்டிருந்தான். மொத்தமாக ஆறு துளைகள். 120க்கு மேலே எண்ண டாடோவால் முடியவில்லை. முகமது ஓய்வெடுக்கும் போதெல்லாம், தன் பங்குக்கு லூக்காவும் டாடோவைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தான். டாடோவின் மேலான தாக்குதல்கள் அடுத்த நாளும் தொடர்ந்தன. தனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை அழைத்து வரும்படி முகமது எல்விஸ்ஸிடம் சொன்னான். வந்த வைத்தியர், அறையில் இருந்த நிலைமையைப் பார்த்து உறைந்து போய் நின்றார். “டொக்டர் எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டால் ஒரு மனிதன் உடனடியாக இறக்கமாட்டான்?” கையில் துப்பாக்கியுடன் நின்ற முகமதுவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டொக்டரால் அங்கே நிற்க முடியாது. “தொடையில் சுட்டால்…” “எல்விஸ், டொக்டருக்கு காசு குடுத்து அனுப்பி விடு” கனரக வாகனங்களுடன் முகமதுவின் வீடு இருந்த பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நின்றனர். வழமைபோல் யாரோ சிரியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியைக் கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதைச் சிறப்பு படை அணியினரால் அவதானிக்க முடியவில்லை. தங்களது அதிகாரியின் கட்டளைக்காக அவர்கள் ஆயத்தமாக நின்றார்கள். முகமது துப்பாக்கியால் சுட்ட குண்டுகள் இரண்டு இலக்குத் தவறாமல் டாடோவின் தொடையில் போய்த் தங்கின. துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டதும், “இது உயிரைப் பறிக்கும் வேலை. இனியும் தாமதிக்க முடியாது. நிலமை தீவீரமாக இருக்கிறது. உள்ளே செல்லவும்” அதிகாரியின் கட்டளை கேட்டு சிறப்பு அதிரடிப்படை முகமதுவின் வீட்டுக்குள்ளே நுளைந்தது. பேர்லின் அரச சட்டத்தரணி முன்னால் முகமது, லூக்கா,எல்விஸ் மற்றும் அறுபது வயதான முகமதுவின் இன்னுமொரு தொழிலாளியும் நின்றார்கள். முகமது, லூக்கா இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு இருவரையும் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் எல்விஸின் மேல் வழக்குப் பதியும் படியும், மற்ற ஊழியரில் ஒரு குற்றமும் இல்லாததால் அவரை விட்டுவிடும்படியும் அரச சட்டத்தரணி உத்தரவிட்டு, கையெழுத்திட்டார்.
  18. 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு 29 DEC, 2023 | 12:35 AM (நெவில் அன்தனி) இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, கவுன்டி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மிட்ல்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 7 வயது சிறுமியாக இருந்தபோது அமுவின் ஆற்றலை நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகம் முதன் முதலில் இனங்கண்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிரித்தானியாவில் பிறந்த அமு, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து குழாத்தில் இணைந்து உயர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். உள்ளூர் மகிளிர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, அடுத்த வருடம் இலங்கை வருகை தரவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் அடுத்த வருடம் விளையாடும்போது அமுவும் அத் தொடரில் இடம்பெறுவார் என இலங்கை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அமு இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். 1990இல் நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் அவர் குவித்த 145 ஓட்டங்கள் இன்னிங்ஸ் ஒன்றில் ஒருவர் பெற்ற சாதனைக்குரிய அதிகூடிய எண்ணிக்கையாக இருக்கிறது. பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த சிவா சுரேன்குமார் அங்கு லோகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் சிரேஷ்ட புதல்வியாக அமுருதா 2006ஆம் ஆண்டு பிறந்தார். அமுருதாவின் ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட நோர்த் லண்டன் கிரிக்கெட் கழக அதிபர் மாட்டின் இஸிட், 'அவரிடம் குடிகொண்டுள்ள இயல்பான கிரிக்கெட் ஆற்றல்கள், கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை என்பன அவரை கண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எங்களைப் பிரமிக்கவைத்தன. அடுத்த தலைமுறையில் அதி உயிரிய ஆற்றல் மிக்க வீரராங்கனைகளை இனங்காணத் துடிக்கும் தேர்வாளர்களை அமுருதா வெகுவாக கவர்ந்துள்ளார்' என்றார். தனது முன்னேற்றத்தைப் பயன்படுத்தி விளையாட்டில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த விரும்புவதாக அமு தெரிவித்துள்ளார். 'கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வளர்க்க நான் விரும்புகிறேன். உதாரணமாக பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிமாக வெளியிடவேண்டும். அத்துடன் கிரிக்கெட்டில் அதிகளவிலான பெண்களை ஈடுபடச் செய்யவேண்டும். நான் எனது பெற்றோரினால் உந்தப்பட்டேன். ஜொ ரூட் (இங்கிலாந்து வீரர்), அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எலிஸ் பெரி ஆகியோரே எனது முன்மாதிரி' என அமு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172664
  19. 23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியில அதிக நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. கடத்தப்பட்டவரைத் தனக்குத் தெரியுமென்றும் குறோஸியா நாட்டைச் சேர்ந்தவன், வயது 50க்குள்தான் இருக்கும் என்றும் ஆதி சொன்னான். கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்துகள் என ஏகப்பட்ட செய்திகள் நாளாந்தம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் போது, வந்த இந்தச் செய்தியும் அது போல ஒரு செய்தி தான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. அதனால் எங்கள் நகரில் நடைபெற்ற அந்தக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. “அந்த ஒப்பந்தம் காரனின் பெயர் டாலிபோ“ என்று ஆதி குறிப்பிட்ட போது, எனது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான், “உங்களின்ரை குளியல் அறை செய்தது ஆர்?” “டாடோ” என்றேன். “அது அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை அழைக்கும் பெயராக இருக்கலாம். அவனுடைய குடும்பப் பெயர் தெரியுமோ?” என்று எனது மகன் மீண்டும் கேட்க என் தலை இல்லை என்று வலம் இடம் ஆடியது. 2020இல் எங்களை வெளியில் நடமாட விடாது வீட்டுக்குள்ளே கொரோனா அடைத்து வைத்திருந்த ஆரம்ப கால நேரம். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சந்திக்கலாம், அதுவும் நான்கு பேர்கள் மட்டும் ஒன்று கூடலாம் என்ற அறிவிப்பினால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தேன். பென்சன் எடுத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறைய ‘போர்’ அடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நீண்டநாள் நான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த குளியல் அறையைத் திருத்தினால்... என்ற எண்ணம் எனக்குள் வந்தது. இணையத்தில் தேடி எனது நகரில் இருக்கும் ஒரு பிளம்பர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது ஜோர்க் அறிமுகமானார். தொழிலாளிகள் யாரும் வேலைக்கு வராததால் கையைப் பிசைந்து கொண்டு வீட்டில் இருந்து பியர் குடித்து, வயிறு வளர்த்துக் கொண்டிருந்த (ஜோர்க்) முதலாளிக்கு எனது அழைப்பு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். எனது வேண்டுகோளை உடனேயே ஏற்றுக் கொண்டார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதற்காக தானே தனக்குத் தெரிந்த ஒரு கட்டிடக்காரரை அழைத்து வருவதாகவும் சொன்னார். அப்படி அவர் அழைத்து வந்தவன்தான் டாடோ(47). டாடோவும் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ஆக மூனாவின் குளியலறை வேலைக்கு இரண்டு மூனாக்கள் வேலைக்கு வந்தார்கள். உயரமான, பருத்த உடம்புவாசிதான் டாடோ. “குளியலறை என்பதால் ஜோர்க் சட்டப்படிதான் எல்லாம் செய்வார். ஏதாவது பைப் லீக்காகினாலோ, உடைந்தாலோ கொம்பனியின் உத்தரவாதம் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பின்னால் எது நடந்தாலும் காப்புறுதி ஈடு செய்யாது. ஆனால் என்னுடைய வேலை அப்படி இல்லை. ‘கறுப்பு’த்தான். மணித்தியாலத்துக்கு 42 யூரோ தர வேண்டும்” என்று டாடோ கேட்டுக் கொண்டான். கறுப்புத்தானே எனக்குப் பிடித்த கலர். ஒத்துக் கொண்டேன். டாடோவும், ஜோர்க்கும் குளியலறைத் திருத்தத்துக்கான முழுப் பொருட்களையும் தாங்களே கொள்வனவு செய்து எனது சிரமத்தைக் குறைத்துக் கொண்டார்கள். நான் செய்து கொடுத்த ‘சிக்கன் றோல்ஸ்’ மற்றும் அடிக்கடி நான் கொடுக்கும் கோப்பி, மதிய உணவான சோறு, கறிகள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்துப்போக, மாலையில் வேலை முடிய “பியர் கொண்டு வா” என்று என்னிடம் அவர்கள் உரிமையுடன் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகிப் போனோம். அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களை கேலிச்சித்திரமாகவும் வரைந்து கொடுத்திருந்தேன். நான் வரைந்த சில படங்கள் எனது கைத் தொலைபேசியிலும் இருந்தன. தேடிப் பார்த்த போது டாடோவின் படமும் அங்கே இருந்தது. “டாடோ இப்படித்தான் இருப்பான்” என எனது மகனுக்குக் காட்டினேன். மகன் ஆதியிடம் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு, “இவன்தான்... இவன்தான் டாலிபோ” என ஆதி கூவ, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டத்தை என்னால் ரசிக்க முடியாமல் போயிற்று. “மிகவும் இலாபமான முறையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறன். என்னட்டை ரூமேனியாவிலை இருந்து வந்த வேலையாட்கள் இருக்கினம். அவையள் சட்டப்படியான வேலையாட்கள் இல்லை. மணித்தியாலத்துக்கு ஏழு, எட்டு யூரோக்கள் குடுத்தால் போதும். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்வாங்கள். இப்ப கொரோனா வந்ததாலை எல்லாரும் தங்கடை நாட்டுக்கு திரும்பிப் போட்டாங்கள். வேலையாட்கள் இல்லை. சட்டப்படி சம்பளம் கொடுத்துச் செய்யிறதெண்டால் கட்டுப்படி ஆகாது. பயங்கர நட்டம்தான் வரும். கொரோனா எப்ப தொலையுமோ? போனவங்கள் எப்பத் திரும்ப வரப்போறாங்களோ? இல்லாட்டில் வராமலே இருந்திடுவாங்களோ? என்று டாடோ என்னிடம் கவலைப் பட்டுச் சொன்னது நினைவுக்கு வந்தது. டாடோ நல்லதொரு வேலையாள். பழகுவதற்கு இனிமையானவன். அவனுக்கு ஏன் இந்த நிலமை வந்தது? யார் டாடோவைக் கடத்தி இருப்பார்கள்? எதற்காகக் கடத்தினார்கள் என்று எனக்குக் குளப்பமாக இருந்தது. அடுத்தநாள், தொலைக்காட்சியில் டாடோவின் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக டாடோவின் செய்தியே இருந்தது. Mann aus Schwaebisch Hall nach Brandenburg entfuehrt – mutmassliche Entfuehrer forderten Loesegeld Zwei Maenner sollen einen 46-Jaehrigen in ein Auto gezerrt und verschleppt haben. Einer der Verdaechtigen war vergangene Woche an einer Schiesserei in Berlin beteiligt (ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பிராண்டன்பூர்க்கிற்கு ஒருவர் கடத்தப்பட்டார் - கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்தப்பட்டவரை மீட்பதற்கு ஒரு தொகை பணத்தைக் கேட்கிறார்கள். இரண்டு பேர் 46 வயதுடைய ஒருவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த வாரம் பெர்லினில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்) கொஞ்சம் கொஞ்சமாக விபரங்கள் வெளியேவர ஆரம்பித்தன
  20. சீனியை விட பனஞ்சீனியும், தேனும் ஒருவகை இனிப்பு மருந்தாகும். வெள்ளை சீனியியை வெள்ளை நிறத்திற்கு கொண்டு வர பல கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். பனஞ்சீனி இயற்கை நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன. அன்றாட வாழ்வில், பனஞ்சீனியை பயன்படுத்துவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். * பனஞ்சீனியில் விற்றமின்-பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும். * பனஞ்சீனியால் சருமத்தை ஸ்க்ரப் செய்வதன்மூலம், இறந்த செல்கள் சரும துளைகளில் படிந்திருக்கும் அவற்றை நீக்கும். மேலும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். * பனஞ்சீனியில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது. மேலும், இதில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது. * பனஞ்சீனியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளைப் போக்கவும், வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், பனஞ்சீனி பயன்படுகிறது. (ஐ) https://newuthayan.com/article/நாட்டுச்_சர்க்கரையின்_மருத்துவ_பலன்கள்.
  21. மேற்குலகினர் மேலும் மேலும் எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளனர். அதை விட அகதி எனும் போர்வையில் மேற்குலகில் மக்களோடு மக்களாக கலந்து விட்டார்கள். எனவே இனி வரும் காலங்களில் கூத்துகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நான் இப்பவே சன நெருக்கம் கூடின இடங்களுக்கு போறதை குறைச்சிட்டன்...ஏன் சோலி 🤣
  22. பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். பனஞ்சீனி என்பது பனைஞ் சாறிலிருந்து(கள்ளு ) இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும்.
  23. ரஞ்சித் ...உங்கள் அன்ரி ஊர்காவற்துறையில் இருந்த்தாக் சொன்னீர்கள் முடிந்தால் அவவின் பெயரைக் தெரிவிக்கவும். உங்கள் கல்வியிலும் வளர்ச்சியிலும் முன்னேற்றிய அவரை நினைவுள்ள போது நலம் விசாரிப்பது மிகவும் நன்று.நீங்கள்குறிப்பிடுவது கொழும்புத்துறை கன்னியர் மடமாக இருக்க வேண்டும். எனக்கு வழிகாட்டிய ஒருவ ரும் அங்கு இருக்கிறார். இங்குள்ள உறவினர் பார்த்து வந்திருக்கிறார்கள்.
  24. கணவனின் படுகொலைக்கு மதுரையை அழிக்கும் கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம். நீதி மறுக்கப்பட்ட கோவலனுக்காக ஒரு சிலம்பை கையிலேந்தி நீதி கேட்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறியா' குணத்தவளான கண்ணகி எப்படி அவ்வாறு கோபம் கொண்டாள் என்று விளக்குகிறது கொற்றவை காவியம். திருமணத்துக்கு முன்னர் எங்கேயும் வெளியே செல்லாதவளான கண்ணகி, கோவலனை நம்பி மதுரை நோக்கிச் செல்கிறாள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களூடாக அவர்களின் பயணம் நடக்கிறது. கூடவே துறவியான கவுந்தியடிகளும் அவர்களுடன் துணைக்குச் செல்கிறார். கண்ணகியுடன் கூடவே செல்லும் நீலி என்னும் அணங்கு அவளுக்கு போகும் பாதைகளை விளக்குகிறது. அவள் கனவுகளுக்குள் புகுந்து வேறு உலகை காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தாய் தெய்வமாக, கொற்றவையாக மாற்றுகிறது. சிறுமை கண்டு பொங்குபவளாக மாறுகிறாள் கண்ணகி. மதுரை நகரை அடையும் முன்னரே, அங்கே நடக்கும் ஆட்சி பற்றி தெளிவாக தெரிகிறது. மன்னன் அமைச்சர் சொல் கேட்பதில்லை. வாளேந்திய காவல் படை மக்களைத் துன்புறுத்துகிறது. எந்த நியாயமும் இல்லாமல், குடிமூத்தோர் சொல் கேட்காமல் வாளே எல்லாவற்றையும் வெல்லும் என்கிறான் மன்னன். காவற்படையே நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. மாதவியுடனான வாழ்க்கையை மறந்து, செல்வம் அனைத்தையும் இழந்து கண்ணகி காலில் இருக்கும் சிலம்புகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மதுரை வருகிறார்கள். அதே நேரம் அரண்மனையில் அரசியின் சிலம்பும் காணாமல் போகிறது. ஒரு சிலம்பை விற்க கோவலன் கடைவீதியில் பொற்கொல்லனைத் தேடி வருகிறான். அரசியின் சிலம்பு போலவே கண்ணகியின் சிலம்பும் இருப்பதால், தீர விசாரிக்காமல் கொல்லப்படுகிறான் கோவலன். படுகொலையை அறிந்த கண்ணகி இன்னொரு ஒற்றைச் சிலம்புடன் நீதி கேட்கிறாள். குற்றத்தை அறிந்த மன்னன் அப்பொழுதே இறந்து விழ, அரசியும் இறக்கிறாள். கொற்றவை கோலம் கொண்டு கண்ணகி மதுரையை அழித்த பின்னர் சேர நாடு நோக்கிச் செல்கிறாள். === ஓரிடத்தில் மக்களை விலைக்கு வாங்கும் சந்தையில் கண்ணகியும், கோவலனும் புக நேர்கிறது. அதைப்பார்த்து கோவலன் பதறி 'நான் உன்னை இங்கே கூட்டி வந்திருக்கலாகாது. உன்மனம் என்ன பாடுபடும்' என்கிறான். ; கண்ணகி அதற்கு பதில் சொல்கிறாள்; 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப் பெண்டிர் தன் கணவர்களை நம்பி இருக்க வேண்டியதில்லை. ஒருவகையில் அதுவும் நல்லதுதான்'. கோவலன் அவளின் மனவோட்டம் அறிந்து தலை கவிழ்கிறான். 'பயிரென்பதன் பொருட்டுப் பிறவெல்லாம் களையப்படும் மண்ணை மருதமென்றனர் மூதாதையர். பச்சை பொலிந்து தலைகுனிக்கும் ஒவ்வொரு செடிக்கும் இறந்த களைகளின் உதிரமே உணவு.' - இது போல பல வரிகள் கொற்றவையில் கவிதையாக உள்ளது. அறமே தலையாயது என்று பாண்டிய நெடுஞ்செழியனின் அமைச்சர் கூற, "மறமன்றி இம்மண்ணில் அறம் இருக்க முடியாது" என்று கோப்பெருந்தேவி சொல்ல மன்னன் அதையே பின்பற்றுகிறான். இறுதியில் அறமே வெல்கிறது. === சிலப்பதிகாரம் தோன்றிய தமிழ்நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் இல்லை. மலையாள நாடான சேர நாட்டில் கண்ணகிக்கு கோவில்கள் உண்டு. முனைவர். வி. ஆர். சந்திரன் அவர்கள் எழுதி, எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்த்த 'கொடுங்கோளூர் கண்ணகி' எனும் நூல் கண்ணகி கோவில் பற்றி விளக்குகிறது. கொடுங்கல்லூர் அம்மை கண்ணகியாகவே வழிபடப்படுகிறாள். கையில் சிலம்புடன் சிலை உள்ளது. மேலும் பல பகவதி கோவில்கள் கண்ணகி கோவில்களே என்று சந்திரன் அவர்கள் கூறுகிறார். மலைவாழ் மக்களான குறும்பர்களே கண்ணகியை முதலில் கண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கொடுங்கல்லூர் அம்மைக்கு 'குறும்பா தேவி' என்ற பெயரும் உண்டு. மீன மாதம் நடக்கும் பரணித் திருவிழாவில் இவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. முன்பு குறும்பாடு என்னும் செம்மறியாட்டை பலி கொடுக்கும் வழக்கமும் இந்த கோவிலில் இருந்திருக்கிறது. முற்காலத்தில் வஞ்சி என்னும் பெரிய ஊராக இருந்துள்ளது கொடுங்கல்லூர். போர்களை மிகப்பெரிய அளவில் சந்தித்த இடமாக வஞ்சி இருந்த்துள்ளது என்று குறிப்பிடுகிறார் முனைவர் சந்திரன். கொற்றவை நாவலுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டியது 'கொடுங்கோளூர் கண்ணகி' புத்தகம். http://ippadikkuelango.blogspot.com/2024/01/kotravai.html
  25. உதயன் யாழிலிருந்து பனஞ்சீனியின் உற்பத்தி விளத்தம் சிறப்போ சிறப்பு. கரும்பிலிருந்து செய்வதால் கரும்புச் சீனியென்றல்லவா அழைக்கப்படுகிறது. அல்லது உதயன்காரர் பெயரை மாற்றிவிட்டார்களா?
  26. Umpire , match referee எண்டு எல்லாரும் சேர்ந்து அளாப்பி வென்று விட்டார்கள். முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான ரோஹித்தை இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆட விட்டிருக்க கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கும்!!] If the same batter didn't bat or didn't get out or had retired hurt in the first 'Super Over', the said batter is allowed to be listed among the three batters for the second 'Super Over' as well. But if the batter was dismissed in the first 'Super Over', the rules don't allow his inclusion for a second go. Rohit walks off retired out. Gamesmanship? Well within the rules. Rinku comes out without a helmet, seemingly to sprint his lungs out to try and complete two. Rohit has a laugh as he goes back into the dug out. Call it excellent game awareness.
  27. ஈரானின் பற்கள் ஒவ்வொன்றாக புடுங்கப்படுவை காண மகிழ்ச்சி. இது மேலும் தொடர வேண்டும்.
  28. தாங்க முடிலைடா சாமி. ரொம்ப சிரிப்பூட்டுறீங்க.
  29. எமது பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறை அறியச் செய்யும், உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
  30. 2,.....இல்லை இது 100 % பிழை அங்கிருந்து தான் புலம்பெயர்ந்தோருக்கு உத்தரவு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது 3,..தனியாக விடுதலை புலிகள் இராசதந்திராமாக. செயல்பட முடியாது இலங்கை அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஆகவே தான் புலம்பெயர் தமிழர்கள் வற்புறுத்தவில்லை 4 ...தீர்வு என்ற ஒன்று அது குறைந்த பட்ச தீரவாகவும் இருக்கலாம் வைத்து பூரணமாக நடைமுறைப்படுத்த பட்ட பின்பே முதலீடுகள் செய்ய வேண்டும்,இப்படி தீர்வின் பின்னர் மூதலீட்டால் கொடுககப்பட்ட தீர்வு வலுவடைத்துவிடும் அது பூரணமாக சுயாட்சி ஆகவும் மாறும் சந்தர்பங்களுண்டு இது ரணில் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும் எனவேதான் அவர்கள் விரும்புவது தீர்வு கொடுக்காமல் மூதலீட்டை பெற விரும்புகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள் தீர்வு கிடைக்க முன் ஒருபோதும் மூதலீடு செய்யக்கூடாது
  31. எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" இந்தக் கேள்வியோடு தாயகப்பயணத்தை எண்ணுவதில்லை. தடைகளோடு பயணப்படுவதில் விருப்பமில்லை. பார்ப்போம்...
  32. ரஞ்சித் அவர்களே, பயண அனுபவங்களை அழகாக அப்படியே வடித்திருக்கிறீர்கள். சிறப்பு. சில இடங்களில் மனம் நொருங்கிச் சரிகின்றது. மண்ணின் வாசத்தையும், பாசத்தையும் குழைத்தெடுத்து, எமது ஏக்கங்களையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளமை அழகு.
  33. 1) போராளிகளை கொச்சைப்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதை திரும்பவும் உறுதியாகக் கூறுகிறேன். சரி பிழைகளை ஆராய்வது மட்டும்தான் எனது நோக்கம். 2) உங்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதாக உணர்கிறேன். அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். 🙏
  34. பொதுவாக ஈரானியர்கள் நாகரீகமாக படித்து வளர்ந்தவர்கள். ஷாவின் ஆட்சி முடியும் வரைக்கும் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். கொமேனியின் ஆட்சி வந்த பின்னர் எல்லாம் தலைகீழாக மாறியது. அதுதான் அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது. ஐம்பதுக்கு ஐம்பது வீதமானோர் எதிராகத்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியில் கட்டுப்பாடுகளும், மரண தண்டனைகளும் இருப்பதால் அடக்கி வாசிக்கிறார்கள். பாகிஸ்தான் அப்படி இல்லை. அந்த நாள் தொடக்கம் மதவாத சிந்தனை கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால்தான் வழி நடத்தப்படுகின்றது. எனவே இன்னும் அந்த அடிப்படையில் பிற மதத்தினரை கொலை செய்வதும் மத மாற்றம் செய்வதும் நடக்கின்றது. பிற மதத்தினர் யார் மீதாவது கோபம் இருந்தால் தெய்வ நிந்தனை செய்தார்கள் என்று கூறி கொலை செய்து விடுவார்கள்.
  35. பாகிஸ்தான் ஆட்களை பற்றி தெரியாது. ஈரானிய மதவாத அரசை கடுமையாக வெறுக்கும் ஈரானியர்கள் இருக்கின்றார்கள்.
  36. தனி ஒருவனாக நின்று 8வது பக்கத்திற்கு கொண்டு செல்லுதல் என்ன லேசுப்பட்ட விசயமா கந்தையர்? அந்த 8 பக்கங்களில் 6 பக்கம் எனக்கு அர்ச்சனை செய்யப்பட்டவைதான். நின்றுபிடிக்கிறேன் என்றால் பாருங்கோவன்,.... 🤣
  37. நான் யாழ்களத்திற்கு வருவது அறிவுரை கூற அல்ல. எனது அனுபவங்களையும் எனக்கு தெரிந்ததை கூற மட்டுமே.நான் எல்லாம் தெரிந்தவன் போல் இங்கே நடனமாட அல்ல.
  38. இனிப்பு உணவுகளும் மா சத்து உணவுகளும் மது பானங்களும் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்தானதுதான். காரணம் இன்றைய காலத்தில் நாம் உண்ணும் உணவிற்கேற்ப எந்தவொரு வேலையுமே செய்வதில்லை. வீட்டுக்குள் இருந்து கையை காலை ஆட்டினாலும் பிரயோசனமில்லை. நல்ல காற்றுடன் காலாற நடந்து திரிய வேண்டும்.பல நோய்களுக்கு எமது வாழ்க்கை முறை மாறியதே முக்கிய காரணம். இங்கே கருத்தெழுதியவர்கள் எல்லாம் எப்போது தொடக்கம் பசுமதிச்சோறு சாப்பிட ஆரம்பித்தீர்கள் என சொல்லுங்கள் பார்க்கலாம். 30 வருடங்களுக்கு முன்னர் யாரெல்லாம் தினசரி அல்லது வார வாரம் மது அருந்தினீர்கள்? தினசரி மூன்று வேளையும் மாமிசம் சம்பந்தப்பட்ட உணவுகளை யாரெல்லாம் சாப்பிட்டீர்கள்? இனிப்பு வகைகள் சார்ந்த உணவுகளையெல்லாம் ஊரில் இருக்கும் போது தினசரி சாப்பிட்டோமா? எரித்த வதக்கிய வறுத்த எண்ணை சாப்பாடுகளை தினசரி சாப்பிட்டோமா? கூடிய பட்சம் எல்லாம் அவியல் சாப்பாடுகள் தானே. அந்தக்காலத்தில் எல்லாம் கலோரி அளவு பார்த்தா சாப்பிட்டார்கள்? ஆசிய நாடுகளில் மூன்று வேளையும் தேங்காய் சம்பந்தப்பட்ட உணவுகள் தானே. மக்களே! அன்றில்லாத நோய்கள் இன்று ஏன் வருகின்றதென சிந்தியுங்கள். சுகமாக வாழலாம். வைத்தியர்கள் கடவுள் என்ற காலம் போய் வியாபாரிகளாக மாறிய காலம் இது. உன் உடம்பிற்கு நீயே வைத்தியன். இது நான் பட்ட அனுபவம். ஏறினால் கார் இறங்கினால் காபெட் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வைத்தியர்களிடம் சென்றால் அவர்களும் மருந்துகளை தாராளமாக எழுதி தருவார்கள். இங்கே நான் வைத்தியத்தை குறை கூறவில்லை. மாறாக வைத்தியத்தின் வியாபார நோக்கையே நொந்து கொள்கிறேன். நூறுவீதம் உண்மை.
  39. ரதி கடைசி நேரத்தில் கடைசி ராஜதந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாது விட்டிருந்தால் உங்கள் கேள்விக்கு விடையாக இருந்திருக்கும். இதை அறிந்திருந்த இந்தியாவே அதை முறியடித்து அத்தனை பேரையும் கொன்றார்கள்.
  40. நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது, பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்னரை விட பெறலாம் என்ற விடுதலைப்புலிகளின் கணிப்பே. இதற்காகவே தென்னிலங்கையில் வெளிப்படையாக கடும் போக்கை காட்டக்கூடியவர்கள் பதவிக்கு வருவது எமது போராட்டத்துக்கு அனுகூலமாக அமையும் என்று நினைத்தார்கள். இதற்கு முன்னர் பிரேமதாசவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும் சந்திரிக்காவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும் பாரிய இராணுவ வெற்றிகளை பெற்று முன்னரை விட மிகப் பலமான நிலையை அடைந்தது போல் மேலும் இராணுவ ரீதியில் பலமடைவதே எமது எமது இலட்சியத்தை அடைய வழி என்றே புலிகள் கணித்தார்கள். இது பல காரணங்களால் பிழைத்துப் போனது. ஆனால், முன்னைய பேச்சுவார்ததைகளின் முடிவிலான தமது இராணுவத்த்தோல்விகளின் தமது முன்னைய அனுபவங்களை பாடமாக எடுத்த ஶ்ரீலங்கா அரசு இதனை மிக கவனமாகவும் சிறப்பாகவும் நவீன தொழில்நுட்பங்களுடன் தனது போர்த் தயாரிப்புகளைச் செய்தது. இதற்காக உலக நாடுகளிடம் உதவிகளை பெற்று கொண்டு மிக கடுமையான தாக்குதல்களை தொடுத்தது. விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் மீது மேற்கு நாடுகள் அதிப்தி கொண்டிருந்தமையும் தமிழீழம் என்ற நாடு அமைவதையும் இணைத்தலைமை நாடுகள் விரும்பாமை இலங்கை அரசுக்கு இயல்பான சாதக நிலையாக அமைந்தது. இது அரசியல் ரீதியில் ஶ்ரீலங்கா அரசுக்கு பலம் சேர்த்தது. இவ்விடயங்களைப் புலிகள் சற்றும் எதிர்பார்ககவில்லை. எதிர்பார்ததிருந்திருந்தால் நீங்கள் கேட்ட plan B யை வகுத்து, பேச்சுவார்ததைகளை சாட்டுக்காவது நீடித்து அரசியல் ரீதியான நகர்வுகளை செய்து குறைந்தது மக்களின் இழப்புகளையாவது தவிர்த்திருப்பர். அதற்கான நிபுணத்துவம் வழங்கும் மதியுரைஞரை இழந்ததும் தமிழரின் துரதிஷரமே. இறுதியில் இலங்கை அரசின் கண்மூடித்தனமான மக்கள் மீதான தாக்குதல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து ஒரு யுத்த நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று விடுதலைப்புலிகள் கணிப்பும் ஈடேறவில்லை. காலம் கடந்தபின் புலம் பெயர் நாடுகளில் யுத்த நிறுத்தத்தை கோரி நடத்தப்பட்ட ஆர்பபாட்டங்களை மக்கள் கோரிக்கையாக ஏற்காமல் புலிகளின் அநுதாபிகள் தான் அவர்களை காப்பாற்ற செய்கிறார்கள் என்ற பார்வையுடன் மேற்கு நாடுகள் அதை உதாசீனம் செய்ததுடன் புலிகளின் அழிவை அவர்கள் விரும்பியதும் காரணம். விளைவு: பேரம் பேசி எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத இன்றைய அவல நிலையை அமைந்தோம்.
  41. ஓ....கோவ காயை வெட்டுறதிலையும் விசயம் இருக்கு எண்டுறியள் இதை கையால சாப்பிடுகிறீர்களா கம்பிலால சாப்பிடுகிறீர்களா என்பதிலும் நிறைய விடயமிருக்கு.
  42. கோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் “வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை. புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான். டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை, திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது. முகமதுவுக்கு பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள். பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது. இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்தது. மேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம் “வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள். டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை முகமது கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்த ‘திவால்’ என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத் தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது. முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான். “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப் போகவேணும்” என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல் தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி. VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்” என்பதுதான். முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள். காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டி “இங்கே உன் வலது கையை வை” என்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின், “டாடோ உன் இடது கையை வை” என முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது. அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே பயணித்தார்கள். பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில் அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் . அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள். “உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்” முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது. “ஹலோ” சொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார். “பணம். இருபத்தையாயிரம்” “இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார். யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான் கேட்டார். அது பலனைத் தந்தது. பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு அப்பொழுது மொழி பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான். பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.
  43. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருட வருடம் பல மில்லியன் ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி இருந்தால் இப்படியான அபிவிருத்திகள் வேலைத்திட்டம்கள் ஒழுங்காக நடக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் நிதி வளத்தை கொள்ளையடிக்கிறார்கள். வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருந்து கொண்டு
  44. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid021A2TiGuLUU867cB5FEGPX6c9k9jgcT1UKN4TXkhQsX2kmnQvCCwbcVp3TxdeuZzjl&id=100032758071236&mibextid=gkx3sN அம்ருதா விக்கெட்டுகள் எடுக்கும் போது.
  45. இது பிழையான கருத்து சுமந்திரனை புறக்கணிக்கும் காரணம் கிறிஸ்த்தவன். என்பதற்காக அல்ல அவரது செயல்பாடுகள் ஐக்கிய தேசிய கட்சியின் செயல்கள போல் இருக்கிறது தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சி இல்லை அவர் ஐக்கிய தேசிய கட்சியில். தொடர்ந்து இருந்து இருக்கலாம் ஆனால் ரணில் இவரை தமிழரசு கட்சிக்குள்ளே புகுத்தி இருக்கலாம் உடைப்பதற்க்காக என்று கருதுகிறேன் மேலும் தமிழர்கள் அரசியலில் சமயம் பார்ப்பதில்லை இனம் தான் பார்க்கிறார்கள் அதாவது தமிழ்மொழியை பார்க்கிறோம் செல்வாவையும். பல பாதிரியார்களையும் சுத்த தமிழர்களாகப் பார்த்தோம். பார்ப்போம் சுமத்திரன். சட்டத் தொழிலில் பாவிக்கும் பொய்யை அரசியலில் பாவிப்பதை தவிர்ப்பது நல்லது பாராளுமன்ற தேர்தலில் அடாவடித்தனங்களைச் செய்து வென்றது போல் கட்சித்தலைவர். பதவியையும் கைப்பற்ற முயற்சிகள் செய்யக்கூடாது
  46. சிங்களவனால் தமிழனுக்கு தீர்வா??? முதலில் சோனகர்கள் தற்போது உங்களைப் போன்ற தமிழ் கிறீஸ்தவர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. தமிழர்கள் எப்போதும் சைவர்களுக்கு தீர்வு என்று கேட்டது கிடையாது. சிவபூமி சிவசேனை ஓன்றும் அரசியல் கட்சி அல்ல. வெளியில் இருந்து யாரும் உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உதவி என்றவுடன் பல்லைக் காட்டிக் கொண்டு வந்து விடுவீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.