Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்12Points8910Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்6Points23922Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்5Points46797Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்5Points87990Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/24/24 in all areas
-
இரண்டாம் பயணம்
4 pointsபடம் 1,2 & 3 : அக்கராயன் சாலையும் ஓரத்தில் சோலையும் படம் 4 : அக்கராயம் கமம் படம் 5 : அக்கராயன் தென்னந்தோட்டம்4 points
-
இரண்டாம் பயணம்
4 pointsபடம் 1 & 2 பண்ணைப் பாலத்தின் கரை படம் 2 : நல்லூர் முருகன் கோவில் இரவு வெளிச்சத்தில் படம் 3 & 4 : நாவற்குழி கேரதீவு மன்னார் வீதி படம் 5 : மாவீரர் நாள் அலங்காரம் படம் 6: கார்த்திகை விளக்கீடு ஜெயாவின் வீட்டில் படம் 7 : வெள்ளடியான் சண்டை சேவல் படம் 8 :அக்கராயன் விருந்தினர் விடுதி படம் 9 : கரவெட்டியில் அம்மம்மா வீடு4 points
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
3 pointsரசிய சாம்ராஜ்யம் புட்டின் என்ற ஒரு தனி நபரின் சொத்தாகி விட்டது. அவரை வளைப்பதனூடாக அல்லது அவரை அழிப்பதன் ஊடாக மிகச் சுலபமாக ரசியா கைமாறும். மாறணும். . இது தான் இன்றைய உண்மை நிலை. அபாயகரமாதும் கூட ரசிய மக்களுக்கு.3 points
-
சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை
சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை சுரைக்காய் போன்ற தண்ணீர் சத்து காய்கள் இந்த கோடைக்கு ஏற்றதாக இருப்பதோடு நமக்கு நிறைய நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அந்த வகையில் சுரைக்காய் நமக்கு எந்த மாதிரியான நன்மைகளை வழங்கும் என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காண்போம் சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை... நம் முன்னோர்கள் அதிகமாக பயன்படுத்திய காய்களுள் ஒன்று இந்த சுரைக்காய். பார்க்க பச்சையாக இருப்பதோடு சாப்பிட ருசியாகவும் இருப்பதால் மக்கள் தங்கள் சமையல்களில் இதை பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் தான் இதன் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. இதை நீங்கள் சாதாரண தண்ணிச் சத்து காய் என்று நினைத்து விடாதீர்கள். இதலிருக்கும் நன்மைகள் ஏராளம். சிறுநீரகக் கோளாறுகளில் இருந்து உடல் சூட்டு வரை தணிக்கும் இந்த காயை பற்றி இன்னும் ஏராளமாக அறிந்து கொள்வோம். ஊட்டச்சத்து அளவுகள் சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து, விட்டமின் சி, விட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து, 92 %நீர்ச்சத்து, 0.2 %புரதம், 0.1% கொழுப்பு, 0.5% தாதுக்கள், 2.5 %கார்போஹைட்ரேட்டுகள் என அனைத்து வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. நினைவாற்றல் அதிகரிப்பு இன்டர்நேஷனல் ரிசர்ச் ஜர்னல் ஆஃப் பார்மசியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி சுரைக்காயில் கோலனின் என்ற பொருள் உள்ளது. இது நமது நினைவாற்றலை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் படிக்கும் மாணவராக இருந்தாலோ, வயதானவராக இருந்தாலோ அதிகளவு சுரைக்காயை உணவில் சேர்ப்பது உங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படும் மறதி நோயான அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்க முடியும். இதய ஆரோக்கியம் சுரைக்காயில் உள்ள உயர்ந்த அளவு பொட்டாசியம் உங்க இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். இது உங்க உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குதல், உயர் கொழுப்பை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. இதன் மூலம் இதயத்திற்கு நட்பான காயாக இது அமைகிறது. உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். மேலும் சரும சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதை தணிக்க சுரைக்காயை கூட்டு போட்டு சேர்த்து சாப்பிடுங்கள். உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவி செய்யும். உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காயில் எடை இழப்பை ஊக்குவிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து உங்க செரிமானம் நடைபெற உதவியாக இருக்கும். கொஞ்சமாக சுரைக்காய் கூட்டு சாப்பிட்டால் கூட வயிறு நிரம்பிய தன்மையை ஏற்படுத்தும். தேவையற்ற பசி எடுக்காது, இதன் நீர்ச்சத்து உங்க உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும், முழு சக்தியுடன் செயல்படவும் உதவியாக இருக்கும். மூலநோயை போக்கும் சுரைக்காய் சுரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே நமக்கு ஏற்படும் மலச்சிக்கல், குடலில் ஏற்படும் புண்கள், மூலநோய், வயிற்று பிரச்சனைகளை போக்க சுரைக்காய் பயன்படுகிறது. மூல நோய்களில் பல வகையுண்டு. உள்மூலம், வெளி மூலம், ரத்த மூலம் என ஏராளமான வகைகள் உண்டு. அவற்றையெல்லாம் மிக எளிதாகக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த சுரைக்காய். நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பிப்ரவரி 2014 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி சுரைக்காயை உட்கொள்வது தமனிநோய்கள், கல்லீரல் பிரச்சனைகள், நீரிழிவு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது https://tamil.samayam.com/lifestyle/health/amazing-health-benefits-of-super-veggie-bottle-gourd/articleshow/76065991.cms?story=73 points
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
3 pointsபுதின் நேர்மையாக உழைத்த சொத்து ஒன்றும் அவரிடம் இல்லை. அங்குள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி எப்படி கொள்ளையடித்தார் என்று வாசித்த ஞாபகம் இருக்கிறது. ராஜபக்சேக்கள் கொள்ளையடித்தது இன்று வரை பேசு பொருள் மட்டும்தான். கண்டுபிடிக்க முடியவில்லை. புட்டினின் கொள்ளையடிப்புக்கள் எல்லாம் பில்லியன் கணக்கில்தான். எப்படியோ மனுஷன் போகும்போது கையை விரித்துபோட்டுத்தான் போக வேண்டும்.3 points
-
கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை
இந்தியா இலங்கை தமிழருக்கு உருப்படியாக சில விடயங்களை செய்ய விரும்பி இருந்தால் இது போன்ற ஒன்றை திருகோணமலை, யாழ்ப்பாணம் அல்லது மட்டக்ககளப்பில் செய்து இருக்க வேண்டும் அல்லது செய்ய இலங்கை அரசை நிர்பந்தம் செய்து இருக்க வேண்டும். ஆனால் இந்தியா செய்வது எல்லாம் கலாசார மண்டபம் அமைப்பது, சைவர்கள் வாழும் திருகோணமலையில் பெருமாள் கோவிலைக் கட்டுவது, யாழ்ப்பாணத்துக்கு சம்பந்தம் இல்லா ஆஞ்சநேயர் கோவிலை நிறுவுவது என்று எது எல்லாம் எம்மை மூளைச் சலவை செய்யுமோ அதை செய்கிறது. கேட்பார் யாரும் இல்லை3 points
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
2 pointsஅது தான் உண்மையும். புட்டின் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததை மறைத்து தன்னை ஒரு ரஷ்ய மக்களின் பாதுகாப்பாளராக நடகமாடி தனது நாட்டு ரஷ்ய மக்களை ஏமாற்றுகின்றார். அவர்களில் ஒரு பகுதியினரும் மேற்குலக தீய சக்திகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி பாதுகாக்கும் அற்புதமான புட்டின் என்று நம்பி ஏமாறலாம், ஆனால் இந்த ஈழதமிழர்க்கு எதிராக இலங்கையின் நண்பன் இந்த புட்டினை மேற்குலகில் மேன்மையான வாழ்க்கை அமைத்து கொண்டவர்கள் புட்டினின் ஊழல் சொத்து குவிப்பை நியாயபடுத்துவது உலக பேரதிசயம். பில்லியன் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்த புட்டினை நியாயபடுத்துவதற்காக ஒவ்வொரு தனிமனிதன் கூட அவர் போன்று செய்வதாக சொல்கின்றனர்.2 points
-
நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!
உதுக்குத்தான் சொன்னவையல் இணக்க அரசியல் செய்து இணைந்து கொள்ளுங்கள் என்று ....நாங்கள் கண்டு கொள்ளவில்லை விசயம் தெரிந்தவங்கள் இணக்க அரசியலூடாக புகுந்து விளையாடுகிறார்கள் ...எங்களுக்கு வயிற்றெரிச்சல் தான் மிச்சம்2 points
-
இரண்டாம் பயணம்
2 pointsமாவீரர் நாள் வளைவு கிளிநொச்சி மாவீரர் நாள் நினைவு இடம் அக்கராயன் மாவீரர் கொட்டகை கிளிநொச்சி உயர்ந்த மரம், அக்கராயன் ஜெயரட்ணத்தின் விருந்தினர் வீட்டின் வாய்க்காலின் மேலான சீமேந்துக் கட்டு2 points
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
2 pointsசொத்துச் சேர்ப்பது ஒன்றும் பாவம் இல்லை. இதில் யாருக்கு சந்தேகம்? 😉 பிரான்சில்,? சேர்மனியில் farmes எல்லோரும் வீதியில் என்று கேள்வி? அந்த மக்கள் பாவம் இல்லையா?2 points- கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை
நீங்கள் (இந்தியா) கோவில் கட்டுதல்(ஆத்மீக துறை_) பழ்கலைகழகம் அமைத்தல்(கல்வித்துறை) இசை நிகழ்ச்சி (கலைத்துறை) இப்படி பழைய பஞ்சாங்கத்தின் படி ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட ,சீனாக்காரன் வந்து நவீன ராஜந்திரங்களை பாவித்து உங்களை நாட்டை (சிறிலங்காவை) விட்டு துண்டை கானோம் துணியை கானோம் என ஒட வைப்பார்கள் .... பிறகு யூ டியுப்பில் வந்து கோவில் கட்டி கொடுத்தேன்,பழ்கலைகழக்ம் கட்டி கொடுத்தேன் பாட்டு பாடினேன் ...ஐயோ என்னை அடிச்சு கலைத்து விட்டார்களே என அழவேண்டி வரு2 points- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
2 pointsதமிழக திராவிட அரசியல் தலைவர்களின் சொத்து விபரத்தை வெளியிட்டால்.. புட்டின் பின்னுக்கு தள்ளப் படுவார். 😂2 points- மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்
1 pointமேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால் மேட்டிமைவாதம் என்கிறார்கள். ஆலோசனை சொல்ல வருகிறார்கள். இவர்களைப்பற்றி உங்களுக்குச் சலிப்பாக இல்லையா? பிரதீப்ராஜ் அன்புள்ள பிரதீப், அண்மையில் பலபேர் இதைச்சுட்டி ‘ஆலோசனைகள்’ ‘வழிகாட்டுதல்கள்’ எழுதியிருந்தனர். இங்கே சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒவ்வொன்றும் நான் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேனோ அதற்கான நேரடியான சான்றுகள். இலக்கியம், கலை என்பது குறித்த எந்த அறிதலுமற்ற ஒரு சூழல் இங்கே இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றின் இடம் பற்றி, இலக்கியவாதிகள் அல்லது கலைஞர்களின் வாழ்க்கை பற்றி அடிப்படைப் புரிதல்கூட இல்லாத பாமரத்தனம். பாமரர்களாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாது, பாமரராக இருப்பதில் பெருமையும் உள்ளது. அந்த பாமரத்தனத்தையே எதிர்வினைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் நிரூபிக்கவே வேண்டியதில்லை. எழுதினால்போதும், நம் பொதுப்புத்தியினரின் எதிர்வினைகளே நான் சொன்னவற்றுக்கான நிரூபணங்களாக எழுந்து வரும். அண்மையில் சாகித்ய அக்காதமி விருது குறித்து ஒரு பேச்சு உருவானது. அதில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘வெறும் ரெண்டு லட்சம் ரூபாய். அதுக்கு இவ்ளவு சண்டை’ இதுதான் பாமரத்தனம் என்பது. இவர்களுக்கு நோபல் பரிசுகூட அதிலுள்ள தொகை மட்டுமே. இவர்களுக்கு இவ்வுலகில் தெரிந்த ஒரே ‘மதிப்பு’ என்பது பணம், அதன் விளைவான அதிகாரம் மட்டுமே. இப்படி பேசுபவர்களில் பலர் நம் சூழலில் அளிக்கப்படும் ‘உயர்’கல்வி கற்றவர்கள். பலர் பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள். இலக்கியம் வாசிக்கும் நாம் இவர்களைத்தான் எதிர்கொள்கிறோம். இந்தப் புரிதல் நம்மிடம் இருக்கவேண்டும். (சுந்தர ராமசாமி எழுதினார். மேரி க்யூரி நோபல் பரிசு பெற்றபோது ‘என்ன பிரைஸ் வாங்கினா என்ன, அறுத்துக்கட்டுற சாதிதானே?’ என்று ஓர் ஐயர் சொன்னாராம். அந்தக்கால பொதுப்புத்தி. இப்போது பேசும் விதம் மட்டுமே மாறியிருக்கிறது. மனநிலை அதேதான்) இச்சூழலை வேறு எப்படி எதிர்கொள்ளமுடியும்? அவர்களுக்கு கலையிலக்கியம், சிந்தனை, தத்துவம் எதுவும் எளியமுறையில்கூட அறிமுகமில்லை. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு இங்கே பிரச்சாரம் செய்யப்படும் மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்கள் அறிந்தவை. கட்சியரசியல், நுகர்வுப்பொருட்கள் , கேளிக்கை. அவை அவர்கள் அறிந்துகொண்டவை அல்ல, அவர்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டவை. வேறு எதையும் அறியும் ஆர்வமோ, அறிவுத்திறனோ இல்லை. அதேசமயம் அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உள்ளது. ஒரு பத்தி எழுதவோ ஒரு பக்கம் படிக்கவோ தெரியாதவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வதை, வழிகாட்டுவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். அந்த வெட்கமற்ற கீழ்மையை சந்திப்பது எப்படி என்பது கலையிலக்கியங்களில், அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால். இதை என்னிடம் சொல்லாதவர்களே இல்லை. அண்மையில் ஒருவர், இசைத்துறையில் வளர்ந்து வருபவர், சொல்லிச்சொல்லி வருந்தினார். அவருடைய கனவு, முயற்சி எதுவுமே நம் சூழலுக்கு ஒரு பொருட்டல்ல. இசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லும் ‘வாழ்க்கை ஆலோசனை’கள்தான் தன் மிகப்பெரிய பிரச்சினை என்றார். ‘யாரைப்பாத்தாலும் பயமா இருக்கு சார்’ என்றார். ’நான் ஜனங்களை ஃபேஸ் பண்றதே இல்லை…பொழைக்கிற வழியப்பாருன்னு ஆரம்பிச்சிருவாங்க’ நான் அவரிடம் ’ஜெயகாந்தன் சொன்னதுதான் ஒரே வழி’ என்றேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்வது’ ஓவியர்கள், கலைஞர்கள் அனைவரும் இங்கே சந்திக்கும் சிக்கல் இது. இதே சிக்கல் இங்கே சமூகப்பணியாளர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு பிரச்சினையே இரண்டுவகை ஆலோசனைகள்தான். ஒன்று, சமூகப்பணியை எல்லாம் நிறுத்திவிட்டு எப்படி நல்ல உலகியல்வாழ்க்கையை வாழ்வது என்னும் ஆலோசனை. இரண்டு, சமூகப்பணி என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்கள் சமூகப்பணியை எப்படிச் செய்வது என்று அளிக்கும் ஆலோசனைகள். ஆச்சரியமென்னவென்றால், இங்கே ஏதேனும் துறையில் ஆய்வுசெய்பவர்களுக்கேகூட இன்று இப்பிரச்சினை உள்ளது. அறிவியலிலோ பிற துறைகளொலோ முனைவர் பட்டம் பெற முப்பது வயது கடந்துவிடும். ‘தம்பி என்ன செய்றீங்க? ஏதாவது வேலைக்கு போலாம்ல? இந்தக்காலத்திலே ரிசர்ச்சுக்கெல்லாம் என்ன மதிப்பு? நம்ம பையன் இப்பவே ஒரு லெச்சம் சம்பாரிக்கிறான்’ என்ற வார்த்தைதான் நாலாபக்கமிருந்தும் வரும். அந்த ’ஒரு லட்சம் வாங்கும் வெற்றிபெற்ற இளைஞன்’ ஆப்பிள் கணிப்பொறியை நோண்டியபடி ‘லைஃப்ல ஜாலியா இருக்கணும் புரோ’ என்பான். ஆய்வுமாணவன் கூனிக்குறுகி புன்னகைக்கவேண்டும். சமூகப்பணியாளர் இந்த ஆலோசனைக் கும்பலை ஓர் எளிய பணிவுப்பாவனையில் கடந்து செல்வார். கூடவே மனதுக்குள் சிரித்துக் கொள்வார். “ஆமாங்ணா..அப்டியே செய்றேங்ணா’ என அவர்கள் பவ்யமாகச் சொல்வதைக் கண்டு நானும் கூட நின்றே சிரித்திருக்கிறேன். ஆய்வு செய்பவர்கூட இவ்வகையில் இவர்களை கடந்து செல்லலாம். அறிவியக்கவாதி கடந்து செல்லமுடியாது. ஏனென்றால் அவன் உரையாடியே ஆகவேண்டியவன். அவன் என்ன நிலைபாடு எடுக்கவேண்டும்? அதைத்தான் நான் சொல்கிறேன், ’நிமிர்வு’. நிமிர்வினூடாக அன்றி இந்த கும்பலைச் சமாளிக்க முடியாது. நிமிர்வு சற்றுக் குறைந்தால்கூட உங்கள் தன்னம்பிக்கையை அழித்து , உங்களை மீளாச்சோர்வில் தள்ளி, செயலற்றவர்கள் ஆக்கிவிடுவார்கள். அல்லது உங்களை எரிச்சலூட்டி எரிச்சலூட்டி எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் ஆக்கிவிடுவார்கள். இரண்டுமே அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு எதிரான உளநிலைகள். இந்த அற்பர்களின் பாவனைகள் ஏராளமானவை. ‘சமூகத்துக்கு பயனுள்ள மக்கள் பிரச்சினைகளை எழுதணும் சார்’ என்பது தொடக்கம். (சமூகத்திற்கு மிகமிகப் பயனுள்ளவராக வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்பது அவருடைய தோரணை). அந்தப்பேச்சு அப்படியே நீண்டால் ‘எழுதி என்ன ஆகப்போகுது? யார் சார் இப்பலாம் படிக்கிறாங்க? ஒரு நாலுபேருக்கு நல்லது செய்தா அதனாலே பிரயோசனம் உண்டு’ என்ற இடத்துக்கு வந்துசேரும். (அப்படி நாலுபேருக்கு அவர் என்ன செய்கிறார் என்று கேட்கக்கூடாது. அவர் செய்வது முகநூலில் அரசியல், சாதிச்சண்டை ’சவுண்டு’ விடுவதுதான்) அடுத்தது ‘எழுதுறது எல்லாம் சரிதான், நல்ல மனுசனா இருக்கணும் சார்’ (அதாவது அதைச் சொல்பவர் ஒரு அதிதூயோன்) அதன் முதிர்வு நிலை ‘யாரும் எதுவும் செஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை. எல்லா பேரும் திருடன் சார்” . முத்தாய்ப்பு வரி “நாம நம்ம பொழைப்பப் பாப்பம்” ஆக, என்னைப்போல நீயும் வெந்ததைத் தின்று, விடியலில் அதை கழித்து, ஊடகம் ஊட்டுவதை மூளைக்குள் தேக்கி, அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் ரீல்ஸிலும் அதைக் கழித்து வைத்து வாழ் என்பது சாராம்சம். இந்தக் கும்பலில் இருந்து முடிந்தவரை விலகி, தனித்து நிலைகொண்டாலொழிய இங்கே எந்தத்துறையிலும் எதையும் செய்துவிடமுடியாது. அதற்கான வழி என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். தன் செயல்பற்றிய நம்பிக்கை. தான் காலத்தின் குழந்தை என்னும் புரிதல். சமூகப்பெருக்கில் ஒருவனல்ல, அதை நடத்திச்செல்லும் சிலரில் ஒருவன் என்னும் தற்தெளிவு. அதையே நிமிர்வு என்று சொல்கிறேன். அதை ஏன் மேட்டிமைவாதம் என்கிறார்கள்? ஏனென்றால் அது இந்தப் பாமரர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவர்களை விமர்சனமும் செய்கிறது. ஆகவே வேறு வழியே இல்லை. பாமரன் எதையேனும் சொல்லி அறிவியக்கத்தை, கலையை நிராகரித்தே ஆகவேண்டும். மூர்க்கமான நிராகரிப்பு, அல்லது கேலிதான் அவன் அறிந்த வழிகள். அதற்கு அவன் கண்டடையும் சில நிரந்தரமான வரிகள் உண்டு. பழைய ஆட்கள் ‘இதனால் பணலாபம் உண்டா’ என்பார்கள். அதே மனநிலை கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் ‘இதனாலே சமூகத்துக்கு என்ன பயன்?’ என்பார்கள். இரண்டும் ஒரே கேள்விதான். எந்த பாமரனுக்கும் ஒன்று உள்ளூரத் தெரியும், அவன் வாழ்க்கை சாதாரணமானது, சாதாரணமான அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல அவனுக்கு அறிவாற்றலோ துணிவோ இல்லை. ஆனால் அந்த பாமர வாழ்க்கை அவனுக்குச் சலிப்பையும் அளிக்கும். அவனுக்குத் தெரியும், அறிவியக்கத்திலோ கலையிலக்கியத்திலோ வாழ்பவர்களின் வாழ்க்கை பெரியது என்று. ஆகவேதான் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் பாமரனை தாழ்வுணர்ச்சி அடையச்செய்கிறான். அந்த தாழ்வுணர்ச்சியே எரிச்சலை மூட்டுகிறது பாமரனுக்கு. அறிவியக்கவாதி அல்லது கலைஞன் ஒன்றுமே செய்யவேண்டாம், சும்மா இருந்தாலே பாமரனை அவன் கூச்சம் கொள்ளச் செய்வான். ஆகவே பாமரனால் இகழப்படுவான். அதை அறிவியக்கவாதி அல்லது கலைஞன் எதிர்கொண்டே ஆகவேண்டும். நான் சொல்வது எழுத்தாளனையோ, கலைஞனையோ, ஆய்வாளனையோ, சமூகப்பணியாளனையோ மட்டும் அல்ல. நம் சூழலில் சாதாரணமாகப் புத்தகம் படிப்பவன், ஒரு நல்ல சினிமாவை தேடிப்பார்ப்பவன் கூட இதைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கான வழியே நிமிர்வு. ஆக, நான் மிகமிக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். நான் முன்வைப்பது ஒருவகை மேட்டிமைவாதத்தையே. இன்று நம் சூழலில் ஓர் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் நிலைகொள்ள அந்த மேட்டிமையுணர்வு இன்றியமையாதது. இன்று தமிழில் எத்தனை வசைகளைப் பெற்றுக்கொண்டாலும் பாமரனை அவன் பாமரன் என்று சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அது ஒரு சமூகக் கடமை. அதற்குப் பதிலாக ஜனநாயகம், மனிதசமத்துவம் என்றெல்லாம் பசப்புவார்கள் அதே பாமரர். ஜனநாயகமும் மனிதசமத்துவமும் உரிமைகளில் மட்டுமே. தகுதியில் அல்ல என்று சொல்லியாகவேண்டும். ஒரு சிறுபகுதியினரேனும் தாங்கள் பாமரர்களாகவே இந்த சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம் என உணர்ந்தால், ஏதேனும் வகையில் மெலே செல்லமுயன்றால் அதுவே நம் சாதனை. சென்ற முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருவது கலையிலக்கியமும், சிந்தனையும் , சமூகப்பணியும்தான் ஒரு சூழலில் முதன்மையான செயல்பாடுகள் என. பிற பணிகள் அனைத்துக்கும் மேலாக அவற்றுக்கு ஓர் இடம் உண்டு என. அந்த மதிப்பும், அவற்றின் மீதான நம்பிக்கையும் கொண்ட சமூகங்களே வென்று வாழும். அந்த நம்பிக்கையும் மதிப்பும் நம் சமூகத்தில் இன்றில்லை, அவை உருவாக வேண்டும் என. நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அதையே எழுதியிருக்கிறேன். இங்கே ஏதேனும் ஒரு தருணம் அமைந்தால் உடனடியாக அறிவியக்கவாதியை கும்பலாகக் கூடி வசைபாடி கும்மியடித்து மகிழ எத்தனைபேர் கூடுகிறார்கள் என்று பாருங்கள். எனக்கு எதிராக அப்படி கூடுவதற்கு என் நிமிர்வும், என் கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால்; மிகப்பணிவான, அரசியலே பேசாத, அன்பையே முன்வைக்கும் அறிவியக்கவாதிகள்கூட தருணம் கிடைத்தால் இதே கும்பலால் இதே போல கும்பல்கூடி வசைபாடப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்? இங்கே வசைபாடப்பட அறிவியக்கச் செயல்பாடு ஒன்றே போதும், வேறொன்றும் தேவையில்லை. நம் சூழலில் கலைஞனிடம், அல்லது அறிவியக்கவாதியிடம் ஒருபோதும் தாழ்வும் பணிவும் அமையலாகாது எனறு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இங்கே மிக எளிய உலகியல்வெற்றி அமைந்தவர்கள்கூட ஒருவகை மிதப்புத் தோரணையுடன் கலைஞனையும் அறிவியக்கவாதியையும் அணுகும் மனநிலை ஓங்கியுள்ளது. பரிவுடன் பார்ப்பார்கள். தட்டிக்கொடுப்பார்கள். தமிழின் தலைசிறந்த கவிஞனிடம் ‘ஏதாவது வேலைக்குப் போகலாம்ல?’ என்று கெத்தாகக் கேட்ட கார்ப்பரேட் குமாஸ்தாவை கண்டு உண்மையிலேயே குமட்டலெடுத்திருக்கிறது எனக்கு. இவர்கள் ஓர் எழுத்தாளன் வறுமையில் இருந்தால் உள்ளூர மகிழ்வார்கள். மனதுக்குள் நல்லவேளை நானெல்லாம் வேலைக்கு வந்துவிட்டேன் என நினைத்துக்கொண்டு வெளியே அடாடா என்பார்கள். கலைஞர்களும் எழுத்தாளர்களும் உலகியலில் துன்புற்று தோல்வியுற்றால் இவர்களுக்குள் ஒரு நிறைவு உருவாகிறது. கலைஞன் இவர்களுக்கு அளிக்கும் தாழ்வுணர்ச்சியின் எரிச்சல் சற்றுக் குளிர்கிறது. அந்த கலைஞனை அவன் உலகியலில் தோல்வியடைந்து இறக்கும்போது ஆகா அடடா என்று கொண்டாடுவார்கள். அப்படியே மறந்தும் விடுவார்கள். எண்ணிப்பாருங்கள், பிரான்ஸிஸ் கிருபா சாவின்போது இங்கே என்னென்ன பேசப்பட்டது என்று. அவரை சுட்டிக்காட்டி பிறரை வசைபாடினார்கள். ஆனால் இன்று அவரை இவர்கள் எவராவது பேசுகிறார்களா? பிரான்ஸிஸ் கிருபா இன்றும் நமக்குத்தான் முக்கியம். நாம்தான் அவருடைய கலைவெற்றியையும் கலைச்சிதறல்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அவர் ஓர் அடையாளம். கலைஞன் எனும் நிலை ஒரு தோல்வி என்றும், தாங்கள் வென்றவர்கள் என்றும் சொல்லிக்கொள்ள ஒரு சான்று, அவ்வளவுதான். ‘அசல் கலைஞன்யா’ என்பார்கள். அடுத்த கணமே ‘குடிச்சே அழிஞ்சான்யா’ என்பார்கள். கலைஞன் என்றால் அழியவேண்டியயவன் என தங்களுக்கே சொல்லிக்கொள்ள அவன் ஒரு முகம், அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த பாமரர்களின் மனநிலைதான் ஒரு கலைஞன் உலகியலில் கொஞ்சம் வென்றால் உடனே வசைபாடச் செய்கிறது. அவனுடைய வெற்றியையோ நிமிர்வையோ கண்டால் எரிய வைக்கிறது. ஏனென்றால் அவன் இவர்கள் தாங்கள் அடைந்துவிட்டதாக எண்ணும் ஒரே வெற்றியைக்கூட இவர்களுக்கு அளிக்காமல் இவர்களைவிட மேலே அங்கும் சென்று நின்றிருக்கிறான். அதை அவர்களால் தாள முடிவதில்லை. அவர்களுக்கு முன் கலைஞனின் வெற்றியை, அவன் வாழ்வின் தீவிரத்தை நாம் முன்வைப்பதென்பது ஓர் அறிவார்ந்த அறைகூவல். உலகியலில் நாலுகாசு சேர்த்தவனின் வெற்று மேட்டிமைத்தனம் அல்ல இது. இங்கே ஒருவர் இன்னொருவரைச் சந்தித்ததுமே தன் பொருளியல்நிலையைத்தான் தன்னடையாளமாகச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள். தன் பணி, தன் தொடர்புகள் இரண்டையும் சொல்வார். அவற்றை அடைந்தவர் தன்னை ‘வெற்றியடைந்தவர்’ என நினைத்துக்கொள்கிறார். அதை வெற்றி என ஒருபோதும் கலைஞன், அறிவியக்கவாதி ஒப்புக்கொள்ளக்கூடாது. அந்தப் பாமரன் அப்படி நம்ப அனுமதிக்கக்கூடாது. அவன் முன் பணிவதென்பது அவன் அப்படி நம்ப வழியமைப்பதே. அது அறிவியக்கத்துக்கும் கலைக்கும் இழைக்கப்படும் துரோகம். ஆகவே சென்ற தலைமுறை எழுத்தாளர் சிலரின் மிகைப்பணிவு, தன்னிரக்கப் பாவனை ஆகியவற்றைக் கண்டும் எனக்கு அதே குமட்டல் உண்டு. அந்த உலகியலாளர் முன் நிமிர்ந்து நின்று ’நான் கலைஞன், நான் அறிவியக்கவாதி’ என்று சொல்லி கூடவே ’நான் இச்சமூகத்தில் மிக வெற்றிகரமானவன், உங்களை விட தீவிரமானதும் அதேசமயம் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை வாழ்பவன்’ என்று சொல்பவனே இன்றைய சூழலுக்குத் தேவையானவன். அவன் இந்தச் சமூகத்திற்கான மிகமிக அடிப்படையான ஒரு செய்தியைச் சொல்கிறான். இன்றைய அற்பர்களின் எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு அவன் நாளைய தலைமுறைக்காக அந்தப்பணியைச் செய்தாகவேண்டும் நாம் நீண்டகாலம் பஞ்சத்தில் உழன்ற ஒரு சமூகம். சென்ற தலைமுறை வரை உணவுக்கே போராடிய சமூகம். நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்நடுத்தர, அடித்தளத்தில் இருந்து சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் மேலெழுந்து வந்தவர்கள். இன்று நாம் அடிப்படை வறுமையை கடந்துவிட்டோம். சாப்பாட்டைப் பற்றி பதற்றப்படும் நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் இல்லை. இனி நாம் வெல்லவேண்டியது அறிவுத்தளத்தில், கலையில். இன்று தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு இணையாகவே கலையிலும் அறிவுத்தளத்திலும் நாம் முன்னகர்ந்தாகவேண்டும். நம் அடுத்த தலைமுறையினர் அதில் சாதித்தாகவேண்டும். அதற்கு நாம் நம் மூதாதையரின் பல உளநிலைகளை கடந்துசென்றாகவேண்டும். நம் மூதாதையர் நம்மிடம் அடிப்படையான ஒரு வருமானத்தில் நிலைகொள்ளும்படி கற்பித்தனர். ‘செட்டில்’ ஆவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர். நிலைகொண்டுவிட்டால் நிம்மதி அடைந்தனர். பொருளியல்நிலை தவிர எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நமக்குக் கற்பித்தனர். பொருளியல் நிலையை அடைந்ததுமே முழுநிறைவு கொள்ள பயிற்றுவித்தனர். கலை, இலக்கியம், ஆய்வு என அறிவார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அது மனிதனை தோல்வியடையச்செய்யும் என்றும் நம்பினர். இனியேனும் நாம் அந்த மனநிலையை கடந்தேயாகவேண்டும். இல்லையேல் நம் சமூகம் வெறும் நுகர்வுக்கூட்டமாகச் சுருங்கிவிடும். வெற்றுக்களியாட்டுகளில் வீணாகி அழியும். அதன் இறுதிநிலை என்பது ‘காஸினோ’க்கள்தான். இன்றே அதன் தடையங்களைக் காண்கிறோம். நீங்கள் சொல்லும் புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே. பொருளியல்செயல்பாடு முக்கியம்தான். அதுவே மைய ஓட்டம் . ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரேனும் கலை, இலக்கியம், அறிவுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். மொத்தச் சமூகத்திற்கும் அச்செயல்பாடுகள் மேல் மதிப்பு உருவானாலொழிய அது நிகழாது. அந்த மதிப்பை அறிவுச்செயல்பாடுகளில், கலையிலக்கியங்களில் ஈடுபட்டுள்ள நாம் இன்று உருவாக்கவேண்டும். ஆகவே கலைஞனை, அறிவியக்கவாதியை பொதுச் சமூகம் குனிந்து பார்க்கலாகாது. நம் மேல் இரக்கமும் , ஊக்குவிப்பும் காட்டலாகாது. நம்மை நிமிர்ந்து பார்க்கவேண்டும். வியக்கவேண்டும். கலைஞனும் இலக்கியவாதியும் இரவலனாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அவன் கொடுப்பவனாக திகழ்ந்தாகவேண்டும். அவ்வாறு இலக்கியவாதி வெளிப்படும்போது உருவாகும் பொறாமை, கசப்பு, புகைச்சல், வசைபாடல் எல்லாம் நல்லதே. அவையெல்லாம்கூட பாமரர்களின் பாராட்டுதான். அவர்களின் பரிவும் கனிவும் மட்டும் உருவாகக்கூடாது. அவ்வாறு உருவானால் அடுத்த தலைமுறையில்கூட கலையிலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகள் மேல் சமூகமதிப்பு உருவாகாது. நான் நன்கு அறிந்த ஒன்றுண்டு. தமிழில் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் இல்லத்தில் ஒரு புத்தகம்கூட வைத்துக்கொண்டதில்லை. தங்கள் குழந்தைகள் ஒரு புத்தகம்கூட வாசிக்க அனுமதித்ததில்லை. தங்கள் வாரிசுகள் முறையாகப் படித்து, ‘நல்ல வேலைக்கு’ சென்று விடவேண்டும் என்று அல்லும் பகலும் அப்படைப்பாளிகள் முயன்றனர். வாரிசுகள் அவ்வாறு வேலைக்குச் சென்றபின் அதை அப்படைப்பாளிகள் தங்கள் வெற்றியாக , வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொண்டே இருப்பதை கண்டிருக்கிறேன். ‘நம்மைப்போல நம்ம பிள்ளை இருந்திரக்கூடாது’ என்று என்னிடம் சொன்ன பல எழுத்தாளர்களை நான் அறிவேன். அப்படியென்றால் அவர்களுக்கு உண்மையில் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய மதிப்புதான் என்ன? அவர்கள் சமூகத்துக்கு அளிக்கும் செய்திதான் என்ன? அவர்கள் இந்தச் சமூகத்தின் மொண்ணைத்தனத்தால் அவ்வளவு புண்பட்டார்கள் என கொள்வதா? நான் எதை நம்பினேனோ அதையே என் குடும்பத்திற்கு அளித்தேன். இலக்கியத்தை, அறிவுச்செயல்பாட்டை. அதுதான் பெருமைக்குரியது என எண்ணினேன். அதன் பொருட்டு எனக்கு வந்து குவிந்த அறிவுரைகள், குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் நான் எழுதிய நூல்களின் வரிகளை விட மிகுதி. ஆனால் என் வாரிசுகள் வேறெந்நிலைக்குச் சென்றாலும் ஏமாற்றமே அடைந்திருப்பேன். என் வாரிசுகளை இளமையிலேயே அதைச் சொல்லித்தான் வளர்த்தேன். இன்று அதன் பொருட்டு பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பமே அறிவுச்செயல்பாட்டில் ஈடுபாடுகொண்டிருப்பதை ஓர் இழிவென கேலி செய்து எழுதப்பட்ட நாலைந்து குறிப்புகள் என் கண்ணுக்குப் பட்டன. இந்த பாமரர் நடுவே நான் நிமிர்வை மட்டுமே முன்வைக்க முடியும் இல்லையா? அறிவியக்கச் செயல்பாடு, கலைச்செயல்பாடு உடனடியான வெற்றிகளை அளிப்பது அல்ல. அதற்கு நீண்டகாலத் தவம் தேவைப்படுகிறது. உறுதியான குறைந்தபட்ச வெற்றிக்கும் வாய்ப்பில்லை. அதில் எவ்வளவோ தற்செயல்கள் செயல்படுகின்றன. ஆய்வுகளுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் ஒரு சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரேனும் அவற்றுக்கு தங்கள் குழந்தைகளை துணிந்து அனுப்பவேண்டும். அவர்களுடன் நின்றிருக்கவேண்டும். சூழல் அளிக்கும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டும். படித்து வேலைக்குப்போய் சம்பாதிப்பது மட்டும் வெற்றி அல்ல என்றும் அறிவுச்செயல்பாடு மேலும் பெரிய வெற்றி என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் பிறரிடம் அதைச் சொல்லவேண்டும். அந்த மனநிலையை இன்று நாம் உருவாக்கியாகவேண்டும். அண்மையில் மிகச்செல்வந்தரான ஓர் இளைஞரிடம் பேசினேன். அவர் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என குடும்பமும் சூழலும் சொல்வதாகச் சொன்னார். அவர் அறிவியக்க ஈடுபாடும், அதற்கான கூர்மையும் கொண்டவர். அவர் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று நான் கேட்டேன். அவர் ஏன் தன் அகம் விழையும் அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடலாகாது? அவர் எவ்வளவு பெரும்பணிகளை ஆற்றமுடியும் . அவருக்கான நேரம் அவரிடமுள்ளது. அவருக்குத்தேவையான அடிப்படை முதலீடு கையிலுள்ளது. ஆனால் சம்பாதிக்காவிட்டால் சமூக மதிப்பு இருக்காது என குடும்பம் நினைப்பதாகச் சொன்னார். ’சம்பாதிப்பதை மட்டுமே மதிப்பெனக் கருதும் பாமரர்கள் எல்லா வற்கத்திலுமுண்டு. அவர்களின் மதிப்பை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘தாகூர் என்ன சம்பாதித்தார்?’ என்று கேட்டபோது அவர் திகைத்து அமர்ந்திருந்தார். உலகமெங்கும் மகத்தான அறிவியக்கவாதிகள் பலர் செல்வந்தக் குடியில் பிறந்து அதையே நல்வாய்ப்பென பயன்படுத்திக்கொண்டவர்கள். நவீன ஐரோப்பாவை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களே. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அறிவியக்கமே முதன்மையான சமூகச்செயல்பாடு என்ற பொதுமனநிலை உருவானது. எந்த அளவு செல்வமும் பதவியும் இருந்தாலும் ஒரு நல்லநூலை எழுதாவிட்டால், ஓர் அறிவியல்கண்டுபிடிப்பில் ஈடுபடாவிட்டால் எங்கும் மதிப்பில்லை என்னும் சூழல் முந்நூறண்டுக்காலம் ஐரோப்பாவில் இருந்தது. அதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாகி வந்த ஒன்று. மிகச்சிலருக்கேனும் தங்கள் வாரிசுகள் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் ஆவது பெருமைக்குரியதே என நம்மால் காட்டமுடிந்தால் நம் வரலாற்றுப்பணியை ஆற்றுகிறோம். கலைஞர்களை, அறிஞர்களை, ஆய்வாளர்களை மதிப்புடன் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சூழலை அடுத்த தலைமுறையிலேலும் நாம் உருவாக்க முடிந்தால் நாம் வென்றோம். இன்று பாமரர்கள் பொறாமையால் எரிவதுகூட அதற்கான ஒரு தொடக்கமே. ஜெ https://www.jeyamohan.in/194617/1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 pointபிரான்சிலும் இப்படித்தான். அரசியலில் ஒருவர் நுளைந்துவிட்டால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசியல் வாழ்க்கைக் காலத்தில் சுத்துமார்ருச் செய்து சொத்தைப் பெருக்காமல் இருக்க இந்த ஏற்பாடு.1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 pointஜேர்மனியில் அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது இல்லை அப்படி நடந்து கண்டு பிடித்தால் உள்ள சொத்தையும். இழக்க நேரிடும்1 point- Mist of Capricorn
1 point- நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
சனங்களை நாய்களாக என்னும் சனநாயக நாடாம் அமேரிக்கா. மரணதண்டனையைக்கூடச் சரியாக நிறைவேற்றத்தெரியாமல் சித்ததிரவதை செய்துகொல்லுதல், எவளவு அநியாயமனது.1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 pointசாதாரண வேவு அதிகாரியாகப் பணியாற்றி இன்றுவரை பத்தாயிரம் யூரோ சம்பளம் எடுக்கும் புதின் எவ்வாறு 2023 இல் உலகில் மிகப் பெரிய பணக்காரராக ஆக முடிந்தது ? உக்ரெயின் போர் தொடங்கியதிலிருந்து பலர் படியால் தடுக்கியும் ஜன்னலால் விடுந்தும் தூக்கு மாட்டிக் கொண்டும் இறந்தனர். இவர்களில் பலர் சாதாரணமானவர்கள் கிடையாது. ரஸ்யாவின் Gazprom மற்றும Gazprombank நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் முதலீட்டாளர்களும். பெரும் கோடீஸ்வரர்கள். ஒருவர் தனது குடும்பத்தோடு அழுந்து போனார். இவர்களது சொத்துகளுக்கு என்ன நடந்த்தது என்று தெரியாது. புதின் பற்றி எழுதியவுடனேயே அவன் முதுகைப் பார்த்தாயா இவன் முதுகைப் பார்த்தாயா என்று முண்டியடித்துக் கொண்டு வந்து புதினுக்கு வெள்ளையடிப்போருக்கு ஒருவன் அயோக்கியனாக இருந்தால் அதனை ஏற்கும் பக்குவம் கிடையாது. வசி ஏற்கனவே தந்த இணைப்பில் சென்று வாசித்தால் கோடிக்கு எத்தனை இலக்கம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம். 👇 👆 செலன்ஸ்கி மட்டுமல்ல பிரெஞ்சு அதிபரும் இந்தப் பட்டியலில் உண்டு.1 point- நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!
1 point- உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது
தன்னுடைய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டதற்காக ரஷ்யா உக்ரைனை கண்டிக்குதாம். தான் 2014 இல் Amsterdam மில் இருந்து கோலாலம்பூர் இற்கு போன பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 அப்பாவிப் பயணிகளை கொன்றதை மறந்து விட்டது போலும்.1 point- Akkarayan road 3.JPG
1 point- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
நமிபியாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது 24 JAN, 2024 | 09:46 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவின் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தின் போது நமிபியாவிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட இலங்கை, பந்துவீச்சில் அசத்தி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்ற சுப்புன் வடுகே, துல்லியமாக பந்துவீசிய ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு, தினுர கலுபஹன ஆகியோர் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்து அதன் கௌரவத்தைக் காப்பாற்றினர். சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை அங்கத்துவ நாடாக இருக்கும் நமிபியா இந்தப் போட்டியில் அசாத்திய வெற்றி ஒன்றை ஈட்டும் என கருதும் அளவுக்கு இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 37.5 ஓவர்களில் 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவில் முன்வரிசை வீரர் ஐவரை இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை பெற்றிருந்தது. புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (10), ரவிஷான் டி சில்வா (2) ருசந்த கமகே (17) தினுர கலுபஹன (0) ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையிலும் அதே கதிதான் தொடர்ந்தது. ஷாருஜன் சண்முகநாதன் (13), மல்ஷா தருபதி (6), விஷ்வா லஹிரு (0), ருவிஷான் பெரேரா (0), கருக்க சன்கேத் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. எனினும் மறு பக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சுப்புன் வடுகே 79 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கைக்கு 100 ஓட்டங்களைக் கடக்க உதவியது. பந்துவீச்சில் சச்சியோ வென் வூரென் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஹானஸ் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 27 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. ஒன்பதாம் இலக்க வீரர் ஹன்ரோ பேடன்ஹோஸ்ட் (11), பீட்டர் டெனியல் ப்ளைனோட் (17 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, தினுர கலுபஹன ஆகிய இருவரும் மிகவும் அற்புதமாக செயற்பட்டனர். ருவிஷான் பெரேரா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓவர்கள் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட விஷ்வா லஹிரு 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: சுப்புன் வடுகே https://www.virakesari.lk/article/1747471 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 pointஎன்னைப் பொறுத்தவரை புட்டின் அரசியல்வாதியாக அல்ல கொள்கைவாதியாக அல்லது தேசியவாதியாக அம்மக்களால் நம்ப வைக்கப்பட்டவர்.1 point- அங்கே நான் உன்னை..#பழநிபாரதி
1 pointஇந்த கவிதை இறுதிநேர யுத்தம் யுத்தம் முடிந்து முள்வேலிக்குள் சிறை இவைகளைத் தான் கண் முன் கொண்டருகின்றன. இணைப்புக்கு நன்றி யாயினி.1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!
சினிமா கவர்ச்சி மூலம் அரசியலில் எதுவும் செய்யலாம் என்பது தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் ஒன்று....😎1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே ஆண் : தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே ஆண் : ஏப்ரல் மே வெயிலும் நீயே ஜூன் ஜூலை தென்றலும் நீயே ஐ லைக் யூ செப்டம்பா் வான் மழை நீயே அக்டோபா் வாடையும் நீயே ஐ தேங்க் யூ ஆண் : உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க ஆண் : என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம் வந்தால் சாய்வேனே உன் தோளிலே ஆண் : கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே ஆண் : இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய் ஆண் : உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே நான் வயது வளா்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட ஆண் : வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே ஆண் : உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே ஆண் : இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் நீ வடிவமைத்தாய் ஆண் : வற்றாத கங்கை நதியாய் பெய்யாத மங்கை நதியாய் நீ வாழ்க ஆண் : புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு......! --- நீயே நீயே நானே நீயே ---1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மயங்குகிறாள் ஒரு மாது ........நடிப்பு: சாவித்திரி, சிவாஜி, எம்.என். ராஜம்,ஜெமினி .....அருமை.......! 😍1 point- சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை
வீட்டு தோட்டத்தில் மூன்று விதமான சுரக்காய்கள் இருக்கு அதில் ஒரு காயின் நீளம் 110cm, பல காய்கள் வர கைகளினால் இனப்பொருக்கம் செய்துவிடுவேன், . அத்துடன் வீட்டு சமையல் கழிவுகள்தான் உரம், கத்தாளையும் & வெங்காயமும் கிறைட்டரில் அடித்து போடுவது வழமை கீழே உள்ள இனம் : Bottle Gourd - Green Snake - One of the Longest Bottle Gourd in the world https://www.ebay.com.au/itm/142506883918?chn=ps&_ul=AU&_trkparms=ispr%3D1&amdata=enc%3A16z91F6zqTrytQLyFAepWkQ44&norover=1&mkevt=1&mkrid=705-139619-5960-0&mkcid=2&mkscid=101&itemid=142506883918&targetid=1598469861998&device=c&mktype=pla&googleloc=9070599&poi=&campaignid=19657035767&mkgroupid=143201283022&rlsatarget=pla-1598469861998&abcId=9305369&merchantid=107693533&gclid=Cj0KCQiAh8OtBhCQARIsAIkWb6_Iz6muEZi1mtjY0lZkS08q9pJoDwGinWv2RKtUTjZrtBs55lbO00gaAq3EEALw_wcB1 point- அங்கே நான் உன்னை..#பழநிபாரதி
1 pointபுறாக்கள் தங்கள் வாழ்வை முடிப்பதற்காக கற்களை உண்ணும் என்று அறிந்திருக்கிறேன் அனல் இந்தக் கவிதையில் எத்தனை தடவை யோசித்தாலும் என்னுடைய அறிவுக்கு இந்த உவமை ஏனோ புரியவில்லை.1 point- Mist of Capricorn
1 pointஇது கலிபோனியா பல்கலைக்கழகத்தின் Berkeley வளாகத்தில் , ரகுமானுக்கு க்கு கெளரவ கலாநிதி பட்டம் அளிக்கும் போது நடந்த சிம்பொனி பகுதி என்று நினைவு. இதில் எல்லோரும் இசை குறிப்புகள் (notes) இருந்ததாயினும் பாடல் வரிகளின் கருத்தையும், பாடலின் சந்தர் பத்தையம் அறிந்து, விளங்கியே அவரவரின் இசைக்கருவிகளையும் பின்ணணியும் இசைத்தனர். இது ஒரு முக்கிய காரணம், அந்த முழு சிம்போனியும் சிறப்பாக அமைந்ததற்கு.1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 pointஒரு தவறை குறிப்பிட்டு செய்தி வந்தால் அவனை நிறுத்த சொல் இவன் நிறுத்துவான் என்பது தவறை தட்டிக் கொடுக்கும் வேலை. இந்த வியாதி இருக்கும் வரை தத்துவத்தை வைத்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து சேர்த்து வாழ்வோர் வேலை இலகுவாக தொடரும்.1 point- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
1 pointகடந்த முறை நடைபெற்ற (?) நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பதிவுகளில் "இந்திய உளவு அமைப்பான RAW கிறீஸ்தவ அரசியல் தலைவர்களை தமிழர் அரசியலில் இருந்து வெளியேற்ற/ஓரங்கட்ட பகீரதப் பிரயத்தனம் செய்கிறது" என்று கூறியபோது கப்பித்தானை மறுத்து, மிகக் கடுமையாக விமர்சனம் செய்த தலைகள் எல்லாம் வெளியே வரும்படி வினயமுடன் (அச்சுறுத்தி 😁) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 😉1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 point- Imagine Dragons - Thunder
1 pointhttps://www.bbc.com/news/entertainment-arts-68065904 Der deutsche Musikproduzent Frank Farian – Gründer der Disco-Band Boney M – ist nach Angaben seiner Familie im Alter von 82 Jahren gestorben. ஆங்கில இசையை புரட்டிப்போட்ட ஒரு இசை மேதை காலமாகிவிட்டார்.1 point- இரண்டாம் பயணம்
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
இந்தியா பாக்கிஸ்தான் இங்லாந் தென் ஆபிரிக்கா இந்த அணிகள் வரக் கூடும்........நியுசிலாந் அணியும் நல்லா விளையாடினம்.............இதில திறமையை காட்டினால் தான் அடுத்த ஜபிஎல்ல இளம் வீரர்களை போட்டி போட்டு கொண்டு வேண்டுவினம் இலங்கை அணியில் ஒரு தமிழன் இடம் பிடித்து இருக்கிறார்............எனது பார்வையில் அவருக்கு கிரிக்கேட்டில் நல்ல எதிர் காலம் இருக்கு...............இந்த உலக கோப்பை இலங்கையில் இந்த ஆண்டு நடை பெற இருந்தது அரசியல் கிரிக்கேட்டுக்குள்ளும் வர............உலக கோப்பையை தென் ஆபிரிக்காவில் நடத்துகினம் அண்ணா.................1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 pointயுவர் ஆனர்.....யுவர் ஆனர்! உண்மையும் யதார்த்தமும் புரியாவிட்டால் யான் என்ன செய்யும்? 🤣1 point- ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
1 pointயுவர் ஆனர், நீங்கள் புட்டினின் புகழ் பாடுவதை யாம் வன்மையாகக் கண்டிக்கும்,.... 😁1 point- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
1 pointவணக்கம் @Cruso வின் சொற் பிரயோகங்கள் தவறு தான், உணர்ச்சி வசப்படும் பொழுது வார்த்தைகளை அவதானமாகக் கையாள வேண்டும். ஆனால் நான் குறிப்பாக உங்களுக்கு @MEERA பதில் அளித்ததன் நோக்கம், பெரும்பான்மை சைவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் அச்ச உணர்வை விளங்கி அவர்களை விட கொஞ்சம் பக்குவமாக இருந்தல் வேண்டும் என்பதால்த் தான். ( ஜனநாயக சமூக அமைப்பில் பெரும்பான்மையோரிடம் அது வேண்டப்படும் ).இதன் பொருள் சிறு பான்மை கிறிஸ்தவர்கள் நினைத்தபடி வாள் சுழற்றலாம் என்பதல்ல. 2010-2011 வாக்கில் நான் ஒரு முறை தற்போதைய இந்திய மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களை இன்னொருவர் சகிதம் சந்திக்கக் கிடைத்தது. அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி. கொமான்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல் என்று காங்கிரஸ் ஆட்சிக்கு போதாத காலம். நிர்மலா இரண்டோரு வருடங்களுக்கு முன் தான் பிஜேபி இல் இணைந்து இருந்தார்.அப்பொழுது அவர் BJP இன் உத்தியோக பூர்வ ஊடகப் பேச்சாளர். (சந்திப்பின் நோக்கம் அது எவ்வாறு அமைந்தது போன்ற விபரங்களுக்குள் போக விரும்பவில்லை) அவர் அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு விஷ(ய)த்தை இங்க சொல்வது சாலப் பொருத்தம். ஸ்ரீலங்கன் ஹிந்துத் தமிழர்கள் தமது தலைவர்களாக ஹிந்துத் தலைவர்களையே தெரிவு செய்ய வேண்டும் எனவும், western Agenda வை ஸ்ரீலங்காவில் நடைமுறைப் படுத்த விளையும் கிறிஸ்தவ தலைவர்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சில காலத்துக்குப் பின்னர் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் ஒரு செவ்வியில் ஏன் யுத்தம் முடிந்து இவ்வளவு காலம் போன பின்பும் இன்னமும் இந்திய அரசு 13ம் அரசியல் அமைப்புச் சட்டத்தை அமுல் படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை தமிழர்களின் முடிவெடுக்கும் இடத்தில் கிறிஸ்தவர் ஒருவர் இருக்கும் வரைக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்றும், கிறிஸ்தவ தமிழர்களுடன் பேசுவதில்லை என்பதே மத்திய அரசின் நிலை என்றும் பட்டவர்த்தனமாக தெரிவித்தார். அர்ஜுன் சம்பத் ஒரு ஜோக்கர் என்ற போதிலும் அவரின் தகவலை நாம் கடந்து சென்று விட முடியாது. இப்பொழுது சீனிதம்பி ஜோகேஸ்வரன், சச்சிதானந்தம், போன்றவர்கள் முலம் இந்தியா நடப்பிக்கும் அரசியலைக் கவனியுங்கள், ரணில் போன்ற மிதவாத சிங்களர்வர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று துடிக்கும் இந்தியாவைக் கவனியுங்கள். மைத்திரி ரணில் அரசுடன் தமிழ் அரசுக் கட்சி நடத்திய பேச்சு வார்த்தை ஓரளவு முன்னேற்றம் அடைந்த பொழுது யார் ஈஸ்டர் குண்டு வெடிப்பை நாடாத்தி குழப்பதை ஏற்படுத்தி இருக்க முடியும் என ஊகியுங்கள் இரண்டு வருடம் முன்பாக எதற்க்காக இங்கிலாந்து திடீர் என்று இலங்கையில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கலாம் என்று அறிவித்தது என்று யோசியுங்கள் விக்னேஸ்வரன் எதற்காக அர்ஜுன மூர்த்தியை சந்தித்தார் என்று கேளுங்கள் இப்பொழுது சுமத்திரனை ஓரம் கட்ட காட்டப்படும் முனைப்பினைப் பாருங்கள் எனக்கு சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பது பிரச்னை இல்லை, ஆனால் அவர் மிதவாதி, அதி தீவிரத் தன்மை அற்றவர், இப்போது இருக்கும் தமிழர் நிலையை ஒரு படியேனும் மேலே தூக்கி விட வேண்டும் என்று யோசிப்பதால் அவர் இப்போதைக்கு அடைய முடியாத் தமிழ் கனவைக் காண்பதில்லை.முக்கியமாக இந்தியாவிடம் இருந்து தூர விலகி இலங்கைத் தமிழர் இருக்க வேண்டும் என்று விரும்பவர் ( அப்படி நினைக்க அவரின் கிறிஸ்தவ மன நிலையும் ஒரு காரணம் எனினும் அந்த நிலைப்பாடு எல்லாத் தமிழர்க்கும் பலன் அளிக்கும் ) அதனால் நாம் இலங்கை தமிழர் அரசியலுக்குள் இந்தியா புகுந்து எப்படி அரசியல் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்க்க இந்தியாவால் ஆட்டுவிக்கப் படாதவராக தமிழ் அரசுக் கட்சி தலைவர் இருத்தல் வேண்டும். அவர் எந்த மதம் என்பது பிரச்னை ஆக இருக்கக்கூடாது. இல்லையேல் எமது நிலைமை ஆப்பிழுத்த குரங்கின் நிலை தான். ஆனால் நிலைமை நாம் எதிர் பார்ப்பது போல் அமையாமல் திரும்பத் திரும்ப தமிழர் அரசியல் இந்தியாவின் கால்களையே சுற்றிக்கொண்டு இருக்கும் என்றால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவ இந்து சண்டை வந்து நாம் மேலும் சீழ் பிடித்த இன்னும் septic ஆகி விட்ட இனமாக போய் விடுவோம். இங்கே யாழில் சிலர் கதைக்கும் கதைகள் நாம் பயப்படும் படி காரியங்கள் நடைபெறுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.1 point- தமிழ்நாட்டில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்
கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது. அந்த கிராமத்தின் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசைகளுடன் சென்று, கலந்து கொண்டு திறப்பு விழாவை கொண்டாடினர். 'இறையில்ல இல்ல திறப்பு விழா' என பெயர் சூட்டிய கிராம மக்கள் கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பேனரின் ஓரத்தில் மஸ்ஜிதே இலாஹி என்று சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த போதும், எந்த மத பெயரும் குறிப்பிடாமல், “இறையில்ல திறப்பு விழா” என்று விழாவுக்கு பெயர் சூட்டியிருந்தனர். இந்த பேனர்கள் ஊர் கவுன்சிலர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் போன்றவர்கள் சார்பாக ஊரின் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. திறப்புவிழாவுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஊர்வலமாக சென்றனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர். சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அல்பத்ரு வாலிபர் முன்னேற்ற சங்க நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். குளிர்பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் 150 கிடா வெட்டி 7,000 பேருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழா, அப்பகுதி மக்களிடையே மனநெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிவாசலுக்கு உள்ளே அழைக்கப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் தொடங்கும் போதே திறப்பு விழாவிற்கு அனைத்து சமுதாய மக்களையும் அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம் என்கிறார் சாலைகிராமத்தை சேர்ந்த நைனா முகமத். இது குறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த பள்ளிவாசல் கட்ட துவங்கும்போதே இதன் திறப்பு விழாவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என எங்கள் ஜமாத் சார்பில் முடிவு செய்யப்பட்டது. பல தலைமுறைகளாக இக்கிராமத்தில் மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. அதேபோல் கிறிஸ்தவ மற்றும் இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்வோம். பள்ளிவாசலில் இருந்து கிராமத்தில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாயத்திற்கு உரிய மரியாதையை செய்து வருகிறோம். பள்ளிவாசல் சார்பாக திறப்பு விழாவின் அழைப்பை கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என பாகுபாடு இன்றி வழங்கினோம். அழைப்பிதழ் வழங்காவிட்டாலும் திறப்பு விழாவிற்கு அனைவரும் வந்திருப்பார்கள்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மகேஸ்வரி, எங்கள் கிராமத்தில் பண்டிகையின் போது மட்டுமல்லாமல், தினசரி நடவடிக்கையிலும் ஒன்றாக இணைந்து தான் அனைத்து மதத்தவரும் வாழ்ந்து வருகிறோம் என்கிறார். "எங்கள் ஊரில் பிரதான தொழில் விவசாயம். விவசாய பணிகளுக்கு அனைத்து சமுதாயத்தினரும் வேலைக்கு வருவார்கள். அதே போல் 100 நாள் வேலைக்கும் நாங்கள் செல்லும்போது எங்களுடன் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பலரும் வேலை செய்வார்கள். நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம். பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு செல்லும் முன் மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று கூடி சாமி கும்பிட்டு சீர்வரிசை பொருட்களை வைத்து பூஜை செய்து எடுத்துச் சென்றோம். எங்கள் ஊர் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்துகளாகிய நாங்களும் இஸ்லாமிய, கிறிஸ்தவ விழாக்களில் கலந்து கொள்வோம். இது இன்று நேற்று அல்ல தலைமுறை தலைமுறையாகவே நடந்து வரும் ஒரு வழக்கம்" என்கிறார் மகேஸ்வரி. பள்ளிவாசல் திறப்பில் கிறிஸ்தவர்கள் சார்பாக கலந்து கொண்ட ஸ்டீபன் பிபிசி தமிழிடம் பேசினார். மற்றவர்களுக்கு தான் இது புதிதான நிகழ்வு என்றும், தங்கள் ஊரில் காலங்காலமாக நடைபெறும் ஒன்று என்று அவர் தெரிவித்தார். "இன்று எங்கள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து பாதிரியார் தலைமையில் இந்து மக்களுடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம். எங்கள் கிராமத்தின் சிறப்பே பொங்கல் விழா தான். ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறோம். பொங்கல் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தவரின் பண்டிகைகளையும் நாங்கள் ஒன்று கூடி கொண்டாடுவோம். திறப்பு விழாவில் பங்கேற்றது மிகுந்த மன மகிழ்ச்சியை தந்தது" என்றார் ஸ்டீபன். https://www.bbc.com/tamil/articles/cw8jwj4np21o1 point- தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
கூத்தமைப்பானுகளுக்கு வாழ்த்து வேற ஒரு கேடு. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது தமிழ் தேசியம் என்றாலே என்னவென்று தெரியாமல் அடிமட்ட உறுப்பினர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் சுத்துமாத்தின் உழைப்பு சாதாரணமானதல்ல. கூத்தமைப்பு ஒரு இலங்கை தி.மு.க1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நொச்சி அவர்களே, உங்கள் கருத்திற்கு நன்றிகள்! ஆனால், நெடுக்கர் காட்டமாகச் சொன்ன கருத்தை யாரையும் நோகடிக்காமல் அழகு தமிழில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தோடு பெரும்பாலும் முரண்படுகிறேன்: சட்டம்: LGBTQ+ சார்ந்து அப்படி என்ன சட்டத்தை அரசுகள் உருவாக்கி , பண்பாட்டைக், கலாச்சாரத்தைச் சீரழித்து விட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் அறிந்த வரையில், ஆண் பெண் உறவிற்கு இருக்கும் சாதாரண தன்மையை, அங்கீகாரத்தை ஒரு பால் உறவிற்கும் வழங்க வேண்டுமென்ற சமத்துவம் பேணும் சட்டங்கள் தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. திரியில் இருக்கும் கொலைச் சம்பவத்தில் நிகழ்ந்தது போல, அரசுகள், மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி "நீயும் உன் குடும்பமும் ஒரு பால் உறவில் ஈடுபட வேண்டும்" என்று சட்டம் இயற்றியதாக நான் அறியவில்லை! எனவே, உலகின் இன்னொரு பகுதியில், இயற்கையாகத் தமிழர் அடையாளத்தோடு பிறந்த எம்மை, ஒதுங்கியிருக்கும் படி செய்த சட்டங்களை விட்டு விலகி, லிபரல் ஜனநாயக நாடுகளில் "யாரும் எப்படியும் முன்னேறலாம்" என்ற சமத்துவ சட்டங்களால் ஈர்க்கப் பட்டு குடியேறிய நாம், இன்று இன்னொரு இயற்கையான அடையாளத்திற்கு சமத்துவம் கொடுப்பதை சீரழிவு என்கிறோம் , அதற்கெதிராக வலதுசாரிகளோடு கை கோர்த்து எதிர்ப்பைக் காட்டுகிறோம். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பி.கு: கொசுறுக் கேள்வியொன்று- உலகில் 35 நாடுகள் மட்டும் தான் ஓரின உறவை அங்கீகரித்திருப்பதால், பரந்து விரிந்த உலகம் இன்னும் இந்த LGBTQ+ விடயங்களை விரும்பாதோருக்கு திறந்திருக்கிறதல்லவா? அப்படியானால், ஏன் இன்றும் கூட அந்த 170+ நாடுகளில் இருந்து இந்த 35 நாடுகளுள் சில நோக்கி மட்டும் மக்கள் கும்பல் கும்பலாகக் குடியேறுகிறார்கள்? நாணயப் பரிமாற்ற வீதமா, சோசியல் காசா, அல்லது வேறேதுமா?1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
நடந்த மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விபரங்கள் வராமல், அவற்றைப் பற்றி எதுவித ஆதாரங்களும் இல்லாமல் எழுந்தமானத்திற்கு எழுதுவதும், சம்பந்தமில்லாத விடயங்களை (உறுதி செய்யப்படாத) எழுதி திசையைத் திருப்புவதும் ஆர்வக்கோளாறு அல்லது விடுப்புக்கேட்கும் மனநிலை என்றுகொள்ளமுடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுப்பு இருக்கின்றது. குடும்பத்தினருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும்.1 point- நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
வழமை போல, தரவுகளைப் புறந்தள்ளி விட்டு உங்கள் கற்பனைகளை அள்ளி விட்டிருக்கிறீர்களென நினைக்கிறேன்😎. உங்கள் கற்பனை உலகை குலைக்காமல், உண்மை அறிய விரும்பும் யாழ் வாசகர்களுக்கு மட்டும் எழுதுவது: உலகில், LGBTQ+ இனருக்கு அதிக பாதுகாப்பும், சமத்துவமும் வழங்கும் முதல் 10 நாடுகளில் நோர்வே உட்பட்ட ஸ்கண்டினேவிய நாடுகள் அடங்கும். இன்று வரை அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் நடக்கும் கலாச்சாரப் போர் (Culture war) ஸ்கண்டினேவிய நாடுகளில் பரவவில்லை. நோர்வே கிறிஸ்தவர்கள், LGBTQ+ இனை ஒதுக்காமல் வரவேற்கும் Evangelical Lutherans எனப்படும் தரப்பினர். நோர்வே திருச்சபை எந்த போப்பின் கீழும் இல்லாத சுதந்திர திருச்சபை (அங்கிலிக்கன் போல). 2015 இல் இருந்து ஒர் பாலினத் திருமணங்களை நோர்வே திருச்சபை தன் ஆலயங்களில் அனுமதித்திருக்கிறது. பொது மக்களிடையேயும் இந்த உறவுகளுக்கு எதிர்ப்புக் குறைவு. இவை நோர்வே அரசு, HRW ஆகியவற்றின் தளங்களில் இருக்கும் தரவுகள்! நெடுக்கர் சொல்லும் ஓர் பாலின உறவுகள் பற்றிய homophobia நோர்வேயில் இருந்தால், நிச்சயமாக நெடுக்கர் போன்ற குடியேறிகளிடையே தான் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன்.1 point - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.