Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    28
    Points
    8910
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/02/24 in Posts

  1. தில்லிக்குச் செல்லும் விமானத்தை எதிர்பார்த்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன். தில்லியுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிய விமான நிலையம் இலங்கையினுடையது. பழமையானபோதும் கூட ஓரளவிற்குத் தூய்மையாக இருந்தது. நள்ளிரவு நேரமான போதும் மிகுந்த சனக்கூட்டம். வெளிநாட்டவர்கள் பலரும் அக்கூட்டத்தில் காணப்பட்டனர். இவர்களுள் இந்தியர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். பலர் வந்து செல்கிறார்கள் போலும். சற்றுத் தாமதமாக இந்தியன் எயர்வேஸ் விமானம் வந்து சேர்ந்தது. இலங்கையைச் சேர்ந்த சில ஊழியர்களே அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். பயணிகளை மரியாதையாக நடத்தியதுபோல் உணர்ந்தேன். விமானத்தில் ஏறுமுன் கெடுபிடிகளை அவர்கள் கட்டவிழ்த்துவிடவில்லை. நாட்டைவிட்டு வெளியேறுகிறவர்களை எதற்குச் சோதிக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம். விமானத்தினுள் ஏறும்போது தவறாமல் நமஸ்த்தே என்று ஒரு விமானப் பணிப்பெண் வரவேற்றாள். செயற்கையான அவளது சிரிப்பை ஏனோ ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஹெல்லோ என்று ஆங்கிலத்தில் நானும் செயற்கையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு இருக்கை தேடி அமர்ந்துகொண்டேன். சிறிய விமானம், இரண்டு, இரண்டு இருக்கைகளாக இரு வரிசைகள். விமானம் நிரம்பியிருந்தது. சுமார் இரண்டரை மணிநேரத்திற்குப் பின்னர் அதே இந்திரா காந்தி விமான நைலையத்தில் இறக்கிவிட்டார்கள். சிட்னிக்கான விமானத்திற்கு இன்னும் 6 மணித்தியாலங்கள் இருந்தன. உள்வருகை சுங்க அதிகாரிகளிடம் கடவுச் சீட்டைக் கொடுத்து மீள்பறப்பிற்கான அனுமதியைப் பெறுவதற்கான வரிசையில் நின்றுகொண்டேன். எனக்கு முன்னால் ஒரு அப்பிரிக்க இளைஞன், இந்தியாவூடாக சிட்னிக்கு வருகிறான். அவனது கடவுச்சீட்டினைப் பரிசோதிக்கும் சுங்க அதிகாரிக்கு 25 இலிருந்து 30 வயதுதான் இருக்கும். அந்த ஆப்பிரிக்க இளைஞனை இந்திய அதிகாரி நடத்திய விதம் அங்கு நின்றவர்களை மனங்கோண வைத்தது. ஒருவரையொருவர் நாம் பார்த்துக்கொண்டோம். "எங்கேயிருந்து வருகிறாய்?, எங்கு செல்கிறாய்? எதற்காகச் செல்கிறாய்? எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போகிறாய்? அங்கு படிப்பதற்கு உனக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? நீ அங்கு வேலைசெய்வதற்காகத்தான் போகிறாய் என்று நான் நம்புகிறேன், அங்கு நீ தங்கியிருக்கும் விலாசம் என்ன? எவ்வளவு பணம் கொண்டுசெல்கிறாய்? எதற்காக இந்தியாவிற்கூடாகப் பயணம் செய்கிறாய்?" என்று அடுத்தடுத்து அவனைக் கேள்விகளால்த் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தான் அந்த இந்திய அதிகாரி. அந்த இளைஞனின் பல்கலைக்கழக விபரங்களைக் காட்டுமாறு பணித்தான். அந்த ஆவணங்கள் அவனுக்குத் திருப்திகரமாக இருக்கவில்லையென்பது அவனது முகபாவனையில் இருந்து தெளிவாகியது. அருகிலிருந்த இன்னொரு அதிகாரியிடம் அவற்றைக் காண்பித்து இவை போலியானவை எனுமாப்போல் பேசிக்கொண்டான். சிறிதுநேரம் அந்த இளைஞனைக் குடைந்தெடுத்த பின் போக விட்டான். தனது நாட்டினூடாக‌ இன்னொரு நாட்டிற்குப் பயணிக்கும் வெளிநாட்டவரை இந்தியர்கள் எவ்வளவு தூரத்திற்கு கீழ்த்தரமாக நடத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். எனது முறை வந்தது. எங்கேயிருந்து வருகிறாய் என்கிற அதே கேள்வி. கொழும்பு என்று சொன்னதும், எங்கே போகிறாய் என்று அடுத்த கேள்வி. சிட்னி என்றதும் கடவுச்சீட்டினைப் பார்த்துவிட்டு, சரி போகலாம் என்று அனுமதித்தான். விமான நிலையம் விசாலமானது என்று பலமுறை சொல்லியாயிற்று. அதிலும் ஒரு சின்னச் சிக்கல். இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கின்றன சிட்னிக்கான விமானம் வருவதற்கு. இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று யோசனை எழவே, சரி விமான நிலைய Wifi இனை இணைந்த்து ஏதாவது பார்க்கலாம், நேரத்தைப் போக்கலாம் என்று தோன்றியது. சரி, விமான நிலையத்தின் Wifi இனை எனது கையடக்கத் தொலைபேசியில் தேடிய போது இணைப்புக் கிடைத்தது. ஆனால் அதற்கான கடவுச்சொல் தெரியாது. ஆகவே அங்கு பணிபுரியும் அதிகாரி எவரிடமாவது கேட்கலாம் என்று தேடினால் பலர் இருக்கிறார்கள், ஆனால் எவருமே நின்று, நிதானித்து நான் கேட்பதற்குப் பதிலளிப்பார்கள் போல்த் தெரியவில்லை. ஒருவாறு அதிகாரியொருவரை அணுகி, Wifi கடவுச்சொல் எங்கெடுக்கலாம் என்று வினவினேன். "அதற்கு நீங்கள் தகவல் அறியும் நிலையத்திற்குப் போகவேண்டும், விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அது இருக்கிறது" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். விமான நிலையத்தின் பலவிடங்களில் தகவலறியும் நிலையத்திற்கான வழிகாட்டும் அம்புக்குறிகள் கீறப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் வழியே போனால் சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்கு வருவது போலத் தோன்றியது. 10 - 15 நிமிடங்கள் நடந்து ஒருவாறு அந்த நிலையத்தைக் கண்டுபிடித்தேன். அங்கிருக்கும் ஸ்கானர் ஒன்றினுள் உங்களது கடவுச்சீட்டை வைத்து ஸ்கான் செய்தால் உங்களுக்கான கடவுச்சொல் ஒன்றினை அது தரும். நான்கு மணித்தியாலங்களுக்கு அது செல்லுபடியாகும். சரி, மீதி நான்கு மணித்தியாலங்களுக்குப் பொழுது போக்குக்கிடைத்துவிட்டது என்கிற சந்தோசத்தில் இடம் தேடி அமர்ந்துகொண்டு யூடியூப் பார்த்தேன். யாழில் என்ன செய்தி, சி.என்.என் என்ன சொல்கிறது என்று அலசிவிட்டு இறுதியாகக் களைத்துப்போய் பேசாமல் இருந்துவிட்டேன். நேரமாகியதும் சிட்னி செல்லும் இந்தியர்களின் கூட்டம் அப்பகுதியில் அதிகமாகியது. விமானத்தில் பயணிகளை ஏற்றும் நேரம் வந்தபோதும் கடவுச்சீட்டுக்களைப் பரிசோதித்து விமானத்தினுள் அனுமதிக்கும் நிலை திறக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் விமானச் சேவையின் பணியாளர் ஒருவர் வந்தார். காத்திருக்கும் மக்களைச் சட்டை செய்யாது வேண்டுமென்றே தொலைபேசியில் யாருடனோ சத்தமாக உரையாடிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் பயணிகள் கூட்டம் தாமாகவே வரிசை ஒன்றினை ஏற்படுத்தி தமக்கருகில் பயணப் பொதிகளையும் இழுத்துவைத்துக்கொண்டனர். இவை எல்லாவற்றையும் அந்த அலுவலகர் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டு வேண்டுமென்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடிந்ததும், "நான் இன்னும் கவுன்ட்டர் திறக்கவிலை, ஏன் இங்கு வந்து நிற்கிறீர்கள், அழைக்கும்போது வருங்கள், இப்போது உங்கள் இருக்கைகளுக்குச் செல்லுங்கள், அழைக்கும்போது வந்தால்ப் போதும்" என்று ஹிந்தியில் சத்தம் போடுவது புரிந்தது. பலர் தமது பொதிகளை வரிசையில் நின்ற இடத்திலேயே விட்டு விட்டு தமது இருக்கைகளுக்குத் திரும்பினார்கள். சிறிது நேரத்தின் பின்னர் சீக்கிய இனப் பணியாளர் ஒருவர் வந்தார். கூடவே பெண் பணியாளரும் வந்திருந்தார். அவர்களைக் கண்டபின்னர்தான் முதலாவது பணியாளரின் முகத்தில் சிரிப்பே வந்தது. பின்னர் இரு வரிசைகளில் நிற்குமாறு பயணிகளை அழைத்து கடவுச் சீட்டினை பரிசோதித்து உள்ளே அனுபினார்கள். வழமைபோலவே விமானத்தில் ஏறுமுன் எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் வீரம் பயணிகள் மீது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ஆளை விட்டால்ப் போதுமடா சாமி என்று அவர்களுக்கும் அவர்களது நாட்டிற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அதே விமானம், அதே பணிப்பெண்கள், அதேயுணவு, இதைத்தவிர அந்த விமானப் பயணம் குறித்து சொல்வதற்கு விசேடமாக எதுவும் இருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி காலை 8 மணிக்கு சிட்னியில் வந்திறங்கினேன். அன்று மாலையே வேலைக்குச் செல்லவேண்டும். எல்லாம் பழமைக்குத் திரும்பியாயிற்று. முற்றும் ! இதனை எழுதும்படி கேட்டுக்கொண்ட நிழலிக்கும், கருத்தும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
  2. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  3. மிக்க நன்றி. நானும் யோசித்து பதிகிறேன்.🙏 ஒருவேளை, அது இனிய யாழ் உறவின் சந்திப்பாகவும் இருக்கலாம்.😍
  4. பஸ்சில் பலரை ஏற்றிச் செல்லும் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சாரதி மது அருந்தலாமா? மது தான்... முக்கியம் என்றால், ஏன் இந்த பொறுப்பு மிக்க பதவிகளுக்கு வருகின்றார்கள். இவர்களால்... பஸ்சில் பயணம் செய்ப்வர்களுக்கும் ஆபத்து, வீதியால் செல்லும் பொதுமக்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து. 😡
  5. @ரஞ்சித் எழுதிய இரண்டாம் பயணத்தையும் 26 வது அகவைக்குள் உள்வாங்கலாமே.
  6. முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.
  7. அட, கழுகு தேன் குடிக்குமா.....! 😂
  8. 'கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரை விமர்சித்து எழுதிய கருத்துகள் மற்றும் அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
  9. பயணத்தின் நடுவே சிற்றுண்டிக்காக வாகனத்தை நிறுத்தும் இடத்தில் உள்ள உணவகங்கள், நடத்துனரையும் ஓட்டுனரையும் மகிழ்விப்பதற்காக தங்கள் உணவகங்களின் உள்ளே அவர்களைத் தனியே விசேடமாகக் கவனிப்பார்கள். அங்கேதான் இந்த திருவிளையாடல்கள் இடம்பெறுகிறது.
  10. வடகொரியாவின் பரீட்சாத்தங்களை தினசரி செய்திகளில் குறிப்பாக உண்மையை கூறும் சிங்கள ஊடகங்களில் பார்ப்பதில்லை போல. கூதிகளே பைடனை இப்போ கையாள்கிறார்கள். ஈரானை 80 களில் அடித்தது போல் இப்போது அடிக்க முடியாது என்பதை அமெரிக்காவும் உலகமும் நன் கு அறியும். இஸ்ரேலால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் 27 ஆயிரம். இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தம் $15 பில்லியன் இந்த வருடம் மட்டும். ஒரு வேளை பைடன் வெள்ளையாக இருப்பதால் நோபல் பரிசு கிடைக்கும் என நினக்கிறீர்களோ தெரியாது.
  11. சுமத்திரன் கடிதத்தில் குறிப்பிட்டது போன்று அவரைசச் செயலாராக்கச் சம்மதித்திருக்கிறார்.. கிழக்கு மாகாணத்துக்கு செயலாளர் பதவி என்ற நிலைப்பாட்டில் சுமத்திரன் ஆதரவாளர்களை செலாளராக்குவதற்கும் இணங்கியிருக்கிருக்கிறார். அதனை வாக்கெடுப்பு நடததவும் இணங்கியிருக்கிறார்.சிறிதரன் தலைவர் பதவிக்குத்தான் சுமத்திரைனுடன் போட்டி பேட்டாரே ஒழிய இப்போது அவருடன் போட்டி எதுவும் இல்லை. தமிழரசுக்கட்சியில் உள்ள உறுப்பினர்களைpல் சிறிதரனைப் பிடிக்காதவர்கள் கூட சுமத்தரனை வீழ்த்த வேண்டும் என்று சிறிதரனுக்கு வாக்களித்தனால் தான் சிறிதரன் வெற்றி பெற்றிருக்கறரர். அதே தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள்தான் சுமத்திரன் அணியைச் சேர்ந்தவர் செயலாளர் ஆவதை எதிர்க்கின்றனர்.அவர்கள் எதிர்த்த படியால் சிறிதரன் முதல் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். ஆனால் சிறிதரன் தலைவர் பதவிபை; பெற்று விட்டார் இனி நம்பியவர்களுக்கு ஆப்படித்து விட்டு சுமத்திரனோடு சேர்ந்து அரசியலத் தொடருவார்.சுமத்திரன் கட்சிக்குள் இருந்த எதிப்புக்களை அடுத்து சிறிது பின்வாங்கியுள்ளாரே தவிரமுயற்சியைக் கைவிடவில்லை.தன்னுடைய ஆதரவாளரைப் பெயரளவில் செயலாராக்கி அவரே நிழல் செயலாளராகவும் நிழல்தலைவராகவும் செயற்படப் போகின்றார்.சிறிதரனுக்கும் சுமத்திரனுடன் இணங்கி சர்வதேச அரசியலை அவரிடம் விட்டு வி;ட்டு புட்டு அரசியலை மன்னெடுப்பதே தனக்குச் சரிவரும் என நினைக்கிறார்.இதுதான் நடக்கப் போகிறது.
  12. முள்ளிவாய்க்காலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதிக்குச் சமாந்தரமாக கடற்கரையினை அண்மித்ததாக ஒரு சிறிய மண்வீதி செல்கிறது. இவ்வீதியின் இருபக்கத்திலும் இருந்த பற்றைக்காணிகளில் பல்லாயிரம் மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள தஞ்சம் அடைந்திருந்தார்கள். கடற்கரையினை அடையும் பகுதியுடன் இவ்வீதி முடிவிற்கு வருகிறது. இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்து சில வலைத்தள பதிவாளர்கள் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்நாட்களில் பனைமரங்கள் சிலவிருந்த பகுதிக்குக் கீழாகத் தஞ்சம் அடைந்த மக்களை நோக்கி சிங்கள பெளத்தர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் நினைவுகள் ஒரு காணொளி ஒன்றில் பகிரப்பட்டிருந்தன. அந்தப் பனைமரம், அப்பதிவில் குறிப்பிட்டதுபோலவே இன்னமும் அங்கு நிற்கின்றது. நாம் அப்பாதையால் பயணிக்கும்போது இருவர் மோட்டார் சைக்கிளில் எதிர்ப்புறமிருந்து வந்தார்கள். எங்கே போகிறீர்கள் என்று தமிழில் கேட்டார்கள். ஒரு இடமும் இல்லை, இடம்பார்க்க வந்தோம் என்று கூறினோம். இதற்குமேல் போகமுடியாது, பாதை இத்துடன் முடிகிறது, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டுத் தம் வழியில்ப் போனார்கள். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். சுத்தத் தமிழில் பேசினார்கள். அப்பகுதியைச் சுற்றிச் சுற்றி வாகனத்தில் வலம் வந்தோம். மைத்துனர் தானும் தனது குடும்பமும் இறுதி நாட்களில் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த சில பகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபோது, "இங்கதான், இங்கதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவரது மனோநிலை எனக்குப் புரிந்தது. இறுதியாக முள்ளிவாய்க்காலை விட்டு நீங்க மனமின்றி எமது பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் அதே பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வாகனம் ஏறியது. குறுகலான வீதி, ஆனாலும் வாகனம் ஓரளவிற்கு ஓடக்கூடிய விதத்தில் பராமரிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் முள்ளிவாய்க்கால், வலது புறம் நந்திக்கடல். சற்றுத் தொலைவில் அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வற்றாப்பளை அம்மன் கோயில். இவற்றினைக் கடந்துசெல்லும்போது மைத்துனர் தனது நினைவுகளைப் பகிரத் தொடங்கினார். இராணுவத்தை தாம் நேருக்கு நேராக, ஒரு சில நூறு மீட்டர்கள் தொலைவில் கண்டதாக அவர் கூறினார். தாம் தஞ்சம் அடைந்திருந்த பகுதியில் தன்னுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வட்டுவாலக்ப் பாலத்தைக் கடந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்காக மெதுமெதுவாக நடந்துசெல்லும்போது பதிவாக நிலைஎடுத்துக்கொண்ட இராணுவத்தினர் தாம் இருந்த பகுதிநோக்கி கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டிருந்ததாக அவர் கூறினார். தாம் இனிமேல் இப்பகுதியில் இருக்க முடியாது. மீதமாயிருக்கும் அனைவரையும் உள்ளே வந்தவுடன் கொன்றுவிடுவார்கள், ஆகவே சாவரினும் பரவாயில்லை, பாலத்தின் அடுத்த பக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற ஒற்றை எண்ணம் மனதில் இருக்க, மக்களோடு மக்களாக கையில் குழந்தைகளையும் சுமந்துகொண்டு பொழுது புலராத அவ்வேளையில் தாம் ஓடத் தொடங்கியதாக அவர் கூறினார். தம்முடன் கூட வந்த பல குடும்பங்களில் சிலர் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூடுபட்டுக் கீழே விழ, அவர்களை விட்டுவிட்டு அக்குடும்பங்கள் பாலம் நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை மைத்துனர் பார்த்திருக்கிறார். இராணுவத்தினரின் கடுமையான துப்பாக்கித் தாக்குதலுக்ககு முகம்கொடுத்து இறந்து வீழ்ந்தவர்கள் விழ, மீதியாக ஓடிக்கொண்டிருந்தோர் வட்டுவாகல்ப் பாலத்தின் முள்ளிவாய்க்கால்க் கரையினை அடைந்திருக்கிறார்கள். இப்போது இராணுவத்தை மிகக் கிட்டத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேற ஆயத்தமாக நிற்க, வட்டுவாகல்ப் பாலத்தின் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் மிதந்துகொண்டிருப்பதை அப்போதுதான் மைத்துனர் கண்ணணுற்றிருக்கிறார். "இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் ஒரே பிணக்குவியல் அண்ணா, பொம்மைகளைக் குப்புறப் போட்டுத் தண்ணிக்குள்ள தள்ளின மாதிரி, சிவந்து போய் ரோஸ் நிறத்தில இருந்தது. எப்ப செத்த சனங்களோ தெரியாது, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் பிணங்கள்" என்று அவர் கூறினார். யுத்தத்தில் சிதைந்துபோய்க் கிடந்த வட்டுவாகல்ப் பாலத்தின் மீது பெருந்திரளான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். பாதையின் அகலம் போதாமையினால் பலர் கழுத்தளவு நீரிற்குள் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். இராணுவத்தினரின் பகுதிக்குள் வந்ததும் வெளியான இடமொன்றில் அவர்கள் இருத்திவைக்கப்பட்டார்கள். புலிகளுடன் முரண்பட்டு, இராணுவத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் பலரை தான் அங்கு கண்டதாக மைத்துனர் கூறினார். அடிக்கடி ஒலிபெருக்கியில் பேசிய அவர்கள், "இயக்கத்தில ஒரு நாள் வேலை செய்த ஆக்களெண்டாலும் கையை உயர்த்திக்கொண்டு வந்திருங்கோ, விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவம். நாங்களாப் பிடிச்சமெண்டால் தெரியும்தானே?" என்று மிரட்டல்கள் அவர்களால் விடுக்கப்பட்டன. இதனையடுத்து மக்களோடு மக்களாக நின்ற பல போராளிகள் கைகளை உயர்த்திக்கொண்டு முன்னால் செல்ல, அவர்களை இராணுவத்தினர் தனியாக அழைத்துச் சென்றதைத் தான் கண்டதாக அவர் கூறினார். மைத்துனர் இயக்கத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் அல்ல. வீதிப் புணரமைப்பு வேலைகளில் சம்பளத்திற்காக வேலை பார்த்தவர். ஆகவே, இயக்கத்தில் ஒருநாள் பணிபுரிந்தவர்கள் என்றாலும் முன்னால் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் தெரியாததுபோல் இருந்துவிட்டார். அன்று மைத்துனர் அடையாளம் கண்ட போராளிகள் பலர் உயிருடன் இல்லை. ஆனால், அவர்களை இராணுவம் அழைத்துச் சென்றதை அவர் கண்டிருக்கிறார். மைத்துன‌ரைப் போல அக்காலை வேளையில் அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்ட பல்லாயிரம் மக்களும் இதனைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சாட்சியங்களை எவரும் கேட்கப்போவதில்லை.
  13. சரி, போவதற்கான அனுமதி கிடைத்தாயிற்று. பயணச் சீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் விலை. எனக்கு மட்டும்தானே, சொகுசு எவையும் வேண்டாம், என்னையும், இரு பொதிகளையும் கொண்டுசெல்ல எந்த விமானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். பார்த்துக்கொண்டு போனால் எயர் இந்தியாவே உள்ளவற்றில் மலிவானதாய் இருந்தது. அதற்கு அடுத்ததாக மலிவான எயர்லங்காவுக்கும் கிட்டத்தட்ட 500 டொலர்கள் வித்தியாசம். எதற்காக அவனுக்குக் கொடுக்க வேண்டும்? பேசாமல் இந்தியாவுக்கே போய் அங்கிருந்து கொழும்பிற்குப் போகலாம் என்று நினைத்து, அதனை வாங்கிவிட்டேன். பயணச் சீட்டு வாங்கியாயிற்று, ஆனாலும் பயணம் நடக்குமா என்பது இன்னமும் உறுதியில்லை. இறுதிநேரத்தில்க் கூட வீட்டில் சூழ்நிலை மாறலாம். பிள்ளைகள் ஏதாவது கூறலாம் என்று நினைத்து மூத்தவளிடம் "நான் தனியே போவதுபற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டேன். "நீங்கள் போகத்தான் வேணுமப்பா, அவ உங்களைப் பாத்தவ, போட்டு வாங்கோ, நாங்கள் சமாளிக்கிறம்" என்று சொன்னாள். அப்பாடா, பிள்ளைகள் ஓக்கே, அப்போ பயணிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சரி, யாழ்ப்பாணத்தில் எங்கே தங்குவது, கொழும்பில் எங்கே தங்குவது, பயணிப்பது எங்கணம் என்று அடுத்த விடயங்கள் தொடர்பான கேள்விகள். கொழும்பில் தங்குவதற்கு மனைவியின் சித்தியின் வீடு இருந்தது. என்னை ஒரு சில நாட்களுக்கு தம்முடன் தங்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இல்லையென்று சொன்னார்கள். எனக்கும் நன்கு பரீட்சயமானவர்கள்தான், நானும் ஆமென்றுவிட்டேன். விமானநிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றது முதல், யாழ்ப்பாணத்திற்கான ரயில் சீட்டுக்களை முன்பதிவுசெய்து, அதிகாலை 5 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையம் வந்து, ஓடி- ஏறி ஆசனம் பார்த்துத் தந்ததுவரை எல்லாமே சித்தப்பாதான். கடமைப்பட்டிருக்கும் சிலரில் அவருமொருவர். சரி, பயணத்திற்கு வரலாம். யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் பார்க்கவேண்டும். நண்பனிடம் கேட்டேன். "நீ பேசாமல் வா, நானெல்லோ இடம் ஒழுங்குபடுத்தித் தாரது" என்று சொன்னான். அவன் சொன்னால் செய்வான் என்பது தெரியும், ஆகவே மீண்டும் கேட்டுத் தொல்லை கொடுக்கவிரும்பவில்லை. பயணிப்பதற்கு முதல்நாள் அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். "மச்சான், அறுவைச் சிகிச்சை ஒன்றிற்காக கொழும்பு வந்திருக்கிறேன், ஆறுதலாய் எடுக்கிறேன்" என்று பதில் வந்தது. அடக் கடவுளே, இப்போது என்ன செய்வது? வேறு இடமும் ஒழுங்குசெய்யவில்லையே, சரி போய்ப் பாப்பம் என்று கிளம்பிவிட்டேன். யாழ்ப்பாணத்தில் மைத்துனனின் வீடு இருக்கிறது, அவசரமென்றால் அங்கு தங்கலாம் என்று சொல்லியிருந்தான். ஆகவே, பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டேன். இந்தப் பயணத்தில் நான் செய்யவேண்டிய இரு முக்கிய விடயங்கள் என்று நான் நினைத்தவைகளில் முதலாவது சித்தியுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவது. மற்றையது வன்னிக்குச் செல்வது. குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே நானும் செல்வது, முள்ளிவாய்க்காலில் இறங்கி வணங்குவது. இவைதான். வேறு எதுவுமே மனதில் இருக்கவில்லை.
  14. நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார். ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை.
  15. உதயன்.(CMR) சி.எம் ஆரில் ஒலிபரப்பாளராக நீண்டகாலம் கடமையாற்றியவர். இப்போ அங்கு வேலை செய்வதில்லை.
  16. முழுவதையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படிக்கும்போது பல்வேறு உணர்வலைகள்.. அதுவும் முல்லைத்தீவு நோக்கிய பயண விவரிப்பு மனசை மிகவும் அலைக்கழித்து கவலை கொள்ளச் செய்தது. மீண்டும் சுயநினைவிற்கு வர நேரமெடுத்தது. காலம் நல்ல தீர்வை வழங்கட்டும். வலிகளை சொல்லிய அருமையான பயணக் கட்டுரைக்கு மிக்க நன்றி, திரு.ரஞ்சித் 😌🙏
  17. ஆகா வன்னியர் உங்கள் சந்திப்பை படங்களுடன் பதியுங்கள்.
  18. Packiyanathan Sasikumar derStponos031l5hc071i f58c3a206288m13g38hcm8hg545036h9a0m09a · முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.* அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான். சாம்பல் கயிறு. ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான். சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும். போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை. அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான். போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார். மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான். அடி எது? நுனி எது? ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான். அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான். கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான். தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார். மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான். தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம். அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான். வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர். அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார். மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான். அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான். அனுபவம் தந்த பதில்கள். “அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான். இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது. சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான். உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான். அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம். ஆம், வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம். நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம். தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும் மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை *என்றாலும் நாம் நன்றியுடன்* *பராமரிக்க வேண்டும்.*
  19. ட்ரம்பிற்கு நோபல் பரிசு 2018 இலேயே பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் 2021 இல் நோபல் பரிசுக்காக நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் Christian Tybring-Gjedde என்பவர் ட்ரம்பினைப் பரிந்துரைத்தார். பின்னர் Capitole தாக்குதல் மற்றும் ட்ரம்பின் குளறுபடியான நடத்தையைப் பார்த்தபின் தான் இப் பரிந்துரை செய்ததற்காக வெட்கப் படுவதாகக் கூறினார். இதுபோன்று கிளாடியா டென்னியும் பின்நாளில் வெட்கப்படாமல் இருந்தால் சரி.
  20. கடசி தொடங்குதல் பலவற்றுக்கும் நல்லதுதான்........எதிர்க்கட்சி தலைவராக பாராளுமன்றத்துக்குள்ளேயே வந்து கர்ஜித்த விஜயகாந்தையும் தலைகுப்புற கவிழ்த்து குதறி எறிந்த குள்ளநரிகள் இன்னமும் வெளியேதான் இருக்கின்றன ......அவைகளை கிட்ட நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாலே பாதி வெற்றிதான்........! 😁
  21. விஜய் சாரை புதிய மற்றும் இளைம் வாக்காளர்களைக் குறிவைத்து பாஜக களமிறக்கியுள்ளது. அதாவது இந்த வாக்குகள் திமுகவுக்கு போகாமல் பார்த்துக்கொள்வதே அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மண்ட். ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவை அசைக்கமுடியாது. ஸ்டாலினுக்கு பிற்பட்ட காலத்தில் விஜய் சாரை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது பாஜகவின் வியூகம். ஆனால் ஒன்று நாம் தமிழரை விட அதிக வாக்குகளை விஜய் கட்சி பெறும் என நினைக்கிறேன்.
  22. கட்சி ஆரம்பித்தமையால் இனி படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அது முழு தமிழ் சமுதாயத்துக்கும் செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.
  23. நுவரெலியாவில் வீதி ஓரத்தில் (கண்டி வீதி) உள்ள ஒரு மரக்கறி கடை.
  24. போகாத இடங்களுக்கு கூட்டிப் போய் இருக்கிறீர்கள். தெரியாத முகங்களை காண வைத்திருக்கிறீர்கள். பயணம் இனிதாக இருக்கிறது ரஞ்சித்.
  25. வன்முறையை எவரும் ஆதரிக்கவில்லை கனடா தமிழர் பேரவையை இவ்வளவு காலமும் தாக்கவில்லை இப்போது ஏன் தாக்கினார்கள்?? பேரவையின். செயல்பாடுகளில் மாற்றங்கள் இல்லையா?? ஆரம்பத்தில் இருந்தது போல் தான் இன்றும் செயல்படுகிறதா??
  26. Caribbean Cricket League போட்டி நடக்கிறது.. மறு நாள் மேட்ச் க்காக Guyana அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்..... நாளின் கடைசியில் ஒல்லியான உருவம்...காலில் ஒழுங்கான ஷூ கூட இல்லை...ஒரு நெட் பவுலர் ஓடி வந்து பால் போட தொடங்குகிறார்... பால் விர்ரென்று போகிறது.... அடுத்தடுதத்து பால் போடுகிறார் அணியின் முக்கிய பேட்ஸ்மென் திணறுகிறார்......இதை பார்த்த கயானா அணியின் கிரிக்கெட் அட்வைஸர் (நம்மூர் பிரசன்னா அகோரம் ) யார்டா நீ என்ன ஏது என கேட்க... "சார் நான் Mallல செக்யூரிட்டியா வேலை பார்க்குறேன்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்... இல்லைன்னா இன்னைக்கு பேட்டா கிடைக்காது... எனக்கு பவுலிங் போட பிடிக்கும் அதனால் கேட்டு உள்ளே வந்தேன் " என்கிறார் உடனே கயானா அணியின் கேப்டனை அழைக்கிறார் பிரசன்னா... இவர் நாளைய மேட்ச்சில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்... மளமளவென வேலைகள் நடக்கிறது... கண்ணீர் மல்க அந்த contractல் கையெழுத்து போடுகிறார் அந்த இளம் பவுலர்... "நாளைக்கு எவ்வளவு ஸ்பீட் போடுவ? " என கேட்கிறார் பிரசன்னா "எவ்வளவு ஸ்பீட் போடணும்? " என்று பதில் வருகிறது.... பதில் தந்தவர் தான் இன்றைக்கு 27 வருடங்களுக்கு பிறகு ஆஸி மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் க்கு வெற்றி தேடி தந்த 23 வயது Shemar Joseph!! நான்காவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார் பாரகுரா என்று கயானா நாட்டின் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த ஷெமார் அந்த கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது அதனால் சரியான படிப்பு கூட இல்லை... பிறகு தந்தையுடன் மரம் வெட்டும் வேலை... கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் எங்கு சென்றாலும் அதை விளையாட மோகம்.... கயானா கிளப்களில் கிடைக்கும் ஆட்டங்களில் விளையாடி வந்தார்....பிறகு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தார்....இடை இடையே first class ஆட்டங்கள் விளையாடினார்...வறுமை விட்டபாடில்லை.... இறுதியாக செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்தார் ... காலம் அவரை இன்று வேறொரு தளத்தில் நிறுத்தியுள்ளது கால் விரலில் காயத்துடன் இன்று களமிறங்கியவரிடம் ஆட்டம் முடிந்தபின் வலி தெரியலையா என கேட்க.... அதெல்லாம் தெரியவில்லை அணி ஜெயிக்க வேண்டும் என பெரும் சிரிப்புடன் முழங்கினார்.... அந்த சிரிப்பை பார்த்து இன்று இன்னொரு மேற்கிந்தியத் தீவுகள் கிராமத்தில் இன்னொரு சிறுவனுக்கு புது நம்பிக்கை பிறந்து இருக்கும்!! 2018 வரை internet வசதியே இல்லாத ஊரில் குடியிருந்த ஷெமார் ஜோசப் இன்று talk of the internet கற்பனைகளில் மட்டுமே சாத்தியமாகும் ஆனாலும் மனதை வருடி புது உத்வேகம் தரும் கதைகளை Fairy Tale என சொல்வார்கள்... எப்போதாவது அது நிஜத்தில் நடக்கும்...அப்படி ஒரு Fairy Tale இன்று நடந்தேறியது
  27. வாண வாடிக்கை: தமிழ் மரபுத் திங்களின் அடுத்த பரிமாணம் மாயமான் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் மரபுத் திங்கள் வாண வாடிக்கையுடன் கோலாகலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. கனடிய தமிழர் பேரவை அலுவலகம் உடைக்கப்பட்டு எரியூட்டப்பட்டதைச் சொல்கிறேன். 27ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3:15 மணிபோல் எனக்கூறப்படுகிறது. சீ.சீ.டி.வி. காமெராக்களின் பதிவுகளைப் பார்த்தேன். இருவர், மூடிக்கட்டியிருந்த நிலையிலும் நடை-உடை-பாவனையில் தமிழ் மரபு தெரிந்தது. மிகுதி காவல்துறையின் வெண்திரையில். நமக்கேன் வம்பு. ‘இமாலயம்’ சக்திவாய்ந்தது என்று தெரியும் ஆனால் இந்தளவுக்கு? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பிரகடனப்படுத்தப்பட்ட ‘பிரகடனத்தின்’ விளைவுகளில் இதுவுமொன்று. பின்னால் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் வெட்ட வெளிச்சம். கனடிய பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் வாங்கியவர்களும் இதில் இருக்கிறார்கள் எனும்போது கல்விக்கும் வன்முறைக்கும் சம்பந்தமிருப்பது புரியக்கூடியதாகவுள்ளது. இயங்கியவர்கள் அப்பாவிகள். நியாயம் தெரிந்த நல்ல மனிதர்கள் எமது சமூகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல்களை எழுப்பாதவர்கள். வாக்குகளை மட்டும் அவ்வப்போது அமைதியாகத் திணித்துவிட்டு அப்பால் போபவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவுமென அவர்கள் எதையும் செய்பவர்கள். அவர்கள் தாகம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணம். துப்பாக்கிச்சூடு, எரிப்பு, திரை கிழிப்பு, வாகனமுடைப்பு, தனிமனித தாக்குதல், கடையுடைப்பு, கூட்டம் குழப்புதல் என அனைத்து வன்முறைகளும் இங்கும் அரங்கேறியவைதான். கடந்த நாற்பது ஆண்டுகளாக நாம் இவற்றைப் பார்த்து வந்தவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் இவை மன்னிக்கப்பட்டவை. இம்மரபு தொடரும் என்பதற்கு சமூக ஊடகப் பதிவுகள் சாட்சியம் கூறுகின்றன. கனடிய தமிழர் பேரவையின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் பணிகளைப் பார்த்து வருபவன். அதன் படிகளில் ஏறி உச்சிக்குச் சென்ற பலர் இப்போது அதன் அத்திவாரத்தை இடித்துத் தகர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அதன் வெற்றி மீதான பொறாமை. பேரவை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடுண்டு. அவைபற்றி சில இயக்குனர்களுடனும், நிறைவேற்றுப்பணிப்பாளருடனும் காரசாரமாக விவாதித்தவன். நிறைவேற்றுப் பணிப்பாளர் டான்ரன் துரைராஜா மீது பலகுற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால் அவரது உழைப்பு, சுயநலமற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றில் விமர்சனங்கள் இருக்கமுடியாது. குடும்பத்தைவிட அதிக நேரத்தை அவர் தனது பணிக்காகச் செலவிடுபவர். பேரவையின் வெற்றிக்கு மட்டுமல்ல இங்கு மேடைகளில் பிரகாசிக்கும் பல அரசியல் நட்சத்திரங்களின் வெற்றிகளுக்கும் பின்னால் அவரது உழைப்பு இருந்தது என்பதை அவரவர்களின் மனச்சாட்சிகளே உறுத்திச் சொல்லும். இன்று கனடிய பாராளுமன்ற வளாகங்களில் உலவும் பல இளையதலைமுறைனர் இதற்குச் சாட்சி. இந்த நட்சத்திரங்களை மேடையேற்றுவதற்குப் பதிலாக அவர் மேடையேறியிருந்தால் நிலைமையே வேறு. பேரவை அலுவலகம் மீதான இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் பலர். சட்டம் இந்த உடுக்கு மாஸ்டர்களை எதுவுமே செய்யப்போவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு உருவேறி ஆடிய சாமானியர்கள்தான் பாவம். கனடிய தமிழர் பேரவை ஈழத்தமிழருக்கும், கனடியத் தமிழருக்கும் பல சேவைகளைச் செய்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பரப்புரை செய்வதில்லை. கனடாவின் ‘தமிழர் தெருவிழா’ உலகம் பூராவும் கனடியத் தமிழருக்கு அடையாளம் தேடித்தந்த ஒன்று. அம்மேடைகளில் ஏறி இறங்காத கனடிய அரசியல்வாதிகளே இல்லை என்றே கூறலாம். அத்தெருவிழாவைக் கையகப்படுத்துவதற்குப் பல தமிழர் அமைப்புகள் முயன்று பார்த்தன. வருடா வருடம் மானியங்களுக்கு விண்ணப்பிக்கும்போது கூடவே பேரவைக்கு எதிரான பெட்டிசன்களும் போவது வழமை. எல்லாம் தமிழின் பேரில். எங்கு போனாலும் தமிழன் தனது கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான். வேண்டுமானால் கலாநிதி இலகுப்பிள்ளையைக் கேட்டுப்பாருங்கள். இவ்வருட தமிழ் மரபுத் திங்களின் முடிவு நாள் கோலாகலமான ‘வெடித்திருவிழாவாக’ நிறைவுபெற்றமை ஒரு அபாயச்சங்கின் ஒலியாகவே எனக்குப் படுகிறது. எமது அடுத்த சந்ததியை முற்றாக அந்நியப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் துணைபோகும். ‘தமிழ் மரபைக்’ கொண்டாடக் கூவியழைப்பவர்களே அதை அழிக்க வழிகோலுகிறார்கள் என்பது துர்ப்பாக்கியம். தமிழுக்கும், மரபிற்கும், விடுதலைக்கும் இது எந்தவகையில் உதவிசெய்யும்? ஆற அமர்ந்து யோசித்து முடிவுகளை எடுப்பது வரவேற்கத்தக்கது. இப்போதைக்கு, ஆழ்ந்த அஞ்சலி! https://marumoli.com/வாண-வாடிக்கை-தமிழ்-மரபுத/?fbclid=IwAR2NR2ZLXGezyYCtuDp8YJyUIKEETGWkgZCWPolT98jimt12GiP2KeTk95g#google_vignette
  28. இலங்கையில் உள்ள சாதாரண பொது மக்கள் ? ..... இந்தியாவை வெறுப்பதில் முன்னுலையில் உள்ள சாதாரண பொதுமக்கள் பெளத்தர்கள் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவ மக்கள் இந்துக்கள் வெறுக்கின்றனர் ஆனால் அவர்களின் மதம் /மற்றும் கலாச்சாரம் இந்தியாவுடன் பின்னி பிணைந்து விட்டதால் வேறு வழிகளின்றி அவர்களை அறியாமல் "பக்தி" என்ற கருத்தியால் கட்டுப்பட்டிருப்பதால் இந்தியாவை கட்டி பிடிக்க வேண்டிய நிலை.... பெளத்தர்கள்,இஸ்லாமியர்கள் ,கிறிஸ்தவர்களின் மத கருத்தியல் முற்று முழுதாக இந்தியாவின் மத கருத்தியலுக்கு எதிரானது மட்டுமல்ல சாதாரண மக்களின் வெறுப்புக்கும் உரியது.... இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமியனும் இலங்கை இஸ்லாமியனும் மியாமாரின் பெளத்தனும் இலங்கை பெளத்தனும் இந்தியா கிறிஸ்தவனும் இலங்கை கிறிஸ்தவனும் இதில ஜெயசஙர் சாதாரண மக்கள் தங்களுக்கு சாதகமானவர்களாம் ....இன்னும் நீங்கள் சிறிலங்காவின் ராஜதந்திரம் பற்றி படிக்க நிறையவே உண்டு .....75 வருடமாக சிறிலங்கா உங்களுக்கு எதிராக திறம்பட செய்லபடுகின்றனர்...
  29. உவங்கள் இன்னுமா சிறிலங்கா தங்களை நல்லவர்ளாக நம்புவார்கள் எனநினைக்கின்றனரா? மாலைதீவை விட நம்பிக்கை துரோகம் செய்யும் அளவுக்கு வல்லவர்கள் சிறிலங்கா கொளகை வகுப்பாளர்கள்.... இதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் எப்போ புரிந்து கொள்வார்கள்...
  30. நான் ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். புன்னகையுடன் கைகுலுக்கி நான் அவருக்கு அளிக்கவேண்டிய செக்கை அளித்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பும் வழியில் என்னுடன் வந்த இன்னொருவர் ‘என்ன சார் பேசாமலிருக்கீங்க?’ என்றார். அவரும் மிகச்செல்வந்த குடியில் பிறந்தவர். நிர்வாகவியலில் உயர்கல்வி கற்றவர், தொழிலதிபர். அவர் பேச ஆரம்பித்தார். பிராமணர்கள் பற்றி இங்கே சொல்லப்படும் எல்லா அபத்தமான காழ்ப்புக் கருத்துக்களையும் வரிசையாகச் சொன்னார். அவரும் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கமும் சொன்னார். பெரியார், அண்ணா பற்றிய எல்லா பொய்க்கதைகளையும் வரிசையாகச் சொன்னார். இன்னொரு வகை பாமரர். இங்கும் நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். இவர் எனக்கு பெரிய தொகையை தந்தவர். ஆகவே இரண்டு மடங்கு புன்னகை புரிந்தேன்.....! இந்த இடத்தில் எனக்கு ஒரு குழப்பம் இருக்கின்றது......இவ்வளவு தெளிவுடன் இருக்கும் ஜெயமோகனும் சில கொள்கைகளை சமரசம் செய்வதற்கு தனக்கென ஒரு விலையை நிர்ணயம் செய்திருக்கின்றாரோ என்று....... மற்றும்படி கட்டுரை நன்றாகத்தான் இருக்கின்றது.........! 👍 நன்றி கிருபன்......!
  31. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு, இதன் மூலம் நாட்டில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் எனவும் ஜேர்மனி அரசு எதிர்பார்க்கிறது. உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின்,பிரித்தானியா ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367758
  32. இங்கு எந்த அரசியல் வாதியோ , இயக்கங்களோ மக்களுக்கு நன்மை செய்ததாகவோ அல்லது முன்னோக்கி நகர்த்தியதாகவோ இல்லை. எல்லோருமே தமிழ் மக்களை பின்னோக்கி கொண்டு சென்று தங்களை முன்னோக்கி வளர்த்து கொண்டவர்கள்தான். யாருக்குமே வெள்ளயடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் திருந்த கூடாது அல்லது நல்லவனாக மாற கூடாது என்பது உங்கள் கொள்கையாக இருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது உள்ள நிலைமையில் அப்படி எழுதினேன். நிலைமை அப்படிதான் இருக்கின்றது.
  33. இது தான் ராணி இல்லம், ராசாத்தி இல்லம் என்று பேர் வைக்கிறதால வாற பிரச்சினை…!
  34. இந்த விவாதத்தில் மிகமுக்கியமான நூல், நான் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டிவரும் நூல், வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய The Mass Psychology of Fascism. ஒரு தனிமனிதனின் சராசரி அறிவுத்தரம் அவனைப்போன்றவர்கள் ஒன்றாகி ஒரு திரளாக ஆகும்போது மிகமிகக் குறைகிறது என அந்நூல் வாதிடுகிறது. அதாவது நூறு புத்திசாலிகள் ஒரு கூட்டமாக ஆனால் முட்டாள்தனமான ஒரு கும்பல்தான் உருவாகும். அதிலுள்ள ஒவ்வொரு புத்திசாலியும் கும்பலாக செயல்படும்போது முட்டாளாகவே இருப்பான். பெருந்திரள் என்பது உணர்ச்சிகளால் ஆனது என்றார் ரீஹ். எதிர்மறை உணர்ச்சிகளே மேலும் வலுவானவை.எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும்தான் மக்களை ஒருங்கிணையச் செய்கிறது. ஒரு எதிரியை சுட்டிக்காட்டி, அதன் மேல் வெறுப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்யும் ஒருவர் மிக எளிதாக மக்களின்மேல் முற்றதிகாரத்தை அடையமுடியும். ஹிட்லரும் முஸோலினியும் அழிந்தாலும் இன்று உலகமெங்கும் அரசியல்வாதிகளின் அரசியல்நடவடிக்கை என்பதே எதிரிகளை சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை வெல்வதாகவே உள்ளது. கட்சியரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று தளங்களில் இன்றைய மக்கள் இடைவிடாமல் பிரச்சாரத்திற்கு இரையாகிறார்கள். சிந்திக்கவே விடாமல் அவர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். அவர்களின் தெரிவுகள், ரசனைகள் எல்லாமே அரசியல்கட்சிகள், வணிக விளம்பரங்கள், கேளிக்கையூடகங்கள் ஆகிய மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன. உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். மேலே சொன்ன மூன்றை மட்டும்தான். வேறெதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள், கவனிக்க அவர்களால் இயலாது. ஒரு சொல்கூட உள்ளே செல்ல வழி கிடையாது. அவர்கள் ஒருவகை இயந்திரங்கள்போல உள்ளிருக்கும் மென்பொருளில் பொறிக்கப்பட்டுள்ள ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். இவை முற்றிலும் உண்மையானதே.......நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குள்ளேயே சுழன்று கொண்டு இருக்கின்றோம்.......தனிமனித கொள்கைகளில் தளர்வடைந்து விடுகின்றோம்......!
  35. சரி, பயணத்திற்கு வரலாம். வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார். அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன். முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம். போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது. கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி.
  36. கடற்கரையினை அண்மித்ததாகச் செல்லும் சிறிய வீதிவழியாக எமது வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. வலைஞர்மடம் பகுதியிலிருந்து குறுகிய பாதை வழியாக மீண்டும் பரந்தன் முல்லைத்தீவு பாதைக்கு ஏறி சிறிய தூரம் ஓடியபின்னர் இடதுபுறமாகத் திரும்பி முள்ளிவாய்க்காலை அடைந்தோம். நான் பார்க்க வந்தது இந்த இடத்தைத்தான். என் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இராணுவ மிருகங்களால் பலியிடப்பட்டதும் இந்த இடத்தில்த்தான். இந்தவிடத்தை காணொளிகளில் பார்க்கும் ஒவ்வொரு கணமும் மிகுந்த வலியை எனக்கு ஏற்படுத்தும். ஆனாலும், நாம் ஏன் சோர்ந்து வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்கும் இதே முள்ளிவாய்க்காலே எமக்குக் காரணமாகவும் அமைந்திருக்கும். அதைவிடவும் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்த லட்சக்கணக்கான மக்களினதும் இறுதிவரை தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களினதும் ஆன்மாக்கள் இப்பகுதியின் காற்றில் பரவியிருப்பதாக நான் உணர்கிறேன். ஆகவே தான் அந்த ஆன்மாக்களுக்கு எனது இறுதிவணக்கத்தைச் செலுத்த இங்குசெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நாம் வாகனத்தை வீதி முடிவடையும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டோம். முன்னிரவு பெய்த மழையால் நிலம் சற்று ஈரமாக இருந்தது. மணல் நிறைந்த மைதானம் போன்று காட்சியளித்த அப்பகுதியின் மத்தியில் சீமேந்தினால் கட்டப்பட்ட சிறிய நினைவுச் சின்னம் தெரிந்தது. அதனை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சுமார் 200 - 300 மீட்டர்கள் பக்க நீளத்தைக் கொண்ட சதுரவடிவ மைதானமாகக் காட்சியளித்தது அப்பகுதி. ஒருபுறம் பற்றைகளும், பனைமரங்களும் காணப்பட, இன்னொரு புறம் சில வீடுகள் தெரிந்தன. மக்கள் இப்போது அங்கு வாழத் தொடங்கியிருக்கலாம். இனம்புரியாத நிசப்தம் அங்கு நிலவியது. எந்தச் சத்தமும் இன்றி அமைதியாகக் கிடந்தது அந்தப் பகுதி. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஓலங்களையும், அழுகுரல்களையும் இடைவிடாது கேட்ட அந்தப் பூமி இப்போது அமைதியாகக் கிடந்தது. மணற்றரையூடாக நினைவுச் சின்னம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எத்தனை உறவுகள் கொல்லப்பட்டிருக்கலாம்? எத்தனை உறவுகள் போராடி மடிந்திருக்கலாம்? எத்தனை பெண்களை சிங்கள மிருகங்கள் கடித்துக் குதறியிருக்கலாம்? சாவரும் வேளையில் அந்த உறவுகள் முகங்கொடுத்த அவலங்கள் எப்படி இருந்திருக்கும் ? என்று பல கேள்விகள் மனதில் எழ முள்ளிவாய்க்கால் பலிப்பீடத்தின் மத்திநோக்கி நடந்துகொண்டிருந்தோம். மைத்துனரின் மகனுக்கும், சாரதியாக வந்த இளைஞருக்கும் இப்பகுதி குறித்த பிரக்ஞை எவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கும் மைத்துனருக்கும் மனதில் எழுந்த எண்ணங்களைச் சொல்லில் வடித்துவிடமுடியாது. அப்பகுதியில் இறங்கியதுமுதல் மைத்துனர் தனது கையடக்கத் தொலைபேசியில் அப்பகுதியை ஒளிப்படமாக எடுக்கத் தொடங்கினார். அப்பகுதியில் கையில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த பொழுதுகள் அவரது நினைவிற்கு வந்திருக்கலாம். ஆகவே தான் எடுத்துக்கொண்டிருந்த ஒளிப்படத்துடன் பின்னணியில் தனது நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டிருந்தார். நானும் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். இறுதி யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலத்திலும் முள்ளிவாய்காலில் சிங்கள மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட மனித நாகரீகத்திற்கு முரணான படுகொலைகளை, அட்டூழியங்களை நான் அறிந்துகொண்ட வகையில் அந்த ஒளிப்படத்தில் பின்னணியில் பதிந்துகொண்டேன். ஆனால், எம்மைப்போல பலர் இந்த பகுதியைப் படமாக்கியிருப்பதுடன் அவலங்களையும் பதிந்திருக்கிறார்கள் என்பதால் எனது ஒளிப்படம் குறித்து நான் இங்கு தனியாகப் பதியவேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். நீண்டநேரம் அப்பகுதியில் நின்றிருந்தோம். சுற்றிச் சுற்றி நடந்து அப்பகுதியினை அண்மித்துக் காணப்பட்ட இடங்களை, பற்றைகளை, பனைமரக் கூடல்களைப் பார்வையிட்டோம். மேல்மணலைத் தட்டிவிட்டுப் பார்த்தால் உடைந்த மட்பாண்டங்கள், அலுமினிய கோப்பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், கிழிந்த உடைகள், செருப்புக்கள் என்று பல பொருட்கள் அப்பகுதியெங்கும் இன்னமும் பரவிக் கிடக்கின்றன. இவை எல்லாமே எமது உறவுகளால் அவர்களின் இறுதிக் கணங்களில் பாவிக்கப்பட்டவை. இவற்றுக்கு உணர்வுகளும், பார்வையும் இருந்திருந்தால் எம்மக்கள் பட்ட துன்பங்களை இன்று சாட்சியாகச் சொல்லியிருக்கும். ஆனால், சாட்சியங்கள் எதுவுமற்ற பாரிய இனக்கொலையொன்றினை சிங்கள பெளத்த தேசம் எம்மீது கட்டவிழ்த்து விட்டது என்பதே உண்மை. இறுதியாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தினைச் சிலமுறை சுற்றிவந்துவிட்டு அதன் முன்னால் நின்று படமெடுத்தேன். இது எனக்காக நான் எடுத்துக்கொண்டது. அநியாயமாகக் கொல்லப்பட்ட எனது உறவுகளைப் பார்க்கவந்தேன் என்பதை எனக்கு நானே அவ்வபோது சொல்லிக்கொள்ள எடுத்துகொண்டது, எதனையும் விளம்பரப்படுத்தவல்ல.
  37. காலையுணவு அருந்தியபின் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் பரந்தன் நோக்கிப் பயணித்தோம். பரந்தனிலிருந்து வலதுபுறம் திரும்பி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை நோக்கி வண்டி பயணித்தது. எனது மைத்துனர் புலிகளின் கட்டுமாணப் பிரிவில் வீதி வேலைகளில் சம்பளத்திற்கு பணிபுரிந்ததனால் புலிகள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளுடு மக்களோடு மக்களாக அவரும் தனது குடும்பத்தை இழுத்துக் கொண்டு சென்றார். ஆகவே, இந்த வீதியில் அமைந்திருக்கும் மக்கள் அவலங்களால் நிறைந்த ஊர்கள் ஒவ்வொன்றிலும் அவர் சிலகாலமாவது வாழ்ந்திருக்கிறார். அவலங்களை அனுபவித்திருக்கிறார். அதனால், தாம் ஆங்காங்கு தங்கியிருந்த ஊர்கள் வந்தபோது வாகனத்தை நிறுத்தி அவ்விடங்களைப் பார்வையிடத் தொடங்கினார். நானும் அவருடன் அவ்விடங்களை தரிசித்தேன். போரின் வடுக்கள் சிறிது சிறிதாக மறைந்துப்போய், வாழ்வு மீளவும் சாம்பலில் இருந்து பூக்க ஆரம்பித்திருந்தது. சிலவிடங்கள் அடையாளமே மாறிப்போயிருந்தது அவருக்கு. வீதியின் ஓரத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த சில கட்டடங்களை, அடையாளங்களை அவர் தேடினார், எவையுமே அங்கு இருக்கவில்லை. முரசுமோட்டை, புளியம்பொக்கனை, குமாரசாமிபுரம், உடையார்கட்டு, வல்லிபுனம், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், கரைய முள்ளிவாய்க்கால் என்று பல இடங்களில் அவரும் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிலவிடங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்து மறுபடியும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். எங்கெங்கு வெளிகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் இருந்ததாக அவர் கூறினார். கையில் கிடைத்த தகரம், ஓலை, சீலைகள், பிளாத்திக்குப் பைகள் என்று ஏதோவொன்றை எடுத்து மறைவு வைத்து, கூட்டத்தோடு கூட்டமாக குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. இவ்வாறு மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது கடுமையான எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சன்னங்கள் என்று தாக்குதல் நடத்தப்பட்டபோது பலர் உயிரிழந்தும், இன்னும் பலர் காயப்பட்டும் இருந்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்கள் அவ்விடத்திலேயே கைகளால் மண் தோண்டி புதைக்கப்பட, காயப்பட்டவர்களில் வயதானவர்கள் அவர்களின் சொந்தங்களாலேயே கைவிடப்பட்டு சென்றதை மைத்துனர் கண்ணுற்றிருக்கிறார். வண்டி ஆனந்தபுரத்தைத் தாண்டியதும், பரந்தன் முல்லைத்தீவு வீதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் வழியில் இடதுபுறமாக பயணிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், கண்டல்த் தாவரங்களும், வெளிகளும் இருக்கும் இப்பிரதேசத்திலேயே பெருமளவு மக்கள் உயிரைக் காக்க அடைக்கலம் புகுந்திருந்தனர். முக்கியமாக இப்பகுதியில் பனக்கூடல்களுக்கு மத்தியில் புதுமாத்தளன் இந்து ஆலயம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் பெருமளவு மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் மைத்துனரின் குடும்பமும் அடங்கும். மக்கள் இப்பகுதியில் அடைக்கலமாகி இருப்பது தெரிந்ததும் இப்பகுதி நோக்கிக் கடுமையான விமானக் குண்டு வீச்சும், எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டபோது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியில் மைத்துனரும் ஈடுபட்டிருக்கிறார். கடற்கரை நோக்கிப் பயணித்த நாம், கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் நடந்தோம். தூரத்தே சாலை தெரிந்தது. கடற்புலிகளின் பாரிய முகாம் சாலைப்பகுதியிலேயே இருந்திருக்கிறது. இந்த முகாமைக் கைப்பற்ற இராணுவம் கடுமையாகச் சண்டையிட்டபோதும் பலத்த இழப்புக்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். ஈற்றில் கடற்புலிகள் இம்முகாமைக் கைவிட்டுப் போக, இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்பகுதியில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, இங்கு அவரின் அனுபவங்களையும் அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளை கடற்கரைச் சாலையூடாகவே வலம் வந்தோம். அம்பலவன் பொக்கனை பகுதியில் வெற்றுக் கடற்கரை வெளியில் மக்கள் கூடாரங்களை அமைத்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒருபுறம் கடலில் இருந்து ஏவப்படும் எறிகணைகள், மறுபுறம் வானிலிருந்து பொழியப்படும் குண்டுகள், இன்னொருபுறம் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகள் உமிழும் ரவைகள் என்பவற்றிற்கு மத்தியில் ஏந்த நம்பிக்கையும் அற்றும் உயிரை மட்டுமே கையில் ஏந்திக்கொண்டு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கொல்லப்பட்டவர்களை அருகில் இருந்த பற்றைகளுக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, ஒற்றை அழுகையுடன் கடமை முடித்தோரும் அங்கு இருந்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு மயக்க மருந்தின்றி கடற்கரையிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இரத்தப்போக்கினால் கொல்லப்பட்டவர்களும் அதிகம் இருந்திருக்கிறார்கள்.
  38. இந்தியா இலங்கையில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே காணும் இலங்கை அமைதி பூங்காவாக மாறும் .
  39. வல்லை வெளியிலிருந்து நெல்லியடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மினிபஸ். வழியெங்கிலும் நான் சைக்கிளில் ஓடித்திருந்த இடங்கள். அன்றைய தென்னோலையினாலும், பனையோலையினாலும் வேயப்பட்ட பதிவான கூரைகளைக்கொண்ட பழைய பலசரக்குக் கடைகளும், சைக்கிள் திருத்தும் நிலையங்களும் மறைந்துவிட்டன. வீதியின் இருமரங்கிலும் சீமேந்தினால் கட்டப்பட்ட கடைகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மூத்தவிநாயகர் கோயில் புதிய வர்ணத்தால் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நாவலர் மடத்திலிருந்து நெல்லியடிச் சந்திவரையான பகுதி நன்றாக அபிவிருத்தியடைந்திருந்தது. புதிய கடைகள், வங்கிகள் என்று சுறுசுறுப்பான பகுதியாக மாறியிருந்தது. நெல்லியடிச் சந்தியில் என்னை இறக்கிவிட்டார்கள். "இறங்கின உடனே ஓட்டோவில ஏறிப்போடாதை, கனக்கக் காசு சொல்லுவாங்கள். மகாத்மா தியெட்டர் மட்டும் நடந்துவந்து அங்கையிருந்து ஓட்டோ பிடி" என்று சித்தி கூறியது நினைவிற்கு வரவே நடக்கத் தொடங்கினேன். கடைவீதிகளில் சனம் அலைமோதியது. யாழ்ப்பாணத்திற்குப் பிறகு அதிக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் நெல்லியடியும் ஒன்றென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிட நடையில் மகாத்மா தியெட்டருக்கு அருகில் வந்தாயிற்று. வரிசையாக நின்ற மூன்று ஓட்டோக்களில் முதலாவதாக நின்றவரிடம் "உச்சில் அம்மண் கோயிலடிக்குப் போக எவ்வளவு எடுப்பீங்கள்" என்று கேட்டேன். சாரதிக்கு 35 வயதிருக்கும். வலதுகை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டிருந்தது. இடதுகையினால் ஓட்டோவைச் செலுத்திவருகிறார் போலும். "உச்சில் அம்மண் கோயிலுக்குக்கிட்டவோ அல்லது அதுக்கு முதலோ?" என்று கேட்டார். சித்தியின் பெயரைச் சொன்னபோது புரிந்துகொண்டார். "ஏறுங்கோ அண்ணை, 400 ரூபா தாங்கோ" என்றார். வழியில் பேசிக்கொண்டே போனோம். கையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, "நான் முன்னாள்ப் போராளியண்ணை, தீபன் அண்ணையின்ர குறூப்பில இருந்தனான். சண்டையில் கை போட்டுது. முகாமில இருந்து வெளியில வந்துட்டன். உங்கட தம்பி (சித்தியின் மகன்) எங்களோட‌ கொஞ்சக்காலம் இருந்தவர்" என்று கூறினார். இறுதிப்போர்க்கால நிகழ்வுகள் சிலவற்றை அவர் சொன்னபோது வலித்தது. மிகுந்த அன்புடன் அவர் பேசியது பிடித்துப்போயிற்று. என்னைப்பற்றிக் கேட்டார். 2018 இற்குப்பிறகு இப்போதுதான் வருகிறேன் என்று கூறினேன். பேசிக்கொண்டே வீடு வந்தோம். ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன். "சில்லறை இல்லையோ அண்ணை?" என்று கேட்க‌, "மிச்சம் வேண்டாம், வைச்சுக்கொள்ளும்" என்று சொன்னபோது, நன்றியண்ணை என்று சொன்னார். அவரின் கதையினைக் கேட்கும்போது அழுகை வந்தது. இவ்வாறானவர்களையல்லவா நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இவர்போல் இன்னும் எத்தனைபேர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்? எம்மை நம்பியல்லவா எமக்காகப் போராடப் போனார்கள்? இன்று அவர்களின் நிலையென்ன? அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அம்மம்மாவின் வீட்டினுள் நுழைந்தேன். எனது வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தி, "ஓட்டோவுக்கு எவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்டார். "நானூறு கேட்டு ஆயிரம் குடுத்தேன்" என்று கூறினேன். "உனக்கென்ன வருத்தமே? ஏன் அவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்க, "இல்லை, அவர் முன்னாள்ப் போராளி சித்தி, கையும் இல்லை, பாவமாக் கிடக்கு" என்று கூறவும் அவர் அடங்கிவிட்டார். அம்மாவின் வீட்டின் பெயர் இராணி இல்லம். அதற்கொரு காரணம் இருக்கிறது. எனது அம்மாவுடன் சேர்த்து ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் குடும்பத்திலிருந்தனர். எல்லாப்பெண்களுக்கும் இராணி என்ற சொல்லில்த் தான் பெயர் முடிவடையும். அன்னராணி, செல்வராணி, புஷ்ப்பராணி, யோகராணி, இதயராணி, கலாராணி என்று ஆறு ராணிகள். அதனால், ஐய்யா (அம்மாவின் தகப்பனார்) 1960 இல் அவ்வீட்டைக் கட்டும்போது இராணி இல்லம் என்று பெயர் வைத்துவிட்டார். அந்நாட்களில் அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் விசாலமானதும் அழகானதுமாக அவ்வீடு இருந்தது. கொழும்பில் எனது குடும்பம் வாழ்ந்த காலத்தில் மார்கழி விடுமுறைக்கு அங்கு வந்து தங்குவோம். எம்மைப்போன்றே யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்துவந்த அம்மாவின் சகோதரர்களும் அதேகாலப்பகுதியில் விடுமுறைக்கு வருவார்கள் அம்மம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று பெரும் பட்டாளமே அவ்வீட்டில் நிற்கும். அம்மம்மாதான் எல்லோருக்கும் கட்டளை வழங்குவது. பாடசாலை ஆசிரியரான அவர் இயல்பாகவே கண்டிப்பானவர். ஆனால், அன்பானவர். வீட்டில் உள்ள சின்னக் கிணற்றில் துலாமரத்தினால் அள்ளிக் குளிப்பது ஒரு சுகம். மாமா எல்லாச் சிறுவர்களையும் வரிசையில் இருத்திவைத்து குளிக்கவைப்பார். "உனக்கு மூண்டு வாளி, எனக்கு நாலு வாளி" என்று போட்டி போட்டு மாமாவிடம் வாங்கிக் குளிப்போம். கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார். ஏனென்றால், குளிர்தண்ணியில் குளிப்பதால் வருத்தம் ஏதும் வந்துவிடக்கூடாதென்பதற்காக அப்படிச் சொல்வது வழமையாம். அப்படியிருந்த வீட்டில் இப்போது சித்தி மட்டும் ஒற்றை ஆளாக வாழ்ந்துவருகிறார். அன்றிருந்த கலகலப்பும், மக்கள் கூட்டமும் அற்றுப்போய் வெறிச்சோடி அமைதியாகக் கிடந்தது எங்கள் அம்மாமாவின் வீடு. சிறுவயதில் வீட்டின் விறாந்தையில் இருந்து விளையாடிய இடங்களை ஆசையுடன் தொட்டுப்பார்த்தேன். மழைகாலத்தில் கப்பல்விட்டு விளையாடிய முன் விறாந்தை, பின்முற்றத்தில் பரந்து விரிந்து வளர்ந்து அப்பகுதியெங்கும் இலைகளையும் மாம்பிஞ்சுகளையும் கொட்டும் கிளிச்சொண்டு மாமரம் என்று ஒவ்வொரு இடத்தையும் மனம் தேடிப் பார்த்துக்கொண்டது. விறாந்தையில் போடப்படிருந்த வாங்கில் அமர்ந்தபடியே சித்தியுடன் பேசினேன். அவரை இறுதியாக 2022 புரட்டாதியில் அவுஸ்த்திரேலியாவில் பார்த்தேன். திருமண நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். ஆகவே, சிட்னியில் இருக்கும் குடும்பங்கள் குறித்து நலம் விசாரித்தார். பின்னர் ஊர்க்கதைகள் மேடைக்கு வந்தன. ஒரு இரண்டு மணிநேரமாவது பேசியிருப்போம், "குளிச்சுப்போட்டு வா சாப்பிடுவம்" என்று கூறவும் பழைய நினைப்பில் கிணற்றில் துலாவினால் அள்ளிக் குளிக்கலாம் என்று போனால் துலாவைக் காணோம். "எங்கே சித்தி துலா?" என்று நான்கேட்க, "இந்தவயசில என்னால துலாவில அள்ளிக் குளிக்க ஏலுமே? உள்ளுக்கை வக்குக்கட்டியிருக்கிறன், மோட்டர் போட்டால் தண்ணிவரும், அங்கை போய்க்குளி" என்று சொன்னார். அங்கிருந்த வெய்யில்ச் சூட்டிற்கும், வியர்வைக்கும் குளிரான நீரில் அள்ளிக் குளித்தது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. ஆசைதீரக் குளித்தேன். குளித்து முடிந்து வந்ததும், அருகில் வசிக்கும் இன்னொரு சித்தியும் இணைந்துகொள்ள மதிய உணவு உட்கொண்டோம். சித்தியின் சமையல் அசத்தலாக இருக்கும். கோழி, ஆடு, கத்தரிப்பொரியல், இறால்ப்பொரியல், பருப்பு என்று அட்டகாசப்படுத்தி வைத்திருந்தார். பசியொரு புறம், அவரது சமையலின் சுவை இன்னொருபுறம் என்று ஆகிவிட இருமுறை போட்டுச் சாப்பிடாயிற்று. மாம்பழம் வெட்டிவைத்திருந்தார். அதையும் ருசித்தாயிற்று. தொடர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். "இண்டைக்கு இங்கதானே நிற்கிறாய்?" என்று சித்தி கேட்கவும், "இல்லைச் சித்தி உங்களையும் மற்றச் சித்தியையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவைப் பாக்கப் போயிட்டு, நீங்கள் திரும்பி வாங்கோ, நான் யாழ்ப்பாணத்திலை நிற்கிறன்" என்று சொன்னேன். அவருக்கு அது அவ்வளவாக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. "ஏன், நிக்கிறன் எண்டுதானே சொன்னனீ? இப்ப ஏன் இல்லையெண்டுறாய்?" என்று மீண்டும் கேட்டார். "இல்லைச் சித்தி, நாளைக்கு வன்னிக்குப் போறதெண்டு நெய்ச்சிருக்கிறன். இங்க நிண்டுட்டு நாளைக்குக் காலையில யாழ்ப்பாணம் போய் பிறகு வன்னிக்குப் போறதெண்டால் நேரம் காணாது. அடுத்த‌நாள் கொழும்புக்கும் போறன், குறை நெய்க்காதேங்கோ" என்று கூறினேன். அதன்பிறகு, "உன்ர" விருப்பம் என்று விட்டுவிட்டார். மாலை 4:30 மணிக்கு சித்தியின் வீட்டிற்கு அருகில் சொந்தப் பாவனைக்கென்று ஓட்டோ ஒன்றினை வைத்திருக்கும் நண்பர் ஒருவரை எம்மை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம். நண்பர் ஆதலால் யாழ்ப்பாணம் போய்வர 3500 ரூபாய்கள் மட்டுமே கேட்டார். நியாயமான விலைதான். கடும் மழை பெய்யத் தொடங்கியது. முன்னால் செல்லும் வாகனத்தைப் பார்க்க முடியாதளவிற்கு மழை. ஓட்டோவின் இருபக்கத்திலும் இருந்த ரப்பர் சீலையினை சாரதி இறக்கிவிட்டார். மெதுமெதுவாக யாழ்ப்பாணம் நோக்கிய எமது ஓட்டோப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுகிலும் அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்பதால் இடங்கள் குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆகவே, வழியில் பலவிடங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு வந்தார், நானும் தெரியாவர் போல்க் கேட்டுக்கொண்டு வந்தேன். ஊரில் உள்ள பிரச்சினைகள், அரசாங்கம், இளைஞர்கள் என்று பலவிடயங்கள் குறித்துக் கூறினார். கலியாணக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டுக் காசு படுத்தும் பாடு என்றும் அலசப்பட்டன. சித்திமார் இருவரும் அமைதியாக இருக்க நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.
  40. படம் 1,2 & 3 : அக்கராயன் சாலையும் ஓரத்தில் சோலையும் படம் 4 : அக்கராயம் கமம் படம் 5 : அக்கராயன் தென்னந்தோட்டம்
  41. படம் 1 ‍& 2 பண்ணைப் பாலத்தின் கரை படம் 2 : நல்லூர் முருகன் கோவில் இரவு வெளிச்சத்தில் படம் 3 & 4 : நாவற்குழி கேரதீவு மன்னார் வீதி படம் 5 : மாவீரர் நாள் அலங்காரம் படம் 6: கார்த்திகை விளக்கீடு ஜெயாவின் வீட்டில் படம் 7 : வெள்ள‌டியான் சண்டை சேவல் படம் 8 :அக்கராயன் விருந்தினர் விடுதி படம் 9 : கரவெட்டியில் அம்மம்மா வீடு
  42. 2018 இன் பயணம் அதிக கனதிகளின்றி, குறைவான மனப்பதிவுகளுடன் முடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் எனது கடந்த கார்த்திகை மாத இறுதிநாட்களின் பயணம் அப்படிப்பட்டதல்ல. எனது சித்தியின் உடல்நிலை கவலைக்கிடகமாக மாறிப்போனது. நினைவுக‌ள் குழம்பிப் போய், ஒரு சில விடயங்கள் மட்டுமே மனதில் இன்னும் எஞ்சி நிற்க, உடலாளும், மனதாலும் அவர் பலவீனமான நிலையில் இருந்தார். இருமுறை கால்தவறி வீழ்ந்துவிட்டதால் வயதான அவர் உடலில் சத்திரசிகிச்சை மூலம் தகடுகள் பொறுத்தப்பட்டு முறிவுகள் சரிசெய்யப்பட்டிருந்தது. நடக்கப்பதற்கான உடல்வலுவின்றி சக்கர நாற்காலியில் அவரைப் பராமரித்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பார்த்துவந்தவர்களில் ஒருசிலர் "உன்னைப்பற்றித்தான் அடிக்கடி கேட்கிறா, ஒருக்கால்ப் போய் பார்த்துவிட்டு வா" என்று கூறினார்கள். ஆகவே, போவதென்று முடிவெடுத்தேன், தனியாக ! அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. "கண்டறியாத அரசியல் எழுதுறியள், உந்த லட்சணத்தில ஊருக்குப் போகப்போறியளோ? போதாக்குறைக்கு பேர் வேறை போட்டு எழுதுறியள், அவங்கள் பிடிச்சால் என்ன செய்வியள்?" என்று கேள்விகளுடன் ஆரம்பித்து, "நீங்கள் தனியாக உல்லாசமாக ஊர் சுத்தப் போறியள், பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தானே போறியள்? அதுதான் எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" என்பதுவரை பல தடங்கல்களும் நான் போகக்கூடாது என்பதற்கான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். "இல்லை, நான் போகத்தான் போகிறேன், பிள்ளைகளை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ" என்பதே எனது முடிவான பதில். அதன்பின் எவருமே எதுவும் பேசவில்லை. வீட்டில் அமைதி, சில நாட்களுக்கு. அவ்வப்போது மீண்டும் இதே சம்பாஷணை வரும், அதே கேள்விகள், அதே விளக்கங்கள், முடிவான எனது பதில். இப்படியே சில வாரங்கள் கரைந்துவிட்டன. இறுதியாக ஒரு சமரசம், "சரி, நீங்கள் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டை நிற்கவேணும், அதுக்கு ஓமெண்டால் நீங்கள் போய்வரலாம்" என்று அனுமதி கிடைத்தது. எனக்கும் அது சரியாகப் பட்டது. ஆகவே சரி என்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.