Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33814
    Posts
  2. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    13685
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33381
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    7613
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/05/24 in Posts

  1. அக்காவும் ஒரு அம்மாதான், அக்கா இருப்பவர்கள் 2 அம்மாவின் அன்பில் வளர்ந்திருப்பார்கள், நான் அதை அனுபவித்தேன், நன்றி சுவி பகிர்வுக்கு
  2. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
  3. அக்கா, தம்பிக்கு இன்னும் ஒரு அம்மா
  4. இஸ்ரேல் மட்டுமில்லை. நிறைய நாடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதாவது சூயஸ் கால்வாயுடான கப்பல் பயணம் 40 % ஆல் குறைவடைந்துள்ளது. அதாவது இஸ்ரேல் அல்லாத மற்றைய நாடுகளுக்கான பயணங்களும் தடைபட்டுள்ளன. எனவே இது மற்றைய நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கை. எனவே இது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். அன்கொன்றும் , இன்கொன்றுமாக நடந்தாலும் முடிவு உண்டாகும்.
  5. மலர்கள் கேட்டேன் & நிலா காய்கிறது -- சுகன்யா வரதராஜன்
  6. மாதுரு ஓயா அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய அரச இயந்திரம் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் நாயகர்கள் காமிணியும் ஜெயவர்த்தனவும் மாதுரு ஓயா பகுதியில் பிக்கு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர்களின் அடாத்தான நிலஅபகரிப்பிற்கு அரசால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட கலவரங்களுக்குப் பின்னரும் ஜெயவர்த்தனவை ஆதரித்து நின்ற ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூட மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்ட இனக்கலவரங்களினால் சர்வதேச அனுதாபத்தினைப் பெற்றுவந்த தமிழர்களுக்கு மாதுரு ஓயாவின் ஆக்கிரமிப்பை அரசு ஆதரிப்பதென்பது அவர்களது நிலையினை இன்னும் பலப்படுத்தியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் இது ஆத்திரப்படுத்தியிருக்கும். ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இரகசியமாக, மெதுமெதுவாகவே செய்ய விரும்பியிருந்தனர். ஆனால், மகாவலி அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய சிலர் மிகவும் வெளிப்படையாகவும் மூடத்தனமாகவும் மிகப்பெரிய செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்ததன் மூலம் ஜெயாரின் திட்டத்தினைப் போட்டுடைத்துவிட்டனர். இது ஜெயாரின் அரசையும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியிருந்தது. புரட்டாதி 8 ஆம் திகதி தேவநாயகம் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. மாதுரு ஓயாவின் சிங்கள ஆக்கிரமிப்பை மகாவலி அபிவிருத்தி அமைச்சு துரிதப்படுத்தியது. திம்புலாகலை பிக்குவை அணுகிய அதிகாரிகள், சிங்களக் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்துமாறு கோரினர். பிக்குவும் மிக வெளிப்படையாகவே இக்குடியேற்றதைச் செயற்படுத்தத் தொடங்கினார். அதன் ஒரு அங்கமாக தவச எனும் சிங்கள நாளிதழில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்ட திம்புலாகலை தேரை, மகவலி நீர்ப்பசணத் திட்டத்தின் மூலம் நண்மையடையப்போகின்ற காணிகளில் விவசாயம் செய்ய விரும்புவோர் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்கிற அறிவிப்பினை அந்த விளம்பரம் தாங்கி வந்தது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து பெளத்த‌மத பீடங்களின் நாயக்கர்களுக்கும் திம்புலாகலை பிக்கு அனுப்பிய கடிதத்தில் தத்தமது பகுதிகளில் இருந்து குறைந்தது இரு காணிகளற்ற விவசாயிகளையாவது தெரிவுசெய்து தருமாறு கேட்டிருந்தார். இவ்வாறு 700 காணிகளற்ற சிங்கள விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு மாதுரு ஓயாவிற்குச் சென்றார் திம்புலாகலை தேரை. இவரது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டக்களப்பு அரசாங்க அதிபரையும், ஏனைய அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணிகளை ஆக்கிரமித்து நின்ற 700 சிங்கள விவசாயிகளையும், பிக்குவையும் அவ்விடத்தில் இருந்து அகன்றுவிடுமாறு அரசாங்க அதிபர் கோரியபோது அவர்கள் அவரைச் சட்டை செய்யவில்லை. அரசாங்க அதிபர் பொலீஸாரின் உதவியை நாடியபோது அவர்களும் கைவிரித்து விட்டனர். ஆகவே, வேறு வழியின்றி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கல்க்குடா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் தேவநாயகத்திற்கு இதுகுறித்த கடிதம் ஒன்றினை அரசாங்கதிபர் அந்தோணிமுத்து அனுப்பிவைத்தார். தமிழர் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட திம்புலாகலைப் பிக்குவின் உருவச்சிலையினைத் திறந்துவைக்கும் போர்க்குற்றவாளி சவீந்திர சில்வா மகாவலி அபிவிருத்திச் சபையும் வெளிப்படையாகவே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. திம்புலாகலை விகாரையிலிருந்து மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு சிங்கள விவசாயிகளை ஏற்றிச்செல்ல அமைச்சின் பாரவூர்திகளை அமைச்சு அனுப்பி வைத்தது. இப்பகுதியில் அத்துமீறிக் குடியேறும் சிங்கள விவசாயிகள் வீடுகளை அமைக்கவென தடிகள், பிளாத்திக்கு துணிகள், வேயப்பட்ட ஓலைகள் மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களையும் அமைச்சகத்தின் பாரவூர்திகள் கொண்டுவந்து சேர்த்தன. இதற்கு மேலதிகமாக சீமேந்துப் பக்கெற்றுக்களும் ஏனைய பொருட்களும் அமைச்சகத்திலிருந்து இப்பகுதிக்கு ஏற்றிவரப்பட்டன. மகாவலி ஆற்றில் பணியில் ஈடுபடுத்த வரவழைக்கப்பட்ட உழவு இயந்திரங்களும், புல்டோசர்களும் மாதுரு ஓயாப் பகுதியில் சிங்களவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் காணிகளை துப்பரவாக்கி சமப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டன. புரட்டாதி 15 ஆம் திகதி தேவநாயகத்துடன் மீண்டும் தொடர்புகொண்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து, மாதுரு ஓயாவில் அத்துமீறி நுழைந்து, தமிழர் காணிகளைக் கைப்பற்றி இருக்கும் சிங்களவர்களின் தொகை 40,000 ஆக உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே தனது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பினை மறுநாளே கூட்டிய தேவநாயகம் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் இந்த நிலைமையினால் மிகுந்த அதிருப்தியடைந்து வருவதாகவும் மோதல்கள் உருவாகும் சூழ்நிலையொன்று உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். மகாவலி அபிவிருத்தி அமைச்சு சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேவநாயகம் குற்றஞ்சாட்டினார். தனது குற்றச்சாட்டினை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை அவர் காட்டினார். மகாவலி அமைச்சுக்குச் சொந்தமான பாரவூர்திகள் விவசாயிகளையும், கட்டடப் பொருட்களையும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குக் கொண்டுவந்து இறக்குவதைப் புகைப்படங்கள் காட்டின. மேலும், மகாவலி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் என்று பெரும் பட்டாளமே இக்குடியேற்றத்தை செயற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருவதையும் புகைப்படங்கள் காட்டியிருந்தன. புகைப்படங்களுக்கு மேலாக இந்த செயற்பாடுகளை நேரடியாகக் கண்டவர்களும் ஊடகவியலாளர்களிடம் தமது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டனர். மாதுரு ஓயாவில் தற்போது காணப்படும் நிலைமை அப்பகுதியில் பாரிய விழா ஒன்று நடைபெற்றுவருவது போன்று காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திம்புலாகலை விகாரைக்கு மக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர். பாரவூர்திகளும், மினிவான்களும் மக்களை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்து மாதுரு ஓயாவின் பல பகுதிகளுக்கு அம்மக்களை மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளே அனுப்பி வைப்பதோடு அம்மக்களுக்குத் தேவையான கட்டடப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். துப்புரவு செய்யப்படும் காணிகளில் மக்கள் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள அதிகாரிகளே உதவுகின்றனர். பல தனியார் அமைப்புக்கள் இம்மக்களுக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர்" என்று பொலொன்னறுவைக்கான லேக் ஹவுஸின் நிருபர் கூறினார். . திம்புலாகலை விகாரை மகவலி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளின் திரைக்குப் பின்னரான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிய வதந்திகள் கொழும்பின் உயர்வர்க்க மட்டத்தில் பரவிவரத் தொடங்கின. மேலும் இத்திட்டத்தின் நடத்துனராகச் செயற்பட்டு வந்த ஹேர்மன் குணரட்ண மகவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்கவிடம் மாதுரு ஓயாச் சிங்கள குடியேற்றத்திற்கு இராணுவப் பாதுகாப்பினை வழங்குமாறு கோரியபோதும், இராணுவத்தினருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி காமிணி அக்கோரிக்கையினை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. குணரட்ணவிடம் பேசிய காமிணி இராணுவத்திற்குப் பதிலாக வேறு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இத்திட்டத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டிதரட்ண, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டு ஆடிக் கலவரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்ததற்காகவும் பல தமிழர்களைக் கொன்றதற்காகவும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட‌ கடற்படைவீரர்களை, சட்டவிரோதமாக நடந்துவந்த மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிய வருகிறது. மிகுந்த கோபத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேவநாயகம் எச்சரிக்கை ஒன்றினையும் அங்கு விடுத்தார். "மீண்டுமொருமுறை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இனமோதல் ஒன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால், மாதுரு ஓயாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். எனது கோரிக்கைகுச் சாதகமான பதில் ஒன்றினை இந்த அரசாங்கத்தினால் தரமுடியாது போனால் நான் எனது பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். தேவநாயகத்தின் இந்த எச்சரிக்கைகள் ஊடகங்களில் வந்ததையடுத்து ஜெயார் கோபப்பட்டார். இன்னொரு இனக்கலவரத்தையோ அல்லது தேவநாயகம் விலகிச் செல்வதையோ ஜெயாரினால் அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. தமிழர்கள் தனது ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு தேவநாயகமே ஜெயாருக்கு உதவிவந்தார். தேவநாயகமும், தொண்டைமானுமே தமிழர்கள் மீது ஜெயார் கருணையுடன் இருக்கிறார் என்று காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட நடிகர்களாக அன்று இருந்தார்கள். தேவநாயகத்தின் பதவி விலகலும், இன்னொரு இனக்கலவரமும் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் தான் இருப்பதை உலகிற்குக் காட்டிவிடும் என்று அவர் அஞ்சினார். ஆகவே, தேவநாயகத்துடன் நேரடியாகப் பேசிய ஜெயார், "நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் பொறுமையாக இருங்கள்" என்று கெஞ்சினார்.
  7. முதலாவது சுய ஆக்கத்தைப் கவிதையாகப் பதிவிட்ட சுவி அண்ணாவுக்கு வாழ்த்துகள்.
  8. கிழங்கு பீன்ஸுடன் ஒரு அருமையான உணவு.........! 🤩
  9. இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிச்சை எடுக்கும் சிங்கம்.
  10. Antara Nandy----- அலைகடல்
  11. மொத்தத்தில் அக்கா ஒரு தளபதி.
  12. அட, கழுகு தேன் குடிக்குமா.....! 😂
  13. நுவரெலியாவில் வீதி ஓரத்தில் (கண்டி வீதி) உள்ள ஒரு மரக்கறி கடை.
  14. கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்......! 😍
  15. பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம் --- சத்யபிரகாஸ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.