Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3052
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19121
    Posts
  4. Newbalance

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    43
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/24/25 in Posts

  1. வருந்தாதே மனமே படம் போட்டர் கந்தன்
  2. 6. பண்ணையாரும் பலரும் ----------------------------------------- 'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார். 'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை. அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார். நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன். அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள். சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?
  3. தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.
  4. மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்? ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன). தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Post Link | Archive Link Post Link Post Link சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா? Fact Check/Verification ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம். இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது. இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!– நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது. தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது. அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது. கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது. அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது. Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா? Conclusion ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Report from Asianet News Tamil, dated October 29, 2019 X post from Vikatan, dated April 21, 2018 Report from Vikatan, dated April 21, 2018 Facebook post from Behindwoods, dated January 15, 2025 Self Analysis https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false பிகு எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.
  5. நீங்கள் நாதகவினர் மட்டுமே மேடைகளில் பேசும் கொள்கைகளையும், விடயங்களையும் பட்டியல் இட்டுள்ளீர்கள், புலவர். நீங்கள் சொல்லுவது சரியே. ஆனால் நான் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜக தவிர, பேசும் விடயங்களை மட்டுமே பட்டியலாக்கினேன். நான் குறிப்பிட்டவை எல்லா தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானவை. ஒவ்வொரு கட்சிக்கும் மட்டுமே உரித்தான தனித்தனியான விடங்கள் அல்லது கொள்கைகள், திட்டங்கள் என்று பார்த்தால், அது இன்னொரு நீண்ட பட்டியலாகப் போகும். உதாரணமாக, பாமகவின் வன்னிய மக்களுக்கான 20 வீத உள் ஒதுக்கீடு. தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிப்பது கூட பாமகவின் இனனொரு கொள்கை மற்றும் திட்டம். விசிகவுக்கும் அவர்களுக்கே மட்டும் உரியதாக சில தனிக் கொள்கைகள் இருக்கும். நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் கட்சியின் கொள்கைக் கையேட்டை வாசித்தால், அங்கும் அவர்களுக்கென்று சில பிரத்தியேக கொள்கைகளும், திட்டங்களும் இருக்கும். தலைநகரை சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றுவது கூட ஏதோ ஒரு கட்சியின் கொள்கையாக, திட்டமாக இருக்கக்கூடும். ஆதரவு - எதிர் என்னும் நிலையைக் கடந்து, சாத்தியங்களையும் குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளையும் நான் பார்க்க முற்படுகின்றேன். ஆதரவாக இருப்போர் அவர்களுடைய தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பார்கள்; எதிராக இருப்போர் அந்த தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பார்கள். இந்த ஒற்றைப்படையான நிலைப்பட்டால் நாங்கள் எங்களின் சுயத்தை கூட இழந்து போகும் அபாயம் உள்ளது. நாதகவின் நீர் மேலாண்மை பற்றிய அறிக்கையை நான் இன்னமும் வாசிக்கவில்லை. அப்படி ஒரு அறிக்கை வந்ததா என்றும் தெரியவில்லை. ஆடு மாடுகள் வளர்க்கும் திட்ட அறிக்கை போல நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கும் என்பதே இவர்களுடனான என் அனுபவம். தமிழ்நாடு ஒரு நியூசிலாந்தோ அல்லது டென்மார்க்கோ அல்ல. வருடத்தின் பெரும் பகுதியில் அனல் புழுதி பறக்கும் மாவட்டங்களே தமிழ்நாட்டில் அதிகம். இயற்கை விவாசாயம் என்று உலகம் போயிருந்தால், 70ம் ஆண்டுகளின் பின் உலகமே ஒரு கொடிய பஞ்சத்தில் அழிந்திருக்கும். இன்றும் கூட 800 கோடிக்கு மேற்பட்ட உலக மக்களுக்கு தேவையான உணவை நாங்கள் உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதன் பின்னால் இருப்பது மரபணுக்கள் மாற்றப்பட்ட அல்லது அவற்றின் திறனை அதிகரித்த விஞ்ஞான நடவடிக்கைகளே. கோதபாயாவின் ஒரு வருடம் மட்டுமே நீடித்த இயற்கை விவசாயத் திட்டம் முழு இலங்கயையுமே பட்டினிக்குள் தள்ளியதை சமீபத்தில் பார்த்தோமே. தமிழ்த்தேசியத்தை யார் பேசுவது என்றில்லையா............. தன் பிள்ளைகளை ஆங்கிலப் பாடசாலையில் படிப்பித்துக் கொண்டு, தமிழ்த்தேசியம் பேசுவது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம் இல்லையா........... இப்படியே ஒவ்வொரு கட்சியினரின் ஒவ்வொரு கொள்கைகளையும், திட்டங்களையும் ஆராய்ந்து பார்க்கமுடியும். அந்த அந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் அசௌகரியப்பட்டு எதிர்வினை ஆற்றுவார்கள்; எதிர்த்தரப்பினர் கைதட்டுவார்கள். இவை இரண்டையும் தாண்டி, தமிழ்நாடும் அந்த மக்களும் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.
  6. அப்படி வாக்கு வங்கியாக இல்லை. ஒரு 5% வாக்காளருக்கு எமது பிரச்சனை பத்து முக்கிய பிரசனையில், 10 வது பிரச்சனை. அந்த வாக்காளரை கவரவும், நிஜமாகவே சில தலைவர்கள் எம் மீது கொண்ட கரிசனையுமே இப்படி பேச காரணம்.
  7. 1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இறகுகள் கறுப்பு அல்ல, அவை வண்ணங்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்திருக்கின்றேன். வண்ணங்கள் எங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை என்கின்றார்கள். உள்ளவற்றில் குறைவான விலையில் உள்ள விமான பயணச் சீட்டை நாங்கள் வாங்கியிருந்தோம். ஆதலால் அவர்களே இருக்கைகளை தெரிவு செய்து கொடுப்பார்கள். கொடுத்தார்கள். மூன்று இருக்கைகள் ஒன்றாகவும், மற்றைய இருக்கை அந்த வரிசைக்கு பின் வரிசையிலும் இருந்தன. ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம், மற்ற மூவரும் ஒன்றாக இருங்கள் என்றேன். அப்படியான ஒரு முடிவையும் உடனேயே எடுக்கத் தேவையில்லை என்றது குடும்பம். இன்றைய உலகம் எந்த அவசர உடன்படிக்கைக்கும் தயாராக இல்லாதது. காத்துக் கொண்டிருக்கும் போது 'பயணிகள் கவனிக்கவும்.................' என்று ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது. பாலகுமாரனின் ஒரு நாவலின் தலைப்பு இது. அவரை விழுந்து விழுந்து வாசித்த ஒரு காலம் இருந்தது. அது பதின்ம வயதுகள். அன்று வாசித்த அவரின் கதைகள் பலவும் இன்றும் சாராம்சமாக ஞாபகத்தில் இருக்கின்றன. சாராம்சமாக இருப்பதால் எல்லாமே ஒரே ஒரு கதை தான் என்றும் தோன்றுகின்றது. பின்னர் பெரிய இடைவெளி. அந்த இடைவெளியில் அவர் ஒரு சித்தர் ஆக மாறியிருந்தார். எழுத்துச் சித்தரோ அல்லது அப்படி ஏதோ ஒன்று சொன்னார்கள். புஷ்பா தங்கத்துரை கூட ஒரு பக்தி இதழில் எழுதுவதாகவும் பார்த்திருந்தேன். நாங்கள் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்ந்து தான் முடிப்போம் போல. 'விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால்.............' என்று தொடர்ந்தது அறிவிப்பு. வீட்டுக்கு திரும்பி போகச் சொல்லப் போகின்றார்களா என்று படபடத்தோம். சில வாரங்களின் முன் கனடா போகும் பொழுதும் இதே டெல்டா விமான நிறுவனம் தான். அவர்கள் எங்கேயோ மழையோ புயலோ என்று அன்று எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் பிந்தியே கனடா போயிருந்தோம். ஆஸ்திரேலியா பயணத்தை மிகக் குறுகியதாகவே திட்டமிட்டிருந்தோம். அதில் ஒரு நாள் அநியாயமாகப் போய் விடுமோ என்பதே படபடக்க வைத்தது. பிரபஞ்சத்தில் ஒளியின் வேகமே மிக அதிகமானது என்கின்றார்கள். ஆனால் மனதின் வேகம், எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகவும் அதிகம் என்பதே என் அனுபவம். பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், விமானம் மேலே எழும்பும் போதும், அது கீழே இறங்கும் போதும், விமானத்தின் சமநிலையைப் பேணுவதற்காக எல்லோரும் ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொன்னார்கள். இருக்கைகள் அந்த ஒழுங்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மேலும் சில வரிசைகள் இதன் காரணமாக முற்றிலும் வெறுமனே இருக்கும் என்றார்கள். இது புதிது, நான் முன்பின் அறிந்திராதது. விமானம் கிடையாக பறக்க ஆரம்பித்த பின் எங்கேயும் இருக்கலாம் என்றார்கள். எங்கள் நால்வரில் யார் பின் வரிசையில் இருப்பது என்ற உடன்படிக்கை ஏறக்குறைய தேவை இல்லை என்றாகியது. அந்த வரிசையில் வேறு எவருமே இல்லை. எல்லாமே எங்களுக்கு மட்டும் தான் என்றாகியது. அந்த அதிகாலைப் பொழுதில் சிட்னி விமான நிலையத்தில் ஆட்களையும் பார்க்கவில்லை, கொண்டு போகும் பொருட்களையும் எவரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி வெளியேறும் வாசலில் நின்றார். ஏதாவது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொண்டு போகின்றீர்களா என்று கேட்டார். நாங்கள் நால்வரும் மொத்தமாக நான்கு பெரிய பொதிகளும், நான்கு சிறிய பொதிகளும் வைத்திருந்தோம். கனடா மில்லில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் மற்றும் சில பொருட்களும் இருந்தன. சிட்னி விமான நிலையத்தில் முன்னரும் பல விதமான அனுபவங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இருபது வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் முதல் தடவையாக அங்கு போயிருந்த போது, எங்கள் நால்வரையும் ஒரு அதிகாரி விசேடமாகப் பார்த்தார். எங்களின் கடவுச்சீட்டுகளின் மீதே அவருக்கு பெருத்த சந்தேகம் இருந்தது போல. அதன் பின்னரும் சில அனுபவங்கள். ஆஸ்திரேலியாவை மிகவும் சிரமப்பட்டே காப்பாற்றுகின்றார்கள் என்று தெரிந்தது. காற்றே புகாத இடத்தில் கூட இலங்கையர்களும், இந்தியர்களும், சீனர்களும் புகுந்து விடுவார்கள் என்ற தகவல் இவர்களுக்கு காலம் பிந்தியே தெரிய வரும். சிட்னிக்கும், லாஸ் ஏஞ்சலீஸூக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சீதோசன நிலை முக்கியமான ஒன்று. பெரும்பாலும் குளிர் இல்லாத இடங்கள் இந்த இரு நகரங்களும். மேலும் சிட்னி அமெரிக்க நகர்களின் சாயலிலேயே அமைக்கப்பட்டும் இருக்கின்றது. உதாரணமாக சியாட்டில் நகரம். சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு போவதற்கு நேரடியாக ஒரு பெருந்தெரு இப்பொழுது இருக்கின்றது. இது முன்னர் இருக்கவில்லை. கட்டணம் உண்டு, ஆனால் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டுக்கு போய்விட்டோம். ' பெருந் தெருக்களை கட்டு, போய் வர கட்டணம் அறவிடு................' என்பது அண்ணன் காட்டிய வழி போல. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. ஆஸ்திரேலியாவில் இந்தக் குடியிருப்புகளில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டேன். 'இந்தியர்கள்...........புதிதாக வந்தவர்கள்.........' என்று சொன்னார்கள். காற்றுப் புக முடியாத இடமென்றாலும், நல்ல இடமென்றால் நாங்கள் குடியேறி விடுவோம் என்பது சரிதானே. சிட்னி விமான நிலையத்தில் எங்களை ஏன் அதிகாரிகள் எந்தச் சோதனைகளும் இல்லாமலேயே வெளியே விட்டார்கள் என்பதும் புரிந்தது. அந்த அதிகாரிகள் வேறு யாருக்காகவோ காத்துக் கொண்டு நிற்கின்றார்கள் போல. (தொடரும்...............) ** செயற்கை நுண்ணறிவிடம் ஒரு படம் வரையச் சொன்னேன். அதன் பூகோள அறிவு கொஞ்சம் அப்படி இப்படித்தான் போல. அதன் தவறைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு அதனிடம் இருந்து வந்தது இன்னும் கொடுமை............. அதனால் இதுவே போதும், மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அப்படியே இங்கு போட்டுள்ளேன்.
  8. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது. முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான். அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும் ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை" யாகத் தோன்றினாள்! அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான். முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !! திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் - இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும், இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும் மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான். பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி தீபம் எரிந்து கொண்டு இருந்தது. அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில் ”சொல்லுங்க… ‘ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்ற வைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”ஐ’யம் [I am] அருண் ” என்றான். அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான் ”ஆரணி” என்றாள் தயங்கியபடி. பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும் போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக் கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது ”நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31263916889923550/?
  9. ஆட்சியைப் பிடிப்பதற்கு மிகவும் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட முறையே இது மட்டும் தான் அண்ணை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இது மட்டும் எப்போதும் தொடர்ந்திருக்கும். சமூக அரசியல் விஞ்ஞானத்தின் பால பாடம் ☠️.
  10. உண்மையிலேயே இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன். எம்ஜிஆர் கால் முறிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓய்வில் இருந்த போது சரோஜாதேவி எல்லோருடனும் சேர்ந்து நடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த படமாக இருக்கும். பாலாஜியுடன் அவரது ஆட்டம் நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பாடலைக் கேட்டு. எஸ்.சி. கிருண்ணன் பாடியது. மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகள். கவலையோடு இருக்கும் போது மனதுக்கு ஒத்தடம் தரும் பாடல். நன்றி Newbalance
  11. அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியிலே மடியிலேயே கையை வைச்சிட்டியே மாப்பு🤪
  12. ராசாத்தி அம்மாள், கவிஞர் வாலியுடன் நாடகங்களில் நடித்தவர். நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா எம்ஜிஆரின் நாடகக்குழுவில் இருந்தவர். எம்ஜிஆர் படங்களிலும் அவ்வப்போது தலை காட்டுவார். நடிகர் செந்தாமரை கலைஞருடன் நல்ல உறவில் இருந்தவர். செந்தாமரையின் மனைவி கௌசல்யா வழங்கிய பேட்டி ஒன்று இங்கே இருக்கின்றது. மீண்டும் கோசான் வீட்டைச் சுத்தி அடை மழை😊
  13. அர்ச்சனா அவர்களின் யூரியூப் தளத்தில் பல விடயங்களை பார்க்க முடிகின்றது. அவர் கூறுபவை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியனவா என்பதற்கு அப்பால் அவரது சொந்த கருத்துக்களை அவரது வாயாலேயே கேட்கும்போது அவர் சம்மந்தப்பட்ட விடயங்களில் தெளிவு ஏற்படலாம்.
  14. இது உங்களுடைய tunnel vision பார்வை, இதில் அதிசயம் ஒன்றுமில்லை. "ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்" என்று இலங்கையிலோ தமிழகத்திலோ வாக்களிக்கக் கூடிய எல்லோரும் பிரபாகரனுக்கே அந்த வாக்கை வழங்குகின்றனர் என்பது உங்களது தவறான பார்வை. ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தினார் என்பது உண்மை, ஆனால் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் என்ற நோக்கத்தை அவருக்கு முன்னரும் பின்னரும் பலர் ஆதரித்திருக்கின்றனர், இனியும் ஆதரிப்பர்!
  15. தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏 அருமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள் நன்றி விரிவான பதிலுக்கு
  16. இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன். அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள். இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை. உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா? நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா? உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?
  17. ஆஹா மாணவர்களுக்குப் பிடித்தமான மணியான பாடல் ஒன்று .......! 😂
  18. ஏன் சும்மா இதுகளுக்கு சண்டை பிடிப்பான்? கொஞ்சம் பொறுங்கோ. ரஜனி, கமல், விஜய் இந்த வரிசை அடுத்த தேர்தலில் இன்னும் ஒரு நடிகருடன் தொடரும். ஒரு அரசும் அதனை சார்ந்து இயங்குகின்ற உளவுத்துறையும் சும்மாவே! 🤣
  19. நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும் அவசரத்தில் வாக்கு வங்கி என்பதை ஆட்சி என்று வாசிப்பது வழமையே. உங்களின் பார்வைக்கு எதுவும் எழுத முடியாது பிரயோசனமில்லை. யாரும் நித்திரையாக கிடப்பார்களை முயற்சிப்பது தான் நன்று.
  20. https://www.youtube.com/watch?v=wLcddb8O4M4 எங்கே நான் வாழ்ந்தாழும் என்னுயிரோ படம் கல்லும் கனியாகும்
  21. இது .....இது எனக்கு மிகவும் பிடித்திருக்கு . ......! 👍
  22. இந்த சம்பவம் பற்றி உண்மையில் என்ன நடந்தது என அர்ச்சனா அவர்கள் இவ்வாறு விபரிக்கின்றார்:
  23. சொல்வபவர்களெல்லாம், தாங்கள் சுகபோகமாக வாழ்ந்து, மாளும்போதே எதையோ சொல்லிவிட்டுப்போகிறார்கள். பிழைத்துக்கொண்டால் அவர்களும் சொன்னவற்றை மீளப்பெறுவார்கள். நாம் நாமாக, இருப்பதைக்கொண்டு, நிறைவு கண்டால் போதும். வேறொருவரின் ஆலோசனையும் தேவையில்லை.
  24. இவர் நிலமையை பார்த்த பின்னராவது ஊரில் வாள் வெட்டு வித்தை காட்டும் நபர்கள் திருந்த வேண்டும். ஊரில் வாள்வெட்டு வித்தை காட்டிவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகும் கனவுடன் வாழும் நபர்களின் செவிகளில் இந்த நபரின் கைது பற்றிய செய்தி சென்றடைய வேண்டும்.
  25. ஒரு கதையில் பல அன்றாட சம்பவங்களையும் கலந்து சுவையாக ஆர்பாட்டமின்றி எழுதுகிறீர்கள். பல தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது. உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!
  26. உண்மை தான்,......ஒரு தமிழக உறவுடன். கருத்து எழுத வேண்டி வந்தது ...அவர் ஒரு கருத்து எழுதினார் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று இதனால் இலங்கை தமிழருக்கு இருந்த ஆதரவு குறைத்து விட்டது ஒருவருக்கு பணம் கொடுத்து மற்றையோரின். ஆதரவை இழந்து விட்டோம் இது கவலையளிக்கிறது 🙏
  27. கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதும், சீமானுக்கு கவர் எடுக்க இனிமேலும் முடியவில்லை, ஆகவே இப்படி ஒரு கருத்து என்பது புரிகிறது. ஆனால் உங்களை போல் கண்மூடித்தனமாக நான் யாரையும் ஆதரிப்பதில்லை. ஒரளவு நியாயமான திராவிட, தமிழ் தேசிய சக்தி, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வரவேண்டும் என்பது 2009 ற்கு முன்பே என் அவா. கனவு. அதை விஜை நிறைவேற்ற கூடும். ஆகவே வரவேற்கிறேன். அவரும் சீமான் போல் பெட்டி… அல்லது கமல் போல் ராஜ்யசபா சீட்டுக்கு விலை போனால்…அவரையும் விமர்சிப்பேன். பிகு திமுக, அதிமுக, காங்கிரஸ் ஓடு விஜை கூட்டு வைக்கலாம். அது அரசியல் ….இவர்கள் அரசியல் எதிரிகள். ஆனால் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவோடு சேர்ந்தால், அல்லது ஆர் எச் எஸ் சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க பெரியாரை விமர்சனம் செய்வது என இறங்கினால்…வெளுவை நிச்சயம்.
  28. கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே
  29. அதை விட திரள்நிதி சேர்தது அனுப்பினால் வாற கொமிசன் உபரி கூட வரும். 😂
  30. விசில், மெல் கிப்சன் நடித்த பொண்ணுங்களுக்கு என்ன தான் வேணும் (What Women Want) என்ற படத்தின் உல்டா என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு கிடைக்கவே கூடாத சக்தி இது தான். எப்படியோ பெண்களுக்குக் கல்யாணம் ஆன கொஞ்சக் காலத்தில் கிடைத்து விடுகிறது (என்று தாங்களே நம்பத் துவங்கி விடுகிறார்கள்) 😁.
  31. ஒரு பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்ல, சில பக்கத்து வீட்டுக்காரர்களுன் இதே போலவே தான். அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது, அத்துடன் அவர்களுடைய பிள்ளைகளும் தூர இடங்களுக்கு போய்விட்டார்கள். முன்னர் இந்த தெருவில் இருந்த சிலர் போயும் விட்டார்கள். இங்கே பல்லிகள் வீடுகளுக்குள் பொதுவாக வருவதில்லை. ஆனால் வளவுகளுக்குள் ஓடித் திரிகின்றன. பூச்சிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. அவர் தான் பல்லியை இதற்கு முன் இங்கே கண்டதேயில்லை என்று சொல்லி, பயத்தில் துள்ளிக் கொண்டிருந்தார். அதையே அவர் கூரையில் நின்றார் என்று சொல்லியிருந்தேன். அவர் குஜராத்தில் இருக்கும் போது அவர் வீட்டில் பணியாளர்கள் இருந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அங்கே அவருடைய வீட்டுக்குள் பல்லிகள், பூச்சிகள் வராமல் அந்தப் பணியாளர்கள் 24 மணி நேரங்களும் காவலுக்கு இருந்திருக்கின்றார்கள் போல........
  32. இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.
  33. Battinews.com - Sri Lanka Tamil Newsகாதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையி...காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !
  34. யாரையும் பழி வாங்க உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இலை நிறம் மாற மரத்திலிருந்து தானக உதிர்ந்து விடும்.
  35. அன்று வந்ததும் இதே நிலா ..........! 😇
  36. 2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த நாகரிகத்திலும் அப்படி ஒரு தெய்வம் இருக்கின்றதா என்று யோசிக்க வைத்தது மகளின் அந்தக் கேள்வி. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பன ஐந்து பூதங்கள் எனப்படுபவை. பூமியெங்கும் பல நாகரிகங்களிலும் இவைக்கு தனித்தனியே கடவுள்கள் இருந்தார்கள். அவற்றில் பல கடவுள்கள் அழிந்து போய் விட்டாலும், சில கடவுள்கள் மனிதர்களிடம் இருந்து தப்பி இப்போதும் பூமியில் அழியாமல் இருக்கின்றார்கள். ஆனாலும் தனியே மண்ணுக்கு என்று ஒருவர் எங்கேயும் இருந்ததில்லை என்றே தோன்றியது. 'மண்ணுக்கு என்று ஒரு அப்புச்சாமி இல்லை. ஆனால்...............' சுற்றிவர மண்ணும், மண் குவியல்களும் அன்றி வேறுதுவுமில்லை. மேலே தெளிந்த நீல வானம். குளிர்காலப் பருவத்தை முடித்துக் கொண்ட சூரியன் இதமாக கிழக்கில் இருந்து எரிந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு இடம் இருப்பதை நான் முன்னர் தெரிந்திருக்கவில்லை. பெரும் மணல் வெளியும், அதன் இடை இடையே நெருக்கமாக சில நூறு அடிகள் உயரம் கொண்ட மண் குன்றுகளும் அந்தப் பிரதேசத்தை மூடி இருந்தன. மண் சரிவுகளில் சறுக்கும், ஓட்டகத்தில் ஏறி ஓடும், மணல் பிரதேச வாகனங்களில் பறக்கும் விளையாட்டுகளும், பொழுதுபோக்குகளுக்குமான இடம் அது. 'ஆனால் பூமாதேவி என்று ஒரு அப்புச்சாமி இருக்கின்றார். அம்மன் போல. அவர் தான் பூமி முழுவதற்கும் கடவுள், பூமிக்கு பொறுப்பு.............' என்றேன். 'நீங்கள் அவரையா இப்போது கும்பிட்டீர்கள்.........' என்று சிரித்தனர் ஒன்றாகச் சேர்ந்து. கொடுக்கப்பட்ட அந்த நீண்ட மட்டையின் மீது இருந்தோ அல்லது நின்றோ சரிவுகளில் சறுக்கிக் கொண்டு கீழே வந்து விடலாம். மட்டையின் மீது இருந்து கொண்டே சறுக்குவது இலகு. மட்டையில் நின்று கொண்டே சரிவுகளில் சறுக்கி வந்தால் முகம் குப்புற விழ வேண்டி வந்தாலும் வரும். எப்படியோ உருண்டு பிரண்டாவது கீழே வந்து விடலாம். ஆனால் மீண்டும் சரிவுகளில் ஏறும் போது மணல் தெய்வத்தின் துணை இருந்தால் நலம். நான் இரண்டு முழங்கால்களையும் குத்திட்டு, மட்டையை மணலில் குத்தி கைகளால் பிடித்துக் கொண்டே, தலையைத் தாழ்த்தி, மூச்சு விடும் போது பார்த்திருக்கின்றார்கள். காவோலை மண்டியிட்டு மூச்சு விட குருத்தோலைகள் கலகலத்தன. சிட்னியில் இறங்கிய அன்றே நெல்சன் குடாவுக்கு போவதற்கு ஆயத்தாகிவிட்டார்கள். என்னை விட்டால் வீட்டுக்கு அருகில் இருக்கும் வியட்நாம் வெதுப்பகத்தில், அது இப்பவும் அங்கே இருந்தால், பாணை வாங்கி சம்பல் அல்லது பழங்கறிகளுடன் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரில் இருக்கும் வாசிகசாலைக்குள் ஓடிப் போய் விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். முன்னர் சில தடவைகள் அப்படி நடந்தும் இருக்கின்றது. -நெல்சன் குடா சிட்னியிலிருந்து வட கிழக்கு திசையில் ஒரு இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கின்றது. கலிபோர்னியாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா நகரங்கள் போன்றே இதுவும் இருக்கின்றது. கோடை காலத்தில் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருவார்கள் என்றனர். அங்கே கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் எண்ணற்ற விடுதிகளே அதற்குச் சான்று. அங்கிருக்கும் மணல் மேடுகள் பூமியின் தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று அங்கே எழுதியிருந்தார்கள். அதிகமாகப் போனால் சில நூறு அடிகளே வரும் இவையா தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று ஆச்சரியமாக இருந்தது. வடகோளத்தில் அரபுப் பாலைவனங்களிலோ அல்லது ஆபிரிக்கப் பாலைவனங்களிலோ ஆயிரம் அடிகளில் மண் மேடுகள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். இந்தியாவில் கூட ராஜஸ்தானில் இருக்கலாம். பூமியின் வடகோளமும், தென்கோளமும் மிகவும் மாறுபட்டவை. தென் கோளத்தில் நீர்ப்பரப்பு மிக அதிகம், நிலப்பரப்பு மிகக் குறைவு. வட கோளத்தில் நிலப்பரப்பு தென் கோள நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அதனாலேயே தென் கோளத்தின் வெப்பநிலை சீராகவும், வடகோளத்தின் வெப்பநிலை பருவகாலங்களுடன் பெருமளவு மாறுபட்டுக் கொண்டும் இருக்கின்றது. திமிங்கிலம் பார்ப்பது, ஓங்கில் (டால்பின்) மீன்கள் பார்ப்பது என்றும் பெரிய படகுகளில் ஆட்களை கடலுக்குள் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில தடவைகள் கலிஃபோர்னியா கடலுக்குள் இப்படி போயும் இருக்கின்றோம். இப்படிப் போனதில் ஒரு தடவையாவது ஒரு திமிங்கிலமோ அல்லது ஓங்கில் மீனோ கண்ணில் பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பொழுது நான் வேலை பார்த்த இடம் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது, ஒரு நாள் மதியம் கடற்கரையில் நடக்கும் போது ஓங்கில் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. எப்பவோ குடுத்த காசுகளுக்கு அப்பொழுது எனக்காக வந்திருக்கின்றன போல. நெல்சன் குடாவிலும் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டணங்கள், விலைகளும் அதிகம். அந்தக் கடற்பகுதியில் எத்தனை ஓங்கில்கள் இருக்கின்றன, எத்தனை குட்டிகள் போட்டன என்ற தகவல்களும், இன்னும் மேலதிக கதைகளும் அந்தப் படகுப் பயணத்தில் சொன்னார்கள். ஆனால் எந்த மீனும் மேற்கடலுக்கு வரவேயில்லை. கலிபோர்னியா கடலில் கேட்காத கதைகளா அல்லது கொடுக்காத காசா, சரி இதுவும் போகட்டும் என்று இருந்தோம். திடீரென்று வேறோரு பகுதியில் ஓங்கில் மீன்கள் நடமாடுவதாக அங்கே படகை செலுத்தினார்கள். அங்கே பெரிதும் சிறிதுமாக பல ஓங்கில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவை கடுமையான சாம்பல் நிறத்திலும், குட்டிகள் மெல்லிய சாம்பல் நிறத்திலும் இருந்தன. முக்கியமான ஒரு விடயம் சொன்னார்கள். இந்த ஓங்கில் மீன்களின் கூட்டத்தில் பெரிய மீன்களில் ஆண் மீன்களே கிடையாது என்றும், அம்மா - பெரியம்மா - சித்தி - மாமி மீன்கள் மட்டுமே குட்டிகளை வளர்க்கின்றன என்றும் சொன்னார்கள். ஆண்கள் தனியே போய் விடுமாம். ஓங்கில் மீன்கள் புத்திசாலிகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம் தானே. அங்கிருந்த ஒரு வெளிச்ச வீட்டிற்கு போயிருந்தோம். 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை, அந்த வெளிச்ச வீடு அங்கிருக்கும் ஒரு சிறிய மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்த குடாப் பகுதிக்கு இரவுகளில் வரும் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போயிருக்கின்றனர். தனி ஒருவராக ஒருவர் அந்த வெளிச்ச வீட்டை பல ஆண்டுகள் பராமரித்து இருக்கின்றார். சில மண்ணெண்ணை லாந்தர்களை இரவுகளில் ஏற்றி அந்த வெளிச்ச வீட்டை இயக்கியிருக்கின்றார். அவர் தினமும் லாந்தர்களை ஏற்றினார் என்றே அங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள். அந்த லாந்தர்கள் சில அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது. (தொடரும்..........................)
  37. கு . சா ...... நான் எழுத நினைத்து பின் தவிர்த்து கொண்டது . .......! எனக்கு இந்தமாதிரி ஏழு பில்லியன் கூட வேண்டாம் ஏழு மில்லியன் போதும் இதைவிட அருமையான தத்துவங்கள் சொல்லுவேன் .......! 😂
  38. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 ரியோ வுக்கு வந்ததும், தன் இருக்கையை அருணுக்கு மிக அருகில் இழுத்து, பட்டும் படாததுமாக நெருங்கி அமர்ந்து கொண்டு, உங்களைப் பற்றி சொல்லுங்களே என்றாள். ஆரணியின் அகவை 21 அல்லது 22 இருக்கலாம். என்றாலும் பேசுவது பழகுவதைப் பார்த்தால் ஒரு 'டீன் ஏஸ்' [teen age] பெண் மாதிரியே இருந்தது. சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்' பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் ஆரணியின் அழகை பூரணமாக கொண்டு வரவில்லை அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள்' என்ற திருஞானசம்பந்தநாயனார் பாடல் எவருக்கும் ஞாபகம் வரலாம்? அப்படித்தான் ஓரளவு மாந்தளிர் போல் நிறத்தினையும் அரும்பு போல் முலையினையுடைய பார்வதி போலும் அவள் தன் இளமையையும், வனப்பையும் வெளிக்காடிக் கொண்டு இருந்தாள். அருண் தன் லண்டன் வாழ்வை சுருக்கமாக, குறிப்பாக அவளுக்கு, மற்றவர்களுக்கு பொதுவாக விளக்கிக் கொண்டிருந்தான். முன் இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. ஆரணி, வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் கண்களின் இமைகள் ஏதேதோ பேசின. அவள் திடீரென, "எமக்கு பசிக்குதே, ஐஸ்கிரீமுடன் நாம் எதாவது சாப்பிடுவோமா” என்றாள் ஒருவித சிணுங்கல்களுடன். ”அவ்வளவுதானே… பிரச்சனையில்லை, என்னென்ன வேண்டும் என்று பொதுவாக எல்லோரிடமும், ஆனால் குறிப்பாக அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான். அவள் கண்கள் மின்னின. அந்த ஒற்றைப் புன்னகை அவனை ஆழமாக இழுத்தது. தன்னை சுற்றிய சூழல் மறந்து, அவனின் இரண்டு விழிகளும் ஒன்றையே தேடுது. இத்தனை இளம் பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள்? எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. அவனுக்கு அதன் பதில் அப்பொழுது புரியவில்லை, என்றாலும் .. அவள் பார்வை ... அதற்காகவே தவமிருக்கிறது அவனது விழிகள்! நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக் கொடுத்து அவனையே பார்த்தபடி இருந்தாள், ஆரணி. மறவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசத் தொடங்கி விட்டார்கள். அவளின் சீரான பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவனைப் பற்றி இழுத்தது. பல வருடங்கள் தூங்கிய சிக்காடா (Cicada) பூச்சி [சிள் வண்டு அல்லது சுவர்க்கோழி], பெண் சிக்காடாவை ஈர்ப்பதற்காக வெளியே வந்து சத்தம் போடுவது போல அவன் மனதும் சத்தம் போட தொடங்கி விட்டது. ரியோவை விட்டு வெளியே வரும் பொழுது, அவளது கைகள் அவனது கைகளுடன் இணைந்தன. கொஞ்சம் தூரத்தில் பொன் மஞ்சளில் அலங்காரக் கந்தன், வடக்கு வீதி நோக்கி தேவிகளுடன் ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தார். அவளது தோழிகள், எதோ சாட்டு சொல்லிவிட்டு, வடக்கு வீதிக்கு சென்று விட்டார்கள். அவன் அங்கு இருந்த ஒரு நகைக் கடையில் தனது முதல் பரிசாக தங்கச் சங்கிலி வாங்கி, தானே அவள் கழுத்தில் போட்டு ரசித்தான்! அப்பொழுது, ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பது போல குறுகுறுப்பாக அவன் மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவனைத் தாக்கின. அவன் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவன் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பது போல பட்டது. அவன் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். ஆரணியை, அவளின் குறும்பு சேட்டையை, அவளின் அழகை, அவளின் கொஞ்சல் பேச்சை அவனால் மறக்க முடியவில்லை. அவன் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பது போல அவனுக்குப் பட்டது. இரவில் ஒன்றே ஒன்று .. மனதில் சென்றதேன் தேடி .. உனைத் தேடி .. நான் அலைந்ததேன் பறக்கும் பறவை நானோ .. விரியும் மலர்கள் நீயோ தேனே ... கரும்பே ..நீ யென் தேவி .. தேவி! உன் கண்கள் அலைய என் மனம் அலைய நான்...என் இதயத்தின் அருகே எரிகிறேன் என் இதயத்தை நீ எடுக்க அழகுக்கு பலியாக அழகான பெண்ணே காதலில் விழுகிறேன்! அவன் வாய் அவனை அறியாமல் பாடிக்கொண்டு இருந்தது! அவன் மீது படர்ந்த முதல் பெண் தீண்டல் [ஸ்பரிசம்] அவளுடையதே. இணைந்த கைகள் மெல்ல மெல்ல அவள் இடையை வருடின. அவளும் அவனை அணைத்தபடி நடந்தாள். அந்த நெருக்கத்தில் அவளின் மூச்சு காற்றோடு அவன் உறவாடினான். அவளது உள்ளங்கை வேர்வையை முதல் முதல் உணர்ந்தான். அவள் சுவாசம் புரிந்தது, அவள் வாசம் தெரிந்தது. அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்ந்தான். என்றாலும், தோழிகள் திரும்பி வர, இருவரும் நாளை சந்திப்போமென பிரிந்தனர். அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அருண் நல்லூர் ஒழுங்காக வந்தான். ஆனால் என்றுமே மிக எளிய சாதாரண பருத்தி வேட்டியும் பருத்தி வெள்ளை மேல் சட்டையுடன் மட்டுமே. என்றாலும் அவனின் நடை உடை பாவனை மற்றும் பேச்சு அவனை யார் என்று காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அவளுடன் அவன் பொழுது போனது. அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு பரிசு, அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அலங்காரப்படுத்தி அழகுபார்த்து அதில் ஒரு மகிழ்ச்சி அடைந்தான். அவளும் அவனுடன் நெருங்கி நெருங்கி பழகிக் கொண்டே இருந்தாள். முதலில் கொஞ்சம் திருவிழா, பின் கொஞ்சம் ரியோ, லிங்கம் என தோழிகளுடன் அவள் அவனை சந்தித்தாலும், அதன் பின் அவள் அவனுடன் மட்டும் தனியாக போய்விடுவாள். இருவரும் புது தம்பதிகள் போலவே நெருக்கமாக இருந்தார்கள். அவள் தினமும் வெவ்வேறு கண்ணைக் கவரும் உடையில் அவனுக்கு இன்பம் ஊட்டிக் கொண்டே இருந்தாள். அவனும் விலையுயர்ந்த உடைகள், மாலைகள், வளையல்கள் என அலங்காரங்கள் - அனைத்தும் திருவிழாக் கடைகளிலிருந்து வாங்க்கிக் கொடுத்துக் கொன்டே இருந்தான். அவள் எல்லாவற்றையும் ஏற்று, மேலும் மேலும் தன் நெருக்கத்தையும் கூட்டினாள். அவன் அவள் என்னுடையவளே என்ற மகிழ்வில், அவளுடைய அணைப்பில், சிரிப்பில், அழகில், கொஞ்சல் பேச்சில் தன்னையே இழந்து கொண்டு இருந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/31301211756194063/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.