Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3049
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    12678
    Posts
  4. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    11881
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/02/25 in all areas

  1. வினா 3) 89 ஒட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) ஏராளன் - 7 புள்ளிகள் 2)ஆல்வாயன் - 7 புள்ளிகள் 3)கிருபன் - 7 புள்ளிகள் 4)புலவர் - 7 புள்ளிகள் 5) வாதவூரான் - 7 புள்ளிகள் 6) அகஸ்தியன் - 7 புள்ளிகள் 7) நியூபேலன்ஸ் - 7 புள்ளிகள் 8) ரசோதரன் - 7 புள்ளிகள் 9) வீரப்பையன் - 7 புள்ளிகள் 10) சுவி - 6 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 5 புள்ளிகள் 12) கறுப்பி - 5 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் 14)வாத்தியார் - 3 புள்ளிகள் 15)வசி - 3 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 3, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  2. கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம். விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள். விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல. தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது. கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன. எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம். விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  3. எஸ்.வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே, கோஷான். விஜய்யின் காணொளியை பார்த்த பின், தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய முதலாவது விஷம் விஜய் என்று தான் தோன்றுகின்றது. சீமானும், சாதிக் கட்சிகளும் கூட விஜய்யை விட பல மடங்குங்கள் சமூகத்திற்கு ஆபத்தில்லாதவர்கள்.
  4. வங்காளதேசத்திலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்று எனக்கு முன்னரே ஒருவரும் சொல்லவில்லை..................... ஏதோ எட்டாவது அணியாக உள்ளே பிடித்துப் போட்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துவிட்டேன்....................😜. 'இன்று கறுப்பு பிட்சில் வெள்ளைப் பந்து போட்டார்கள்................' என்று கலர் கலராக காமெண்ட்ரி சொல்லும் வசீயின் காமெண்ட்ரி மிஸ்ஸிங்..............❤️.
  5. விஜய் இப்ப தான் கட்சி தொடக்கி இருக்கார். ஒரு தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை தேர்தலை எதிர்கொள்வதற்கான.... அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றார். ஆனால் இதுவரை அவரை ஒரு நடிகனாகவே மக்கள் அறிந்துள்ளார்கள் அரசியலில் எப்படிச் செயற்படுவார் என்பதை மக்கள் அவருடைய திரைப்படங்களை வைத்தே அளவிட்டுள்ளார்கள் இது உண்மையா? இல்லை அவர் சினிமா மூலம் மக்களை ஏமாற்றிருக்கின்றாரா? என்பது யாருக்கும் வெளிச்சம் இல்லை தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி. ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி. அது கொசுறு என்றால் கொசுறாகவே போயிடும். ஆனால் இவர்கள் விஜயை ஒரு பெரிய யானையாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள் எதற்காக ஒருவேளை எடப்பாடி யின் எதிர் வாக்குக்களை விஜய் பக்கம் திருப்பவா? தி மு க வை எடப்பாடியார் முந்தும் வேளையில் இந்த விளையாட்டால் விஜயால் எடப்பாடிக்கு ஆப்பா ? அதை உணர்ந்த எடப்பாடியார் விஜயை தன்னுடன் இழுக்க முயல்கின்றாரா ? அதற்கான மாமா வேலையை பா ஜ க பயமுறுத்தி செயல்படுத்த நினைக்கின்றதா ? இப்படிப் பல கேள்விகள் உள்ளது இந்தியா என்பது அரசியல் மாபியாக்கள் கூட்டணி எப்போதும் எதுவும் நடக்கலாம்
  6. பையா என்றும் நீங்கள் நலமுடன் வாழ்வீர்கள் .......இந்தத் துன்பமெல்லாம் கடந்து போய்விடும் ........ மனதை பலமாக வைத்திருக்கவும் . ........!
  7. நான் அந்த 100 பேர்களின் பெயர்களை இங்கே போட்டாலும், நீங்கள் அவர்களில் ஒருவர் விடாமல் ஏதோ சொல்லத்தான் போகின்றீர்கள். அதை உங்கள் தரப்பின் பார்வையாக எடுத்துக் கொள்கின்றோம். நீங்கள் திமுகவால் இறக்கி விடப்பட்ட 100 பேர்கள் என்று இவர்களைச் சொல்கின்றீர்கள். நான் அவர்களாகவே முன்வந்து தமிழ் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையில் இதைச் செய்கின்றார்கள் என்கின்றேன். நான் கூட அந்த அக்கறையினால் தான் விஜய்க்கும், அவரது நடவடிக்கைகளுக்கும் எதிராக என்னால் முடிந்த இடங்களில் என் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
  8. பையன் களத்தில் இப்படி சலிப்பாக எழுதியதை இப்ப தான் பார்க்கின்றேன் ❤️வீரப்பையன் விரையில் உடல்நலம் தேறி கலகலப்பாக வேண்டும்
  9. ஆர். பாலகிருஷ்ணன் திராவிடவியல் ஆய்வாளர் அடுத்து மூன்னாள் நீதியரசர் சந்துரு இவருடைய தீர்ப்புக்கள் பலதும் திராவிட கொள்கையின் அடிப்படையிலான தீர்ப்புகள் . ( நான் தீர்ப்புக்களை பிழை என்று கூறவில்லை. ) உதாரணம் 1.கோவில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம். 2.சாதி பாகுபாடு இல்லாமல்எல்லாருக்கும் ஒரே சுடுகாடு வேண்டும் அடுத்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை இவர் சிறு வயதிலேயே தி மு க ஆர்வலர் பின்னர் கம்யூனிஸ்ட் ஆக மொத்தம் கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று இறக்கி விடப்பட்ட இந்த தி மு க ஆதரவு செயற்பாட்டாளர்களால் எப்படி விஜயைக் குறை கூறாமல் இருக்க முடியும்
  10. பையனை மீண்டும் களத்தில் கணடது மகிழ்ச்சி.பையா எங்கே போயிருந்தீர்கள். இவ்வளவு நாளும்.
  11. மிகச் சரியான நடவடிக்கை. உண்மை எல்லோருக்கும் தெரியும். வெளிக் கொண்டு வரட்டும்.
  12. நான் கொஞ்சம் வேறு விதமாக யோசிக்கிறேன். சீமான் - நாள் 1 முதலே அவரது வலது கரமான தூஷண துரை இந்த ரூட்டைத்தான் பிடித்தார். அவர் வாங்கிய துட்டு விசுவாசமாக பேசிவிட்டார். சீமான் - முதலில் விஜையை தலைய தடவி அதன் மூலம் குறித்த சதவீத வாக்குகளை அபேஸ் பண்ண முடியுமா என பார்த்தார். ஆனால் விஜை அவரை விட பெரிய இடத்தோடு சம்பந்தம் பேச, டியூனை மாற்றுகிறார் அல்லது வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக இரு - இல்லை என்றால் விஜைக்கு கரூர், உனக்கு மேட்டூர் அல்லது புதூர் எதையோ ஒன்றை செட்டப் செய்வோம் என மிரட்டி இருக்க கூடும். எடப்பாடி - அவர் விஜையை சேர்க்க மாட்டார் என நினைக்கிறேன். இதுவரை விஜை மீது பிழை இல்லை என அவர் சொல்லவில்லை. அவரின் ஒரே டார்கெட் அரசை குற்றம் சொல்வதே. முடிந்தவரை விஜையை வைத்து திமுகவை அட்டாக் செய்து விட்டு, தேமுதிக, பாஜக, பாமக கூட்டணியில், அத்தனை திமுக அதிருப்தி வாக்குகளையும் தம் பக்கம் ஈர்ப்பதே அவர் நோக்கம் என நினைக்கிறேன். நயினாரின் பேச்சும் இப்படி அல்லது இதை விட நடுநிலையாகவே இருந்தது. இடையில் அமித் ஷா வேறு வகையில் முடிவு எடுத்தால் சில நேரம் விஜை உள்ளே வரக்கூடும். இதில் அதி பரிதாபங்கள் ஓபிஎஸ், தினகரந்தான். செங்கோட்டையந்தான். முதலில் அண்ணாமலை பேச்சை கேட்டு மோசம் போனார்கள். விஜையின் பஸ்சிலாவது ஜன்னலோரமாக சீட்டு பிடிக்கலாம் என நினைத்தால் - பஸ் குடைசாய்ந்து கிடக்கிறது😂.
  13. வ‌ர‌ வ‌ர‌ நீங்க‌ள் ஜ‌க்க‌ம்மாவை ம‌திக்கிறீங்க‌ள் இல்லை ஜ‌க்க‌ம்மா இந்த‌ போட்டியில் உங்க‌ளை கீழ‌ போட்டு மிதிக்க‌ போகிறா வீ காபுல் லொள்😁😁😁😁😁😁............................. ம‌க்க‌ளே பாருங்கோ இவ‌ர் எப்ப‌டி எல்லாம் ந‌டிக்கிறார் என்று போர‌ போக்கை பார்த்தால் வாய்க்கை வாழை ப‌ழ‌த்தை வைச்சாலும் க‌டிக்க‌த் தெரியாது என‌ சொல்லுவிங்க‌ள் போல் இருக்கு ஒருக்கா ச‌சிக‌லா அம்மையாருக்கு போன் போட்டால் தான் நீங்க‌ள் என் வ‌ழிக்கு வ‌ருவிங்க‌ள் ஹா ஹா..................ச‌ந்தோச‌ ப‌டுங்கோ அடுத்த‌ வ‌ருட‌ம் ச‌சிக‌லா அம்மையாரோட‌ உங்க‌ட‌ க‌ன‌வுக் க‌ன்னியும் சேர்ந்து வ‌ர‌க் கூடும் தேர்த‌ல் நேரம்🥰❤️😁.........................
  14. 👍.................... நான் கிரிக்கெட்டை மட்டுமே பார்ப்பதாக இருக்கின்றேன், பையன் சார்...................🤣
  15. @ரசோதரன் நாளைக்கு தென் ஆபிரிக்கா அழ‌கிய‌லும் இங்லாந் அழ‌கிய‌லும் விளையாடுகின‌ம்................க‌லிபோனியா நேரம் காலை 7ம‌னிக்கு இர‌ண்டாவ‌து இனிங்சை நீங்க‌ள் பார்க்க‌லாம்😍👍................. தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் இந்தியா ம‌க‌ளிர் இங்லாந் ம‌க‌ளிரின் அழ‌கை பார்த்து ர‌சிக்க‌லாம் இந்த‌ உல‌க‌ கோப்பையில்❤️🥰😁👍.........................
  16. நான் வங்கதேசம் தான் மிகக் குறைவான ஓட்டங்கள் எடுப்பார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். அக்கம்மாவும், ஜக்கம்மாவும் கைவிடமாட்டார்கள்............... வங்கதேசம் ஏதாவது ஒரு போட்டியில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கத்தான் போகின்றார்கள்...................😜.
  17. நான் என்றால் அது அவளும் நானும் படம் . சூரியகாந்தி
  18. PAK-W 129 BAN-W (3/50 ov, T:130) 7/0 BAN Women need 123 runs from 47 overs.
  19. கடலில் விழுந்ததோர் காக்கை ......... t .r மகாலிங்கம் .........! 😘
  20. ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி புதன், 01 அக்டோபர் 2025 06:51 PM யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடல் பாசி உற்பத்தி மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்ற பெருநம்பிக்கை தனக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் முன்னெடுக்கப்படும் கடற்பாசி உற்பத்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் லக்ஸ்மன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி கடற்பாசி உற்பத்தி தொடர்பிலான பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாகவும் , அதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் , இந்த கடற்பாசி உற்பத்தி மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இதொரு வலுவான வழியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். https://jaffnazone.com/news/50895
  21. @ஈழப்பிரியன் முத‌ல‌மைச்ச‌ருக்கு வாழ்த்து சொல்வ‌தை நிறுத்தி விட்டிங்க‌ளா அண்ணா😁.............................
  22. இன்று பாகிஸ்தான் வங்காளதேசதுக்கு இடையிலான போட்டி இன்று வங்காளதேசம் வெற்றி பெற்றால் ஏராளன் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைப்பர். பாகிஸ்தான் வென்றால் ஆல்வாயன் முதலிடம் பெறுவார். இறுதி இடத்தில் வசி தொடர்ந்து இருப்பாரா? அல்லது வாத்தியார் இறுதி இடத்துக்கு தள்ளப்படுவாரா?
  23. இலங்கைக்கு வருகைதரும் இந்தியர்கள் இலங்கை வரும்போது சில்லறை பொருட்கள், புடவை, பட்டுதுணிகள், வேட்டி, இத்தியாதி, இந்திய உற்பத்திகளை இலங்கையில் விற்பது முன்னைய காலங்கள் தொடக்கம் நடைபெற்றே வந்தது. இவர்கள் சாதகம், கைரேகை பார்ப்பது மட்டுமன்றி, தமது அமைப்புக்கள் சார்பான பிரச்சாரங்களும் செய்வார்கள். நான் சிறுவயதில் எனது தாயாருடன் இவர்கள் தங்கிநிற்கும் கோயில் மடங்களுக்கு சென்றுள்ளேன். சூட்கேசுகளில் புடவைகள் தொடக்கம் விற்பனைக்கு வைத்துள்ள பலவித பொருட்களை காண்பிப்பார்கள். எவசில்வர்/சில்வர் தட்டுக்கள், குவளைகள் என பல்வற்றையும் வாங்குவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் இவர்களிடம் வரும். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆட்களும் வருவார்கள். 1983 பிரச்சனைகளுடன் இவர்களின் வருகை நின்றுவிட்டது என நினைக்கின்றேன். இப்போது மீண்டும் இலங்கை - இந்திய பயணங்கள் இலகுவாக்கப்பட்டு உள்ளதால் முன்னைய காலம் திரும்புகின்றது.
  24. பையன் சார், உங்களை ஒரு சின்ன இடைவெளியின் பின் மீண்டும் இங்கே காண்பதில் மிகவும் சந்தோசம்............❤️. நல்ல அழகான பிள்ளையார் படம்........... அவர் அப்படியே தன்னைப் போலவே உங்களையும் யாழ் களத்தில் என்றும் அமரவைக்கட்டும்............. 🤣.................. ஜக்கம்மா எதிர் அக்கம்மா................. அக்கம்மா அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஜக்கம்மாவின் சொந்தம்..............
  25. இவர்கள் பெங்களூரில் இருந்து கிளம்புமுன் தத்தமது ஜாதகத்தைக் கணித்திருக்க வேண்டும் ...........! 😇
  26. இன்று வந்த இந்த மயக்கம் ......... சசிகுமார் & ஜெயகுமாரி .........! 😍
  27. தலைவன் எனப்படுகின்றவன் எல்லாருக்கும் முன்னே செல்ல வேண்டியவன், கோழை மாதிரி பயந்து மூன்று நாட்கள் ஒழிந்து இருந்து விட்டு மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோவில் வந்து நடிப்பவன் அல்ல.
  28. எதோ மனிதன் பிறந்து விடடான் அவன் ஏனோ மரம்போல் வளர்ந்து விடடான் நாயாய் மனிதன் பிறந்திருந்தால்நன்றி என்னும்குணம் நிறைந்திருக்கும் நரியை உருவெடுத்தாலும் தந்திரமாவது தந்திரமாவது இருந்திருக்கும். காக்கை குலமாய் அமைந்திருந்தாலே ஒற்றுமையாவது நிலைத்திருக்கும்
  29. பையா நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது மிகமிக மகிழ்ச்சி.
  30. யாருமில்லை இங்கே ......... ஜெயசித்ரா & சிவகுமார் .......!
  31. ஏண்டா மனுசன் ஏய்க்கிறான் .......... ஜோதிலட்சுமி & வெ .ஆ .நிர்மலா .........! எஸ் . எஸ் . ஆர் . .....! 😍
  32. “ஏக்கிய இராச்சிய” அரசியலை முன்னெடுத்த தமிழ் அரசியல் வாதிகள் வெளிப்படையாகவோ உண்மையாகவோ இருக்கவில்லை. நாங்கள் இலங்கையில் நடக்கின்ற அரசியல் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். (விஜய்க்கும் சீமானுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எங்கள் அரசியலுக்கு நாங்கள் கொடுப்பது இல்லை என்று ஒரு கவலை)
  33. படம் : இதயத்தில் நீ ( 1963 ) யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன தெரிவது என்றும் தெரியவரும் மறைவது என்றும் மறைந்து விடும் யார் சிரித்தால் என்ன இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம் நீரில்தோன்றும் நிழல்கள்போல நிலையில்லாமல்போகலாம். பூந்தென்றல் புயலாக மாறலாம் பொன் வெயில் நிலவாக மாறலாம் வருவது ஒன்று பிரிவது ஒன்று மெய்யன்பு பொய் என்று தோன்றும்போது
  34. என் ஆசை என்னோடு ...........! 😍
  35. உங்களின் மனநிலையில்தான் பலர் இருப்பார்கள். பல காலத்துக்கு பின், திமுக வை ஓரம்கட்டி, அதேவேளை ஓரளவு திராவிட, தமிழ்தேசிய அரசியலை முந்தள்ள கூடிய ஒரு புதிய சக்தி, ஆரம்பமாக முதலே அணைந்து விட்டது போலவே படுகிறது. வேஸ்ட்டு பெலோ பொருத்தமான வார்த்தைதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.