Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3043
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    20007
    Posts
  3. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    10705
    Posts
  4. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    1483
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/06/25 in all areas

  1. காட்சி 4 (வீட்டில் எல்லோரும் இருந்து கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.) தட்சணாமூர்த்தி: பாரதம், உன்னை இங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. அக்கம்பக்கத்து ஆட்கள் கூட உன்னைப் பார்க்க அடிக்கடி வருகினம். நீ பேசாம உன்னுடைய வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு வந்து, இங்கே பக்கத்திலயே இருந்திடன். அமிர்தம்: அப்படியெல்லாம் இருக்க முடியாது. அவையளுக்கு எவ்வளவு வேலை இருக்கும், உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. பார்வதி: வயது போன காலத்தில என்ன பெரிய வேலை இருக்குது? பெரியம்மாவிற்கு அப்படி ஒரு வேலையும் இல்லை. இங்க வந்து எங்களோட இருக்கலாம். அமிர்தம்: பெரியம்மாவோ? லக்‌ஷனா: உங்கட அக்கா அம்மாவிற்கு பெரியம்மா, எனக்கு பெரிய அம்மாச்சி. அமிர்தம்: எங்க போய் முடியப் போகுதோ தெரியவில்ல............. பாரதம், நீ ஏதாவது வாய் மலரன். அள்ளவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் நான் மாட்டுப்பட்டு நிற்கிறன். (அயலவர் இருவர் – கனகா, சசி - உள்ளே வருகிறார்கள்.) அமிர்தம்: என்ன ரெண்டு பேரும் ஒன்றாக வாறீயள். முந்தி வருந்தி அழைச்சாலும் வரமாட்டியள், ஒரே வேலை என்று பாடுவியள், இப்ப ஓடி ஒடி வாறீயள்................. கனகா: அமிர்தம் மாமிக்கு எப்பவும் தமாஷுதான்.................. அமிர்தம்: என்னைப் பார்த்தா உனக்கு கோவை சரளா மாதிரி தெரியுதே............ ஒரே தமாஷு என்கிறாய். நான் கோபமா இருக்கிறன் ஆக்கும்..................... சசி: ஏன் மாமி கோபப்படிறியள்? பாரதம் மாமியிட்ட கேட்டால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லுவா..................... தட்சணாமூர்த்தி: சசி, பிரச்சனையே பாரதம் மாமிதான்................ நாங்கள் எல்லாரும் அவவை இங்க வந்து இருக்கச் சொல்லுறம், அமிர்தத்திற்கு அதில அவ்வளவு உடன்பாடில்லை. கனகா: பாரதம் மாமி என்ன சொல்லுறா? பார்வதி: அவ ஒன்றும் பேசாமல் இருக்கிறா................. அம்மா வெருட்டி வைச்சிருக்கிறா போல இருக்குது. அமிர்தம்: சும்மா இருங்கோடி........ நானே வெருண்டு கிடக்கிறன்.......... இதுக்குள்ள வெருட்டி வைச்சிருக்கிறன், வெடிகுண்டு வைச்சிருக்கிறன் என்று நீங்கள் வேற. லக்‌ஷனா: பெரிய அம்மாச்சி, நீங்கள் என்ன சொல்லுறியள்................ பாரதம்: நான் இங்க நிரந்தரமாக வந்திருக்கிறது கொஞ்சம் சிரமமான விசயம், நீங்கள் எல்லாம் அங்க வரத்தானே போறீர்கள். அமிர்தம்: அவவின்ட இடத்திற்கு போறதிற்கு அவசரப்படாதேங்கோ............. ஆறுதலா போகலாம்................. பார்வதி: ஏன் ஆறுதலாக போகவேணும்........... இப்பவே போவம். அமிர்தம்: இவள் ஒருத்தி.......... எனக்கு சுடுமென்றா கொள்ளிக் கட்டையை எடுத்து தன்ரை குடுமியிலயும் செருகுவாள்............... தட்சணாமூர்த்தி: சரி, சரி இதுக்காக ஒருவரும் வாக்குவாதப்பட வேண்டாம். பாரதம் போகும் போது நாங்களும் போய் பார்த்திடுவம். சசி, நீ ஏதும் அலுவல் கதைக்க வந்தனியே...................... சசி: அலுவல் என்று ஒன்றும் இல்லை மாமா. பாரதம் மாமி சொன்ன மாதிரியே செய்தனான், பிள்ளை உடனேயே சுகம் ஆயிட்டான், அதுதான் மாமியிட்ட சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தனான். (அமிர்தம் பாரதத்தை முறைக்கிறார்.) அமிர்தம்: அவன் பிள்ளை சுகமாயிட்டான் என்று அப்பவே அவவுக்கு தெரியும். சசி: எப்பவே தெரியும்............. அமிர்தம்: எப்ப தெரிய வேணுமோ அப்பவே தெரியும். உனக்கும் எனக்கும் தான் ஒன்றும் தெரியாது................ அப்படியும் சொல்ல இயலாது.......... எனக்கென்டாலும் கொஞ்சமாவது தெரியுது. லக்‌ஷனா: என்ன அம்மாச்சி, முந்தி எல்லாம் தெரியும், உங்கள விட்ட ஆளில்ல என்று சொல்லுவீங்கள். இப்ப நல்லா அடக்கி வாசிக்கிறீங்கள்? தட்சணாமூர்த்தி: பிள்ளை, சும்மா சும்மா கேள்வி கேட்காதே. பிரசர் பூதத்தை கிளப்பி விடுவா................. கனகா: பாரதம் மாமி, பிரசருக்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியும் தானே. அமிர்தம் மாமிக்கு ஒருக்கால் பார்த்து விடுங்கோவன்................. பாரதம்: அவ படிச்ச டொக்டரிட்ட மட்டும் தான் போவாவாம். நான் பார்க்கக்கூடாதாம். பார்வதி: படிச்ச வந்த டொக்டர் எல்லாம் அம்மாவை பார்த்தால் அடிச்சு பிடிச்சு ஊரை விட்டே ஓடுறாங்கள். தட்சணாமூர்த்தி: ஏன் பிள்ளை பாரதம், உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குது, நீ என்ன படிச்சனி? பாரதம்: எல்லாம் ஒரு அனுபவம் தான், மற்றபடி சாதாரண படிப்புத்தான். தட்சணாமூர்த்தி: என்னுடைய வீட்டுக்காரியும் நிறைய அனுபவம் உள்ளவள்தான், ஆனா ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.................. அமிர்தம்: இங்க ஒன்றும் மிஸ்ஸிங் இல்ல. மனிசருக்கு இருக்கிறது எல்லாம் எனக்கும் இருக்குது................... தட்சணாமூர்த்தி: அப்ப பாரதத்திற்கு மட்டும் எப்படி எல்லாம் தெரியுது? அமிர்தம்: ஐயோ, என்னைக் கேள்வி கேட்காதேங்கோ............. எனக்கு தலயை சுத்திக்கொண்டு வருது........... கண்கூட கொஞ்சமா இருட்டுது.......... யாராவது என்னப் பிடியுங்கோ, நான் விழப்போகிறேன்................... (எல்லோரும் பதறிப் போய் அமிர்தத்தை பிடிக்கிறார்கள்.)
  2. ஒரு சிலர் பதில் சொல்லாமல் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருப்பார்கள் . சுமந்திரன் அவர்கள் ஆடிய ஆட்டத்தினால் தான் கடந்த தேர்தலில் மக்களால் தமிழர்களின் அரசியல் மேடையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கும் என்று ஏற்கனவே அவதானமாக இருந்த சுமந்திரன் தமிழரசு கட்சியை தன வசப்படுத்தி இப்போதும் பின் கதவால் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார் எத்தனை தரம் தேர்தலில் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கு இனிமேல் தேசியப்பட்டியலைத் தவிர வேறு வழியில்லை அதனால் தான் இப்போது கிழக்கில் சாணுக்கு முழம் போடுகின்றார் சரி அய்யா ஜஸ்டின் அவர்களே சுமந்திரனால் தமிழர்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களை நீங்களே ஒரு பட்டியலில் தாருங்களேன்
  3. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 01 / 'அறிமுகம்' தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், மற்றும் இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) போன்ற இலங்கையின் பண்டைய காலவரிசைப்படி [Sri Lankan chronicles such as The Dīpavamsa, Mahāvaṃsa, Cūḷavaṃsa, and Rājāvaliya] நிகழ்வுகளை பதிவு செய்த புராண நூல்களின் அடிப்படையில், சிங்கள பௌத்தர்கள் தங்களை இலங்கைத் தீவின் உண்மையான உரிமையாளர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். எனவே தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற அந்த நூல்களின் வழியாகச், உண்மையை அறிவியல் ரீதியாகவும் சான்றுகள் ரீதியாகவும் அலசி, நியாயமான காரணங்களைக் கண்டறிவதே இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாகும். மேலும் பல புத்தகங்கள் இன்று இருந்தாலும், நேரத்தையும் இடத்தையும் மிச்சப்படுத்த இந்த மூன்று பண்டைய முதன்மை புத்தகங்கள் மட்டுமே இங்கு கருத்தில் எடுக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் அவையின் தொடர்ச்சியே அல்லது பிரதிகளே, என்றாலும் சில சில கூடுதல் சேர்த்தல் அல்லது விடுபட்டலுடன் எழுதப்பட்டவை ஆகும். சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், பிக்குகள் (புத்த குருமார்கள்) மற்றும் கல்வியாளர்கள், 1920 களில் இருந்து, இலங்கையின் உண்மையான வரலாற்றின் நூலே மகாவம்சம் என மேற்கோள் காட்டி, பண்டைய இலங்கைத் தமிழர்களின் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள். தீபவம்சமும் மகாவம்சமும் விஜயனின் புராண வருகையிலிருந்து மகாசேனன் (பொ.பி. 277 - 304) மன்னனின் ஆட்சியின் இறுதி வரை ஒரே எண்ணிக்கையிலான மன்னர்களை உள்ளடக்கி உள்ளது. என்றாலும் இங்கு சம்பந்தப்பட்ட காலம், மகாவம்சத்தின்படி சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டுகள் மற்றும் தீபவம்சத்தின்படி எண்ணூற்று முப்பத்தேழு ஆண்டுகள் ஆகும். எனவே அந்த வேறுபாடு ஒரு பிரச்சனையும் இல்லை. மேலும் இராசாவலிய நீண்ட காலத்தை உள்ளடக்கியிருந்தாலும், மன்னன் மகாசேனனனின் ஆட்சியின் முடிவு மட்டுமே இங்கு நாம் கவனம் செலுத்த உள்ளோம். சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) என்பது மகாவம்சத்தின் தொடர்ச்சி ஆகும். இதுவும் பாளி மொழியில் தான், சிங்கள மொழியைத் தவிர்த்து எழுதப்பட்டது ஆகும். இந்நூல், கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி குறிப்பிடுகிறது. எனவே இங்கு ஆழமாக அது அலசப்பட மாட்டாது. என்றாலும் அது தேவைப்படும் போது அல்லது பொருத்தமானதாக இருக்கும் போது, அதுவும் கவனிக்கப்படும். எனவே தீபவம்சம் மற்றும் மகாவம்சம் மற்றும் அதே காலகட்ட இராசாவலியில் மட்டுமே முதன்மையாக இங்கு கவனம் செலுத்தப்படும். தீபவம்சம் கிருஸ்துக்கு பின் நான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாவது பகுதியில், பெயர் அறியப்படாத எழுத்தாளரால் தொகுக்கப்பட்ட நூலென நம்பப்படுகிறது. அதேவேளை, தீபவம்சம் தொகுக்கப்பட்டு சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் மகாவம்சம், மகாநாமா தேரர் என்ற ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தீபவம்சம் கொச்சை பாளி மொழியிலும் மகாவம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாளி வசனங்களிலும் உள்ளது. உண்மையில், மகாவம்சமானது தீபவம்சத்தை ஒரு சிறந்த இலக்கிய பாணியுடன், விரிவுபடுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்டு, மறுசீரமைத்த, அதே நேரம் பல கதைகளை அல்லது வேறுபாடுகளை புகுத்திய ஒரு நூல் என்றும் கூறலாம். தீபவம்சத்தில் முக்கியமானவர்கள் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தேவநம்பிய தீசன் மற்றும் மகிந்த தேரர் ஆகியோர் காணப்படுவதுடன், அங்கே ஒப்பற்ற மன்னனாக எல்லாளன் காணப்படுகிறார். இருப்பினும், மகாவம்சத்தின் முக்கிய ஆளுமை உள்ளவராக துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி இருப்பதுடன், இங்கும் எல்லாளனை சிறந்த முறையில் சித்தரிக்கப் படுகிறது. என்றாலும் எல்லாளனை, துன்மார்க்கமாக அல்லது தீய நெறியில் ஆட்சி செய்ததாக இராசாவலிய கூறுகிறது. இராசாவலிய சமீபத்திய 17 ஆம் நூற்றாண்டு வரலாற்று தொகுப்பாகும். மேலும் இது விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் (கி பி 1701) எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது, சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பகுப்பாய்வின் நோக்கம், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று நாளாகமங்களின் தொனி மற்றும் உள்ளடக்கங்கள் [tone and contents], தீபவம்சத்தில் உள்ள தூய பௌத்த ஆர்வம் அல்லது விருப்பத்திலிருந்து, ராஜவலியத்தில் காட்டப்பட்டுள்ள தமிழர்களின் இறுதி வெறுப்புக்கு எவ்வாறு மாறின என்பதைக் காண்பிப்பதாகும். மகாவம்சம் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டு காலப்பகுதியில், அதாவது சுமார் 300 கி.பி. முதல் 1700 கி.பி. வரை, இரண்டிற்கும் இடையில், தொனியின் மாற்றத்தின் அறிகுறியை வெளிப்படையாக காட்டுகிறது. எனவே இங்கு எமது முக்கிய நோக்கம், இவ்வற்றை, அங்கு காணப்படும் உண்மையை அலசுவதேயாகும் அல்லது வெளிப்படுத்துவது ஆகும். தீபவம்சமும் மகாவம்சமும் அத்தியாயங்களாகவும் அத்தியாயங்கள் செய்யுள் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தீபவம்சம் 1-1 தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இன் செய்யுள் வசனம் 1 ஐக் குறிக்கிறது. அது ; "புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததையும், புத்தரின் நினைவுச்சின்னம் மற்றும் அரச மர [போதி மர] கிளை இலங்கைக்கு கொண்டுவந்ததையும், மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடுகளையும், தீவில் நம்பிக்கையைப் பரப்புதலையும், மனிதர்களின் தலைவரின் வருகையையும் அவ்வாற்றின் வரலாற்றையும் நான் முன்வைப்பேன்." என்கிறது. மகாவம்சத்திலும் இதே போன்ற அமைப்பே உள்ளது. இந்த முதன்மை மூன்று நாளேடுகளிலும் அவற்றின் உண்மைத்தன்மை, வரலாற்று மதிப்பு மற்றும் அவற்றுக்கிடையேயான ஒவ்வுமை அல்லாது இசைவு ஆகியவற்றினை ஒப்பிடப்பட்டு, வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கீழே என் கருத்துக்களை நேர்மையாக பதியவுள்ளேன். Part: 01 / 'Introduction' Sinhala Buddhists claim themselves as the rightful owners of the island of Lanka based on their ancient chronicles like the Dipavamsa, the Mahavamsa, the Culavamsa, and the Rajavaliya etc. It is intended to go through the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya to see any valid reasons with consistent narratives for the rightful ownership of Lanka to the Sinhala Buddhists alone. There are other books too, but only these three books are considered here to save time and space. The Sinhala Buddhist politicians, monks (bikkhus) and academicians played havoc in the life of Tamils since 1920s citing the Mahavamsa as the beginning and the continuation of the true history of Ceylon. The Dipavamsa and the Mahavamsa cover the same number of kings, from the legendary arrival of Vijaya to the end of the reign of the king Mahasena. The period involved is about eight hundred and thirty five years as per the Mahavamsa and eight hundred and thirty seven years as per the Dipavamsa. Though the Rajavaliya covers longer period, the focus will be limited to the end of the rule of the king Mahasena. The Culavamsa is the continuation of the Mahavamsa and therefore will not be deeply analysed here but we may refer to it when it is necessary or relevant. The focus will be therefore on the Dipavamsa and the Mahavamsa, and the same period in the Rajavaliya. The Dipavamsa is the earliest and believed to be compiled between the beginning of the fourth century A. D. , and the first third of the fifth century A. D., and by an unknown author. The Mahavamsa is compiled about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa, and Mahanama is the author. The Dipavamsa is in crude Pali language, but the Mahavamsa is in choice Pali verses. The Mahavamsa is conscious and intentional rearrangement of the Dipavamsa with a better literary style with much enlarged and enriched details, whether factual or not. The important personalities in the Dipavamsa are Devanampiya Tissa and Mahinda Thera. The incomparable monarch as per the Dipavamsa is Elara. However, the prominent personality in the Mahavamsa is Dutthagamani. The Mahavamsa also depicts Elara in excellent terms. The Rajavaliya, however, says Elara ruled wickedly. The Rajavaliya is a very recent compilation, and covers the period from the legendary arrival of Vijaya to the end of the reign of Wimala Dhamma Suriya (1701 A.D.). The aim of the analysis is to show the transition of the tone and contents of the three chronicles of the same period from the pure Buddhist interest or desire in the Dipavamsa to the ultimate hatred of the Tamils shown in the Rajavaliya. The Mahavamsa is falling in between the two over the period of about one thousand and four hundred years, from, say, about 300 A. D. to 1700 A. D. The Dipavamsa and the Mahavamsa are divided into chapters and the chapters are divided into verses. Two numbers separated by hyphen are used to refer to a particular verse in a particular chapter. Thus, 2-7 makes reference to the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses 36 to 39 of the chapter 4. Dipavamsa 1-1 refers the verse 1 of the chapter 1 of the Dipavamsa; ”I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. Similar reference is adopted for the Mahavamsa too. The Rajavaliya is not in the metric form, and the previously mentioned reference is not applicable. Summaries of the Dipavamsa, the Mahavamsa and the Rajavaliya are given separately as Appendixes to this chapter, which may be referred for specific and greater detail. All the three chronicles are compared, contrasted and commented below for their truthfulness, the historical value, and the consistency among them. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 02 தொடரும் / Will follow
  4. இயற்கையே ஏன் இந்தக்கோபம்! *************************************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்ணம் கொண்டான். அடை மழை கட்டி வானம்-"டித்வா" அடித்தது புயலாய் நாட்டில் பெரு வெள்ளம் உட்புகுந்து பிரளையம் ஆச்சே வீட்டில். வயலெல்லாம் குளமாய் போச்சு வருமானம் அழிந்தே போச்சே கனவெல்லாம் கலைந்து போச்சு கண்ணீரும் மழை நீராச்சே. மலையெல்லாம் உருண்டுவந்து மண்மூடி உயிர்கள் போச்சு குளம் குட்டை ஆறு எல்லாம் நிலம் மூடி கடலாய்யாச்சே பார்க்கின்ற இடங்களெல்லாம் பரிதவிக்கும் மக்கள் கூட்டம் இயற்கையின் கோபத்துக்கு எவன் தானோ? குற்றவாளி. எதிர்க் கட்சி வாதமெல்லாம் இந்நேரம் தேவையில்லை அழிவினிலிருந்து நாட்டை அனைவரும் காப்போம் வெல்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  5. நல்லாத்தான் போயிட்டிருக்கு...தட்சணாமூர்த்தியை கண்டதும் ..பாரதம் ....பூவுலகிலேயே..தங்கிவிட யோசித்திட்டாவோ.......இல்லாத பிரசரை அமிர்தத்துக்கு குடுத்து...தன்னுடைய கணவனிடம் அனுப்பி அவரை பழிவாங்க நினைக்கிறாவோ...நல்ல சுவராசியமாக போகுது ..கொண்டுபோங்கோ தொடர்ந்து..
  6. அய்யா மன்னிச்சுக்கோங்க....கிழுக்கட்டை ...இல்லை கொழுக்கட்டைதான் ...உந்த இந்திய கிரிக்கட்டை விடியப்பறம் மூன்று மணிக்கு பார்க்கும்போது எழுதினது...அதுதான் கொழுக்கட்டை ...கிழுக்கட்டையாகி விட்டது ...சாரி சார்
  7. கடைசியில ஒரு மாதிரி காசு கொடுத்து ஒரு ஆறுதல் பரிசு வாங்கியாச்சாம்
  8. புலர் அறக்கட்டளையால் 5ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 2
  9. உலகம் முழுவதும் பிரித்தானியா அடாத்தாக அந்த மக்களைக் கொலை செய்து கொள்ளையடித்து இன்னமும் பல நாடுகளிடம் கப்பம் வாங்கிக் கொண்டிருக்கும் நாட்டிலிருந்து அந்தந்த மக்கள் தமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.
  10. இவர் தானோ தையிட்டி விகாரையைப் பார்த்துவிட்டு வந்து அங்கே சகல கட்டடங்களும் சரியாகவே கட்டப்பட்டுள்ளன என்றார். அடுத்த ஒரு மாதத்தில் பதவி உயர்வு வந்ததாக சொன்னார்கள். இவர் தான் அவரோ தெரியவில்லை.
  11. சொக்கப் பனையாகத்தான் இருக்க வேண்டும். ஆண்பனையின் பூவை எரித்து கரியாக்கி செய்வார்கள்.
  12. அது சரி, அது என்ன பெட்டிக்கடை சமாச்சாரம்? எதற்கெடுத்தாலும் பெட்டிக்கடையை மறக்க முடியாமலுள்ளது உங்களுக்கு. என்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு நான் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஒருவேளை நீங்கள் கடந்து சென்றீர்களோ தெரியவில்லை. நிதானமாக மீண்டும் சென்று பாருங்கள். ஒரு தலைப்பில் கேள்வி கேட்பீர்கள், பின்னர் வேறு தலைப்புகளுக்கு மாறி குடைவீர்கள், அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதிவுகள் எப்படியானவை என்பது வாசகர்களுக்குத்தெரியும், நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. சாணக்கியன் சிங்களகட்சியில் இருக்கும்போதுதான் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டார்கள், சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதியென்று பாராளுமன்றத்தில் இருக்கும்போதுதான் தாங்கள் கொன்றுகுவித்த மக்களின் தொகையை குறைத்து மஹிந்த அரசு கூறியது, அப்போ இந்த சுமந்திரனும் சாணக்கியனும் கேள்வி கேட்டார்களா? விமர்ச்சித்தார்களா? இயற்கையழிவு, யாரும் வெளியே வரமுடியாதநிலை, அழிவு ஒரு மாகாணத்தில் மட்டுமா நடந்தது? ஆளணி பத்தாது எல்லாவறையும் உடனடியாக கணக்கிடுவதற்கு, தமக்கு கிடைக்கும் தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள், உதவி வேண்டி கோரிக்கை வைக்கப்படுகிறது, மீட்ப்புப்பணி தங்களிடமுள்ள வளங்களை வைத்து தொடர்கிறது, விமர்ச்சிக்கும் நேரமா இது? ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி விமர்ச்சித்துக்கொண்டிருப்பாரா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பாரா? அவர் தமிழ் மக்களுக்கு நன்மை செய்திருந்தால் ஏன் மக்கள் அவரை நிராகரித்தனர்? கௌரவமாக வெளியேறாமல் ஏன் குறுக்கு வழி தேடுகிறார்? இவர் என்னதான் விமர்ச்சித்தாலும் இவரை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை, இவர் ஒரு வாய்ச்சவடால். அப்படியேதுமிருந்திருந்தால் என்னை வம்புக்கிழுக்குமுன் அந்த பட்டியலை இணைத்திருப்பார். பாவம் அவர், சுமந்திரனின் மேலுள்ள அனுதாபம் அப்படி அழுக்காறை கொட்டித்தீர்க்கிறார், அவரது குறைகளை சுட்டிக்காடுபவர் மேல்.
  13. புலவரே, நான் தமிழர் இல்லாவிட்டால் வேற என்னவாம்.....................🤣. இதை நான் தான் எழுதினேன்.............. கொழுக்கட்டைகளை அருகில் வைத்துக் கொண்டு ஒரே மூச்சில் எழுதியது இது................. பச்சை தமிழன் ஆக்கும்................🤣.
  14. நான் மட்டும் குழம்பவில்லை, ஊர் உலகத்தில் என்னைப் போலவே அண்ணன்மார்களும் இருக்கின்றார்கள் என்று சந்தோசமாக இருக்கின்றது...................😜. சொக்கப்பனை = சொக்கனின் பனை என்கின்றார்கள்............. கொழுக்கட்டை கிடைக்கும் என்றால், பனை பானை சொக்கன் சொர்க்கம் எப்படிச் சொல்லச் சொல்லுகின்றார்களோ அப்படியே சொல்லிவிடுவம்.....................🤣.
  15. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 57 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 57 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'ஐந்து தமிழ் மன்னர்களும் எதிர்க் கடற்கரையைச் சேர்ந்தவர்களா?' காக்கவண்ணனின் மகன் அபயாவைப் பற்றிய தீபவம்ச தகவல்களில், மகாநாம மகிழ்ச்சியடையாமல் இருந்திருக்கலாம்? இதனால், அவர் மகாவம்சத்தில் பல கூடுதல் விவரங்களை விரிவுபடுத்தி சேர்த்தார் மற்றும் புதியவைகளை கற்பனையில் கண்டுபிடித்து சேர்த்தார் என்று நம்புகிறேன். தீபவம்சத்தில் 18 - 53 முதல் 54 வரையிலான இரண்டு வசனங்களில் மட்டுமே அபயா அரியணை ஏறுவது பற்றி கூறப்பட்டு இருந்தது; இருப்பினும், மகாவம்சம் அதை நான்கு அத்தியாயங்களாக விரிவுபடுத்துகிறது, 22 முதல் 25 வரை, அபயாவின் பிறப்பு முதல் எல்லாளனை வென்றது வரை முந்நூற்று அறுபத்தைந்து வசனங்களைக் கொண்டுள்ளது. தீபவம்சம், 18-53, இளவரசர் அபயா [Abhaya] (துட்டகாமினி) காக்கவண்ணாவின் மகன் என்று கூறுகிறது, அதேசமயம் மகாவம்சம் அவரை கக்கனவண்ணனின் உயிரியல் மகன் அல்ல என்று விவரிக்கிறது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், தமிழ் சிப்பாய் ஒருவரின் தலையை வெட்டப் பயன்படுத்தப்பட்ட வாளில் இருந்த, இரத்தக் கறை படிந்த நீரைக் குடித்த விகாரமகாதேவியின் மகாவம்ச கதை, தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. அது மட்டும் அல்ல, தீபவம்சத்தில் இளவரசன் அபயாவின் தாயாகக் கூட விகாரமகாதேவி குறிப்பிடப்படவில்லை. துட்டகாமினி இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். 18 -54 பார்க்கவும். அத்தியாயங்கள் 19 மற்றும் 20 ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகவும் மற்றும் கலந்தும் இருக்கின்றன. எனவே, இரண்டையும் ஒன்றாகச் சுருக்கமாக இங்கு தருகிறேன். மன்னன் (துட்டகாமினி) விலையுயர்ந்த அரண்மனையை கட்டினான். மேலும் இந்தியாவிலிருந்து பதினான்கு தேரர்களை சம்பிரதாயமாக அடித்தளம் அமைப்பதற்காக அழைத்தான். அவர்களின் பெயர்கள் இந்தகுட்டா(1), தம்மசேனா(2), பியதாசி(3), புத்தர்(4), தம்மம்(5) சம்கா(6), மித்தனா(7), அனத்தனா(8), மகாதேவா(9), தம்மரக்கிதா(10), உத்தரா(11), சிட்டகுட்டா(12), இந்தகுட்டா(13), சூரியாகுட்டா(14) ஆகும். [Indagutta(1), Dhammasena(2), Piyadasi(3), Buddha(4), Dhamma(5) Samgha(6), Mittana(7), Anattana(8), Mahadeva(9), Dhammarakkhita(10), Uttara(11), Cittagutta(12), Indagutta(13), and Suriyagutta(14)] தீபவம்சம், 18-47, சேனா மற்றும் குட்டா [Sena and Gutta] ஆகியோர் தமிழ் இளவரசர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே குட்டா என்பது தமிழ்ப் பெயர். பதினான்கு பிக்குகளில் நால்வரின் பெயர் ‘குட்டா’ என்று முடிகிறது. எனவே அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும்? அதுமட்டும் அல்ல, மகாதேவா என்பது தமிழர்களிடையே மிகவும் பொதுவான பெயர். சேனா என்பது தமிழ்ப் பெயர்களின் பொதுவான முன்னொட்டு; சேனாதிராஜா, ராஜசேனன், சேனாவரையர் [Senathirajah, Rajasenan, Senavaraiyar] போன்றவர்கள். எனவே தம்மசேனாவும் தமிழராக இருக்கலாம். பதினான்கில் ஆறு பேர் தமிழர்கள், இதைவிட அதிகமாகவோ அல்லது முழுமையாகக் கூட இருக்கலாம்? எல்லாளன் மற்றும் துட்டகாமினி ஆகிய இருவரும் பண்டைய இலங்கையின் நாட்டுப்புறக் கதைகளில் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும்; எல்லாளன் ஒரு நியாயமான ஆட்சியாளராகவும், துட்டகாமினி ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராகவும் காணப்படுகிறார்கள். அவர்களுக்கிடையேயான சண்டையை மகாநாம தேரர் தனது தமிழர் விரோத உணர்வை முன்னெடுப்பதற்காக கண்டுபிடித்தார். தீபவம்சத்தின்படி துட்டகாமினியால் இந்திய எதிர்ப்பு அல்லது தமிழர் எதிர்ப்பு எதுவும் காட்டப்படவில்லை, ஆனால் மகாவம்சத்தின்படி சிறு வயதிலிருந்தே அவருக்கு அந்த உணர்வு இருந்தது. துட்டகாமினி மகாவிகாரையையும் கட்டினார். காக்கவண்ணாவின் மற்றொரு மகன் சத்தாதிஸ்ஸ [சத்தா திச்சன் / Saddhatissa], அபயாக்குப் (துட்டகாமினி) பிறகு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரும் சில கட்டிடங்களை கட்டினார். சத்தாதிச்சனின் மகன் துலத்தன் [துலத்தன / Thulathana] ஒரு மாதம் பத்து நாட்கள் மட்டுமே ஆட்சி செய்தான். பின்னர் சத்தாதிச்சனின் மகன் லஜ்ஜிதிஸ்ஸ [லஞ்ச திச்சன் / Lajjitissa] மன்னன் ஒன்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தான். பின்னர் அவரது இளைய சகோதரர் கல்லாடநாகா [கல்லாட நாகன் / Khallatanaga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் தனது தளபதியால் கொல்லப்பட்டார். மேலும் தளபதி ஒரு நாள் மட்டுமே ஆட்சி செய்தார். கல்லாட நாகனின் தம்பியான வட்டகமணி [வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் / Valagamba, also known as the Great Black Lion, Vattha gamani Abhaya and Valagam Abha], தளபதியைக் கொன்று ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் ஐந்து தமிழ் மன்னர்கள், அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன் / Alavatta (Pulahattha!), Sabhiya (Bahiya!), Panaya, Palaya, and Dathika] ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் வரை ஆட்சி செய்தனர் [19-15 :15. The five kings Ālavatta (Pulahattha!), and Sābhiya (Bāhiya!), Panaya, Palaya, and Dāṭhika reigned fourteen years and seven months.]; இதில், 20-15 முதல் 17 வரை பார்க்கவும். இந்த தமிழ் மன்னர்கள் ஒருவரையொருவர் கொன்றனர். பின்னர் முந்தைய அரசன் வட்டகமணி திரும்பி வந்து தமிழன் தட்டிகனைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மேற்குறிப்பிட்ட ஐந்து தமிழர் அரசர்களின் தனித்தனி ஆட்சியின் நீளத்திற்கு 20-15ஐக் காண்க [15. (After that time) the Damila Pulahattha reigned three years, and the general Bāhiya two years.]. இந்த ஐந்து தமிழ் மன்னர்களும் சோழ நாட்டிலிருந்தோ அல்லது எதிர்க் கடற்கரையில் இருந்தோ வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. இந்த ஐந்து தமிழ் மன்னர்களைப் பற்றி மகாவம்சத்தில் மகாநாமாவின் கொடூரமான கட்டுக்கதை சுவாரஸ்யமானது. தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்கள் மகாவம்சத்தில் ஏழு தமிழர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இன்னொரு பிராமணனும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளான்; இதை, மகாவம்சத்தின் 33 - 37 முதல் 61 வரை பார்க்கவும். மகாவம்சம் மறைமுகமாக ஏழு தமிழர்களும் எதிர்க் கடற்கரையைச் சேர்ந்தவர்கள் என்று குறிக்கிறது 33 - 39. Part: 57 / Appendix – Dipavamsa / 'Were all five Tamil kings from the opposite coast?' Mahanama might not have been happy with this and he elaborated, added and invented many extra details in the Mahavamsa. Ascending to the throne by Abhaya is covered in only two verses, 18 – 53 to 54 in the Dipavamsa; however, the Mahavamsa elaborates it into four chapters, 22 to 25, consisting of three hundred and sixty five verses, from the birth of Abhaya to the victory over Elara. The Dipavamsa, 18-53, says that the prince Abhaya (Dutthagamani) was the son of Kakkavanna, whereas the Mahavamsa describe him as not the biological son of Kakkanavanna. Another important point is that the story of Viharamahadevi drinking the blood stained water dripping down the sword, as stated in the Mahavamsa, which was used to behead a Tamil soldier is not at all mentioned in the Dipavamsa. Viharamahadevi is not mentioned as the mother of the prince Abhaya in the Dipavamsa. Dutthagamani ruled for twenty four years, 18 -54. The Chapters 19 and 20: There are overlaps and mix ups between chapters 19 and 20. It is, therefore, decided to summarize both together. The king (Dutthagamani) built a costly palace, and invited fourteen Theras from India for the ceremonial laying of the foundation. Their names are Indagutta(1), Dhammasena(2), Piyadasi(3), Buddha(4), Dhamma(5) Samgha(6), Mittana(7), Anattana(8), Mahadeva(9), Dhammarakkhita(10), Uttara(11), Cittagutta(12), Indagutta(13), and Suriyagutta(14). It was stated in the Dipavamsa, 18-47, that Sena and Gutta were Damila princes. Therefore Gutta is a Tamil name. The four among the fourteen Bikkhus are ending with ‘gutta’. They must, therefore, be Tamils. Mahadeva is a very common name among Tamils. Sena is also a common prefix of Tamil names; Senathirajah, Rajasenan, Senavaraiyar etc. Therefore Dhammasena could also be a Tamil. Six out of fourteen are Tamils, could be more or all. Both, Elara and Dutthagamani, must be great rulers in the folklores of ancient Ceylon; Elara as a just ruler and Dutthagamani as a great builder. Mahanama invented the fight between them to advance his anti-Tamil sentiment. No anti Indian or anti Tamil sentiment is shown by Dutthagamani as per the Dipavamsa, but he did have that sentiment from the very young age as per the Mahavamsa. He constructed the Mahavihara too. Saddhatissa, another son of Kakkavanna, ruled after Abhaya (Dutthagamani) for eighteen years. He too constructed some buildings. Thulathana, son of Saddhatissa, ruled only for one month and ten days. Then king Lajjitissa, son of Saddhatissa, ruled for nine years and six months. Then his younger brother, Khallatanaga ruled for six years. He was murdered by his commander in chief, and the commander in chief ruled for one day. Vattagamani, the younger brother of Khallatanaga, killed the commander in chief and ruled for five months. Then five Damila kings, Alavatta (Pulahattha!), Sabhiya (Bahiya!), Panaya, Palaya, and Dathika captured the power and ruled for fourteen years and seven months, 19-15; see also 20-15 to 17. These Damila kings killed each other, one after the other. Then the previous king Vattagamani came back and put the Damila Dathika to death and ruled for twelve years. See 20-15 for the length of the individual reigns of the above five Damila kings. The Dipavamsa does not say that these five Damila kings came from Soli country or from the opposite coast. It is interesting to note the cruel play of Mahanama in the Mahavamsa about these five Damila kings. The five Damilas in the Dipavamsa is expanded to seven Damilas in the Mahavamsa. Another Brahmin is also invented; see 33 – 37 to 61 of the Mahavamsa. The Mahavamsa indirectly indicate that the seven Damilas are from opposite coast, 33 - 39. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 58 தொடரும் / Will follow துளி/DROP: 1928 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 57] https://www.facebook.com/groups/978753388866632/posts/32682586788056546/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.