Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்12Points8907Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்4Points2948Posts -
சுவைப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்4Points8801Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்4Points1567Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/07/25 in Posts
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.6 points
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
இவர்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை வடக்குக்கு ஒதுக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றது இதுகளை எல்லாம் எலெக்சனில் வென்று மாற்றி காட்டோணும் எண்டு பேசியதாக நினைவு இப்போ இவரே வடக்குக்கு பணம் வேண்டாம் எங்கிறார். கடந்த தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களை வென்றது தேசிய மக்கள் சக்தி அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் யாரிடம் கொடுப்பார்கள்? ஓரிருவாரங்கள் முன்னர்தான் தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று பாராளு மன்றத்தில் குதியோ குதியெண்டு குதிச்சார் இப்போ அதே வாயால தலைவரையும் போராளீகளையும் மக்களையும் கொன்று குவித்தவர்களை ராணுவவீரர்கள் என்று அவர்களை மரியாதையாக அழைக்கோணும் எண்டுறார். ஒரு தொகுதியில் மாத்திரம் வென்ற இவர் முழு வடக்குக்கும் பணம் தேவையில்லை என்று சொல்ல யாரிடமிருந்து அதிகாரத்தை பெற்றார்? அத்துடன் அநுர ஒருதடவை யாழ்வந்து நகரசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது தையிட்டியில் விகாரை அமைத்தது சரி அதை வரவேற்கிறோம் அகற்ற தேவையில்லைஎன்று அர்ச்சுனா கூறியது காணொலி பதிவாக வந்தது. இந்த மூன்று விஷயங்களுமே கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய நினைத்த ஒன்று, அர்ச்ச்சுனாவை உள்ளே போட்டபோது நாமல் ஓடி வந்தார் இப்போலாம் அரசல் புரசலாக அர்ச்சுனா நாமலின் பினாமி என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது , அறிஞ்சு தெரிஞ்சவனுகதான் அப்படி உலவவிடுறாங்களோ யார் அறிவாரோ? இப்போலாம் வடக்கின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் குதிப்பவர்கள் வடக்கு மக்களுக்காக பேசுகிறார்கள் என்றா நினைக்கிறோம்? உண்மையில் அங்கே நடப்பது இளங்குமரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட வன்மம். ஒரு இயற்கைகோரத்தின் பின்னர் தமது பாகுதிகளை சீரமைக்க வேறுபாடுகளை மறந்து சிங்களவர்கள் முஸ்லீம்கள் எதிர்கட்சிகள் என அனைவருமே ஒன்றிணைந்து நிக்கிறார்கள், நமது வெண்ணெய்வெட்டி வீரர்கள் மூண்டுநாலுபேர் இருந்துகொண்டு இந்த நேரத்திலும் தங்கட பிரச்சனைகளை பேசுறதுக்கு பாராளுமன்றத்தை பாவிக்கும் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார்கள். காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கு ஆனால் அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை தமிழர் பிரதிநிதிகள் என்று தெரிவு செய்யப்பட்டு சிங்கள சபைக்கு செல்லும் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே குணங்களுடன் தான் அலைகிறார்கள். நாட்கள்தான் மாறிவிட்டது ஆட்கள் மாறவில்லை. இந்த லட்சணத்தில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்று அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் மாவை சம்பந்தனை திட்டி என்ன பிரயோசனம், அவர்களை திட்டிய அதே இளம் தலைமுறையும் அவர்களைவிட கேவலமாகதானே நடக்கிறது. இந்த கோமாளி கூட்டத்தின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் யாழ்மண்ணில் சிங்களவனே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.4 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் 8 அல்லது 9 மணியிருக்கலாம். செல்வீச்சின் அகோரம் குறைந்துபோயிருந்தது. இடையிடையே வீழ்ந்து வெடிக்கும் செல்களைத்தவிர அதிகளவான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. "அவங்கள் அப்படியே ரோட்டால போயிட்டாங்கள் போலக் கிடக்கு, இனிப்பிரச்சினையில்லை, அவங்கள் சனத்துக்கு ஒண்டும் செய்யம்மாட்டங்கள், பயங்கரவாதிகள் சுரண்டினால் ஒழிய அவங்கள் ஏன் சனத்தைச் சுடப்போறாங்கள்"? என்று தந்தையார் கூறினார். நாம் எதுவும் பேசவில்லை. இப்படியே சில மணித்துளிகள் போயிருக்கும். செல்வீச்சின் அகோரம் முற்றாக நின்று போயிருக்க, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. தூரத்தே கேட்க ஆரம்பித்த அச்சத்தம் நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி நகர்ந்துவருவது தெளிவாகத் தெரிந்தது. புலிகள் பயன்படுத்தும் ஏ கே 47 துப்பாக்கியின் ஒலி நான் நன்றாக அறிந்தது. ஆனால் அதனைக் காட்டிலும் வேறு வகை ஒலியொன்று தொடர்ச்சியாகக் கேட்க ஆரம்பித்தது. அன்று இரவுவரை எமது வீட்டின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த புலிகளின் குரல்கள் அப்போது கேட்கவில்லை. அவர்கள் போயிருக்கலாம். அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களைத் தவிர இன்னொரு ஒலியும் தற்போது கேட்கத் தொடங்கியிருந்தது. பாரிய இரும்புச் சங்கிலியொன்றினை யாரோ வீதியால் இழுத்துவருவது போன்ற ஒரு ஒலி. இது நான் அதுவரை கேட்டிராதது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன். சிலவேளை நல்லூர்க் கோயில் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சனங்கள் தமது பொருட்களை இழுத்துச் செல்கிறார்களோ என்னவோ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவ்வொலியும் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்க, கனர இயந்திரத் துப்பாக்கியின் ஒலியும் தற்போது மிக அருகில் கேட்கத் தொடங்கியிருந்தது. இலங்கை விமானப்படை வானிலிருந்து நடத்தும் 50 கலிபர் தாக்குலின்போது எழுப்பப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஒலியினை ஒத்த ஒலி மிக அருகில் கேட்கத் தொடங்கியது. இரவு 11 அல்லது 12 ஐக் கடந்திருக்கலாம். திடீரென்று வீட்டின் மத்திய பகுதியில் செல்லொன்று வந்து வீழ்ந்து வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தின் பெரும்பகுதியைக் கூரை தாங்கிக்கொண்டதால் கூரையின் உச்சிப்பகுதி வீட்டினுள் வந்து வீழ்ந்தது. இனிமேல் தொடர்ந்தும் வீட்டில் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த நாம் பின்னால் இருந்த மரவள்ளித் தோட்டத்தினுள் சென்று படுத்துக்கொண்டோம். அன்று காலையில்த்தான் நீர்ப்பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும், தோட்டாம் முழுவதுமாக சேறாயிருக்க வேறு வழியின்றி குப்புரப் படுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் எமது வீட்டின் முன்னால் யாரோ சத்தமாகப் பேசுவது கேட்டது. அது இந்திய இராணுவம்தான் என்பது எமக்குத் தெரிந்தது. "வீட்டிலிருப்பவர்கள் வெளியே வாருங்கள்" என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன். நாம் அசையவில்லை. நடுச் சாம இருளில் அவர்கள் முன்னால் செல்லும்போது எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, ஆகவே சத்தமின்றி அங்கேயே படுத்துக் கிடந்தோம். நாம் படுத்திருந்த தோட்டவெளிக்கும் இந்திய இராணுவ அணிக்கும் இடையிலான தூரம் சுமார் 25 அல்லது 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கும். இருளும், உயர்ந்து வளர்ந்திருந்த மரவள்ளிக் கன்றுகளும் எம்மை முற்றாக மறைத்துவிட்டிருந்தன. அங்கு படுத்திருந்தவாறே எம்மைச் சுற்றி நடக்கும் படுகொலைகளைப் பார்க்கத் தொடங்கினோம்.2 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சாத்தானின் படையுடனான எனது அனுபவம் இடம்: கோண்டாவில், யாழ்ப்பாணம் காலம் : ஐப்பசி, 1987 அது ஒரு மாலை வேளை. பலாலி வீதியூடாக இந்திய இராணுவம் பலாலியில் இருந்து யாழ்நகர் நோக்கி நகர்ந்துவருவதாக அயலில் பேசிக்கொண்டார்கள். மிகக்கடுமையான செல்வீச்சு எமது பகுதிநோக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. காலையில் இருந்து அயலில் உள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோயிலுக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். "நீங்கள் போக இல்லையோ? இருக்கவே போரியள்? வந்தாங்கள் எண்டால் சுட்டுக் கொண்டு போடுவாங்கள். உரும்பிராயில நியாயமான சனத்தைக் கொண்டுட்டாங்களாம். நாங்கள் போகப்போறம். கொப்பரிட்டைக் கேட்டுப்போடு நீங்களும் வாங்கோ" என்று பக்கத்துவீட்டு பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதை தகப்பனாரிடம் கூறினேன். "தேவையில்லை, அவை போறதெண்டால் போகட்டும், நாங்கள் வீட்டிலை இருப்பம்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார். முதல் நாள் மாலையில் இருந்து எமது ஒழுங்கையில் சில போராளிகள் ஆயுதங்களோடு தரித்து நின்றிருந்தார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கலாம். எமது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அவர்களுக்கு தேநீரும் சில உணவுப் பொருட்களையும் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்னைப்போலவே அருகில் இருந்தவர்களும் அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். தகப்பனாரின் முகத்தில் ஈயாடவில்லை, வேறு நேரமாக இருந்திருந்தால் என்னை கொடுமையாகத் தாக்கியிருப்பார், ஆனால் புலிகளின் பிரசன்னம் அவரைத் தடுத்து விட்டிருந்தது. உரும்பிராய்ப் பகுதியை வட்டமடித்தபடி இந்திய விமானப்படையில் எம் ஐ 24 உலங்குவானூர்திகள் வானிலிருந்து மிகக்கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலையும் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியிருந்தன. அவை வானில் வட்டமடித்தவேளை கோண்டாவில் டிப்போவின் மேலாகவும் வந்துபோயின. புலிகள் அப்பகுதியில் நிற்பதைக் கண்டால் எமது பகுதிமீதும் தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சிய நாம் வீட்டினுள் புகுந்துகொண்டோம். சில நாட்களாகவே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சந்தைகளும் இயங்கவில்லை. வீட்டில் கிடந்த பொருட்களைச் சேர்த்து சிற்றன்னையார் சமைத்திருந்ததை மதியம் அனைவரும் உட்கொண்டோம். மதியவேளைக்குப் பின்னர் செவீச்சின் உக்கிரம் அதிமானது. ஒவ்வொரு செல்லும் ஏவப்படும் போது எழுப்பும் ஒலியும், அது வீழ்ந்து வெடிக்கும்போதும் எழும்பும் ஒலியும் மிகத் துல்லியமாக இப்போது கேட்கத் தொடங்கின. ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தே அவற்றினை ஏவுகிறார்கள் என்பது தெரிந்தது. சுமார் பத்து செக்கன்களுக்கு ஒன்று என்ற ரீதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. எமது வீட்டின் மேலாகப் பறந்துசென்று கோண்டாவில்ச் சந்திப்பகுதியில் அவை வீழ்ந்து வெடித்தன. ஒவ்வொருமுறையும் அவை வந்து வெடிக்கும்போது எங்கள் வீட்டின் கூரைகள் சலசலத்து, கீழே வீழ்ந்து நொறுங்குவது தெரிந்தது. வீட்டின் பின்புறத்தில் ஒடுங்கலான பகுதியொன்றில் சீமேந்தினால் கட்டப்பட்ட கூரைப்பகுதியின் கீழ் நாங்கள் நின்றுகொண்டோம். வீட்டின்மீது செல் வீழ்ந்தாலும் நாம் நின்றபகுதி பாதுகாப்பானது என்பது எமது எண்ணம். சுமார் பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அவ்விடத்திலேயே அசையாது அமர்ந்திருந்தோம். இடைவிடாது நடத்தப்பட்ட செல்வீச்சினால் மனதளவிலும், உடலலளவிலும் அச்சத்துடன் நடங்கியபடி அங்கு அமர்ந்திருந்தோம். இரவாகியிருந்தாலும் கூட செல்கள் எமக்கு மேலால் பறந்து சென்று வெடித்தபோது மின்னல் பாய்ச்சியதுபோன்ற வெளிச்சத்தை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொருமுறையும் வீழ்ந்து வெடிக்கும் செல்களினூடு இதயமும் நின்று மீளவும் இயங்கியதுபோன்ற வலி.2 points
-
மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம்!
போற போக்கைப் பார்த்தால் நாட்டை முழுமையாக கட்டி எழுப்புவது மட்டும்மல்லாமல் அபிவிருத்தியும் செய்யலாம் போல.இந்த விடையத்தில் நம்பிக்கை உள்ளது.2 points
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
2 points
- பூரணநாயகி
1 pointஅழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பேச முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். இதயத்தின் அடியில் இருந்து எழுந்த அந்தச் சோகம், தொடர்ந்து சொற்களை வரவிடாமல், விழுங்கிக் கொண்டிருந்தது. றீட்டா புரிந்து கொண்டாள், இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று. “உள்ளே வாருங்கள்” அன்பாக அவர்களை அழைத்தாள். மேற்கொண்டு றீட்டா எதுவும் பேசவில்லை. பேசக்கூடிய நிலையில் அவளும் இப்போதில்லை. அவர்களது சோகம் அவளிடமும் சேர்ந்து கொண்டது. சூடான உணவுகளையும், தேநீரையும் அவர்கள் முன் கொண்டு வந்து வைத்தாள் றீட்டா. "நீண்ட தூரப் பயணத்துக்கும், குளிரான இந்த நேரத்துக்கும், இச்சூடான உணவும், தேநீரும் உங்களுக்கு இதமாக இருக்கும். தயவு செய்து உணவருந்துங்கள். “நீங்கள் உணவருந்தி முடிவதற்குள் நான் 'போன்' செய்து பாதர் அம்ரொஸ் றூமரை இங்கு வரவழைக்கிறேன். அவர் உங்களுக்கு முழு விபரமும் தருவார். நான் அவரது வீட்டுச்சமையல் வேலை செய்பவள். எனது பெயர் ரீட்டா காபென்பிறான்ட்ல்." டிசம்பர் 7ம் திகதி செக் நாட்டில் இருந்து ஜேர்மனியில் உள்ள பயர்ன் மாநில எல்லையை நோக்கி முழங்கால் வரை புதையும் உறைபனியூடாக நால்வர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் பூரணநாயகியும் இருந்தாள். அவளுடன் இன்னும் ஒரு தமிழ் இளைஞனும், இரண்டு ஏஜென்சிகளும் நடந்து வந்தனர். இரண்டு ஈழத் தமிழர்களதும் அணிந்திருந்த உடைகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. . பனிக்குளிர், பூரணநாயகி அணிந்திருந்த மெல்லிய உடுப்புகளுக்கூடாகவும், அவளது சாதாரண சப்பாத்துக்கூடாகவும் உட்புகுந்து, அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உறையச் செய்து கொண்டிருந்தது. இவர்களது திசை ஓசர் மலையை நோக்கிய குறுகிய ஒரு பாதையாக இருந்தது. ஒரு கிலோமீற்றர் உயர மலையை ஒரு விதமாகச் சென்றடைந்தார்கள். அந்த மலையின் முடிவில் ஆரம்பமாகியது ஜேர்மனிய எல்லை. முழங்கால் வரை உள்ள பனியில் காலை வைத்து திரும்ப எடுத்து நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இப்படி ஒரு தடவை காலை பனியில் வைத்து எடுக்கும் போது காலில் போட்டிருந்த இளைஞனின் சப்பாத்து பனிக்குள் புதைந்து போனது அதைத்தேடி எடுக்க அந்த இளைஞனுக்கு அவகாசமில்லை. முன்னால் சென்று கொண்டிருக்கும் அந்த ஏஜென்சிகள் தங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் வரும் இவ் இருவரைப் பற்றிய கவலைகள், அவர்கள் படும் வேதனைகள் அவர்களுக்குத் தேவையில்லாதிருந்தது. அவர்களுக்குத் தேவையான 'தரகு'ப் பணம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜெர்மனிய எல்லைக்குள் இருவரையும் விட்டுவிட்டால் ஏஜென்சிகளின் வேலை முடிந்து விடும். இருட்டுநேரம் பார்வையைத் தவறவிட்டால் ஏஜென்சிகள் மறைந்து விடுவார்கள். இளைஞன் சப்பாத்தைப் பனிக்குள் விட்டுவிட்டு காலில் போட்டிருந்த காலுறையுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் பூரண நாயகியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஜேர்மனிய எல்லைக்குள், 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றின் வெளிச்சம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூரணநாயகியால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அந்த பனிக்குள் தள்ளாடியபடி இருந்து விட்டார். மறுநாள் பொழுது வழமைபோல் விடிந்தது. ஹோட்டல் உரிமையாளர் யூர்கன் கோல்ஸ், தனது ஹோட்டலின் முன்பாக நின்ற இளைஞனை உற்று நோக்கினார். ஒரு காலில் Cowboy Stiefelம், மறுகாலில் வெறும் காலுறையும் அணிந்து கொண்டு, பயத்துடன் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை அநுதாபத்துடன் அணுகினார். "ஏதாவது உதவி வேண்டுமா?" என்று அந்தத் தமிழ் இளைஞனை பார்த்து அவர் ஜேர்மனிய மொழியில் கேட்டதை, அந்த தமிழ் இளைஞன் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.ஆனாலும் தான் ஒரு தடவை தொலைபேசியில் கதைக்கவேண்டுமென்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்த இளைஞன் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட யூர்கன் கோல்ஸ், அவனைத் தனது தொலைபேசியைப் பாவிக்க அநுமதித்தாரர். தொலைபேசியில் அந்த இளைஞன் கதைத்து முடித்தபின் யூர்கன் கோல்ஸிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்து விட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான். காட்டுப் பாதையொன்றில் திடீரென வந்த ஜேர்மனியப் பொலிஸாரின் கண்களில் அந்த இளைஞன் பட்டு விடுகிறான். கேள்விகளுக்கு மேல் அவர்கள் அந்தத் தமிழ் இளைஞனை கேட்கத் தொடங்கினார்கள். அவனும் எதையும் மறைக்க விரும்பவில்லை நடந்தவற்றை அப்படியே. ஒப்புவித்தான். பூரணநாயகியைத் தனது சகோதரியெனச் சொல்லி வைத்தான். ஆனால் உண்மையிலேயே பூரணநாயகி அவன் சொந்தச் சகோதரியல்ல. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொலிஸார், அந்த இளைஞனையும் கூட்டிக் கொண்டு பூரணநாயகியைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கண்டது, பனிகளுடன் உறைந்து போயிருந்த பூரணநாயகியின் உடலைத்தான். ஜேர்மனியப் பத்திரிகைகள், இத்தகவலை பத்திரிகைகளில் பிரசுரித்த போதும், யாருமே பூரணநாயகியைப் பற்றி உரிமை கோராத பட்சத்தில், அவரது பூதவுடல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாக இருந்த சேமக் காலையில் டிசம்பர் 14ந் திகதி கத்தோலிக்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவளின் கல்லறையில் "அமைதியாக உறங்கு" என்ற வாசகங்கள் பொருந்திய மரத்தினால் செய்த சிலுவையை வைத்து, அந்த நகரத்து மக்கள் பூக்களினால் அஞ்சலி செய்தனர். "நான் கத்தோலிக்க பாதிரியார் அம்புரோஸ் ரூமர்" பாதிரியார் தன்னை அந்த எட்டுப் பேருக்கும்" அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் கூடவந்த அந்த நகரத்து மேயர் ஜோகன் முல்பவுரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எல்லோருமாக பூரண நாயகியை அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றனர். நன்றாக இருண்டு விட்ட நேரத்திலும், பயங்கரமான குளிருக்கு மத்தியிலும் எல்லோரும் பூரணநாயகியின் கல்லறை முன் நின்றனர். எண்மரில் ஒருவரான ஒரு பெண், இவர் பூரண நாயகியின் மூத்த சகோதரி, கல்லறை மேல் விழுந்து கதறியழுத காட்சி மேஐரை கரைத்துவிட்டது. "ஒரு பெண்ணின் சடலம். இறந்தது டிசம்பர் 7ந் திகதி காலை 9.45 மணிக்கு, என்ற தகவலே எனக்குத் தெரியும். ஆனால்...... இப்படி ....இதன் பின்னால் ஒரு மனித சோகத்தை நான் எதிர்பர்க்க வில்லை." என்று மேஜர் கண்கள் கலங்க அந்த இடத்தில் கூறினார். "பூரண நாயகி ஒரு இந்துவாக இருந்த போதிலும், அவரை அடக்கம் செய்து அஞ்சலி செய்வது எங்களது கடமை. நான் அரசியல்வாதியாகவோ, காவல் துறையிலோ இருக்க விரும்பவில்லை. அகதிகளாக அல்லல் பட்டு, உயிர் வாழ நம்பிக்கையுடன் ஓடி வரும் மக்களை அரவணைத்து ஆதரவு தரவே விரும்புகிறேன" எனப் பாதிரியார் அம்புரோஸ் ரூமர் தனது உரையில் தெரிவித்தார். ஏஜென்சிகளை நம்பி, ஜேர்மன் எல்லையில் ஆற்றைக் கடக்கும் போதும், குளிரினாலும் பல அகதிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் லொறிகளில் அடைத்து வரப்பட்டு மூச்சுத்திணறியும் பலர் இறந்திருக்கிறார்கள். 1995ம் ஆண்டு ரூமேனியாவில் இருந்து ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட 18 அகதிகள் லொறிக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஏஜென்சிகளை நம்பி, பெரும் பணத்தைக் கொடுத்து, உயிரைப் பணயம் வைக்கும் செயல் இதுவென ஜேர்மனிய காவல்துறை தெரிவித்திருந்தது. ஐரோப்பிய நாடுகள், அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும் கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள் ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கிருபன் இணைத்திருந்த ஷோபா சக்தியின் “பொப்பி என்பது புனை பெயர்” கதையை வாசித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது பூரணநாயகியின் சம்பவம்தான். 1995ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன், ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.1 point- அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு 07 December 2025 அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மத்திய, ஊவா மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில், எமது செய்திச் சேவை, அமைச்சரை தொடர்பு கொண்டு வினவியது. இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், மும்மொழிக் கொள்ளையைப் பின்பற்றுமாறு அனைத்து அரச அலுவலகங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எனினும், கடந்த நாட்களில் அதனைப் பின்பற்றியிருக்கவில்லை என்றால் அது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அதற்கமைய நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களிலும் வெளியிடப்படும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்பது தொடர்பில், தாம் பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/434640/all-government-announcements-are-mandatory-in-all-three-languages-action-announcement1 point- மாவளி கண் பார்
1 pointமாவளி கண் பார் -------------------------- சொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை. நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக இந்த நிகழ்வை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நட்ட தென்னை மரத்தைச் சுற்றி கூம்பு வடிவில் பச்சை தென்னை ஓலைகளை கட்டியிருந்தார்கள். பின்னர் சடங்கு மற்றும் பூசைகளின் பின் அதை எரித்தார்கள். பச்சை ஓலைகள் வெடித்து வெடித்து எரிந்ததும், எரி துகள்கள் மின்னி மின்னிப் பறந்ததும், ஒரு சிறுவன் காற்சட்டையுடன் சற்றுத் தள்ளி நின்று ஆவென்று பார்த்ததும், சுற்றியுள்ள இடங்கள் இருட்டாக இருந்ததும், கார்த்திகை மாத ஈரமும் நேற்று நடந்தவை போல நினைவில் இருக்கின்றது. எரிந்தது தென்னை மரம் என்றபடியால் பனை பற்றிய யோசனையே என்றும் மனதில் எழவில்லை. சொக்கப்பனை என்ற சொல்லை முதலில் கண்ட போது அது எழுத்துப்பிழை என்றே நினைத்தேன். மக்கள் என்பதைக் கூட மாக்கள் என்று எழுதினாலும், அது மக்களே என்று அனுசரித்து வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். எழுத்துப்பிழைகள் ஒரு குற்றமே கிடையாது, 'விசயம் விளங்குது தானே.....................' என்று எழுத்துப்பிழைகளை ஏற்றுக் கொள்வதும், அமெரிக்க ஆங்கிலத்தை ஆங்கிலம் என்று ஏற்றுக் கொள்வதும் ஒன்றே. விசயம் விளங்குது தானே. நேற்றிரவு கூட பாடசாலையில் தமிழ் படிப்பித்த ஆசிரியர் பற்றி நினைக்க வேண்டியதாக இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அவரே தமிழும், சமயமும் படிப்பித்தார். அவர் எதுவுமே படிப்பிக்கவில்லை என்று தான் நேற்றிரவும் நான் முடிவெடுத்து இருந்தேன். பின்னர் அப்படியே நித்திரை ஆகிவிட்டேன். சொக்கப்பனை பற்றி அவர் வகுப்பில் ஒரு மூச்சுக் கூட விட்டதில்லை. ஆனால் மாக்கள் என்ற சொல்லை அவர் வகுப்பில் சில தடவைகள் சொல்லியிருந்தது இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அவருக்கு தமிழ் தெரிந்திருக்கின்றது, ஆனால் வகுப்பில் படிப்பிக்க வேண்டும் என்ற விசயம் விளங்கயிருக்கவில்லை போல. பனை தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்கின்றார்கள். பனை ஒன்றை நடுவில் வைத்து, பனை ஓலைகளால் கூம்பாக மூடி எரிப்பதே சொக்கப்பனை என்ற விளக்கத்தை இணையங்களில் பார்த்தேன். சொக்கனின் பனை சொக்கப்பனை. அந்தக் காலத்தில் விவேகானந்தா சபையினரால் நடத்தப்படும் சமயப் பரீட்சைகளில் இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். நான் ஐம்பது வயதுகள் வரும் வரையும் இப்படி விசயம் விளங்காமல் இருந்திருக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிடச் சொத்துகளை எரித்து அழிப்பதற்கு இதை ஒரு வழியாகப் பயன்படுத்தினார்கள் என்கின்றார்கள். சமஸ்கிருத ஆதரவாளர்கள் தமிழை நெருப்பில் தள்ளி விட சொக்கப்பனையை உபயோகித்தார்கள் என்கின்றார்கள். ஆரியம் - திராவிடம் - தேசியம் அந்த நாட்களில் ஆஸ்பத்திரிகளில் கொடுத்த திரிபோசா மா போன்ற ஒன்று. அந்த மா இலவசமாகக் கிடைத்தது, ஆனால் மனிதர்களை உசாராக வைத்திருக்க உதவியது. ஆனால் நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல. சொக்கப்பனையை பிடித்த உடன், மாவளி என்றால் என்ன என்பதே அடுத்த கேள்வியாக எழுந்தது. அடுத்த 50 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதால் மாவளியைத் தேடினேன். வீட்டுக்கு முன்னால் நாலு திசைகளிலும் நாலு தீபச் சுட்டிகளை வைத்து விட்டு, அதை மூன்று தடவைகள் கைகளைத் தட்டிக் கொண்டு சுற்றவேண்டும். அப்படிச் சுற்றும் போது, 'மாவளி கண் பார். எங்களை கண் பார். எல்லோரையும் கண் பார்..................' என்று பாட வேண்டும். சங்கீத சாரீரம் இல்லாதவர்கள் வசனமாகக் கூட சொல்லிக் கொள்ளலாம். இது எந்த ஊர் வழக்கம் என்று கேட்காதீர்கள். இது எனக்கு தெரிய வரும்போது நான் குடும்பஸ்தனாகி இருந்தேன். அதுவரை காலமும் இப்படி ஒரு பாடல் இருக்கின்றது என்பதே தெரியாமல் இருந்ததற்கு ஆசிரியரை குறை சொல்வதா, பிறந்த வீட்டைக் குறை சொல்வதா, உற்றார் உறவுகள் நட்புகளை குறை சொல்வதா என்று ஒரே குழப்பமாக இருக்கின்றது. உங்கள் வீட்டில் இன்று என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கின்றார்கள். கொழுக்கட்டை என்ற சொல்லை விட மோதகம் என்னும் சொல் நல்ல ஒரு ஓசையுடன் வருவதால் மோதகம் என்று சொல்லியிருக்கின்றேன். மோதகமா........... அப்படி என்றால் என்ன என்று சிலர் திருப்பிக் கேட்டிருக்கின்றார்கள். கேட்டது தமிழ்நாட்டு நண்பர்கள் தான். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் வல்லின கொழுக்கட்டை என்ற சொல்லே கைகொடுத்தது. அவர்களில் ஒருவர் தனியே என்னைக் கூட்டிப் போய், 'அது மோதகம் இல்லை சார்....................... மோதஹம்................' என்று மோதகத்தின் ஓசையை ஒரு மந்திரம் போல ஆக்கினார். திராவிடருக்கு கொழுக்கட்டை, ஆரியருக்கு மோதஹம் என்று நான் நினைவில் வைத்துக்கொண்டேன். மோதகமா, மோதஹமா அல்லது கொழுக்கட்டையா என்னும் பெயர் பெரிய பிரச்சனையே அல்ல. மாவளி பாடி முடிந்து ஒரு ஐந்து நிமிடங்களின் பின் தான் அந்த வஸ்துவை சாப்பிட முடியும் என்பது தான் நடைமுறை. அதனாலேயே வாழ்வில் மாவளி முக்கிய ஒன்றாகிவிட்டது. கொழுக்கட்டையை காக்க வைக்கும் இந்த மாவளி என்ன சாமியாக இருக்கும் என்று தான் முதல் சந்தேகம் வந்தது. பின்னர் தான் இதுவும் பனையின் பொருட்களில் இருந்து செய்யப்படும் ஒன்று என்று தெரிந்தது. மேலே படத்தில் இருப்பது. பனையின் பூக்களை பதமாக எரித்து விறகாக்கி, பச்சை பனை மட்டையை இடையில் மூன்றாகப் பிளந்து, அதற்குள் பூ விறகை வைத்துக் கட்டி, எரித்து, தலைக்கு மேல் வேகமாகச் சுற்றும் ஒரு தமிழர் பாரம்பரியமே விளக்கீடு அன்று மாவளி செய்து சுற்றுதல் என்று தகவல்கள் சொல்கின்றன. தமிழர் சமூகங்களில் மிகப் பழைய காலத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்றால், முழுக் கல்லை தூக்கு, அரைவட்டக் கல்லை தூக்கு, குஸ்தி போடு என்று எல்லாம் சொல்வார்களாம். இந்த விடயத்துக்காக ஆரியர்கள் வில்லையே வளைத்து இருக்கின்றார்கள். அந்த நாட்களில் எங்கள் முன்னோர்கள் விளக்கீடு அன்று கொழுக்கட்டை வேண்டும் என்றால் மாவளி செய்து, கொழுத்தி, தலைக்கு மேல சுற்று என்றும் சொல்லியிருப்பார்கள் போல. வீரப் பரம்பரை தான், சந்தேகமே இல்லை, ஆனால் மாவளியையே சுற்றிக் கொண்டிருந்திருக்காமால், வெடிமருந்தையும் கண்டு பிடித்திருக்கலாம்.1 point- மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
தமிழர் நிம்மதியாக இருக்கக்கூடாது, அது தமது அரசியலுக்கு பாதிப்பு. இனக்கலவரத்தை தூண்டி நாட்டை சூறையாடி, சுகபோகம் அனுபவித்தவர்கள், அது தம் கையை விட்டுபோவது மாத்திரமல்ல தண்டனை அனுபவிக்கும் காலம் நெருங்குவதால் மீண்டும் அதை வைத்து அரசியலை கைப்பற்ற, நாட்டை தீவைத்து தமது லட்சியத்தை அடைய முயற்சிக்கிறார்கள். அவர்கள் வைத்த தீயிலேயே கருகப்போகிறார்கள். அனுராவின் செயற்பாடு அவர்களை கலக்கமடையச்செய்கிறது.1 point- பொப்பி என்பது புனைபெயர் - ஷோபாசக்தி
பொப்பி என்பது புனைபெயர் ஷோபாசக்தி பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி. அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டுமே அவளுக்கு ‘பொப்பி’ என்ற புனைபெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால், அவளைக் குறித்து மூன்று விவரங்களை முன்கூட்டியே வாசகர்களுக்குச் சொல்லிவைக்க முடியும். அவளுக்கு அப்போது இருபது வயது. ஆங்கில மொழி பேசக்கூடியவள். ஆங்கில மொழியைப் பேசும்போது, B மற்றும் V ஒலியை அவளால் உச்சரிக்க முடியாது. கலே நகரத்தில் இருந்த ‘ஜங்கிள்’ அகதி முகாமில் அவள் காணப்பட்டாள். கருமையான சுருள் தலைமுடியும் வெளிறிய சருமமும் கொண்ட பொப்பி சற்றுக் குள்ளமானவள். அவளது முழுவட்ட முகத்தில் தலைமுடி சுருள் இழைகளாய் விழுந்து பேரிச்சம் பழங்கள் போன்றிருக்கும் அவளது கண்களின் ஓரங்களை மறைக்கும். அவள் பேசும்போது, சிவந்து தடித்த கீழுதடு ஒருபுறமாகக் கோணிக்கொள்வது போலிருக்கும். எப்போதுமே அவளுடைய குரல் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல் அவளுடைய குரலில் எதிரொலியும் கலந்திருக்கிறது. அவளுடைய தங்கையும் உருவத்தில் ஏறக்குறைய பொப்பியைப் போலவே இருந்தாள். தங்கைக்குப் பதினைந்து வயதிருக்கும். சகோதரிகள் இருவரும் ஆந்ரே பணியாற்றிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைக்கு முதன்முதலாக வந்தபோது, ஆந்ரே கைகளில் விரித்து வைத்திருந்த செய்தித்தாளுடன் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தான். பிறந்ததிலிருந்தே உற்சாகமற்ற மனநிலையுடனும், நான் ஏன்தான் எப்போதுமே சோகமாக இருக்கிறேன் எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டுச் சோகத்தைப் பெருக்கியவாறும் இருக்கும் ஆந்ரே காலையில் ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்து வைத்துக்கொண்டு, மதியம் பன்னிரண்டு மணிவரை ஒரேயொரு வாடிக்கையாளர்கூட வராத இடத்தில் தூங்குவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும்! சில மாதங்களுக்கு முன்புவரை கலே நகரத்தின் இந்தக் கடற்கரை உல்லாசப் பயணிகளால் நிரம்பித் ததும்பியது. அவர்களைக் குறிவைத்துக் கடற்கரை வீதியில் நான்கைந்து ‘பணப் பரிவர்த்தனை’ கிளைகள் இருந்தன. இப்போது, ஆந்ரே பணியாற்றும் இந்தக் கிளை மட்டுமே இருக்கிறது. கலே கடற்கரை, அகதிகளாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தும் பிரெஞ்சு சிறப்புக் காவல்படையினராலும் மட்டுமே இப்போது நிறைந்துள்ளது. வடக்கு பிரான்ஸின் விளிம்பில் கலே நகரம் இருக்கிறது. இந்த நகரத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஆங்கிலக் கால்வாயில் விரிந்து கிடக்கும் டோவர் நீரிணையின் நீளம் முப்பத்து மூன்று கிலோ மீட்டர்கள். இந்த நீரிணை மிக ஆழமானது. வருடம் முழுவதும் குளிர்ந்த நீரைக் கொண்டது. இந்த அபாயமான நீரிணையைக் கடந்து இங்கிலாந்துக்குச் செல்வதற்காகப் பத்தாயிரம் அகதிகள் கலே நகரத்தில் காத்திருக்கிறார்கள். திடீரெனக் குவிந்த இந்த அகதிகளால் நகரத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது. நகரத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் ஒரு அகதி இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பாக அந்த நகரம் சந்தித்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடி இதுவே என்று நகர மக்கள் பேசிக்கொண்டார்கள். சுற்றுலாப் பயணிகள் கலே நகரத்திற்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அவர்களை நம்பியிருந்த பல தங்கும்விடுதிகளும் உணவகங்களும் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. இதனால் நகரத்து மக்கள் பலருக்கு வேலைகள் பறிபோயின. ஆந்ரே வேலை செய்யும் கிளை எப்போது மூடப்படுமோ என்ற கிலியிலும் அதனால் பெருகிய துக்கத்துள்ளும் ஆந்ரே மூழ்கியிருந்தான். காற்று நிரப்பிய சிறிய ரப்பர் படகுகளில் மூட்டைகள் போல அகதிகளை அள்ளிப் போட்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் குழுக்கள் நகரத்தின் பல இடங்களிலும் மறைந்திருந்தார்கள். இதைத் தவிர, பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பல்களில் ஏற்றப்பட்டுக் கொண்டுசெல்லப்படும் சரக்குந்துகளைப் பயன்படுத்தி நீரிணையைக் கடந்து செல்லும் முயற்சியிலும் அகதிகள் இறங்கியிருந்தார்கள். நெடுஞ்சாலையில் வரும் சரக்குந்துகளின் முன்னால் வீதித் தடைகளை ஏற்படுத்தி அவற்றை வேகம் குறைக்கச் செய்து, சரக்குந்துகளுக்குள் திருட்டுத்தனமாக அகதிகள் நுழைந்துகொண்டார்கள். அந்த நீரிணைக்குக் கீழாக அமைக்கப்பட்டிருக்கும் அய்ம்பது கிலோ மீட்டர்கள் நீளமான ரயில் சுரங்கப் பாதைக்குள் இறங்கி நடந்துசெல்ல முற்பட்ட பல அகதிகள் ரயில் மோதி இறந்து போனார்கள். அவர்களின் பிணம் கூட இங்கிலாந்தைச் சென்றடையவில்லை. கலே நகரத்து மக்கள் மட்டுமல்லாமல், பிரான்ஸ் – இங்கிலாந்து இருநாட்டு அரசாங்கங்கள், காவல்துறையினர், கடற்படையினர், எல்லைப்படையினர் எல்லோருமே குழப்பத்தில் இருப்பது போலத்தான் தோன்றியது. தெளிவாக இருந்தவர்கள் அந்தப் பத்தாயிரம் அகதிகள் மட்டுமே. எப்படியாவது கடலைக் கடந்து இங்கிலாந்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். ரப்பர் படகுகள் கடலில் மூழ்கி அகதிகள் நாளாந்தம் இறப்பதாலோ, சரக்குந்துகளில் மறைந்திருந்து சென்றவர்கள் மூச்சுத் திணறிக் கொத்தாக இறப்பதாலோ, சுரங்கப் பாதையில் ரயில் மோதி இறப்பதாலோ இந்த அகதிகள் தங்களது பயணத்தைக் கைவிட ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. எப்படியாவது ஒருநாள் உயிரோடு கடலைக் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கலே நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள். அவ்வாறு அலைந்துகொண்டிருந்த பொப்பியும் அவளது சகோதரியும் ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைக் கூண்டுக்கு முன்னால் வந்துநின்று, கூண்டின் முகப்புக் கண்ணாடியில் தட்டியபோது, ஆந்ரே தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் திறந்து பார்த்துவிட்டு, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டான். அவனது முக்கோண வடிவ முகத்திற்கு அந்த வட்டமான மூக்குக் கண்ணாடி பொருத்தமில்லாமல் இருந்தது. செந்நிற ஆட்டுத்தாடியைச் சொறிந்துகொண்டே கண்களைத் தாழ்த்தி, தெருவின் எதிர்ப் பக்கத்திலிருந்த காவல் கூண்டைப் பார்த்தான். அந்தக் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் அந்தப் பெண்களையே கவனித்துக்கொண்டிருந்தார். பொப்பி தனது குளிரங்கிக்குள் கையை நுழைத்து ஒரு பொதியை எடுத்துப் பிரித்தாள். இரண்டு பிளாஸ்டிக் பைகளுக்குள் பத்திரமாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து முகப்புக் கண்ணாடியில் இருந்த அரைவட்டத் துளை வழியாக உள்ளே தள்ளிக்கொண்டே “மிஸ்டர்! நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?” என்று ஆந்ரேயிடம் கனத்த குரலில் கேட்டாள். “ஆம். பேசுவேன்” என்றான் ஆந்ரே. “எங்களுடைய தந்தை ‘வெஸ்டர்ன் யூனியன்’ மூலமாக எங்களுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைக் கொடுங்கள்.” பொப்பியின் பாஸ்போர்ட்டை ஆந்ரே எடுத்து விரித்துப் பரிசீலித்துவிட்டு, கணினியைத் தட்டி உசுப்பியவாறே “ட்ரான்சக்ஸன் நம்பர்?” என்று கேட்டான். பொப்பி தன்னுடையை சகோதரியைப் பார்த்தாள். அந்தச் சிறுமி பத்து இலக்கங்களை மனப்பாடமாகச் சொல்லச் சொல்ல, ஆந்ரே கணினி விசைப்பலகையில் மெதுமெதுவாகத் தட்டினான். பொப்பியிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ஆந்ரே பச்சைநிற ஈரோத் தாள்களை எடுத்து அரைவட்டத் துளை வழியாக வெளியே தள்ளிவிட்டான். பொப்பி அந்தப் பணத்தை எடுத்து நிதானமாக மூன்று தடவைகள் எண்ணிப் பார்த்துவிட்டுத் தனது குளிரங்கிக்குள் நுழைத்துக்கொண்டாள். ‘நன்றி’ என்பது போலச் சகோதரிகள் இருவரும் ஆந்ரேக்குத் தலையைத் தாழ்த்தினார்கள். ஆந்ரே சோர்வுடன் தலையை மெதுவாக அசைத்தான். இரண்டு நாட்கள் கழித்து, மாலை அய்ந்து மணிக்கு ஆந்ரே கணினியை அணைத்துவிட்டு, தனது குளிர் மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு கிளையை மூடுவதற்குத் தயாரானபோது, கிளையின் முகப்புக் கண்ணாடியில் படபடவெனத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சகோதரிகள் இருவரும் தெருவில் நின்றிருந்தார்கள். ஆந்ரே கைகளைக் கத்தரிக்கோல் போல் குறுக்கே வைத்து அசைத்து ‘மூடியாகிவிட்டது’ எனச் சைகை காட்டினான். பொப்பி பதிலுக்கு மீண்டும் முகப்புக் கண்ணாடியைப் பலமாகத் தட்டினாள். ஆந்ரே அரைவட்டத் துளையை மூடியிருந்த மறைப்பை நீக்கிவிட்டு, அந்தத் துளையை நோக்கிக் குனிந்து “மூடியாகி விட்டது. நாளைக்கு வாருங்கள்” என்று சொன்னான். இன்று தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருவதாக அவன் சொல்லியிருந்தான். சந்தை மூடுவதற்கு முன்பாக அங்கே சென்று தாயாருக்குப் பிடித்தமான நத்தைகளையும் தாயாருக்கு அந்த வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்கிச் செல்ல வேண்டும். நகரம் முழுவதும் குழப்பமான முறையில் அகதிகள் நடமாட்டம் இருப்பதால், அவனது தாயார் பயந்துகொண்டு சந்தைக்குப் போவதில்லை. சென்ற வாரம் ஆந்ரே தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தாயார் தனது வற்றிப் போன உடம்பை ஆடாமல் அசையாமல் வைத்துக்கொண்டு, கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். “இந்த நகரத்தை விட்டு நாங்கள் போய்விட வேண்டும்” என்றார். அந்தச் சகோதரிகள் அங்கிருந்து நகருவதாக இல்லை. “மிஸ்டர்! எங்களுக்குப் பணம் வந்திருக்கிறது. அவசரமாக எங்களுக்குப் பணம் தேவை. தயவு செய்து கொடுத்துவிடுங்கள்” என்றாள் பொப்பி. “கிளையை மூடியாகி விட்டது. கணினியை அணைத்துவிட்டேன். நாளைக்குக் காலையில் ஒன்பது மணிக்கு வாருங்கள்!” அதைக் கேட்டதும் பொப்பியின் சகோதரி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாள். தெருவின் எதிர்ப் பக்கம் காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் இங்கேயே கவனித்துக்கொண்டிருந்தார். பொப்பி ஏதோவொரு மொழியில் உரக்கக் கத்தியதும் அழுதுகொண்டிருந்த சிறுமி தனது உதடுகளை இறுக மடித்து வாயை மூடிக்கொண்டே சத்தம் வராமல் விம்மினாள். அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. விம்மியவாறே தனது கால்களைத் தரையில் மாறி மாறி உதைத்துத் தெருப் புழுதியைக் கிளப்பிகொண்டிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து ஆந்ரே உண்மையிலேயே பதறிவிட்டான். “பொறுங்கள்…பொறுங்கள்…” எனச் சொல்லியவாறே நாற்காலியில் அமர்ந்து கணினிப் பொத்தானைச் சொடுக்கினான். விம்மிக்கொண்டிருந்த பெண் விம்மலுக்கிடையே பத்து எண்களைச் சொன்னாள். ஆந்ரே பணத்தை எடுத்துக் கொடுத்ததும், பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே சுருட்டி பொப்பி தனது உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு, தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினாள். எதிர்ப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் ‘என்ன?’ என்பது போல ஆந்ரேயைப் பார்த்தார். ஆந்ரே அவரைப் பார்த்து ஒரு சமாதானமான புன்னகையைச் செய்துவிட்டு, கிளையை மூடிவிட்டு, தனது சைக்கிளை மிதித்துக்கொண்டு சந்தைக்குப் போனான். அடுத்த நாள் காலையில், செய்தித்தாள் வாங்குவதற்காக வீதியோரப் பத்திரிகைக் கடையில் ஆந்ரே நின்றிருந்தபோது, அவனது தோளை யாரோ தட்டினார்கள். ஆந்ரே திடுக்கிட்டுத் திரும்புவதானால் கூட மிக மெதுவாகவே திரும்புவான். அதற்குள் தோளில் தட்டுவது யாராக இருக்கும் என யோசித்தான். அவனுக்குத்தான் நண்பர்கள் என்று யாருமே இல்லையே. வேலை! வேலையை விட்டால் மலிவு விலைச் சந்தை! சந்தையை விட்டால் அவனுடைய சிறிய அறை! வாரத்திற்கு ஒருமுறை தாயாரின் வீடு என்பதுதானே அவனது சிறிய வாழ்வு. ஆந்ரேயின் தோளைத் தட்டியவள் பொப்பி. “மிஸ்டர் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நேற்று உங்களுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல் ஓடிவிட்டேன்.” ஆந்ரே மங்கலான புன்னகையைச் செய்தவாறே “உங்களது சகோதரி எங்கே? தனியாக வரமாட்டீர்களே” என்று சும்மா கேட்டு வைத்தான். உடனேயே பொப்பியின் வட்ட முகம் மலர்ந்து விரிந்துபோனது. “நேற்று இரவே அவள் படகில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள். படகில் அனுப்பிவைக்கும் கடற்காகங்களுக்கு – அந்தக் குழுவை அப்படித்தான் எங்களது ஜங்கிள் முகாமில் குறிப்பிடுவார்கள் – பணம் கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேற்று உங்களைத் தொந்தரவு செய்துவிட்டோம். நீங்கள் சிரமம் பாராமல் பணத்தை எடுத்துக் கொடுக்கவில்லையென்றால், நேற்று அவளால் போயிருக்கவே முடியாது. நன்றி மிஸ்டர்” என்றாள். “பரவாயில்லை… என்னுடைய பெயர் ஆந்ரே. நீங்கள் தங்கையுடன் போகவில்லையா?” “இல்லை. ஆனால், சீக்கிரமே நானும் போய்விடுவேன். அப்பா அனுப்பிவைத்த பணம் அவளை அனுப்ப மட்டுமே போதுமானதாக இருந்தது. அவள் சின்னப் பெண். அவளைத்தானே முதலில் அனுப்ப வேண்டும். வரும் வியாழக்கிழமை அப்பா மீண்டும் பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள உங்களிடம்தான் வருவேன். அடுத்த படகில் நான் இங்கிலாந்துக்குப் போய்விடுவேன். உங்கள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்…மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்…” இரவு படுக்கையில் கிடந்து புரண்டுகொண்டிருந்த ஆந்ரே புகை பிடிப்பதற்காக எழுந்துசென்று, கடற்கரையை நோக்கியிருந்த ஜன்னலைத் திறந்தான். அந்த நேரத்திலும் கடற்கரையில் அகதிகள் உரக்கப் பேசியவாறே கூட்டம் கூட்டமாக அலைந்துகொண்டிருந்தார்கள். இன்று இரவும் ரப்பர் படகுகள் கடலைக் கடக்கவிருக்கின்றன என ஆந்ரே நினைத்துக்கொண்டான். பொப்பியும் இரண்டு நாட்களில் போய்விடுவாள் என்ற நினைப்பு அவனுள் வந்தபோது, அவனுக்குள் ஏனோ துயரம் பெருகியது. இது பொப்பிக்கான உபரித் துயரமா அல்லது எப்போதுமே தன்னோடு ஒட்டியிருக்கும் பெரும் துக்கம்தானா எனப் புரியாமல் அவன் குழம்பிப்போனான். உண்மையில், அவனில் துக்கம் மெல்ல மெல்லக் கரைந்துகொண்டிருக்கிறது என்பதைச் சற்றுச் நேரத்திலேயே உணர்ந்துகொண்டான். அவனுக்குள் பெரும் உளக் கொந்தளிப்பு ஏற்படவும், அந்தப் பதைபதைப்பைத் தாங்க இயலாமல் எழுந்து கட்டிலில் நின்றுகொண்டான். பொப்பியின் முகம் அவனுள் மெதுமெதுவாக நுழைந்து வெள்ளி முத்திரை போன்று பதிந்துகொண்டது. அவன் இதுவரை காதல் வயப்பட்டதில்லை. தனக்குள் தோன்றியிருக்கும் உணர்வு காதல்தானா? இது எப்படிச் சாத்தியம்? என்று அடுத்துவந்த நாட்களில் அவன் தத்தளித்துக்கொண்டிருந்தான். வியாழக்கிழமை காலையிலிருந்து அவன் பொப்பிக்காகக் காத்துக்கொண்டிருந்தான். மதிய உணவுக்குக்கூட கிளையை மூடாமல் பக்கத்துக் கடையில் ஒரு வரட்டு ‘சாண்ட்விச்’ வாங்கிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியைத் தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். வெறுமனே கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். பொப்பியின் பாஸ்போர்ட் விவரங்கள் கணினியில் இருந்தன. கிளையை மூடும் நேரமாகியும் பொப்பி வரவில்லை. ஆந்ரே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாகவே கிளையை மூடினான். பொப்பி ஏன் வரவில்லை? என்ன நடந்திருக்கும்? என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கியவாறே தனது சைக்கிளில் ஏறி ஆந்ரே அமர்ந்தபோது, காவல் கூண்டுக்குள் இருந்த பொலிஸ்காரர் “என்ன தம்பி இன்று கிளையைத் தாமதமாக மூடுகிறாய்? அய்ந்து மணிக்குமேல் ஒரு விநாடிகூட நீ இங்கே இருக்கமாட்டாயே…” என்று கேட்டார். ஆந்ரே ஏதோ ஒரு யோசனையில் சைக்கிளை மிதித்தான். மூன்று மிதிகளில் அது தெருவைக் கடந்து காவல் கூண்டருகே போய் நின்றது. “மிஸியூ. ஜோன் மிஷெல்… ஏன் இன்று நகரம் வழமையைவிட அமைதியாக இருக்கிறது? தெருவில் மனித நடமாட்டமே இல்லையே. ஏதாவது அகதிகள் பிரச்சினையா?” என்று ஆந்ரே பொலிஸ்காரரைக் கேட்டான். “கெட்டது போ! தம்பி நீ கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே கனவு காண்பவன். தெருவில் எப்போதும் போல அகதிகள் அலைந்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களை யாருமே ஒன்றும் செய்துவிட முடியாது. ஒரு மனிதனிடம் வதிவிட அனுமதி இல்லை என்ற காரணத்திற்காக அவனைச் சிறையில் அடைக்கக்கூடாது என்றொரு பாழாய்ப்போன சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்தச் சட்டம் மட்டும் ஒழிக்கப்பட்டால், நீ சொல்வது போல உண்மையிலேயே இந்த நகரம் அமைதியாகத்தான் இருக்கும்” என்றார் பொலிஸ்காரர். சைக்கிளை மிதித்துக்கொண்டிருக்கையில் பொப்பியின் ஞாபகமே ஆந்ரேயை முழுவதுமாக நிறைத்திருந்தது. சைக்கிள் அவனது அறையைச் சிறிய தயக்கத்துடன் கடந்து, ஜங்கிள் முகாமை நோக்கிச் சென்றது. 2 ஜங்கிள் முகாம், கலே நகரத்தை ஒட்டியிருந்த சிறு காட்டில் தோன்றியிருந்தது. இந்த முகாம் பிரெஞ்சு அரசாங்கத்தாலோ அல்லது வேறெந்தத் தொண்டு நிறுவனங்களாலோ அமைக்கப்பட்டதல்ல. அகதிகளால் உருவாக்கப்பட்ட இந்த முகாமை ‘அய்ரோப்பாவின் மிகப் பெரிய சேரி’ என்றுதான் ஊடகங்கள் வர்ணித்தன. முகாமில் காணப்பட்ட தேசிய இனங்களையும் மொழிகளையும் கணக்கெடுப்பது அரசாங்கங்களாலேயே இயலாத காரியம். விவிலியக் கதையில் வரும் அழிந்த பாபேல் கோபுரம் போல அந்த முகாம் இருந்தது. அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், சீனர்கள், ஆபிக்கர்கள், வங்காளிகள், இந்தியர்கள், இலங்கையர்கள், அல்பேனியர்கள் எனப் பல இனத்தவர்கள் அங்கே இருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஒழுங்கற்ற சிறு கூடாரங்கள் அந்தச் சிறு காட்டில் அகதிகளால் அமைக்கப்பட்டிருந்தன. மின்சாரம், சூடேற்றும் கணப்புகள், சுகாதாரம் எதுவுமற்ற அந்தக் கூடாரங்களில் பசி பட்டினியும் கடுங்குளிரும் நோயும் நிறைந்திருந்தன. மனிதக் கடத்தல்காரர்களைத் தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, நள்ளிரவில் கூடாரங்களுக்குள் நுழைந்து அகதிகளின் முகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சித் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும் பிரெஞ்சுக் காவல்துறையின் தொல்லை ஒவ்வொரு நாளுமே இருந்தது. தங்களுடைய நிம்மதியான உறக்கம் முப்பத்துமூன்று கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, அதை ஒருநாள் கண்டடைவோம் என்று அகதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தத் திடீர் முகாமில் முனைப்புள்ள சில அகதிகளால் சிறிய மளிகைக் கடைகளும் உணவகங்களும் கூட அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவகங்களுக்கு முன்னால் ‘காபூல் ரொஸ்ரோரண்ட்’, ‘தாஜ்மகால் தர்பார்’, ‘இஸ்தான்புல் கஃபே’ என்றெல்லாம் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. பொரித்த கோழிக்கால் விற்கும் கடையொன்றுக்கு ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. மரத் தூண்களாலும் தடிகளாலும் பலகைகளாலும் சிறிய மசூதி, கிறிஸ்தவ தேவாலயம், இந்துக் கோயில் போன்றவையும் முகாமில் அமைக்கப்பட்டிருந்தன. அகதிகளிலேயே மதகுருமார்களும் இருந்ததால் அந்த வழிபாட்டிடங்கள் குழப்பமில்லாமல் இயங்கி வந்தன. அந்த முகாமில் ஏழாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களில் ஆயிரம் குழந்தைகளும் இருந்தன. முகாமிலிருந்த அகதிகளுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்களையும் குளிர்காப்பு ஆடைகளையும் மருந்துகளையும் விநியோகித்தன. என்றாலும், அவை அகதிகளுக்குப் போதுமானவையாக இருக்கவில்லை. விநியோகம் நடக்கும் நாட்களிலெல்லாம் அகதிகளிடையே தள்ளுமுள்ளுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதுண்டு. முகாமில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். இவ்வாறான ஒரு அகதி முகாம் இதற்கு முன்பு உலகில் எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் ஒரே நாட்டை அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டுதான் அகதி முகாம்கள் அமைக்கப்படும். அந்த முகாம்களை ஓர் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்துவதாக இருக்கும். ஆனால், இந்த அகதி முகாம் அவ்வாறனதல்ல. பெருமழை, பெரும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போல் தோன்றிய முகாம் இது. ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இரண்டு இனத்தவரோ அல்லது இரண்டு மதத்தவரோ நேருக்குநேர் போர் புரிந்திருப்பார்கள். அவர்களிடையே காலங்காலமாகப் பகையுணர்ச்சியும் வெறுப்பும் மண்டிக் கிடக்கும். ஆனால், ஜங்கிள் முகாமிலோ இந்த இரண்டு பிரிவினரும் சேர்ந்து தங்கியிருக்க வேண்டியிருந்தது. பல நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகள் கூடாரங்களின்மீது ஏற்றப்பட்டு அலங்கோலமாக இருந்தன. அந்தக் கொடிகள் எதிர்த் தரப்பால் இரவுகளில் கிழித்து எறியவும்பட்டன. இதனால், அங்கே அடிக்கடி மோதல்களும் கைகலப்புகளும் ஏற்பட்டன. இதற்கொரு முடிவு கட்டுவதற்காக அங்கே பேச்சுவார்த்தைகளும் அகதிகளால் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து கடைசியில் ஒரு முடிவும் எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி, கூடாரங்களில் பறந்த எல்லா நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகளும் இறக்கப்பட்டு, முகாமின் நடுவில் ஒரேயொரு கொடி மட்டும் உயரமான கம்பத்தில் ஏற்றப்பட்டது. அது பிரித்தானியாவின் ‘யூனியன் ஜாக்’ கொடி. ஜங்கிள் முகாமின் உச்சியில் யூனியன் ஜாக் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்ட பிரெஞ்சு அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த யூனியன் ஜாக் கொடியை பிரெஞ்சு மண்ணில் நாட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலம் போர் செய்தும் அது நடக்காமல் போனது. ஆனால், இந்த அகதிகள் அதை நிமிடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஆந்ரே வீதியோரத்தில் சைக்கிளை நிறுத்திவைத்து, அந்தக் கொடியைக் கொஞ்ச நேரம் அண்ணாந்து பார்த்தவாறே இருந்தான். உண்மையில், அவன் இப்போதுதான் அந்தக் கொடியை நேரில் பார்க்கிறான். அவன் இதுவரை இங்கிலாந்துக்குச் சென்றதில்லை. ஜங்கிள் முகாம் மாரிகாலக் கடல் போன்று இரைந்துகொண்டிருந்தது. காடு முழுவதும் மனிதர்கள் திரிந்துகொண்டிருந்தார்கள். இதில் எங்கே போய், எப்படிப் போய் பொப்பியைக் கண்டுபிடிப்பது என ஆந்ரேக்குப் புரியவில்லை. வீதியிலிருந்து கிளைத்த ஒரு ஒற்றையடிப் பாதை புற்களுக்குள்ளால் ஜங்கிள் முகாமை நோக்கித் தாழ்வாகச் சென்றது. ஆந்ரேயின் சைக்கிள் அந்த ஒற்றையடிப் பாதையால் இறங்கிச் சென்றது. ஆந்ரே அகதிக் கூடாரங்களை நெருங்கியபோது, அங்கே ஏற்கெனவே தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒரு திறந்த வாகனத்திலிருந்து அகதிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே மிக நீண்ட வரிசை வளைந்து வளைந்து நின்றுகொண்டிருந்தது. பொப்பி ஏதாவது நோயில் விழுந்து, அந்த வரிசையில் நின்றிருப்பாளோ என்றுகூட ஆந்ரேக்குக் கற்பனை வந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே போனான். ஒரு தேநீர்க் கடையைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு, அங்கேயிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டான். தேநீர்க் கடையை நடத்திக்கொண்டிருந்த கிழவர் நீண்டதாடி வைத்து, தலையில் தொப்பி அணிந்திருந்தார். பிரெஞ்சு மொழி நன்றாகப் பேசினார். “நீங்கள் மருத்துவக் குழுவோடு வந்தவர் என நினைக்கிறேன். உங்கள் முகத்தைப் பார்த்தாலே மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாமே. தேநீர் அருந்துகிறீர்களா? புதினாவும் ஏலக்காயும் கலந்த கறுப்புத் தேநீர் உள்ளது.” ஆந்ரே தேநீரைப் பருகியவாறே அந்தக் கிழவரிடம் “அய்யா… நான் பொப்பி என்ற ஒரு பெண்ணைத் தேடி வந்தேன்” என ஆரம்பித்து, அவளது பாஸ்போர்ட்டில் அவன் பார்த்து ஞாபகத்தில் வைத்திருந்த அவளது வயது, நாடு போன்ற விவரங்களையும் சொல்லிவிட்டு “அவளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். கிழவர் வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக்கொண்டார். பிறகு “பொப்பி… இந்தப் பெயரை இங்கேதான் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே. எனக்கு எழுபது வயதாகிறதல்லவா…காலையில் கேட்டது மதியம் மறந்துவிடுகிறது” என்றவாறே கண்களைச் சுருக்கினார். “அவளது தங்கைகூட சமீபத்தில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள்…” என்றான் ஆந்ரே. “நீங்கள் நாளைக்கு வாருங்களேன். நான் விசாரித்து வைக்கிறேன். நாளைக்கு கறுவாப்பட்டையும் எலுமிச்சை இலைகளும் போட்டுத் தேநீர் தயாரிக்கவுள்ளேன்.” ஆந்ரே தனது மேலங்கிப் பைக்குள் இருந்து சதுர வடிவமான ‘வெஸ்டர்ன் யூனியன்’ அட்டையை எடுத்து அந்தக் கிழவரிடம் கொடுத்தவாறே “ஒருவேளை நான் சொல்லும் பொப்பியை நீங்கள் கண்டுபிடித்தால், இந்த அட்டையிலுள்ள அலைபேசி இலக்கத்திற்கு அழைக்கச் சொல்லுங்கள்” என நம்பிக்கையில்லாமலேயே சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். இரவு கவிந்துகொண்டிருந்ததால் அந்தக் காடு முழுவதும் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஆந்ரே வீதிக்கு வந்ததும் ஜங்கிள் முகாமை ஒருதடவை திரும்பிப் பார்த்தான். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் இறங்கியிருப்பது போல் அந்தக் காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் காலையிலிருந்தே அய்ந்து நிமிடத்துக்கு ஒருமுறை தனது அலைபேசியை எடுத்து ஆந்ரே பார்த்தவாறேயிருந்தான். அன்றைக்கென்று ஆங்கிலேய மாலுமிகள் கூட்டமொன்று நாணய மாற்றுச் செய்வதற்காக வந்து அவனை மொய்த்துப் பிடித்துக்கொண்டது. அதைப் பெரிய தொந்தரவாகக் கருதிக்கொண்டே தனது கவனம் முழுவதையும் ஆந்ரே அலைபேசியிலேயே வைத்திருந்தான். மாலையாகி, கிளையை மூடும் நேரமும் வந்தபோதுதான், முகப்புக் கண்ணாடியில் பொப்பி மெல்லத் தட்டினாள். “ஆந்ரே… என்னைத் தேடி முகாமுக்கு வந்தீர்களா என்ன! இந்த அட்டையைத் தேநீர்க்கடை அய்யா எனது கூடாரத்திற்கு வந்து கொடுத்தார்.” “ஆம். எனக்கு அந்தப் பக்கம் ஒரு வேலையிருந்தது. அப்படியே முகாமுக்கும் வந்து எட்டிப் பார்த்தேன்.நேற்று வியாழக்கிழமை. பணம் பெற்றுக்கொள்ள நீங்கள் வரவில்லை…” “கடவுள் உங்களுக்கு நன்மை செய்வார் ஆந்ரே! அப்பா அலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளார். அவரால் பணம் அனுப்ப முடியவில்லையாம். எங்கள் பகுதியில் போர் இப்போது மிக உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதால், எங்களது பழத்தோட்டத்தை விலைக்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தவர்கள் பின்வாங்கிவிட்டார்களாம். அப்பா என்னை இன்னும் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார். எப்படியும் பணம் அனுப்பிவிடுவார். நீங்கள் கிளையை மூடும் நேரத்தில் வந்து பணத்தைத் தருமாறு உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டேன்” என்றவாறே தலையைச் சாய்த்து வணக்கம் சொல்லிவிட்டு, பொப்பி அங்கிருந்து புறப்பட்டாள். ஆந்ரே கிளையை மூடும்போது, பொப்பி கடலைக் கடந்துவிடுவாள் என்ற எண்ணம் அவனுக்குள் மீண்டும் துக்கத்தைப் பெருக்கலாயிற்று. இது என்ன மாதிரியான பைத்தியகாரத் துக்கம் என்றே அவனுக்குப் புரியவில்லை. அவன் சைக்கிளில் ‘தேசிய வீரர்கள் நினைவுச் சின்னம்’ அமைந்திருந்த சதுக்கத்தைக் கடந்தபோது, பொப்பி வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவளருகே ஆந்ரேயின் சைக்கிள் தானாகவே நின்றது. “ஆந்ரே என்ன இந்தப் பக்கம்?” என்று பொப்பி கீழுதட்டைக் கோணிக்கொண்டே கேட்டாள். “எனது அறை இந்த வீதியில்தானே இருக்கிறது. அதைக் கடந்துதான் நீங்கள் ஜங்கிள் முகாமுக்குப் போக வேண்டும்” என்றான் ஆந்ரே. சைக்கிளைத் தள்ளியவாறே பொப்பியோடு சேர்ந்து நடந்துகொண்டே கேட்டான்: “உங்களின் தங்கை இங்கிலாந்தில் எப்படியிருக்கிறாள்? உங்களுக்காகக் காத்திருப்பாளே…” “உண்மைதான். அவள் எனக்காகக் காத்திருப்பாள். அவள் என்னைப் போல் தைரியமானவள் கிடையாது. எங்களது அம்மா போல் எல்லாவற்றுக்கும் பயந்தவள். அதுதான், அன்று அவள் தெருவில் நின்று எப்படிக் குழறி அழுதாள் என்று நீங்கள் பார்த்தீர்களே! இங்கிலாந்துக்குப் போவதற்கு அவள் படு உற்சாகமாகத்தான் இருந்தாள். ஆனால், அன்றிரவு கூடாரத்திலிருந்து அவள் கடற்காகங்களோடு கிளம்பும்போது, என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவறவிடக்கூடாது எனச் சொல்லி, அவளைத் தைரியப்படுத்தி அனுப்பிவைத்தேன். ஒரு அகதியின் எதிர்காலத்தை அந்த அகதி தீர்மானிப்பதில்லை. சந்தர்ப்பங்கள்தானே அதைத் தீர்மானிக்கின்றன. இல்லையா ஆந்ரே… அவள் அந்தக் கரையைப் போய்ச் சேர்ந்ததும் இங்கிலாந்து அரசாங்கம் அவளைப் பொறுப்பெடுத்து மான்செஸ்டர் நகரத்திலுள்ள ஒரு விடுதியில் வசதியாகத் தங்க வைத்திருக்கிறது எனக் கடற்காகங்கள் என்னிடம் சொன்னார்கள். இங்கிலாந்து எண்ணிலிருந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்திருந்தன. ஜங்கிள் முகாமில் அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காததால் அழைப்பைத் தவறவிட்டுவிட்டேன். அவள் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து அழைத்திருக்க வேண்டும்…” என்று பொப்பி பேசிக்கொண்டே போக, ஆந்ரேக்கு ஒரேயொரு யோசனைதான் அப்போது மூளைக்குள் ஓடியது. பொப்பி எவ்வளவு தெளிவாக, அர்த்தமாகப் பேசுகிறாள். எனக்கு இவ்வளவு வயதாகியும் இதெல்லாம் வரவில்லையே. கிளையைத் திறந்து வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த வேலை போய்விடுமா? போனால் என் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் இரவு முழுவதும் பினாத்திக்கொண்டு இருக்கிறேனே. இருவரும் பேசிக்கொண்டே ஆந்ரேயின் அறையை நெருங்கியபோது “பொப்பி எனது அறைக்கு வந்து என்னோடு தேநீர் அருந்திச் செல்வீர்களா?” என்று ஆந்ரே சட்டெனக் கேட்டான். “ஆந்ரே!” என்று வியப்புடன் கண்களை விரித்த பொப்பி “போகலாம்” என்றாள். இருவரும் எதிரெதிரே அமர்ந்து தேநீர் அருந்தும்போது, பொப்பி நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, தேநீர் மேசையில் முழங்கைகளை ஊன்றிக்கொண்டாள். அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள்.”உங்களது அறை மிகச் சுத்தமாகவும் கதகதப்பாகவும் இருக்கிறது ஆந்ரே. எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு என்னுடைய தேகம் கதகதப்பாகிறது” என்றாள். “பொப்பி உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். எனக்கு அந்த விஷயம் புரியவே இல்லை. ஜங்கிள் முகாமிலுள்ளவர்கள் பிரான்ஸிலேயே அகதியாகப் பதிவு செய்து இருக்கலாமே. ஏன் உயிரைப் பணயம் வைத்து ரப்பர் படகுகளில் கடலைக் கடக்கிறீர்கள்?” “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் ஆந்ரே. சிலருக்கு இங்கிலாந்தில் உறவுகள் இருப்பதால் அவர்களிடம் போகிறார்கள். பிரான்ஸை விட இங்கிலாந்தில் அகதிகளுக்கான சலுகைகள் அதிகம், இலகுவாக வேலை கிடைக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சிலர் கடலைக் கடக்கிறார்கள். ஆனால், நான் போகும் காரணம் வேறு.” “உங்கள் தங்கை அங்கே இருக்கிறாள்…” அது மட்டும் இல்லை. எங்களது கிராமத்திலிருந்து கிளம்பும்போதே இங்கிலாந்துதான் இறுதி நிலம் என்ற உறுதியான முடிவோடுதான் புறப்பட்டேன். யாராவது ஒருவர் என்னைப் பிரெஞ்சுக் குடிமகள் ஆக்குகிறேன் என்று சொன்னால்கூட அதை மறுத்துவிட்டு, நான் இங்கிலாந்துக்குத்தான் போவேன்.” ஆந்ரேக்கு ஏமாற்றம் தலைக்கேறி அடித்தது. அவன் ஒரு பரிதாபமான புன்னகையைச் செய்து அதைச் சமாளித்தவாறே “ஏன் அப்படி ஒரு உறுதியான தீர்மானம்? என்று கேட்டான். “உங்களிடம் அதைச் சொல்லலாம் ஆந்ரே… தவறில்லை. எங்களது குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். சொந்தமாகப் பழத் தோட்டங்கள் இருந்தன. காய்கறி விவசாயமும் உண்டு. பெற்றோருக்கு நாங்கள் இரண்டு பிள்ளைகள்தான். எங்களது வீடு கிராமத்திற்குச் சற்று ஒதுக்குப்புறமாகப் பழத் தோட்டங்களுக்கு நடுவே இருக்கிறது. யுத்தம் எங்களது பகுதிக்கு வந்தபோது எல்லாமே குலைந்துபோயின. பத்துப்பேர் ஆயுதங்களுடன் அணிவகுத்து வந்து ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தூக்கிச் செல்வதை நினைத்துப் பாருங்கள். பயந்து போய்விடுவீர்கள். ஆனால், அவர்களிடம் உதைவாங்கித் தரையில் இரத்தத்திற்குள் விழுந்து கிடந்த அப்பா “தைரியமாக இரு! பொப்பி தைரியமாக இரு!’ என்று கத்தினார். தங்கை அப்போது பாடசாலைக்குப் போயிருந்ததால் தப்பித்துக்கொண்டாள். என்னைத் தூக்கிச் சென்றவர்களுக்கு அவர்களது முகாம் வரை என்னைக் கொண்டு செல்லப் பொறுமையில்லை. வழியிலேயே புதர்களைக் கண்ட இடத்திலெல்லாம் என்னை உள்ளே தூக்கிப்போட்டு என்மீது படுத்துக்கொண்டார்கள். அவர்கள் என்னை முகாமுக்குக் கொண்டு சென்றபோது, எனது உடலின் எல்லாத் துவாரங்களிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! எல்லாத் துவாரங்களிலிருந்தும்!” ஆந்ரேயின் கால்கள் நடுங்கத் தொடங்கின. அவன் சட்டென மேசைக்கு அடியில் கால்களை நுழைத்துக்கொண்டான். ஏன் இவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்? இவள் எப்போது பதிலை நிறுத்துவாள்? என மருகத் தொடங்கினான். பொப்பி தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள்: “அவர்கள் யாருக்கும் எங்களுடைய மொழி தெரியாது. எங்களுக்கும் அவர்களுடைய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலமும் பேசத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் போலவே பிடித்து வரப்பட்டிருந்த பெண்கள் சாறு பிழிந்த சக்கைகளானதும் அவர்களை ஒவ்வொருவராகச் சுட்டுக் கொன்றார்கள். என்னையும் இரண்டொரு நாட்களில் சுட்டுவிடுவார்கள் என நான் எண்ணினேன். ஆனால், நான் தைரியமாகவே இருந்தேன். எனது உடலில் சக்தி, இரத்தம், வெப்பம் எல்லாமே போயிருந்தாலும் தைரியம் மட்டும் என்னோடிருந்தது. அந்த முகாமுக்குப் புதிதாக ஓர் அதிகாரி வந்தான். அவன் இளைஞன். அவன் எனது முகத்தைக் கைகளால் நிமிர்த்திப் பார்த்தபோது, நான் ஆங்கிலத்தில் அவனிடம் பேசினேன். அந்த இளைஞன்தான் என்னைக் காப்பாற்றினான் என்பதைக் காட்டிலும் ஆங்கிலமே என்னைக் காப்பாற்றியது என்றுதான் சொல்வேன். இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன்.” ஆந்ரே முழுவதுமாகத் துக்கத்துள் மூழ்கியிருந்தான். இப்படியான கதைகளைக் கேட்கும் சக்தி அவனுக்கு இல்லை. அழுகையைப் பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்தான். 3 அதற்குப் பின்பு ஆந்ரே, பொப்பியைச் சந்திக்கவேயில்லை. அவள் வருவாள் என அவன் காத்துக்கொண்டிருக்கவுமில்லை. பொப்பி அவனது கழுத்துவரை துக்கத்தை நிரப்பிவிட்டுப் போயிருந்தாள். அவன் கண்களை மூடியவாறே துக்கத்தில் அமிழ்ந்திருந்தான். பொப்பி என்னவானாள் என எப்போதாவது யோசனை வரும். அவள் தெளிந்த புத்தியுள்ள பெண், கண்டிப்பாக ஏதோவொரு வழியில் இங்கிலாந்துக்கு -அவளது இறுதி நிலத்திற்கு – போய்ச் சேர்ந்திருப்பாள் என நினைத்துக்கொள்வான். மூன்று மாதங்கள் கழிந்தபோது, குளிர் மடிந்து வசந்தம் தொடங்கியது. ஜங்கிள் அகதி முகாமை முற்றாக அகற்றப் பிரெஞ்சு அரசாங்கம் முடிவெடுத்தது. அதிரடிக் காவல்படை ஜங்கிள் முகாமுக்குள் இறக்கப்பட்டு, அகதிகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக பிரான்ஸின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். முகாமில் அமைக்கப்பட்டிருந்த அகதிக் கூடாரங்கள் பிரிக்கப்பட்டு, குப்பை வண்டிகளில் ஏற்றப்பட்டன. அகதிகளால் அமைக்கப்பட்டிருந்த தேவாலயமும் பள்ளிவாசலும் கோவிலும் கடைகளும் புல்டோசர்கள் வைத்து உடைத்துத் தள்ளப்பட்டன. அந்தச் சிறு காட்டில் அதீத மனித நடமாட்டத்தால் செத்துக் கிடந்த புற்கள் இயந்திரங்களால் ஆழ உழுது புரட்டப்பட்டபோது, நிலத்துக்குள் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. ‘அந்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் அங்கே புதைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று சட்ட மருத்துவ நிபுணர்களின் அறிக்கை தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆந்ரே காலை ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்துவிட்டு, தனது நாற்காலியில் அமர்ந்தவாறே பத்திரிகையை விரித்தபோதுதான் அந்தச் செய்தியை அறிந்தான். புதைக்கப்பட்டிருந்த உடல் பொப்பியுடையதாக இருக்குமோ என ஆந்ரேக்கு ஏனோ சந்தேகம் எழுந்தது. அவளாக இருக்காது என்றும் மனம் சொன்னது. அவன் தடுமாறினான். மெல்ல நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து, மெதுவாக நடந்து வீதியைக் கடந்து காவல் கூண்டை நோக்கிச் சென்றான். காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் “ஏய் தம்பி! சாலையில் வாகனங்களைக் கவனி! தூக்கத்தில் நடக்கும் வியாதியும் உனக்கு வந்துவிட்டதா?” என்று சத்தம் போட்டார். “மிஸியூ.ஜோன் மிஷெல்…ஜங்கிள் முகாமில் ஒரு பெண்ணின் உடல் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்தி படித்தேன். என்னதான் நடக்கிறது கலே நகரத்தில்? உங்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?” அந்தப் பொலிஸ்காரர் சற்றே குரலைத் தாழ்த்தியவாறே “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன் தம்பி… விஷயம் உன்னோடேயே இருக்கட்டும். கொலையாளிகளில் ஒருவனை இன்று அதிகாலையில் பெல்ஜியத்தில் வைத்து நமது ஆட்கள் கைது செய்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். அவன் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டானாம். ஜங்கிள் முகாம் விஷயமென்றால் எங்களது ஆட்கள் வேகமாகத்தான் செயற்படுகிறார்கள் பார்த்தாயா” என்றார். ஆந்ரே மறுபடியும் வீதியைக் கடந்து, கிளைக்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வெறுமனே கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மூளை ஜங்கிள் முகாமில் அலைந்துகொண்டிருந்தது. அப்போது, அலைபேசி மணி ஒலித்தது. சோர்வுடன் அலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு “வணக்கம்! வெஸ்டர்ன் யூனியன்” என்றான். அவனது காதிற்குள் கனத்த குரல் எதிரொலியுடன் கேட்டது: “ஆந்ரே! நான் பொப்பி. லண்டனிலிருந்து பேசுகிறேன்…” ஆந்ரே எதுவும் பேசாமல் அலைபேசியைக் காதுக்குள் வைத்தவாறே முகப்புக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது சிறிய விழிகள் அங்குமிங்குமாக அசைந்துகொண்டிருந்தன. “ஆந்ரே…பொப்பி பேசுகிறேன். கேட்கிறதா?” “பொப்பி! உண்மையிலேயே நான் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். உங்களைக் கொன்று புதைத்துவிட்டார்கள் என்று இப்போதுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.” “அது என்னுடைய தங்கை. நான் இங்கிலாந்து வந்தவுடனேயே அவளைத் தேடியலைந்துவிட்டு, அவளைக் காணவில்லை என இங்கிலாந்துக் காவல்துறையிடம் முறையீடு செய்திருந்தேன். இப்போதுதான் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்துத் தகவலைச் சொன்னார்கள். என்னால் பிரான்ஸுக்கு வர முடியாது. அங்கே எனக்குத் தெரிந்தவர் நீங்கள் ஒருவர்தான். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக் கொஞ்சம் விசாரித்து எனக்குச் சொல்கிறீர்களா?” “நிச்சயம் விசாரித்துச் சொல்கிறேன். இந்தத் துயரம் நிகழ்ந்தே இருக்கக்கூடாது” எனச் சொன்ன ஆந்ரே ஒரு விநாடி நிறுத்தி “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் பொப்பி?” என்று கேட்டான். “தைரியமாக இருக்கிறேன்” என்றாள் பொப்பி. Art : meithu https://thadari.com/poppy-is-a-nickname-shobasakthi/1 point- பொப்பி என்பது புனைபெயர் - ஷோபாசக்தி
இந்தக் கதை நீண்ட நாட்களுக்கு மனதில் நிற்கப் போகின்றது. கதை சொல்லப்பட்ட விதம் அப்படி இருக்கிறது. இணைப்புக்கு நன்றி கிருபன்.1 point- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் மதியம் 12 மணியிருக்கலாம். இந்திய இராணுவம் கோண்டாவில்ச் சந்தி நோக்கி முன்னகர ஆரம்பித்தது. முருகேசுவின் தேநீர்க் கடையினை அடுத்துவரும் தோட்டவெளியினை அவர்களது தாங்கி அண்மித்தவேளை புலிகள் தாக்கத் தொடங்கினார்கள். கடுமையான தாக்குதலையடுத்து இந்திய ராணுவத்தின் தாங்கி பின்னால் வர ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் பொதுமக்களை இரு வரிசைகளில் வீதியின் இருமருங்கிலும் நிற்கும்படி கட்டளையிட்டான் இந்திய படைப்பிரிவின் தளபதிபோன்று காட்சியளித்த ஒருவன். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சுமார் 50 இல் இருந்து 60 வரையான பொதுமக்களை அவர்கள் வீதியின் இருபுறமும் வரிசையாக நிற்கக் கூறிவிட்டு எமக்குப் பின்னால் அவர்களின் தாங்கி நின்று கொண்டது. தாங்கியின் மேல் அமர்ந்திருந்தவன் எம்மை கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கும்படி சத்தமிட்டான். வேறு வழியின்றி நடக்கத் தொடங்கினோம். புலிகளின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே எம்மை மனிதக் கேடயங்களாக இந்திய இராணுவம் பாவிக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டோம். ஆனாலும் வேறு வழியில்லை. முன்னால்ப் போனால் சண்டையில் அகப்பட்டு மடிவோம், போகமாட்டோம் என்று மறுத்தால் பின்னாலிருந்து இந்திய இராணுவம் எம்மைச் சுட்டுக் கொல்லும். ஆகவே வேறு வழியின்றி கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வமாஸ் பகுதி கடந்து, மதகடி வரும்வரை நடந்திருப்போம். நில்லுங்கள் என்று பின்னாலிருந்து கட்டளை வந்தது. தாங்கியும் எமக்குப் பின்னால் நின்றிருக்க, அதனைச் சூழ இந்திய இராணுவ வீரர்கள் கால்நடையாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தின் பின்னர் எம்மை மீளவும் நடக்கச் சொன்னார்கள். ஆனால் எம்மைப் பின் தொடர்ந்து இம்முறை அவர்கள் வரவில்லை. வாமாஸ் பகுதியுடன் தாங்கி நின்றுவிட்டது. இந்தியத் தாங்கி நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்தில் இருந்த வீடுகளின் மதில்களுக்கிடையே புலி வீரர்கள் நின்றிருந்தார்கள். கைகளில் ஆர் பி ஜி. முகத்தில் அச்சமில்லை. வீதியில் நின்ற இந்தியத் தாங்கியே அவ்வீரனது இலக்கு என்பது தெரிந்தது. தன்பக்கம் திரும்பிப் பார்க்காது தொடர்ந்து நடக்குமாறு அவர் கைகளால் சைகை செய்தார். நாம் அப்படியே செய்தோம். அவரைப்போலவே இன்னும் சில புலி வீரர்கள் அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்தார்கள். நாம் கோண்டாவில்ச் சந்தியை அடைந்தபோது அங்கிருந்த புலிகளின் ஒரு அணியினர் எமக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். தவறாது இந்திய இராணுவத்தின் விபரங்கள் குறித்தும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் கேட்ட விடயங்களைக் கூறிவிட்டு, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.1 point- இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை
இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை Dec 7, 2025 - 07:23 PM 'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது. இந்த அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழான உதவிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் வழங்கப்படும் கடன் வசதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் நிதியிடல் வசதியாகும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியின் (EFF) கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ள ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவிலிருந்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, இலங்கையினால் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி நிதி உதவிக்கான அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். https://adaderanatamil.lk/news/cmivs9kmk02h7o29nc0m9axqp1 point- புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
புலர் அறக்கட்டளையால் 5ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 31 point- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
எமது வீட்டின் முன்னால் வந்து நின்ற இந்திய இராணுவ அணி வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கியினால்ச் சுடத் தொடங்கியது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அவரை தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்கள் எமது வீடு நோக்கி நடத்தப்பட்டன. அந்த இருள்வேளையிலும் எமது வீடு திருவிழாக் கோல போலக் காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டினுள் புகுந்தார்கள். எவரையும் காணாததால் எமது அயல் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரு நல்லூரிற்குப் போய்விட்டார்கள் என்று நாம் எண்ணியிருக்க, "ஐயோ, பிள்ளைகள் இருக்கினம், சுடாதேயுங்கோ, வெட்டாதையுங்கோ" என்று அவலக் குரல்கள் கேட்கத் தொடங்கின. "அடக் கடவுளே, அவர்கள் எவரும் நல்லூரிற்குப் போகவில்லை" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அந்த அவலக் குரல்கள் எவையுமே இந்திய இராணுவத்தின் காதுகளுக்கு ஏறவில்லை. சரமாரியாகச் சுடத்தொடங்கியது இந்தியாவின் சாத்தான் படை. இடைவிடாது 30 நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் எந்த அழுகுரலும் எமக்குக் கேட்கவில்லை. சுமார் காலை 4 மணியிருக்கலாம். கிழக்கில் கீற்றலான வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாமிருக்கும் பகுதியும் வெளிச்சமாகி விடும். நிச்சயம் எம்மைக் காண்பார்கள், நாமும் கொல்லப்படுவோம் என்பது உறுதி என்பது புரிந்தது. "சரி, இனி இதுக்குள்ள இருக்கேலாது, கையை தலைக்கு மேலால தூக்கிக்கொண்டு வெளியில போவம்" என்று தந்தையார் மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருக்க, "யாராவது இன்னும் உள்ளே ஒளிந்திருந்தால் இப்போதே வெளியே வாருங்கள், அல்லது நாம் உள்ளே வந்து சுட்டுக் கொல்வோம்" என்று ஆங்கிலத்தில் ஒருவன் கத்தினான். "வேறு வழியில்லை, இனிமேல் இருந்தால் கொன்றுவிடுவார்கள், சரி வெளியில் வரலாம்" என்று தந்தையார் கூறவும், இருந்த இடத்திலிருந்து எழுந்து, கைகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தபடி, "நாம் சிவிலியன்கள், எங்களைச் சுடவேண்டாம்" என்று அழுதபடியே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சில அடிகள்தான் முன்னால் எடுத்து வைத்திருப்போம். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, சுமார் 30 அல்லது 40 இந்திய இராணுவத்தினர் எம்மைச் சூழ்ந்துகொண்டார்கள். சிலர் துப்பாக்கிகளை எமக்கு நேரே பிடித்தபடி சுட ஆயத்தமாவது தெரிந்தது. எமது வாழ்க்கை முடிவிற்கு வரப்போவது தெரியவே அழத்தொடங்கினோம். அவர்களுள் ஒருவன் முன்னால் வந்தான். சுமார் 50 இல் இருந்து 55 வயது வரை இருக்கலாம், ஹிந்தியில் ஏனைய இராணுவத்தினருக்கு ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு, "நீ புலிதானே, எங்கே ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே தந்தையாரை துப்பாக்கியின் பின்புறத்தால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான். அடியின் அகோரம் தாங்காது அவர் கீழே வீழ்ந்தபடி, "நான் ஒரு தபால் அதிபர், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை" என்று ஆங்கிலத்தில் அலறத் தொடங்கினார். அருகில் நின்ற இன்னொரு இராணுவத்தினன் எனது பிடரியில் ஓங்கி அறைந்தான், சிறிதுநேரம் கண்கள் கலங்கி தலைசுற்றத் தொடங்கியது. தந்தையார் தன்னை தபால் அதிபர் என்று கூறியதும் அதுவரை அவரைத் தாக்கிக்கொண்டிருந்தவன் தாக்குவதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான். "இங்கிருந்துதான் புலிகள் தாக்கினார்கள். உனக்குத் தெரியாமல் அவர்கள் இங்கு இருந்திருக்க முடியாது. அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல். ஆயுதங்களைக் காட்டு, அல்லது உங்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லப்போகிறேன்" என்று அதட்டினான். நாம் புலிகள் இல்லை, எம்மிடம் ஆயுதங்களும் இல்லை என்று நாம் கூறியதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. காலை நன்றாக விடிந்திருந்த அவ்வேளையில் எம்மைச் சுற்றி நடந்திருந்த அகோரங்களை அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். எமது வீட்டின் முற்பகுதி முற்றாக இடிந்துபோயிருக்க, இந்திய இராணுவத்தின் தாங்கியொன்று வீட்டின் முன்னால் நின்றிருந்தது. கூரை முற்றாக எரிந்து போய் கீழே வீழ்ந்து காணப்பட்டது. ஒழுங்கையின் முழு நீளத்திற்கும் கட்டப்பட்டிருந்த மதில்கள் முற்றாக இடிந்து தரைமட்டத்துடன் சேர்ந்திருக்க, மின்கம்பங்கள், வேலிகள், மரங்கள் என்று அனைத்துமே முற்றாகத் தறிக்கப்பட்டு அப்பகுதி முற்றான அழிவினைக் கண்டிருந்தது.1 point- பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
1 pointமூட்டை முடிச்சுகளுடன் போனால் பெரிய தொகை தருவார்கள். மாதாமாதம் ஒரு தொகையும் வரும். இலங்கையில் பெரிய வீடுகளைப் பார்க்கவில்லைப் போல.1 point- தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் திருடப்பட்ட புறாக்களுடன் ஒருவர் கைது! தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த 32 வெளிநாட்டுப் புறாக்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி திருடப்பட்டிருந்த நிலையில் அந்தப் புறாக்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போது, விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டது. விசாரணைகள் முடிவடையும் வரை அவை பராமரிப்பிற்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த போதே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிர்வாகத்தினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/14554941 point- இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
இந்த தொடரில் எனது அபிமான வீரர்களான டி காக் மற்றும் யெஸ்வால் சதம் அடித்தது கண்னுக்கு குளிர்சியாக இருந்தது.பவுமா இரன்டு இனிங்சிசும் முறையே 4-2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரைச் சதத்தை தவற விட்டது அதிர்ஸ்ட்டம் இன்மை.1 point- யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்
எந்ந நோயால் பாதிக்கப்பட்டவனுக்கும் தெரியும் தனக்கு நோய் உள்ளது என்று.ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டும் அது தெரியாது.இது ஒரு பெரிய கொடுமை.1 point- இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
தொடரை வென்ற இந்தியா - குல்தீப், ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். 6 டிசம்பர் 2025 இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். இதன் மூலம், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடரின் நாயகன் விருதை வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,டி காக் 106 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரயன் ரிக்கில்டன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து, ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரிக்கில்டன். அடுத்ததாக கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினார். இந்த ஜோடி பத்து ஓவர்கள் வரை பொறுமையாகவே ஆடி வந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 21 ரன்களும், டெம்பா பவுமா 19 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு, டி காக் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுபுறம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டெம்பா பவுமா 48 ரன்களில், ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டியில் பவுமா 46 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல, இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திய முதல் விக்கெட்டும் இதுதான். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த டி காக்- டெம்பா பவுமா பார்ட்னர்ஷிப் உடைந்தது இந்தியாவுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின்னர் மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார். டி காக் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது (93 ரன்கள்), 28வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் மேத்யூ ப்ரீட்ஸ்கே. அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் அதே ஓவரில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி காக் சதம் ஹர்ஷித் ராணா வீசிய 29வது ஓவரில், ஒரு சிக்ஸர் மூலமாக சதத்தை எட்டினார் டி காக். பின்னர் அவர் 32வது ஓவரில் பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன், 89 பந்துகளில் 106 ரன்களை எடுத்திருந்தார் டி காக். அப்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்கோ ஜான்சன் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் 38வது ஓவரில், குல்தீப் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 234/5 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, 270 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பிரசித் கிருஷ்ணாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்தியா வெற்றிபெறுவதற்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணியின் அதிரடி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரோஹித் சர்மா 54 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி இந்திய அணிக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து 155 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 271 ரன்கள் என்ற இலக்கை எளிதான ஒன்றாக மாற்றினர். ரோஹித் சர்மா 54 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரை சதமடித்தார். இருப்பினும், 26வது ஓவரின் கடைசி பந்தில், 75 ரன்கள் எடுத்திருந்தபோது, கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன், 73 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி, அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார். ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்களை எட்டினார். மறுமுனையில், கோலியும் அரை சதத்தைக் கடந்தார். இறுதியில், 39.5 ஓவர்களில் 271 ரன்களை எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேசமயம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அடுத்ததாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். முதல் போட்டி கட்டாக்கில் நடைபெறும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3vd3pyzdo1 point- மாவளி கண் பார்
1 pointஇதற்கு கிழுக்கட்டை என்றும் ஒரு சொல் இருக்கின்றதா................. கொழுக்கட்டை என்ற சொல்லில் கட்டை கொஞ்சம் இடிக்குதே என்று நினைத்திருந்தேன்............... கிழுக்கட்டை என்பது கிட்டத்தட்ட கிளுவம் கட்டை என்பது போல ஒரேயடியாக இடிக்குதே...............🤣.1 point- பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
1 pointஉலகம் முழுவதும் பிரித்தானியா அடாத்தாக அந்த மக்களைக் கொலை செய்து கொள்ளையடித்து இன்னமும் பல நாடுகளிடம் கப்பம் வாங்கிக் கொண்டிருக்கும் நாட்டிலிருந்து அந்தந்த மக்கள் தமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
அனுராவிற்க்கு ஆதரவு அதிரிக்கின்றது👍1 point- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
1 pointஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.1 point- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
1 pointஇதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது. சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம். நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார் சொல்லி, பின் விலத்தியது (எப்படி நடந்த உடல் உறவு இல்லாமல் போகும்) மற்றது கோயிலில் திருமணம் (இதுவே எல்லாரையும் ஏய்க்காட்டும் கதை). (நடிகை புகாரை விலத்துவது என்பது, புகார் பகிடிக்கு சொன்னது என்று வரும், வருகிறது) நடிகை தங்கி இருந்தது 'பெண்' என்ற போர்வைக்குள்ளும் (மேற்கிலும் இது பொதுவாக பாவிக்கப்படுவது) - அதை நீதி மன்றம் கிழித்து விட்டது. சீமானின் நிலை ஏறி இருக்கிறது - எந்த விதமாக பார்த்தாலும், சீமான் செய்தது நடிகையின் குற்றச்சாட்டுக்கு செய்த மறுதாக்கம் - அதுக்கு தானே நீதி மன்ற உத்தரவு சீமான் மன்னிப்பு கேட்கும்படி அப்போது என் சீமான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை சொல்வதை மறுக்கும் போது. நடிகை சொல்வதை சீமான் மறுத்தது, சட்டத்துக்கு உண்மை என்று நடிகையே நிரூபித்துவிட்டார் . சீமான் அவதூறு பேசியது கூட, அது இயற்கையா (மனித சுபாவம்) என்றல்லவா வருகிறது. செய்யாத ஒரு விடயத்தை செய்தது என்று குற்றம் சுமத்தும் போது, எவருக்கும் ஆத்திரம் தலைக்கேறும் என்பது.1 point- கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு! வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபா நிவாரணமாக வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கணடறியப்படவில்லை என கோவா காவல்துறை தலைவர் அலோக்குமார் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/14554560 points- மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! written by admin December 7, 2025 மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத்தூபி, இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7, 2025) மீண்டும் உடைத்து எறியப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபி, செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரியும் ‘மக்கள் செயல்’ எனும் இளையோர்களால் கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்டது. தொடரும் அத்துமீறல்! அமைதி வழியில் நீதி கோரும் இந்த நினைவுத்தூபி, கடந்த ஒக்டோபர் மாதமும் விஷமிகளால் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அன்றைய தினமே அது மீண்டும் நிறுவப்பட்ட போதிலும், தற்போது இரண்டாவது முறையாக உடைத்து எறியப்பட்டுள்ளது. மக்கள் உணர்வுகளுடனும் போராட்டக் கோரிக்கைகளுடனும் தொடர்புடைய ஒரு நினைவுச் சின்னம் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது கவலை அளிக்கிறது. https://globaltamilnews.net/2025/223798/0 points- 'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை
'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.'' என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார். மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். திட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பேரில் கோகிலவதனியும் ஒருவர் ஆவார். தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்தும், கடன்களை பெற்றும் தமது எதிர்காலத்தை எண்ணி கட்டிய வீடு திட்வா புயல் காரணமாக இன்று இல்லை என்கிறார் அவர். உறவினர் வீட்டில் குழந்தைகள் கடந்த 26-ஆம் தேதி பெய்த கடும் மழையின் போது இவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் கோகிலவதனியின் வீட்டின் ஒரு புறம் முற்றாக சேதமடைந்துள்ளது. மண்மேடு ஒரு புறத்தை சேதப்படுத்தியுள்ளதுடன், மறுபுறத்தில் வீடு தாழிறங்கியுள்ளது. வீடு கட்டியுள்ள நிலம் தாழிறங்கதாலும், வீடு முழுவதும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாலும் இந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடு அமைந்துள்ள நிலத்திற்கு கீழ் ஊற்று நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிந்ததுடன், அதனால் வீடு படிப்படியாக தாழிறங்கி வருகின்றது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டை இழந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த கோகிலவதனியின் குழந்தைகள், தற்போது பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடைந்த வீடு, மின்சாரம் இல்லாத நிலைமை, குடிநீர் என அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள தாம் எவ்வாறு பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்திருப்பது என்கிறார் கோகிலவதனி. படக்குறிப்பு,மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. சமைத்து சாப்பிட கூட இயலாத நிலை ''பிள்ளைகளையும் அங்க விட்டு விட்டோம். போன் பண்ணி எப்போ வாரீங்க. எப்போ வாரீங்க, எப்போ கூட்டிட்டு போறீங்கனு கேட்குறாங்க. அவர்களை கூட்டிட்டு வந்து எங்க வைத்திருப்பது என்று தெரியவில்லை. அவங்களும் பாவம். நாங்களும் என்ன செய்வது? இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்க இயலாத நிலைமை. நாங்களே இன்னுமொரு இடத்தில தான் தங்கியிருக்கின்றோம். அடுத்த நாள் காலையில வீடு இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் வருகின்றோம் நாங்கள். சமைத்து சாப்பிட கூட இயலாத நிலைதான் இருக்கு.'' என கோகிலவதனி குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,தயாளன் கடுமையான கஷ்டத்திற்கு மத்தியில் கட்டிய வீட்டில் தான் வாழ்ந்தது சிறிது காலமே என கோகிலவதனி கண்ணீர் மல்க கூறுகின்றார். ''இந்த வீட்டில் வந்து நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். வீடு கட்டி ஐந்து ஆறு வருஷமாகுது. நாங்கள் பிள்ளைகளோட சந்தோஷமாக இருந்தோம் . இப்போது எப்படி திரும்ப வந்து இந்த வீட்டில இருப்பது என்று கவலையாக இருக்குது. நகை எல்லாம் வச்சு தான் இந்த வீட்டை கட்டி எடுத்தோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடுப்பு கூட இல்லை. இன்னொருத்தர் கிட்ட வாங்கி தான் நாங்க உடுப்பை உடுத்துறோம்'' என அவர் குறிப்பிடுகின்றார். ''இனி இந்த வீட்டில் வாழ கஷ்டம். சின்ன மழை வந்தாலும் இந்த இடத்தில் இப்போது இருக்க முடியாது." படக்குறிப்பு,தயாளன் "கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் தான் இந்த வீட்டை கட்டினோம். அதுவும் இல்லாமல் போயிட்டது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது," என்கிறார் தயாளன். தயாளன், கோகிலவதனி தம்பதிக்கு மாத்திரம் அல்ல. லட்சக்கணக்கானோர் இப்படியான பல பிரச்னைகளை திட்வா புயலினால் எதிர்கொண்டுள்ளனர். வீடுகளை சுத்திகரிக்கவும், வீடுகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளவும், வீடுகளை புனரமைத்துக் கொள்ளவும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமது எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதை எண்ணி தயாளனும் கோகிலவதனியும் இந்த நாட்களை கடத்தி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj0m0pdlvyo0 points- கருத்து படங்கள்
0 points0 points- தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்! தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன். நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது. சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில் மிகவும் பிரபலமானவர். இந் நிலையில் அவரது மறைவு, நவீன தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத ஒரு மனிதரின் பெயரை திரைப்பட உலகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சரவணன் இன்று (04) காலை வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் கலையரங்கின் மூன்றாவது மாடியில் இன்று பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். இந்த ஸ்டுடியோ – ஒரு நிறுவனமாக – அவரது தலைமையால் வடிவமைக்கப்பட்ட எண்ணற்ற தயாரிப்புகளின் தாயகமாக இருந்து வருகிறது. 1939 ஆம் ஆண்டு பிறந்த சரவணன், தனது தந்தை ஏ.வி. மெய்யப்பனிடமிருந்து ஏ.வி.எம். தயாரிப்பின் பொறுப்பைப் பெற்று, சினிமா உலகில் விரைவாக அடியெடுத்து வைத்தார். தனது சகோதரர் எம். பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து, 1950களின் பிற்பகுதியில் கலையரங்கை வழிநடத்தத் தொடங்கினார். அந்தக் காலத்தின் மறக்கமுடியாத சில படங்களை மேற்பார்வையிட்டார். சரவணனின் பணி பல தசாப்தங்கள், வகைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பரவியுள்ளது. அவரது நீண்ட தொழில் வாழ்க்கையில், சரவணன் பல காலகட்டங்களில் பல மைல்கல் படங்களை தாயரித்துள்ளார். அவற்றில் நானும் ஒரு பென் (1963), சம்சாரம் அது மின்சாராம் (1986), மின்சார கனவு (1997), சிவாஜி (2007), வேட்டைக்காரன் (2009), மற்றும் அயன் (2009) சூப்பர்ஹிட் திரைப்படங்களை நாம் பெயரிட்டுக் கொண்டே போகலாம். https://athavannews.com/2025/14551290 points - பூரணநாயகி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.