Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3207
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20174
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34641
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    89396
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/31/26 in Posts

  1. இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா............. 'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்ன பிரதிவாதத்தை வைத்தார்கள்.................... அது தூய்மையா அல்லது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதமா................ அந்த 15 கோடி தனியே நடந்த ஒரு ஒற்றைத் தவறு அல்ல............ ஒவ்வொரு படத்துக்கும் இவர்கள் இப்படியே செய்கின்றார்கள்............... வாங்கிய சொத்துகளின் பத்திரப் பதிவுகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அங்கேயும் சீமான் போன்றே இவர்கள் எல்லோரும் நடந்து கொண்டிருப்பார்கள்.............. இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்கும் ஒரு விடயம் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கின்றாரா, விஜய்.................. தூய்மை, நேர்மை என்றால் அங்கிருந்தும் ஆரம்பிக்கலாம் தானே............... லெஜண்ட் சரவணன் இந்த தேர்தலில் நின்றால், அவர் தன் சொத்துகளை காட்டியே ஆகவேண்டும். அவருக்கு வேறு வழியே கிடையாது. இதையே தான் விஜய்யும் செய்கின்றார். தொழில்முறை அரசியல்வாதிகளுக்கு பினாமிகள் ஆரம்ப நாட்களில் இருந்தே இருக்கின்றார்கள். சாமியார்கள், பெரிய சாமிகள் கூட அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருக்கின்றார்கள். ஆனால் விஜய்க்கும், லெஜண்ட் சரவணனுக்கும் இதுவரை பினாமிகள் இல்லை. ஆனால் இவர்கள் அரசியலில் சம்பாதிக்கும் போது இவர்களும் பினாமிகளை உருவாக்கிக் கொள்வார்கள். 'அவர்கள் காசாக கொடுத்தால், நாங்கள் மாஸாக கொடுப்போம்.................' என்று விஜய் நிற்கும் தொகுதிகளில் தவெகவினர் பெண்களுக்கு மூக்குத்தி கொடுக்கப் போகின்றார்கள். கூவம் ஆற்றின் நடுவில் தான் விஜய்யும் குளித்துக் கொண்டு நிற்கின்றார். விஜய் போன்று புதிதாக அரசியலுக்கும் வருபவர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான விடயம் என்னவென்றால் ஊழலை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே, ஆனால் அவர்களுக்கு நன்கு தெரிந்த, மிகவும் பரிச்சயமான அவர்களின் துறைகளில் இருக்கும் ஊழல், அநீதிகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். கமல் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சுருக்கமாகச் சொன்னால், விஜய் ஒரு மாற்றுச் சக்தியே கிடையாது. இவரும் அவர்களில் ஒருவரே. அதைவிட இவர் அறிமுகப்படுத்தும் 'வொர்த்தே இல்லை.................' போன்ற முன்னுதாரணங்கள் இவரது ரசிகர்களை சீரழிக்கவே போகின்றது. ஸ்டாலின் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு.................. 2001ம் ஆண்டில் இவரது நண்பர் ரமேஷும், அவரது குடும்பமும் தற்கொலை செய்து கொண்டார்கள்............... அரசியல்வாதிகளின் ஈவிரக்கம் அற்ற பினாமி உலகம்........... ஜெயலலிதாவுக்கும், சங்கராச்சாரியாருக்கும் கூட இதுவே தான் தகராறு என்று அன்று பேசப்பட்டது............
  2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், ஒரு மனிதரின் குணாம்சம் மிக இலகுவாக வெளியான இடம் இது, நானும் நம்பவில்லை விஜய் ஒரு மாற்று சக்தி என, ஆனால் பிரபல அரசியலால் விஜய்க்கு என தனியான ஒரு வாக்காளர் கூட்டம் உள்ளதாகவே நினைக்கிறேன், அவர்களை ஒரு பொதுப்புரிந்துணர்வு அற்ற கூட்டமாகவே வைத்திருக்க முயற்சிக்கிறார்கள், அது த . வெ . க மட்டுமல்ல அனைத்து தமிழ் நாட்டு கட்சிக்களும் தமக்கென அவ்வாறானவர்களை கொண்டுள்ளது. தமிழ்நாட்டு வாக்காளர்கள் மாறாதவரை அவர்களுக்கு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சரியான தலைமை வராது.
  3. அங்கிள்கள் மாறி..மாறி முதுகு சொறிந்து கொண்டு இருக்கும் போது… இதென்ன…இப்படி லொஜிக்கலா கேள்வி கேக்கிறியள்😂. நீங்கள் சொன்னது மட்டும் அல்ல, உக்ரேன்- MBS பேச்சு, ஒப்பந்தத்தை தம்பர் ரசிக்கவில்லையாம். ஆனால் எமது பாதுகாப்பு எமது முடிவு என சவுதி கறாராக சொன்னதாம். அதுதான் தம்பர் சவுதி இளவரசர் என் பின் பக்கத்தை முத்தமிட வேண்டும் என பகிரங்கமாக உளறியவர். அதேபோல் அண்மைய நாட்களில் உக்ரேன் இன்னும் சில பகுதிகளை விட்டு ரஸ்யாவை விரட்டி வேறு உள்ளது. ஒரு சின்னச் சமன்பாடு மேற்கின் ஆயுதத்தை மட்டும் வைத்து உக்ரேன் 4 வருசமா செத்த கிளிக்கு சோறு தீத்துது. ஆனால் அதே ஆயுதங்களின் 100 மடங்கை கொண்டு அமெரிக்காவால், ஈரானை வெல்ல முடியவில்லை. முடிவு: கொள்கை பிடிப்புள்ள மக்கள் + சமயோசிதமான, கொள்கைக்கு நேர்மையான தலைமை இருந்தால் - எந்த கொம்பன் வந்தாலும், வீழ்த்துவத் கடினம். ஆனால் இதை எல்லாம் சொன்னால் யாழில் அங்கிள் மாருக்கு பிபி ஏறிடும். உக்ரேன் ஓவர்…செலனஸ்கி க்கு பீவர் எண்டு எழுதினால், நல்லா முதுகு சொறிந்து விடுவார்கள்😂
  4. 'Based on the memories of a War Child' என்ற வாசகத்துடன் நீளிரா திரைப்படம் வருகிறது. ஈழம் சார்ந்த கதைக்களம். இதனை எழுதி இயக்கியிருப்பவர் சோமிதரன். ஊடகவியலாளர் என்பது அவருடைய தொடக்க கால அடையாளம். யாழ் நூலக எதிர்ப்பு தொடர்பாக 'எரியும் நினைவுகள் - Burning memories' சுவடிப் படத்தினை (Ducumentary film) 2006இல் உருவாக்கியவர். அந்தச் சுவடிபடத்திலேயே அவருடைய கலை நுட்பத்தின் சில அம்சங்களைக் காண முடிந்தது. பாலு மகேந்திராவிடமும் மற்றும் சில தமிழக முன்னணி இயக்குனர்களிடம் திரைக்கலை பயின்றவர். ஒரு நல்ல படைப்பை குறிப்பாக திரைப்படத்தை உருவாக்குவது என்பது மேதமை மிக்க கலைப் பார்வையோடு, திரைத் தொழில்நுட்பம், கதை அறிவு (story knowledge), சமூக-உலக பார்வையையும் கோரிநிற்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை, அபிப்பிராயம். சோமிதரன் இத்தகைய ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற மதிப்பீடும் அவதானிப்பும் எனக்குண்டு. நீளிரா முன்னோட்டமும் அந்த நம்பிக்கையைத் தருகின்றது. திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து திரைக்கு வருகிறது. படத்தைப் பார்த்தபின் அதனை விமர்சன பூர்வமாக அணுகலாம். வாழ்த்து சோமிதரன் Somee Tharan & குழுவினர் - ரூபன் சிவராஜா https://www.facebook.com/share/1CParquwWA/
  5. இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 01 [தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு 'நிர்வாகச் சுருக்கமாக' (Executive Summary) அமைகிறது; இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தொடக்ககால வரலாறு குறித்த முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள், வரலாற்று மேற்கோள்கள் மற்றும் முதன்மை ஆதாரங்களைக் கொண்ட விரிவான 30-பகுதி தொடர் வெளியிடப்படும்.] இலங்கையின் ஆரம்பகால வரலாறு தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் மற்றும் வாய்வழி மரபுகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான மற்றும் சுவாரசியமான விடயமாகும். கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இலங்கையின் வரலாறு எழுதப்பட்ட காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டதை வெளிப்படுத்துகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே வேட்டையாடி வாழ்ந்த மக்கள் இங்கு வாழ்ந்ததையும், பின்னர் தென்னிந்தியாவுடன் கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருந்ததையும், காலப்போக்கில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் நாகரிக மையமாக இலங்கை மாறியதையும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக, தீவின் கடந்தகாலம் முக்கியமாக மகாவம்சம் மற்றும் தீபவம்சம் போன்ற பண்டைய நூல்களின் மூலமே விளக்கப்பட்டது. இந்த நூல்கள் பெறுமதிமிக்க கலாசாரத் தகவல்களை வழங்கினாலும், நவீன வரலாற்றாசிரியர்கள் இலங்கையின் ஆரம்பகால மனித வரலாற்றை மீளமைக்க தொல்பொருள் மற்றும் அறிவியல் சான்றுகளையே அதிகம் நம்பியுள்ளனர். இருப்பினும், பௌத்த வரலாற்று நூல்கள் பெரும்பாலும் சிங்கள அரசர்களையும் பௌத்த மதத்துடனான அவர்களின் தொடர்பையும் மையப்படுத்திய ஒரு பார்வையை முன்வைத்தன. இது தமிழர்களின் இருப்பைக் குறைத்து மதிப்பிட்டது அல்லது புறக்கணித்தது. இத்தகைய பதிவுகள், தமிழர்கள் பிற்காலத்தில் வந்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியதுடன், தீவின் கலாசாரம், வர்த்தகம் மற்றும் குடியேற்றங்களில் அவர்களின் பங்களிப்பையும் மறைத்தன. இதன் விளைவாக, தமிழர்கள் வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதுடன், இது காலப்போக்கில் இனரீதியான பதற்றங்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுத்தது. ஆனால், நவீன தொல்பொருள் ஆய்வுகளும் கல்வெட்டுகளும், தமிழ் பேசும் மக்கள் பண்டைய காலத்திலிருந்தே இலங்கையின் வரலாற்றில் வர்த்தகம், அரசியல் மற்றும் கலாசாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இக்கட்டுரை தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றிய ஒரு சமநிலையான பார்வையை முன்வைக்கிறது. பல்வேறு துறைகளின் ஆதாரங்களை விமர்சன ரீதியாக ஆராய்வதன் மூலம், இலங்கையின் கடந்தகாலத்தைப் பற்றிய முழுமையான மற்றும் துல்லியமான சித்திரத்தை இது வழங்குகிறது. 1. வரலாற்றுக்கு முந்தைய இலங்கை: ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் (கி.மு. 125,000 – கி.மு. 1000) இலங்கையில் மனித நடமாட்டத்திற்கான ஆரம்பகால சான்றுகள் 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. வட இலங்கையின் இரணைமடுப் படிவு (Iranamadu Formation) மற்றும் தென்கிழக்கின் புந்தல (Bundala) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளை வெளிப்படுத்தியுள்ளன. குவார்ட்ஸ் (Quartz) மற்றும் செர்ட் (Chert) கற்களால் செய்யப்பட்ட இக்கருவிகள் தாவரங்களை வெட்டவும், இறைச்சியைப் பதப்படுத்தவும், விலங்குத் தோல்களைத் தயார் செய்யவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கடல் மட்டம் குறைந்திருந்த காலங்களில், இலங்கையும் தென்னிந்தியாவும் நிலப்பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தபோது, இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்த ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) அல்லது ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் (Homo heidelbergensis) போன்ற ஆதி மனித இனங்கள் இக்கருவிகளை உருவாக்கியிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முக்கியமான வரலாற்றுக்கு முந்தைய இடங்கள்: பாஹியங்கல (Fa Hien Cave) மற்றும் பட்டதொம்பலென (Batadombalena) குகைகள் பின்னர், சுமார் கி.மு. 38,000 அளவில், பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis / Balangoda Man) என்று அழைக்கப்படும் நவீன மனித இனம் இத்தீவில் வாழ்ந்தது. பாஹியங்கல மற்றும் படதொம்பலேன போன்ற குகைகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், இவர்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்ந்த திறமையான வேட்டைக்காரர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் தொல்பொருள் ஆய்வாளர் சிரான் உபேந்திர தெரணியகல [archaeologist Siran Upendra Deraniyagala] மேற்கொண்ட ஆய்வுகள், இந்த வரலாற்றுக்கு முந்தைய கலாசாரங்களின் காலவரிசையை நிலைநிறுத்த உதவின. பாஹியங்கல குகை அகழ்வாராய்ச்சியில் மிகச்சிறிய கற்கருவிகள் (Microlithic tools), எலும்பு கருவிகள் மற்றும் மழைக்காடு சூழலில் வில் மற்றும் அம்புகளின் ஆரம்பகால பயன்பாட்டிற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கண்டுபிடிப்புகள் அக்காலத்துக்கே உரிய மிகவும் மேம்பட்ட பிழைப்புத் தொழில்நுட்பங்களை அவர்கள் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன. இந்த ஆரம்பகால வேட்டைக்காரர்களின் சந்ததியினர் இலங்கையின் பழங்குடிச் சமூகமான வேடர் (Vedda) மக்களுடன் தொடர்புடையவர்கள் என பல அறிஞர்கள் நம்புகின்றனர். மரபணு மற்றும் மானுடவியல் ஆய்வுகளின்படி, வேடர் மக்கள் தமிழ்நாட்டின் இருளர் (Irula) மற்றும் கேரளாவின் பணியர் (Paniya) போன்ற தென்னிந்திய பழங்குடியினருடன் நெருங்கிய மூதாதையர் தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தொடர்புகள் இலங்கையினதும் தென்னிந்தியாவினதும் ஆரம்பகால மக்கள் ஒரு பரந்த வரலாற்றுக்கு முந்தைய கலாசார வலையமைப்பின் அங்கமாக இருந்ததை நிரூபிக்கின்றன. நன்றி ✍️ கந்தையா தில்லைவிநாயகலிங்கம் BSc Engineering (Honours) அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 02 தொடரும் துளி/DROP: 2124 [இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/34603917772590095/?
  6. உலகத்தில் ஆயுத பலம், அதிகாரம் அனைத்தின் போக்கையும் காலம் காலமாக தீர்மானிக்கின்றது சாத்தர். நமது நாட்டு இலவச கல்வி முறை தவறான தகவல்களை வழங்கி மண்டையை கழுவிவிட்டதால் இப்போது தடுமாறுகின்றோம். முன்பு சமூகக்கல்வி என ஒரு பாடம் படித்தோமே. சொல்லி வேலை இல்லை. மண்டையை அடித்து துவைத்து நாராய் உரித்துவிட்டது. நிற்க, நாங்கள் ஆப்பிள் போனை பாவித்துக்கொண்டு, மெட்டாவில் தகவல்களை பரிமாறிக்கொண்டு, கூகிழில் வாழ்ந்துகொண்டு அமெரிக்கா மீது கொதிப்பு அடையலாமா?
  7. ம். அந்நிய நாட்டுக்குள் பலாத்காரமாக புகுந்து, கொலை செய்து, அவர்களின் வளங்களை கொள்ளையடித்துக்கொண்டு வருவாராம், இவருக்கு மற்றவர்கள் செங்கம்பளம் விரித்து பாதுகாப்பு வழங்க வேண்டுமாம்! இந்த நாடெல்லாம் உலக வல்லரசாம். நாடுகளை மிரட்டி, அடிபணிய வைத்து, அவர்களது சொத்தில் வல்லரசு கனவு. அது தகர்க்கப்படும் காலமும் இதுவே.
  8. ‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது என பலர் நடித்துள்ள படம், 'நீளிரா'. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள இப்படத்தை சோமிதரன் இயக்கியுள்ளார். ஏப்.3-ல் வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன், தன் வலியை, தன் நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படம் வெறுப்பை பேசவில்லை. வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படமல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. இந்தப் படம் யாரையும் நேரடியாக விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்புக்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களைத் தான் பதிலாக சொல்ல முடியும்" என்றார். ‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்
  9. நான் அப்படி எங்கும் எழுதவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும். அந்த அனுர பாசத்தை எப்படி உணர்கின்றீர்கள்? யார் குணா கமல்? ஓ கமலகாசன் நடித்த குணா திரைப்படத்தை சொல்ல வருகின்றீர்களா? அது நல்லபடமாச்சே? கண்மணி அன்போட காதலன் பாடலும் அருமையோ அருமை😎
  10. சீர்காழியார் போலவும் இருக்கின்றது . ..... அவருக்கு பல கிளைகள் கிடையாது......அவர் ரோல்ராய்ஸ்,ரோலெக்ஸ் மாதிரி...... ரி . எம் . எஸ் சுக்கு எம் . ஜி.ஆர் ......சிவாஜி என்று பல கிளைகள் உண்டு.....அதனால் அவர் சீர்காழி போலவும் ட்ரை பண்ணியிருக்கலாம் . .......! 🙂 உங்களை வரவேற்பதில் இந்தத் தளம் பெருமையடைகிறது ......... நன்றி கவி ......! நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ .........! 😍 பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்.....!
  11. உங்களால் முடியாது! - சோம.அழகு தொண்ணூறுகள் வரை பிறந்த பெண்கள் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டனர்(!) என்பதைப் பற்றித்தான் இக்கட்டுரை. இதை அநீதியாகப் பார்த்த சில விவரமறியாதவர்கள், ‘ஏன்?’ ‘எங்ஙனம்?’, ‘எவ்வாறு?’ என்றெல்லாம் மண்டையைப் போட்டுப் பிசைந்த போதுதான் மண்டைக்காடு அருகில் உள்ள எழுத்திட்டான் பாறையில் சில முக்கிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆண் இனத்திற்கு மட்டுமே புரியும் Menglish மொழியில் எழுதப்பட்ட கட்டளைகள் அடங்கிய குறிப்புகள். காலப்போக்கில் அக்குறிப்புகள் ஆடவர்களின் மரபணுவில் நிரந்தரமாகவும் இயல்பாகவும் ஏறிவிட்டதாம். அக்கட்டளைகளை ‘Immediate family members who happen to be the supposedly the weaker sex too’ – இவர்களிடம் செவ்வனே சிரமேற்கொண்டு நிறைவேற்றி ‘வந்த’ (அடுத்த தலைமுறையில் மாற்றம் துவங்கியிருக்கிறது என நம்ப விழைகிறேன்!) Rhada’man’thine வகையறாவுக்கு முதற்கண் நம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் …. ஆமா, உங்களை யாரு இப்ப ரொம்பச் சரியா இதை வஞ்சப் புகழ்ச்சி தொனியில் வாசிக்கச் சொன்னது? இனி கூகுள் மொழியாக்கத்துடன் ‘பெரும்பாலான’ ஆண்களுக்காக அருளப்பட்ட அக்குறிப்புகளின் தொகுப்பு தமிழில்: [‘பெரும்பாலான’ – என்ன ஒரு அற்புதமான வார்த்தை! நான் கூற வரும் விஷயத்தில், இந்த அருமையான சொல்லை விட்டு விடலாம்தான். ஆனால் ‘எல்லா ஆண்களும் ஒன்றும் அப்படி அல்ல” என்று அரிதிலும் அரிதான எடுத்துக்காட்டுகள் (‘அவ்வாறு இருக்கிறார்களா?’ என்பதே அலசி அலுப்படைய வேண்டிய விஷயம்!) மட்டுமே பூதக்கண்ணாடி வழியாகப் பேசப்படும். எனவே இவ்வார்த்தையைச் சும்மானாங்காட்டி போட்டு வைப்போம். அனைவரும் தாம் ‘மிச்சச்சொச்ச’ பிரிவில் நிற்பதாகத் தம்மைத் தாமே நம்ப வைத்து ஆசுவாசமடைந்து கொள்ளட்டுமே!] பலதரப்பட்ட பெண்களுடன் உரையாடியதில் கீழுள்ளவை அனைத்தும் உண்மை என உறுதிபடுத்தப்பட்டுள்ளன. Driving liberates a woman – எவ்வளவு பெரிய தான்தோன்றித்தனமும் மூடத்தனமும் நிறைந்த வாசகம்! இதை முக்காலத்திலும் மடவரல் எவரும் உணர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். (circa கி.பி 1980) இளங்கன்று பயமறியாது. எனவே அப்பிராயத்தில் வண்டி ஓட்டிப் படிக்கும் ஆசை அரிவைகளுக்குத் துளிர் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறித் துளிர் விட்டால் வேரோடு பிடுங்கிப் பிய்த்துக் களையெடுப்பு செய்தல் வேண்டும். ‘ஒழுங்கா காலேஜ் படிச்சு முடிக்குற வழிய பாரு’, ‘கல்யாணத்துக்கு அப்புறம் வண்டி ஓட்ட படிச்சுக்கோ’, ‘பச்சப்புள்ளைய கைல வச்சுக்கிட்டு இந்த ஆச என்னத்துக்கு இப்ப?’ என இருக்கவே இருக்கின்றன பல ஆயுதங்கள். வாழ்க்கையில் எது முதன்மையானது என்ற குழப்பத்தில் இருக்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுவது நம் தலையாய கடமையன்றோ? குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு வண்டி ஓட்டுவதைப் பற்றி நினைக்கக் கூட தைரியம் வராது. அபூர்வமாக முப்பதுகளுக்குப் பிறகு அந்தத் தைரியம் பேரிளம் பெண்களிடம் எட்டிப் பார்ப்பதாக தெரிந்தால் ‘நேரம் எங்க இருக்கு?’, ‘கண்ணு தெரியாத வயசுல…’, ‘இன்னும் கொஞ்ச வருசத்துல பல்லு போன கெழவியாகப் போற…’, ‘இப்ப என்ன? கார் ஓட்டப் படிச்சு flightஆ ஓட்டப் போற?’ என அப்போதும் கை கொடுக்கும் அஸ்திரங்கள் உண்டு. எதற்கும் மசியாத பிடிவாதக்காரியாக(!) (உலக வழக்கில் - அடங்காப்பிடாரியாக) இருந்தால் கற்றுக் கொடுக்கும் பணியை வீட்டின் ஆண்களே ஏற்றெடுப்பது உசிதம். கண்டிப்பாக ஓட்டுநர் பள்ளிக்கு இசைவு தெரிவிக்கக் கூடாது. அங்கு யாரேனும் ஒரு பெண் சொல்லிக் கொடுக்க வந்தால் அவர் சொல்வதைக் கேட்டு “வண்டி ஓட்டுறது ரொம்ப சுலபமாமே! எளிதா கத்துக்கிடலாம்னு சொல்றாங்க” என நம்மிடமே தன்னம்பிக்கையோடு வந்து சொல்வாள். பின் நாம் “அது…. அவங்க நல்லா ஓட்டத் தெரிஞ்சவங்களா இருப்பாங்க… அவங்க சொல்றதையெல்லாம் நம்பாத… ரொம்ப கஷ்டம்” என்று மீண்டும் மடவோளின் மண்டையைக் கழுவும் கடினமான பணியை ஏற்றெடுக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் மீறி ஓட்டுநர் பள்ளிக்குச் சென்றால் நான்கைந்து பேருடன் ஒருவராக ஒரு நாளைக்கு சுமார் கால் மணி நேரப் பயிற்சி கிட்டினாலே பெரிய விஷயம். அதிலும் accelerator, brake, clutch என எல்லா கட்டுப்பாடுகளும் பயிற்சியாளரின் கையில்… இல்லை! காலில் இருக்கும். இவ்வளவையும் தாண்டி எகிறி குதித்துக் கற்றுக் கொண்டுவிட்டால் கூட, பிறகு எப்படியும் நம் முன் ஓட்டாமலேயா போய்விடுவார்கள். அப்போது “இந்த லட்சணத்துல ஓட்டத்தான் டிரைவிங் ஸ்கூல் போனியாக்கும்? என்னை விடவா அங்க சொல்லித் தந்துருக்க போறாங்க?” என்று கடித்து வைக்கலாம். வசதி வாய்ப்பு, அனுமதி, நெருக்கமானவர்களிடம் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற சமயோசிதம் - ஓட்டுநர் பள்ளிக்குச் செல்ல இவற்றில் ஏதேனும் ஒன்று வாய்க்கப்பெறாத தம் வீட்டு வனிதைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலக் கொடுமை அரங்கேறப் போகிறதெனில் ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இன்னொரு கல்வெட்டில் கிடைக்கப் பெற்றன : “I yell at you and stress you out, because I care for you” – நமது இந்த அன்பு, பாசம், நேசம், அக்கறையெல்லாம் பேதைகளின் பெரு மூளைக்கு உரைக்காது எனினும் இதனை விடாமல் கடைபிடிக்க வேண்டும். முதன்முதலாக வண்டியைக்(car) கிளப்பிச் சக்கரங்களைச் சுழல வைக்கும் rocket science காரிகைகளுக்குக் கை வராமல் பார்த்துக் கொண்டாலே போதும். பாதி வேலை முடிந்து விட்டது. இங்கு எவ்விதமான குற்றவுணர்வும் தேவையில்லை. இதன் மூலம் அவர்களையும் இன்ன பிற சக உயிர்களையும் பெரும் விபத்திலிருந்து காக்கிறோம் என்ற உயரிய(!) எண்ணத்தை நமது ஆழ்மனதில் நட்டு வைக்க வேண்டும். இயந்திரம்(engine) முட்டி முட்டி வண்டி முன்னும் பின்னும் வெடுக் வெடுக்கென இழுத்து நின்று போகும் ஒவ்வொரு முறையும் அருகில் அமர்ந்திருந்து ஏளனம் கலந்த எரிச்சலைக் காற்றில் பரவ விடுதல் (ராகு கேது சனி பெயர்ச்சிகளைக் காட்டிலும்) நல்ல பலன் தரும். ஒருவேளை இவ்வளவு முட்டுக் கட்டைகளையும் கடந்து ‘வண்டியைச் செலுத்துதல்’ என்னும் அடுத்த கட்டத்திற்கு நாரி நகர்ந்து விட்டாள் என்று கொள்க. ‘ப்ச்…’, ‘உஸ்ஸ்ஸ்…’, ‘ufffff...’, ‘அய்யோ..’, ‘கண்ணு என்ன பொடணிலயா இருக்கு?’ – நடுநடுவே இவ்வாறெல்லாம் வினையாற்றி அவளைக் கொலையாய்க் கொல்க. [கொள்க – கொல்க , அட! அட! அட! நிச்சயம் இக்குறிப்புகளை இயற்றியவன் கவிஞனாகத்தான் இருக்க வேண்டும்] ‘எத்தன தடவ சொல்லிக் குடுத்தாலும் மண்டைலயே ஏறாதா? உள்ள மூளைதான் இருக்கா இல்ல களிமண் இருக்கா?’ – வாய்ச்சொற்கள் என்னப் பலனும் இல! எனவே தேவையற்ற சூழலில் அடிக்கடி இவ்வார்த்தைகள் மொத்தத்தையும் பரிகாசம் பரிமளிக்கும் பெருமூச்சாக பாவைகளிடம் வெளிப்படுத்தினால் பாற்கடலில் படுத்திருக்கும் பெருமாளே பாயாசம் கடைந்து பாசமாகத் தருவார்! இடையிடையே ஆத்திரத்தை மிகவும் கடினப்பட்டு அடக்குவதைப் போன்ற பாவனைகளில் ஈடுபடுதல் நங்கையின் நாடித்துடிப்பை அதிகரித்து Cortisol, Adrenaline ஆகியவற்றின் உடனடி சுரப்பிற்குக் கண்டமேனிக்கு உதவும். அப்புறம் எவ்வளவு குட்டிக்கரணம் அடித்தாலும் அவர்கள் மனதால் நிதானத்திற்கு வரவே இயலாது. அப்படியே ஜென் மனநிலையைக் கடைபிடிக்க முயன்றாலும்தான் நாம் இருக்கிறோமே! உலையில் கொதிக்கும் அரிசியைக் கிண்டியவாறே, குழம்புக்குப் புளியைக் கரைத்து விட்டு, கூட்டு பொரியலுக்கான தேங்காயையும் அரைத்து….. மதிய வேளைக்கான சமையலை முடித்து காலை உணவு தயாராகும் போது நடுவில் குழந்தையைப் பள்ளிக்குக் கிளப்பி அனைவருக்கும் உணவை டப்பாவில் அடைத்து…. இப்படி அநாயசமாகச் சுழல்பவர்களிடம் “Clutchஅ அழுத்தி gearஅ மாத்தி அப்புறம் clutchல இருந்து மெதுவா கால எடுக்கும் அதே நேரத்துல மெல்ல accelerator குடுக்கணும். Steering controlயையும் விட்டுற கூடாது. உனக்கு multi taskingலாம் வராது” என மனசாட்சியே இல்லாமல் மூஞ்சியில் அடித்தவாறு சொல்லிட வேண்டும். நாம் கொடுக்கும் இவ்வளவு குடைச்சலையும் இம்சையையும் தூக்கிப் போட்டுத் தப்பித் தவறி ஓரளவு நன்றாக ஓட்டுகிறார்கள் எனில் “வண்டி ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது? steeringஅ நேரா புடி” என ஒழுங்காகச் செல்லும் வண்டியில் நேராகப் பிடித்திருக்கும் steeringஐ இன்னும் நேராகப் பிடிக்கச் சொல்வது; “அந்தா பாரு… லாரி நிக்குது (‘நிற்கத்தானே செய்கிறது!’ என்றெல்லாம் அவர்களை யோசிக்கவே விடக்கூடாது)… பாத்து பாத்து… கவனமா…” எனத் திடுக்கிடும் தொனியில் திணறடிப்பது; “அங்க ஒருத்தர் ஓரமா நடந்து வராரு பாரு… தள்ளிப் போ… அங்க ஏன் பாக்குற?(‘நீதான மேன் பாக்கச் சொன்ன?’ என்று அவர்கள் கேட்பதற்கான நேர இடைவெளியே இருக்கப்பிடாது!) ரோட்ட பாத்து ஓட்டு” - புதிய பீதிகளைப் புழுதியாய்க் கிளப்பி எந்நேரமும் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். வீட்டில் சும்மா இருக்கும் போது கூட வண்டி ஓட்டும் சூட்சமங்களைப் புளி, எலுமிச்சை, சபீனா பொடி போட்டு விளக்கு விளக்குன்னு விளக்கி அவர்களுக்கு வண்டி ஓட்டும் ஆசையே போய்விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது வேலை செய்யவில்லையெனில் கோர விபத்துகள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள், நிகழ்தகவுகள் (possibilities and probabilities) எல்லாவற்றையும் கற்பனைச் சூழல்களாக்கிக் கொடூரமாக விளக்கிப் பயத்தைப் பத்து கிலோ வகுறு புடைக்க ஊட்டி விட வேண்டும். “கொஞ்சம் தயக்கமா இருக்கு’ என்னும் பெண்ணிடம் ‘வண்டி ஓட்ட வரும் போது தைரியமா வரணும். Confidence ரொம்ப முக்கியம். இப்படி பயந்துட்டே இருந்தா ஒரு மண்ணும் படிக்க முடியாது” என்று ஆகக் கழிசடையான தன்னம்பிக்கை வகுப்பின் போர்வையில் - இப்படி ஒரு உருட்டு. “Yes. I am confident” என்று அணங்கு போல் வந்து நின்றால் “நீ நினைக்குற மாதிரி அது ஒண்ணும் சாதாரண காரியம் இல்லை. தன்னம்பிக்கை மட்டும் போதாது. யார் மேலயும் மோதிடாம கவனமா ஓட்டணும். ஓட்டிருவியா? ரோட்டுல ரோடு ரோலர் போகும்; தலைக்கு மேல விமானம் பறக்கும்; கடல்ல கப்பல் போகும்…. எங்கயும் இடிச்சுட மாட்டேல்ல? அப்புறம் பெரிய பிரச்சனை ஆகிரும்” என்று அச்சுறுத்தும் வகையில் - அப்படி ஒரு உருட்டு. அம்புட்டுதேன்! ஆக மொத்தம் ‘உனக்கு வண்டி ஓட்ட வராது’ – இதுவே தாரக மந்திரம். அவ்வப்போது இதை வெவ்வேறு வடிவங்களில் அள்ளித் தெரிவைகளின் மீது தெளித்துத் கொண்டே இருத்தல் நலம். இறுதியாக எல்லாவற்றையும் ஊதித் தள்ளி நன்றாக ஓட்டி ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டார்கள் எனில் சற்றும் கூச்சம், நாணம், வெட்கம் (அழுத்திக் கூறவே ஒருபொருட் பன்மொழி!) எதுவுமின்றி நமது கற்றுக் கொடுக்கும் திறனை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் வியந்தே ஆக வேண்டும். ஒருபடி மேலே சென்று, “நானா கண்டு பொறுமையா சொல்லிக் கொடுத்தேன். வேற யாராவதா இருந்தா பாதிலயே ஓடிருப்பாங்க. இன்னும் சாவிய தடவிட்டு உக்காந்துருக்க வேண்டியதுதான்… ஹி ஹி ஹி” என்று வெற்றிக் களிப்பில், வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றலாம். உரிமத்தோடு அவர்கள் ஓட்டுகையில் “உனக்கெல்லாம் யாருதான் உரிமம் குடுத்தாங்களோ? மானே தேனே….” என்று அவ்வப்போது மட்டம் தட்டி உரிமத்தை அவர்களே கிழித்துப் போட வேண்டி ஊக்குவிக்கலாம், பாசி மணி விக்கலாம், சீப்பு விக்கலாம் ….. நமது நசநசப்பு தாங்காமல் பாதியிலேயே கற்றுக்கொள்வதை விட்டு விட்டார்கள் எனில், உடனடியாகவோ சில வருடங்கள் கழித்தோ “ஒழுங்கா அன்னைக்கு விடாம வண்டி ஓட்டிருக்கலாம். இன்னைக்கு எவ்வளவு உபயோகமா இருந்துருக்கும்? ப்ச்… கொஞ்சம் பொறுமையா படிச்சுருக்கலாம்” என்று அறச்சீற்றம் கொள்ளலாம். ‘பொறுமையா சொல்லித் தந்திருக்கலாம்’ என்ற மடந்தைகளின் எதிர் வாதம் மடத்தனமானதாகவே பார்க்கப்பட வேண்டும்! தாம் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளாதது மட்டுமே மாதுக்களுக்கு நினைவில் இருக்கும். ஏன் கற்றுக் கொள்ள மறுத்தோம் என்பதெல்லாம் மறந்து விடும். மறக்கடித்தே ஆக வேண்டும். ‘சாலை விபத்துகளிலும் அபாயகரமாக ஓட்டுவதிலும் பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர்’ எனக் கூறும் புள்ளி விவரங்கள்; ஒரு நடிகரின் வண்டிக்கு அருகில் காட்டுத்தனமாக வண்டியை ஓட்டி வலுக்கட்டாயமாக விழுப்புண் வாங்குவது; சும்மா சாலையில் செல்லும் போதே முன் சக்கரத்தைத் தூக்கியவாறே பொறி பறக்கச் செல்வது; வேண்டுமென்றே வளைந்து நெளிந்து சென்று அனைவரையும் தடுமாறச் செய்வது…. இவ்வாறாகப் பலதரப்பட்ட அருமை பெருமைகள் அடங்கிய சில பல ஆடவர்களின் வரலாற்றை ஒரு புறமாக ஒளித்து வைத்து விட்டு, வண்டியைக் கொண்டு போய்ச் சில பல பெண்கள் எங்காவது முட்டி விழும் காணொளிகளைத் தூக்கிக் கொண்டு வந்து சில்லறைகளைச் சிதற விட்டுச் சிரிப்பாய்ச் சிரித்து வைக்கலாம். ************************ எல்லா பெண்களும் சரியாக ஓட்டுவதில்லைதான். ஆனால் கற்றுத் தரும் ‘பெரும்பாலான’ ஆண்களிடம் இதை ஓங்கிச் சொல்லலாம் - ஓயாமல் ‘உன்னால் முடியாது’ என்ற சமிக்ஞைகளைத் தராமல் கற்றுத் தர உங்களால் முடியவே முடியாது. தெரியவும் தெரியாது. ஆண் ஒருவர் கற்றுக் கொடுப்பதைப் போலவே பெண் ஒருவர், (அதுவும் immediate family member) ஆணுக்கு அதே ‘வாஞ்சை’யுடனும்(!) அதே ‘ஊக்கமளிக்கும்’(!) தொனியுடனும் கற்றுக் கொடுத்தால் தாம் போதிக்கும் அதே பொறுமையை ஆண்கள் கடைபிடிப்பார்களா என்று சோதனை செய்து பார்க்கும் ஆவல் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன் என்கிறது. முடிவுதான் தெரியுமே! பயிற்சி காலத்தின் போது ரொம்பவே கைகொடுக்கும் பொன்மொழி – SILENCE IS GOLDEN! (AND DUCT TAPE IS SILVER!!!) வண்டி ஓட்டிப் பழகிக் கொண்டிருந்த காலத்திலும் அதன் பிறகும் ஆண்களைக் குட்டிக் கொண்டே இருக்க யாரும் இருந்ததே இல்லை! And that ….. that alone makes a (freaking) hell lot of difference! ************************ நியூ யார்க்கின் ஒரு நீளமான தீவில்தான் தற்போது வாசம். என்னவன் பொருள்வயின் பிரிதல் படலத்தால் இரண்டு நாட்கள் வெளியூர் சென்று விட, கடும் குளிரில் அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தையை நடத்தியே அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். பத்து நிமிட நடைதான் என்றாலும் எலும்பைத் துளைக்கும் குளிரிடம் தோற்றே ஆக வேண்டும். பள்ளியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பரப்பளவுக்குள் இருப்பவர்களுக்குப் பள்ளி வாகனம் கிடையாது. இந்தச் சின்ன தொலைவுக்கு Uberம் வராது. இவ்வளவிற்கும் எனக்கு வண்டி ஓட்டத் தெரியாமல் இல்லை. விறைத்தபடியே வீட்டினுள் நுழைந்தும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலையும் கண் மண் தெரியாத கடுங்கோபமும் ஒன்று சேர இப்பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து இரண்டு பத்திகள் மேல் வரை எழுதி முடித்துவிட்டு என்னவன் திரும்பி வந்ததும் இக்கட்டுரையைப் பற்றிக் கூறினேன். சிரித்துக் கொண்டே “ஒரு நாள் ஒன்ன தனியா விட்டுட்டுப் போக முடியுதா? சரி, இன்னைக்கு நீயே வண்டி ஓட்டு. ரொம்ப பக்கத்துலதான? வா பழகிக்கோ” எனப் பரிவுடன் கூறியதைக் கேட்டு ‘மீண்டும் ஒரு முறை’ புத்தி கெட்டுப் போய் ஒப்புக் கொண்டேன். நெடு நாட்களுக்குப் பிறகு வண்டியை எடுக்கிறேன் ஆதலால் ரொம்ப மெதுவாகவே ஓட்டிக் கொண்டிருந்தேன். வண்டியை எடுத்த நொடியிலிருந்து அருகில் அமர்ந்திருந்த என்னவன் என்னும் ஜீவனின் வாய் ஒட்டே கிடக்கவில்லை. “வேகமா அழுத்து….” எனத் துவங்கி “ஏன் ஓரமா போற? அந்தக் கல்லு மேல ஏத்தப் போறியா?”, “போ ... போ… நிப்பாட்டு… brake புடி… ஏன் நிக்குற? நீதான் முதல்ல இந்த crossingக்கு வந்த… போ” (இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒரே வாக்கியத்தில் வர முடியும் எனப் புதிதாகக் கற்றுக் கொண்ட நாள் அது!)……. இப்படியாகப் பட்டியலில் உள்ள சில விதிமுறைகளைக் கனக்கச்சிதமாக என்னிடம் செயல்படுத்த, இம்முறை நான் “கொஞ்ச நேரம் பேசாம வாங்கப்பா… நான் பாத்துக்குறேன். Stop getting on my nerves” என்று சொல்வதை முழுதாகக் கூட முடிக்க விடாமல் “பேசீட்டே இருக்காத…. பேச்ச நிப்பாட்டீட்டு ஒழுங்கா ஓட்டு” என்ற ஜீவனிடம் “கண்ணாடி ப்பா அது!” எனச் சொல்ல நினைத்து வேறொன்றைச் சொன்னேன். “நான்கூட இதை எழுதி முடிச்சதும் கொஞ்சம் அதிகப்படியாதான் எழுதீட்டோமோன்னு நினைச்சுட்டு இருந்தேன். இல்லவே இல்லைன்னு என் மண்டையில் ஆணி அடிச்சாப்புல புரிய வச்சு, உடனே பிரசுரிக்க வேண்டிய அவசரத்தை உணர்த்தி உற்சாகமளித்ததற்கு நன்றி!” என்று நான் சொல்லவும் “இதையும் எழுதித் தொலைச்சுராத என் தெய்வமே!” என்று என்னவன் என்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டதால் நீங்கள் இந்தப் பகுதியை மட்டும் அம்னீசியாவுக்கு ஒப்புக் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்! ************************************ என்னைச் சுற்றியுள்ள ஆண்களிடம் அவர்கள் எப்படி ஓட்டக் கற்றுக் கொண்டார்கள் என்று கேட்டேன். அனைவரிடமும் கிட்டத்தட்ட ஒரே பதில்தான் – “முதலில் ஓட்டுநர் பள்ளியில் 3 மாதங்கள் கற்றேன். பின்னர் அப்பாவின்/நண்பரின்/உறவினரின்/எனது வண்டியை எடுத்துக் கொண்டு தனியாக நானாகப் பழகிக் கொண்டேன்”. ‘தனியாக நானாக’! ஹ்ம்ம்ம். மேலே இருக்கும் இந்தப் பத்தியை வாசித்து விட்டு என்னவன், “நான் எங்க சித்தப்பா வண்டியை எடுத்துட்டுப் போகும் போது அவங்களும்தான் கூட வருவாங்க. வண்டியைப் பின்னால் எடுக்கும் போது ‘தலையை வெளிய விட்டுப் பாரு’ன்னு அப்படியே கழுத்தோட பிடிச்சு வெளிய தள்ளுவாங்க, தெரியுமா? நாங்களும் திட்டெல்லாம் வாங்கியிருக்கோம்” என்று ஏதோ மெடல் வாங்கியதைப் போல் கூற, “ஆங்! அப்போல்லாம் இனிச்சுதா?” என்ற எனது கேள்விக்குப் பதிலே இல்லை. “சொல்லுங்கோள்” என்று என் தலையைச் சரித்து, குனிந்து கிடந்த என்னவனின் முகத்தைப் பார்க்கவும் “இதுக்கு மேல வாய தொறக்காம இருக்குறதுதான் என் கிட்னிக்கு நல்லதுன்னு நினைக்குறேன். போதும். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிச்சுக்கலாம்” என்று கெஞ்சிய என்னவனின் பேரன்புக்கு மதிப்பு கொடுப்பது என்னும் முடிவுக்கு வந்து விட்டேன். Not knowing how to drive is definitely a handicap! நான் Car ஓட்டிப் படிக்க வேண்டும். நான் நளினமாக வண்டி ஓட்ட, தாம் ஓய்வாக அதைக் கண்டு பெருமிதத்துடன் ரசித்தபடியே வர வேண்டும் என்ற ஆசை என் அப்பாவுக்கும் என்னவனுக்கும் உண்டு. But what to do? எல்லா விஷயங்களிலும் பக்குவமாக இருக்கும் அப்பாவே என்னவனைப் போல் இவ்விஷயத்தில் பரபரவென்று நிற்பது சற்றே ஆச்சர்யமளிக்கும். அதீத பொறுப்புணர்வில் இவ்வாறு தாமும் படபடத்து நமக்கும் அதைக் கடத்துவது…. ஒருவேளை Y chromosomeகளுக்கே உரித்தான பண்பாக இருக்குமோ? கடைசி வரியையும் வாசித்து விட்டு, “அடேய்! நீ தப்பு தப்பா ஓட்டுனேன்னு அதையும் சேர்த்து எழுது” என்று என்னவன் விண்ணப்பம் வைக்க ‘அப்படியே ஆகட்டும்!’ என்று அந்தப் பொய்யையும் சேர்த்துவிட்டேன். Anything for you my man! முழுதாக வாசித்துவிட்டு என் அப்பா வேறு தம் பங்குக்கு, “நல்லா எழுதியிருக்க. அதுக்காகவெல்லாம் ஒண்ணும் சொல்லாம இருக்க முடியது. மறுபடியும் சொல்லி குடுக்கும் போது திருத்தம் போட்டுட்டுதான் இருப்போம்” என்று என்னிடமும், “அவ பாட்டுக்கு எழுதிட்டு போறா, மாப்பிள்ளை! அதுக்காக நாம அப்பிடியே விட்டுற முடியுமா? அவளுக்கு நல்லா எழுத வருது. நமக்கு நல்லா வண்டி ஓட்ட வருது. அவளுக்கு எழுத்து உயிரா இருக்கலாம்.(“நமக்கு அது ***’ என்று அவர்கள் கூறியதை எழுத்து நாகரிகம் கருதி விட்டு விடுகிறேன்!) நமக்கு உயிருதான் உயிரு” என்று என்னவனிடமும் அடுக்கிக் கொண்டே செல்ல “ஏ மக்களே! காரை இனிமேல் நான் தலையில தூக்கி வச்சுகிட்டு போய்க்கிறேன்” என்று முடித்தேன். படச்சோனே! என்டெ கர்த்தாவே! ஒன்று கூடி விட்டார்களய்யா! என்னை இரட்சியும் ஆண்டவரே!
  12. மத்திய கிழக்குப் போரால்… அதிகம் பாதிக்கப் பட்ட ஆள் என்றால், உக்ரைன் செலென்ஸ்கிதான். தம்பர் கூட… தமக்கு உக்ரைனை விட, ஈரான்தான் முக்கியம் என்று சொன்னதால்… செலென்ஸ்கி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அங்காலை ரஷ்யன்காரன் ஊமைக்குத்தாக குத்திக் கொண்டு இருக்கிறான் போலுள்ளது. 😂
  13. வழமை போலவே விஜய் தான் மாட்டுப்பட்டிருக்கின்றார். தொழில்முறை அரசியல்வாதிகள் எல்லோரும், ஸ்டாலின் & சீமான் உட்பட, வாலை மட்டுமே வெளியே காட்ட, விஜய் தலையை காட்ட வேண்டிய நிலை. ஒரு படத்துக்கு இவ்வளவு கோடிகள் வாங்குகின்றேன், அதை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தமிழ் மக்களை காப்பாற்ற அரசியலுக்கு வந்து இருக்கின்றேன் என்று சொல்லி விட்டு, சொத்து மதிப்பாக 400 அல்லது 500 கோடிகள் கூட காட்டாமல் இருக்க முடியாது தானே. அம்மாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன் , அப்பாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன், சங்கீதாவுக்கு கொடுத்தேன், பிள்ளைகளுக்கு கொடுத்தேன்................... இந்தளவு விளக்கமாக இதுவரை பொதுவெளியியில் பேசிக் கொண்டிருந்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே......................🤣.
  14. அமெரிக்க இஸ்ரேல் மமதைக்காக இந்த உலகம் பலிக்கடா ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.😡 உக்ரேனுக்காக போராடிய நம்மவர்கள் பலர் பாரசீக போரின் பின்னர் காணாமல் போய் விட்டார்கள். இதை ஜெலன்ஸ்கி கூட ஈரான் போரால் தாங்கள் காணாமல் போய் விடுவமோ என ஆதங்கப்பட்ட செய்திகள் பல உண்டு.😂
  15. Is it possible that United Kingdom had some involvement in Sri Lanka getting cluster bombs? Meta AI: There are allegations that the UK was involved in supplying cluster bombs to Sri Lanka, but the nature of this involvement is disputed. Some reports suggest British arms dealers used loopholes in UK law to sell weapons, including cluster bombs, to Sri Lanka via offshore companies. In 2012, the UK government acknowledged that UK-based companies might have exported cluster munitions to Sri Lanka between 2007-2009, but stated they hadn't found evidence of direct exports. The UK has since signed the Convention on Cluster Munitions, banning the use, production, and transfer of cluster bombs [1][2]. Would you like more details on international efforts to regulate cluster bombs? Other than Russia & United Kingdom what are the other countries suspicious of provided Cluster Bombs to Sri Lanka? Other countries suspected of providing cluster bombs to Sri Lanka include: - China: Provided significant military aid, including fighter jets and artillery, worth over $1 billion. - United States: Provided military aid, including training and equipment, worth over $500 million, and possibly cluster bombs via arms dealers. - Israel: Supplied military equipment, including Kfir jets and drones, and offered strategic military advice. - Pakistan: Supplied military equipment, including Al-Khalid tanks and artillery. - Iran: Supplied military equipment, including rockets and rocket launchers, worth over $140 million. These countries have been linked to the supply of cluster bombs or military equipment to Sri Lanka during the civil war ¹ ². Would you like to know more about the impact of cluster bombs in Sri Lanka or international regulations surrounding these weapons?
  16. சீமான் அடிக்கடி பயணிக்கும் ஜப்பான் இறக்குமதி பஜேரோ லிஸ்டில் இல்லை. இதைத்தானே ஸ்டாலினும் செய்கிறார்? லாண்ட் ரோவரில் பயணம், 22 வயது பேரன் 600 கோடிக்கு ரஜனி கமலை வைத்து படம் எடுக்கிறார் ஆனால் இவரிடம் கார் இல்லையாம். சீமான்னிடம் ஒரு கவுன்சிலர் கூட இல்லை…அப்படி இருக்க இத்தனை களவு. எந்த பதவியிலும் ஒரு கட்சி உறுப்பினர் கூட இல்லாமல் உலகில் அதிக ஊழல் செய்த கட்சி தலைவர் சீமானகத்தான் இருக்கும். இவரிடம் மட்டும் அதிகாரம் போனால், கருணாநிதி குடும்பம், லாலு பிரசாத், ஜெ சசி எல்லாரையும் சேர்த்தாலும் வெல்ல முடியாத ஊழல் சாதனைதை நிகழ்த்துவார்.
  17. தமிழ்லீடர் கருத்துப்படம்.
  18. destnporSo4aag21guel141m2ttàm52 :g0r0i u1h94u2f4hsL8876 a65 · ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைபயிற்சி போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.. அப்போது அங்கே ஒரு கொடியில் வெள்ளரிக்காய் காய்த்துத் தொங்குவதை பார்த்த ராஜா "மந்திரி.. அந்த வெள்ளரிக்காய பறிச்சிகிட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனபோது அதனருகில் உட்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் "ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அதை தின்னா வாந்தி தான் வரும்"ன்னு... ராஜா சொன்னான் "யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு.. வாந்தி வருதா பார்க்கலாம்"... வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டான் "யோவ் கபோதி இதுக்கு என்ன மருந்து?". அந்த குருடன் சொன்னான் "அது பக்கத்துல 'கை' மாதிரி பச்சை இலை இருக்கும்.. அதை கையால கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிற்கும்"ன்னு சொன்னான் குருடன். ராஜா முயற்சி செய்ய மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து "உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட்டா சொன்னாய்" என்று கேட்க , குருடன் சொன்னான் "ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரிப்பிஞ்சை விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காயை கொடுத்தால் இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வச்சிடுவான்".. ராஜாக்கு சந்தோஷம். "இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலியா இரு..." என்று சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். "ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக்கறீங்களா"ன்னு கேட்டான். 'இது ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது' என்று மந்திரியை கூப்பிட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால் எதையாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டான். ராஜா சொன்னான் "மந்திரி போய் அந்த கபோதிய கூட்டிண்டு வா.. அவன்தான் காரண காரியத்தோட கரெக்டா சொல்லுவான்"னான். மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் "டேய் இதுல ஒரிஜினல் வைரம்... டூப்ளிகேட் வைரம் கலந்திருக்கான்னு பார்த்து சொல்லு". அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொறுத்து அதை கையில் எடுத்து பிரிச்சு ராஜா "இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி"ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் "எதோ தெரியாம நடந்துடுச்சு"ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான். ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடனை பார்த்து கேட்டான் "எப்படி கண்டுபிடிச்ச காரண காரியத்தோட சொல்லு..." குருடன் சொன்னான் "ராஜா வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம்ன்னு பிரிச்சேன்".. ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து " மேற்கு வாசலுக்கு போ... இந்த டோக்கனை கொடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு"ன்னு சொல்லி அனுப்பிச்சான். இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம். யாரை தேர்ந்து எடுக்கறதுன்னு. மந்திரியை கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்துகிட்டே சொல்றான். ராஜா பார்த்தான் "கூப்பிட்றா அந்த கபோதியை..". குருடன் வந்தான். ராஜா குருடன்கிட்ட சொன்னான் "என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கறேன். எந்த ராஜாவோட ராஜகுமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு" அப்படின்னான். குருடன் சொன்னான் "ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ணை பாருங்க"ன்னான். "அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்..". ராஜாவுக்கு ஒரே குஷி. "சபாஷ். இந்தாடா டோக்கன்... வடக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு" அப்படின்னான். குருடனும் போய்ட்டான். கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான். "டேய் நான் ஒண்ணு கேட்பேன்... சரியா காரண காரியதோட சொல்லணும்" அப்படின்னான். குருடனும் சரின்னான். "இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற?... அப்படின்னான். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல.. ராஜா திரும்ப கேட்டான்... குருடன் சொன்னான் "ராஜா.. நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான்" அப்படின்னான். ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். "ஏன்டா"ன்னு கேட்டான். "ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா கொடுத்தது இலவச டோக்கன் பட்ட சாதத்துக்கு. ராஜாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை கொடுத்திருப்பான்... அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜாவா இருந்திருந்தா கழுத்திலிருந்த வைர மாலைய கொடுத்திருப்பான். ஆனா நீங்க கொடுத்தது பட்டை சாத டோக்கன்... மூணாவது.. ஒரு ராஜ்யமே உங்க கைக்குள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்தை எனக்கு எழுதி கொடுத்திருப்பான். நீங்க கொடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்... இதிலிருந்து தெரிகிறது சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு... ஏன்னா உங்க புத்தி டோக்கனோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல.... 🤔" அந்த குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம்... Voir la traduction....!
  19. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர்களின் நினைவோடு, யாழ் இணையம் தனது 27 ஆவது ஆண்டை நிறைவு செய்து இன்று (30.03.2026) 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலம் முதல் பல்வேறு சவால்களையும் தொழில்நுட்ப மாற்றங்களையும் கடந்து, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான குடிலாக யாழ் இணையம் மிளிர்ந்து வருகின்றது. எமது கடமையும் சமூகப் பொறுப்பும்ஒவ்வொரு ஆண்டும் நாம் வலியுறுத்துவது போலவே, கருத்தாளர்களாகிய உங்களிடம் மேலதிகமான சமூகப் பொறுப்பினையும் சகிப்புத்தன்மையையும் இந்த ஆண்டும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக: தகவல் நம்பகத்தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI): இன்று ஊடக பலம் கொண்ட பெரும் சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான மற்றும் உண்மையற்ற செய்திகள், பொதுமக்களால் உண்மையானவை என நம்ப வைக்கப்படுகின்றன. தாங்களே உலகின் பாதுகாவலர்கள் என்ற பிம்பத்தை இத்தகைய சக்திகள் கட்டமைக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான ஒருதலைப்பட்சமான தகவல்களையே ஆதாரமாக வைத்து இங்கும் கருத்தாடல்கள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனுடன், தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உண்மை போன்றே தோற்றமளிக்கும் காணொலிகள் (Deepfakes), குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்குகின்றன. எனவே, இத்தகைய திட்டமிட்ட பரப்புரைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பரப்பப்படும் தகவல்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதையும் இங்கே ஆதாரமாகப் பதிவிடும் முன்னர், அதன் நம்பகத்தன்மையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சரிபார்க்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகின்றோம். பண்பான விவாதம்: கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள். தனிநபர் தாக்குதல்களையும், வீண் மனஸ்தாபங்களையும் தவிர்த்து, ஆரோக்கியமான கருத்தாடல் தளமாக யாழ் களம் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மத மற்றும் உணர்வுப்பூர்வமான மதிப்பளிப்பு: மற்றவர்களின் மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் எமது கருத்துப் பதிவுகள் அமைதல் வேண்டும். உலகளாவிய நெருக்கடிகளும் மனிதாபிமானமும்இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழும் போர்களும், அதனால் ஏற்படும் மனித அவலங்களும், பொருளாதார நெருக்கடிகளும் ஒட்டுமொத்த உலகத்தையுமே ஒரு பதற்றமான சூழலுக்குள் தள்ளியுள்ளன. இத்தகைய நெருக்கடி காலங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுமே பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். போரினால் சிதைக்கப்பட்ட ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், போரின் வலியை நாம் நன்கு அறிவோம். எனவே, இந்த 28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் இவ்வேளையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க நம்மால் இயன்ற பொருளாதார மற்றும் அறப்பணிகளில் கைகோர்ப்போம். உலகெங்கும் அமைதி நிலவவும், அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் குரல்கள் ஒலிக்கவும் யாழ் இணையம் தொடர்ந்து ஒரு ஆக்கபூர்வமான தளமாக விளங்கும். தமிழ்த் தேசியமும் எமது பயணமும்தமிழ்த் தேசியச் சிந்தனையை வலுப்படுத்தி, எமது வரலாற்றைத் திரிபுகள் இன்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியில் யாழ் இணையம் என்றும் உறுதியாக இருக்கும். தமிழக உறவுகளை எமது பலமாகக் கருதி, கட்சிப் பாகுபாடின்றி நாம் என்றும் நேசிப்போம். அதேவேளை, எமது விடுதலைப் போராட்ட வரலாற்றினைத் திரிபுபடுத்தி, தமக்கான அரசியல் பலத்தைச் சேர்க்க முயலும் சுயநலக் கட்சிகளை நாம் வன்மையாக எதிர்ப்போம். அத்தகைய சக்திகளைச் சுட்டிக்காட்டும் அனைத்து முயற்சிகளுக்கும் யாழ் இணையம் தனது முழுமையான ஆதரவினை வழங்கும். ஈழத் தமிழர்களைத் தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவோரை அடையாளம் கண்டு முறியடிக்க வேண்டிய விழிப்புணர்வு எமக்குத் தேவையாய் உள்ளது. புதிய தொடக்கம்இந்த 28 ஆவது ஆண்டில், இன்னும் அதிகமான புதிய உறுப்பினர்களை உள்வாங்க விரும்புகின்றோம். யாழ் இணையத்தின் பழைய உறுப்பினர்கள், உங்கள் சுற்றத்தாருக்கு இந்தத் தளத்தை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளையும் கருத்தாளர்களையும் உருவாக்க முன்வருமாறு வேண்டுகின்றோம். தமது உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்து களத்தை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும், ஆலோசனைகளை வழங்கும் நல்உள்ளங்களுக்கும், சுயமாகப் படைப்புகளை உருவாக்கித் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது மண்ணோடும் மக்களோடும் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய், ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி, யாழ் இணைய நிர்வாகம் 30 மார்ச் 2026
  20. ஆனாலும் அண்ணனின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது. என்னதான் சபரீசனிடம் பெட்டி வாங்கினாலும்….திரள்நிதியை திரட்டாமல் விடுவதும் இல்லை. அதற்கும் முழு எபெர்ட் போடுகிறார். இங்கே Tesco அன்ற பல்பொருள் அங்காடியின் மகுட வாக்கியம் அண்ணனுக்கும் பொருந்தும். Every little helps 😂
  21. சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்
  22. வியட்நாம் சண்டை பற்றிய படங்களைப் பார்த்தால் அமெரிக்கா தோற்றதாக சொல்லமாட்டார்கள்.
  23. எனக்கு அடக்க முடியாமல் ஒண்டுக்கு அடிக்க வருது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜிப்பை கழற்றி ஒரு ஓரமாக ஒண்டுக்கு அடிக்க நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?
  24. பெண்களின் உடை-வரலாற்றுக்கு வயது 5000…. 5000 வருடத்தில் மாறாத ஒரே விடயம்…. பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை…. 35+ வருட புலம்பெயர் வாழ்வை கொண்ட தமிழர்கள் பலரும் இங்கே ஈரான் நல்லம், ஆப்கானிஸ்தான் அப்படி ஒண்டும் மோசமில்லை என எழுதும் போது…. ஜனநாயகத்தை விட இப்படியான நாடுகள் உசத்தி என்றே எழுதும் போது, தள்ளாத வயதில் டெக்சஸ் போன ஜேசுதாஸ் மாறி இருக்க வாய்புகள் குறைவு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.