Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. தாத்தாவும் பேரனும் இன்றுதான் உருப்படியா ஒரு வேலை செய்திருக்கிறீங்கள்.......பாராட்டுக்கள் தாத்தாவின் கனவை தவிடுபொடியாக்கிட்டானே பையன்.
  2. ஓ இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளதா? அப்ப 60 நாடுகளையும் இலங்கை இலவசமாக உள்ளே விடுறாங்களா குமாரூ? இதை முன்னரும் சொன்னார்கள் ஆனால் கிடப்பில் போட்டவிட்டார்கள்.
  3. இன்றைய நாளை ஈழத்தமிழர்கள் எவரும் மறக்கவே கூடாது. பதிவுக்கு நன்றி தீயா.
  4. எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம் இரண்டாவது தெரிவை சிங்கள கட்சி யாருக்கோ போடுவதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது. இதைப்பற்றி மக்களுக்கு தெளிவான விளக்கவுரைகளை யாரும் நடத்துவதாக தெரியவில்லை. இன்னமும் தங்களுக்குள்ளேயே தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  5. அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?
  6. இதைச் சொல்லித் தான் கஜே குழுவினர் பொதுவேட்பாளரை நிறுத்தினால் இரண்டாவது வாக்கு எண்ணும் பட்சத்தில் அது ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு போகும். அதனால் பகிஸ்கரிப்பே சிறந்தது என்கிறார்கள். இந்த முறை நடக்க இருக்கும் தேர்தல் அனேகமாக இரண்டாவது தடவை வாக்குகள் எண்ணவேண்டி வரலாம். சிவாஜிக்கு சொற்ப வாக்குகளும் இனத்தைக் கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்கு மிக அதிகமான வாக்குகளும் கிடைத்தன. இதை ஜீரணிக்க முடியாமலே இருந்தது.
  7. இந்த ஆண்டு தான் ஐபிஎல் இல் கூடுதலாக எடுத்த ஓட்டங்களாக இருக்கும்.
  8. தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.
  9. இதை ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்? மிருகவதைகளுக்கான குழுக்கள் கண்டு கொள்ளவில்லையா? இனம் கூடினால் சீனா போன்ற நாடுகளுக்கு விற்று டாலரை சம்பாதிக்கலாமே. ஏற்றுமதிக்கு எதுவுமே இல்லாத போது குரங்கையாவது ஏற்றுமதி செய்யலாமே?
  10. தில்லை எனக்கொரு சந்தேகம். கவிதை வடிவில் சந்தேகம்.அருமை.
  11. ஈ - விசா பெற்றுக் கொள்வோருக்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் ஈ - விசா பெற்றுக் கொள்வோர் www.immigration.gov.lk என்ற முகவரியை மட்டும் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. மக்களை ஏமாற்றும் மோசடி போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈ - விசா பெற்றுக்கொள்வோர் குடிவரவு குடியகழ்வு திணைக்கள இணைய தளத்தின் ஊடாக மட்டும் பிரவேசித்து விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/use-only-immigration-depts-webpage-for-e-visa-1714088994
  12. இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
  13. MDH & EVERESTஎன்கிற இந்திய மிளகாய்த்தூள்,சரக்குத்தூள், மீன்கறி மசாலா,சாம்பார் மசாலா இப்படி பலதரப்பட்ட பொதிகளிலும் புற்று நோயை தூண்டக் கூடியதாக உள்ளதாக கூறி கொங்கொங் சிங்கப்பூரில் தடை செய்துள்ளனர். உங்கள் வீடுகளிலும் இந்த பெயர்கள் கொண்ட பொதிகள் இருந்தால் அவதானமாக செயற்படுங்கள். காணொளியைப் பாருங்கள் முடிவெடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.