Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லோருக்கும் இரு கேள்விகளில் முட்டை என்படியால் கொஞ்சம் நிம்மதி.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
என்னது விஜயத்தை என்னிடம் விடுங்கோவா? கடவுளே கடவுளே இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா?
-
அப்பா உடனே வாங்கோ.
சித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.
-
லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்
லண்டனில் எந்தக் குழுவை சந்திக்கிறார்? இமயமலைக் குழு?
-
நிலவே நிலவே கதை கேளு!
எப்படியெல்லாம நாம் பார்த்த நிலவில் முதன்முதல் காலடி வைத்த போது வந்ததே எனக்கு கோபம் எமது கடவுளின் தலையிலா கால் வைத்தீர்களா பாவிகளா.
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.
வாழ்த்துக்கள் நொச்சி. ரொம்ப பெருமையாக இருக்கிறது.
-
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி
என்னது சாத்தானே வேதம் ஓதுது. ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எமது வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. இணைப்புக்கு நன்றி சுவி.
-
"இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள்"
பதியுங்கள் நேரமிருக்கும் போது வாசிக்கிறோம்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நானும் கலந்து கொள்வேன் கந்தப்பு.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ் நாட்டில் தலைவராக இன்னமும் தேவை. கடந்த கால தலைவர்களைப் பாருங்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதை யோசித்தே கூட்டணி இல்லாமல் இருக்கிறாரோ?
-
"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"
ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்புறம் ஏனய்யா இத்தனை பேர் சேர்ந்து ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க? எல்லாருக்கும் மனதில பயம் இருக்கல்லோ? அந்த பயம் எப்போதும் இருக்கணும். எழுதுங்க எழுதுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இந்தப் போட்டியில் @குமாரசாமி உம் @தமிழ் சிறி உம் கலந்து கொள்ளாதது ஏமாற்றமாக இருக்கிறது.
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
இப்ப தான் 12 யூரிமாரை தெரிவு செய்திருக்கினம். திங்கள் விசாரணை தொடங்குது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
இதைத் தான் நானும் நினைத்தேன். அரசியலும் ஆசியாவை பின் பற்றுகிறார்கள்.