Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜனாதிபதிக்கே சிரிப்பை அடக்க முடியல.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
சிறி 39 தொகுதியில் தான் போட்டி நடைபெறுகிறது. உங்கள் விடைகள் 50 தொகுதிக்கு வெற்றி வரும் போல இருக்கு என விளையாட்டாக எழுதினேன். நானும் ஒன்றுமே கூட்டிப் பார்த்து எழுதவில்லை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஆள் பிஜேபி போல இருக்கே. நம்ம கட்சிக்கு ஒன்றும் போடலை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
@தமிழ் சிறி போட்டி 39 தொகுதியில்் வெற்றி 50 வரும் போல.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இலங்கையில் நான் வேலை செய்யவில்லை. இதுவரை ஒரு வங்கிக் கணக்கு கூட திறக்கவில்லை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 4ம் இடம். 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 2ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 1ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 3ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 2ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 4ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 4 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 00 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 10 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?4 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 3 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 02 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 14 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 4 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 00.
-
அப்பா உடனே வாங்கோ.
பேரனை வாழ்த்திய உறவுகள் எல்லோருக்கும் மிக்க நன்றி.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
முதலில் இது செய்ய வேண்டும். அப்புறமா வரி அறவிடணும். செலவுகளுக்கேற்ப சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். மற்றபடி நான் வரிக்கு எதிரானவனல்ல.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள். ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது. இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள். இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?
-
அப்பா உடனே வாங்கோ.
பிறந்தது சித்திரை 11-2024 K.Arnaav.
-
அப்பா உடனே வாங்கோ.
நன்றி அல்வாயன். சன்பிரான்சிஸ்கோவில் இன்னுமொரு பேரனும் பேத்தியும் இருக்கிறார்கள்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள் விரும்பிய நான்கும் நடக்கும். ஆனி 4ம் திகதிவரை பொறுத்திருங்கள் தோழரே.
-
அப்பா உடனே வாங்கோ.
பேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
124 எல்லோருக்கும் தானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லோருக்கும் இரு கேள்விகளில் முட்டை என்படியால் கொஞ்சம் நிம்மதி.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
என்னது விஜயத்தை என்னிடம் விடுங்கோவா? கடவுளே கடவுளே இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா?
-
அப்பா உடனே வாங்கோ.
சித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.
-
லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்
லண்டனில் எந்தக் குழுவை சந்திக்கிறார்? இமயமலைக் குழு?
-
நிலவே நிலவே கதை கேளு!
எப்படியெல்லாம நாம் பார்த்த நிலவில் முதன்முதல் காலடி வைத்த போது வந்ததே எனக்கு கோபம் எமது கடவுளின் தலையிலா கால் வைத்தீர்களா பாவிகளா.
-
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட்.
வாழ்த்துக்கள் நொச்சி. ரொம்ப பெருமையாக இருக்கிறது.
-
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி
என்னது சாத்தானே வேதம் ஓதுது. ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எமது வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. இணைப்புக்கு நன்றி சுவி.
-
"இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள்"
பதியுங்கள் நேரமிருக்கும் போது வாசிக்கிறோம்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நானும் கலந்து கொள்வேன் கந்தப்பு.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.