Everything posted by ஈழப்பிரியன்
-
டொனால்ட் ரம் அடுத்த தேர்தலில் வென்றால் நேட்டோவிலிருந்து விலகப் போவதாக அறிவிப்பு.
நேட்டே உறுப்பு நாடுகளுக்கு பேதி குடுத்திருக்கிறார். இப்படி ஒன்று நடக்குமாக இருந்தால் உக்கிரேனில்அமெரிக்கா, ஐரோப்பா,இங்கிலாந்தெல்லாம் போட்ட பில்லியன் கணக்கான பணமெல்லாம் அம்போ தான்.
-
டொனால்ட் ரம் அடுத்த தேர்தலில் வென்றால் நேட்டோவிலிருந்து விலகப் போவதாக அறிவிப்பு.
நேட்டோ பட்ஜெட் பங்களிப்பு இலக்குகளை அடையாவிட்டால் ஐரோப்பிய நட்பு நாடுகளைத் தாக்க ரஷ்யாவை ஊக்குவிக்கும் டொனால்ட் ட்ரம்பின் வார இறுதிக் கருத்துக்களில் இருந்து அமெரிக்க நட்பு நாடுகள் பின்வாங்குவதால், பல முன்னாள் டிரம்ப் ஆலோசகர்கள் எனது வரவிருக்கும் புத்தகத்தில் முன்னாள் ஜனாதிபதி நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை முறையாக விலக்க முயல்வார் என்று எச்சரிக்கின்றனர். அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால். மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்படும் "தி ரிட்டர்ன் ஆஃப் கிரேட் பவர்ஸ்" இல், டிரம்ப் மற்றும் பிடென் நிர்வாகங்களில் உயர் மட்டத்தில் பணியாற்றிய முன்னாள் மூத்த அமெரிக்க அதிகாரி என்னிடம் கூறினார், நவம்பரில் டிரம்ப் ஜனாதிபதி ஜோ பிடனை தோற்கடித்தால் "யு.எஸ். நேட்டோவில் இருந்து வெளியேறும். "நேட்டோ உண்மையான ஆபத்தில் இருக்கும்" என்று டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒப்புக்கொண்டார். "அவர் வெளியேற முயற்சிப்பார் என்று நான் நினைக்கிறேன்." அமெரிக்க பாதுகாப்பு கடமைகளை டிரம்ப் இழிவுபடுத்துவது தென் கொரியா மற்றும் ஜப்பானுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டிரம்பிற்கு வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஓய்வுபெற்ற ஜெனரல் ஜான் கெல்லி என்னிடம் கூறினார். "புள்ளி என்னவென்றால், அவர் நேட்டோவில் எந்த அர்த்தத்தையும் காணவில்லை" என்று கெல்லி புத்தகத்தில் கூறினார். "தென் கொரியாவில் துருப்புக்களை வைத்திருப்பதற்கு எதிராக அவர் இறந்துவிட்டார், மீண்டும், ஒரு தடுப்புப் படை, அல்லது ஜப்பானில் துருப்புக்கள், ஒரு தடுப்புப் படை." "அவர் நினைத்தார் (விளாடிமிர்) புடின் ஒரு நல்ல பையன் மற்றும் கிம் (ஜாங் உன்) ஒரு நல்ல பையன் என்று நாங்கள் வட கொரியாவை ஒரு மூலையில் தள்ளினோம்," கெல்லி நினைவு கூர்ந்தார். "அவரைப் பொறுத்தவரை, நாங்கள் இவர்களை ஏமாற்றுவது போல் இருந்தது. "எங்களிடம் நேட்டோ இல்லையென்றால், புடின் இந்த விஷயங்களைச் செய்ய மாட்டார்." இந்த புத்தகத்திற்காக நான் பேசிய நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பாதுகாப்பின் முக்கிய அடித்தளமான கூட்டணியில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ட்ரம்ப் எப்படி நெருங்கி வந்தார் என்பதையும் விவரித்தார். இரண்டாவது. "ஜனாதிபதி டிரம்பின் கீழ் நான்கு ஆண்டுகள் அமைதியும் செழிப்பும் இருந்தது என்பதை ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடக முத்து-கிளட்சர்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது, ஆனால் ஐரோப்பா ஒபாமா-பிடனின் கீழ் மரணத்தையும் அழிவையும் கண்டது, இப்போது பிடனின் கீழ் அதிக மரணத்தையும் அழிவையும் கண்டது" என்று டிரம்ப் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஜேசன் மில்லர் கூறினார். சிஎன்என். "ஜனாதிபதி டிரம்ப் எங்கள் கூட்டாளிகளை அவர்கள் நேட்டோ செலவினங்களை அதிகரிக்கக் கோரினார், ஆனால் ஜோ பிடன் அமெரிக்க வரி செலுத்துவோரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். உங்கள் பாதுகாப்புச் செலவினங்களை நீங்கள் செலுத்தாதபோது, உங்களுக்கு அதிக போர் வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. https://www.cnn.com/2024/02/12/politics/us-out-nato-second-trump-term-former-senior-adviser/index.html
- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
-
இன்றைய ஸ்பெசல்
உயிர் நண்டுகள்.பிரீசருக்குள் கள்ளிவிட்டு அடுத்தநாள் அடுத்து உடைத்தேன். அப்போதும் சாடையாக அசைந்தது. இதனால் மனைவி சாப்பிடவே இல்லை. நான் நண்டை சொல்கிறீர்கள் என எண்ணினேன். பரவாயில்லையே. நிறைய சதை இருந்தது தனி. நானும் சந்தேகத்திலே வாங்கினேன். இப்போது அமாவாசையோ?
-
இன்றைய ஸ்பெசல்
சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத. த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம். நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம். பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம். இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன். காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான். https://postimg.cc/gallery/zBh4N83
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
90 களில் முற்றவெளியில் நடந்த இசை நிகழ்ச்சி. யாழ் முற்றவெளி இசை நிகழ்ச்சி:- யாழ் முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது, இசையினையும் நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது. அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி கூடிய மக்களின் தொகை 'ஐந்து இலட்சம் ' எனச் செய்தி வெளியிட்டது ( நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்). இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது. நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால் மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை. நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும், நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை. தடுப்பரண்கள் எதுவுமில்லை. வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டிருந்தது. கூடியிருந்த இலக்கக் கணக்கான ( இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை. அப்படிக் கட்டுக்கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது 23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று. இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா. இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது. புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் ( SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி, மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும், வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர். அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது, அதனால் முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து, ஊர்திகளுக்குள்ளேயும், மறைவிடங்களிலும் மட்டுமே இருந்தனர். படையினரும் முதலில் ஆயுதம் எதுவுமின்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மக்கள் கூடக் கூட, படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர். அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றி வர வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர். இரு தரப்பினரும் சில மீற்றர் இடைவெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நீட்டியபடி இருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கியது. மக்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை, இசையில் மூழ்கிக் கிடந்தனர். இதே யாழ் மக்கள் தான். நிகழ்வின் நோக்கமும், கருப்பொருளும் அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான். முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசைச் செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- " நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும், நாட்டின் அடிமை விலங்கு உடைக்கும் " . ஆம் அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது, அதனால் ஒழுங்கும் இருந்தது, நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளுமில்லை. இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.🙏🙏🙏 வாட்சப்பில் வந்தது
-
சுவிஸ் தம்பதிகளின் அன்பளிப்பு
இணைப்புக்கு நன்றி அக்கா.
-
புதனும் புதிரும்
அடுத்த பகுதியை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.
-
புதனும் புதிரும்
ஜேர்மன் பொலிஸ் இவ்வளவு கவலையீனமானவர்களா? நம்பவே முடியவில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தப் பதிவுகள் நடந்து நீண்டகாலமானாலும் திரும்பவும் படிக்க மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில் கஞ்சி வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில் கரிகரனைப் பார்க்க வந்த கூட்டம்.! கரிசனையில்லாத கூட்டம்.! *எங்கே போகிறது எம் சமுதாயம்? - இதிலே யாருக்கு இங்கு ஆதாயம்? *எப்போ ஆறியது இன அழிப்பின் காயங்கள்? இப்போ வெளுத்து விட்டது பலரின்… சாயங்கள்! *தமிழனைப் பார்த்தால் முப்பது ரூபா கூடக் கொடுக்காதவன், தமண்ணாவைப் பார்க்க முப்பதாயிரத்துடன் நிற்கிறான்….. *நட்புகளுக்குக் கூட கை கொடுக்காதவன், நடிகர்களுக்கு கை கொடுக்க மேடை ஏறுகிறான்! *ஆணும் பெண்ணும் என அத்தனை பேரும் கம்பத்தில்! அறுந்து விழுந்தால்…. அனைவரும் இருப்பார் நரகத்தில்..! *அப்படி இதிலென்ன மோகம்?... ஆருக்கு இதில் உண்டு லாபம்...? அங்கே, *கஞ்சப்பயல் எல்லாம், இலவசம் என்று வந்து,….. காசு கட்டியதுதான்….. கண்றாவியின் உச்சம்! *கஞ்சா அடித்தவனெல்லாம் களியாட்டம் என்று வந்து கால் கடுக்க நின்றதுதான் மிச்சம்.! “பனங்காட்டான்” என்றாலும் படித்தவன், பண்பாடு ஆனவன் என்ற பெயர் (எமக்கு) இருந்ததுண்டு! இன்று…. *படம் காட்டுபவர்கள் பின் ஓடிப் பெற்ற பெயர் “பட்டிக்காட்டான்!” -வெறும் “வெட்டிக்” காட்டான்.! *நடிப்பவர்களைச் சுமப்பது என்பது நமக்கெல்லாம் அவமானம்…! நாம் கேரளாவைப் பார்த்து அறிய வேண்டியது…. ஏராளம்…! *வெளிநாட்டுக் காசு இங்கு வெகுவாக இருக்குதென்று- பலருக்கு இங்கே கண்! .. - இதனால் பாழாய்ப் போகுது எமது மண்…! *இனியாவது, அனுப்புவதை நிறுத்துங்கள்! அலுப்பானவனை உழைக்க விடுங்கள்! *முடிவில், அடிதடியில் முடிந்திருக்கிறது அரிதரனின் நிகழ்ச்சி..! அவமானப் பட்டதில் அடமானம் போனது மகிழ்ச்சி?...... *கத்தலும், கதிரை எறிதலும் கலவரமும் என, காணொளிகளில் பல காட்சி! *நல்ல தலைவன் இல்லாததற்கு இவை எல்லாம் சாட்சி! *வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி வலிகள் சுமந்த மக்களுக்கு வாழ்வு தருவது வேலை வாய்ப்புகள்தான்! *இவர்கள் செய்யும் வேலையெல்லாம் வெறும் ஏய்ப்புக்கள்தான்.! *கல்வி எம்நாட்டில் முக்கியம்தான்.. மறுப்பவரும் இல்லை! வெறுப்பவரும் இல்லை! *கட்டிக் கொடுங்கள் கல்லூரிகளை! கண்டிப்பவர்கூட எவரும் இல்லை..! *அதைவிட, முதலில் கற்பவனைத் தயார்படுத்துங்கள்! காலித் தனத்தைக் கட்டுப்படுத்துங்கள்! *கஞ்சா அடிப்பவன் கற்றுத் தெளிவானா? கஞ்சிக்கு வழியிலாதவன் கல்லூரிக்கு வருவானா? *கடைசியில் கிடைத்த நீதி……., *மக்களுக்குச் செய்ய ஆயிரம் உண்டு! மனம் வைத்தால் திருத்த வழிகளும் உண்டு! *காயப்பட்டவனுக்கு நாட்டில், கலைநிகழ்ச்சிகள் தேவையில்லை! வீட்டில், உலை எரிந்தாலே போதும்…! February 9, 2024 - எனது நீண்டகால நண்பரும் அயலவரும் எழுதிய கவிதை. மிகவும் தெளிவாக உள்ளத்தை தொட்டும் எழுதியுள்ளார்.
-
மிரட்ட வரும் EL-NINO
கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளால் பெருமளவில் எடுக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு விளக்கமாக இந்த காணொளியைப் பார்க்கலாம்.
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
- சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி
Wow wow wow இணைப்புக்கு நன்றி ஏராளன்.- இந்தியா பறந்தார் அனுரகுமார!
- ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் முயற்சி - கிரியெல்ல
மேற்கு உளவுத்துறைகள் இதுவரை உளவு பார்த்ததில் ஐயா வெல்வதற்கு சான்சே இல்லை என்று சொல்லியிருப்பார்களோ?- அமெரிக்க காங்கிரசுடன் கஜேந்திரகுமார் சந்திப்பு.
நல்லதொரு சந்திப்பு. இப்படியான சந்திப்புக்கள் அடிக்கடி நடைபெற்று எமது மக்களின் துயரங்களை எடுத்துச் சொல்லி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அவர்கள் என்ன கழுத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு போயா படமெடுக்கிறார்கள்? முடிந்தால் மக்களை தடுங்கள்.- உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
தங்கச்சி எனக்கு நித்திரை ஒரு கொடை. படுத்தால் சிறிது நேரத்தில் தூங்கிவிடுவேன். இடையில் எழும்பி சிறுநீர் கழிக்க போய் வந்து படுத்தால் உடனேயே தூங்கிவிடுவேன். ஆனால் நான் எழும்பி போய்வர மனைவியின் தூக்கம் அதோடு சரி.- சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
சிங்கள மக்கள் பாணுக்கும் பருப்புக்குமாக போராடினார்கள். இப்போது விலை கூடினாலும் ஓரளவு கிடைக்கிறது. இந்த நிலைக்கு ரணில் காரணமல்ல. எல்லாவற்றையும் விட போராட்டத்தை தூண்டிவிட்டு கோத்தபையாவை நாட்டைவிட்டு போக வைத்தவர்களே மேற்கத்தையர். கோத்தபையாவைக் காப்பாற்ற வேண்டிய ராணுவம் கையைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்தது என்பது மிகவும் வேதனையான சம்பவம். வரும் தேர்தலில் மகிந்தா கம்பனி முஸ்லீம் கம்பனி தமிழ்க கம்பனி என்று ரணில் வெல்வதற்கு தேவையானதை மேற்கு செய்து கொண்டிருக்கிறது. சயித்தை பலவீனப்படுத்த மேற்கு ஆரம்பித்து விட்டது. ஆடுகளம் இனிமேல்த் தான் சூடு பிடிக்கும்.- சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என்றாரே. பொய்யா கோப்பாலு?- சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
சென்ற மாதம் ரணில் யாழ் வந்த போது முதல் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்று முரண்டு பண்ணினார். இப்போது மூடிய அறைக்குள் பேசிவிட்டு ரணில் தான் திறம் என்கிறார். ம் என்ன மாஜாஜாலம் நடந்ததோ?- சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தம்முடன் பாராளுமன்ற வளாகத்தில் பேசியதாகவும் ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்துவிட்டாா். தற்போதைய வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளராக ஜனாதிபதியை தான் கருதுவதாக அவர் கூறினார். https://www.ilakku.org/சிறந்த-ஜனாதிபதி-வேட்பாளா/?amp- இரண்டாம் பயணம்
உண்மை, நீங்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தையும் கடந்து போயிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த இடத்தைத் சுற்றியுள்ள தேக்கு மரங்களைப் பார்த்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்வு ஒவ்வொரு மரமும் ஒரு மாவீரரது உயிர் என்றே கோப்பாயிலிருந்து உரும்பிராய் மருதனாமடம் ஊடாக பயணிக்கும் போது சாலையின் இருபக்கங்களிலும் தேக்கமரங்கள் வரிசையாக காணப்பட்டன. அதைப்பற்றி கேட்ட போது எல்லாமே பெரிசுகளால் நடப்பட்டவை என்று மச்சான் சொன்னார். அவருக்கு பெயரைச் சொல்லி கதைக்க கூட பயமாக இருந்தது.- புதனும் புதிரும்
மாடர்ன் தியேட்டேஸ் படம் மாதிரி ஒரே மர்மக் கதையாகவே எழுதுறீங்க. எமக்கு அலுக்காமல் எழுதுவதில் நீங்க கில்லாடி. 1500 யூரோவுக்காக கொலையா? A man was beaten to death as he left a Bronx McDonald’s in a violent robbery attempt caught on camera over $1 — and no one stopped to help. The 60-year-old man, identified by police as Juan Fresnada, of the Bronx, was leaving the fast food restaurant on Christmas Eve with his partner when a group of men attacked, the NYPD said. Family friends said Fresnada was known as Cuba. Neither Cuba nor his partner speak much English, and tried to get away, but were chased. “The guys just told them ‘Give me the money, give me the money.’ He was like ‘I don’t know what you’re talking about,’” the couple’s friend Tony told NBC New York. He thinks they were targeted for money, even though the robbers only getting away with $1. Video shows the attack continue, as Cuba is punched and kicked repeatedly and eventually left motionless in the middle of East 165th Street and Third Avenue. Tony said that Cuba told his partner to run, and grabbed a trash can to potentially use as a weapon to scare the attackers away. The partner was able to get away, but Cuba ended up in critical condition. He remained hooked up to a ventilator, not responsive, on Friday, Tony said. https://www.nbcnewyork.com/news/local/man-seen-on-video-beaten-in-bronx-for-1-and-no-one-stops-to-help/2250599/#:~:text=A man was beaten to,no one stopped to help. இங்கு ஒரு டாலருக்காக கொலையும் நடந்திருக்கு. உது பரவாயில்லை. - சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.