Everything posted by ஈழப்பிரியன்
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
தொடரும் ஆனால் மெதுவாக. நீங்கள் இருக்கிற நம்பிக்கையில்த் தான் கிறுக்கத் தொடங்கியுள்ளேன். நாங்கள் போன அந்தக் கிழமை மிகவும் குளிர்.சிலசில இடங்களில் நின்று பார்த்ததோடு சரி.படங்கள் எடுக்கவில்லை.கடற்கரை ஓட்டமென்றதால் கடற்காற்றும் அதிகமாக இருந்தது.காற்றில்லாவிட்டால் குளிரைத் தாங்கலாம்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
-
இலைச் சருகுகள்.
பார்சல் விலையை பார்க்க பழைய கதை மாதிரி தெரியுது. உங்கள் கதை மாதிரி சில குறும் படங்களும் வந்தன.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே பிள்ளை தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞ்சும் இசையை பழகும் பொழுது துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது கண் பார்வையே உன் புதுப்பாடலோ பொன் வீணையே உன் பூமேனியோ பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் கன்னி பருவம் என் வடிவில் காலம் முழுதும் உன் மடியில் பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க பொன்னோவியம் என் மனமேடையில் சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.ம்ம்.. Song : Pournami Nilavil Movie/Album Name : Kanni Penn 1969 Star Cast : Jaishankar and Vanisri Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki Music Composed by : M. S. Vishwanathan Lyrics written by : Vaali
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
ஆஆஆ என்னது? கணவனும் மனைவியும் தனித்தனி கட்டிலிலா?
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
இதுவே அமெரிக்கா என்றால் அந்த தளமே பூட்டியிருப்பார்கள். இத்தனை கடிகளுக்கும் ஒரு தொகையும் கிடைத்திருக்கும். பேன் பேன் பேன்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
ஆகா ஆகா சூடு பிடிக்குது.எழுதுங்கோ எழுதுங்கோ.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
ஆஆஆ ஒரு சரத்துக்கு ஒரு சங்கிலியா? நானென்றால் அப்பாவின் முழு உடுப்பையுமே தூக்கிக் கொடுத்திருப்பேன். சுவி அருமையாக போகிறது. தொடருங்கள். சாமிநாதன் ஒரு புளியங்கொப்பு போல உள்ளது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
https://fb.watch/bmKIQk6BIt/ சுவாமிஜி நித்தியானந்தாவின் சோகக்கதை. கேக்க ரொம்பவும் பாவமாயிருக்கு.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
90க்கு முன் வெளிநாடுவந்த பலரின் நிலை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நெடுக்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
யாழ் எனும் திமிர்.
இது தான் நிதர்சனம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி. சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
நம்ப முடியவில்லை..!
எத்தனை டாலர்கள்?
-
,எஸ்கியூஸ் மீ மூருகா
கொழும்புகாரர் வந்த மாதிரி அவுசிலிருந்து நீங்களும் போய் படம் காட்டேலாமல் போட்டுதென்ற கவலை தெரியுது. பரவாயில்லை முருகன் எங்கே போயிடப் போறார். “புத்தா சீ யூ நெக்ஸ் இயர்” என்று சொன்னவர் கேட்டதோ?
-
நம்ப முடியவில்லை..!
ஆச்சரியமாக இருக்கிறது. இணைப்புக்கு நன்றி வன்னியர்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இப்ப இதை திங்கவா? பார்க்கவா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கல்யாணி.
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
-
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......!
முந்தைய நாட்களில் பிற்பகலானால் அடுத்தடுத்த வீடுகள் வேலிக்குள்ளாலும் பொட்டுகளுக்குள்ளும் இருந்து அரட்டையடிப்பார்கள். இதுவே சிலவேளைகளில் கொலை வரைக்கும் போகும். அந்தக் காட்சிகள் வந்து போகின்றன.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இப்ப பாருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் நுணா தனி மடல் போட்டேன்.திறந்த மாதிரியே தெரியலை. ஆ இந்தாளின் குப்பைகளை ஏன் பார்ப்பான் என்று விட்டுவிட்டீர்களோ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதை அரசல்லவா தடை செய்திருக்க வேண்டும்.
-
உங்களுக்கு தெரியுமா?
தகவலுக்கு நன்றி சுவி. இப்படியான பெரும்நிலம் உள்ளவர்கள் எம்மிடையே உள்ளார்களா தெரியவில்லை. சிறுசிறு விவசாயிகள் இதைப் பாவிக்கலாமா? ஆம் என்றால் நல்லதே. இதுக்கு பாதுகாப்பு தேவையாக இருக்கும். நம்ம ஊரில இப்ப வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. ஓணாண்டி கதையோடு தான் நிற்கிறார். @சுவைப்பிரியன் களத்திலேயே இறங்கிவிட்டார்.அவர் இதுகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பவர். ஆனால் பெருநிலமாக செய்கிறாரா தெரியவில்லை?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.