Everything posted by ஈழப்பிரியன்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Ravian திடீரென 10 டொலர்கள் இறங்கியுள்ளது. GME 17-18 டாலர்கள் இறங்கியுள்ளது. Rivian Automotive Inc NASDAQ: RIVN Follow Overview News Compare Financials 90.01 USD −11.38 (11.22%)today Closed: Jan 5, 5:48 PM EST • Disclaimer After hours 90.65 +0.64 (0.71%) GameStop Corp. NYSE: GME Follow Overview News Compare Financials 129.37 USD −19.54 (13.12%)today Closed: Jan 5, 5:15 PM EST • Disclaimer After hours 132.00 +2.63
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
வாகனம் விற்பனைக்கு வரும் போது ரெஸ்லா போல போகும் என்கிறார்கள்.
-
இனித்திடும் இனிய தமிழே....!
சுவி எனக்கென்னவோ இந்தாளைப் பார்த்தாலே பிறசர் ஏறிடுது. இணைப்புக்கு நன்றி.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Rivian Automotive Inc NASDAQ: RIVN @vasee மேலே உள்ள றிவியன் வாகனம் ரெஸ்லா போல வர வாய்ப்பிருக்கிறதா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தலைவர் என்றா கத்தி சுத்தாம பாதுகாப்பா இருக்கோணும். தளபதிகள் தான் களத்தில இறங்கி வாங்கிக்கட்டிக் கொண்டு வரவேணும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
படித்ததில் பிடித்தது _‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’_ *_‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’_* *_‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்._* _‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்._ _பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்._ _‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’_ _ பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்._ _அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்._ *_‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’_* *_‘‘இது எதுக்கும்மா?’’_* *_‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்._* *_பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்._* _அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்._ *_‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்._* *_பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்._* _பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்._ *_‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக._* _படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன்._ *_"உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்._* _பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள்._ *_வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்._* *_‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?_* *_எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்._* *_தன் மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்._* 👍🍬🍬🍬🍬🍬👍 https://www.facebook.com/Giritharasharma/posts/7382509938429478
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அடபாவி இப்படியும் எண்ணம் வேற இருக்கா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://fb.watch/aaWTeosR4V/ மகிந்தவின் திருப்பதி விஜயம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வந்து போனா மாத்திரம் போதாது. இலையை போட்டு உட்காரணும். இரண்டு மூன்று திரிக்குள் போய் கருத்தெழுதுங்க திண்ணை திரை விலகும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை எப்போதும் போல இருக்கும். ஒரு மாதகாலம் களத்துக்கு வரவில்லை என்றால் தானியங்கி எட்டி உதைத்துவிடும். அப்புறம் கொஞ்ச கருத்து எழுதினாலே சாதாரண களஉறசுகள் போல உறவாடலாம். சுலபமான வழி மட்டுறுத்தினர்களுடன் தொடர்பு கொண்டால் தானியங்கியை இயக்கிவிடுவார்கள். விரும்பிய மாதிரி புகுந்து விளையாடலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓ சரி சரி நான் நினைத்தேன் கொஞ்சகாலம் வராதவர்களை தானியங்கி ஒதுக்கி வைத்தது போல இப்படியானவர்களையும் ஒதுக்கி வைக்கும் என்று. நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Haha இதுக்கு தான் மவுசே இல்லாத சாமானுகளை பாவிக்கிறேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிரச்சனையோடு பிரச்சனையாக இதையும் ஒருக்கா பார்க்கவும்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்மம்மா கேளடி தோழிசொன்னானே ஆயிரம் சேதிகண்ணால தந்தது பாதிசொல்லாமல் வந்தது படம் -கறுப்பு பணம் கண்ணதாசனின் சொந்தப் படம் எல் ஆர் ஈஸ்வரியின் குரலில்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறீர்கள். தானியங்கி பல வேலைகளை செய்கிறது. அதே தானியங்கியை பாவித்து ஒரு வருடத்துக்கு மேலாக கருத்தெதுவும் எழுதாகவர்களின் பிறந்தநாள்களை மறைக்க முடியாதா? எந்தநாளும் சுவி பதியும் பிறந்தநாள் பதிவில் அனேகமானோர் வருடக் கணக்காக தொடர்பில்லாமல் இருப்பவர்களே அதிகம். இதை கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நல்லது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாள் தவறாமல் எல்லோரது பிறந்தநாளையும் தூசிதட்டி எடுத்து இணைத்துக் கொண்டிருக்கும் சுவிக்கு மிகுந்த பாராட்டுக்கள். இதை நீங்கள் செய்யும் ஒரு சேவையாகவே பார்க்கிறேன்.
-
தொங்குடா.. தொங்கு..!
வன்னியர் பட்டத்தைப் பார்த்தால் 13 ஆயிரம் அடி உயரமானதாகத் தெரியவில்லை.
-
தொங்குடா.. தொங்கு..!
ஊருக்கு ஊர் உங்க லொகேசன் மாறுதே தல.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
என்ன தான் நடக்குது பங்குச் சந்தையில்? இலையுதிர் காலத்தில் இலைகள் கொட்டுமாப் போல பொல பொலவென்று கீழே போவுதே? முதலுக்கு மோசமாயிடுமோ?
-
இனித்திடும் இனிய தமிழே....!
இணைப்புக்கு நன்றி சுவி. அருமையாக இருந்தது.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வீட்டில அம்மா இல்லைப் போல. வந்து இருக்கு விளக்கு மாத்தால.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இந்த படத்தை சற்று உற்று நோக்குங்கள். ஒரு பச்சை நிறத்தாலான ஒரு இலை இருக்கிறது. அதன் மீது 12 எறும்புகள் நின்று கொண்டு இருக்கின்றன. அவை என்ன செய்கின்றன? இலையில் ஒரு சொட்டு மழை நீர் விழுந்து இருக்கிறது. அந்த எறும்புகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எறும்புகள் ஒற்றுமையாக வாழும் உயிரினம். ஒரே இடத்தில கூட்டமாக நின்று அருந்தினால், எடை தாங்காமல் (அது ஒரு இலை மட்டுமே) இலை ஒரு பக்கம் சரிய, அந்த சொட்டு தண்ணீரும் இலையை விட்டு வெளியேறி விடும். எனவே, அவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டத்தை உருவாக்கி, ஒரு குழுவிற்கு மூன்று எறும்புகள் என்ற வகையில் நான்கு குழுக்களாக பிரிந்து வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று திசைக்கு ஒரு குழு என்றவகையில் நின்று கொண்டு தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ளுகின்றன. ஒரு பக்கம் ஒற்றுமை - ஒரு பக்கம் புத்திசாலித்தனம். இயற்கையை கூர்ந்து நோக்கும்போது, ஆச்சரியப்படும் வகையில் நிகழுவுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. https://www.facebook.com/groups/2617493025138961/permalink/3272011729687084/ எமது அரசியல்வாதிகள் இப்படியானவற்றை பார்க்க வேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலியானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உங்கள் நுட்பங்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லோரும் விலை குறையும் நேரங்களிலேயே வாங்குவார்கள். அது எப்படி விலை கூடி 200 க்கு போகத் தான் வாங்குவேன் என்கிறீர்கள்.?