Everything posted by ஈழப்பிரியன்
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
வண் வோயா? ரூ வேயா சார்.? என்னையா பெண் கூடுதலாக உள்ள பகுதியில் நிற்கிறீர்களே! எனக்கும் இப்படியானதொரு திட்டம் இருக்கிறது.
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
ஐபோனை வெறுத்தீர்கள் . இப்போ பிடித்துக் கொண்டதா? படங்கள் இணைப்புகளுக்கு நன்றி.
-
ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே
எல்லாமே தமிழன் தலை நிமிர்ந்து வாழ்ந்துவிடக் கூடாது என்ற திட்டம் இதுவரை போயுள்ளது. இன்னமும் போகும்.
- இரை .......!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
@நீர்வேலியான் நீங்கள் வைனறீஸ் பற்றி எழுதியதும் தான் மறந்து போன ஒரு விடயம் ஞாபகத்துக்கு வந்தது. இந்த பாதையில் ஒரு தமிழர் வைனறீஸ் வைத்து நடாத்துகிறார்.அதுவும் 90 காலத்தில் நாம் வசிக்கும் இடமான குயின்ஸ் என்ற இடத்திலேயே இருந்திருக்கிறார். பின்னர் தோட்டம் செய்ய ஆசைப்பட்டு கலிபோர்ணியா இடம் பெயர்ந்து இப்போது ஒரு வைனறிக்கு அதிபராக இருக்கிறார். எனது மகளின் சினேகிதிகள் அந்த பக்கம் போனதால் இந்த தகவல்களை தெரிந்து கொண்டனர். நாமும் போக முயற்சி செய்தோம்.ஆனாலும் எமது துர்அதிஸ்டம் திங்கள் செவ்வாய் மூடப்பட்டிருக்கும். எப்பவாவது போனால் அல்லது யாராவது நண்பர்கள் இந்த பாதையில் பயணித்தால் போய் பார்க்கலாம். முன்னறிவித்தல் இல்லாமல் போக முடியாது. https://www.guyomarwine.com/vineyard/ Visit Please email or call; Tasting by appointment only. (805) 400-1616 info@guyomarwine.com 1825 Las Tablas Road Templeton, CA 93465
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னது மோகன் விழக்கம் தந்தாரா?இணைத்தா நாங்களும் பார்க்கலாமில்ல?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆகா நிலாமதி நானும் இப்படி தான் என்னடா எல்லோரும் பல வர்ணங்களில் எழுதுகிறார்கள்.நமக்கு மட்டும் வருகுதில்லையே என்று பார்த்தால் கைபேசி ஐபாட் போன்றவற்றில் இது சிரமம். பெரிய கணனிகளில் எழுதும் போது நீங்கள் விரும்பிய மாதிரி எழுதலாம். நீங்கள் எதைப் பாவிக்கிறீர்கள்?
-
மன வைராக்கியம்
நல்லதொரு கருவை எடுத்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நிலாமதி. கிருபன் என்ற பேர்வழி எப்போதும் உசார் பாட்டி போல இருக்கு.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
காய் காய் கறுப்பி வெல்கம் Back.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
மார்ச் 30இ 1867 இல்இ அமெரிக்கா அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து கூ7.2 மில்லியன் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்தது. ரஷ்யாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் சீவார்ட் மற்றும் ரஷ்ய அமைச்சர் எட்வார்ட் டி ஸ்டோக்ல் ஆகியோரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கையெழுத்திடப்பட்டது. சிறி ஒரு காலத்தில் ரசியாவின் உடமையாக இருந்தது. வொட்கா அடித்துப் போட்டு வெறும் 7.2 மில்லியனுக்கு விற்றிருக்கிறார்கள். இனி 700 பில்லியன் டாலர் கொடுத்தாலும் கிடைக்காது. ஐயா லண்டன் கடைக்காரர் மிளகாய்த் தூள் பைக்கற்ரையே பட்டறையில் ரெடியாக வைத்திருக்கிற ஆக்கள். சுமேக்கு சொல்லியா கொடுக்கணும்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
லண்டன் மாநகரில் இருந்து கொண்டு கேக்கிற கேள்வி. தங்கச்சி லண்டனில் இல்லாத கள்ளரா? கள்ளர் எங்கு தான் இல்லை? இலங்கைக்கு போனால் வீட்டுக்குள்ளேயே படுக்க முடியாமலிருக்கு. இதைத்தான்யா நானும் யோசிச்சன்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நீர்வேலியான்…. நான்கு பந்தியில், பெரிய விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி. அதிலும்… அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் 2.4மைல் தூரம் என்பதை ரசித்தேன். சிறி யோசித்து பாருங்கோ இதே சரித்திரத்தை நான் எழுதியிருந்தால் சரித்திரமே மாறியிருக்கும். அந்த பாவத்திலிருந்து என்னை காப்பாற்றியுள்ளார் @நீர்வேலியான்.
-
அந்த மனிதன்
அவன் காசு கொடுக்கிறதைப் பார்த்திட்டு நீங்களும் உங்கள் சம்பளத்தைக் கொடுத்திட்டீங்களோ என எண்ணினேன்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
உடையார் நன்றி. இந்த பாதையில் பயணிப்பதானால் முதலில் காலநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.மழை நேரம் போகவே கூடாது.ஒற்றையடிப் பாதை வழைந்து வழைந்து போகும்.கரணம் தப்பினால் மரணம்.அத்துடன் ஓரிருவர் போறதைவிட கொஞ்சம் கூட்டமாக போனால் மிகவும் நல்லது. ஒரு தடவைக்கு மேல் இதில் பயணிப்பது அலுப்பைத் தந்துவிடும்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஆதரவுக்கு நன்றி எப்போதும் தமிழன். ஆதரவுக்கு நன்றி அம்மா.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
இவ்வளவு ஊக்கம் தந்த உங்கள் எல்லோருக்கும் நான் தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். கருத்துக்கள் எழுதியும் பச்சை குத்தியும் ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இருக்கும் இருக்கும். அவர் இருக்குமிடத்திலிருந்து ஒன்றரை மணிநேரம் கார் ஓட்டம். எனவே அடிக்கடி போகமாட்டார் என எண்ணுகிறேன்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
இது பக்கத்தில் பக்கத்தில் பிள்ளையார் கோலும் விஸ்ணு கோவிலும் இருக்கிறது.நாங்கள் சனிக்கிழமை போனபடியால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது.நிறைய தமிழ்நாட்டு தமிழர்கள் வந்திருந்தார்கள்.தமிழ் ஐயர்மாரும் இருப்பதாக @நீர்வேலியான் சொன்னார். வழமை போன்று ஒரு அரிச்சனை.மனைவிக்கு பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிளளைகள் எல்லோரது நாள் நட்சத்திரங்கள் எல்லாம் ஞாபகம்.வரிசையாக எல்லோரது பெயர்கள் நட்சத்திரங்களும் சொல்லி செய்தோம். மதிய சாப்பாடு கோவிலிலேயே முடித்துக் கொண்டோம்.பரவாயில்லை சாப்பாடு நன்றாகவே இருந்தது.விலையும் மிகவும் மலிவாக இருந்தது.ஒரு சாப்பாடு 4 டாலர்கள் மட்டுமே. கோவிலைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் @நீர்வேலியான் தான் சொல்லோணும்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நீர்வேலியானுடனான சந்திப்பில் இந்த வீதியின் இன்னும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். உதாரணத்துக்கு அரபுதேச பாலைவனத்தில் மணல் மேடுகள் உள்ளது போல இந்த வீதியிலும் இருந்தது.கோடை காலத்தில் பெரிய வாகனங்கள் கொண்டுவந்து பல விளையாட்டுக்கள் நடைபெறுவதாக சொன்னார்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நன்றி கொழும்பான். சிறி 1490களில் கொலம்பஸ் அமெரிக்காவை வந்தடைந்தார். ஆனாலும் அவர் ஏதோ இந்தியாவின் ஒரு கரையில்த் தான் வந்திறங்கியதாக நம்பினார்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நல்லதொரு விளக்கம்.இத்தனையும் நடந்திருக்குதா? நன்றி நீர்வேலியான். புங்கை நல்லகாலம் நான் அரைகுறையாக சொன்னதை நீர்வேலியான் முழுமையாக சொல்லியுள்ளார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது. படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர். பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே. குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன. அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம். அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம். நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு. இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று. ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர். ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம். இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன். கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். நன்றி. இனிவராது. யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
உண்மை தான் சிறி. பேரப்பிள்ளைகள் வந்து எமது சுதந்திரம் பறி போகிறது. கணனியோ போனோ விளையாட விடுவதில்லை. அதைக் கண்டாலும் எடுத்து தந்துவிட்டு போவார்கள். சில பிள்ளைகள் போன் ரிவி இல்லாவிட்டால் தொலைஞ்சுது. நாங்களும் பழக்க வேண்டாமே என்று கவனமாக இருக்கிறோம். என்னா பெரிசு கடையை பூட்டாவிட்டால் கல்லெறி விழும் போல இருக்கே. கெதியில் பூட்ட முயற்சி செய்கிறேன்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஒரு காலத்தில் இந்தியன் இருந்தார்கள். பின்னர் ஸ்பானிஸ்(கூடுதல் மெக்சிக்கன்ஸ்). 1850களில் திடீரென தங்கம் கண்டுபிடிக்க உள்ள வெள்ளை இனத்தவர் குடியேறிவிட்டனர். எல்லோரும் படங்கள் படங்கள் என்றால் சுட்டுத் தான் போட வேண்டும். கடந்த வருடம் எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கு பாடப் புத்தகங்களிலேயே இவை பற்றி இருந்ததால் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அத்தோடு அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற களியாட்ட நகரமான லாஸ்வீகசும் ஒன்றாக பார்க்க கிடைத்தது. இரண்டையும் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.