-
Posts
17882 -
Joined
-
Last visited
-
Days Won
72
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
வீரகேசரி, தினக்குரல், டெய்லி மிரர், தமிழ் மிரர் தவிர்ந்த மற்றைய பத்திரிகை செய்திகளை தடைசெய்யுங்கள்.முன்னர் அப்படித் தானே இருந்தது. இங்கு இணைக்கும் செய்திகளை வைத்தே எந்தநாளும் களமாடுகிறோம். ஆனாலும் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பத்திரிகைகளில் வந்தால்த் தான் ஊர்ஜிதமான செய்தி என்றால் மற்றைய செய்திகளை ஏன் இங்கு இணைப்பான்? -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மகேசன் பதவி ஏற்கும் நிகழ்வைப் பார்த்தீர்களா? இல்லை என்றால் ஒருமுறை பாருங்கள். இங்கு வீரகேசரி தினக்குரலைத் தவிர வேறு எதுவும் இணைக்க வேண்டாம் என்று ஒரு கோரிக்கை வையுங்கள். மகேசனைப் பற்றி இப்போது தான் எழுதியிருந்தீர்கள். நான் அந்தநேரம் வந்த செய்தியை சொன்னேன். வரவர உங்களுக்கு விளக்கம் குறைவாக போய்விட்டது. -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நிழலி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பத்திரிகை காணொளிகளில் வந்த செய்தியையே எல்லோரும் சொன்னோம். அந்த இடத்துக்கு தேர்தலில் நின்றவர் போகக் கூடாது என்றார்கள். ஆனாலும் சுமந்திரன் போயிருக்கிறார். கோத்தாவின் காலத்தில் நீதி எங்கே இருந்தது. அந்த அம்மா நீதி தேடி சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பாவோ தெரியாது. இந்த நிலையில் எல்லாம் தெரிந்த நீங்களே ஏன் நீதிதேடி போகவில்லை என்று கேட்கிறீர்கள்? மகேசன் பதவி ஏற்கும் போது வேறு எந்த ஜனாதிபதி கூப்பிட்டிருந்தாலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தாரே ஏன்? ஏதோ அழுத்தங்களுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் அதனாலேயே அப்படி சொல்லியிருக்லாம். உங்களுக்கும் சரி அரசுக்கும் சரி புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகவில்லை. -
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
ஈழப்பிரியன் replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
https://www.cnn.com/weather/live-news/hurricane-milton-florida-10-07-2024/index.html -
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
ஈழப்பிரியன் replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
சிறி நாளைக்கு அடுத்த புயல் புளோரிடாவைத் தாக்கப் போகிறது. கடந்த புயலின் போது காணாமல் போனோர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறார்கள். -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நாய் செத்துப் போனது தெரியுமோ? -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
செத்த நாயில் இருந்து உண்ணிகள் கழருவது போல தமிழரசில் இருந்து ஒவ்வொருவராக கழருகிறார்கள். -
அமெரிக்க தேர்தலுக்காகவே ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தவிர்க்கிறதோ?
-
இவருக்கு மூச்சையைப் பொத்தி கொடுப்பதென்றால் எங்கே கொடுப்பது? தேடிப் பிடிக்கிறதுக்கிடையில் கோபம் தணிந்திடுமே.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்
ஈழப்பிரியன் replied to ஏராளன்'s topic in அரசியல் அலசல்
களைப்பாக இருந்தால் போய் களைப்பாறுங்கள். அடுத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்பவன் ஒரு போராளி மாதிரி எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். -
இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம். அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இனியென்ன இதற்கு தலைவர் சுமந்திரன் தான். -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அடடே இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணாமல் ஐயா சம்பந்தன் போய்ச் சேர்ந்துட்டாரே. -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஈழப்பிரியன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த தேர்தலில் யாருமே வெற்றிபெற மாட்டார்கள் போல இருக்கு. ரணிலுக்கு கிடைத்தது போல போனஸ் மட்டுமே கிடைக்கும் என எண்ணுகிறேன். அதற்கும் வெட்டுக் கொத்தில் தான் முடியும். -
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
ஈழப்பிரியன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சுமந்திரன் ஒரு பத்திரிகை தொடங்கினாரே என்னாச்சு? -
இந்தக் காணொளியில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தவர்களின் குணாதிசயங்கள் அனுபவங்கள் தமிழ்தேசியம் என்று சொல்லிச் சொல்லியே எப்படி தமிழ்மக்களை அழிக்கிறார்கள் என்று பல்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. இடையில் ஒரு உதாரணத்துக்கு தேசியதலைவரின் மதிநுட்பத்தையும் குறுகிய சிந்தனை இல்லாமல் நீண்டகாலமாக மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி நந்திக் கடலில் இரால்பண்ணை வைக்கலாம் நிறைய லாபம் எடுக்கலாம் என்று ஒரு திட்டத்தை வைத்த போது இதில் அனுபவம் இல்லாத தலைவர் இரால்பண்ணை எங்கெங்கே செய்கிறார்கள் என்று ஆராய்ந்து நீர்கொழும்மு பக்கத்திலிருந்தவர்களை வரவழைத்து அதன் நன்மைதீமை பற்றி முழுமையாக ஆராய்ந்து கடைசியில் அந்த திட்டம் வருமானமாக இருந்தாலும் இந்த மண்ணும் கடலும் நச்சுத் தன்மை கொண்டதாகவும் மலட்டுத்தன்மை கொண்டதாகவும் 10-15 வருடங்களில் மாறிவிட்டால் மீண்டும் அந்த கடலையோ மண்ணையோ அடுத்த சந்நதி பாவிக்க முடியாது என்பதால் அத்திட்டத்தை முற்றாகவே கைவிட்டதாக சொல்கிறார். இவர் தான் மக்களுக்கான தலைவன்.இல்லை கடவுள். இதைப்பற்றிய உரையாடலை 18வது நிமிடத்திலிருந்து விரும்பியவர்கள் கேட்கலாம்.
-
- 1
-
இப்ப விளங்குதா, ஏன் நாலைந்து நாதளுக்கு தான் காணாமல் போகப் போகின்றேன் என்றவர்? ஆள் எஸ்கேப் இவரைத் தேடித்தான் இன்ரபோல் போகுது. அது தான் எல்லோரும் தொப்பு தொப்பென்று கால்ல விழுகிறாங்களாமே? கோடுவரை போகாது. ஒரு மன்னிப்பு அவ்வளவு தான். இனிமேல் கையூட்டு வாங்கினாலும் பிரச்சனையே இல்லை. மூச்சுவிட மாட்டானுகள்.
-
தன்னை வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறீதரன் மதுபான சாலை உரிமங்களை பெற்றுக்கொண்டதாக முகநுால் மற்றும் டிக்டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸிலும், ஒட்டுசுட்டான் 'சைபர் க்ரைம்' பிரிவிலும், கொழும்பு 'சைபர் க்ரைம்' தலைமையகத்திலும் கடந்த 24.09.2024ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுக்கமான நிலைப்பாட்டில் சிறீதரன் பொலிஸார் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தாம் பதிவிட்ட செய்தி பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். மற்றுமொரு நபர் அதிக மதுபான பாவனையால் தனக்கு மனநிலை குழம்பிவிட்டதாகவும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறி சிறீதரனிடம் தொலைபேசி ஊடாக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், சட்ட நடவடிக்கை தொடர்பாக சிறீதரன் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால் இந்த விடயத்தை மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/fake-newses-spread-in-the-name-of-sri-tharan-1728035378 பத்தரை மாற்றுத் தங்கம் சிறிதரனைப் பற்றி அவதூறு பரப்பியவர்களை இன்ரபோல் தேடுகிறது. இன்று அனேகமாக மோகன் வீட்டுக்கதவு தட்டப்படும். அதுக்கிடையில் நீங்களாகவே அவதூறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.