Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    17882
  • Joined

  • Last visited

  • Days Won

    72

Everything posted by ஈழப்பிரியன்

  1. முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை? எனது பங்கிற்கு 1) கொழும்பு —-யாழ் நெடுஞ்சாலை 2) தீவகங்களுக்கு ஓடும் கப்பலில் ஏறவே பயமாக உள்ளது. கீழ்த்தட்டு மேற்தட்டு கூரை என்று மக்களை ஏற்றுகிறார்கள். விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் வெளியே வரவே முடியாது.
  2. இவர்களை நான் எப்போது ஆதரித்தேன்? இப்போது கூட தேர்தல் மேடையில் பேசக் கிடைத்தால் இவர்களுக்கு எதிராகவே பேசுவேன். எத்தனை பேரை போட்டுத் தள்ளியவர்கள் அழியட்டும். நல்லது தொண்டனாக இருக்கட்டும். அதற்காக தலைவராக ஆக்க வேண்டுமா? ஒரு கம்பனியில் உயர்பதவி யாருக்கு கொடுக்கிறார்கள்? பைல்களை நகர்த்துபவருக்கு ஒரு உயர் பதவி கொடுத்தால் எப்படி இருக்கும். அடுத்த அடுத்த பதவிகளுக்கு போய்த் தான் முனனேறணும்.
  3. எனது பதின்ம வயதிலேயே சாதிக் கொடுமைக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டவன்.எனவே சாதிக் கொடுமையைப் பற்றி எனக்கு நீங்கள் சொல்லித் தரவேண்டியதில்லை. எனது ஆதங்கமெல்லாம் பாராளுமன்றுக்கு போவதற்கு ஒரு தகுதி வேண்டும்.ஒரு படித்த உயர்ந்த நிலையில் உலகமே மதிக்கும் ஒரு சட்டத்தரணி சுமந்திரன் தனது கட்சியில் பல பெண் தொண்டர்கள் இருக்கும் போது அவர்கள் யாரையுமே கண்டு கொள்ளாமல் நாகரீகமில்லாமல் எதிராக களமாடிய ஒருவரை எப்படி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார். இளம்பிறையன் சாதிக்காக குரல் கொடுக்கிறவர் என்றால் வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.
  4. ஒருபக்கம் தந்தை செல்வாவுக்கு அஞ்சலி மறுபக்கம் மாவையில் காலில் விழுந்து ஆசீர்வாதம். இந்திய கலாசாரத்தை இங்கும் அறிமுகப்படுத்துகிறாரோ?
  5. தெற்கில் வந்த மாற்றம் போல வடகிழக்கிலும் வரும் என எண்ணுகிறேன். அடுத்த 14 வரை பொறுத்திருப்போம்.
  6. கிறிஸ்தவர் ஆகிய தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி, ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது.... காலம் செய்த கோலம் தான். சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு இங்கே கேவலத்திலும் கேவலமானது சித்தார்துடன் சுற்றித் திரிந்து தமிழ்தேசியத்தையும் புலிகளையும் மேடைபோட்டு பேசிவந்த பெண்ணை தேர்தலில் களமிறக்கியிருப்பது.
  7. இவரும் பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.இவரின் மனைவி பாஸ்போட் மோசடியில் சிக்கியுள்ளார்.அதிலிருந்து தப்புவதற்கான வேடமாக இருக்கலாம்.
  8. எல்லோரும் எதிர்பார்த்தளவுக்கு இல்லாமல் சூறாவழியின் வேகம் குறைந்தபடியால் உயிர் உடமைகளுக்கு சிறிய சேதாரங்களுடன் புளோரிடா மக்கள் தப்பியுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். பல வீடுகள் கட்டடங்கள் கூரையைக் காணவில்லை.சில வீடுகள் முற்றாக காற்றுடன் பறக்கிறது. சிறிய சிறிய சூறாவழிகள் பல தாக்கியதால்த் தான் இப்படியான சேதங்கள். கடந்த சூறாவழியுடன் ஒப்பிடும் போது இது எதுவுமே என்ற மாதிரி இருக்கிறது. பைடன் அரசுக்கு இப்போது மிகப்பெரும் சவால் இருக்கிறது. கூடுதலான பணங்களை வசதிகளைக் கொட்டி புளோரிடா மாநிலத்தை தங்கள் பக்கம் வரவைக்க முயற்சி செய்வார்கள்.
  9. அரகல போராட்டத்தின் போது முப்படைக்கும் பொறுப்பானவர் கோத்தாவை காப்பாற்றவில்லை இவரை விசாரிக்க வேண்டும் என்று கத்திக் குளறியவர் இப்போது கை குலுக்குகிறாரே.
  10. நல்லூர்க் கோவிலை உடைத்து மலசல கூடம் கட்ட வேண்டுமென்ற சித்தார்த் என்றவருடன் சேரந்து இயங்கிய ஒரு பெண்ணுக்கு தேர்தலில் தமிழரசின் சார்பில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறாரே. முழு காணொளியையும் கேட்க விருப்பமில்லையென்றால் 8 1/2 நிமிடத்திலிருந்து கேட்கலாம். இணைப்புக்கு நன்றி ஏராளன். தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுபவர்களின் அபிப்பிராயங்கள் ஏதாவது தெரியுமா ஏராளன்?
  11. கந்தையா நீங்க யசோவையும் என்று எழுதியதைப் பார்த்து அட நீர்வேலியானின் மனைவியாக்கும் என்று எண்ணிவிட்டேன். அப்புறமா தான் ஓடிப் பிடித்தேன். நியூயோர்க் வெடிச் சத்தம் தான்.
  12. முடிவு எங்கள் கையில் இல்லையே. எல்லாம் மக்கள் கையில். இன்னும் ஒரு மாதம்.
  13. அதுசரி முதலைப் போட்டால் வட்டியும் குட்டியுமாக வருமா சார்?
  14. அப்படியல்ல தமிழரசில் எருமைமாடு தேர்தலில் நின்றாலும் வாக்குப் போடவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்.
  15. ஐயா விக்னேஸ்வரன் பார் லைசன்ஸ் எடுத்ததோடு எஸ்கேப் போல இருக்கு. எல்லோரும் இளமையாக உள்ளார்கள்.
  16. சீன போர்க் கப்பலில் பயிற்சி எடுக்கப் போகிறாரோ?
  17. உலக வல்லரசாக துடிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவனின் கடலில் போய் மீன் பிடிக்கக் கூடாது என்பது தெரியாதா?
  18. பலமாக இருந்தால் அவர்களாகவே வருவார்கள். இப்போ எங்கே பலம்? ஜனாதிபதியை சந்தித்த இரு தமிழ் தலைவர்களைப் பாருங்கள். ஒருவர் என்ன கதைத்ததென்றே தெரியாது.காலில் விழுந்ததாகவும் சொல்கிறார்கள். அடுத்தவர் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்கவில்லை.மாறாக மற்றைய தலைவர்களை எப்படி வீழ்த்தலாம் என்று யார்யார் பார் லைசன்ஸ் எடுத்தார்கள் என்பதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  19. சமாதான புறாவாக புறாவையும் பறக்க விட்டார்களாமே? கடைசியில் கண்டது சந்திரிகாவின் புதைகுழி கலாசாரத்தையே.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.