தமிழர்களுக்கான எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஆளுமை மயூரனிடம் இருப்பதாகவே உணர்கிறேன்..
இதுவரை எதுவித தகுதியும் இல்லாத பலரை பாராளுமன்றம் அனுப்பியிருப்போம்.
வராதுவந்த மாமணியாக ஆகச்சிறந்த அறிவாளி இன்று தேர்தலில் களம் கண்டிருக்கிறான். இது ஒரு அரியவாய்ப்பு..
அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம்பெற்று இதுவரை எவராலும் நெருங்க முடியாத இசட் புள்ளியுடன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தான்..
படிக்கின்ற காலத்தில் அவனை தனியார் கல்வி நிலையத்தில் அவதானித்து இருக்கிறேன். துடிப்பானவன்.. பின்னர் ஒருமுறை தனது தாயினது ஓய்வூதியம் தொடர்பாக நான் பணியாற்றிய அலுவலகத்தில் வந்திருந்தான்... எதுவித பந்தாவுமற்ற சிறந்த கல்வியாளன்.. பல்துறை விற்பன்னன்...
இம்முறை இவனை எமக்கான அரசியல் தலைமையாக தேர்ந்தெடுத்து ஏனைய சாக்கடைகளை அரசியலில் இருந்து விரட்டவேண்டும்...
https://www.facebook.com/share/p/JENhhD7K5hSBpKPv/?mibextid=WC7FNe