Everything posted by ஈழப்பிரியன்
-
சுமந்திரனின் கர்த்தால்? - நிலாந்தன்
இப்போ அவர் கண்முன் தெரிவதெல்லாம் முதலமைச்சர் பதவி மட்டுமே.
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
முன்னைய அரசுகள் நடந்து கொண்டது போல இந்த அரசும் ஆயுதப்படைகளை வைத்து அதுவும் ஊடகவியலாளர்களையே மிரட்டுவது காட்டுமிராண்டித் தனமான செயல்.இதை கட்சி சார்பில்லாமல் எல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்பி பாடல்களை இணைக்கும் போது அதன் முதல்வரிகளை இணையுங்கள்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
Trump told Europeans that Putin wants all of Ukraine's Donbas in exchange for end of war Russian President Vladimir Putin spelled out his demands for “land swaps” with Ukraine during his nearly three-hour summit with US President Donald Trump yesterday, including his insistence Ukraine gives up the Donbas region in eastern Ukraine, according to European officials familiar with Trump’s accounting of the meeting to his counterparts afterward. Putin said in exchange, he would be willing to freeze the current front lines in the rest of Ukraine — in the regions of Kherson and Zaporizhzhia — and agree to a promise not to attack Ukraine or other European nations again. But he didn’t back away from a demand to eliminate what Russia calls the “root causes” of the war in Ukraine — code for reducing the size of Kyiv’s military, abandoning its aspirations to join NATO and becoming a neutral state. The details of Putin’s conditions emerged when Trump briefed European leaders on the talks as he was arriving back in Washington early this morning. Trump said he believed a deal could be reached quickly if Putin’s conditions were met, and that he would discuss the matter with Ukrainian President Volodymyr Zelensky at the White House on Monday, the officials said. https://www.cnn.com/politics/live-news/trump-putin-meeting-news-08-16-25#cmeecgnxb00073b6omudrlidp நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான கிட்டத்தட்ட மூன்று மணி நேர உச்சிமாநாட்டின் போது, உக்ரைனுடன் "நில பரிமாற்றங்கள்" செய்வதற்கான தனது கோரிக்கைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கினார். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியை உக்ரைன் கைவிட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல் உட்பட, இந்த சந்திப்பை டிரம்ப் பின்னர் தனது சகாக்களிடம் தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஈடாக, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் - கெர்சன் மற்றும் சபோரிஷியா பகுதிகளில் - தற்போதைய முன்னணிப் படைகளை முடக்கவும், உக்ரைனையோ அல்லது பிற ஐரோப்பிய நாடுகளையோ மீண்டும் தாக்குவதில்லை என்ற வாக்குறுதியை ஏற்கவும் தயாராக இருப்பதாக புடின் கூறினார். ஆனால், உக்ரைனில் போரின் "மூலக் காரணங்கள்" என்று ரஷ்யா அழைப்பதை நீக்குவதற்கான கோரிக்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை - கியேவின் இராணுவத்தின் அளவைக் குறைத்தல், நேட்டோவில் சேருவதற்கான அதன் விருப்பங்களைக் கைவிட்டு நடுநிலை நாடாக மாறுவதற்கான குறியீடு. டிரம்ப் இன்று அதிகாலை வாஷிங்டனுக்குத் திரும்பும்போது பேச்சுவார்த்தைகள் குறித்து ஐரோப்பியத் தலைவர்களுக்கு விளக்கியபோது புடினின் நிபந்தனைகளின் விவரங்கள் வெளிப்பட்டன. புடினின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் நம்புவதாகவும், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதாகவும் டிரம்ப் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழாக்கம் கூகிள் ஆண்டவர்.
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
அப்புறம் மின்சாரத்தை யாரிடம் விற்பது?
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம். எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதரவை திரட்டுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில் கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புடையீர், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி கடையடைப்பு தொடர்பானது எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. முழுமையான பங்களிப்பு இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும். அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது. கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் - என குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilwinகடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம் - தமிழ...எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்குஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதர...சுமந்திரனின் ஹர்த்தாலுக்கு வலுக்கும் எதிர்ப்பும் பின்னணியும்.
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
சும்மா இருந்த உக்கிரேனை ரசியாவுக்கு பாடம்புகட்டப் போய் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி ஆகியது அமெரிக்காவும் ஐரோப்பாவுமே.- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் எப்படி நாசூக்காக காற்றாலைகளை நிறுவ இலங்கை அரசு முயல்கிறது என்று ஒரு விரிவான காணொளி. மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்க மாட்டேன் என்ற அனுர மின்சாரத்துக்காக நாம் ஒரு பகுதியை இழந்தேயாக வேண்டும் எனும் நிலைக்கு வந்துவிட்டார். சிங்கள பிரதேசங்களில் எவ்வளவோ இடங்கள் இருக்கும் போது ஏன் தமிழ் பிரதேசங்களை நாடுகிறார்கள்?- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆயுதங்களை கொடுத்து உசுப்பேற்றாவிட்டால் உக்ரேன் வழிக்கு வரும். இவ்வளவு காலம் உக்ரேனா சண்டை பிடித்தது?- ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னது பலகாரம் செய்தனீர்களா? எங்காவது கொண்டாட்டங்களில் முதலே சுட்டிருப்பார்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவர் பார் எல்லாம் போகமாட்டார். ஒன்லி கள்ளு கொட்டில்.- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஜேர்மனி அதிபர் குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் உணவு திருடியதாக ஒரு சிறுமி தாக்கப்பட்டிருந்தார்.- ‘கூலி’ விமர்சனம்
அவனவன் பணத்தை சுருட்டிக் கொண்டு போகிறான். ஏமாளிகள் மண்சோறு சாப்பிட்டு மண்டையைப் போடப் போறாங்கள்.- செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
ரம் எப்படியாவது போர்நிறுத்தத்தைக் கொண்டுவந்து சரித்திரத்தில் இடம்பெற எண்ணுகிறார்.(நோபல் பரிசு) பூட்டினைப் பொறுத்தவரை உக்ரேன் நேட்டோவில் சேர முடியாது. பிடித்த இடத்தை விட முடியாது. இரண்டுக்கும் ரம் தலையசைப்பார் என்றே எண்ணுகிறேன்.- அறிமுகம்
வணக்கம் வாங்கோ. பிரபல சப்பாத்தின் பெயருடன் வந்துள்ளீர்கள்.- தமிழரசின் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு | சுமந்திரனுக்கு கடும் எச்சரிக்கை .
- காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
பொலிஸ் போய் சொல்லித் தான் அவர் இந்த பெண் வந்த விடயத்தை தெரிந்து கொள்ள போகிறாரோ?- பத்தோடு பதினோன்றாக மாறிய இலங்கை விவகாரம்.
ஆணையாளரின் முன்னோடி அறிக்கை வெளியானது *** **** *** **** *2015 ஆம் ஆண்டு போன்று 2025 இலும் அதே நகர்வு...! *அநுர அரசாங்கம் மீது நம்பிக்கை.... *உள்ளக விசாரணைக்கே முன்னுரிமை.....! *தமிழர் விவகாரம் பத்தோடு பதினொன்றாக மாறியது. *ICC யில் இலங்கை இணைந்தால் பழைய குற்றங்கள் கைவிடப்படும்..... - --- ------ --- ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் 12 திகிதியிட்ட பதிப்பிக்கப்பட்டிராத முன்னோடிப் பிரதி ஒன்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பிரதி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரதியாகும். இதற்கேற்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள திட்டம் எதிர்வரும் நாட்களில் அல்லது வாரங்களில் தெரியவரும். ஆணையாளரின் 16 பக்க அறிக்கைய தொனிப்பொருள் என்ன என்பதைப் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. அதாவது, 2015 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் - மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவோடு இணைந்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றிய 301 தீர்மானம் போன்ற ஒரு நிலைமை 60 ஆம் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுவதற்கான நிகழ்தகவு, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 இல் ஏற்படலாம் என்ற கற்பிதம் தொனிக்கிறது. ஜேவிபி என்பிபி எனப்படும் புதிய அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறல் விவகாரம் முழுவதையும் இலங்கையிடம் இருந்தே ஆணையாளர் எதிர்பார்க்கிறார். இது வடக்கில் என்.பி.பி எனப்படும் ஜேவிபிக்கு வாக்களிக்கும் நிலைக்கு மக்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இட்டுச் சென்றதன் நேரடி விளைவு ஆகும். அத்துடன் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court, ICC) இலங்கை இயல்பாகவே இணைவது நல்லது என்ற கோணத்திலும், இலங்கை கடந்தகால குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக புதிய முன்னேற்றங்கள் அமையும் என்ற வியூகத்திலும் அறிக்கையின் உள்ளடக்கம் பொதிந்துள்ளது. இதை நான் ஏற்கனவே செய்தி உளவியல் தன்மையின் பிரகாரம் ஊகித்துச் சுட்டிக்காட்டியிருந்தேன். இலங்கை செய்ய வேண்டிய பொறுப்புக் கூறல்கள் தொடர்பாக சிறிய சிறிய விடயதானங்கள் அடங்கிய பரிந்துரைகள் இம்முறை எண்ணுக்கணக்கில் அதிகளவாக அறிக்கையின் முடிவுரையில் காணப்படுகின்றன. ஆனால், கடந்தகால அறிக்கைகளிற் பலவற்றில் குறைந்த எண்ணுக்கணக்கில் ஆனால் கடுமையான விடயதானங்கள் கையாளப்பட்டிருந்தது போன்று இம்முறை அனுப்பப்பட்டுள்ள அறிக்கை அமையவில்லை. மாறாக புதிய அரசாங்கத்தின் மீது ஒரு மென்போக்கையே அது வெளிப்படுத்துகின்றது. ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை. புதிய அரசாங்கம் என ஆiணாயளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனிவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை. ஆகவே, புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் எந்தப் புள்ளியில் இருந்து வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது! பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction) விசாரணை முறை கூட பயனற்றது. அதாவது போர்க்குற்றவாளி எனப்படும் நபர் வெளிநாடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு வைத்து விசாரணை நடத்துவது. இத் திட்டம் சர்வதேச விசாரணை முறையும் அல்ல. ஆனால் இத் திட்டம் பற்றிய நம்பிக்கையை ஆணையாளர் பிரஸ்தாபித்துள்ளார். இதன் காரண - காரியமாவே பொது நியாயாதிக்கம் என்பதை தமிழர்கள் தமது கோரிக்கையாக முன்வைக்கக்கூடாது என்ற கருத்துருவாக்கம் தமிழ்ப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்க காலத்தில் நிலைமாறுகால நீதி என்று மார் தட்டி நம்பி எதுவுமே நடக்காத ஒரு பின்னணியில், எந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிலும் புதிய அரசாங்கம் என்று ஆணையாளர் சித்தரித்து நம்பிக்கை வைக்கிறார்? போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும், அதற்கான சர்வதேச விசாரணைகள் எனவும் முன்னைய அறிக்கைகளில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டிருந்தனர். ஆனால் ----- இம்முறை மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன என்ற கருத்தையும், பொறுப்புக்கூறலுக்கு இதுவரை இலங்கை ஒத்துழைக்காவிடினும், இனியாவது ஒத்துழைக்கவேண்டும் என்பது போலவும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படாமை பற்றியும் ஆங்காங்கே எடுத்தியம்பும் இந்த அறிக்கை பற்பல சிறிதும் பெரிதுமான குற்றச்சாட்டுகளை மாத்திரம் அறிக்கையில் முன்வைக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றிய தெளிவான பரிந்துரைகள் அறிக்கையில் இல்லை. விசேடமாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை கோருவதாகத் தமிழ்த் தேசிய பேரவை கூறியிருந்தபோதும், அந்த விடயங்கள் அல்லது தமிழ்த் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கடிதம் அனுப்பியமை தொடர்பான எந்த ஒரு பதிவும் அறிக்கையில் இல்லை. அது ஏற்கனவே ஆணையாளர் அனுப்பியிருந்த பதிலோடு கரைந்து போய்விட்டது போலும்..... உண்மையில் இன அழிப்புக்கான நீதியை மையப்படுத்தி அந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியப் பேரவை வரைந்திருக்கவில்லை. அதனாற்தான் அதை இலகுவாகத் தட்டிக்கழிக்க முடிந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் என்று தொடங்கிய ஆணையாளரின் அறிக்கையிடல், தற்போது மனித உரிமை நிலைமை என்று குட்டிச் சுவராகியுள்ளது. கடந்த கால சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பத்தோடு பதினொன்றாகிவிட்டது. இம்முறை அறிக்கையின் தாக்கம் குறைவடைந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் பற்றியதாகவும் மக்களின் ஜனநாயகப் பாதுப்பு என்ற தொனியிலும் அமைந்துள்ளது. ஆணையாளர் கடந்த யூன் மாதம் இலங்கைக்கு வந்தபோது யாழ் செம்மணி மனிதப் புதைகுழியையும் பார்வையிட்டிருந்தார். இதை அறிக்கையில குறிப்பிட்டபோதும், இதை ஓர் இன அழிப்புக்கான குற்றங்களில் ஒன்றாக அவர் எடுத்தாளவில்லை. அதேநேரம்---- ஆணையாளர் எதிர்ப்பார்ப்பது போன்று ஐசிசி இல் இலங்கை இணைந்தாலும், 2002 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆண்டுக்கும் இடையான குற்றங்களை அதன் அடிப்படையில் அது விசாரிக்காமல், எதிர்காலத்தில் நிகழக்கூடிய குற்றங்களைத் தண்டிக்கும் உரிமையை வழங்குவதாகவே இலங்கை வாக்குறுதி அளிக்கும். ஆகவே ----- இதுவா பொறுப்புக்கூறல்...? இதுவா சர்வதேச நீதி...? இதனை நம்பி கடந்தகாலக் குற்றங்களை மறப்போம் மன்னிப்போம் என நல்லிணக்க அடிப்படையில் நீக்கம் செய்து விட்டு இலங்கை ஐசிசி இல் இணைந்த காலத்தில் இருந்து நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றி மாத்திரமே விசாரணைகள் நடைபெறலாம். ஆகவே ஈழத்தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படப் போகின்றனர் என்ற முடிவுக்கே வர வேண்டும். தேசிய இனப் பிரச்சினை விவகாரம் கூட பத்தோடு பதினொன்றாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கே கேள்வி என்னவென்றால்-- 1) 2012 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்டு வரும் தீர்மானங்களை இந்த ஆணையாளர் வாசிக்கவில்லையா? 2) அல்லது கவனிக்கவில்லையா? 3) அல்லது மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணியாற்றுகிறாரா? அரசு அற்ற இனங்களுக்கான நீதி என்பது புவிசார் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே அமைகின்றது என்பதற்கும், தமிழர் பிரதிநிதிகள் இறுதி நேரத்திலும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பது ஆணையாளருக்கு இப்படியான அறிக்கைகளை முன்வைக்க இடமளிக்கிறது என்பதற்கும் இந்த அறிக்கை சிறந்த உதாரணம்.... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0p9oEGWQhJAXzxYzrRLe3ZnpWRQTW5gEhDK1kUT6kpsncrj8nLuVmPXnAdMkVmp3Al/?mibextid=wwXIfr- நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
70 களின் கடைசியில் இருந்தே சிறிய சங்கிலி ஒன்று இப்போதுவரை அணிந்துள்ளேன். யாராவது அறுத்தால் அதன் பின் அணியமாட்டேன்.- நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
உலகின் பல நாடுகளில் இருந்தும் என்று தலைப்பு வந்திருக்க வேண்டும். - ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.