Everything posted by ஈழப்பிரியன்
-
4.3 அளவில் பூமி அதிர்வு.
திங்கட்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பலரை விழித்தெழச் செய்தது, மேலும் 22,000 க்கும் மேற்பட்டோர் அதை உணர்ந்ததாகக் கூறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெர்க்லியை மையமாகக் கொண்டு அதிகாலை 2:56 மணிக்கு சுமார் 4.8 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் இது 4.6 ரிக்டர் அளவிலானதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது. கால் மெமோரியல் ஸ்டேடியத்திற்கு சற்று தெற்கே உள்ள பெர்க்லியில் உள்ள டுவைட் வே மற்றும் பீட்மாண்ட் அவென்யூ சந்திப்பில் மையப்பகுதி உள்ளது. ABC7 San Francisco4.3 earthquake centered in Berkeley shakes Bay Area: USGSDid you feel it? A magnitude 4.3 earthquake struck in Berkeley on the Hayward Fault early Monday morning and shook most of the Bay Area. Video shows items knocked off of shelves at several East Bay stஅதிகாலை 3 அணிக்கு பலத்த சத்தம்.பேரப்பிள்ளைகள் தான் கட்டிலால் விழுந்து விட்டார்களோ என்று அறையைவிட்டு ஓடிவந்த போது மகளும் வெளியே வந்து அது பூமி அதிர்வு போய் படுங்கோ என்றார். கலிபோர்ணியாவில் அடிக்கடி வருவதென்றாலும் இந்தத் தடவை கொஞ்சம் பலமாகவே இருந்தது. இப்போது தான் எழும்பி எங்கே வந்திருக்கிறது என ஆராய்ந்தால் எமக்கு அடுத்த நகரமான பேர்கிளே என்ற இடத்தில் அதிர்ந்துள்ளது.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலா தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்? ஒரு மேடையில் பேசும்போது கேள்வி கேட்க எவருமே இல்லையா?
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
வரும்கால முதல்வர் வாழ்க. கதையோடு நிற்காமல் செயலிலும் இறங்க வேண்டும்.
-
அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!"
உத்தரவை செய்ய மறுத்தால் கைது செய்வார்கள் தானே? அனுதாபங்கள்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ஏற்கனவே அவர் இருக்கும் இடத்தில் அளவுக்கதிகமாக இந்தியர்கள் இருக்கிறார்கள். இப்படி கதைகள் எழுதுவார் என்று தெரிந்தால் ரசோதரனைக் கடத்தி கோடாம்பாக்கம் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக கதை எழுத வைத்துவிடுவார்கள்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
சரி அதை எங்களுக்கும் சொல்லலாமில்ல.
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள். இப்போது தான் வளர்ந்து வரும் நடிகர்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
டால்பினுக்கு தமிழ் ஓங்கில் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். நன்றி.
-
ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
பேரூந்துகளிலும் இலவசம். முன் இருக்கைகளில் யாரும் இருந்தால் உடனடியாக எழும்ப வேண்டும். இதுவே தொடரூந்தில் அவர்களைக் கண்டதும் சிங்கள மக்களே முகத்தை சுழித்துக் கொண்டு எழும்பியதைப் பார்த்திருக்கிறேன்.
-
ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
முன்னர் பிக்குமார் பேழையை ஏந்தி சாப்பாடு வாங்கி சாப்பிட்டதைக் கண்டிருக்கிறேன். இப்போதும் அதே மாதிரி பிக்குகள் செய்கிறார்களா?தெரியவில்லை.
-
ஜெர்மனி ICU வில்.
உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி. எனது நீண்டகால நண்பர் ஒரு பென்ஸ் கார் பைத்தியம்.எனக்கு தெரிந்து வேறு கார் ஓட்டியதைப் பார்க்கவில்லை. எப்போது ஜேர்மனிக்கு வெளியே கார் தயாரிக்கத் தொடங்கினார்களோ அப்போதே பென்ஸ் பழைய மாதிரி இல்லை என்று ஏங்குவார். இதே பிரச்சனை அமெரிக்கன் கார்களிலும் இருக்கிறது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
தொடருங்கள் காத்திருக்கிறோம்.
-
ஜெர்மனி ICU வில்.
So yes — Germany’s refugee acceptance wasn’t just voluntary generosity. It came from a mix of external pressure (Allies, UN, EU) and internal moral-political pressure. ஏற்கனவே செவிவழி என்று எழுதியிருந்தேன். ஆனால் நம்பிக்கையானவர் சொன்னதால் இருக்கலாம் என எண்ணினேன். கிட்லர் செய்த கொடுமைகளால் இப்படியும் நடந்திருக்கலாம் என இப்போதும் உள் உணர்வு சொல்கிறது. ஆம் - ஜெர்மனியின் அகதிகள் ஏற்பு வெறும் தன்னார்வ தாராள மனப்பான்மையால் மட்டும் ஏற்படவில்லை. அது வெளிப்புற அழுத்தம் (நேச நாடுகள், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம்) மற்றும் உள் தார்மீக-அரசியல் அழுத்தத்தின் கலவையிலிருந்து வந்தது. விளக்கத்திற்கு நன்றி வாத்தியார். எனக்கு இன்னமும் குழப்பம் உள்ளது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
சினைப்பர் தாக்குதல் நடக்கலாம் கவனம்.
-
காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
ஒரு கிலோமீற்றர் தூரத்தில் பொலிஸ்நிலையம் இருக்கும் போது பாரிய டிப்பர்கள் மூலம் கள்ளமண் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய மாபியாவாக இருக்கிறார்கள். இலங்கைக்கு வெளியே பாதாள உலகைத் தேடும்போது உள்ளூரில் இருக்கும் பாதாள உலக கோஸ்டியையும் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கும் காவல்துறையையும் இதுவரை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.
-
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி
நல்லவிடயம். தமிழர் பகுதியிலும் உங்கள் கடைக்கண் இருக்கட்டும் சார்.
-
ஜெர்மனி ICU வில்.
இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே ஜேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்கிறதே தவிர ஜேர்மனி அகதிகளை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. அதே மாதிரி யப்பானும் அமெரிக்க அமெரிக்க அனுமதி இல்லாமல் பெரியளவில் ஆயுதங்களை செய்யமுடியாது என்றொரு ஒப்பந்தம் இருப்பதாக செவிவழி மூலம் அறிந்தேன்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அந்தநேரம் தான் இந்த முறையை கொண்டு வந்திருந்தனர். நாம தான் அதைக் கண்டு கொள்ளவில்லை.
-
அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
எங்காவது இந்தியர்களுக்கு அடி விழுந்தால் அது எமக்கும் விழுந்த அடி தான்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
முழு விமானநிலையத்துக்கும் (ரேமினல்ஸ்)வண்டிகள் உள்புக ஒரேஒரு பாதை. முதலில் உள்ள ரேமினல்கள் கொஞ்சம் கூடுதலான வாகனங்கள் நின்றால் பின்னால் வரும் வாகனங்கள் உள்நுழையவே முடியாது. 2015 இல் கொழும்பில் இருந்து சிட்னி கொழும்பு எயர்ஏசியாவில் மிகக் குறைந்த விலையில் எடுத்திருந்தோம். இரவு 11 மணிக்கு விமானம். அங்கே போனபின் அவுஸ் விசா எங்கே என்றார்கள். அமெரிக்கா புத்தகத்துக்கு விசா தேவையில்லையே. இப்போது புதிய சட்டம் எலக்ரோனிக் விசா எடுக்க வேண்டும்.உடனேயே எடுக்கலாம்.எடுத்ததும் லைனில் நிற்காமல் நேராக இங்கே வாருங்கள் என்றார்கள். போனை நோண்டினால் சரியாக வேலை செய்யவில்லை. பிள்ளைகளுக்கு விபரத்தைச் சொல்லி எடுத்து அனுப்பியிருந்தனர். விமானம் புறப்படும் நேரம் வந்தும் புறப்படுவது போல தெரியவில்லை.இயந்திர பிரச்சனை என்றார்கள்.கடைசியில் இரண்டு மணிபோல கொழும்பு கில்டன் கோட்டலில் சாப்பாட்டு வவுச்சருடன் தூங்கினோம். அடுத்த நாள் இரவு விமானநிலையத்துக்கு பேரூந்தில் கொண்டு போய் விட்டார்கள். அடுத்த நாளும் இதே பிரச்சனை.சனம் கூயா மாயா என்று கத்தி குளறி எதுவும் ஆகவில்லை. மீண்டும் கொட்டல். அடுத்த நாளே ஒரு மாதிரி புறப்பட்டோம். அந்த விமானத்தில் பச்சைத் தண்ணீராலும் பணம் கொடுத்தாலே கிடைக்கும். எந்த ஒரு தமிழனும் விரும்பி பறக்காத விமானத்தில் ரிக்கட் எடுத்த போதே இப்படி ஏதாவது நடக்கலாம் என எண்ணினோம் என்று நையாண்டி பண்ணினார்கள். 2 சொட்டை வாங்கி ஊத்திப் போட்டு நீட்டி நிமிர்ந்து மற்ற சீற்றிலும் படுக்க வேண்டியது தானே.
-
நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இரண்டு நாட்கள் முன்னர் தான் இவர்களது வலது கையான ரெலோவை சந்தித்தார்கள்.
-
அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை
கடை நடத்துபவருக்கு நகராட்சி அனுமதி கிடைத்தே கடை நடத்துகிறார். அனுமதி கொடுக்கும் போது மக்கள் வருவார்கள். வாகனங்களை நிற்பாட்டுவார்கள். பாரிய வாகனங்கள் பொருட்கள் இறக்க ஏற்ற வரும் என்பதெல்லாம் தெரியாதா? உள்ள பொருட்களை எல்லாம் அள்ளி வீட்டு கராச்சில் போட்டுவிட்டு கையை உயர்த்திக் கொண்டு வங்கியிடம் போக வேண்டியது தான். அல்லது அனுமதி கொடுத்த குற்றத்துக்காக நகரசபையே ஒரு தொகையைக் கொடுத்து அனுப்ப வேண்டியது தான்.
-
குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு
ஒவ்வொரு வருடமும் வெங்காய செய்கையின் போது ஏதோ ஒரு விதத்தில் அழிவைச் சந்திக்கிறார்கள். வழமையில் வெண்காயம் கிண்டும் நேரம் பார்த்து இறக்குமதியைச் செய்து விலையை வீழ்த்தி விடுவார்கள். இதனால் விவசாயிகள் செலவு செய்த முதலையே எடுக்க மிகவும் சிரமப்படுவார்கள்.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
எங்களுக்கு ஏற்ற நேரகாலம். அமெரிக்க கண்டத்திலிருந்து போகிறவர்கள் தண்டனையாகவே எண்ணுகிறேன். 3-4 மணிநேரம் விமானநிலையம். மத்தியகிழக்கு போய்சேர 12 மணிநேரம். இடைத்தங்கல் 2-6 மணிநேரம். கொழும்பு போய்சேர 5 மணிநேரம். வாகனத்தில் ஊர்போய் சேர 7-8 மணிநேரம். மொத்தமாக எறத்தாள 35 மணிநேர தொடர் பயணம். ரொம்பவும் தளர்வடைய செய்கிறது. இதனாலோ என்னவோ அமெரிக்க கண்டங்களில் இருந்து போகிறவர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களில் பாடசாலைகள் தொடங்கி விட்டன. எனவே இனிவரும் மாதங்களில் இது வீழ்ச்சியாக இருக்கும்.