Everything posted by ஈழப்பிரியன்
-
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
ஒரு இந்தியனுக்கு உள்ள உரிமை இவர்களுக்கு கிடைக்குமா? பாடசாலைகள் பல்கலைக்கழகங்களில் பாரபட்சம் காட்டப்படுமா? படித்தவர்கள் சாதாரண இந்தியர் போல வேலைக்கு சேர்ப்பார்களா?
-
'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
நான் ஊரில் நின்ற நேரம் மனைவியின் சகோதரி வீட்டில் இரண்டு நாய்க்கும் ஊசி போட்டார்கள். ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்து கொண்டு போய் ஒரு சந்தியில் நிற்பார்கள். இரண்டு நாயையும் கொண்டு போய் ஒன்றுக்கு 400 ரூபாவும் மற்றதுக்கு கொஞ்சம் குட்டை என்றபடியால் கொஞ்சம் கூடுதலாக கொடுத்ததாக சொன்னார்கள். எவ்வளவு என்று தெரியவில்லை. முன்னர் ஆண் நாய்களுக்கு குறி சுட்டு விதையை அகற்றி விடுவார்கள். சிறிய வயதில் எமது வீட்டு நாய்க்கு குறி சுட்டபோது அன்று முழுவதும் அழுஅழு என்று அழுதேன்.
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
என்ன இணையவன் ஒரு சின்ன ஆசை. அதிலும் மண்ணை அள்ளி போடுகிறீர்களே?
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
ஆகா எனக்கு 80 வருடங்கள் இருக்கு. சார் இளமையாகவும் இருக்கலாமா? அல்லது மருந்து மாத்திரையுடன் தான் இருக்க வேண்டுமா?
-
பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்
தகவலுக்கு நன்றி ஏராளன். ஏறத்தாள ஒற்றுமையாக உள்ளது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பழைய திருமணவீட்டு நிகழ்ச்சிகளில் பொண்ணு மாப்பிளை வீடு வரும்போது இந்த பாட்டைப் போடுவார்கள். எனது திருமண காணொளியிலும் இந்த பாட்டு இருந்த ஞாபகம்.
-
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!
பெண்கள் அமைப்புகள் இதற்காக போற்கொடி தூக்க வேண்டும்.
-
மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நடந்த ஸ்பெஷல் எபிசோட்.
சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது. 4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக இந்த வார எபிசோட் அமைந்துள்ளது. இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில் வெற்றிமாறன், சீமான் போன்ற கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர். Cineulagamபாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நட...Super Singer Season 11 | 6th & 7th September 2025 - Promo 1
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அக்கா பாடல்களை இணைக்கும் போது முதல் வரியையும் பதிந்து விடுங்கள்.
-
பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்
மறைந்த யாழ்கள உறவின் பெயர் மாதிரி இருக்கிறதே? மோகன் இதை உறுதிப்படுத்த முடியுமா?
-
எனக்கு பிடித்த சில வரிகள்.
அருமையான தத்துவங்கள். உங்கள் உவமைகள் புல்லரிக்க வைக்கிறது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்
ஒருவரா இருவரா?ஆயிரக் கணக்கில் கூட்டிக் கொண்டு போனவர்களில் ஒருவரைத் தன்னும் உயிருடன் காட்டவில்லை. பதில்கள் எல்லாமே திமிருடன் கூடிய தான்தோன்றித்தனமான பதில்கள். அரசும் இராணுவத்தை காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காக இரட்டை வேடம் போடுகிறது.- யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை
அப்புறம் மண் கொண்டுவருவது எப்படி? ஒரு டிப்பருக்கு மண் கொண்டு போகும் போது எத்தனை மணிக்கு எந்த பாதையால் கொண்டு போக வேண்டும் என்ற பதிவுகள் பாஸ்சில் எழுதியிருக்கும். அதே மாதிரி குறிப்பிட்ட நேரத்தில் மண் பறிக்கப்படாவிட்டால் தண்டம் அறவிடுவார்கள். அண்மையில் ஊரில் நின்ற நேரம் நடந்த சம்பவத்தை வைத்து எழுதுகிறேன்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புரட்சி பாடலின் முதல் வரியையும் பதிந்து விடுங்கள்.- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!
தமிழ் கட்சிகள் ரூம் போட்டு யோசிக்கப் போகிறார்கள். இதே மாதிரி போனால் மாகாணசபை தேர்தலிலும் என்பிபி முதலமைச்சராகி விடுவார்களோ?- ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்
எவன்டா இவன் முட்டையில் மயிர் புடுங்குகிறானே?- கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
இதுவரை காலமும் கச்சதீவை பாவத்திற்கு இரங்கி இந்தியா கொடுத்ததாகவே எண்ணியிருந்தேன். அண்மையில் ஒரு காணொளியை பார்த்த போதே கச்சதீவு இலங்கைக்கே உரித்தானது. இந்தியா தம்வசப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இந்தக் காணொளி மிகவும் பிரயோசமாகவும் இருந்தது. இந்தக் காணொளியில் இன்னுமொரு நெருடல் என்னவென்றால் படித்து பல நாடுகளிலும் அமைதிக்காக வேலை செய்த ஒருவர் மீன்பிடி பிரச்சனையை இருநாட்டு மீனவர்களும் பேசி அவர்கள் இரண்டு நாட்களுக்கும் இவர்கள் இரண்டு நாட்களுக்கும் மீன் பிடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்கிறார். எப்படியான ஒரு மாங்காய்மடையன் ஐக்கிய நாடுகள் சபைக்கு வேலை செய்திருப்பார்.- ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
புடினுக்கு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்ற அமெரிக்க அதிபரை எப்படி விளிக்கப் போகிறீர்கள்?- சிரிக்கவும் சிந்திக்கவும் .
எங்களை மாதிரியே ஆங்கிலம் பேசுகிறார்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இந்தப் பணத்தை கொடுக்க அங்கே பாடசாலை இருக்க வேண்டும். பாடசாலை இருந்தாலும் மாணவ மாணவியர் இருக்க வேண்டும்.- ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
ம் வடை போச்சா.- கச்சத்தீவு ஏன் இந்தியாவை விட்டு போனது.
ஐக்கிய நாடுகள் சபையில் போர் நடந்த இடங்களில் வேலை செய்தவருடன் ஆவுடையப்பன் செவ்வியின் போது ஆரம்பத்தில் பல நாடுகளில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். 17வது நிமிடத்திலிருந்து கச்சதீவு பற்றிய பேச்சு வருகிறது. மீன்பிடி பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். கச்சதீவை இந்தியா கொடுத்திருக்க கூடாது என்று வாதாடும் ஆவடையப்பன் ஒரு சுட்டக்காய் நாடு எப்படி இந்தியாவை மிரட்டி வாங்கிக் கொண்டது என்று ஆச்சரியப்படுகிறார். தமிழ்களுக்கு தமிழீழம் அமைவதை இலங்கை ஒத்துக் கொண்டாலும் இந்தியா ஒத்துக் கொள்ளாது என்று அடித்துக் கூறுகிறார். சீனாவில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நேபால் மாலைதீவு போன்றவையை எப்படி பிரித்து வைக்கலாம் என்பதில் இந்தியா முயற்சி உள்ளது. பாகிஸ்தானில் தோற்றுவிட்டோம். மாலைதீவிலும் அப்படி. நேபாலில் நிலமை மோசமாகிறது. 70 வீதமான வாகனங்கள் சீனாவின் மின்சார வாகனங்கள். அண்மையில் 100 மின்சார பேரூந்துகளை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தியாவால் இப்படி கொடுக்க முடியுமா? நேரமிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.- சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!
இதில் இந்திய தலைவரும் இணைகிறாரே. ஏன் அவர்பற்றி எதுவும் பேசப்படவில்லை?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.