தமிழர்கள் ஒற்றுமையே இல்லை என்று முதலைக் கண்ணீர் விடுபவர்கள் அதிலும் யாழ் இணையத்திலும் மூக்கால் அழுபவர்கள் இன்றைக்கு
எத்தனையோ அமைப்புகள் கட்சிகள் கூட்டாக வந்திருப்பதே ஒரு வெற்றி தான்.
தமிழர்கள் என்றுமில்லாமல் பலயீனமாக இருக்கும் இந்த நேரத்தில்
ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்னெப்போதையும் விட தமிழ் மண்ணில் நாளாந்தம் போய் நின்று ஆளாளுக்கு ஒவ்வொரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள்.
சட்டத்திலுள்ளதை அமுல்படுத்த முடியாதவர்கள் அதற்கு மேலும் பேச தயாராக இருப்பதாக கூவித் திரிகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் காரணம் பொது வேட்பாளரை இறக்கிவிட்டதே.
இதை முன்னுதாரணமாக கொண்டு மற்றைய தமிழ் அமைப்புகளும்
பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி மக்களை
பொது வேட்பாளருக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்.
போடு புள்ளடி சங்கிற்கு நேரே.