Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி நில்மினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
இன்னுமா பேப்பர் கிடைக்கவில்லை.
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
சிறி இந்தப் பட்டியலில் உங்களையும் என்னையும் சேர்த்திருப்பார்களோ? ஆடி மாதத்தில் அமெரிக்கா கனடா ஐரோப்பா விடுமுறை என்றபடியால் இரட்டிப்பாக இருக்கும். திருவிழாக்களும் வருகிறபடியால் இந்தமாதம் அடுத்தமாதம் கட்டாயம் கூடுதலாக இருக்கும்.
-
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!
வெளிநாட்டு மாணவர்களால் பல்கலைகள் பெருவாரியான பணம் சம்பாதித்தார்கள். ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் 50000-60000 டாலர்கள் வருடத்திற்கு எடுக்கிறார்கள்.
-
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
ஒரேஒரு தடவை ஸ்ரார்லிங் சேவையை கவாய் தீவுகளுக்கு போகும்போது கவாய் விமான சேவையில் இலவசமாக தந்த சேவையை பயன்படுத்தினேன். இதுவரை இப்படி ஒரு துரிதமான சேவையை காணவில்லை. வீட்டில் உள்ள சேவைகளைவிட இது மிகவும் திறமாக வேலை செய்தது. பிள்ளைகள் மருமகனும் இதையே கூறினார்கள். இலங்கைக்கு வழங்கப்பட்ட சேவை எப்படியோ தெரியவில்லை. இந்தியாவுக்கு இதனால் வருமானம் குறையலாம்.
-
பயந்தாங்கொள்ளி
நியூயோர்க் நகரத்தில் முழத்துக்கு முழம் கமரா. வேகக் கட்டுப்பாடு 25 மைல்.40 கிலோ மீற்றர்.
-
பயந்தாங்கொள்ளி
ரசோதரன் எனக்கு ஒரு சந்தேகம். பயந்தாங்கொள்ளி என்பது யார்? நான்கு கால் பூனையா? இரண்டு கால் பூனையா?
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
வடக்கு நோக்கி நெடுஞ்சாலை இல்லை என்றபடியால் இதுபற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை.
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
இந்த தடவை யாழிலிருந்து விமானநிலையம் போகும்போது நாங்கள் வந்த வான் பழைய இலக்கத்தகடு என்றபடியால் அதற்கு இருக்கைப் பட்டிகள் அணியத் தேவையில்லை என்று சாரதி சொன்னார். இருந்தாலும் பழக்க தோசத்தில் அணிந்திருந்தேன். இடையிடை அது தானாகவே கழன்று கொண்டிருந்தது. தேடித்தேடி மீண்டும் மீண்டும் அணிந்தேன். பயணிகள் எல்லோரும் கட்டாயம் இருக்கைப் பட்டிகள் அணிய வேண்டுமென்றால் இலங்கையில் அநேகமான வாகனங்கள் ஓடவே முடியாது.
-
செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!
- வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
இதனால்த் தான் அமெரிக்காவோ மேற்கோ மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் புகுந்து விளையாடி குழப்பங்களையும் பிரிவினைகளையும் உண்டு பண்ணுவது போல வடகொரியாவிலும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் போல உள்ளது.- செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்
உள்ளக விசாரணை போதுமா சார்?- வணக்கம்
- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
தயவு செய்து இவரின் தளத்திற்கு சென்று ஆதரவு தெரிவிக்கவும்.- பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை!
அனுராவின் கட்டுப்பாட்டுக்குள் இன்னமும் ராணுவம் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.- சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஒரு தடவை என்றால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம். இதை கடந்த சில போகங்களிலும் கேள்விப்பட்டேன். தொடர்ந்து நடந்தால் அதை வித்தியாசமாகத் தானே பார்க்க வேண்டி உள்ளது. இதுபற்றி ஊரில் உள்ள @சுவைப்பிரியன் @ஏராளன் @பாலபத்ர ஓணாண்டி ஆகியோரின் கருத்துக்களை அறிய ஆவல்.- சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
எமது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிட்டே இதைச் செய்கிறார்களோ? இவர்கள் அறுவடை செய்யும் காலம் பார்த்து இறக்குமதியை செய்வதால் இவர்களின் உற்பத்தி குறைந்த விலைக்கே விற்க முடிகிறது. இது கடந்த காலங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டது. இருந்தும் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என்றால் தமிழன் நாசமாக போக வேண்டும் என்றே செய்கிறார்கள்.- பயந்தாங்கொள்ளி
பூனை மிகவும் சுத்தமாக இருக்கும் என்பார்கள். கக்கா இருக்கும் போது மண்ணை விறாண்டி விட்டு இருக்கும். முடிந்தவுடன் மூடிவிட்டு போகும். இதுவே அமெரிக்க பூனைகள் எப்படி இருக்கும்? பூனைகள் போடும் குட்டிகளில் ஒன்றைத் தின்னும் என்கிறார்கள். உண்மை பொய் தெரியவில்லை.- நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
தற்போதைய முதல்வர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க ஆயத்தமாகிறார். ரம்பும் இவருக்கு பூரண ஆதரவு கொடுக்கலாம். இதன் மூலம் ஜனநாயகட்சியை பிளவுபடுத்தி குடியரசு வேட்பாளரை வெல்ல வைக்கலாம். ஏற்கனவே ஒரு இந்தியன் முஸ்லீம் எப்படி நியூயோர்க்கை ஆளலாம் என்று தொடங்கிவிட்டார்கள். தற்போதய முதல்வர் ஏற்கனவே ரம்பிடம் சரணடைந்துள்ளார்.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தகவலுக்கு நன்றி கோசான். இதைப்பற்றி @தனிக்காட்டு ராஜா இன்னும் விபரமாக தெரிந்திருக்கலாம்.- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
உண்மையாவா?இதை எதிர்பார்க்கவே இல்லை. உங்களுடன் சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்.- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலிருந்தே இஸ்ரேலியர்களின் ஆலோசனைப்படியே இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அப்படியாகவே இருக்கலாம்.- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
மாற்றிப் பாருங்கள். முன்னர் நான் மாற்றிய ஞாபகம். இதிலே சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை? முன்னமே தெரிந்துவிட்டதோ?- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள யூதர்களை வெளியேற்ற போராட்டங்கள் நடந்தாலும் நடக்கலாம். கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே என்ற இடத்தில் சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேல்காரர்கள் கோவில் குளம் எல்லாம் கட்டி நீண்டகால இருப்புக்கு ஆயத்தமாகிறார்கள். இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.- நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
அனேகமான காலம்கள் நியூயோர்க்கை விட்டு வெளியே நிற்பதால் அதிகம் செய்திகளை பார்ப்பதில்லை. ஏற்கனவே குடியேறிகளின் அட்டகாசமும் பொலிசாரின் கண்டுகொள்ளா போக்கும் மக்களை குடியரசுக்கட்சியின் பக்கம் போகச் செய்துள்ளது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அன்றோ கோமோவை வெல்லுவார் என்று நினைத்திருக்கவில்லை. பலருக்கும் மிகவும் அதிர்ச்சி கொடுத்த தேர்தல். - வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.