Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
மோடி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை ஒருநாளும் பார்ப்பதில்லை. கடிதம் திறந்தவுடன் யார் போட்டது?கையெழுத்து தனது மொழியில் போட்டிருக்கிறாரா? இல்லை என்றால் குப்பைத் தொட்டிக்குள் போடு. இதனால தான் இதுவரை தமிழ்நாட்டு தலைவர்கள் எழுதும் கடிதங்களுக்கு மோடியிடமிருந்து பதிலேதும் இல்லை.
-
சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முயன்ற ஜோர்தான் பயணி - எயர்ஏசியா விமானத்தில் சம்பவம்
இப்ப கொஞ்சகாலமாக இப்படி நடுவானில் கதவைத் திறப்பது தொடர்கதையாக உள்ளது.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது! மு.க.ஸ்டாலின் விசனம்
தமிழக முதல்வருக்கு கடல்வளம் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டில் ஆலோசகர்கள் இல்லையா? தங்களது மீனவரையே ஏண்டா அடுத்த நாட்டு கடலுக்குள் போகிறீர்கள்? ஏண்டா தடை செய்யப்பட்ட வலைகளை பாவிக்கிறீர்கள் என்று கேட்கவே மாட்டாரா?
-
மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்!
கடந்த 10 வருடங்களாக மகிந்தவின் உடல்நிலை சரியில்லை இதோ அதோ போகப் போறார் என்கிறார்கள். அந்தாளும் மாப்பிள்ளை மாதிரி ஒரு நரையும் தெரியாமல் திரியுது.
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
அமெரிக்க பொருட்கள் இலங்கையில் குறைந்தளவே இறக்குமதியாகிறது. ஆனபடியால் அந்த இறக்குமதி வரியை 20-30 வீதமாக மாற்றினால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வீதத்தை அதன் அரைவாசியாக்குவார்கள். இதனால் இன்னும் இன்னும் ஆடைத்தொழிலை முன்னேற்றலாம். மற்றைய நாடுகளுடனும் போட்டி போடலாம். இப்போது இந்தியா பங்களாதேஸ் போன்ற நாடுகள் இலங்கையை விட குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தனது இறக்குமதி வரியை குறைக்காவிட்டால் ஆடைத்தொழில் மூடப்படும் அபாயம் இருக்கிறது. இதுபற்றி @vasee யின் கருத்துக்களை அறிய ஆவல்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன இவை ஒரு ஐந்தாறு பேர் கூட்டு சேர்ந்திருக்கினம். இது நல்லதுக்கில்லை. இதை உடைக்கோணும். முதல்வர் @suvy க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவி ரசோதரன் நந்தன் முதல் மூன்றுக்குள் வர போகிறார்கள். சுந்தர் வெறிபிடித்து அடிக்கிறார்.
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
மோடி நினைவில் கொள்ள வேண்டும்: அவர் மூன்றாவது முறையாக பிரதமரானார் தகுதியால் அல்ல, ஆனால் கர்மாவின் காரணமாக - குறிப்பாக, சோனியா காந்தியின் கர்மா, 2009 தமிழர்களுக்கு எதிரான போரின் போது அவரது நடவடிக்கைகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழர்களின் நம்பிக்கையை நொறுக்கிய அந்த கர்மா, மோடியின் எழுச்சிக்கு வழி வகுத்தது - தெய்வீக அருளோ ஜனநாயக தர்மமோ அல்ல. பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இலங்கைப் பயணத்தின் போது, இந்துக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் மகாவம்சக் கோட்பாட்டைப் போதிக்கும் தீவிரவாத பௌத்த பிக்குகள் முன் மண்டியிட அவர் எடுத்த முடிவு வெட்கக்கேடானது. இந்த சமர்ப்பணம் இலங்கையின் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தலாம், ஆனால் முள்ளிவாய்க்காலில் நடந்த அட்டூழியங்களை நினைவுகூரும் மில்லியன் கணக்கான மக்களை இது மிகவும் புண்படுத்துகிறது, அங்கு 145,000 அப்பாவி தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இலங்கைத் பௌத்த பிக்குகள் வெறுப்பை வளர்த்ததற்காகவோ அல்லது தமிழ் இந்துக்களின் இனப்படுகொலைக்காகவோ பௌத்த பிக்குகள் பங்கிற்காக ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. மோடியின் இந்த நடவடிக்கை, தமிழர் உயிரின் மதிப்பும் இந்து மதத்தின் கௌரவமும் அரசியல் கோலச்சிதம்பரத்திற்காக தியாகம் செய்யப்படும் என்பதையே உணர்த்துகிறது. இலங்கைப் பயணத்தின் போது மோடி ஒரு இந்து கோவிலுக்கும் செல்லவில்லை. தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கோ முன்வரவில்லை. இது ஒரு மாநிலத்தலைவரின் நடத்தை அல்ல; இது மதவாதமும் அரசியல் அனுகூலப்போக்கும் கொண்ட ஒருவரின் நடத்தைதான். சில தமிழர்கள் இன்னும் மோடி அவர்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவார் என்று நம்புவது அவமானம். உண்மையில், அவர்தான் இந்தியா கண்ட மிக மோசமான பிரதமர் - மன்மோகன் சிங்கைக் காட்டிலும் மோசமானவர், குறைந்தபட்சம் கண்ணியத்தைக் காப்பாற்றியவர். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூட இந்து மதம் மற்றும் தமிழ் மக்கள் மீது அதிக மரியாதை காட்டினார். இந்தியாவில், சிறுபான்மையினரான இந்தியர்களால் பேசப்படும் இந்தி மொழியை தமிழ்நாட்டு மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் மோடி தமிழ் கலாச்சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். அவரது கலாச்சார ஏகாதிபத்தியம் தமிழ் நாகரிகத்தின் அடையாளத்தையே அச்சுறுத்துகிறது. மோடி நினைவில் கொள்ள வேண்டும்: அவர் மூன்றாவது முறையாக பிரதமரானார் தகுதியால் அல்ல, ஆனால் கர்மாவின் காரணமாக - குறிப்பாக, சோனியா காந்தியின் கர்மா, 2009 தமிழர்களுக்கு எதிரான போரின் போது அவரது நடவடிக்கைகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழர்களின் நம்பிக்கையை நொறுக்கிய அந்த கர்மா, மோடியின் எழுச்சிக்கு வழி வகுத்தது - தெய்வீக அருளோ ஜனநாயக தர்மமோ அல்ல. உலகத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். மோடி எங்களை பாதுகாக்க மாட்டார். அவர் நம்மை மதிக்க மாட்டார். நீதிக்காக நிற்க மாட்டார். நமது வரலாற்றை அவமதிக்கும் அடையாளச் சைகைகளை நாம் நிராகரிக்க வேண்டும், அதற்குப் பதிலாக உண்மையான நீதி, உண்மையான அங்கீகாரம் மற்றும் உண்மையான பொறுப்புணர்வைக் கோர வேண்டும். GoDaddyமோடியின் இலங்கை பயணம் – தமிழர்களுக்கும் இந்து மதத்துக்கும...மோடி நினைவில் கொள்ள வேண்டும்: அவர் மூன்றாவது முறையாக பிரதமரானார் தகுதியால் அல்ல, ஆனால் கர்மாவின் காரணமாக - குறிப்பாக, சோனியா காந்தியின் கர்மா, 2009 தம...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும் முட்டை தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா ரணிலுக்கு அதிஸ்டம் அடிக்கிற மாதிரி சுவிக்கும் அதிஸ்டம் அழைக்கிறது. முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்றியை எப்படி கொண்டாடுவதென்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
மகிந்தவும் சொன்னவர் அனுரவும் சொன்னவர். புதிதாக வருகிறவர்களும் சொல்வார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டானை கோடு கச்சேரி என்று ஏறி இறங்க வைக்கிற நோக்கமோ? எனக்கு சீனி கம்மியாக போட்டு 2 முட்டைக் கோப்பி பிளீஸ்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி சரி பட்டுவேட்டி சால்வையுடன் பதவியேற்க தயாராக இருங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன பையா 200 அடிப்பாங்க போல. செம்பாட்டான் மீண்டும் முதல்வராகப் போகிறாரோ?
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
நீங்க வேறு நாடையா நாங்க வேறு நாடு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் பதவி ஏற்பு விழாவில் ஓடித்திரிந்து களைத்துப் போனேன். உங்களுக்கென்ன வெளிக்கிட்டு வந்து நின்றா சரி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன தம்பி தட்டிவானா? யன்னலால் துணியை போட.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள். அல்வாயன் பதவி ஏற்பு வைபவத்தைக் காண லட்சோப லட்சம் பேர் கொழுத்தும் வெய்யிலிலும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பதவியில் இருக்கும் போது செய்த ஊழல்களுக்கு புதிய முதலமைச்சர் @alvayan னின் விசாரணைக்குழு விசாரிக்க தயாராக உள்ளது.
-
யுத்தகளத்தில் தீரமுடன் போராடிய பிரிகேடியர் ஆதவன்.!
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
பேச்சுவார்த்தைக்கு வந்த பின்புதான் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய ஞாபகமே வந்தது. கொழும்பில் இருந்து புறப்படும் போது எவனுமே சொல்லல்லையாடா?
-
அமெரிக்க சூறாவளியால் 6 பேர் வரை பலி
இது தெற்கு மாநிலங்களால் உள்நுழைந்து நடுவில் இருக்கும் மாநிலங்களை பதம் பார்க்கிறது. வருடாவருடம் பல சூராவளிகள் வந்து போகின்றன. உயிருக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் வரவே தான் செய்கிறது.
-
அமெரிக்க சூறாவளியால் 6 பேர் வரை பலி
அமெரிக்க மாநிலங்களான ரெனிசி,மிசூறி இன்டியானாவை சூறாவளி தாக்கியதில் 7 பேர்வரை மரணமடைந்துள்ளனர். பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. https://www.cnn.com/weather/live-news/us-tornado-flooding-04-03-25/index.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லோரும் எங்கட கட்சி ஆட்கள் தான். வேவு பார்க்க அனுப்பியுள்ளோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் எனக்கும் ஆசை.லக்னோ வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம். அதுசரி பாதயாத்திரை போகலையோ? செருப்பு என்ன மாதிரி? அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.