Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. தற்போதுள்ள இடர்பாடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதை யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல. கூடுதலாக பாதிக்கப்பட்டது கஸ்டப்பட்ட மக்களே. எனவே அவர்களுக்கு யார் குத்தியாவது அரிசியாகட்டும்.
  2. காலங்கள் சிலரை கண்முன்னே அடையாளப்படுத்தும் .அது அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்து தம்பி லவன் தவராஜா சிறு வயதில் இருந்து என்னுடன் மிக நெருங்கிய நண்பர், சகோதரர் . சமூக செயல் எது என்றாலும் முன்னின்று செய்பவர் சுனாமி நினைவேந்தலாகட்டும்,கதிர்காம பாதயாத்திரையில் யாத்திரீகர்களுக்கு குடிநீர் வழங்கியது முதல் இன்னும் பல சமூக சேவைகளை தாராளமனதுடன் செய்திருந்தார் ,தற்போது காரைதீவில் ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் எமது சகோதர சிறார்கள் தண்ணீரில் அள்ளுண்டு போனார்கள் என கேள்வியுற்றதும் களத்தில் நின்று எமது ஊரில் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது அவர்களுக்கு நாம் உதவ வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளோம் என படகுகளை தயார் செய்து தண்ணீரில் அள்ளுண்டு போன அம்மாணவர்களை தேட தொடங்கினார் ஏனென்றால் சுனாமி அனர்த்தத்தின் போது தண்ணீரில் தத்தளித்து சென்ற எமது ஊர் மக்களுக்காக சாப்பாடு ,குடிநீர் உடை என அள்ளி வழங்கிய ஊரல்லவா என சொன்னார். இதுதான் மனிதநேயம் செய்யும் உதவியை மறுகணமே மறக்கும் மனித வாழ்க்கையில் களத்தில் நின்று மக்களுக்காக சேவை செய்யும் இவர்களை ஊர் மக்களாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியாது வாழ்த்துக்கள் தம்பி Lavan Thavaraj All reactions: 93Jeyrajan Rajan, Vic Jeyathevan and 91 others முகநுhல் தனிக்காட்டு ராஜாவின் முகநுhலில் இருந்து.
  3. வணக்கம் புலம்பெயர் அகதி .எழுதித் தள்ளுங்கள் வாசிக்க ஆவலாக இருக்கிறோம்.
  4. கல்லோ கல்லோ கல்லோ @Maruthankerny உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.
  5. கொஞ்ச காலத்திற்கு முன்பு வீட்டில் வேலை செய்த இளம்பெண் ஒருவரை கொலை செய்திருந்தாரே? என்னாச்சு? பணத்தைக் கொடுத்து கேஸை மூடிட்டாங்களோ?
  6. தேசியத் தலைவரின் பிறந்த நாளுக்கு கூடுதலான இளம் சந்ததியினர் பங்கு கொண்டு சிறப்பித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. படங்கள் இணைப்புக்க நன்றி நொச்சி.
  7. பரவாயில்லை.வீட்டில வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறன். அந்த வீடியோவை தந்தால் இரண்டு வருடம் பொழுது போயிடும்.
  8. எமது வீட்டுக்கெல்லாம் முன்னர் வெள்ளம் வந்ததில்லை. இப்போது சட்டவிரோத கட்டடங்களால் பல மதகுகள் அடைபட்டுப் போயுள்ளன. வாய்க்காலாக இருந்தவையெல்லாம் காணிகளாகவும் வயல்களாகவும் மாறிவிட்டன.
  9. அமெரிக்காவில் சிகரட் குடிவகை வாங்க முடியாது. ஆனாலும் அத்தனை இளசுகளுமே புகைக்கிறார்கள்,தண்ணயடிக்கிறார்கள் எப்படி? சட்டத்தால் தடுக்க முடியாது.
  10. இதைத் தான் எமது தேசியத் தலைவர் திரும்பத் திரும்ப சொன்னார். ஆனாலும் இந்தியனின் செவிட்டு காதில் ஒருபோதும் விழுந்ததில்லை. இப்போ அமெரிக்கா ஓரளவுக்க காலூன்றிவிட்டது. இனித்தான் பேந்தபேந்த முழிப்பார்கள்.அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.
  11. இதை குடும்பத்தினர் தெரிவு செய்தமாதிரி தெரியவில்லை. அதனாலேயே எமக்கு பரவாயில்லை ஆனால் ஏழைகள் இதைத் தாங்குவார்களா? என்று கேள்வியுடன் முடித்துள்ளனர்.
  12. Ramanathan Aruchchuna வைப்பற்றிய Sepal Amarasinge வினது you tube பதிவின் தமிழாக்கம்… பகுதி 2… தொடர்கிறது…. ஒருவரின் வாழ்க்கையின் ஓர் பகுதியை நாம் பார்த்துவிட்டு அது தான் அவரின் முழு வாழ்க்கையுமாக நினைத்து விடுகிறோம். அப்படியில்லை. ஓர் நிகழ்வு அவர் வாழ்க்கையின் அந்தக் கண நிகழ்வு தான். யானையின் காதுக் கதைதான். யானைக் காதை மட்டும் பார்த்து விட்டு அது சுளகு என கூறக்கூடாது. அநேகமானவர்கள் அரசியல் என்றால் தேர்தலில் கேட்பது, வெல்வது, பாராளுமன்றில் குடிப்பது , சாப்பிடுவது கொண்டாடுவது தான் அரசியல் என எண்ணுகிறார்கள். அரச்சுனாவின் பிரச்சனைக்கு மீண்டும் வருவோம். அவர் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்? முதல் நாள் எல்லோரும் விரும்பிய இடங்களில் இருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அர்ச்சுனா எதிர்கட்சி தலைவரின் சம்பிராதய கதிரையில் அமர்ந்து விட்டார். உடனே சேவகர்கள் ஓடி வந்து இது எதிர்கட்சி தலைவருடையது என அறிவிக்கிறார்கள். இவர் வழமையாக மற்றவர்கள் செய்வது போல் செய்யாமல் அப்பிடி கூறவில்லையே? எங்காவது எழுதியிருக்கிறதா? என தொடர் கேள்விகளை அடுக்குகிறார்.. அது தான் சம்பிரதாயம் என சேவகர்கள் கூறும் போது சம்பிரதாம் சரிவராது, அதை மாற்றத் தானே நாம் வந்திருக்கிறோம் என கூறுகிறார். நீங்கள் இதை மோட்டு வேலை எழுப்பி போக வேண்டியது தானே என நினைத்தால் அது மோட்டு வேலை தான்… ஆனால், Sanity, insanity என இரண்டு நிலைகள் இருக்கிறது. Sanity என்பது நல்லறிவு, Sanity/insanity எல்லையை சிறிது கடந்த நிலை Insanity. இங்கே அர்ச்சுனா நிற்கும் நிலை insanity. மற்றவர்கள் எல்லோரும் Sanity நிலையில் இருப்பவர்கள்,கூட்டமாக இருக்கிறார்கள். பிழையாக இருந்துவிட்டீர்கள் என எழும்பச் சொன்னதும் ஆ..அப்படியா என எழும்பி விடுவார்கள். Sanity குழு சார்ந்தவர்கள் அவர்கள்… ஆனால் அர்ச்சுனா அப்படிப்பட்டவர் இல்லை. எழும்பவில்லை, எழும்ப மாட்டார். அவர் sanity/insanity எல்லையை (border)ஐ கடந்து நிற்கிறார். அப்போ அவர் அதை பிரச்சனையாக்குவார். அடுத்த முறை பாராளுமன்றத்தில் நிச்சயமாக பிரதமர், எதிர்கட்சி தலைவர் இடங்களை அட்டையில் எழுதிவைப்பார்கள். மற்றவர்கள் தேவையான இடங்களில் இருக்கலாம் என அறிவிப்பார்கள். (இந்தமுறை 3/4 பகுதியினர் புதியவர்கள் என்பதை சேவகர்கள் கவனித்திருக்கலாம், அவர்கள் பழைய பழக்கத்தின்படி செயலாற்றியிருக்கிறார்கள்) பொதுவாக ஒரு விடயத்தை கூறும் போது அதில் கூறப்படாத சில விடயங்களை தாமாக மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என அறிவிப்பவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். எங்காவது இருந்து கொள்ளலாம், ஆனால் குறிப்பிடப்படாத கதிரைகளும் அதில் இருக்கின்றன என நாமாக யோசிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதை நாங்கள் நாமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயகமும் இது போன்றது தான். அமெரிக்காவில் கறுப்பு/வெள்ளை பிரச்சனை, இந்தியாவில் இந்து/ முஸ்லிம் பிரச்சனை இலங்கையில் தமிழ்/ சிங்கள பிரச்சனை இல்லை என்றே வெளியில் கூறுவார்கள். வெளியில் அப்படி கூறப்பட்டாலும் அப்படி ஒரு பிரச்சனை உள்ளே இல்லாமல் இல்லை. பிரச்சனை இருக்கிறது. தமிழ்/சிங்களப் பிரச்சனை இல்லை என கூறினாலும், எல்லோரும் இலங்கையர்கள் என வெளியில் கூறினாலும் தான் தமிழ் எண்டபடியால் பிரச்சனை இருக்கிறது என அர்ச்சுனாவுக்கு தெரியும் என Sepal கூறுகிறார். அதனால் தான் அவர் கேள்விகளை அடுக்குகிறார்.. நீங்கள் கூறுவது போல் இல்லை என கதிரை விடயம் மூலம் விடயத்தை பெரிதாக்குகிறார்.. நீங்கள் கூறுவது போல் இல்லை.. இதில் வேறுவிடயமும் இருக்கிறது என கேள்வி கேட்கிறார்.. அப்படி அவர் விடயத்தை பெரிதாக்கி கேள்விகள கேட்கும் போது தான் எங்களுக்கும்(பெரும்பான்மைக்கும்) யதார்த்தம் தெரியவரும் என Sepal கூறுகிறார். அப்போது தான் எங்களுக்கும் தெரிய வரும் உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு ஒண்டுமே இல்லை என நாம் நினைத்துக் கொண்டிருப்போமே அப்படி இல்லை பிரச்சனை இருக்கிறது என எங்களுக்கும் தெரியவரும் என்கிறார்… அதனால் தான் அர்ச்சுனாவுடன் பேசவேண்டும் என கூறுகிறேன், ஏன் என்றால் மற்றவர்கள் கேளாத கேள்விகளை அவர் கேட்கிறார்… அப்போது தான் நாம் அவரிடம் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். பிரச்சனைகளை அறிய முடியும். பிரச்சனைகளை அறிந்தால் தானே பிரச்னைகளை தீர்க்க முடியும்.. அதைவிட்டிட்டு சிறையில போடு.. CID இல் கொடு என்றால் என்னாகும்? பிரச்சனைகள தொடர்ந்து இருக்கும்.. பிரச்சனைகள் தீர்க்கப்படாது… ஐந்து வருடம் தானே ஆண்டிடிட்டு எங்கடை வேலையை பார்த்துக்கொண்டு போவமே என போகவேண்டியது தான்…. அதைத்தானே இவளவு காலமும் அரசாங்கங்கள் செய்தன… அப்போது பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கப்போகிறது… தீர்க்கப்படாது… சந்தேகங்கள், முரண்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டு இருக்கும்… என கூறுகிறார் Sepal Amarasinghe.. இதை Archchuna Ramanathan வால் சாவகச்சேரியில் பிரச்சனை ஆரம்பிக்கும் போது கூப்பிட்டு என்னடா தம்பி பிரச்சனை கதைச்சு பேசி தீர்ப்பமே என கதைத்து இருந்தால் இப்போது நீங்கள் எல்லோரும் எதிர்க்கும் அர்ச்சுனாவை அங்கேயே நிறுத்தியிருக்கலாம்… நாங்கள் அவருடன் கதையாமல், எதிர்த்ததன் விளைவு தான் நாம் எல்லாம் இன்று அநுபவித்துக்கொண்டு இருக்கிறோம்… அது தான் எதிர்க்காதீர்கள் கதையுங்கள் என்று கூறுகிறோம்….. பகுதி 3 தொடரும்…. https://www.facebook.com/share/p/19ms7nK9K1/?
  13. NPP அரசு தந்தது என முத்திரை குத்தாட்டி சரி... அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை சொந்தப்பணத்தில்... சிலவேளைகளில் ஓரிடத்திலேயே அனைத்து உதவிகளும் குவிய வாய்ப்புள்ளது. ஒரு இடத்திலிருந்து போனால் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
  14. உங்களைப் போன்றவர்கள் போதிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் டாக்ரர்களே முழுபழியையும் சுமக்க வேண்டும். இங்கே 53 ஆயிரத்துக்கு பெட்டி வாகனம் ஒழுங்கு பண்ணியது கொஞ்சம் குடைச்சலாகவே உள்ளது. இதுபற்றி யாரும் விளக்கமளிக்க முடியாதா?
  15. அப்படியானவர்களை தேடிப்பிடித்து களையெடுத்து விட்டார்கள். மிகுதியானவர்களையும் இலங்கை இந்திய பலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பிலேயே இருந்தார்கள். இதனாலேயே சாதாரண மக்களும் போராளிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கியவர்களும் மிரட்டப்பட்டார்கள் அல்லது கண்காணிக்கப்பட்டார்கள்.
  16. சுட்டு முடிய கதிரையை எறியிறதா?
  17. களி திங்க ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறார். அட நாங்க மேசையில் உள்ளதைத் தானே பார்த்தோம். துளாவிப் பார்க்கலையே/ விமான நிலையத்தில்த் தானே வேலை. அடுத்தமுறை போகும்போது விசாரித்துப் பாருங்கள்.
  18. முதலில் உங்களுக்கு இதே தண்டனை கொடுக்க வேண்டும்.
  19. எனக்கும் தான் புங்கை.என்ன செய்வது? வசதியான குடும்பத்திற்கே இந்த நிலை என்றால் சாதாரண கடும்பங்களின் நிலை தான் என்ன? இந்த அநிஞாயங்களை யார் தட்டிக் கேட்பது?
  20. @தனிக்காட்டு ராஜா இது உங்களின் ஏரியாவாச்சே மேலதிக செய்திகள் ஏதாவது தெரியுமா? எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்.
  21. விடுதலைப் போரில் தன்னுயிர்களை ஈந்த மாவீர செல்வங்களுக்கு வீர வணக்கம்கள்.
  22. அரசிடம் வாங்கினால் விசாரணைகள் ஒன்றை முடித்தாலே அடுத்த கட்ட நிதி என்று ஏராளமான ஆட்களுக்க பதிர் சொல்ல வேண்டும். வெளிநாட்டுப் பணம் கொடுத்ததுடன் சரி.அத்திவாரம் வெட்டியாச்சா என்று கூட கேட்க மாட்டார்கள். விரும்பியவர்களுக்கு உறவினர்களுக்கு கொந்தராத்தை கொடுக்கலாம். அரசு என்றால் முறைப்படியாக ரென்ரர் போடணும். என்ன கேள்வி நம்மவர்கள் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.