-
ஈழப்பிரியன் started following யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வழமை போல கூடுதலானவர்கள் பங்கு கொள்வார்கள். போட்டிக்கு ஏற்பாடுகளை செய்யுங்கள்.
-
விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது!
இதுவே அமெரிக்கா என்றால் எங்கிருந்து பெற்றார்கள் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என முழு விபரமும் அறிந்த பின்பே விடயம் வெளியே வந்திருக்கும். இப்போது வெளியே உள்ளவர்கள் உசாராகி இருப்பார்கள்
-
வீதியோரம்.
வெயிட்டிங் மலர் 2.
-
சமூகப் பார்வை (பயம்)??¿
விசுகு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமைதி,அமைதி,அமைதி.
-
இரு மாதங்களில் சீன வர்த்தகம் அதிகரிப்பு.
இரு மாதங்களில் சீன வர்த்தகம் அதிகரிப்பு --- --- --- *அமெரிக்கவுக்கான ஏற்றுமதி சரிவு *ஐரோப்பிய - ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி உயர்வு --- --- --- சீனாவின் வர்த்தகம் 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐந்தில் ஒரு பங்காக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வை மக்குப்பிஸ்னஸ் (macaubusiness) என்ற சீன அரச செய்தி நிறுவனம், இன்று செவ்வாய்க்கிழமை பிரசுரித்துள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், 2026 ஆம் வருடத்தின், முதல் இரண்டு மாதங்களுக்கான அதிகாரபூர்வ புள்ளி விபரங்கள், ஈரான் மீதான போர் ஆரம்பிப்பதற்கு முன் வலுவானதாக இருந்தது. இந்த மதிப்பீட்டின் படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் சரிவு உள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு மாதங்களிலும் சீனாவின் வர்த்தகம் உயர்வடைந்துள்ளது. ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 21.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்களின் மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட 7.2 சதவீதத்தை முறியடித்துள்ளதாக சீன சுங்கத்தின் பொது நிர்வாகம் கூறியுள்ளது. ப்ளூம்பெர்க் மதிப்பீட்டில் கணிப்பிடப்பட்ட ஏழு சதவீதத்தை விடவும் இறக்குமதிகள் 19.8 சதவீதம் உயர்ந்துள்ளன. 9 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியான அதிகாரபூர்வ தரவுகளின் பிரகாரம், இறக்குமதி அதிகரிப்பு நுகர்வோர் விலைகள் மூன்று ஆண்டுகளில் மிக விரைவான வேகத்தில் உயர்ந்ததைக் காட்டுகிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் 11.0 சதவீதம் சரிந்தன, வோஷிங்டனுடனான வர்த்தக முரண்பாடுகள் நீடித்தமை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டண பிரச்சாரத்தை (tariff campaign) முன்னெடுத்தமை ஆகிய காரணங்களினால் இச் சரிவு ஏற்பட்டது. சென்ற ஜனவரி - பெப்ரவரி மாதங்களில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மொத்தம் $67.24 பில்லியன்களாக இருந்தாக புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் $75.56 பில்லியனாக இருந்தது. அதேநேரம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 27.8 சதவீதம் உயர்ந்ததுள்ளது. ஆசியான் (ASEAN )நாடுகளுக்கான ஏற்றுமதி 29.2 சதவீதம் உயர்ந்ததுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவன ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid03aNB2LprEEtWR64HRvRXDXptHyASdPpMmtbTHCuQ9y2kV4CgPaWu71cfMwJgEmT7l/?mibextid=wwXIfr
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்கு வேறு ஒரு இடம் பார்த்து வைத்துள்ளார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்கேயும் போக வேண்டாம். ஐபிஎல் நெருங்கிவிட்டது. @கிருபன் கேள்விக் கொத்துகளை தயாரிக்க தொடங்கிவிட்டார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பூனைக்குட்டி இப்ப தான் வெளிய வருது. வென்றிருந்தால் இத்தனை முறைப்பாடுகளும் வந்திருக்காது. சரி சரி வரும் ஐபிஎல் சோதனையில் இவர்களை ஒதுக்கி வையுங்கள். ஆப்கானில் இடம் இல்லாவிட்டால் என்ன ரம்பிடம் சொன்னால் ஈரானில் இருவருக்கும் சிலை(உயிரோடு)வைத்துவிடுவார்.
-
அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்!
கொழும்பில், ஈரான் கப்பல் விவகாரம் --- --- --- *அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்! *டில்லி தமிழர் பக்கம் முழுமனதோடு இல்லை என்ற உண்மையை இனிமேலாவது ஏற்றுக் கொள்ளுங்கள்... *மிலிந்த மொறகொடவில் இருந்து ரில்வின் வரை... --- --- --- மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக, அதாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களுடன், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை பதவி வகித்திருந்தார். கோட்டாபய, ரணில் ஆகியோர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இவர், தூதுவராக இருந்தார். அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று. ஈழத்தமிழர் விவகாரத்தை, இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்றும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர். அத்துடன் --- தென்னிந்தியாவின் பெருங்கற்கால (Megalithic) வரலாறுகளை மேற்கோள் காண்பித்து ஆயிரம் ஆண்டு காலம் என்று கூறி, வரலாறுகளை திரிபுபடுத்தி சிங்களவர்கள் - ஆரியர்கள் என்ற இரு இனமும் இரடடையர்கள் (Twin civilization) அதாவது ”இரட்டை நாகரிகம்” என வரலாற்றை மாற்றியவர், இந்த மிலிந்த மொறகொட. 2009 இல் இறுதிப் போர் நடைபெற்ற போது இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல், மிலிந்த மொறகொட உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவை உருவாக்கி, போரில் தமிழர்களைப் பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான பணிகள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்ததாக, மகிந்தவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இவை பற்றி எல்லாம் எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் நான் பல தடவை சுட்டிக்காட்டி வருகிறேன். அக் கட்டுரைகள் இப்போதும் பொருந்துகின்றன. கூர்மை இணையத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் சஞ்சீவி ஞாயிறு இதழில்களிலும் உண்டு. எனது முகநூலிலும் பார்க்கலாம். அன்று மிலிந்த கையாண்ட அதை அணுகுமுறையை இன்று அநுர அரசாங்கமும் கையாளுகின்றது. அதன் காரண - காரியத்தோடு தான் இப் படத்தை இன்று மீள்பதிவு செய்தேன். கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், சிங்கள தலைவர்கள், வடக்கு கிழக்குத் தமிழர் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று தான் செயற்படுவர் என பல ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். ஊடகங்களுக்கு வழங்கிய பல நேர்காணல்களிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். ஆனால் -- தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள், தேர்தல் அரசியல் நோக்கில் மாத்திரமே ஒன்றினைவது அல்லது அப்படியான தோற்றத்தைக் காண்ப்பிக்கின்றனர். ஆனால், இந்தியாவை எப்படி கையாள்வது, குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் தான் பிரச்சினைக்குரியது. ஆனாலும், பாஜாக அரசாங்கத்தை அணுகுவது பற்றிய உத்தி ஒன்றை வகுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் பொருத்தமான பரிசோதனை செய்யப்படதாக தெரியவில்லையே? இப்போது காலம் கடந்து விட்டதே? ஆனால் சிங்கள தலைவர்கள், ஜேஆர் காலத்தில் இருந்து, இன்றைய அநுர வரையும் புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து ஒருமதித்த குரலாகக் கையாண்டு வருகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கொழும்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு துணிவோடு நேர்காணல் வழங்கிய பின்னர் தான், டில்லியில் மிலிந்த தூதுவராக பதவியேற்றிருந்தார். மிலிந்த எடுத்து வைத்த அதே அடியைத் தான், ரில்வின் சில்வா சென்ற மாதம் இந்தியாவுக்கு சென்று இன்னும் ஒருபடி மேலே காய் நகர்த்தியிருக்கிறார். அதேவேளை, இதே மிலிந்ததான், 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சு நடைபெற்றபோது, உலகம் எல்லாம் சென்று, தமிழர்களின் போராட்டம் ”இனவாதம்” ”பயங்கரவாதம்” என்று கூறி இராஜதந்திரப் பிரச்சாரம் செய்தவர். ஆகவே -- 2009 ஆம் ஆண்டு புவிசார் அரசியலும், 20026 ஆம் ஆண்டு உருவாகியுள்ள புவிசார் அரசியல் பதற்றமான சூழலும், இலங்கைக்குச் சாதகம் தான். ஈரான் கப்பல் விவகாரத்தை அநுர கையாண்ட விதம் முட்டாள் தனமானது என சில விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் -- இந்திரா காந்தி காலத்தில் இருந்து புதுடில்லி, கையாளும், இரட்டைத் தன்மையான சர்வதேசக் கொள்கைக்குள் (Dual International Policy) புகுந்து கொண்டு தான், இலங்கை சீவியம் நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். (இரட்டை சர்வதேசக் கொள்கை என்பது புவிசார் அரசியல் சூழலைப் பொறுத்து) இந்திரா காந்தி காலத்தில் இருந்து, டில்லி முழு மனதோடு தமிழர் பக்கம் இல்லை என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். மலையகத் தமிழர் விடத்திலும் இந்தியா ஒப்பாசாரமான தலையசைப்புத் தான். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0b7rQtxsCbX5VCgouPij4QhUnKt2yo2fq96hhFXneu86dcJ3PDkxKTmUpPXjVPgYbl&id=1457391262&mibextid=wwXIfr
-
கறையான் புற்று
பகிர்வுக்கு நன்றி கவி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்க எப்படி ஒரேயடியாக கீழே.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
கிரிக்கட் கணிப்புகள் போல இதுவும் இருக்குமா தம்பி.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்தியா,பாகிஸ்தான் போரில் கற்றுக் கொண்டிருப்பார்களோ? பாராளுமன்ற உறுப்பினர் என்றால் கடிதம் எழுத வேண்டும் என்ற எழுதாத விதி.
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
சர்வதேச சட்டம் எதையும் அமெரிக்கா பின்பற்றாது என்று அமெரிக்கா முதலே சொல்லிவிட்டதே?