Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இதுவரை கட்டினதை எவரும் தடுக்க முடியவில்லை. ஆனால் இனித்தான் உங்கள் நவீன கெளதம புத்தன் அனுரவின் 2/3 ஆட்சியாயிற்றே… இனி நீங்கள் எப்படி கோழி பிடிக்கிறீர்கள் என்பதை பார்க்க நாங்கள் ரெடி.
  2. யாழில் 1, வன்னியில் 1, மட்டு 1 இதுதான் ஆக கூடியது என நினைத்தேன். யாழில் 3, அதுவும் தேர்தல் மாவட்டமே போச்சு எண்டதும்…. “தலை சுத்திடிச்சு”….. பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣
  3. ஆண்டவா…. என்ர கட்டை வேக முன்னம் இன்னும்… எத்தனை தமிழ் தேசிய கங்காக்கள், அனுர ஆதரவு சந்திரமுகிகளாக மாறுவதை பார்த்துட்டு வேகணும்னு எழுதி இருக்கோ….🤣. சரி நான் முறையிடவில்லை. இனி எங்கயாவது விகாரை கட்டுறான் எண்டு தூக்கி கொண்டு வந்தியள் எண்டா கெட்ட கோவம் வரும், சொல்லிப்போட்டன். கிடைத்திருப்பது க்ரண்ட் ஷாக். அதை அதிர்ச்சி வைத்தியம் ஆக்கினால் வெற்றி. இல்லை எண்டால் மின்சாரம் தாக்கி மரணம்.
  4. நாம் ஏன் யாழில் சுமனை கடுமையாக எதிர்த்த அண்ணைகள், பார்த்தசாரதி போன்றரிடம் இந்த வேலையை ஒப்படைக்க கூடாது? அப்படியாயின் சிறிதரன் பாராளுமன்ற பதவியை துறக்க, அடுத்து கூடிய வாக்கு எடுத்த சுமன் அந்த இடத்தை நிரப்பலாம்.
  5. சுமந்திரனை நம்பி ஆஸ்பத்திரி வேலையை கொடுக்கவும் முடியாதுதானே. தனியே அரசியலமைப்பு நிபுணர்கள் மட்டும்தான் பாராளுமன்றம் போகலாம் என்றில்லை.
  6. இது கஸ்டம். எப்படியும் அமைக்கும் முழு எம்பிகள் குழுவாகவே இருக்கும். ஒருதரம் சாட்சியம் கொடுக்க நிபுணர்கள் போகலாம். இல்லாவிடில் மக்கள் ஆணை இல்லாதவர் அரசியலமைப்பை உருவாக்கினார் என்பார்கள்.
  7. ஆம் என வாக்களித்துள்ளேன். 2 காரணங்கள். 1. அரசியலமைப்பு என பார்த்தால் - தமிழரசு எம்பிகள் மிச்சம் எல்லாம் புஸ்வாணம். எனவே பயத்தில் அவர்களே சும்மின் கையை பிடித்து இழுப்பார்கள். 2. சுமனாவது வீட்டில் இருப்பதாவது. இனி ஒரு தேசியபட்டியல் நாடகம் அரங்கேறும். கிட்டதட்ட பொம்பிளை அழைப்பு போல. இதை மக்கள் ஆணையை பெற்ற சிறிதரந்தான் செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயகப்பண்பு.
  8. நடேசன் ஐயாவுடன் வேலை செய்தவர் என அவரே சொல்லி இருக்கிறார், பல மாதங்கள் முன்.
  9. உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை. 24 மணத்தியாலத்துள் சும்மை தேடும் நிலை வந்து விட்டதே🤣. கஜேந்திரன் அரசியலமைப்பு தெரிந்தவர் என சும் கூறியது அக் மார்க் நக்கல். கனபேருக்கு இதில் உள்ள நக்கல் தொனி விளங்கவில்லை. கனவான் அரசியல் என நினைக்கிறனர். மக்கள் நிராகரிப்பை இட்டு சும் செம கடுப்பில் இருப்பதாக படுகிறது எனக்கு. The man is hurting and it’s showing 🤣. தேசியபட்டியல் சீட்டை இனி எடுத்தால் வெட்கம். முன்னர் இவரும் ஜெயம்பதியும், ரணிலும், அனுரவும் தானே கூடி கதைத்தவர்கள்…. அந்த அடிப்படையில் கட்சியின் அரசியலமைப்பு பேச்சாளர் என செயல்பட்டு அடுத்த முறை தேர்தல் மூலம் உள்ளே வரவே விரும்பக்கூடும். சிறி தரனுக்கு இப்போ வயித்த கலக்க தொடங்கி இருக்கும். ஆழமான அறிவோ, ஆளுமையோ இல்லாத மனிதர் அவர், கட்சி தலைமையை சாணாக்ஸ்சிடம் கொடுத்து விட்டு கேண்டீன் சாப்பாடை ரசிக்கலாம்.
  10. இனவாதம் தற்காலிகமாக அடங்கி கிடக்கும் நேரம்…. என் பி பி 2/3 பெரும்பான்மை - தமது தேனிலவு முடியும் முன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, சர்வசன வாக்கெடுப்புக்கு விட முயற்சிக்க கூடும். உண்மையில் இந்த நேரத்தில் நாம் 12/14 தமிழ் தேசிய எம்பிக்களை கொண்டு, நமது மக்களின் ஏக குரலாக கதைத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதும் மோசமில்லை, கிழக்கின் தயவில் 10/14 தமிழ் தேசிய எம்பிக்கள் உளர். கஸ்மீரிகள் செய்வது போல் ஒரு ஹூரியத் கூட்டம் போட்டு - அனைவரும் ஓரணியில் திரண்டு முட்ட வேண்டும். இதில் புலம்பெயர் அமைப்புகளும் சேர வேண்டும். முதலில் நாம் ஓரணியில் திரண்ட பின், முஸ்லிம்களுக்கு நாமாகவே ஒரு நிலத்தொடர்பற்ற அலகை கொடுப்பதாக கூறி, அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ அவர்களுக்கு கொடுக்க வேண்டும். மிதவாத முகமூடி போட்ட என் பி பி யை இப்படி நெருக்கலாம். யூதன் எம் நிலையில் இருந்தால் இப்படித்தான் செயல்படுவான்.
  11. நல்ல கருத்து. —————— இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன். 1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம். பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம். அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம். அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது. தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம். நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு, ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது. 2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள். வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.
  12. 🤣 இனிய மாலை வணக்கம் தமிழ் சகோதரர்களே, எம்மை இட்டு நீங்கள் பலத்த எதிர்பார்புக்களுடன் உள்ளதை நாம் அறிவோம். இந்த எதிர்பார்புக்களை நிறைவேற்றுவோம் என நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். சிங்கள, தமிழ், முஸ்லீம், பேர்கர் நாம் எல்லோரும் ஒற்றை இலங்கைக்குள், உறவினர் போல் வாழும் புதிய எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம். நன்றி. ஒற்றை (ஆட்சி) சிறிலங்காவுக்கு வெற்றி!
  13. புலத்தமிழ் செயற்பாட்டாளருக்கு மட்டும் அல்ல. புலத்தமிழ் “எழுத்தாளர்” நமக்கும் தேவையான அறிவுரை. கடந்த சில வருடங்களாகவே ஊர் அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை. இந்த தேர்தல் இழுத்து வந்து விட்டது. சரி உறவுகளே இன்னொரு திரியில் சந்திப்போம். ————- சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி. ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா. அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா. சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு. பொஹோமஸ் துதி. எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா !
  14. எனக்கும் அப்படித்தான் நான் எழுதாதும், எழுதவில்லை என நினைவிருக்கும். சந்திப்போம்.
  15. யார் பொய் சொல்வது என்பதல்ல கேள்வி. தவிரவும் நான் எழுதிய பலதை நீங்கள் 180 பாகை எதிர் வழமாக விளங்கி கொண்டதும் முன்பு நடந்ததே. எனவே அப்படி சொன்ன கருத்தை மீள பதியுங்கள். தொடர்ந்து உரையாடலாம்.
  16. மஹா சங்கத்தின் ஆதரவோடு? அப்ப அதில எதுவும் இருக்காது🤣.
  17. ப்ரோ, அருச்சுனாவை இங்கே defend பண்ணி காலத்தை விரயமாக்காமல், முடிந்தால் ஊருக்குள் உள்ளவர்கள் மூலம் இவர்களை அடுத்த நிலைக்கு உந்த பாருங்கள்.
  18. ஒரு மாவட்டத்தில் 25% ஏனையவற்றில் அதை விட குறைய - நீங்கள் சொல்லும் களைத்து போன தமிழ் வாக்காளரிம் எண்ணிக்கை. இதை வைத்து எல்லாரையும் ஏன் அதே வர்ணம் தீட்ட முயல்கிறீர்கள். எனக்கு நான் அப்படி எழுதவில்லை என்று நல்லா நியாபகம் இருக்கு. சாணாக்கியன் மீது எனக்கு பெரு விருப்பு இல்லை, விமர்சனம் பலது உண்டு. ஆனால் பிள்ளையானின் செல்வாக்கை, கோட்டா ஆட்சியில் எதிர்த்து, பிள்ளையனை இப்போ தோற்கடித்த அரசியல் செய்வது சின்ன விடயம் இல்லை. தமிழரசுக்கு தேவைப்படும் தலைவர் உள்ளதில் திறம் அவர்தான்.
  19. இதை எப்பவோ செய்திருக்கலாம். ஜே ஆர் முதல் கோட்டா ரணில் வரை எல்லோருடனும் முரண்பட்டது ஏன்? குறிப்பாக யாழில் 25% மட்டுமே என் பி பி பக்கம் சாய்ந்ததை வைத்து - இந்த முடிவுக்கு வர முடியாது. யாழில் கூட மக்கள் உரிமை அரசியலுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ள நிலையில் - சிலர் 2 சீட் ஒரு போனஸ் சீட்சை வைத்து - எல்லாரையும் அனுரவின் பஸ்சில் ஏத்திவிட முனைவதாக தெரியவில்லையா?
  20. நான் மேலே கூறிய 6 இல் எதை வரட்டு தேசிய கொள்கை என்பீர்கள்?
  21. நான் சாணக்ஸை பற்றி இப்படி எழுதவில்லை. உங்களுக்கு சில நாட்களுக்கு முன் தந்த பதிலில் அவரும் 2010 இல் மகிந்தவுடன் இருந்தார், பின் சம்ப்ந்தன் அவரை தமிழரசுக்கு கூட்டி வந்தார். சம்பந்தன் தமிழரசுக்கு செய்த அபூர்வமான நல்ல விடயங்களில் இது ஒன்று. சாணாக்கியன் இல்லை என்றால் மட்டகளப்பிலும் தமிழ் தேசிய வாக்கு 1 எம்பி ஆகி இருக்கும் என எழுதினேன். சாணக்ஸ் மட்டும் அல்ல மட்டுவில் 4 தமிழ் எம்பிகள், அதில் மூவர் தமிழ் தேசிய கட்சி என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.