Everything posted by goshan_che
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இன்னும் எத்தனை புள்ளிகள் வர இருக்கு கந்தப்பு அண்ணை?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பார்க்கலாம்…நான் லூசா…பேயா எண்டு எழுதி போடுவன் அதான் யோசிக்கிறன்🤣
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
29 பிரதி அமைச்சர் பட்டியல் வெளியானது. 1 முஸ்லிம். 1 திருகோனமலை மாவட்ட எம்பி அருண் ஹேமச்சந்திர - இவர் தமிழர் என நினைக்கிறேன். ஹேமச்சந்திரன் என்றால் கூப்பில் உக்கார வைத்திருப்பார்கள். ன் ஐ தூக்கியதால் தப்பித்தார்🤣. @MEERAஇவர் பற்றிய தகவல் ஏதும் ?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இதை யாராவது அருச்சுனாவுக்கு வட்சப் பண்ணுங்கப்பா… அருச்சுனாவுக்கு யாழில் ஒரு திறந்த மடல் எழுதலாம் என நினைக்கிறேன்…. ஆனால் என்னை விட @தமிழ் சிறி எழுதினால் பொருத்தமாக இருக்கும். நானும் நிச்சயம் என் கருத்தை எழுதுவேன். அதை சமூகவலை தளங்கள் மூலம் அவர் கருத்துக்கு எடுத்துப்போய் பார்க்கலாம். சுயநலமாக சிந்திக்காமல் மயூரன் போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் - சிலதை உரிய வகையில் எடுத்து சொன்னால் மாற்றிகொள்ள கூடும். முயன்றுதான் பார்க்கலாமே.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இல்லை…. 1. ஜனாதிபதி 2. பிரதமர் 3. சபாநாயகர் 4. பிரதம நீதி அரசர், எதிர்கட்சித்தலைவர், கபினெட் அந்தஸ்து மந்திரிகள், மத்திய வங்கி ஆளுனர், பீல்டு மார்ஷல்கள் 5. மாகாண ஆளுனர்கள், பிரதி அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் - இப்படித்தான் இந்த வரிசை போகும். https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_order_of_precedence
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!
நாட்டின் அடிப்படையையே மாற்றி விடுவார்கள் என நினைக்கிறேன். ஜேவிபி பற்றிய என் கணிப்பு சரியாகின் இப்போ நடந்திருப்பது ஒரு புரட்சி. ஆனால் தேர்தல் மூலம் இதை சாதித்துள்ளனர். First term இல் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊடுருவி தம்மை நிலை நிறுத்தி கொள்வார்கள். கூடவே நாமல் முதல் ரணில் வரை அனைவரும் கள்ளர் என்பதால் அவர்களை மக்கள் முன் அம்பலபடுத்தி ஒரு மாற்று தலைமை இல்லாமலும் பார்த்து கொள்வார்கள். அதன் பின் இயற்கையாகவே அவர்களை வலுவாக எதிர்க்கும் சக்திகள் இல்லாமல் போகும். இவர்கள் இன்னொரு நீதியான தேர்தல் மூலம் பதவியை விட்டு போவார்கள் என நான் நினைக்கவில்லை. பெளத்த உயர் பீடங்கள் இவர்கள் சிங்கள பெளத்தத்தின் காவலர்கள் என நினைக்கும் வரை, அவர்களை இவர்கள் பகைக்காதவரை இது தொடரும்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நியாயமான கருத்தே. இப்போதைக்கு தேவை முகிழ்திருத்தல் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நாம் எமது அடையாளத்தைப்பேணாமல் இதை செய்யமுடியாது. மொழியை, பாரம்பரிய வாழிடத்தை, சுயநிர்ணயத்துக்கான அபிலாசையை நம்மில் இருந்து நீக்கிவிட்டு பாத்தால் - நாம் இந்துச்-சிங்களவரே. 200 வருடத்தில் நீர்கொழும்பு, புத்தள, சிலாபத்தின் முன்னாள்-தமிழர் போல் நாமும் ஆகிவிட்டால் - பின்னர் நாம் தமிழர் என்ற ப்ரக்ஞையே நம்மிடம் இராது. அது இல்லாத போது நாம் எப்படி ஒரு தேசிய இனமாக மீள் எழ முடியும்? இந்தானால்தான் அங்கயன், டக்கிளஸ், பிள்ளையானை விட என் பி பி எம்பிகளும் அவர்களின் காலில் விழும் அரசியலும் நம் இன இருப்புக்கு ஆபத்தானது.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அருமையான கருத்து வாலி. கொல பாட்ட இவராய் மள்ளி🤣.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
ஈழநாதமும் படிக்கோணும், குமுதமும் படிக்கோணும் - Saturday Review வும் படிக்கோணும். இல்லாவிடின் 40, 50 வயசில கஸ்தூரியை கூகிள் பண்ணி பார்க்கும் அவல நிலை ஏற்படும்🤣. அது சரி 1991 ஆம் ஆண்டு புத்தளம் முகாம்களில் ஈழநாதம் கிடைத்ததா? ஆச்சரியமாக உள்ளது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
புலனின்பங்களில் பார்வையின்பமும் ஒன்றுதானே - சிலருக்கு விடயங்களை செய்வதில் நாட்டம், சிலருக்கு பார்ப்பதில் நாட்டம் - உங்களுக்கு அதுதான் இஸ்டம் என்றால் நாம் தடுக்க முடியாது. இதுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா🤣 நம்ம ஜி @கிருபன்யவா சொல்றீங்க🤣
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒம் அவர்தான் இப்போ FSP தலைவர் - 2012 வரை இலங்கை அரசுக்கு கூட இவர் யார், வந்து போவது எதுவும் தெரியாது என்கிறனர் ( இடைபட்ட காலத்தில் இலங்கை அரசில் ஜேவிபி பங்காளியாகி, அனுர கபினெட் அமைச்சராக இருந்தார் - ஆனால் கட்சியை இயக்கியது - யார் என்பதே தெரியாத குமார்). பின்னர் உள்வீட்டு குழப்பத்தில் இவரை கட்சியே மாட்டி விட்டது. இதற்கும் இனவாதமே கடைசியில் காரணம் ஆகியது என்பார்கள். இன்னுமொருசாரர் இந்த பிரிவு பொய் நாடகம், இப்போதும் குமார்தார் ஜேவிபியை வழிநடத்துகிறார் என்கிறனர். ஜனாதிபதி தேர்தல் நேரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தனக்கும் குமாருக்கும் எந்தவித உடனடி தொடர்பும் இல்லை என மறுத்தார் அனுர. கட்சியின் பழைய உறுப்பினர் என கேள்விப்பட்டேன் அவ்வளவே என்றார். ஆனால் முன்பு ஒரு தடவை கேகாலையில் குமாரின் வீட்டில் தங்கி அவரின் தாயாரிடம் ஆங்கில கற்றேன் என கூறியது பின்னர் இன்னொரு வீடியோ வடிவில் வெளிவந்தது. ஏனைய கட்சிகள் போல அல்ல, ஒரு வல்லரசின் உளவு நிறுவனம் போல ரகசியமான அமைப்பு ஜேவிபி. எமது மக்களுக்கு இவர்கள் வரலாறு, தன்மை, கொள்கை பற்றி அதிகம் தெரியவாய்பில்லை என நினைக்கிறேன்.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஓம்…அது பெளத்தர்கள் போனால்… ஏனைய மதத்தவர், இனத்தவர் அப்படி செய்யத்தேவையில்லை…இனவாதமற்ற சிங்களவர் அப்படி எதிர்பார்ப்பதும் இல்லை. 1978 க்கு பின் நேற்று அமைந்த அமைச்சரவைதான் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. இத்தனை காலத்தில் எந்த முஸ்லிமாவது இப்படி செய்ததுண்டா? இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா? இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள். நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்? @குமாரசாமி @zuma நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா? எத்தனையோ துறைகளில் அலுவலகத்துக்கு பிக்குகள் வரும் போது தமிழர், முஸ்லிம்கள் மட்டும் காலில் விழாது இருப்பார்கள். நாளைக்கே இவர்களுக்கு எம்பிகள் இப்படி செய்தது ஒரு மறைமுக அளுத்தத்தை தராதா? அடுத்து என்ன… தமிழ் பாடசாலை மாணவர்களை விகாரைகளுக்கு கல்வி சுற்றுலா கூட்டிப்போய் இதையே???? உண்மையில் இதன் பின்னால் உள்ள சூக்கும அரசியல் உங்களுக்கு புரியவில்லையா?
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஓ அப்டியா…தரவு பிழைக்கு மன்னிப்பும், திருத்தியமைக்கு நன்றியும். நாகவிகாரை என்றதும் நையினா தீவு என நினைத்து விட்டேன். எங்கள் காலத்தில் ஆரிய குளத்தடியில் விகாரை இருந்ததாம் என்று மட்டுமெதான் தெரியும். அது சரி….. ஐயர், பாதர், மெளவி கள் காலில் விழுந்து பிரண்ட சிலமன் ஏதும்? ஆரியகுள பிக்கு காலில் விழுவது தப்பில்லை நயினாதீவு எண்டால் தப்பு என சொல்லமாட்டீர்கள் என நினைக்கிறேன். பிகு இப்போ செய்தியை சரியாக எடிட் செய்துள்ளேன்.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
வெறும் லிங்காக தருகிறேன் பாருங்கள். https://x.com/godfreypy1/status/1858133106081124572 @நியானி யாழில் அப்டேட்டுக்கு பின் பல embedded videos சில நேரம் போனபின் தெரிகிறது இல்லை. அதே. @valavan வழமை போல் ஆதாரம் இருக்கா பாணி கேள்வி அல்ல, உண்மையிலேயே இந்த பீடாபதி எம் சார்பாக பேசுபவரா? இதுவரை நான் சில தனிபிக்குகள் பேசி மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன், விகராதிபதிகள் எமது நியாயத்தை பேசி கேட்டதில்லை.
- புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
முற்றிலும் மாறுபடுகிறேன். புலமை பரிட்சை என்பது பல பின் தங்கிய மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறிப்பாய உதவும் ஏணி. பல கிராமபுற மாணவர்கள் கனவில் கூட நினைக்க முடியாத கொழும்பு பாடசாலைகளில் கல்வியும் விடுதி வசதியும் பெற்றுக்கொடுக்கும் திறவுகோல்.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒ….உலப்பன வில் இவர் கைதான வீட்டை போய் பார்த்துள்ளேன். ஆங்கிலேயர் கட்டிய bungalow style வீடு. அங்கே அத்தநாயக்க என்ற பணக்காரர் வேடத்தில் வசித்து வந்தாராம்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முதல் ஆளாக நான் ஆஜர் 🤣. ஆனால் நான் சொன்னது மேல வசி சொன்னது போலதான். நாம் பண்டா, சிறில் மத்யூவை எதிர் கொண்டது போல் நேரடியாக மூர்க்கமாக அவர்கள் ஞானசார, டான் பிரசாத், ரணவக்க, கமன்பில வை எதிர் கொள்ளவில்லை. அவர்கள் ஆட்களை வைத்தே அவர்களை காயடித்தார்கள். இனியும் ஜேவிபியை எப்படி கையாள்கிறார்கள் என்பதை இருந்து பாருங்கள்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
பிழை திருத்தம் குமார் குணரட்னத்தின் தாயாரும் தமிழரே (மலையக தமிழர்).
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
இது உண்மைதான்… எமது பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது சிங்கள மாணவர்கள் வெத்திலையோடு போய் ஒவ்வொரு டீச்சர் காலிலும் வீழ்ந்து வணங்குவார்கள். ஒரு முறை மாத்தறைப்பக்கம் வாகனத்தில் ஒரு அமைச்சு செயலாலர் அடங்கிய குழுவுடன் பிரயாணித்தேன் (நான் ஊர் சுற்றி பார்க்க போனேன் -சிறிய வயது, குரூப்பில டூப்பு) - அவரின் ஊரைத்தாண்டி போகும் போது - திடீரென வண்டியை ஓரம் கட்ட சொல்லி விட்டு மனிசன் பாய்ந்து சைக்கிளில் போன தன் பள்ளி ஆசியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இது அவர்கள் கலாச்சாரம். ஆனால் நாம் இப்படி செய்வோம் என அவர்கள் எதிர்பார்க்க கூடாது. அந்த எதிர் பார்ப்பு, இனவாதம். நான் ஒவ்வொரு முறை நயினாதீவு போனாலும் போய் கெளதமுக்கும் ஒரு சல்யூட் போட்டே வருவேன். கொழும்பு மயூரபதி அம்மனில் அப்பவே பல சிங்களவர் வந்து எலுமிச்சை விளக்கு எல்லாம் ஏத்துவார்கள். ஆனால் காலில் ஏன் விழுவான்? காலில் விழுவோம் எண்டு வேண்டுதலோ🤣.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்