Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15626
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. ஓம். எப்படி பார்த்தாலும் எமக்கு கஸ்டம்தான். தனியே சிங்களவரோடு பேசினாலும் ஆப்பு. மத்தியஸ்தம் எண்டு இந்தியா வந்தாலும், சிங்களவர் இப்போ அடிப்பதை போல் ஆப்பு அடித்தால் இந்தியா சும்மா பார்த்து கொண்டுதான் இருக்கும். ஆகவே அதுவும் ஆப்புத்தான். கிட்டதட்ட இலங்கை எமக்கு வைத்துள்ள செக்மேட். இதை உடைக்கும் ஒரே வழி நம்மில் ஒரு கட்சி சீனாவை நெருங்குவதாக இருக்கலாம்?
  2. நான் நீங்கள் சிரிக்கவேணும் எண்டுதான் இப்படி கோக்கு மாக்கா எழுதுறனான் பையா. எனக்கு உங்களோடு விவாதிக்க விபரம் பத்தாது பையா. இன்னும் வேணும் பையா… இதை விட அற்புதமான கருத்துக்களை இன்னும் இன்னும் மேலே மேலே எதிர்பார்க்கிறேன்.
  3. எல்லாருக்கு சேர்த்து பாஸ்கட்பால் தொட்டு அலசி அழகாக நீங்கள் எழுதுவது காணாதா பையா. அந்த சிறு கவலையை விட்டொழியுங்கள். நீங்கள் இருக்கும் வரை யாழில் காத்திரமான, தரவு பூர்வமான, கருத்துக்கு பஞ்சம் வராது. நான் யாழில் எஞ்சாய் பண்ணி வாசிப்பதே உங்கள் கருத்தைத்தான் பையா (உண்மையாகவே).
  4. அண்ணா எங்கேயும், எப்போதும் இதை என் கருத்து என்றே எழுதி உள்ளேன். இதை ஒரு தரவு எனவோ, இதுதான் உண்மை எனவோ எழுதவில்லை. நேரடியாக பார்த்தது போல் நான் இல்லை நீங்கள்தான், மீம்சையும், சும்மா படங்களை போட்டு, இது செலன்ஸ்கியின் வீடு அப்படி இப்படி என எழுதியுள்ளீர்கள் அண்ணா. இந்த திரியில் மட்டும் அல்ல, உக்ரேனில் மக்கள் இறந்தது போல் நடிகர் நடிக்கிறார்கள் என கூட யாழில் எழுதப்பட்டதே அண்ணா. எல்லாரும் இத்தாலி போய் செலன்ஸ்கி விட்டை டீ குடித்து விட்டு, உக்ரேனில் போய் நடிகர்கள் நடிக்கிறார்கள் என உறுதி செய்துவிட்டா எழுதப்பட்டது அண்ணா? மற்றையோர் பற்றி தெரியாது அண்ணா, ஆனால் நீங்கள் ஒரு போதும் ஜேர்மனியை விட்டு கொடுப்பதில்லை என தெரியும். ஆனால் அமெரிக்காவை, பிரிட்டனை, பிரான்ஸை கரிச்சு கொட்டலாம். அதாவது ஏனைய தமிழனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளை திட்டலாம் ஆனா ஜேர்மனியை மட்டும் ஒரு சொல் சொலகூடாது🤣. ஏன் என்றால் அது உங்களுக்கு அடைக்கலம் தந்த நாடு அல்லவா! ஆகவே ஜேர்மனி ஸ்பெசல். அத்தோடு ஜேர்மனி பாவம் கை குழந்தை, விருப்பம் இல்லாமல் நேட்டோவில் இருக்கிறது. ஆகவே மேற்கு, நேட்டோ வின் தவறுகள் எதிலும் ஜேர்மனிக்கு ஒரு பங்கும் இல்லை. அப்படித்தானே அண்ணா?
  5. இதே நபர்கள் இதே யாழில், இதை எழுதி உள்ளார்கள். இப்ப புட்லர் போதை தலைக்கு ஏறியாதால், கடந்த 20 வருடமாக தாம் யாழில் எழுதியதை ஒவ்வொன்றாக மறுதலித்து எழுதிகொண்டிருக்கிறார்கள்.
  6. உக்ரேனில் ரஸ்யா இறங்கியது தன் பெளதீக பாதுகாப்புக்கு (physical security) இல்லை. ஆனால் காபன் எரி பொருள் அற்ற உலகில் தன் எதிர்கால வகிபாகத்தை நிலை நிறுத்த. ஆனால்…என்ன காரணம் என்றாலும் தன்னால் முடிந்தளவு ரஸ்யா தன் நலனை முன் தள்ளுவதை, ஆக்கிரமிப்பு மூலமேனும், முந்தள்ளுவதை வழமைக்கு மாறான நடைமுறை என நான் எழுதவில்லை. எல்லா வல்லூறுகளும், பிராந்திய வல்லூறுகளும் காலம், காலமாக செய்யும் விடயம்தான் இது. ஆனால் இந்த கோலியாத்துகள் தம்மை ஆக்கிரமிக்கும் போது, கிடைத்த கல்லை யார் கொடுத்தாலும் வாங்கி, விட்டெறிந்து கோலியத்துகளின் மூக்கை உடைக்கும் தாவீதுகளும் காலம் காலமாக உள்ளார்கள். நான் எப்போதும் தாவீதின் பக்கமே.
  7. மன்னிக்கவேண்டும் செய்தி மூலத்தை இணைக்க மறந்துவிட்டேன். https://www.bbc.co.uk/news/live/world-middle-east-64426340
  8. ஜெருசலேமிலுள்ள யூத கோவிலில் (சினகோக்) நடந்த தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் வரையில் இறப்பு.
  9. இதை வாசித்து அர்ஜூன் அண்ணா, கற்பகதரு போன்றோர் கடைசியாக தாம் சொல்லிய வழிக்கே திரு குமாரசாமி வந்துவிட்டார் என மன சாந்தி அடைவார்கள் என நம்புகிறேன். பிகு: உங்கள் மனமாற்றத்தை, நிலைமாற்றத்தை நானும் வரவேற்கிறேன். ஆனால் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கையோடு பேசுவது ஏமாற்றத்தில்தான் முடியும். அதேபோல் நாங்களும், இலங்கையும் விரும்பினாலும் கூட இந்தியாவை விலத்தி நடக்கமுடியாது.
  10. இல்லை அண்ணா. ரணில் - 13 ஐ நீக்க போராடுங்கள் என சமிக்ஞை கொடுக்கிறார். கூடவே காணி, பொலிஸ் அதிகாரங்களை “தேசிய ஆணை குழு” மூலம் கொழும்பில் வைத்து கொண்டு, உள்ளதை எல்லாம் உருவி விட்டு, யானை தின்ற விளாம்பழம் போல ஒரு திட்டத்தை 13 என திணிக்கப்போகிறார். ✅ நழுவுற பேச்சு மட்டும் இல்லை, ரோட்டு கூட்டும் அதிகாரம் கூட இல்லாத ஒரு சபையை - இதுதான் 13 என கொடுத்து, மேற்கு, இந்தியா, புலம்பெயர் தமிழர் எல்லாருக்கும் தீர்வு கொடுத்து விட்டேன் என சொல்லி, கதையை முடிக்கப்போகிறார். இதை சுமந்திரன் புழுகி, புழுகி நான் கஸ்டபட்டு தீர்வு எடுத்து தந்துட்டேன் என தம்பட்டம் அடிக்கப்போறார். இங்கே ரணில் சொல்வது 13 அல்ல. 13 இல் உள்ள எமக்கு தேவையான சகலதையும் உறிஞ்சி விட்டு வெறும் சக்கையை 13 என எம் தலையில் கட்ட போகிறார்.
  11. ஏன் விலகல்? அதிகாரத்தில் உள்ளோர் மனம் கோணாதபடி நடப்பதில் சாள்ஸ் வல்லவர் தானே?
  12. 2ம் உலக யுத்த சரணடைவு ஒப்பந்தம் மூலம் அமேரிக்கா ஜப்பானின் இராணுவ வலிமையை மிகவும் மட்டுபடுத்தி வைத்துள்ளது. பழைய இம்பீரியல் ஜப்பான் எண்டா, புட்டலர் மேற்கில் மினகெட, கிழக்கு ரஸ்யாவை பிரித்து மேய்திருக்கும். வரும் காலத்தில் சீனா, ரஸ்யாவை பலனஸ் பண்ண, ஜப்பான் மீதான கட்டுப்பாட்டை அமரிக்கா தளர்த்தலாம்.
  13. இல்லை. வட்டார கூட்டமைப்பு, அல்லது ஏதாவது குறிச்சி கூட்டமைப்பு, அல்லது ஏதாவது மத, அல்லது சாதி கூட்டமைப்பு போதும். தேசியம் ரொம்ப பெரிய வார்த்தை.
  14. 1904இல் ஜப்பானிடம் ரஸ்யா வாங்கிய சாத்துபடியின் அகோரம்தான் ரஸ்ய சாம்ராஜ்யத்திக்கு சாவு மணி அடித்ததில் முக்கிய பங்கு வகித்தது 🤣
  15. சொறிஞ்சா அடிப்பது நியாயம்தான். ஆனால் சிவிலியன்களை குறிவைக்காமல் தவிர்க்கலாம்.
  16. இதெல்லாம் என்ன டவுனிங் ஸ்டிரீட்டில் புட்டின் வந்து கமரனோட கைபார் அடிச்ச காலம் எல்லாம் இருக்கு🤣. இந்த மாய்மாலத்தை மேர்க்கலும், கமரனும், ஒபாமாவும் நம்பியது போல் நடித்ததும் உண்டு. ஆனால் புட்டின் A என கதைத்தபடி, Z என வேலை பார்க்கும் ஆள். 2008 இல் ஜோர்ஜியாவின் பகுதியை ஆக்கிரமித்தது (நேட்டோவில் சேர்வதை தடுக்க) உக்ரேனின் கிழக்கில் புரட்சியை தூண்டியது, பின் 2014 இல் கிரைமியாவை இணைத்தது (ஈயூ, நேட்டோவில் சேர்வதை தடுக்க) 2016 இல் பிரெக்சிற்றில் தலையிட்டது 2016 இல் அமெரிக்கன் தேர்தலில் தலையிட்டது இப்படி….அமெரிக்கா என்ன ரஸ்யாவுக்கு செய்கிறதாக புட்டின் சொல்கிறாரோ அதையே புட்டினும் அமெரிக்காவுக்கும், மேற்குக்கும் செய்தார். செய்வதற்கு 180 பாகை எதிராக சொல்லும் முதல் அரசியல்வாதியும் புட்டின் அல்ல, கடைசி அரசியல்வாதியும் புட்டின் அல்ல. சர்வதேச அரசியலில், எல்லாரும் சொல்வது இப்படித்தான். கவுண்டர் பாணியில் சொன்னால் - இதெல்லாம் சகஜமப்பா. இதுக்கு போய் ஒவரா உணர்சிவயப்பட்டு கொண்டு🤣. சுவிச்ச போட்டா கோழி. நூத்தா முட்டை
  17. அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣. Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும். பிறகு சீனர். கடைசியாக ஐரோப்பியர். பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான். இவ்வண். ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம் மாஸ்கோ இரஸ்யா கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்
  18. அதுதான் சொல்கிறேன் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்களுக்கு ஒழுங்காக பதிலை தந்து இருந்தால் - மேர்க்கல் யாருக்கு எத்தனை பேட்டி கொடுத்தார். அவற்றில் அவர் உண்மையில் கூறியது என்ன. அதில் யாரின் கதையாடல் என்ன என தெரிந்து இருக்கலாம். நீங்கள் இவை எதுக்கும் பதில் கூறாமல் - மேர்க்கலின் எந்த பேட்டி வீடியோவையும் போடாமல், அவரி பேட்டியின் எழுத்து வடிவம் என சந்தா கட்டி பார்க்கும் தளத்தை தந்து விட்டு, பின் இன்னொரு அனானி .ph தளத்தை தந்து விட்டு… வெறும் பத்திரிகை செய்தி அடிப்படையில் எழுதினீர்கள். அதைதான் உங்களுக்கு சொன்னேன், மேற்கோ, கிழக்கோ, ஊடகங்களுக்கு அஜெண்டா இருக்கும் ஆகவே தனியே மேற்கு ஊடகம் சொல்வதை மட்டும் நம்பகூடாது, கிழக்கு ஊடகம் சொல்வது முழு உண்மை என்ற நிலைப்பாட்டை நானும் மறுவளமாக எடுக்கலாம் என. மேர்கல் சொன்னது பற்றியும், அதை நீங்கள் இங்கே இழுத்து வந்த பாயிண்ட் (புள்ளி 6, மேலே) பற்றியும் எனது கருத்து மேலே -மீள் பிரசுரம்.
  19. இந்த கேள்விக்கு நீங்கள் ஒழுங்கான பதிலை தந்திருந்தால்.
  20. கடஞ்சா, நான் முதலே சொல்லி விட்டேன் எனக்கு யூனில் மட்டுமா, அல்லது ஜூனிலும் டிசம்பரிலும் அதே பத்திரிகைக்கு மேர்க்கல் அதே விடயத்தை 2 தரம் பேட்டியில் சொன்னாவா என தெரியாது என. ஆகவேதான் இதை காவி வந்த உங்களிடம் அந்த கேள்விகளை முன்வைத்தேன். இந்த நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை, புட்டின் “மேர்க்கல் இந்த கிழமை சொன்னார்” என கூறியதாக கூறுகிறது. இது second hand information கூட இல்லை, third hand information. நான் சொன்னதை திரிக்கும் வேலை வேண்டாம். நான் என்ன சொன்னேன் என்பது கீழே. புரிகிறதா என்ன எழுதி இருக்கிறேன் என்று? இரெண்டு பேட்டிகளா அல்லது யூனில் வந்த பேட்டியைத்தான் எல்லாரும் மீள மீள கதைக்கிறார்களா? என்பதில் எனக்கு தெளிவில்லை என்றே சொல்லி உள்ளேன்.
  21. உண்மை. நரி 13 இல் உள்ள மாகாண காணி அதிகாரங்களை மீண்டும் மத்திக்கு எடுக்க சதி செய்கிறது பொலிஸ் அதிகார விடயத்திலும் அதையே செய்ய விழைகிறது நரி 13 ஐ நீக்குவதற்கு இதன் மூலம் ரணில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். அப்படியே அதை நடைமுறப்படுத்தவேண்டி வந்தாலும் காணி, பொலீஸ் அதிகாரங்களை முடக்குவதற்கும் குறுக்கு வழிகள் உண்டு என்பதையும் தெட்ட தெழிவாக உணர்த்தியிருக்கிறார். இலங்கையில் தமிழரை ஒரு தேசிய இனம் என்ற உண்மையைச் சொல்வதற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே விருப்பமில்லை. (செய்தியாளரின் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம்) 100%
  22. இல்லை western media என்பது ஒரு இலகு-சொல் (lazy language). இதைதான் முன்பும் ஒருவருக்கு எழுதினேன். எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது. Spectrumதின் ஒரு முனையில் Fox, CNN, GB news, Daily Mail, Sun என்றால்…மறு முனையில் The Guardian. மேடோக்கின் பத்திரிகைதான் Sun, Times உம் - ஆனாலும் அவை எடுக்கும் நிலைப்பாடு, அவற்றின் Agenda சில சமயம் வேறுபடும். ஓரளவுக்கு மேல் வேறுபட்டால் மேடோக் தலையிடுவார். அடுத்து industry-reputation, இங்கே வேலை செய்பவர்கள் - தமது பெயரில் வரும் செய்திகளின் தரவுகள் சரியாக இருக்க வேண்டும் என உழைப்பார்கள். குறிப்பாக, கார்டியன், சனல்4 செய்தி போன்றவற்றில் இருப்பவர்கள். ஆகவே எல்லோருக்கும் அஜெண்டா இருப்பது உண்மை எனிலும், ஒவ்வொருவரும் தனிபட்ட அஜெண்டா, கதையாடல் உண்டு. மேற்கு ஊடகத்திலும், கிழக்கு ஊடகத்திலும். மேற்கில் இருக்கும் பிரதான ஊடகங்கள் (Main Stream Media) ஒன்றிணைந்து எல்லாருக்கும் பொதுவான அஜெண்டாவாக மேற்கின் யுத்த நகர்வை நியாப்படுத்துகிறன என்பது ஒரு பொய் குற்றச்சாட்டு. இது ஒரு (சதி) கோட்பாடும் கூட. கொவிட், வக்சீன், லொக்டவுன் இப்படி பலதிலும் எல்லா மீடியாவும் கூட்டிணைந்து செயல்படுவதாக சதிகோட்பாடுகள் ரெட்டை கட்டி பறந்தன. அதன் நீட்சிதான் இப்போ உக்ரேன் விடயத்திலும் சொல்லபடுகிறது. ஈராக் யுத்தத்தில் dirty dossier உட்பட மேற்கின் பொய்களை வெளியே கொணர்ந்தது யார்? வியட்நாம் போரை யார் உலகுக்கு காட்டியது? ஆகவே எப்போதும், எல்லா போரிலும் அரசு எடுக்கும் முடிவுக்கு எல்லா மேற்கு ஊடகமும் ஆமாம் போடுவதில்லை. புட்டின் விடயத்தில் - மேற்கில் ஊடகங்கள் மட்டும் அல்ல, மக்களே பெரும்பான்மையாக தத்தம் அரசுகளின் நிலைப்பாட்டை எடுப்பதால் - ஒரு கருத்தொற்றுமை தோன்றியுள்ளது. சரி தலைப்பை விட்டு கனதூரம் வந்து விட்டோம். மேர்க்கலை பற்றி நான் மேலே கூறியது உங்கள் மேற்கு, மேற்கு அல்லாத மீடியாக்கள் மீதான இரெட்டை நிலையை சுட்டிகாட்டவே. மேர்க்கல் சொன்னது பற்றிய என் கருத்து 1. மின்ஸ்க் 1, 2, இன் பின் உக்ரேனை மேற்கு பலப்படுத்தியது என்பது தனியே இராணுவ ரீதியில் மட்டும் அல்ல. மேர்க்கல் உக்ரேனின் அரசியலை ஒலிகார்க்குகளிடம் இருந்து மீட்டதை, ஓர்மத்தை கட்டி எழுப்பியதை, உக்ரேனின் ஒற்றுமையை கட்டி எழுப்பியதை என பலதை கூறுகிறார். 2. இந்த பேட்டி வந்தது ஜூன் 2022. டிசம்பர் 2022 இல் இதை ரஸ்ய சார்பு ஊடகங்கள் தூக்கி பிடித்து ஒரு கதையாடலை சொருக, அதை அப்படியே இந்திய ஏனைய ஊடகங்கள் வாந்தி எடுத்தன என நினைக்கிறேன். 2ம் பேட்டி இருப்பதாக தெரியவில்லை. 3. மேர்க்கல் சொன்னதில் என்ன அதிர்ச்சி? தன்னிச்சையாக கிரிமியாவை புட்டின் பிடித்த பின், உக்ரேன் மீது இன்னொரு தாக்குதல் நடக்காமல் தடுக்கும் ஒரே வழி மேற்கை பொறுத்தவரை, உக்ரேனை சகல வழியிலும் பலப்படுத்துவதுதானே? 4. ஆனால் இதை ஒரு தற்காப்ப்பு (Defensive) என்ற மட்டத்தில் மட்டுமே மேற்கு செய்தது. டிரோன்களோ, ஹிமார்ஸ்சோ, ஏனைய ஆயுத, பண உதவியோ உக்ரேன் ரஸ்யாவை தாக்கும் அளவுக்கு (Offensive) வழங்கபடவில்லை. 5. தனது காலத்தில் சும்மா வாளாவிருந்தார் என்ற குற்றசாட்டை மறுக்க மேர்க்கல் இதை சொன்னார். ஆனால் இது ஒண்டும் ரகசியம் இல்லை. இதை பலமாதம் கழித்து ரஸ்ய ஊடகம்கள் ஏதோ பெரிய விசயம் போல சொல்லி, அதை ஏனைய பலரும் காவ - சதி கோட்பாடுகள் மீது இயற்கையான ஈர்ப்புள்ள நீங்கள் லபக் என பிடித்து கொண்டீர்கள். 6. உங்கள் ஒரிஜினல் பாயிண்டுக்கு வந்தால் - மேற்கு மட்டுபட்ட உதவிகளை செய்வதை அறியாமல் புட்லர் 2022 பெப்ரவரியில் இறங்கவில்லை. இவை மட்டுபட்ட உதவிகள், நாம் ஊதி தள்ளி விடலாம். குறிப்பாக ஜெலன்ஸ்கி, ஓடி விடுவார். உக்ரேன் மக்கள் எம்மை வரவேற்பர் என புட்டின் களத்தை தவறாக கணித்தார். இறங்கினார். அடி வாங்கினார்.
  23. அதாவது…மேற்கு ஊடகம் சொன்னால்…ரத்தம்…அதையே ரஸ்ய, சீன, அரபு, இந்திய ஊடகம் சொன்னால் தக்காளி சோஸ்🤣. மறுபடியும் சொல்கிறேன். நீங்கள் முன்னர் மேற்கு ஊடகத்துக்கு சொன்னதைதான், மேர்க்கல் பேட்டி விடயத்தில் இப்போ நான் சொல்கிறேன். நீங்கள் இதுவரை மேர்க்கல் சொன்னது என சொன்னது எல்லாமுமே இன்னொரு ஊடகத்தின் வியாக்கியானமே இல்லையா? Where is the primary source? # taste of your own medicine? கசக்கத்தான் செய்யும். இப்படித்தான் இத்தனை காலமும் நீங்கள் யாழில் கருத்து சொல்லியவர்களை, மேற்கின் பிரச்சாரத்தை நம்பியவர்கள் என மட்டம்தட்டி எழுதினீர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே🤣
  24. திரி சொன்ன செய்தி சார்ந்து ….. இந்த யுத்த டாங்கிகளுக்கு ரஸ்யாவின் எதிர்வினை இதுவாம்👇 என ரஸ்ய சார்பு சமூகவலை கணக்குகள் பேசி கொள்கிறன. உறுதிபடுத்தபடாத தகவல் என்பது சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.
  25. இதைத்தானே இத்தனை காலமாக நீங்கள் யாழில் செய்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட விடயத்தை ரஸ்யா சொன்னால் மந்திரம் - அதையே மேற்கின் அரசுகள் அல்ல, ஊடகங்கள் சொன்னாலே தந்திரம், கதையாடல், கதை சொல்லல்? புட்டின் போர் என்ற வார்த்தையை உச்சரித்தவர் ஆனால் அவர் போர் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அப்படி மேற்கின் ஊடகங்கள் கதை அடிக்கிறன என, ரஸ்ய மொழி அறிவு இன்றி கூகிள் துணையோடு முடிவுக்கு வந்தவர் அல்லவா நீங்கள்? நான் புதிதாக எதையும் கேட்கவில்லை. நீங்கள் வழக்கமாக மேற்கிற்கு கையாளும் அதே அணுகுமுறையைத்தான் இந்த மேர்க்கல் பேட்டி விடயத்தில் நான் கைக்கொள்ளுகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.