goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by goshan_che
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இங்கேதான் நீங்களும் சுமந்திரனும் பிழை விட்டீர்கள். நீங்களோ, நானோ, சுமந்திரனோ புலிகளின் பிரதிநிதிகள் அல்ல. நாம் எம்மக்களின் பிரதிநிதிகள். நாம் கோருவது எம் மக்களுக்கு இலங்கை அரசு இழைத்த அநீதிக்கான விசராணையை. அதை நாம் கோருவது அதனை ஒரு துரும்பாக பாவித்து ஒரு நியாயமான தீர்வை எட்ட. புலிகள் செய்தவை பற்றி எமக்கு கவலை இல்லை. அதை பாவித்து இப்போ எம் மக்களுக்கு நாம் ஒரு தீர்வை பெற முடியாது. ஆகவே அதை பற்றி நாம் கதைக்க வேண்டியதில்லை (நமக்குள் வரலாற்றில் இருந்து கற்று கொள்வதற்காக கதைப்பது அல்ல). இலங்கை அதை பேச விரும்பினால் போய், புலிகள் இருந்தால் அவர்களுடன், அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என யாரும் இருந்தால் அவர்களுடன் பேசட்டும், விசாரிக்கட்டும். நாம் புலிகள் அல்ல. தமிழர். புலிகள் செய்தவற்றுக்கு பொதுமக்களாகிய நாம் ஒரு போதும் பொறுப்பு கூற வேண்டியதில்லை. ஆனால் இலங்கை படைகள் செய்தமைக்கு, யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசே பொறுப்பு. நாம் கோருவது எமக்கான நியாயமான விசாரணையை. இதில் சுமந்திரன் தன் வகிபாகத்தை மீறி, எமது மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் - தானே ஐ சி சி நீதிபதிபோல் கதைக்க வெளிகிட்டுத்தான், சகலதையும் கவிழ்த்து கொட்டினார்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதில் ஆச்சரியமான விடயம் ஏதும் இல்லை. ஆனால் இதை நாம் ஏற்று கொள்ளாமல் போராட வேண்டும். அரசியல் என்றால் அதுதானே? அதுவும் விடுதலை அரசியல். விசாரணையால் நமக்கு என்ன நட்ட ஈடா வரப்போகிறது, இல்லை? அதை பயன்படுத்தி - நமக்கு ஒரு தீர்வை அடைய இப்போதும் வழி இருக்கிறது. நாம் ஒற்றுமையாக செயல்பட்டால்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அது கொள்கையை மக்கள் நிராகதித்தமை அல்ல. ஜனாதிபதி தேர்தலில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல என மக்கள் நினைக்கவில்லை. அத்தோடு தமிழரசு கட்சி அதை ஆதரிக்கவில்லை. இப்படியான நிலையில் இந்த மாதிரி ஒரு வேட்பாளரை நிறுத்துவது சரியா, பிழையா என யாழில் நான் கேள்வி எழுப்பி - அப்படி நிறுத்தின் எல்லோரும் உடன்பட்டு நிறுத்த வேண்டும் என்று எழுதினேன். அதன் பின் வரவில்லை, ஆனால் @நிழலி தொடர்ந்து இது எதிர்மறையான விழைவைதரும் என எழுதினார். அதுதான் நடந்தது. சின்ன வயதில் படித்த ஒற்றுமை அற்ற எருதுகளின் கதைதான். நாம் ஒற்றுமையாக ஒரே அணியில் திரளாதவரை, வாக்குப்பலமும், செயல்பலமும், சிதறிக்கொண்டே இருக்கும்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதில் முரண்பட முடியாது. ஆனால்…. இது உண்மையிலேயே தந்திரோபாயம் அல்ல. எழுதுபவகளின் குறைகளை விடுத்து விட்டு, அவர்களின் cherry picking ஐ தவிர்த்து விட்டு, அவர்கள் சொல்லும் விடயத்தினை மட்டும் அணுகுவதே நாம் செய்ய கூடியது என நினைக்கிறேன். அந்த விடயம் யாதெனில்… எல்லோரும் பிழை விட்டுள்ளார்கள், விட்டுள்ளோம். இதில் புலிகள் பிழை விட்டார்கள் என இவர்கள் சாகும் வரை ஏற்கப்போவதில்லை, அதை மீள, மீள சொல்லிக்கொண்டிருந்தால் எல்லோரும் ஒரே இடத்தில் நிண்டு சுத்த வேண்டியதே. ஆகவேதான் அதை அப்படியே விட்டு விட்டு, ஒத்த கருத்துக்கள் மீது கவனம் வைக்கிறேன். நம்மை வேறுபடுத்தும் கருத்துக்களை மீள, மீள உரைக்கும் போது ஒன்றாக முன்பே போவது இயலாத காரியமாகிறது. யாழ் ஒரு சிறுதுளி. எம் இனத்தின் அரசியல் அதன் பெரிய ஸ்கேல்.
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
எது பயங்கரவாத தடை சட்டம்தானே? அதைத்தான் எதிர்கட்சியில் இருக்கும் போது மோசமான நீக்கப்படவேண்டிய சட்டம் என்றீர்களே? அதை நீக்கிவிட்டால் பிரச்சனை பலதுதானாக தீருமே?
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
இப்போ இருக்கும் சட்டத்தை வைத்து, இப்போ பேசியதற்க்காக, விமல், சரத், உதயவை இன்றே கைது செய்யலாம். ஐ ஆம் வெயிட்டிங் அனுர.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நீங்கள் என்னை நோக்கி எழுதவில்லை என்பதை ஊகித்தே இருந்தேன். ஆனால் 75 வருடமாக சுயநிர்ண கோரிக்கையை போட்டடித்த படியால் இனி அதை கேட்ட கூடாது என்பது தர்க ரீதியான நிலைப்பாடாக எனக்கு தெரியவில்லை. ஒரு காலம் இருந்தது 2009 இன் பின்னர் கூட பல புலம்பெயர் ஆட்கள் தனி நாட்டு கனவில் இருந்தார்கள். ஆனால் இப்போ அவர்களே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு, அனுர சரணம் கச்சாமி என்று பாடுகிறார்கள். ஆனால் 2024 தேர்தலிலும், எமது மக்கள் சுயநிர்ணயம் கோரும் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் பெரும்பான்மை வாக்கை அளித்துள்ளனர். வாக்குகள் சிதறின என்பதுதான் உண்மை. மக்கள், நீங்கள் இப்போ உந்திதள்ளும், அனுரவின் ஈரச்சாக்கு இலங்கை தேசியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தே வாக்களித்துள்ளனர். இதைதான் மேலே கட்டுரை சொல்கிறது. நிலமை இப்படி இருக்க, உங்கள் நிலைப்பாடு ஊரில் உள்ள மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேடானாதாகவும் எனக்கு படுகிறது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மிகச்சரியான கூற்று வசி. கீழே இருப்பது 2019 மாவீரர்நாள். கோட்ட அபய பதவிக்கு வந்த 10 நாளில் மக்கள் நினைவேந்தியது. எம் உறவுகளை நினைவுகூற எவரின் அனுமதிக்கும் எம் மக்கள் காத்து நின்றதில்லை. இதை அனுர அனுமதிக்கவும் இல்லை. அனுமதிக்காவிடினும் நடந்திருக்கும். இது ஏதோ புதுவிடயம் போல் சிலர் அனுரவுக்கு காவடி எடுக்கிறனர்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
1. சிங்களவர்கள் இருவரும் பழைய புலிகளின் சின்னம் பொறித்த நிகழ்வுகளை வீடியோவை பகிர்ந்து - இப்போ நடக்கிறது என பொய் வதந்தி பரப்பி உள்ளனர். 2. சுன்னாக ஆள் பற்றி தெரியவில்லை, ஆனால் மற்றையவர் நினைவுகூரும் விதமாக தலைவர் படத்தை ஏற்றியுள்ளார். 3. இரெண்டும் ஒன்றல்ல. ஆனால் அனுர ஆதரவாளர்கள் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கி, அரசு நடுநிலையாக நடப்பது போல் காட்டவிழைகிறார்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மிக மோசமாக இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனவாதத்துக்கு நன்றாக முட்டு கொடுக்கிறீர்கள் அண்ணை. பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து போகலாம் மக்கள் ஆதரவு இருப்பின். கியூபெக்கிலும் இதுவே நிலமை. ஆனால் இலங்கையில் ஒரு பா உ, பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து பாராளுமன்றின் உள்ளே கூட இதை பேச முடியாது. முடிந்தால் 6 ம் திருத்தத்தை நீக்கி விட்டு வரச்சொல்லுங்கள் பார்க்கலாம். பிரிந்து போகும் உரிமை கூட அல்ல, எமது மண்ணில் எம்மை நாமே ஆளவேண்டும் என்பதில், 13 ஐ முற்றாக அமல்படுத்துங்கள் என கோருவதில் எந்த உணர்சி அரசியலும் இல்லை. அதே போல் அரசியல் தலைவரின் படத்தை தரவேற்றுவது உணர்சி அரசியல் என்றால் - ரோகண விஜேவீரா படத்தை ஏற்றுவோரும் கைதால வேண்டும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மேலே நீங்கள் இல்லை, ஒரு போதும் இல்லை என கூறியவற்றை விட அறவே வாய்ப்பில்லை சிங்களவர் எமக்கு சுயாட்சி தர.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இங்கே யார் இப்போ ஊரில் உள்ள மக்களை ஆயுதம் ஏந்தி போராடும் படி அறைகூவல் விடுத்தது? ஏன் நடக்காத ஒன்றை நடப்பதாக சொல்கிறீர்கள்?
-
தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்
அருமை.
-
இலங்கையின் அரச துறை ஏனைய ஆசிய நாடுகளை விடப் பெரியது - வெரிட்டே ஆய்வில் தகவல்
அதுதான் போர் முடிந்து விட்டதே. மக்கள் என் பி பிக்கு யாழ் தேர்தல் மாவட்டத்தையே தந்து விட்டார்களே. எல்லாரும் ஒன்று பட்ட இலங்கையர் எனும் போது போர் அபாயம் எங்கே இருந்து வருகிறது? சீனா, இந்தியா, சார்க நாடுகள் எல்லாவற்றுடனும் நட்புறவுதானே? ஏன் மீட்பர் அனுரவின் அரசு இராணுவத்தை 75% ஆல் குறைக்க முடியாது. முடியாது? ஏன் என்றால் அடக்கி, இராணுவ பூட்சில் மிதித்து வைத்துள்ள தமிழரின் சுயநிர்ணய வேட்கை மீள கிளம்பி விடும்.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
இல்லை இதை இப்படி பாருங்கள்: 1. இந்த தாயை ஏன் அழைத்தனர்? 3 மாவீரரின் தாய் என்பதால் 2. அப்போ கெளரவம் யாருக்கு? தாய்கா அல்லது அந்த 3 மாவீரருக்கா? 3 மாவீரருக்கானது, அவர்கள் சார்பில் அந்த கெளரவத்தை தாய் பெறுகிறார். 3. அப்போ அவரை தக்க முறையில் விளக்கம் கொடுக்காமல் திருப்பி அனுப்பினால், இன்னும் மன்னிப்பு கேட்காமல் தெனாவெட்டாக இருந்தால் யாரின் தியாகம் உதாசீனப்படுத்த படுகிறது? அந்த 3 மாவீரரின் தியாகம். 4. இது மாவீரர் தியாகத்தை எப்படி சுயநலமாக கிள்ளு கீரை போல் சிறி பாவிக்கிறார் என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்படவேண்டியது. 5. டி டே நினைவு நிகழ்வுகளில் பிரான்சில் இருந்து அரைநாளில் ரிசி சுனாக் திரும்பினார். ஒட்டு மொத்த நாடும் அவரை போட்டு தாக்கி விட்டார்கள். மன்னிப்பு கேட்டும், தேர்தலில் தோற்க இதுவும் ஒரு காரணம் ஆகியது. தமக்காக அதி உட்ச தியாகத்தை செய்தோரை இப்படித்தான் ஒரு நாடு/இனம் நடத்த வேண்டும். இதில் மன்னிப்பே கேட்காமல் இருக்கும் சிறியின் தெனாவெட்டை வைத்து - மாவீரர் தியாகத்தை இவர் எப்படி நோக்குகிறார் என்பது புரிகிறது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உண்மையிலே உங்கள் நிலைப்பாட்டை புரிய முடியவில்லை. லைட்டரில் இருந்து வந்தாலும், நெருப்பு பெட்டியில் இருந்து வந்தாலும் - நெருப்பு, நெருப்புத்தான். இதை நெருப்பு (இனவாதம்) என நீங்களும் ஏற்கிறீர்கள். ஆனால் நெருப்பு சுடும் என எழுதினால் ஆரூடம் என்கிறீர்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஜேவிபி…. இலங்கையின் பெளத்த-சிங்கள மனோநிலை பற்றி புரிந்த எவருக்கும் இது மிக இலகுவாக புரியும். இது ஆரூடம் இல்லை. பட்டறிவு. நெருப்பு சுடும் என கூறுவது ஆரூடம் அல்ல தமிழர்கள் எண்டாலே பயங்கரவாதிகள் என்ற போக்கை அவர்கள்தான் கைவிடவேண்டும். இதற்காக நீங்கள் என்ன குமாரதெவியோ என பெயரையா மாற்ற முடியும். அடையாளத்தை துறக்கும் படி வற்புறுத்துவதை விட மிக கொடிய அடக்குமுறை எதுவுமில்லை.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
And likewise Goshan is also not opposing Chandrasekaran’s appointment on the basis that he is an outsider. The opposition stems from the fact that he is not someone who is directly elected by the people of the said district. Therefore he is being imposed upon the people of Jaffna by the Sinhala-Buddhist hegemony, in other words - the oppressors, against whom Mr Pirabakaran fought valiantly. எனக்கும் பிரதேசவாதம் எது, உள்ளூரியல், பிரதிநிதிதுவ ஜனநாயகம், அதிகார பரவலாக்கம், சுய நிர்ணயம் என்பன எவை, இவற்றுக்கிடையான வேறுபாடுகள் பற்றி சீரிய தெளிவு உள்ளது. இணைந்திருங்கள். பதில் எழுதும் போது நானும் எழுதுகிறேன். அவர்களே அவசரகால நிலையை தந்தார்கள். அவர்கள் அவசரகால நிலையை மாற்றவே மாட்டார்கள். முடிவு? மக்களுக்கு இது எப்போதும் வேண்டாம்?
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அருமையான கேள்வி. ஜே வி பி மனதார இந்த சட்டம் மோசமானது என காணில், 2/3 கூட தேவையில்லை, சாதாரண பெரும்பான்மையோடு ஒரு நாளில் சட்டத்தை ரத்து செய்யலாம். போர் முடிந்து 15 ஆண்டுகள் கழித்தும் இதை வைத்திருப்பது தமிழர்களின் சுயநிர்ணய குரல்களை மேலே செய்தது போல் நசுக்கவே. The most radical revolutionary will become a reactionary, the day after the revolution. மிகவும் முற்போக்கான புரட்சிவாதி, புரட்சியின் மறுநாள் பிற்போக்குவாதி ஆகிவிடுவான் என்கிறார் ஹனா அரெண்ட். ஜேவிபி புரட்சிக்கு முன்பே பக்கா இனவாதிகள், இவர்களாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாவது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
பதில் சொல்ல முடியாத கேள்விகள். மக்கள் விடுதலை முண்ணனி (JVP), மக்கள் போராட்ட முண்ணனி வேறு வேறு அமைபுகள் என நினக்கிறேன். பொது எதிரியான கோட்ட வை எதிர்க்கும் போது ஒன்றாக வேலை செய்தனர்.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
அவர் கட்சியில் என்னவாகவும் இருக்கட்டும். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு என்பது கட்சி குழு அல்ல. அதில் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் வருவதுதான் ஜனநாயகம். You clearly don’t know the difference between xenophobia and a demand for self determination. Demanding that your elected representatives should be the ones deciding your fate is not xenophobia, it is the very essence of representative democracy. The clue is the the word “representative”. By your incorrect definition - Ghandi, Mandela and Pirabakaran will all be xenophobes which they clearly are not.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
காலத்துக்கு தேவையான கட்டுரை ரஞ்சித். இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் உங்கள் கேள்விக்கான பதில். இல்லை. அதை விட பன்மடங்கு கூடிய கண்ணை குருடாக்கி கொண்டு நம்பும் நம்பிக்கையை அனுர மீது வைக்கிறார்கள். குறிப்பாக புலம்பெயர் தமிழர்.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
முஸ்லிம்கள், வடக்கு-கிழக்கு மாகாண தமிழர் மீது மிக மோசமான இன ஒதுக்கலை கடைப்பிடிக்கிறது இந்த அரசு. இதை கேள்வி கேட்டால்- கேட்க்கும் வாய்களை பிரதேசவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என வாயை மூடப்பண்ணும் முயற்சி. ————- எங்கள் மாவீரகள் - இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்… போர்களம் புகுந்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்… இந்த நெருப்பை ஈரசாக்குகள் அணைக்க முடியாது.👇
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
அந்த மண்ணில் பிறந்தவர் என நான் எங்கும் எழுதவில்லை. அந்த மாவட்ட மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர். சந்திரசேகரன் இந்த தேர்தலிலும் யாழில் நின்று வென்றிருந்தால் - அப்போ இந்த கேள்வியே எழுந்திராது. இதை பிரதேசவாதம் என்று நீங்கள் கூறினால், நம்மை நாமே நிர்வகிக்க வேண்டும் என இந்த உலகில் ஒலிக்கும் அத்தனை குரல்களும் பிரதேசவாதம் என்றாகிவிடும்.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
உங்களுக்கு எப்படியோ தெரியாது… கூப்பிட்டு விட்டு முகத்திலடிப்பது போல் திருப்பி அனுப்பினால் அநேக தமிழர்கள் அதை ஒரு அவமானமாகவே கருதுவர். மூன்று பிள்ளைகளை கொடுத்தவர் நாம் அட்வைஸ் எடுக்கும் அளவுக்கு இருக்கமாட்டார்தானே? ஆனால் என்ன செய்வது, பிள்ளைகளை போலவே கொஞ்சம் ரோசம் உள்ளவர் இந்த அம்மா என நினைக்கிறேன். ஏற்பாட்டில் பிழை என்பதல்ல தவறு…. அழைப்பை வழங்கியவர்தான்…தான் அந்த அழைப்புக்கு பொறுப்பு. கூப்பிட முதல் சரிபார்த்திருக்க வேணும், அல்லது இந்த அம்மா வரும் போது சிறி வாசலில் நின்று வரவேற்று , நடந்ததை விளக்கி அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவருக்கு வேறு ஒரு கெளரவத்தை கொடுத்திருக்கலாம். எதையும் செய்யாமல் இவர் கூப்பிடுவாராம்…போனால் யாரோ திருப்பி அனுப்புவார்களாம்…இவர் எம் பி தோரணையில் அதை கண்டுகொள்ளாமல் ராஜபார்ட்டில் இருபாராம்…. இந்த டாம்பீகத்தையிம், சொறி சேட்டைகளையும் யாரும் வேலை தேடி வருவோர் பொறுத்து கொள்ளலாம்…. எல்லாரும் அப்படி இல்லை.