-
Posts
15625 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
அப்படி ஒன்றும் நான் சொல்ல போவதில்லை. இவர் லூக்சென்கோ - பெலரூஸ் அதிபர். இப்படி சொன்னாலே போதும் இவரின் நம்பகத்தன்மையை வாச்கர்கள் கணித்து கொள்வார்கள்🤣. # லூக்கா + புட்டின் # நண்பேண்டா
-
எதிர்காலத்தில் அப்படி அமெரிக்கா தடையை நீக்குவதை (நடந்தால்), இப்போ நாம் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது தடுக்கும். எனவே உங்கள் தற்போதைய நிலைப்பாடு ஈழதமிழர் நலனுக்கு விரோதமானது.
-
ரைட்டு , பழைய சந்தா கட்டும் சுட்டிய காட்டும் டெக்குனிக்கு. சந்தா இல்லாமல் போக முடியவில்லை. ஆகவே என்னால் உறுதி செய்ய முடியவில்லை. ஆகவே மேர்க்கல் சொன்னது ஜேர்மனில். அவர் சொன்ன வீடியோ உங்களிடம் இல்லை. அதன் ஜேர்மன் எழுத்து பிரதி என நீங்கள் தந்த சுட்டி சந்தா கட்டி பார்க்க வேண்டியது. பார்க்க முடியவில்லை. நீங்கள் பிரதி என தந்தது ஒரு அனானி தளம். அதையும் ஆங்கிலம் ஏறுக்கு மாறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உஙக்ளுகே மேர்க்கல் எப்போ பேட்டி கொடுத்தார் என தெரியவில்லை. ஓய்வு பெற்ற பின் எத்தனை பேட்டி கொடுத்தார் எனவும் தெரியவில்லை. முடிவாக - மேர்க்கல் சொன்னது இன்ன விடயம் என அறுதியாக கூற முடியாது. அவரின் பேட்டியை மேற்கு ஊடககங்களும், ரஸ்ய சார்பு ஊடகங்களும் தம் சார்ப்பில் திரித்து வெளியிட்டுள்ளன. ஆகவே, மேர்க்கல் சொன்னதை தவிர்த்து விட்டு பார்த்தால் - நான் சொன்னதுடன் நீங்கள் உடன்படுகிறீர்கள் 👇. இனிய இராவாகட்டும்
-
ஜேர்மன் மொழி தெரியாத தமிழர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு.: நன்றி பசங்களா, இப்போ எனக்கு போர் விமானங்களும், நிறைய ஏவுகணைகளும் தேவை, அப்போதுதான் நாம் போரை விரைவாக முடிக்கலாம். கெதிப்பண்ணுங்கோ.
-
மேர்க்கலின் பேட்டி எந்த மாதம் முதன் முதலில் வெளி வந்தது என நினைக்கிறீகள்? மேர்க்கல் பதவி விலகிய பின் ஒரு பேட்டி யா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டியா கொடுதவா? அதான் கேட்கிறேன் அமரிக்கா மனம் வைத்து எமக்கு உதவுவதற்க்கான வாய்ப்பை அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் நாம் எதிர்ப்பது கூட்டுமா? குறைக்குமா? இதற்கு கூட்டும், குறைக்கும் அல்லது எனக்கு தெரியாது என பதில் கூறினால் போதும்.
-
என்ன கடஞ்சா…மேற்கு ஊடகங்களை நம்பவே முடியாது. புட்டின் “போர்” என உச்சரித்த வீடியோவை கூட அவர் “போர் என்ற அர்த்தத்தில் உச்சரிக்கவில்லை” என வாதாடிய நீங்கள்…. இப்போ ஏதோ ஒரு பிலிபைன்ஸ் வெப்சட்டில் வந்ததை காட்டி இதுதான் மேர்கலின் பேட்டி என்கிறீர்கள்? இந்த தளத்தின் நம்பகம் என்ன? யாரோ ஒரு ரஸ்யன் ஏஜெண்ட் தானே எழுதிய கேள்வி பதிலாக இது ஏன் இருக்க கூடாது?
-
அவர் யாழ்களத்தில் வந்து “எமது விடுதலைக்கான சாவி அமெரிக்காவின் கையில் இருக்கு” எண்டு சொல்லேலை ப்ரோ. அப்படி சொன்னவர் நீங்கள். ஆகவேதான் உங்களிடம் கேட்கிறேன். கேள்வி மீண்டும் ஒரு தரம்.
-
அதுக்கு பிறகு வருவம். எமக்கான விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் என்று போன பக்கத்தில் சொன்னீர்கள். அப்படி என்றால் - நாம் அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் எதிர்ப்பது, அமெரிக்கா அந்த சாவியை எமக்காக பாவிக்க கூடிய வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?
-
இது மேற்கு ஊடகம் ப்ரோ. @Kadancha விடம் கேட்டு பாருங்கோ…இவை சொல்லிறது பச்சை பொய் எண்டுவார்.
-
என்னப்பா என்னை கேக்கிறியள்? நீங்கள்தானே சொன்னனியள் எமது விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் எண்டு? அப்ப சாவி அமெரிக்காவில் கையில் இல்லையா?
-
அதாவது எமக்கு விடிவு தரக்கூடிய சாவியை கையில் வைத்திருக்கும் அமெரிக்காவின் கண்ணை நோண்டுவோம் …. இப்ப எனக்கு புல்லரிக்குது.
-
கேள்வி மேற்கின் ஊடக திறன் பற்றி அல்ல ( சிலர் பேட்டியை வெளியிடகூடாது என்ற நிபந்தனையில் பேட்டி கொடுப்பது உண்டு - இப்படி பல காரணங்கள் இருக்கலாம்). ஆனால் கேள்வி அதுவல்லல. மேர்க்கலில் பேட்டியை பார்க்காமல் - அவர் என்ன சொன்னார் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? ஆகவே நீங்கள் புட்டின் வீடியோவுக்கு சொன்ன அதே நியாயத்தின் படி - நீங்கள் மேர்கல் சொன்னதாக சொன்னது நம்ப முடியாதது.
-
இந்த ரஸ்யா “முட்டு சந்து” 1. இந்தியா இலங்கையில் செய்வது சரி 2. இந்தியா சொல்லி ரஸ்யா இலங்கையில் செய்வது சரி 3. முந்தநாள் - ஆப்கனிஸ்தான், சவுதி களவெடுத்தால் கல்லால் அடிப்பது சரி வரைக்கும் வந்து விட்டது 🤣. நீங்கள் சொன்ன 4ம் படி நிலை விரைவில் எய்தப்படும் என்றே நினைக்கிறேன்.
-
ரிப்பளிக் ஒவ் ரம்புட்டான் 🤣 R ல அதை தவிர வேறு எந்த நாட்டு பெயரையும் சொல்வோம்🤣
-
அசெளகரியாமாய் இருந்ததாலும், மேலே நடப்பது போல் “குய்யோ முறையோ” என கூப்பாடு போடு டிராமா போடுவார்கள் என்பதாலும் நானும் விலக்கியே இருந்தேன். ஆனால் ரஞ்சித், ஜி துணிவாக போட்டுடைத்து விட்டார்கள்.
-
சரிதான். நீங்கள் வாசிக்காவிட்டால் - அது நடக்கவில்லை என்றுதான் அர்த்தம். இப்பவும் ஒண்டும் காலம் பிந்தவில்லை தேடி வாசியுங்கோ.
-
எல்லா நாடும் எனக்கு நினைவுக்கு வருது ப்ரோ. ர…ர என்று தொடங்கும் ஒரு நாடு மட்டும் நியாபகம் வருகுது இல்ல ப்ரோ… ரொடீசியா? ருவாண்டா? ரொமேனியா? ர…ரா….ர…. ரமையா…எட்டுகுள்ள வாழ்க்கை இருக்கு ராமையா 🤣
-
என்ன கடஞ்ச்சா இது….🤣 புட்லர் யுத்தம் என்று சொன்னார் ஆனால் யுத்தம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும், ஒரிஜினல் வீடியோவை பார்த்து, நீங்களே முயன்று மொழி பெயர்த்து (ரஸ்ய மொழி அறியாமலே) தான் உண்மையை அறிய முடியும் என்றும் மூன்று பக்கம் விவாதித்த நீங்களா மேர்க்கல் பேட்டியை பார்ககூட செய்யாமல்…ஒரு ரெட்டிட் பதிவின் அடிப்படையில் மேர்க்கல் என்ன சொன்னார் என்ற முடிவுக்கு வந்தீர்கள்🤣 மேர்க்கல் பேட்டியே எங்கும் இல்லை என்கிறது ரெட் இட் - அப்போ எப்படி அவர் இப்படி சொன்னார் என்று எல்லாரும் சொல்கிறீர்கள்? உடான்ஸ் தானே? மேர்க்கல் என்ன சொன்னார் என்பதை பற்றி மேற்கு, ரஸ்ய சார்பு ஊடகங்கள் தத்தம் பார்வை படி எழுதுகிறன. ஆகவே இதை வைத்து, குறிப்பாக நீங்கள் அந்த பேட்டியையே பாங்காக போது, நான் சொன்னது பிழை என்றாகாது.
-
என்ன செய்வது ப்ரோ. என்னால முடிஞ்சது அவ்வளவுதான்.
-
இந்த மேர்க்கல் பேட்டி (ஸ்பிகிள்) யை நீங்கள் முழுவதுமாக, நம்பகமான மொழி பெயர்ப்பும் பார்த்தீர்களா? ஆம் என்றால் இணைப்பை தர முடியுமா?
-
நீங்க எழுதுங்கோ ப்ரோ. நான் வாசிக்க ரெடி என்னால மிடில ப்ரோ
-
ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ..
-
1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார். 2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், சண்டை உடுப்போடு ஒரு சோடி அலங்கார உடுப்பையும் எடுத்து வந்தனர். சக ஸ்லாவிய மக்கள் தம்மை பூச்செண்டுடன் வரவேற்பார்கள். செலன்ஸ்கி ஒரு முன்னாள் நடிகர் ஓட்டம் பிடிப்பார். தாம் கியவ் ஏர்போர்ட்டில் கமாண்டோகளை இறக்கினதும் தலைநகரும், அரசியல் தலைமைபீடமும் தம் கையில் வந்து விடும். கியவில் வெற்றி அணிவகுப்பு. அதன் பின் 60% உக்ரேனில் இருந்து அடுத்த கட்டமாக 40% உக்ரேனை பிடிக்கலாம் இதுவே புட்லரின் திட்டம். ஆகவே - இதை ஒரு 3 நாளில் ஊதி தள்ளும் சப்பை மேட்டர் - விசேட இராணுவ நடவடிக்கை என்றே புட்லர் ஆரம்பித்தார். எனவே அதை மிக குறைந்த அளவு (100000) படையோடு, டீசல் மட்டுமட்டாக உள்ள டாங்கிகளை வைத்து 🤣 முடிக்ககலாம் என நினைத்தே புட்லர் இறங்கினார். 3. கிரிமியா போல் மேற்கும் சும்மா ஒப்புக்கு சத்தம் போட்டு விட்டு, சில தடைகளை போட்டு விட்டு அடங்கி விடும். 4. ஜேர்மனியின் முக்கிய உறுப்பு எம் கையில் (எரிவாயு- அதுவும் வேண்டும் என்றே குறைந்த கையிருப்பில் ரஸ்ய கம்பெனி விட்டு சென்றது) —ஆகவே ஈயூ/நேட்டோ ஒரு அளவுக்கு மேல் இறங்காது என புட்லர் தவறாக கணித்தார். 5. ஆகவேதான் குறைந்தளவு வலுவுடன் இறங்கி மூக்குடைபட்டார். ஆனால் நோக்கம் ஒட்டுமொத்த உக்ரேனை பிடிப்பதே. அல்லது மிகலோவ் வழியாக ஒடிசா, பெலரூசில் இருந்து கியவ், கார்கிவ் என டொன்பாசில் அடங்காத பகுதிகள் நோக்கி படை நகர்ந்திருக்க தேவையில்லை. அடி பலமாக விழ, பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பதாக, தனது நடவடிக்கையை டினிப்ரோ நதிக்கு தெற்கே மட்டுபடுத்தி கொண்டார். 6. ரஸ்யா உக்ரேனில் இறங்காமல் தன் சார்பு அரசை நிறுவ பலதடவை முயன்றது. ஆனால் முடியவில்லை. இனி அது சரிவராது என தெரிந்து தான் ஆமியை இறக்கியது. பிகு. உள்ளூர் மக்கள் தம்மை காதலிப்பதான தவறான நம்பிக்கை. எதிரி படைகள் சாறம் கட்டிய பொடியள் என குறை மதிப்பீடு. அவர்களின் ஓர்மத்தை கணக்கில் எடுக்காமை. அதீத தன்னம்பிக்கையில் குறைந்த பலத்தோடு இறங்கியமை. தலைமையை பிடித்து அல்லது முடித்து விட்டால், சிலநாளில் விடயம் பாக்கெட்டுக்குள். இப்போ ரஸ்யா விட்ட இதே பிழைகளைத்தான் 1987 இல் ஆக்டோபர் யாழ் பல்கலையில் தன் படைகளை இறக்கிய இந்தியாவும் விட்டது. இருவருக்கும் மூக்கு உடைந்ததுதான் மிச்சம்.
-
நிச்சயமாக. உங்கள் அணுகுமுறை போல் எனது இல்லை. நான் தரவுகளை தேடி அதன் அடிப்படையில்தான் முடிவுக்கு வருவேன். அனுமானத்தை - அனுமானம் என்றே சொல்லுவேன். மேலே நான் ரஸ்யாவின் போரிடும் நோக்கம் என. சொன்னது நிச்சயம் என் அனுமானம்தான். ஆனால் தரவுகளின் போக்கிலான அனுமானம் (educated guess) . ஆனால் அதை ரஸ்யாவின் சொல்லப்பட்ட காரணங்கள் (stated war aims) எவ்வளவு பொய்யானவை என நிறுவியபின்னே சொல்கிறேன். இந்த நிறுவல் அனுமானம் இல்லை. ஆகவே எனது நிறுவலுக்கும், அனுமானத்துக்கும் இடையில் ஒரு லொஜிக்கல் சங்கிலி இருக்கிறது. ஆனால் உங்களை போல் முடிவை எடுத்து விட்டு, யாரோ ஒரு ஒற்றை செனேட்டர், வேறு அர்த்தத்தில் when Russia breaks என சொன்னதை வைத்து, ரஸ்யாவை உடைப்பதே அமெரிக்காவின் கொள்கை என நான் வாதாடுவதில்லை.
-
இல்லை நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு நகைக்கிறீர்கள். இதுவரைக்கும் ரஸ்யா தனது எரிபொருள் வளத்கை கொண்டு ஈயூவை கட்டுப்படுத்த கூடியதாக இருந்தது. ஈயூ எரி பொருளுக்கு ரஸ்யாவில் தங்கி இருக்கும் வரை, ஈயூ ஓரளவுக்கு மேல் ரஸ்யாவை புறம்தள்ளி நடக்க முடியாது. ஆனால் காபன் இல்லா எரிபொருளுக்கு ஈயூ மாறும் போது ரஸ்யாவின் இந்த பிடி தளரும். இதற்கு மாற்றீடாக தனது இராணுவ வலிமை மூலம், ஈயூவுக்கும்/நேட்டோவுக்கும் தனக்கும் இடையே, தனக்கு சார்பான நாடுகளை கொண்ட ஒரு buffer zone ஐ உருவாக்குவது. அதன் மூலம் ஈயு ஒரு அளவுக்கு மேல் தம்மை மீறி நடந்தால் தலையிடி கொடுப்பது. இதற்கு வளங்களை திருட தேவையில்லை. நேட்டோ/ஈயூ நாடுகளுடன் போரிடவும் தேவையில்லை. உதாரணமாக weaponizing migrants. அதாவது துருக்கி ஒருமுறை செய்தது போல அகதிகளை கட்டுப்படுத்தாமல் ஈயுவுக்குள் வர விடுவது. இவ்வாறு பல வழிகளில் எரிபொருள் காலம் முடிந்தபின்னும் ஈயுவை தன்னை உதாசீனம் செய்யாமல் இருக்கும் படி செய்யும் நோக்கமே ரஸ்யாவின் நீண்ட கால கொள்கை. சுருங்க சொல்லின், ஈயூவை பிடியில் வைத்திருக்க, ஈயூ, நேட்டோ மீது நேரடியாக அடிக்க முடியாது, ஆனால் அவர்களுடன் எல்லையை பகிரும், நாடுகளை பெலரூஸ் போல தன்வசமாக்கி ஆமாம் சாமி போட வைத்து, அதன் மூலம் - ரஸ்யா பற்றிய பயத்தை ஈயூவில் உருவாக்கி தன் ஆளுமையை தேக்கவே ரஸ்யா முனைகிறது. உக்ரேனை முழுவதும் பிடித்து அங்கே ஒரு ரஸ்ய சார்பு அரசை நிறுவிய பின், உக்ரேனை போலந்துடன் முறுகலுக்கு கொண்டு போகலாம். பெலரூசை லுத்துவேனியா, லத்வியா வோடு முறுக வைக்கலாம். இந்த மோதலில் விலக்கு பிடிக்கும் தரப்பாக தன்னை முன் தள்ளலாம். இப்படி ஒரு நிலையில், ஈயூ ரஸ்யாவை புறம் தள்ளி நடக்க முடியாது. ஒரு படி மேலே போய் பின்லாந்து, சுவீடனில் நாஜிகள் என கூப்பாடு போட்டு, அங்கே படை எடுக்கலாம்…. இப்படியாக நேட்டோ அல்லாத நாடுகளிடம் சண்டிதனம் விட்டு, அதன் மூலம் - எரிவாயு தேவை முடிந்த பின்னும் ஐரோப்பாவில் தனக்குரிய இடத்தை தக்க வைக்கலாம். சர்வதேச அரசியலில் influence creates opportunities, opportunities create wealth. அதாவது ஆளுமை, வாய்ப்புக்களை உருவாக்கும். வாய்ப்பு நாட்டை செல்வம் கொழிக்க வைக்கும். பாய்ஸ் படத்தில் information is wealth என செந்தில் சொல்லுவதை போல, உலக அரசியலில் influence is wealth. எரிவாயு மூலம் கிடைத்த influence ஐ, அது முடிந்த பின்னும் தக்க வைக்கும் ரஸ்யாவின் முயற்சியே இந்த போர்.