Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15626
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. டொன்பாசில் ரஸ்யவும் உக்ரேனும் படைகளை விலக்கி கொண்டு, ஒரு ஐநா படை மேற்பார்வையில் இடம்பெயர்ந்தோர் திரும்பி வந்து - அதன் பின் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். உண்மையிலேயெ கிழக்கு உக்ரேனிய ரஸ்ய இன மக்களின் நலனில் ரஸ்யா அக்கறை கொண்டிருக்குமானல் இதை கோர வேண்டும். பிகு டொன்பாசில் இருக்கும் ரஸ்யர்களை, வடகிழக்கில் இருக்கும் தமிழரோடு ஒப்பிடுவதை விட, பதவியா (பதவிக்குளம்), கந்தளே (கந்தளாய்), வெலி ஓயா (மணலாறு) இல் இருக்கும் சிங்கள குடியேறிகளுடன் ஒப்பிடுவதே பொருத்தம். என்ன சிங்கள குடியேறிகள் 1948 இன் பின் வந்தவர்கள். ரஸ்ய குடியேறிகள் சில நூற்றாண்டுகளக வந்தவர்கள். ஆனால் இப்போ இது அவர்கள் நிலம் என்பதை நான் ஏற்கிறேன். ஆகவேதான் - பொது வாக்கெடுப்பு தேவை. அதைதான் மேலே வசிக்கு நானே சொல்லி உள்ளேன்.
  2. இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது. 👆🏼 இந்த கூற்றை ஏற்கிறீர்களா?
  3. சர்வதேச உறவுகள் ரொமான்ஸ் சமாச்சாரம் இல்லை. அங்கே உணர்வுகளுக்கு வேலை இல்லை. நட்பு, நம்பிக்கை எல்லாம் சுய நலனினின் பிந்தான். “அரசியல் என்பது ரத்தமற்ற போர், போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்” என்றார் மா ஓ இதில் அரசியல் = இராஜதந்திரம் எனவும் கொள்ளலாம். மக்கெவேலியும், சாணாக்கியரும் சொல்லி சென்ற விடயங்கள்தான்.
  4. அது எந்த வகை புரட்சி என்பதை பொறுத்து. அமெரிக்க-முதலாளிதுவ நலனுக்கு எதிரானது - நிச்சயம் நசுக்க அமெரிக்கா உதவும் (தென்னமெரிக்கா நாடுகள் பல). அமெரிக்க-முதலாளிதுவ நலனுக்கு ஆதரவான புரட்சி எனில் தூண்டி விடும் (முஜகிதீன், அரபு வசந்தம், ஈரான்). தனது நலனுக்கு முழு நன்மை என்றால் வாங்கி தரும் (கொசோவோ). நீங்கள் இந்த பதிவில் சொன்னது எல்லாமே அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல. ரஸ்யா, சீனா, இந்தியா எல்லாருக்கும் பொருந்தும். சவுத் ஒசேசியாவில் இன ஒடுக்குமுறை என கூவும் ரஸ்யா, ஈழத்தமிழர் விடயத்தில் மெளனம், இலங்கைக்கு ஆதரவு. கஸ்மீர் விடயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு. அதே போல்தான் கஸ்ரோவும், கடாபியும் மகிந்தவின் கையை பலப்படுத்தியது. இதுதான் உலக ஒழுங்கு. பல நூற்றாண்டு/ ஆயிரமாண்டுகளாக. விடுதலை = தனி நாடு என்றால் வாய்பில்லை. ஆனால் அமரிக்காவின் நலனை தமிழர் நலனுடன் பிணைத்து (முடியுமானளவு) ஒரு கெளரவமான தீர்வு என்றால், மிக கஸ்டம் ஆனால் சாத்தியம்.
  5. ஐயோ நான் கற்பம் ஆகி விட்டேன் என நினைக்கிறேன். எனக்கு தலை பயங்கரமாய் சுத்துது🤣 ——- சரி - புட்டின் “போர், யுத்தம்” என்ற சொல்லை பாவித்தார் என்பதை நீங்களும் ஒத்து கொள்கிறீர்கள்? இதை மட்டும்தான் நான் கூறுகிறேன். இந்த சொல்லை அவர் பாவித்த காரணம் என்ன, DW கதையாடல் செய்கிறதா, இல்லையா என்பதல்லாம் அவரவரின் வியாக்கியானம், தனிப்பட்ட கருத்து. எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும் ஆகவே ரஸ்ய மொழியில் இது சொல்லபட்ட தொனி, இலங்கண கட்டின் போக்கு, புலம் (context) பற்றி ஊகிக்க நான் விரும்பவில்லை. உங்கள் ரஸ்ய புலமையும் என்னை போல அதை விட சற்று மேம்பட்டு இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே உங்கள் ஊகங்களிலும் நம்பிக்கை இல்லை. அவ்வளவுதான்.
  6. ரஸ்யா என்ன மாரியாம்? 🤣 Map ஆகட்டும், எதுவாகட்டும் கனடாவுக்கு பின்னால் இருப்பது அமெரிக்காதானே🤣 அமெரிக்காவின் கோட்டில் தொங்குவது பிரிட்டன், காற்சட்சையில் தொங்குவது பிரான்ஸ், ஜேர்மனி, சப்பாத்தில் தொங்குவது கனடா🤣
  7. இளகிய மனம் உள்ளோர் பார்ப்பதை தவிர்க்கவும். அண்மையில் Soledar நகர் ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது என காட்டும் நோக்குடன் அங்கே சென்று நேரலை (டிக்டொக் போல) செய்துகொண்டிருந்த ஒரு ரசிய சமூகவலை-பிரபலம் (social media influencer) - நேரலையில் இருக்கும் போதே காலில் குண்டடி பட்ட வீடியோ இது என்கிறார்கள். முழங்காலில் அடிபட்டதாயும், சினைப்பராக இருக்கலாம் எனவும் பேசி கொள்கிறார்கள். கவனிக்க: இது முழுக்க முழுக்க உறுதிபடுத்தப்படாத, உக்ரேனிய ஆதரவு கணக்குகளின் கூற்று.
  8. 👆🏼👇 ஒரே திரியில் ஏறுக்குமாறாக எழுதுகிறீர்கள். புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தார் என நான் நம்ப 7 காரணங்களை மேலே சொல்லி உள்ளேன். இல்லை இராணுவ மோதல் என்ற சொல்லை பாவித்தார் என நீங்கள் சொல்கிறீர்கள். இதற்கு நீங்கள் தரும் ஒரே விளக்கம் - ரஸ்ய மொழி அறியாத நீங்கள் அதை விளங்க முயற்சி செய்தது மட்டுமே. ஆகவே மன்னிகவும் - நான் ஓரளவு ஆதார பலமுள்ள - புட்டின் போர் என்ற வார்த்தையை பாவித்தார் என்ற கருதுகோளையே நம்புகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தாரா இல்லையா என்பதே கேள்வி. முன்பே சொல்லி விட்டேன் அதை அவர் வாய்தவறி கூட சொல்லி இருக்கலாம். ஆனால் பாவித்தார் என நான் நம்புகிறேன்.
  9. இதில் நின்று DW க்கு எப்படி நியூசை வெளியிடுவது என்பதில் மினகெட எனக்கு நேரமோ விருப்பமோ இல்லை. ஆனால் நீங்கள் தந்த யூடியூப் வீடியோவும், DW மொழி பெயர்த விதத்திலேயே மொழி பெயர்ர்துள்ளதால் - அதுவே சரியான மொழி பெயர்ப்பாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்.
  10. இதை மிக இலகுவாக கையாண்டு இருக்கலாம். அணி ஒன்று - ததேகூ - இதில் எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடு வழமை போலவே. அணி இரெண்டு - சுயேட்ச்சை குழு - இதிலும் ததேகூ இல் உள்ள எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடும் அதே முறையில். இப்போ 40, 60 இரெண்டு முறையிலும் கூட்டமைப்பு வேட்பாளர் (அணி1, 2) வெல்ல வாய்ப்பு உள்ளதில் அதிகமகாக இருக்கும். இதை மக்களுக்கு எடுத்து சொன்னால் அவர்களும் புரிந்து கொண்டு வாக்களித்திருப்பர். ததேகூ வை உடைக்க வேண்டிய தேவையும் வந்திராது. இதை சுமந்திரனோ, செல்வமோ, சித்தரோ யோசிக்காமல் விட்டார்களா? அல்லது இதை சாக்காக வைத்து சுமந்திரன் தமிழரசின் பலத்தையும், ஏனையோர் தத்தம் பலத்தையும் பரிட்சிக்க முயல்கிறார்களா? சுய நலனும், கட்சி நலனும் இன நலனை மேவி நிற்கிறது.
  11. ஈழத்து சு சாமி அருமையான ஒப்பீடு. ஆனால் சு சாமி காரிய விசரன். நம்ம சிவாஜி அண்ணாகிட்ட காரியம் மிஸ்ஸிங்🤣 மணி மாரி பிரபல்யமானவரை போட்டால் - எங்கே தலைவரை மிஞ்சி, 3 தலைமுறையாய் குடும்ப சொத்தாக கட்டி காக்கும் சைக்கிளை உருட்டி கொண்டு போய்விடுவார்களோ என அம்பலத்தார் பயப்படுகிறார். ஆகவே யாரோ ஒரு அனானியை நிறுத்தியுள்ளார்கள்.
  12. முடியும் என்றால் குருஷேத்திராவிலும் கூட போட்டியிடுவார்🤣 வருங்கால ….வருங்கால…என திருப்பி திருப்பி சொன்னால்….. காலை வாரும்….என வருகிறது 🤣 காலை வாரும் முதல்வர் ஜிவாசி வாழ்க!
  13. எந்த குதிரையும் சண்டி குதிரை இல்லை எனும் போது, எந்த குதிரையும் வெல்ல வாய்புண்டுதானே?
  14. சிலர் ஸ்டாலின் வென்றதாக சொல்வார்கள். அது தீம்கா காரர் கிளப்பி விட்ட புரளி. தமிழை தெலுங்கில் எழுதி பிழையாக வாசிக்கும் ஸ்டாலினாவது கிட்லரை வெல்வதாவது.
  15. மற்றும்படி எனக்கு இந்த உக்ரேன் போர் பற்றி அதிக விளக்கம் இல்லை. இராஜேந்திர சோழன் என நினைக்கிறேன்.
  16. இன்னும் எவ்வளவுக்கு…எவ்வளவு நாங்கள் அமெரிக்க எதிர் நிலையை பொது வெளியில் எடுக்கிறோமோ… அமெரிக்காவை அர்ச்சனை செய்யுறோமோ… அமெரிக்கா/தமிழர் விரோதி என நிறுவுகிறோமோ…. அவ்வளவுக்கு….அவ்வளவு… விரைவாக அமெரிக்கா சாவியை பாவிக்கும்…. உலக மகா ராஜதந்திரம்டாப்பா இது 🤣
  17. தல… நீங்க ஜனாதிபதி வேட்பாளர்…முதலமைச்சர், மாநகர முதல்வர், வாசிகசாலை வாசகர் வட்டத்தலைவர் எதையும் விட மாட்டீங்க போலயே🤣
  18. இது உள்ளாட்சி தேர்தல்தானே. பெரிய அலுப்பு இராது. தேர்தல் நேரம் போனால் நல்லா கூத்து பார்க்கலாம்.
  19. மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி (09/03/2023) உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கும் என தேர்தல்கள் திணைக்களம் சற்று முன் அறிவித்துள்ளது. https://www.newswire.lk/2023/01/21/sri-lanka-local-council-elections-on-march-9th/
  20. கூட்டாக ஈழதமிழ் தலைவர்கள் 75 வருடமாக தமது மக்களுக்கு செய்ததை விட, செளமியமூர்த்தி தொண்டமான் ஒரு தனிமனிதனாக தனது மக்களுக்கு செய்தது பல மடங்கு. மனோ கணேசன் கூட அப்படித்தான். செளமியமூர்தியின் மகன், பேரன் போல் அல்லாது பூட்டன் செளமியமூர்த்தி போல் செயல்வீரரக தெரிகிறார். பார்க்கலாம்.
  21. இதில் உடனடியாக ஆஸ்பத்திரி போய் விடயங்களை கவனித்ததாக ஜீவன் மீது ஒரு நல் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.
  22. யாழில் உங்களை தவிர யாரும் பார்த்திருப்பார்கள் என நம்புகிறீர்களா? நான் நீங்கள் அந்த திரியில் போட்ட கமென்டை பார்த்தபின், வீடியோவை பார்த்தேன். சிறி நேசனும், நிக்சனும் கூட இந்த தொழில்நுட்ப முறை/சுயேட்சையை இறக்குவதன் பின்னால் உள்ள காரணங்கள் நியாயமானதே என்பதை ஏற்கிறார்கள். அதை பங்காளிகளுக்கு அறிவித்த விதத்ததில்தான் சும்மின் தாந்தோன்றித்தனம் புலப்படுவதாக சொன்னார் நிக்சன். ஆனால் இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்கும் அளவில் யாழ்வாசிகள் இப்போ இல்லை. இதை எடுத்து சொல்லப்போனால் நம்மைத்தான் ரவிண்டு கட்டி அடிப்பார்கள்🤣. பிகு ஆனால் தமிழரசு எடுக்கும் இந்த அணுகுமுறை கொஞ்சம் high risk tactic என எனக்கு படுகிறது. இதன் தார்பரியம் பற்றி மக்களுக்கு யாரும் தெளிவூட்டாமல், பிரிந்து போனவர்கள் இதை ஒரு உடைவாக சித்தரித்து வாக்கு கேட்கும் போது, நேரடித்தேர்வு, பட்டியல் தேர்வு இரெண்டிலும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் மண்ணை கவ்வ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதை வாக்காளருக்கு தெளிவாக விளங்கபடுத்தி, கட்சி, சுயேட்சை குழு, வாக்காளர் யாவரும் ஒரே கூட்டில் செயல்பட்டால் இது கைமேல் பலன் தரும். அதைதான் முஸ்லிம்கள் செய்கிறார்கள். ஆனால் இங்கே அந்த ஒருங்கிணைப்பு இல்லை எனும் போது இது பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகவே வாய்ப்பு அதிகம்.
  23. எனது கருத்துகள். 1. ஒருவர் ஒரு மொழியில் பேசியதை முதலில் போட்டு விட்டு, அதன் மொழிபெயர்ப்பை இன்னொரு குரலில் அதை மேவி போடுவது - பொதுவான நடைமுறைதான். விபரண படங்களின் வாழ்நாள் ரசிகன் என்றவகையில் இது 1950 களில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை. இதில் ஒரு அதீத தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. 2. முன்பே நான் சொன்னது போல் பிபிசி, யாழ் என எல்லா ஊடகங்களுக்கும் ஒரு நோக்கு (Agenda) உண்டு. அதை ஒட்டியே அவர்கள் கதையாடல் (narrative) உம் இருக்கும். 3. ஆனால் இவர்களுக்கு ஒரு தொழில் மதிப்பும் உள்ளது (industry reputation). ஆகவே மிக பச்சையான பொய்களை - மாட்டி கொள்ள வாய்பிருக்கும் போது இவர்கள் சொல்ல மாட்டார்கள். 4. உதாரணமாக, கோஷானுக்கும், கடஞ்சா வுக்கும்தான் ரஸ்ய மொழி தெரியாது. ஆனால் ஆங்கிலமும், ரஸ்யனும் தெரிந்த கோடானு கோடிப்பேர் இருக்கிறார்கள். அந்த நிலையில் புட்டின் போர் என சொல்லாமல், இவர்கள் புட்டின் அப்படி சொன்னார் என பச்சை பொய்யை அவிழ்த்து விட்டால் மாட்டி கொள்வார்கள். 5. உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டினாலும். தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என்பது பழமொழி. ஏற்கனவே லின்சே க்ரேம் விடயத்தில் சொன்னதுதான். ஆகவே நீங்கள் கொடுக்கும் மொழிபெயர்ப்பை - என்னால் ஏற்க முடியாதுள்ளது. 6. நீங்கள் தந்துள்ள YouTube வீடியோவும் கூட 17ம் நிமிடத்தில் அந்த வார்த்தையை போர் என்றே மொழி பெயர்கிறது. 7. அடுத்து நான் சொன்ன நிகிட்டா யுரேவேவ் புட்டின் மீது “போர்” என சொன்னார் என புகார் கொடுத்த விடயம். 8. இப்படி பலதையும் சீர்தூக்கி பார்க்கும் போது, இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் (on the basis of currently available evidence) - புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தார் என்ற முடிவுக்கே என்னால் வர முடிகிறது. 9. ஆனால்…இது ஒரு தவறுதலாக வந்து விழுந்த வார்த்தையாக இருக்கலாம்…ஒரு பயிற்றப்பட்ட முன்னைநாள் உளவாளியாக புட்டின் வார்த்தை பிரயோகத்தில் மிக கவனமானவர். ஜோன்சன் போல உளறுவாயன் இல்லை. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும். 70 வயதில் இதை slip of the tongue ஆக புட்டின் சொல்லி இருக்கலாம் (அது Freudian Slip ஆக அமைந்தது முரண்நகை). 10. இது வெறும் slip of the tongue ஆ, அல்லது புட்டினின் நிலை மாற்றமா என்பதை இனி வரும் அவரின் நடவைக்கை, பேச்சை பார்த்து உறுதி செய்யலாம். குறிப்பாக எதிர்பார்க்கபடும் அவரின் பேச்சு - இதற்கான விடையை கொடுக்கலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.