Everything posted by goshan_che
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
2009 இல் இருந்தே சம்பந்தனை எதிர்ப்பது என்பது - உங்கள் முன்பே ஏற்று கைகொண்ட (preconceived) அரசியல் நிலைப்பாட்டின் படியே மட்டுமே. 2009 இன் பின்னர்தான் அவர்கள் பிழைகளை விட ஆரம்பித்தனர். அதுவரை 2009 மே இல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இருந்தனர் என்ற புலம்பெயர் புலி காசை ஆட்டையை போட்டவர்களின் குற்றசாட்டு மட்டுமே அவர்கள் மீது இருந்தது. ஆகவே அவர்கள் பிழை விட முன்னமே அவர்களை பிழை விடுவார்கள் என அனுமானித்து, எதிர்ப்பது, குறிப்பாக அவர்கள் மக்களின் வாக்குகளை எடுக்கும் போது எதிர்ப்பது, சுத்த முட்டாள்தனம். அவசரகுடுக்க்கைத்தனம். அல்லது புலிகளின் காசை ஆட்டையை போட்ட புலம்பெயர் கள்ளருக்கு கவர் எடுக்கும் முயற்சி. இதில் நீங்கள் எவ்வகை? உங்கள் பரந்த அரசியல் ஞானத்தையும், உங்கள் எதிர்வுகூறும் ஆற்றலையும், மக்கள் மனங்களை புரிந்து கொள்ளும் உங்கள் அளப்பரிய ஆற்றலையும், யாழ் தேர்தல் போட்டியில் புள்ளிபட்டியலில் நீங்கள் நிற்கும் இடம் ஐயம் திரிபற காட்டி நிற்கிறது என்பது என் தாழ்மையான கருத்து 🤣. பதில் போடுவதும், போடாடதும் உங்கள் இஸ்டம். பதில் போட்டால், பதில் வரும். நன்றி. வணக்கம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
என்ன செய்வது தமிழன்பன், உங்களை போல் முக்காலமும் உணர்ந்த ஞானிகள் யாழுக்கு அடிக்கடி வருவதில்லை. வந்து எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என அருள்வாக்குத்தருவதில்லை. ஆகவே நாங்கள் கத்து குட்டிகள், இங்கே இருக்கும் சக கத்து குட்டிகளுடன் நமக்கு அறிவுக்கு எட்டியதைத்தான் பேச முடிகிறது. நான் நினைக்கிறேன் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில், சொல்லவருவதை ஒழுங்காக சொல்லி முடிப்பதில் குறைபாடு இருக்கும் என. ஒப்பீடு என்றால் அதை ஒப்பீடு என சொல்லவேண்டும்.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
சாச்சா…🤣
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம். தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்? பார் லைசன்ஸ் கேசை அமுக்குவதில் பிசியோ? பார் சிறியை போல ஒண்டுக்கும் உதவா உதாவாக்கரை தலைவரை தமிழினம் இதுவரை கண்டதே இல்லை.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
நன்றி
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
என்ன புலவர் இது…. சங்கி இல்லை எண்டு ஒரு பிறவி சங்கி ரங்கராஜ் பாண்டே சொல்லியதை தூக்கி கொண்டு வர வேண்டிய அளவுக்கு நம்மளை ஆக்கி விட்டதே காலம்.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
————— தலைப்பிற்கு அறவே சம்பந்தம் இல்லாதது…ஆனால் சூழமைவு ஒத்துள்ளதால் இங்கே இதை எழுதுகிறேன். என் பாசமலர் @பாலபத்ர ஓணாண்டி விஜி அண்ணி விடயம் பரபாக ஓடிய காலத்தில், நானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்துள்ளேன், எனக்கும் மகன்கள் உளர், எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது என எழுதினார். அப்போதே அவரிடம் கூறினேன், உறவு சேர்தல் போலவே உறவு பிரிதலும் இயல்பானது…ஆனால் நாம் உறவில் இருக்கும் சமயம் ஒரு பெண்ணை நடத்தும் விதத்தில் தங்கி இருக்கிறது, பிரிவில் அவள் நம்மை நடத்தும் முறை என்று. இந்த ஆடியோ நான் சொன்னதுக்கு ஒரு நல்ல உதாரணம். பிரிவின் பின் அவர்கள் வெளியிடும் ஆடியோ, விஜி அண்ணி டைப் ஆடியோவா, சாய்ரா டைப் ஆடியோவா என்பது நாம் அவர்களை உறவில், பிரிவில் நடத்திய விதத்தில் உள்ளது.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
அவர்கள் எங்கே உங்களை முட்டாள் ஆக்கினார்கள் அண்ணை? முதலாவது அறிக்கையே மிக தெளிவாக “பரஸ்பர காதல் இருந்தும் இடைவெளி விழுந்து விட்டது”. என்பதை மட்டுமே சொன்னது. நீங்களாகவே கண்ட கண்ட ஊத்தை கதைகளை எல்லாம் நம்பி விட்டு, இப்போ அது பொய் என்றவுடன் ஏன் அவர்கள் மேல் பாய்கிறீர்கள். அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே பிரிவுக்கு ஒரு காரணத்தை மட்டுமே சொன்னார்கள். சில வேளைகளில் மண/ன முறிவுக்கு, இடைவெளி மட்டுமே போதும். மேலதிகமாக கசமுசா, அஜால் குஜால் காரணங்கள் தேவையில்லை.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இங்கே கருத்து எழுதும் பலர் depression வராதவர்கள் அல்லது depression வந்தவர்களோடு டீல் பண்ணாதவர்கள் என நினைக்கிறேன். சாய்ரா பானு கணவர், பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையில் பிசியாக இருக்க, தனிமை மூச்சு முட்டி, அதுவே மன அளுத்தமாகி, ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்பதே வரும் தகவல்களை வைத்து நான் ஊகிப்பது. இப்போ தன் முடிவு ரஹ்மானின் பெயரை கெடுக்க அவரின் எதிர்பாளர்களால் பயன்படுவது கண்டு தானாகவோ அல்லது பிள்ளைகள் வேண்டியோ இந்த ஓடியோவை வெளியிட்டுள்ளார். இந்த மன அளுத்தமே அவர் கூறும் மும்பை சிகிச்சைக்கு காரணமாக இருக்கலாம். எல்லாம் ஊகமே. ஆனால்…. அவரே ரஹ்மான் மனிதருள் மாணிக்கம், அவர் மீது அவதூறு சொல்ல வேண்டாம் என சொன்னபின், நாம் இதில் மினகெடுவது தேவையில்லாதது. போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள், அவர்கள் படித்து முடிந்தது என்றால் பேரப்பிள்ளைகளை கொஞ்சுகள்🤣.
-
தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன்.
அதே வெக்கம் கெட்ட, சொராணை அற்ற நிலாந்தனேதான். உண்மையில் அப்போ எழுதியவைக்கு தார்மீக பொறுப்பு ஏற்று இவர் போன்றோர் வாழ்நாள் மெளன விரதம் இருக்க வேண்டும். இப்போதும் சங்கு, பங்கு என மொக்கு கூத்தாடியவர் இவர்தான். தன்னைதானே அன்ரன் பாலசிங்கம் போல் நினைத்துகொள்ளும் இவர்தான் நம்பர் வன் மிஸ்டர் பீன்.
-
சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-
நீங்கள் அக்யூஸ்ட் நம்பர் 2 வை சந்தித்து விட்டு, பத்திரிகையாளரை சந்திக்க துணிவில்லாமல் பின் கதவால் ஓடியது…. தேர்தலில் வென்றதும் ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதி போட்டோ முன் கை கட்டி பவ்வியமாக நின்றது…. போல இதுவும் ஒரு டகால்டி வேலைதான் ப்ரோ🤣 Zombies என செல்லமாக அழைக்கப்படும் நா.த.க தம்பிகளை அண்ணன் மெல்ல மெல்ல நாக்பூர் நோக்கி வளைக்கும் உளவியல் இது. யாழில் மேலும் சிலர் சீமானை டைவோர்ஸ் செய்யும் காலம் கனிகிறது என நினைக்கிறேன். ஆனால் இன்னும் சிலர் அப்போதும் முரட்டு முட்டு கொடுப்பார்கள்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
பப்ளீக்…பப்ளீக்🤣
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
தேர்தலுக்கு முன் சரளமாக ஆதவனுக்கு தமிழில் பேட்டி கொடுத்த சரோ அக்கா, பதவி ஏற்றதும் சிங்களத்தில்தான். அவரை குறை சொல்ல முடியாது, தென்னிலங்கை வாழ்க்கை, கொழும்பு எச் எப் சி படிப்பு, அசித்த எனும் சிங்கள கணவர். அவர் கதிர்காமரை போல் தனது எசமானாருக்கு தேவைப்படும் போது தன் பெயரை பாவிக்கும் ஒரு தமிழர்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சாணாக்ஸ் இந்த கூட்டத்துக்கு சுமனை பைல் தூக்கவாவது கூட்டிப்போயிருக்கலாம்🤣. செல்வம், அரியம் ஐயா, சித்தர் இல்லாததால் மிக்சர் டன் கணக்கில் வாங்கும் செலவு இந்திய தூதரகத்துக்கு மிச்சம்🤣.
-
நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் - இந்தியாவில் ரணில்
ரணில் போன்றோருக்கு இனம் எவ்வளவு முக்கியமோ அதே போல் வர்க்கமும் முக்கியம். வழமையாக சிங்கள அரசியல்வாதிகள் வெளியாரிடம் ஆளை ஆள் விட்டு கொடார். மைத்திரி ரணிலை நீக்கி, மகிந்தவை பிரதமராக்கிய குழப்பநாட்களில் கூட, இதில் சீனா/இந்தியா சமனிலையை ரணில் பேணியமையை கண்டோம். இப்போ அனுரவை போட்டு கொடுப்பது போல் படுகிறது. வர்க்க நலனுக்ககா இன நலனை விட்டு கொடுக்கும் செயலா?
-
தமிழ்த்தேசியத்தை தமிழர்கள் கைவிட்டுவிடவில்லை; - சி.வி.விக்கினேஸ்வரன்
மிடிச்சி விட்டீங்க போங்க🤣
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நன்றி இவர் ஜனவரி 20 பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
இதை ஒரு ஆரம்ப அறிகுறி என காட்டவே இவர்கள் விழ வைக்கப்பட்டார்கள். ஈரானில் இப்போதும் இதுதான். Theocracy என்பார்கள். என்ன ஈரான் நேரடி தியோக்ரசி, இலங்கை மறைமுக தியோக்ரசி. நல்லது. ஆனால் நம்மில் பலர் பெரும்பாலும் பெற்றார் காலில் விழுந்து கும்பிடுவதை ஏற்பார்கள் என நினைக்கிறேன். தத்தம் பண்ணிய பின் பெற்றார் காலில் விழுந்து ஆசி பெறுவது பல காலமாக நான் கண்டுள்ளேன். ஆக இதன் பின்னால் நுண் அரசியல் இருக்கிறது.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
ஏன்? யாரும் எங்கேயும் அமரலாம் எனும் போது…அங்கே எதிர்கட்சி தலைவருக்குரிய கதிரை என்பதே இல்லை…. இன்னொரு விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை என கேள்விப்பட்டிருப்பீர்கள்….எம்பிக்களை சபாநாயகர் மட்டுமே ஒழுங்கு படுத்த முடியும். இந்த ஊழியர் யார் ஒரு எம்பியை ஒழுங்கு படுத்த? இதில் முழு உடன்பாடே.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
மிகச்சரியான கருத்து. காலில் விழுவது என்பது அவர்கள் கலாச்சாரம். பெற்றோர், தவிர ஏனையோர் காலில் விழுவது இல்லை என்பது எமது கலாச்சாரம். அதானால்தான் சசிகலா காலில் எடப்பாடி விழுந்ததையும், புலம்பெயர் நாட்டில் ஐயர் காலில் பிள்ளைகள் விழுவதையும் நாம் ஒரு இனமாக முன்பே விமர்சித்தோம். கைலாகு கொடுப்பது போல் அல்லது கையில் முத்தமிடுவது போல் அல்ல இது. இது அவர்களுக்கு சப்பை மேட்டராக இருக்கலாம் ஆனால் எமக்கு சரணாகதியின் வெளிப்பாடு. ஒரே இலங்கையர் என்ற ஈரச்சாக்கில் எம்மை போட்டு மூடுவதன் இன்னொரு அங்கமே இது. உயிர்களை அழித்தல் போல ஒரு இனத்தின் பண்பாட்டியல் கட்டுமானத்தின் கூறுகளை அழிப்பதும் கூட cultural genocide தான். இதை கேள்வி கேட்கும் திராணி கூட எந்த அமைப்புக்கோ ஊடகத்துக்கோ இல்லை என்பது வெட்கக்கேடான விடயம். இதற்கும் மேலா இதற்கு புரிந்தும், புரியாமலும் ஒத்தூத இன்னொரு கொஞ்சம் பேர். நிச்சயமாக…
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ரவீந்திரன் யார் 👆👇 @புலவர் இன்னும் கொஞ்ச காலம்தான் பொறுமையாக இருந்து விட்டு….பின்னர் கோசான் பல வருடங்கள் முன்பு சொன்னது பலித்து விட்டது என ஒத்து கொள்ளலாம். 👇
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
————————- 2 மணிநேரம் நடந்த சந்திப்பு.. ரஜினி வைத்த விருந்து.. சீமான் பேசியது என்ன? ரவீந்திரன் விளக்கம் Kadar KarayUpdated: Friday, November 22, 2024, 16:41 [IST] தமிழக அரசியல் வட்டாரத்தில் சீமான் நேற்று ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியதுதான் ஹாட் டாப்பிக் ஆக வலம் வர தொடங்கி இருக்கிறது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிக்க இருந்தபோது அவரை மிகக் கடுமையாக விமர்சித்தார் சீமான். அவர் தமிழ்நாட்டில் நடிக்கலாம். ஆனால், எங்களை ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது. அப்படி அவர் அரசியல் கட்சி தொடங்கினால் கடுமையாக அவரை எதிர்ப்போம் என்று சீமான் பேசி இருந்தார். ரஜினி அரசியலை எதிர்த்த சீமான், நடிகர் கமல் கட்சி தொடங்கிய போது அவரை ஆதரித்தார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞன் என்றும் கூறியிருந்தார். இப்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச்சு எழுந்த நிலையில், திடீரென்று மோடி ஆதரவாளரான ரஜினியை சீமான் சந்தித்துப் பேசி இருக்கிறார். ஆகவே, அது பற்றிப் பல வியூகங்கள் வெளியே கசியத் தொடங்கி உள்ளன. இந்தச் சந்திப்பில் ரவீந்திரன் துரைசாமியும் உடன் இருந்துள்ளார். அவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ரஜினி சந்திப்பின் போது சீமான் என்ன பேசினார்? அங்கே நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் மூத்த நடிகர் ரஜினியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற வேண்டும் என்பது சீமானின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது பிறந்தநாள் போது ரஜினி படப்பிடிப்பிலிருந்தார். அதேபோல் சீமான் அப்போது பயணத்திலிருந்தார். அந்தச் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்காமல் போய்விட்டது. நேற்று ரஜினியும் சீமானும் சந்திப்பதற்காகக் கால அவகாசம் இருந்தது. ஆகவே, ரஜினி அழைத்தார். அதனடிப்படையில் சீமான் சந்திப்பு நடந்தது. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். சுமார் இரண்டரை மணிநேரம் பேசினார்கள். அதில் பல விசயங்கள் இருந்தன. நானும் அவர்கள் கூடவே இருந்தேன். அதில் முக்கால் மணி நேரம் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டனர். ரஜினி முற்றாக அரசியல் வாழ்க்கையிலிருந்து 2022இல் விலகினார். அதன்பின் பலரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எந்த அணியை ஆதரிக்கவேண்டும்? என ஒரு அறிக்கை வெளியிடச் சொல்லி பலரும் ரஜினியை வற்புறுத்தினார்கள். அப்போது நான் அவரிடம், "நீங்கள் இப்போது பொதுவான மனிதர். எனவே எந்தக் கட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுவது நல்லது அல்ல" என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றார். கடந்த 2024இல் மோடியை ஆதரித்து மும்பையில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுங்கள் என அவர் தாதா சாஹேப் பால்கே விருது விழா பெற வந்த போது கேட்டுக் கொண்டேன். அப்போது, '2021இல் அனைவருக்கும் பொதுவானவராக இருங்கள் என்று சொன்னீர்கள். இப்போது மோடிக்கு ஆதரவாக அறிக்கை விடச் சொல்கிறீர்கள். நான் பொதுவான நபராக இருந்து விடுகிறேன். என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம்'என்றார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். சீமானின் சந்திப்பில் விஜய் அரசியல் பற்றி எதையும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வராததால், அவரது முகத்தில் ஒரு பொலிவும் தெளிவும் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அது உங்கள் முகத்தில் வெளிப்படுகிறது. அரசியலுக்கு வந்திருந்தால் தாக்குப்பிடிப்பது கஷ்டம். நாங்கள் அரசியல் களத்தில் காட்டான் போலக் கிடந்து கஷ்டப்படுகிறோம். நீங்கள் விலகியது நல்லது என்று சொல்லி ரஜினியை சீமான் பாராட்டிப் பேசினார். அதற்கு ரஜினி, 'என்னைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை. அதைப்போல் உங்களைத் தூக்கிவிட யாரும் இல்லை. அதை எல்லாம் கடந்து நீங்கள் பெரிதாக வளர்ந்துவிட்டீர்கள்'என்று சீமானிடம் ரஜினி சொன்னார். அப்போது வரும் 2026 தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட உள்ளதாக சீமான் சொன்னார். ரஜினி அதிகம் அரசியல் பேசவில்லை. அவர் சீமான் சொன்னதை முழுக்க அப்படியே பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார். ரஜினிக்கும் சீமானுக்கு பொதுவான நண்பர்களான பாரதிராஜா, சீமான், இளையராஜா எனப் பலரைப் பற்றி பொதுவான விசயங்களை சீமான் பேசினார். ரஜினி நடிப்பில் வெளியான 'முள்ளும் மலரும்' படத்தில் தனக்குப் பிடித்த பல காட்சிகளை சீமான் இந்தச் சந்திப்பில் சொன்னார். பாட்சா படத்தில் 'உண்மையைச் சொன்னேன்' என ரஜினி பேசிய வசனத்தைச் சீமான் தனக்குப் பிடித்த வசனம் என்றும் சொன்னார். கூடவே ரஜினியின் உடல்மொழி, வசன உச்சரிப்பு எனப் பல நுட்பமான விசயங்களைச் சுட்டிக்காட்டி சீமான் ரசித்துப் பேசினார். அதை ரஜினி அவ்வளவு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 'வேட்டையன்' படத்தின் கான்செப்ட் தனது கொள்கைக்கு நெருக்கமானதாக இருந்ததைச் சீமான் சொன்னார். இந்தச் சந்திப்புக்கு முன்பு ரஜினி ஒரு விருந்து கொடுத்தார். அந்த உபசரிப்புக்கு பிறகுதான் பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே தொடர்ந்தது" என்று விளக்கம் அளித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/the-meeting-that-lasted-2-hours-the-party-hosted-by-rajini-what-did-seeman-say-ravindran-durais-656425.html
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
“ரஜினியை நான் சந்தித்து பேசியதும் அரசியலே!” - சீமான் விவரிப்பு. https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1340666-it-was-all-about-politics-seeman-about-rajinikanth-meeting.html