Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அனுர அலை இல்லாவிடில் திருமலை நகரம், வவுனியா தேர்தல் தொகுதி இரெண்டும் தமிழரசு அல்லது ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கு போகவே வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இந்த இடங்களில் தமிழ் மக்கள் என் பி பி க்கு போட்டு, அதில் விருப்பு வாக்கை தமிழருக்கு போட்டுள்ளனர். அத்துடன் சிங்கள, முஸ்லிம் வாக்குகளும் என் பி பிக்கு சேர - இந்த தொகுதிகளை என் பி பி வென்றுள்ளது. இங்கே பலர் திருமலை நகரம் என் பி பிக்கு என பதில் எழுதிய போது அவர்கள் தேர்தல் தொகுதியை தேர்தல் மாவட்டத்தோடு குழப்புகிறார்கள் என நினைத்தேன். அப்படியும் சிலர் போட்டு, குருட்டு லக்கில் புள்ளிகள் கிடைத்திருக்கலாம். அல்லது உண்மையாகவே அனுர அலை இந்த ஒரு தொகுதியிலும் என்ன தாக்கத்தை கொடுக்கும் என்பதை நுணுக்கமாக கணித்தும் இருக்கலாம்.
  2. 🤣…. எனக்கு இரெண்டும்…. 2xPSTSD ஏன் என்டால்… சுத்துமாத்து சுமனும்…. பார் சிறியும்….. தமிழ் தேசிய அரசியலை விட்டு அகற்றபப்படும் வரை அதுமீள வாய்ப்பே இல்லை என்பது என் நிலைப்பாடு. அத்தோடு கஜே-போபியாவும் இருக்கிறது.
  3. ஓம்…நீங்கள் இந்தியா வை சந்தேகப்பட்டீர்கள். ஆகவே கேள்வி குறி போட்டீர்கள். நான் பார் சிறியையும், அவரின் புலம்பெயர் ஈக்களையும் குற்றம் சாட்டுகிறேன் (நீங்களும் நானும் போலிக்கா விடயத்தில் இந்தியாவை குற்றம் சாட்டியது போல). பிகு ஓம் நான் ஈக்களை எப்போதும் அவதானிப்பேன். கொடிய நோய் கிருமிகளை காவும் என்பதால். உங்களுக்கு ஈக்களை தெரியுமா இல்லையா என்பது இட்டு நான் எதுவும் கேட்கவில்லை. எப்படி? சுத்துமாத்து சுமனுக்கு போன தேர்தலில் 25,000 சொச்சம் வாக்களிதார்கள். அடுத்த 4 வருடத்தில் சுமனின் சுத்துமாத்தை எழுதிய எல்லோரும் அந்த வாக்காளரை முட்டாளாக்கினார்களா?
  4. சதிக்கு ஆதாரம் கேட்கிறீர்களே ப்ரோ. போலிக்காவை இந்திய சதி என நாம் அனைவரும் எழுதினோம். அப்போ மீராவிடம் யாரும் ஆதாரம் கேட்கவில்லைத்தானே? சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தேன். மேலே சந்தர்ப்ப சாட்சியத்தை நிரல்படுத்த்தி உள்ளேன். பிகு பார் சிறி இலண்டன் வந்த போது, பவ்வியை சுற்றும் ஈ போல அவரை சுற்றிய சிலரை தெரியும்.
  5. வாங்குன காசுக்கு மேலாலயே கூவும் கொய்யா என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் இது 😀
  6. இங்கே பிரிந்த இருவருமே பாலியல் தொடர்புகள் இட்டு குறை ஏதும் சொல்லவில்லை. நாம்தான் புதியதாக எம் கற்பனை குதிரையை தட்டி விட்டு கதை புனைகிறோம். அவர்கள் இருவரும் சொன்னது - காதல் இருந்தும் தமக்குள் இட்டு நிரப்பமுடியாத இடைவெளி வந்து விட்டது என்பதை மட்டுமே. இது மிக இயல்பான காரணமாக எனக்கு தெரிகிறது. 29 வருடம் என்பது நீண்ட காலம் எனிலும், ஈர்ப்பு இல்லாத போது, கிடந்து ஏன் உழலுவான் என்று நினைத்துள்ளனர் போலும். நாம் வாழும் நாடுகளில், 50 வயது தாண்டிய எத்தனை பேர் நாட்டில் 6 மாதம், புலம்பெயர் நாட்டில் 6 மாதம் என இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மனைவிகள் பெரும்பாலும் புலம்பெயர் நாட்டில்தான் இருப்பார்கள். ஊரில் கூட பல உறவுகள், கணவன் முன் அறையில் தானே போட்டு சாப்பிடுவார், மனைவி வீட்டில் என்ற நிலையில் 80 களிலேயே நான் கண்டதுதான். இவையும் கூட அறிவிக்கப்படாத டிவோசுகள்தான். இப்படி சமூக ஓப்பனைக்காக இழுத்து கொண்டு போவதை விட, பிரிந்து வாழும் முடிவு அவர்களுக்கு பிடித்திருந்தால் அதை நாம் வரவேற்கவே முடியும். பிள்ளைகளும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இருவருக்கும் இனிவரும் வாழ்க்கை மனம்போல அமைய வாழ்த்துக்கள்.
  7. ஓ…நீங்கள்…சுசித்திரா தனுஷ்-கார்திகுமார் பற்றி சொன்ன கோணத்தில் இதை அணுகுகிறீர்களா🤯. நான் அப்படி நினைக்கவில்லை. தனுசுடன் வேலை பார்த்த, அமலா பால், டிடி, விஜை ஜேசுதாஸ், சுச்சி,ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என அனைவரும் வேலை செய்து முடிந்த சில மாதங்களில் டிவோர்ஸ். அதைத்தான் சொல்கிறார்கள்.
  8. இது இந்தியாவின் அல்ல - பார் சிறியின் சதி. மைத்திரி அரசு காலம் போல மட்டுபட்ட நினைவு கூறலை அனுமதிக்கும் முடிவு எப்போதோ எட்டப்பட்டு விட்டது. ஆனால் 1. முதலில் அனுர அனுஸ்டிக்க விடுவாரா? விட்டால் அவர் நல்லவர் என்ற கருத்தியலை வலிந்து உருவாக்குவது. 2. இதன் ஒரு அங்கம்தான் இப்படியான பித்தலாட்ட வேலைகள். இவற்றை பரப்புவர்கள் யார் என பார்த்தால் - சுமந்திரன் - பார் சிறி உள் மோதலில், இவர்கள் சுமந்திரனை போட்டு வாங்கிய ஆட்கள் (அப்போதும் தாம் சிறியின் அடிப்பொடிகள் என்பதை வெளிக்காட்டவில்லை). 3. அனுஸ்டிக்க விட்டதும் - அனுர நல்லவர் என்ற பிம்பத்தை உருவாக்குவது. 4. இதை பயன்படுத்தி பார் பெர்மிட், சிறியின் இதர ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்களை அனுர கண்டுகொள்ளாமல் விட முயற்சிப்பது. 5. இதன் ஒரு அங்கம்தான் பார் சிறியின் இன்றைய அறிக்கை.
  9. ஓம்…. இதைவிட முக்கியமாக சபாநாயகர் தேர்வு, எதிர்கட்சி தலைவர் தேர்வு வரைக்கும் ….எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதே விதி. எனும் போது அருச்சுனா எதையும் தவறாக செய்யவில்லை. அருச்சுனா வென்றதும் வெளியே வந்து யாழில் நாங்கள் மூன்று பேரும்தான்….நான் வென்ற மகிழ்சியில் இல்லை…இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று சொல்லியது ஒரு மிக பெரிய விடயம்…… அருச்சுனா, “நாம் எல்லோரும் இலங்கையர்” என்ற என் பி பி யின் ஈரச்சாக்கு இனவாதத்தை தன் பாணியில் அருச்சுனா மூக்குடைப்பார் என்றே நினைக்கிறேன். மாவீரர் தினத்தை அனுர நடத்த அனுமதித்தார் எனவே அவர் ஹீரோ என காட்ட பார் சிறியும் அவரின் புலம்பெயர் அடிப்பொடிகளும் ஒரு நாடகத்தை ஆடுகிறார்கள். ஆனால் இதே அனுரவின் ஆட்கள்தான் தலைவருக்கு நன்றி சொன்னமைக்கு அருச்சுனாவை போட்டு வாங்குகிறார்கள். இதில், கோட்டா வெல்லட்டும் அப்போதான் மக்கள் மேலும் அடிவாங்கி அதன் மூலம் எமக்கு விடுதலை விரைவாகும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நாம் - அருச்சுனாவினால் மக்களுக்கு ஆபத்து என அதிகம் கவலைபட தேவையில்லை எண்டே நினைக்கிறேன்.
  10. 🤣 ஒயாமல் போனால்தான் அது ஓய்ஸ்டர் போலும் 🤣. சிறுவயதில் முல்லைதீவு சிலாவத்துறை கடற்கரைக்கு விளையாட என்னை கூட்டிப்போன அப்பா, அங்கே யாரோ வித்தார்கள் என ஒரு சொப்பிங் பாக் நிறைய மட்டியை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தார். அவவுக்கு அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை🤣. அவருக்கோ முட்டை அவிக்கவே தெரியாது🤣. ஒரு வழியாக அயலவர் உதவியோடு வறுத்து சாப்பிட்டோம். நீங்கள் கப்பலில் வேலை பார்தீர்களா. வாவ். ரிட்டையர் ஆகி விட்டு ஒரு கிரூஸ் கப்பலில் வேலை செய்தால் நல்லா இருக்கும் என யோசிப்பேன். சின்னதில் ராபின்சன் குருசோ கதை படித்த தாக்கமோ என்னமோ….கப்பல் பயணத்தில் ஒரு நாட்டம். இப்போதைக்கு யூகே-பிரான்ஸ் ferry, பருத்தித்துறை-திருமலை ஐ சி ஆர் சி கப்பல் பயணம் மட்டுமே செய்துள்ளேன்.
  11. நீண்ட இடைவெளிக்க்கு பிறகு இந்த திரியில் எழுதுகிறேன். கிரிப்டோ உலகுக்கு வெளியே பலர் பிட்காயின் 64,000 இல் இருந்து 98,000 க்கு 46% ஆல் உயர்ந்தது பற்றி சிலாகித்து கொண்டிருக்கிறார்கள். ஆனா ஒரு மாதத்தில் XRP 0.50 இல் இருந்து 1.48 க்கு 170%ஆல் கூடியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் SEC வழக்கில் settlement க்கு போகும், SEC சேர்மன் தூக்கியடிக்கபடுவார் அல்லது விலகுவார் மற்றும் டிரம்பின் கிரிப்டோ சார்பு நிலைப்பாடு அத்துடன் ரிப்பிளின் RLUSD எனப்படும் stable coin அறிமுகம் என்பன இதன் பின்னால் உள்ள fundamental காரணிகளாக கூறப்படுகிறது. @vasee chart என்ன சொல்கிறது?
  12. மேலே ரசோதரன் சொல்லுவது போல மஞ்சளில் கழுவி சமைத்தது என இங்கே இலண்டனிலும் தந்தார்கள் - அடியோடு மறுத்துவிட்டேன். எவ்வள்வு நல்ல பார்ட்ஸ் எல்லாம் இருக்கு, exhaust pipe தான் வேணும் என்பது சிலரின் ரசனை போலும்🤣
  13. வாலி எழுதியதை பார்த்து விட்டு…. டிரம்ஸ் என்றால் காலால் மிதித்து மிதித்து அடிக்க வேண்டும் என யாரேனும் முடிவெடுத்தால் - பின் விழைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல🤣.
  14. @Justin @ரசோதரன் @ragaa என்ன இங்கே ஒரே “அடு பத்” கூட்டமாக இருக்கிறது🤣. நான் முன்பு ஒரு பாடசாலை அணியில் இருந்தேன் - போட்டிகள் முடிந்ததும் அருகில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டல் போய் சாப்பிடுவது வழமை. அதில் ஒருவருக்கு பெயரே அடு பத் தான்🤣. வஞ்சகமில்லாமல் அடுவுக்கு அடு வுக்கு அடு எடுத்து சாப்பிடுவார்🤣. இந்த குடல்கறியை பாபத் என்பார்கள் - உவேக்…..🤮
  15. பலர் PSTSD யால் அவதி படுகிறார்கள். Post Sumanthiran Traumatic Stress Disorder🤣
  16. https://x.com/MKSL2024/status/1859960137454342194/mediaViewer?currentTweet=1859960137454342194&currentTweetUser=MKSL2024 எமக்காக போராடிய பிரபாகரனை நாம் தெய்வம் என்றே கருதுகிறோம்….. சிங்களத்தில் அருச்சுனா…. சரியோ…. பிழையோ…. யாழ்பாணம் 3 எம்பிக்களை தந்தது / தமிழ் தேசியத்தின் கதை முடிந்தது என்ற பிரச்சாரத்தை ஒரு வீடியோவில் பீஸ் பீஸ் ஆக்கிவிட்டார். may be there is a method behind his madness?
  17. உரு மறைத்தாலும்…திரு மறையாதே ஜி🤣
  18. ம்ம்ம்…. இந்த செய்திக்கு என் ரியாக்‌ஷன்👇🤣 பகிடிதான் நோ ரென்ஷன் பிளீஸ்🙏
  19. பல திரிகளில் கொமெமெண்ட் போட்டு கதறடிப்போம்……. அந்த அடியின் தாக்கம்….. சில திரிகளில் நாம் ஏதும் எழுதாமலே அவர்களாகவே திரி திறந்து கதற வைக்கும். —————— சீமான் சந்தித்தது யாரை? ஒரு அரசியல் அநாதையை, துக்கடா பீசை. ஒரு வெற்றிபட நடிகரும், ஒரு தோல்விபட இயக்குனரும் சந்தித்துள்ளனர். இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கத்தேவையில்லை. ——————— சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்து, சந்திப்பில் கூட இருந்தவர் ரவீந்திரன் துரைசாமி. இவர் ஒரு சங்கி. 2024 இல் ரஜனியை மோடிக்கு ஆதரவாக பேசும்படி கேட்டேன் என அவரே கூறுகிறார். ஏ டீமிற்கு முன்பு வரவிருந்த பிளேயரை, பி டீம் கேப்டனுடன் பேச வைத்துள்ளார். இதன் எதிர்கால திட்டம் என்ன என்பதை நான் முன்பே சொல்லி விட்டேன். அமித்ஷா ஏ டீமை, பி டீமுடன் இணைக்கும் முடிவுக்கு வந்து விட்டார் போல இருக்கு. செத்த கிளிகள் இரெண்டு இனி சிங்காரிச்சா என்னா சிங்காரிக்காட்டி என்ன 🤣
  20. நினைவு கூறலை அனுர அனுமதிப்பார் என்பது நான் முன்னரே எதிர்வு கூறியதுதான். பார்த்தசாரதி கூட அனுர 27ம் திகதி என்ன செய்கிறார் என பார்ப்போம் என யாழில் எழுதினார். இப்போ அவரின் பொஸ் சிறி இப்படி அறிக்கை விடுகிறார். சிறியிம் அவரது பார்த்தசாரதி போன்ற அடிப்பொடிகளும்…அனுரவுக்கு நூதனமாக ஆதரவு திரட்டும் முறை இது. நல்ல நாடகம் ஆடுகிறார்கள். எல்லாம் அனுர பார் லைசென்ஸ் பற்றி விசாரிக்க கூடாது என்பதால்தான்.
  21. இதிலெல்லாம் அறவே நம்பிக்கை இல்லை…. ஆனால் …. அவர்களும் இப்போ இயற்க்கையோடுதான் கலந்து விட்டார்கள்…. எதுவும் செய்தி சொல்கிறார்களோ?
  22. அருச்சுனா எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருந்தது பாராளுமன்ற விதிகளின் படி தப்பே இல்லையாமே 👇 @satan @தமிழ் சிறி
  23. இதை மிக இலகுவாக ஒரு விடயம் மூலம் உணரலாம். நான் நினைக்கிறேன் மனோ கணேசன் இந்தியா வழங்கும் Persons of Indian Origin கார்ட் வைத்துள்ளவர் என. இது கிட்டதட்ட இந்தியாவில் permanent residence வைத்திருப்பதை போன்றது. தலை கீழாக நிண்டு தண்ணி குடித்தாலும் எனக்கு இந்த கார்ட் எடுக்க முடியாது. ஏன் என்றால் என் தாத்தா அல்லது அவர் தந்தை இந்தியாவில் பிறக்கவில்லை. ஆகவே மனோ - இந்திய வம்சாவழி நான் - இந்திய வம்சாவழி இல்லை
  24. 4. மேலே சுட்டிய விடயங்கள் இலங்கையில் இரு வேறு தமிழர் பகுப்புகள் உள்ளதை காட்டி நிற்கிறன. இந்த பகுப்பு ஒன்றும் தனியே 1815 ஐ ஒட்டிய தொழில் நுட்ப பகுப்பு மட்டும் அல்ல. பண்பாடு, மதம், சாதிய கட்டமைப்பை போலவே இந்த ஒரு பகுப்பினரதும் அரசியலும் மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இலங்கை வம்சாவழியினர் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்கிறனர். வடக்கு கிழக்கை தம் பாரம்பரிய வாழிடமாக கருதுகிறனர். இதன் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை கோரி நிற்கிறனர். இந்த எந்த அபிலாசைகளும், பாரம்பரிய வாழிடத்துக்கான உரிமை கோரலும் இந்திய வம்சாவழியினரிடம் இல்லை. ஆகவே இலங்கை அரசியல் என வரும் போது இவ்விருதரப்பையும் ஒரே சட்டியில் வறுக்க முடியாது. இந்திய வம்சாவழிக்குள் கூட மேலக, மலையக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வேறுபட்டாலும், நிலத்துடன் பிணைந்த இலங்கை வம்சாவழியின் தமிழ் தேசிய அரசியல் அங்கே இல்லை. இந்த அடிப்படையில்தான் இலங்கை வம்சாவழியை குறிக்கும் போது பிரக்கெட்டில் வடக்கு-கிழக்கு என எழுதினேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.