Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. மேலே உள்ளது உண்மை எனில்…. வழக்கு டக்கிளஸ் மீது அல்ல…மனோகரன் மீதுதான். டக்கிளஸ் இதில் முறைப்பாட்டாளர்? இப்போ ஒரு கூட்டம் கோஷன் டக்கிளஸ் ஆள் என வாளியோட வரும்… எஸ்கேப்பு….🤣
  2. @ரசோதரன் @villavan பிரட்டாசி முடிந்து விட்டது ஆகவெ எள் எண்ணை எரிக்க முடியாது. சனி தோறும் அருகில் உள்ள கோவிலுக்கு போய் நவகிரக வழிபாட்டில் ஈடுபடலாம். இந்தியா போனால் திருநள்ளாறில் ஒரு சிறப்பு பூசை செய்யலாம். மார்ச் மாத சனிபெயர்ச்சியோடு எல்லா துன்பமும் விலகும்🤣.
  3. உதாவாக்கரை தலைவர், சாராய கடை சிறி, பாராளுமன்ற கதிரையை சூடாக்குவதை தவிர எதையும் செய்ய முடியாதவர், கையாலாகாதவர் என்பதை மக்கள் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக - தேர்தலில் தோற்று போன சுமந்திரனை பற்றி தாமாக கற்பனை செய்திகளை வெளியிடுகிறன புலம்பெயர் டாய்லெட் ஊடகங்கள். இதுவரை சுமனை பாவித்து இந்த புலம்பெயர் அடிப்பொடிகள், சாரயக்கடை சிறிக்கு கவர் எடுத்தார்கள், இப்போ சுமன் இல்லை என்றதும் தமது டீலர், மன்னிக்கவும் லீடர்ரை எப்படி கவர் எடுக்கலாம் என வழி தெரியாது, தெற்கில் அதிர்ச்சி, மேற்கில் பேதி எண்டு கதை காவுகிறார்கள்.
  4. பேட்டியை முழுமையாக பார்த்தேன். 1. நான் சொன்னது போலவே - தமிழர்களின் அடிப்படை அபிலாசையை பற்றி கதைக்கும் போது - அதை சிறுபான்மை குழு ஒன்றின் கோரிக்கைகள் என்ற அளவில்தான் இங்கே அனுர அணுகுகிறார். 2. இதில் அவர் அதிகம் பேசிய இந்தியாவின் வகிபாகம், புவிசார் அரசியல் நாம் அனைவரும் அறிந்ததே. 3. எதிர்கட்சியில் இருக்கும் சமயம் மிக உருக்கமாக, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவ பிரசன்னம் இட்டு கதைக்கிறார். ஆனால் இவர் ஜனாதிபதியாகி மூன்று மாதம் ஆகிறது. 2/3 பெரும்பான்மை அரசு அமைந்து விட்டது. ஹிரிணிக்கும், டில்வினுக்கும் மவுண்ட்லவேனியா ஓட்டலில் ABBA Tribute நிகழ்ச்சிக்கு போக நேரம் இருக்கிறது. பலாலி வீதியில் 800 மீட்டர் தூரத்தை (இரு மருங்கிலும் உள்ள நிலத்தை அல்ல) விட்டமை மட்டுமே இப்போதைக்கு சாதனைகள். நேற்று அமைச்சர் ஒருவர் காணாமல் போனோர் எல்லாம் இறந்தோர்தான் என போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறார். குறைந்த பட்சம் - அந்த பட்டியலில் உள்ள பெயர்களை வாங்கி, அரசிடம் கைதியாக இருப்போர் அந்த லிஸ்டில் உள்ளனரா என பார்த்து, இல்லை என சொல்லி, அவர்கள் மரணித்தவர்கள் என கருதப்படுவோர் (presumed dead) - என குடும்பங்களுக்கு கண்ணியமாக அறிவிக்க கூட இவர்களால் முடியவில்லை.
  5. 🤣 வார இறுதியில் பார்ப்பதாக இருக்கிறேன். ஆனால் AKD, JVP யின் நிலைப்பாடு இதுதானே? பேட்டியில் அதற்கு மாற்றாக சொல்லி இருப்பார் எம நினைக்கவில்லை.
  6. எனக்கென்னமோ…நீங்கள் என்னை கலாய்ப்பது என்ற போர்வையில், பையனின் அரசியல் அறிவை மட்டம் தட்டுவதாக படுகிறது 🤣. #எங்க வந்து யாருகிட்ட🤣
  7. இந்த பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். ஆனால் இதில் தொடக்கத்தில் அனுர சொல்வதில் ஒரு தர்க்க உண்மை உள்ளது. இதே விடயத்தை 1995/6 காலத்தில் TNL டீவி நிகழ்சிகளில் குமார் பொன்னம்பலம், எஸ் எல் குணசேகர, லசந்த விக்ரமதுங்க விவாதித்துள்ளனர். அந்த தர்க்கம் இதுதான். 1. தமிழர்கள் 1948 இல் ஒற்றையாட்ச்சிக்கு உடன்பட்டார்கள். 2. தனி சிங்களம், சிறீ, தொடர் இன வன்முறைகள், இன ஒதுக்கல், குடியேற்றம் போன்றவையே - தமிழரை திம்பு நோக்கித்தள்ளியது. 3. மேலே 2 இல் சொன்னவற்றை இல்லாமல் ஆக்கினால் - தமிழர்கள் திம்புவை கைவிடுவது நியாயமாக இருக்கும். அனுர அரசின் நிலைப்பாடும் கிட்டதட்ட இதுதான். மேலே சொன்ன லிஸ்டில் கடந்த 30 வருடத்தில் மொழி, இன வன்முறை பிரச்சனைகள் இல்லாது ஆகி விட்டன (மீள வரலாம்). காணி/குடியேற்ற விடயத்தல்தில் - தமிழருக்கு சுய உரிமையதராவிடிலும், ஒரு நியாயமான காணிப் பங்கீடு பொறிமுறையை முன்வைத்தால் - திம்புவுக்க்கான தேவை இனி இல்லை என்ற நிலைப்பாட்டை நோக்கி தமிழரை உந்த ஜேவிபி முனையலாம். ஆனால் - காணி விடயத்தில் இம்மியளவும் நகர மஹா சங்கம் அனுமதிக்காது என்றே நினைக்கிறேன். திம்புவை கைவிடுவது, நாம் தேசிய இனமில்லை, நாம் ஒரு சிறுபான்மை இன குழு என நாமே ஏற்பதற்க்குச் சமன். தமிழ் கட்சிகளை தவிர்த்து, ஜேவிபி நேரடியாக தமிழ் வாக்காளர் மத்தியில் பிரபல்யம் ஆவது….இந்த நிலையை விரைந்து உருவாக்க கூடும்.
  8. @வீரப் பையன்26 நோடு நான் ஊர் அரசியலில் அதிகம் முரண்படுவதில்லை என்பதால் இதை பெரிசு பண்ண வேண்டாம் என உங்களை மன்றாட்டமாக கேட்கிறேன்🤣.
  9. வணக்கம் ராஜன் அம்மான். நல்வரவு. விரைவில் பதிவுகளை போட்டு தமிழக செய்தி பகுதிக்கு அனுமதி எடுக்கவும்.
  10. பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள். தமிழ் சிறி அண்ணைக்கும் நன்றி. ஊர் அரசியலே நக்கிகிட்டு போய்ட்டாம்…இதுல ஐபில் வேற🤣 இதில மிகவும் கஸ்டமான விசயம் என்னெவெண்டால்…. மார்ச் மாதமே ஊருக்கு போய்ட்டு வந்து யாழ்பாணத்தில் என் பி பி க்கு ஆதரவு பெருகுவதை எழுதினேன். ஜனாதிபதி தேர்தலில் கணிசமாக என் பி பிக்கு போடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அதில் மக்கள் வாக்களித்த முறை என்னை மாற்றி யோசிக்க வைத்து விட்டது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருந்தால் கொஞ்சம் புள்ளிகள் கூடி இருக்கும். சனம் இப்படி ரைட் சிக்னல் போட்டு, லெப்ட் கட் பண்ணும் எண்டு யார் கண்டது 🤣.
  11. ஒரு காலத்தில் வைரவன் போல் இருந்த நான் இப்போ கொஞ்சம், கொஞ்சமாக பேசா மடந்தை ஆகிகொண்டு வருகிறேன்🤣. யாழ் கற்றுத்தந்த அனுபவப் பாடமே இது. இப்போ என்னுடன் கருத்து பரிமாறும் போது மட்டும் இந்த வாதங்கள் தலையை தூக்கினால் இவற்றை சுட்டி காட்டுவது என்ற கொள்கை முடிவுக்கு வந்துள்ளேன். காரணம்? மிக எளிமையானது. இங்கே விரல் விட்டு எண்ண கூடிய சிலரை தவிர, அநேகர் ஏதோ ஒரு அல்லது பல வாத நோயால் பீடிக்கப்பட்டவர்கள்தான். சிலருக்கு முத்திய நோய். பலருக்கு unconscious bias. கூடவே இனிமேல் நாம் எழுதி எவரும் மாறப்போவதில்லை என்பதும் கண்கூடு.
  12. யார்ரா இது….. நமக்கே நம்ம பாணியில் டப் கொடுக்கும் ஒரு புதுமுகம்🤣. ஆனால் அண்ணனை கண்ணன் என்பது சரிதான் செவ்வியன். தீராத விளையாட்டுப்பிள்ளை…அவன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை…🤣. இணைந்திருங்கள். பிகு தெளிவடைய முயல்கிறேன்🤣
  13. ஓம் அவர் கண்டிக்கப்படவேண்டியவர் இல்லை. எனது தமிழில் ஒரு பொருள் மயக்கம் உள்ளது.
  14. மிக்க நன்றி. நீங்கள் எழுதியதை மூன்று நாலு தரம் வாசித்த்தால்தான் எனக்கு விளங்கும். ஓரளவுக்கு விளங்கியதும் தொடந்து எழுதுகிறேன்.
  15. அரைச்சதம் அடிப்பாரா அலப்பறை கோஷான்?
  16. இதுதான் உங்கள் பக்க நியாயம் எனும் போது அதை என்னை, சிறி அண்ணையை போலவே கொழும்பானும், வைரவனும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன். இணந்திருங்கள். இந்தியா வெல்லப்போகுது காலம் காத்தால ஒரு கடுப்பான செய்தி.
  17. இந்த களேபரத்தில் ஒன்றை எல்லாரும் கவனிக்க மறந்து விட்டோம். இதில் வன்மையாக கண்டிக்கபட வேண்டியவர் அமைசர் சந்திரசேகரன் அல்ல, எதும் செய்யாமல் அப்செண்ட் ஆகி இருக்கும் யாழின் ஒரே தமிழரசு எம்பி சாராயக்கடை சிறி. ஆனால் அவரை பற்றி எழுதாமல் - பதவியில் இல்லாத சுமந்திரனை பற்றி எழுதப்படுகிறது. ஏனையோரும் அதன் பின்னால் ஓடுகிறனர். இதுதான் யாழில் சில வருடங்களாகவே சாராயக்கடை சிறியின் அடிப்பொடிகள் மிக திறமையாக கைக்கொள்ளும் மடைமாற்றும் உத்தி.
  18. நீங்களும் காலம் காலமாக யாழில் நீங்கள் ஒரு மலையக தமிழன் என்றே சொல்கிறீர்கள். நானும் அப்படியே நம்புகிறேன். ஆனாலும் யாழில் உங்களை முஸ்லிம் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் ஒரு மலையக தமிழனாக அல்லது அந்த போர்வையில் (எப்படி இருப்பினும் காரியமில்லை) நீங்கள் கேட்ட கேள்வி மிக நியாயமானது.
  19. அய்யா, என்னை பைரவனோடு கோத்து விடாதேங்கோ பிச்சி மேய்ந்து போடுவார்🤣. —————- குறை விழங்க வேண்டாம், நீங்க என்னை குவோட் பண்ணி கேட்டதால் என் மனதில் படுவதை சொல்கிறேன். உங்கள் கருத்தில் நீங்கள் அறியாமலே ஒரு மையவாத தொனி எனக்கும் உணரகூடியதாகவே இருந்தது. சந்திரசேகரன் ஒரு அமைச்சர், அவர் வந்தது அந்த வகையில்தான். அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். ரணில் வரும் போது கொழும்பில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது, அல்லது டேவிட் கமரன் வந்த போது இலண்டனில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது இவர்கள் இங்கே ஏன் வரவேண்டும் என நாம் எழுதவில்லைதானே. உங்களிடம் உரையாடிய வகையில் நீங்கள் மையவாத கருத்துடையவர் என நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது என்பது உண்மை.
  20. ஒரு வீடியோவில், அருச்சுனா எங்கோ ஒரு கட்டிடத்தில் இருந்து வெளியே வருவார்…வரும் போது கூட வந்த கெளசல்யாவை காணவில்லை என்றவுடன், அருகே நிற்கும், வீடியோ எடுக்கும் ஆட்களிடம், எங்கடா தங்கத்தை காணோம் என கேட்டு தேடுவார். பின்னர் தங்கம் வந்து சேர, இருவரும் ஏதோ புதிசா கட்டிகிட்ட ஜோடி போல தங்கம் என அழைத்ததை இட்டு சிரித்தபடி போவார்கள். நாடாளுமன்றில் இருந்து போட்ட வீடியோவிலும், தங்கத்தை கலரியில் விட்டு விட்டு வந்தேன் ஆளை காணவில்லை என தேடுவார்.
  21. எழுதும் போதே இந்த எதிர்வினையை எதிர்பார்தே எழுதினேன். அதனால்தான் நெடிய பீடிகையோடு அந்த கருத்தை எழுதினேன். சீமானை இந்த திரியில்தான் அடிக்க வேண்டும் என்பதில்லை எனக்கு. அதற்கு போதிய அளவு யாழில் திரிகள் உள்ளன. இது இந்த ஒப்பீட்டை தெளிவுபடுத்த தகுந்த இடமாக தெரிந்தது. இல்லை இது வாளி காவல்தான் என நீங்கள் நினைத்தால் - அதையிட்டு அதிகம் அலட்டி கொள்ளாமல் அப்படியே விட்டு விடலாம் என நினைக்கிறேன்.
  22. சாய்ரா அறிக்கை விட்டதும் பின் ஆடியோ விட்டதும் தவிர்த்திருக்க வேண்டியவையே. நான் இதை அவர் மன அளுத்தத்தில் இருக்கிறார் என்ற கோணத்தில் அணுகுவதால் - அவரின் செயலை கடந்து போக முடியுமாய் இருக்கிறது. அதே போல் தொழிலில் அதிகம் ஈடுபடுவோர் குடும்பத்தை புறக்கணிப்பதும் உண்மையே. விஞ்ஞானி நியூட்டன் போன்றோர் கூட இப்படித்தான் என முன்னர் படித்திருக்கிறோம். ஆனால் எமக்கு அதிக விடயங்கள் தெரியாது. உதாரணமாக 1999 காலத்தில் ரஹ்மான் இலண்டனுக்கு வசிக்க வந்தபோது அவருக்கு வாகனம் ஓட்டியவரின் பேச்சு படி, அவர் தன் முழு குடும்பத்தையும் இங்கே கூட்டி வந்து வாழ்ந்தார் என்றும் பிள்ளைகள் விடயத்தில் அக்கறைகோடு இருந்தார் என்றும் அறிகிறேன் (அப்போ கேள்விப்பட்டது). அதே போல் ஏனைய மணமுறிவுகள் போல் இதில் பாலியலோ, பணமோ அதிக தாக்கம் செலுத்தியதாக நான் நினைக்கவில்லை. கெளதம புத்தரின் மனைவிக்கு ஏற்பட்ட நிலைதான் சாராவுக்கு என. நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.