-
Posts
15622 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!
goshan_che replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
புலமையை விட - அநேகர் தந்தி டிவி உட்பட நித்தி தனது டுபாகூர் இணையதளத்தில் போடுவதை அப்படியே செய்தியாக்குவதுதான் ஏன் என விளங்கவில்லை. உண்மைதான் .gov.xx டொமேயின் எடுப்பது கடினம் ஆனால் அமெரிக்கா நாடு என அங்கீகரித்தால் அதன் பின் இலகு. -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
எல்லரையும் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கு அவரவர் அளவில் காரணங்கள் இருக்கும். சிலருக்கு பொருளாதாரம், சிலருக்கு இப்போ இருக்கும் சமூக தளைகளில் இருந்து விடுதலை, சிலருக்கு காதல், சிலருக்கு இப்போ இருக்கும் மதத்தில் நம்பிக்கை அற்று போதல், சிலருக்கு ஆற்றொணா துயரத்தில் இருந்து ஆறுதல், இப்படி ஒன்று அல்லது பல காரணங்களின் கூட்டாக இருக்கலாம். -
சும்மா பேசீட்டே இருந்தா எப்படி? அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாம்?
-
கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!
goshan_che replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
நீங்களுமா இணையவன்? 1. நித்யாநந்தா தனது நாட்டுக்கு .gov.XX இணைய முகவரியை கூட பெறவில்லை. 2. Sister Cities, Twinned Towns என்பது நகர்கள் ஒன்றோடு ஒன்று இணையாகி செயல்படும் திட்டம். இது அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தபடுகிறது போல் தெரிகிறது. இதில் தமது பெயரை இறைமை உள்ள கைலாசா என கொடுத்து விட்டு. நியுவார்க் நகர பிதாவுடன் ஏதோ ஒரு ஒப்பந்தத்தில் கை எழுத்து போட்டு விட்டு. அமெரிக்கா கைலாசாவை அங்கீகரித்தது என கரடி விடுகிறார் நித்தி. எங்கே இந்த ஒப்பந்தம்? அதன் PDF? அமெரிக்காவில் ஒரு மேயரா சர்வதேச விடயமான நாடுகள் அங்கீகரிப்பை மேற்கொள்வார்? எனது அனுமானம் எதோ ஒரு service partner agreement ஐ எழுதி விட்டு அதை ஏதோ நாடுகளிடையான ஒப்பந்தம் போல கரடி விடுகிறார்கள். ஆனால் இப்படி ஒரு சின்ன ஒப்பந்தம் கூட இந்த டுபாகூருடன் போட்டிருக்க கூடாது மேயர் என்பது வேறு விடயம். 3. மேலே நீங்கள் இணைத்த ஐநா அங்கீகார டுபாகூர் என்ன தெரியுமா ? OHCHR எனும் ஐநா அமைப்பு ஒரு விடயம் சம்பந்தமாக கருத்து உள்வாங்கலை செய்துள்ளது. https://www.ohchr.org/en/calls-for-input/2022/call-inputs-comments-draft-statement-non-state-actors-and-enforced?fbclid=IwAR2ZBtpsNKBu9rxIVhoN8BpBi7hSYOXIEwoXSMRvPPM64sRri-aDL7yJpys இந்த call for input இல் - நாடுகள் சிலதும், சமூக அமைப்புகள் பலதும் தமது கருத்தை எழுத்து மூலம் கொடுத்துள்ளன. இதில் யூனியன் ஒவ் கைலாசா ஒரு சிவில் அமைப்பாக கொடுத்ததை, அப்படியே பதிந்துள்ளார்கள். ஆலடி சனசமூக நிலையம் ஒரு அறிக்கை கொடுத்தால் அதையும் போட்டிருப்பார்கள். இப்படிதான் கைலாசாவின் ஒவ்வொரு நடவடிகையும். எமக்கு ஒரு உலகளாவிய அமைப்பை அமைக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதை எப்படி அமைக்ககூடாது என்பதற்கு நா.க. அரசும், நித்தியும் நல்ல பாடங்கள். -
இப்ப இதுக்கு மூட நம்பிக்கை என ஒருவர் எழுதணும். மனம் புண்பட்டு விட்டதாக சைவ சேனை கிளம்பி வரணும். ரணகளம் ஆகணும். அது சரி பிழம்பு எண்டால் கொழுத்தி போட்டால்தானே மரியாதை🤣.
-
கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!
goshan_che replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
இருந்தா கண்டு பிடிக்க மாட்டமா என்ன? 🤣 -
கைலாசாவுடன் அமெரிக்கா, இந்தோனேசியா ஒப்பந்தம்!
goshan_che replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
போலாம் முதல்ல நாடு எங்க இருக்கு எண்டு தெரிஞ்சாதானே வழி கண்டு பிடிக்கலாம்🤣 -
அந்த தீவின் பெயர் டியகோ கார்சியா… பிரிட்டன் வைத்திருந்து பின்னர் அமெரிக்காவுக்கு பேஸ் அமைக்க வாடகைக்கு கொடுத்திருக்கு. இங்கே இருந்த மக்களை வேரறுத்து சீசெல்ஸ், மாலதீவு என அனுப்பினார்கள். வழக்கு அண்மையில்தான் முடிந்தது. சொந்த நிலம் மீளும் அம்மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. https://ta.m.wikipedia.org/wiki/தியேகோ_கார்சியா
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இது நீங்கள் பிழையாக விளங்கியது. கரு தான் எறிவேன் என சொல்லவில்லை. ஏனையோர் கை இருக்கு என்பதால், சாணக்கியன் மீது எறிகிறார்கள் என்றே சொன்னார். எது எப்படியோ, நடந்தவற்றை மாற்ற முடியாது. அமுதோ, விஷமோ விதைக்கப்பட்டது, விதைக்கப்பட்டதுதான். கருவாடு மீனாகாது 🙏🏾. -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நான் இப்படி யோசித்தேன். உங்களுக்கும் கருவுக்கும் ஒரே மடலாக எழுதி, இருவரின் சர்ச்சைகுரிய கருத்துக்களையும் வாபஸ் வாங்கும்படி கேட்கலாம் என்று. ஆனால் இன்று இல்லாவிடிலும் இன்னொரு நாள் கோசான் சாணக்கியனின் பொட்டு கேட்டை நீக்கும் படி தனி மடலில் கோரினார் என்ற குற்றசாட்டு வந்து விடும் என பயந்து விட்டு விட்டேன். என் கருத்துகள் இந்த நோக்கில் நிச்சயம் வரவில்லை. நீங்கள் சொல்லியதில் மதத்தை இழுத்ததை தவிர வேறு எதை பற்றியும் நான் எழுதவும் இல்லை. இந்த திரியில் சில புரிதல் பிழைகளும் நடந்துள்ளன. கீழே இரு உதாரணங்கள் தருகிறேன். நீங்கள் சசி சொன்னதை சரி என்று ஏற்று “உங்கள் கருத்துக்கு நன்றி” என்று எழுதி உள்ளீர்கள். ஆனால் நான் அதை தலைகீழாக, சசிக்கு “உங்கள் கருத்தை உங்களோடு வைத்து கொள்ளுங்கள்” என்ற தொனியில் நீங்கள் சொல்லியதாகத்தன் இப்போ வரை விளங்கி கொண்டிருந்தேன். -
1994/95 சந்திரிகாவின் தேர்தல் வாக்குறுதியில் ஒண்டு ஒரு இறாத்தல் பாணை ரூ 3.50க்கு கொடுப்பது. ஆனால் மாவின் விலையை குறைக்கவில்லை. எனவே பேக்கரிகாரர் எல்லாம் பாணை சின்னதாக்கி, இது பாணா, கேக்கா என யோசிக்கும் அளவுக்கு சின்ன சைஸ் பாண்களை வித்து கொண்டிருந்தனர். அப்போ இப்படி ஒரு பாணுக்குள் கரப்பான் பூச்சியை கண்டெடுத்த பெண் ஒருவர் பேக்கரி உரிமையாளரிடம் போய் நியாயம் கேட்க, உரிமையாளர் வலு கூலாய் சொன்னாராம், ”மா விக்கிற விலைக்கு, நீங்கள் தாற 3.50 த்துக்கு பாணுக்க சிக்கின் லெக் பீசையா எதிர்பார்கிறியள்” என்று 🤣.
-
பயன்படுத்தும் முறை 1. வலப்பக்கம் இருக்கும் மூன்று தடி ஐகானை அழுத்தவும் 2. Account தெரிவை அழுத்தவும் 3. கடைசி தெரிவான ignore list ஐ அழுத்தவும் 4. அங்கே add to ignore list என்ற தெரிவில், தேடல் பெட்டியில் நீங்கள் ignore பண்ண விரும்பும் பயனாளர் பெயரை தட்ட - தானாக காட்டும். அழுத்தி அவரை பட்டியலில் சேர்க்கவும். 5. கீழே அவரின் சகல செயல்களையுமா அல்லது பதிவுகளை மட்டுமா ignore செய்ய போகிறீகள் என்ற தெரிவுகள் இருக்கும். தேவைக்கு ஏற்ப எல்லாவற்றையும் அல்லது ஒரு சிலதை தெரிந்து கொள்ளலாம். 6. வெளியே வந்து விட்டு. மீள போய் பார்தால். நீங்கள் முச்சந்தியில் பூசனி உடைந்த நபரின் பெயர் அந்த லிஸ்டில் மின்னும்😀. 7. ஜாலி லே ஜிம்கான 🥳🥳🥳
-
யாழ்களத்தில் இந்த வசதி இருப்பது எத்தனை பேருக்கு தெரியுமோ, தெரியாது. யாழில் இக்னோர் லிஸ்ட் என்று உள்ளது. முன்பு இருந்ததாக நியாபகம் இல்லை. நான் இன்றுதான் பரீட்சித்து பார்த்தேன். அற்புதமாக வேலை செய்கிறது 🥳 வழமையாக கருத்துக்களத்தில் எல்லாருடனும் கருத்து பரிமாறுவது என் வழக்கம். எனக்கு பதில் போட்டோருக்கு தொடர்ந்து பதில் போடாமல் போனதும் அரிது. ஆனால் அதே போல் முகவர்களோடு முகம் கொடுத்தே கதைப்பதில்லை என்பதும் பலவருட கொள்கை முடிவு. இதனால் சில வாய்புகளை கூட வாழ்வில் தூக்கி எறிந்ததுண்டு. யாழிலும் முகத்துக்கு நேராகவே சொல்லியபின்பும், செருப்பில் ஒட்டிய அசிங்கம் கழுவிய பின்ன்னும் மணப்பது போல யாரும் இருந்தால் நீங்களும் இந்த இக்னோர் லிஸ்டை பயன்படுத்தலாம்.
-
ம்ம்ம்… ஆனால் முடிவுகள் என்ன? 1. பெப்ரவரி 22 க்கு முன்னான நிலை அல்லது அண்மித்த நிலையில் எரிவாயு வின் மொத்த விலை 2. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஈயுவிடம் எரிவாயு சேமிப்பாக கையிருப்பு (இதை விலையை கீழே வைத்த படி, தீர-தீர நிரப்பலாம்) 3. ரஸ்யாவுக்கு மாற்றீடான எரிவாயு ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடன் (கப்பல் மூலம் திரவ ஏரிவாயு), மற்றும் நோர்வேயுடன்- டென்மார்க், போலந்து (பைப்). இது போர் முடிந்தாலும் ரஸ்யாவின் மிக பெரும் அந்நிய் செலாவணியை ஈட்டி தரும் துறையை கிட்டதட்ட அதன் மிக பெரிய சந்தையில் இருந்து ஓரம் கட்டிவிடும். ரஸ்யா இனி ஐரோப்பிய சந்தைக்கு, குறிப்பாக ஜேர்மனியின் சந்தைக்கு திரும்பி வந்தாலும் அது முன்னர் போல் monopoly ஐ எரிவாயு விடயத்தில் கொண்டிராது. அதே போல்தான் யூகேயில் அணு நிலையங்கள், காற்றாலைகள் - ஜேர்மனியிலும், பிரான்சிலும் இதே போல் காபன் எரிபொருள் அற்ற வழிமுறைகள் பல மக்கள் எதிர்ப்பை ரஸ்யாவை காட்டி அடக்கி நடந்தேறி விட்டன. இவ்வாறு பல முனைகளில் எரிபொருளால் ரஸ்யா பொருளாதார, இராணுவ, பிராந்திய பலத்தை அடைவது குறுகிய, மத்திய, நீண்ட கால நோக்கில் முனை மழுங்க பட வைத்கிருப்பதாயே எனக்கு படுகிறது. 4. மிக முக்கியமாக - ஏரிவாயுவையும், எண்ணையும் ஒன்றல்ல. எண்ணை கப்பலில் ஏற்றி யாருக்கும் விற்கலாம். ஆனால் அதையும் காப்புறுதி, உச்ச வரம்பு மூலம் மட்டு படுத்துகிரார்கள். ஆனால் எரிவாயு விநியோகிக்க உள்கட்டுமானம் அவசியம். நான் வாசித்து தெரிந்த வரை சைபீரியாவில் இருந்து எத்தனையோ நாடுகள் கிட்ட இருந்தும் ஜேர்மனி வரை பைப்பை இழுத்து வந்ததுக்கு ஒரே காரணம் - இப்படி எடுத்து விற்கும் செலவை ஈடு கட்டி, லாபமும் பார்க்கும் வகையில் (economically viable) கொள்முதல் செய்ய கூடிய இடங்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா மட்டுமே. சீனாவும் விரும்பினால், சீனா வாய்புள்ள சந்தையாக மாறலாம் - ஆனால் உள்கட்டுமானம், சீனாவில் எரிபொருள் பாவனை முறையை மாற்ற எடுக்கும் ஆரம்ப செலவை ஏற்க சீனா தயாரில்லை. சீனாவும் வெளியாரில் தங்கி இராமல், சக்தி-சுயசார்பு அடையவே விரும்புகிறது. ஆகவே அதுவும் காபன்-அற்ற தொழில்நுட்பங்களிலேயே முதலிட விரும்புகிறது. 20/30 வருடத்தில் முடிய போகும் துறைக்கு, அதிக பணத்தை முதலிட சீனா தயாரில்லை. நோர்வே பைப்லைன் ஒப்பந்தம் ஆகி செயல்படவும் தொடங்கி விட்டது. ஆனாலும் 5 வருடம் வரைக்குமே இதில் அதிக வருவாய் வரும் என கணிக்கிறது நோர்வே அரசு. 2024 இன் பின் வருவாய் இறங்குமுகமாயே இருக்கும் என்பது அவர்களின் லாப முன்கணிப்பில் உள்ளது. 5. மேற்குக்கு ராஸ்யாவின் சக்தி வியாபார்த்தை முற்றாக தடுப்பது அல்ல நோக்கம். அது முடியாது என்பதும் தெரியும். ஆனால் அதை ஒரு ஆயுதமாக பாவிக்காமல் தடுப்பதே இலக்கு. பிகு 1 இதனால் இனி எரிவாயு, எண்ணை விலை ஏறாது என்பதல்ல. ஒரு புயல் மெக்சிகோவில் என்ணை எடுப்பதை குழப்பினால் விலை கூடும் துறை அது. ஆனால் ஏரிபொருளை ஆயுதமாக்கல் (weaponising fuel supply ) என்ற தந்திரோபாயம் முனை மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். பிகு 2 உங்கள் பாதுகாப்ப்பமைச்சர் கிளம்பியாச்சு. அடுத்து வருபவர் சிறுத்கைகளை உக்ரேனுக்கு அனுப்புவாரா?