goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by goshan_che
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
அன்றைய சேரர்தான் இன்றை மலையாளிகள் (திராவிடரின் 1/4 பங்கு) மற்றும் ஈழத்தமிழர் (சேர, சோழ கலப்பு). நீங்கள் முந்தி, சரோஜாதேவி, இன்பநிலா, திரைச்சித்திரா போன்ற சஞ்சிகைகளின் சந்தாதாரராக இருந்தீர்களா? சீமான் என்ன சொன்னாலும் கைது செய்யமாட்டார் ஸ்டாலின். காராணம் சீமானின் அரசியல் செல்வாக்கு…. யாரிடம் இருந்து ? மோ……? அமி…..?
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
அரசியலில் இருக்கும் போதுதான். பிரேமதாசா காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் சம்பந்தமாக அன்னையர் முண்ணனி, தொழில் சங்கங்களுடன் சேர்ந்து மகிந்த போராடினார், ஐநா வரைக்கும் போனார். ஆனால் அப்போதும் அவர் சு.க எம்பிதான்.
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
இல்லை உங்களை அடக்கவில்லை. நீங்கள் தமிழ் தேசியவாதி இல்லை எனும் போது உங்கள் எதிர்பார்ப்பு சகல இலங்கையரினதும் வழக்கை மேம்பட்டால் போதும் என்பதே. நீங்கள் தமிழ் தேசியர் இல்லாதபடியால், திட்டமிட்டு குடியேற்றங்கள் மூலம் எம் நிலத்தில் எம் இனப்பரம்பல் சிதைக்கப்படுவதும், விகாரைகள் முளைப்பதும் உங்களுக்கு பொருட்டாயிராது. எமது பகுதியில் நீங்கள் வசிக்கும் நாடு போல ஒரு உள்ளூர் பொலிஸ் இருக்க வேண்டும் என்பதும் உங்கள் அவா இல்லை. எமது பகுதிக்கு என நாம் அனுப்பும் பணத்தை எங்கே எப்படி செலவழிப்பது என்று, கொழும்பு அதிகாரிகள் அன்றி அந்த பகுதி மக்களே செலவழிக்கும் முடிவை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என நீங்கள் நினைக்க போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழ் தேசியர் அல்ல. நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ளூர் அதிகார பரவலின், மொழி வழி கண்டோன் பிரிப்பின் அத்தனை வரபிரசாதங்களை நீங்கள் அனுபவித்தாலும், இதை எம்ம்மக்களும் பெற வேண்டும் என்ற வீண் அவா உங்களுக்கு இல்லை. அவர்கள் கொழும்பில் இருந்து தொந்தரவு இல்லாமல் ஆளப்பட்டால், போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள். எனவே நீங்கள் தமிழ் தேசியர் இல்லை. அதனால் அனுரவிற்கு ஆதரவு நல்லினாலும் நீங்கள் அனுர பிரிகேட்டில் இல்லை. அனுர பிரிகேட், தமிழ் தேசியமும் பேசி கொண்டு, அனுரவையும் ஆதரிக்கும் கொன்பியூஸ்ட் கூட்டம்.
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
ஓம்…ஆனால் அதுக்கே நமக்கு முள்ளத்தண்டு சிலிர்த்து விடும்🤣.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
நன்றி ஜி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எனக்கு என்னமோ கொல்வின் ஆர்டி செல்வா, பீட்டர் கெனமன், போன்ற படித்த பெருந்தகைகள் எல்லாம் 1972 தேர்தல் வெற்றிக்கு பின், பாராளுமன்றுக்கு வெளியே நவரங்க ஹலவில் கூடி…. சிறுபான்மைக்கு பாதுகாப்பை கொடுத்த, ஆங்கிலேயர் விட்டு சென்ற சோல்பரி யாப்பை தூக்கி வீசி, நாம் இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறைப்பாடு அணுகும் உரிமையை பறித்து, மீறப்பட முடியாது என சோல்பரி யாப்பு கூறிய சிறுபான்மையின பாதுகாப்பு சரத்துகளை எல்லாம் கடாசி எமக்கு பொறுத்த ஆப்பை சொருகிய தருணம்தான் நினைவுக்கு வருகிறது.
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்: சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கஸ்தூரியும் கணவரும் பிரிந்து 20 வருடம் இருக்கும் என நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை மட்டும் என நினைவு. பிற்சேர்க்கை - ஒரு ஆண் குழந்தையுமாம். அதை ஏன் மறைத்து வளர்க்க வேண்டும். நுணலும் தன்வாயால் கெடும். இருக்கலாம். எழுத்து நடை பாரதிதாசன் போலவே உள்ளது. @Kavi arunasalam உங்களுக்கு தெரியுமா?
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
பாரதியா கடிதம் எழுதியது தெரியும் ஐலண்ட். அச்சம் என்பது மடமையடா பாடல் கண்ணதாசன் எழுதியது என நினைக்கிறேன்?
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
இது கண்ணதாசன் அல்லவா?
-
தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”
இந்திய இராணுவம் பற்றிய படம் என்றால்—படம்முழுக்க பாலியல் வன்கொடுமையாக அல்லவா இருக்க வேண்டும்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
தெலுங்கர்களை பற்றி தப்பா பேசீட்டு ஹைதரபாத்தில் போய் ஒளிவதெல்லாம் வேற லெவல் ராஜதந்திரம்🤣. அம்மணி இதுநாள் வரை தெலுங்கு சீரியல்களின் பிசியான நடிகையாம். இனி?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கனடா ஹைகொமிசனர் உங்கள் தோழருக்கு கிட்டதட்ட உறுதி. உங்களுக்கு லாங்காஸ்டர் ரோட்டில் வாழ அதிஸ்டம் உள்ளதோ யார் கண்டார்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என் நிலைப்பாடு 1. இதில் தலைவர் பற்றிய எழுச்சி இயக்கப்பாடல் பாடி வெற்றியை கொண்டாடுகிறார்கள். 2. செல்வம் = பிரபாகரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் செல்வத்துக்கு பக்கதில் நிற்கும் கோமாளியின் அங்க சேட்டை அப்படி ஒரு தொனியை கொடுக்கிறது. செல்வம் அவரை தடுத்திருக்க வேண்டும். 3. ஆனால் செல்வத்துக்கு அருகில் நிற்கும் கோமாளியின் செயலுக்காக தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காமல் விட முடியாது. பிகு தலைவர் இருக்கும் போதே அவரை துதிக்கு பாடுவதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
காலம் கட்டாயம் பதில் சொல்லும். சதுரங்க்க ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வைத்த பொறியில் நாம் கச்சிதமாக வீழ்ந்தோம் என.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இங்கே பலர் 28 தமிழ் எம்பிக்கள் போகிறார்கள் என குதூகலிக்க்கிறார்கள். இன்னும் சிலர் வாய்ப்பளித்த என் பி பி, வாக்களித்த சிங்கள மக்கள் நெஞ்சை நக்காத குறை…. ஆனால் இதில் 14 எம் பி க்கள் தவிர மிச்சம் எல்லாம் ஒவ்வொரு கதிர்காமர், டமாரா குணநாயகம் என்பது போக போக விளங்கும். திட்டமிட்டே தெற்கில் கூட என் பி பி தமிழ் எம்பிக்களை இறக்கி வென்றுள்ளது. பிஸ்கோத்து திட்டத்தை திணிக்கும் போது -பார்தீர்களா எத்தனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் எம்பிகள் இதை ஆதரிக்கிறனர் என பிரசாரம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். Sorry to say this, சிங்களவன் எப்பவும் உங்களை விட ஒரு அடி முன்னால் யோசிப்பவன். இப்போதும் இதுதான் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அது உள்ளூராட்சி சபையாகவும் இருக்கலாம், அதை தமிழ் மக்களால் தெரிவு செய்த எம்பிகள், மாகாண சபை ஆதரிக்கும் என்றால் ஐ எம் எவ் அல்ல ஆண்டவனே எதுவும் செய்ய முடியாது. புலிகள் மிகவும் முயன்று பாதியளவு வெற்றியடைந்த விடயம் எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது. நாமே என் பி பி எம்பிகளை தேர்ந்து அனுப்புவது - அதை அப்படியே ரிவர்ஸ் ஆக்கி விடும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தனி தனியா கூட்டம் போட்டு கதைக்காமல் கஜேஸ், அருச்சுனா, மான், மீன், பாம்பு, பல்லி என தமிழரசு தவிர் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டும் வேலையில் இறங்குங்கோ. மயூரன் போல புதிய முகங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கோ. 60 க்கு மேல் ஒருத்தருக்கும் சீட் கொடாதேங்கோ. மக்கள் மீள வருவர்கள்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நன்றி இது ஒரு பிரபலமான ஆங்கில சொலவடைத்தான். நான் சுமனின் பெயரை மட்டும் சொருகினேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதுதான் இனி இலங்கை அரசின் சர்வதேச பிரச்சாரத்தொனி…. அதாவது தமிழர் 1948 இல் இருந்து கேட்டது இனவாத கோரிக்கை… இப்போ மனம் திருந்தி நல் வழிக்கு வந்து விட்டார்கள்…. இனி எமக்குள் பிரச்சனை இல்லை… நீங்கள் (வெளிநாடுகள், புலம்பெயர் தமிழர்) இதில் தலையிட தேவையில்லை. இதை பாவித்து எமது சகல கோரிக்கைகள், விசாரணைகளை எப்படி அடுத்த 5 வருடத்தில் அடித்து நூத்து ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறார்கள் என்பதை உக்காந்து பாருங்கள். இதற்கு முன் பல தமிழ் பெண் எம்பிக்கள் இருந்துள்ளார்கள். அனந்திக்கு மா.சபை தேர்தலில் கிடத்க வெற்றி நியாபகம் இருக்கும். இப்போது கூட பல பழுத்த தலைவர்களை விட கெளசல்யா வாங்கிய விருப்பு வாக்கு அதிகம். சுமந்திரன், கஜன், ஶ்ரீ போன்றோர் தமக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதால் ஒண்டுக்கும் உதவா பெண்களை போட்டியில் இறக்கினர் ஆகவே மக்கள் வாக்களிக்கவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அவர் பெயரவில்தான் தமிழர். மற்றும்படி அவர் ஒரு முழு நேர இடது சாரி. அவருக்கு விழுந்த வாக்குகள் இதற்காக விழுந்தவையே தவிர வேறெதூக்கும் அல்ல. தமது தமிழ் அடையாளத்தை விடுத்து இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்கும் எந்த தமிழரையும் சிங்களவர் எப்போதும் தம்மில் ஒருவராக ஏற்று கொண்டே வந்துள்ளனர். கதிர்காமர் மாத்தறையில் கேட்டிருந்தால் முதலாவதாக வந்திருப்பார்.🤣 தமிழகத்தில் அண்ணன் காட்டிய வழியில், இலங்கையில் அப்புகாத்துகள்🤣. #மூன்றாம் பெரிய கட்சி #யாழ்பாணத்தில் ஒத்தை ரோசா 🤣
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வரத்தான் அத்தியாயஙங்கள் 1, 2 இல் அத்தனை அநியாயங்களையும் செய்தார்கள். 1. நாம் நியாயமான உரிமையை கேட்டோம் 2. நாயை அவிழ்த்து விட்டு குதறினார்கள் 3. இப்போ நாயை கட்டி போடுவோம் என்கிறார்கள். நாம் அவர்களை மீட்பர்கள் என்கிறோம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இதில் பாதிப்பேர் அனுரவின் பஸ்சில் ஏறி பைலா போட ஆரம்பித்து விட்டார்கள். மீதி பாதிக்கு subscription expired ஆகிய கேபிள் டீவி நேயர்கள் நிலைதான். சுமன் அரசியலை விட்டு முற்றாக நீங்க வேண்டும் என நான் நினைக்க 2 காரணங்கள். 1. அவரின் சுத்து மாத்துக்கள் இராது 2. சுமனை சாட்டி, ஶ்ரீக்கும் அனுரவிற்கும் ஆள் பிடிக்கும் பார்த்தசாரதிகளால் அப்படி செய்ய முடியாமல் போகும். சுமன் இலண்டன் வந்தால் நிச்சயம் பார்த்தசாரதி அடிப்பார். ஆனால் பார் லைசன்ஸ் ஶ்ரீ வந்தால் ஏர் போர்ட்டில் இறங்கி மீள ஏறும் வரை அவருக்கு சாரதி வேலை பார்ப்பார். துடைத்து விடாத குறைதான். (சாப்பிட்ட பின் வாயை சொன்னேன்).
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இதை கட்டாயம் செய்வார். தமிழ் தேசியத்துக்கெதிரான 76 வருட 3 அத்தியாய போரின், 3 வது அத்தியாயத்தை வெல்லும் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தின் தந்திரோபாயம் இதுதான்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
1. இது உங்கள் நிலைப்பாடு என தெரியும். 2. ஆனால் வடக்கு கிழக்கில் இன்னமும் அறுதி பெரும்பான்னையான எம் மக்கள் இந்த முடிவுக்கு வரவில்லை. 3. சில புலம்பெயர் தேசிய தூண்கள், முறிந்த பனை என்ற ஒரு புத்தகத்தை வெளியிடுவதை கூட தேசியத்துக்கு எதிரான செயல் என கருதி யாழில் அதை அழித்தவர்கள், யாழ் ஒரு தமிழ் தேசிய ஊடகம் அதன் agenda எப்போதும் அதுதான் என என் நீண்ட ஒரு ஆக்கத்தை அழித்து விட்டு எனக்கு வகுப்பெடுத்தோர் எல்லாம் - இப்போ ஒரு ஒத்தை மாத்தறை எம்பியில் சுருண்டு போய் விட்டார்கள். 89-2015 வரை ஜேவிபியை வழி நடத்தியது குமார் குணரட்ணம் என்ற தமிழர் என்பதும் அப்போதுதான் ஜேவிபி மோசமாக இனவாதம் கக்கியது என்பதும் இவர்களுக்கு மறந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாள் போக, ஒரு தமிழரான கதிர்காமரை வெளிநாட்டமைச்சர் ஆக்கிய சிங்களவர் எவ்வளவு பெருந்தன்மையானோர் - நாம்தான் தவறாக விளங்கி கொண்டோம் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.