Everything posted by goshan_che
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
செத்த கிளிக்கு ஜோசியம் எதற்கு😁
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
கொஞ்சம் முயன்றால் அவரை மிஞ்சியே விடலாம்.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
நீங்க யாரும் இந்தியாவிடம் விலை போக கூடாது….. நான் மட்டும்தான் போவேன்😂 #தொழில் போட்டி
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
நீங்கள் சுமந்திரன்😀
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உண்மையில் எனக்கு எந்த நாடு மீதும் இப்போ கோபம் இல்லை. சகல உலக நாடுகளும், இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படி இரெட்டை வேடம் போடும் சந்தர்ப்பவாதிகள்தான். லோரன்ஸ் ஒவ் அரேபியா காலத்தில் அரபிகள், இப்போ குர்திக்கள், ஆர்மேனியர்கள்… நாம்.. லிஸ்ட் மிக நீண்டது. நாளைக்கு நாம் ஒரு பெரிய நாட்டை அமைத்தாலும் அது கூட இப்படியாகவே நடந்துகொள்ளும். இதை நாம் சரிவர கையாளவில்லை. அவர்களும் நியாயமாக நடக்கவில்லை. ஆனால் அதனால் விளங்க தீமை எம்மை மட்டுமே தாக்கியது.
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
முதலாவது கை அறுப்பவர் ? பிரெசெண்ட் சேர் 🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் V தாமரைக்கோபுரம் உருவாகி வரும் இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டல், கொழும்பு மாநகரசபை கட்டிடம், வெளி ஊர்களில் இருந்து, உறபத்தியாளர்கள் நேரடியாக புறக்கோட்டைக்கு மரக்கறிகளை கொணர்ந்து விற்கும், இரவுச்சந்தை. தென்னிலங்கை கடற்கரைகளும், ஐரோப்பிய பயணிகளும் காலி கோட்டை உள்ளே கொழும்பு புறநகர் ரயில் - காதல் ஜோடியும் கச்சான் வியாபரியும். பழைய ஆனால் சுத்தமான ரயில் பெட்டிகள். அதே ரயிலில் பாட்டு பாடி யாசகம் எடுப்பவரும், பயணிகளும். ……அதிலும் கொடுமை இளமையில் துறவு🥲….. என் வீட்டுத்தென்ங்கன்றை இப்போதே கேட்டுப்பார்😀. உன்பெயர் சொல்லுமே🤣…..
- IMG_5866.jpeg
- IMG_6094.jpeg
- IMG_6227.jpeg
- IMG_6260.jpeg
- IMG_6332.jpeg
- IMG_6443.jpeg
- IMG_6440.jpeg
- IMG_6493.jpeg
- IMG_6496.jpeg
- IMG_6581.jpeg
- IMG_6640.jpeg
- IMG_6654.jpeg
- IMG_6707.jpeg
- IMG_6831.jpeg
- IMG_6844.jpeg
- IMG_6843.jpeg
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உங்களின் மனநிலைதான் எனக்கும். ஆனால் வயது நாற்பதின் நடுப்பகுதியை விட்டு விலக ஆரம்பித்திருப்பதால் அடுத்த கட்டங்கள் பற்றி சிந்திக்கவாவது முனைகிறேன். ஒவ்வொரு முறையும் உணர்வதுதான் ஆனால் இந்த முறை இதை கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்தேன்👇. என்ன மாயமோ தெரியவில்லை, அங்கே போனதும் சிறு, சிறு உடல் உபாதைகள், நோவுகள் எல்லாம் காற்றாய் பறந்து விடுகிறன. உடல் சோர்வதில்லை, மூட்டு வலிப்பதில்லை, தடிமன் காய்ச்சல் கூட மிக அரிதே. அதே போல் கும்பகர்ண விருந்து சாப்பிட்டாலும் கூட ரத்த சீனியின் அளவை மிக இலகுவாக கட்டுப்படுத்த முடிகிறது. Feeling healthy என்பார்களே இது ஊரில் நிச்சயம் ஒரு மடங்கால் கூடுகிறது. இது தனியே கொலிடே மனநிலை மட்டும் இல்லை என நினைக்கிறேன். ஏதோ ஒரு பெளதீக மாற்றமும் உள்ளது. சூரிய ஒளி/வைட்டமின் டி யாக இருக்கலாம். இவ்வாறு, ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன். நாமும் அணுகவில்லை. தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா? ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை. இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை.