Everything posted by goshan_che
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
அவர் இவர் நரியார் எல்லாரும் ஒரே கோட்டில் என்று கேள்விப்பட்டேன். நாட்டில் நீங்கள் சொல்வது சரி. புலம்பெயர் நாட்டில்?
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
திட்டமிட்டு யாரோ மே 19 ஆரம்பிக்குமாறு வைக்கிறார்களோ?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
நன்றி. இலங்கையில் இருந்து இயங்கும் பத்திரிகைக்கு உள்ள தைரியம் புலத்தில் இருந்து இயங்கும் தமிழ்வின்னுக்கு இல்லை. உள்ளபடி எழுதினால் ஶ்ரீதரனுக்கு சிக்கல் வரும் என்ற பயமாய் இருக்கும்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பக்கத்தில ஒரு அன்ரி கையை ஓங்கிறா…சந்தர்ப சாட்சிப்படி அவதான்🤣. சவுக்கு இதை வைத்து அனுதாபம் தேட முனைந்தாலும்…..பலருக்கு இவர் அந்த அப்பாவி பெண்ணின் மரணத்தில் பெட்டி வாங்கி கொண்டு ஆடிய நியாபகம்தான் மனதில் வந்து போகும்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
காடெல்லாம் கஞ்சாவானால், அதில், கால் கிலோவை நான் இழுப்பேன்🤣 கை உடைந்து இந்த மாரி கட்டுப்போட்டால், கையை தூக்க கூடாது. அதுக்காகத்தான் இப்படி brace போடுவது. இப்ப பலர் கேட்க்கும் கேள்வி என்னவென்றால்…இந்தளவு முறிவோடு சவுக்கு எப்படி டி சேர்ட் போட்டார்? வழமையா இந்த காயம் உள்ளோர் பட்டன் சேர்ட் போடுவதுதான் வழக்கம்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
தொடை நடுங்கி தமிழ்வின் ஏன் அரசியல்வாதி முகத்தை மறைக்கிறது? பெயர் வெளியிடவில்லை? பயமா? அல்லது வெட்டி ஒட்டிய ஊடகத்தில் இந்த விபரங்கள் கிடைக்கவில்லையா?
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
👆🏼👇 அவர்கள் சொல்லியதைதான் முகமது கட் அண்ட் பேஸ்ட் பண்ணினானர். #ஆபிரகாமிய மதங்கள்
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
நியாயத்தை உணரத்தான் அதிக காலம் எடுக்காது. நியாயத்தை அடைய அதிக காலம் எடுக்கும். அடையாமலே போகவும் கூடும்.
-
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
கண்ணீர் அஞ்சலிகள். படுகொலை நடந்து மூன்று வருடங்களின் பின் அதே படகில் நெடுந்தீவு போனேன். படகின் நடுப்பகுதி முன் பின் பகுதிகளை மறைத்தபடி, நடுவில் இருக்கும் (இதன் மேலே தான் ஓட்டியின் அறை இருக்கும்) பயணிகள் அனைவரையும் பின் பகுதிக்கு அனுப்பி விட்டு, ஒருவர் ஒருவராக முன் பகுதிக்கு அழைத்து வெட்டி கொன்றார்களாம். எவரையும் சுடவில்லையாம். பின் பகுதியில் இருந்தோருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லையாம். கத்தும் போது அடி விழுவதாகவே நினைத்துள்ளார்கள், இல்லாவிடில் அதில் இருந்த பல நீந்த தெரிந்தோர் கடலில் குதித்து தப்ப முயன்றிருப்பார்கள் என்று ஊரவர்கள் சொன்னார்கள். இதை செய்தவர்கள் அப்போ 25 வயதாய் இருப்பின் இப்போ 64 வயசாளியாய் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இறைவனோ, இயற்கையோ இவர்களில் எவருக்குமாவது தக்க தண்டனை வழங்கி இருக்குமா? எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன் தனியே அவாவை மட்டும் ?
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
ஓம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விடயம் இப்படி அமையும். உதாரணமாக an apple a day keeps the doctor away, நாள் ஒரு ஆப்பிள் சாப்பிடின் டாக்டர் வீட்டுக்கு வரமாட்டார் என்பார்கள். ஆனால் அதுவே எனக்கு ஆகாது. இதை வைத்து பொது விதிகளை வகுக்க முடியாது.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
இராட்சத பேரரசுகளின் கொள்கை, அரசியல், பாதுகாப்பு போட்டிக்கு நடுவே தம் சுய உரிமைக்காக போராடும் சிறிய தேசிய இனங்களின், இனவழி தேசிய நாடுகளின் நியாயத்தை உணர அவ்வளவு காலம் எடுக்காது🤣.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
அவன் அவன் தன் சொந்த வீட்டில் யாருக்கு ரூம் வாடகைக்கு விடுவது என்பது அவனவன் சுய உரிமை. சுதந்திரம். சுயநிர்ணயம். இதில் பக்கத்து வீட்டுக்காரன் மூக்கை நுழைக்க கூடாது என்பதை நானும் விளக்கி களைத்துப்போனேன்🤣.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இதுதான் ஆசாரவாதிகள் போக்கு. பன்றி இறைச்சி சுகாதார கேடானது என்றால் நீங்கள் தலையில் தூக்கி கொண்டாடும் ஜேர்மனியில் அதை சந்தையில் புழங்க விடுவார்களா? நாடாப்புழு - சரியான முறையில் சமைத்தால் பிரச்சனை இல்லை. மதங்கள் எப்போதும் சரியானதை உபதேசிக்கவில்லை. அப்படி என்றால் யசீதிகளுக்கு மத உபதேச அடிப்படையில் நடந்த கொடுமையும் சரி என்றாகி விடும்.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
ஒமோம்..:ஜோர்ஜியாவும், உக்ரேனும் சும்மா இருந்த ரஸ்யா மேல் படை எடுத்தது தப்புத்தான்.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣 அதுவும் அந்த அட்டணக்கால்😎. #மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.
- IMG_7559.jpeg
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣 அவனுகள், இவனுகள கொண்டே மூலைல வைப்பானுவளே🤣. புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுத்தாலே நாடு கடத்துவாங்கள்🤣 🤣 🤣 ஆவலோடு காத்திருக்கிறோம். (நல்லா சஸ்பென்ஸ் வச்சி மர்ம நாவல் போலவே எழுதுறீங்க🤣).
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இதே கோவிலில் 60 வருடத்துக்கு முன்பு வரை இன்னார்தான் உள்ளே வரலாம் என ஒரு விதி இருந்திருக்கும். அதை இப்படித்தான் ஒரு தனிமனிதன் எதிர்த்து கதைத்திருப்பார். அதை இன்னொரு தனிமனிதர் “இது வெறும் பேச்சு” என கடந்து போயிருப்பார். ஆனால் அந்த விதி உடைக்கப்பட்டது. இந்த விதியும் உடைக்கப்படும். #எறும்பூர கல் தேயும். பெரியார் சீடர் ஏன் கோவிலுக்கு வருகிறார்? எனக்கு இவர் ஒரு நம்பிக்கையுள்ள சீர்திருத்தவாதியாகவே தெரிகிறார். இது பொது வீதியா? அல்லது கோவில்களுக்கு சொந்தமானதா? ஒரு பிக்குவை இந்த வீதியால் நடக்க வைத்து, ஊர் மைனர்களின் வீரத்தை சோதிக்க ஆசைப்படுகிறேன்🤣. 🤣 உங்களுக்கே கண்ணை கட்டினா… உங்கள் பிள்ளைகளை நினைக்க எனக்கு கண்ணீர் முட்டி கொண்டு வருகுது🤣. கொலிடே எண்டு கூட்டிப்போய் இப்படியா செய்வது🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் எப்போதும் ஒரே மாதிரித்தான்🤣.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
வித்தியாசம் - சிங்கப்பூரில் குறை-ஜனநாயகத்தை மக்கள் நலனுக்கு பாவிக்கிறார்கள். லிகுவான் யூ கூட ஆயுட்கால பிரதமர் ஆகவில்லை. அண்டை நாடுகளை பிடிக்கவில்லை. நாட்டின் வளங்களை ஆலிகார்குகளுக்கு தாரை வார்க்கவில்லை. புட்டினின் ரஸ்யா இப்படி அல்ல. அதை சிங்கப்பூரோடு எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. உங்கள் தாய்லாந்து ஒப்பீட்டு ஓரளவு நெருங்கி வரும். ஆனால் தாய்லாந்தும் ஏனைய நாடுகளில் தலையிடுவதில்லை.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
அவனுகள் அடிப்படைவாத முட்டாள்கள், என்பதால் நாமும் அடிப்படைவாத முட்டாள்கள் போல் நடந்துகொள்ளத்தான் வேண்டுமா?
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கின் முன்னாள் மனைவி/பிள்ளையின் தாயின் கருத்து.
-
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
விரிவான பதிலுக்கு நன்றி. அவர்கள் மாறவே இல்லை. ஏனைய சிங்கள அரசியல்வாதிகள் போலவே அனுரவும், ஜேவிபியும், என்பிபியும் - இனப்பிரச்சனையை அணுகுகிறன என்பதற்கு உங்கள் அனுபவம் ஒரு சோறு பதம். இதை போய் கண்டு வந்து சொன்னமைக்கு இன்னொரு நன்றி.
-
உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!
இல்லை. நான் நம்பாமைக்கான காரணம் - என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரையை பார்த்தால் புரியும் - இது மன அளுத்தம் பற்றிய தரவு அடிப்படையில்தான் எழுத பட்டுள்ளது. இலங்கையில் பலரின் மன அளுத்தம் ரெக்கோர்ர்டில் வருவதில்லை. ஆனால் யூகேயில் சும்மா அப்செட்டா இருந்தாலே மைல்ட் டிப்ரெசன் என ரெக்கோர்ர்ட்டில் எழுதி விடுவார்கள். இதுதான் பெரிய காரணம் என நினைக்கிறேன். மற்றும்படி எது மகிழ்சி என்பது வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்றல்லவா? ஆகவே இந்த வகை கணிப்பில் எனக்கு நம்பிக்கை பெரிதாக இல்லை. ஆனால் 5 மணி நேரம் உறங்கும் நாட்டை விட 8 மணி நேரம் உறங்கும் நாட்டில் மக்கள் relaxed ஆக இருப்பார்கள் என்பது சரிதான். நாம் இங்கே இருந்து போய் அந்தரப்படுவோம், அவர்கள் ஆமை வேகத்தில் இருப்பதை பார்க்க சினமும் வரும். ஆனால் இதையே அனுபவித்து வரும் வெள்ளையினத்தவர் உங்கள் நாட்டுக்காரார் very laidback என புழுகுவார்கள். கூடவே சூரிய ஒளியை விட மனதை, உடலை தெம்பூட்டும் அருமருத்து ஏதும் இல்லை என்பது என் கருத்து.