Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. செண்டை என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம், கருநாடக மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது செண்டே என்று அழைக்கப்படுகிறது. செண்டை வாசிக்கும் கலைஞர்கள் செண்டை மேளம் பண்டைய தமிழ் இசை தோற்கருவி "கொடுகொட்டி" என்பதன் பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது. https://ta.m.wikipedia.org/wiki/செண்டை பிகு எடுத்து அடிடா பாட்டன் பறையை…. தூக்கி அடிடா முப்பாட்டன் செண்டையை…
  2. 1. இந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி பட்ட தமிழ் உணர்வாளராய் இருந்தார் என மிக அழகாக கூறப்பட்டுள்ளது. இந்த விஜயகாந்தைத்தான், அவரின் கடைசிகாலங்களில் தெலுங்கன், தமிழை தமில் என உச்சரிப்பவர் என சிலர் விமர்சித்தனர். 2. அரசியல் என வந்து விட்டால் அதன் பின் சதிகளை சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் தனியே சதிகள் மட்டும் அல்ல. உண்மையில் நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அதே கூர்மையோடு sharpness அரசியலில் இருந்திருப்பின் - இன்றைக்கு அவர் முதல்வராக கூட வந்திருப்பார். கட்சி தொடங்கிய சில காலத்திலேயே அவரின் sharpness அதள பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. இந்த வீழ்ச்சியின் ஆரம்பம்தான் பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடக்க தொடங்கியது. இதை ஜெயும், கருணாநிதியும் கீழ்தரமாக பாவித்து கொண்டார்கள். அதன் பின் சுதீசும், பிரேமலதாவும் அவரை ஒரு பொம்மை போல முன்னிறுத்தி எந்த ஊழல் அரசியலை கேப்டன் வெறுத்தாரோ அதையே செய்தார்கள். இப்ராஹிம் ராவுத்தரை கேப்டன் பிரிந்ததில் ஆரம்பித்து, குடிப்பழக்கத்தை நிறுத்துகிறோம் என சிகிச்சை கொடுத்து அவரை மரத்துப்போக செய்தது, அவர் சேர்த்த எம் எல் ஏக்களை, கட்சியை சிதற அடித்தது என எதிரிகளை விட கூட இருந்தோரின் சுயநலத்துக்கு கேப்டன் பலியாகியதுதான் அதிகம். கேப்டன் வாழ்நாள் கனவாக தொடங்கிய கட்சி, கடைசியில் வெளிபடையாக பண பேரம் படியாததால் கடைசி நேரத்தில் கூட்டணி மாறிய அவலத்தை கண்டது. அதேபோல் எதை விடவும் கட்சிக்கு சுதீஸ் ராஜ்யசபா போவதே முக்கியம் என சுருங்கியும் போனது. கேப்டன் ஒரு அற்புதமான ஆத்மா. இப்போ அவருக்கு கிடைக்கும் புகழாஞ்சலி எல்லாம் அவர் சுயநினைவில், தன் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர் நடந்து கொண்ட விதத்துக்கு கிடைக்கும் கெளரவம், அங்கீகாரம். ஆனால் கடந்த 20-15 வருடங்களாக அவர் விஜயகாந்தாகவே இருக்கவிலை என்பதே உண்மை.
  3. பயணிகள் இல்லாதமையால் வாரம் 3 நாளாக குறைந்தது. இப்போ என்ன நிலையோ தெரியாது. என்னதான் நல்ல எண்ணம் இருந்தாலும் வர்த்தக சாத்தியப்பாடு commercial viability இல்லாவிட்டால் இழுத்து மூடவேண்டியே வரும். கப்பல் போக்கு வரத்து எனில் பயணிகள்+அவர்களின் வாகனங்கள், இலகு, கனரக வாகனங்கள், சரக்கு கெண்டெயினர்கள் போன்றனவற்றை சென்னை-காங்கேசந்துறை/தலைமன்னார்-தூத்துகுடி வழியில் நடத்தினால் மட்டுமே இலாபம் வரும் என நினைக்கிறேன். அதற்கும் கூட, இந்திய நம்பர் பிளேட்டுடன் இலங்கையிலும், இலங்கை நம்பர் பிளேட்டுடன் இந்தியாவிலும் தற்காலிகமாக வாகனம் ஓட கூடியவர் சட்ட மாறுதலை செய்ய வேண்டும். இப்போதைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து மட்டுமே சாத்தியம்.
  4. நீங்கள் இப்படியான திரிகளில், இப்படி எழுதத்தொடங்கி 14 வருடம் ஆகிவிட்டது.
  5. என்ன லந்தா 🤣 நான் இப்ப ரணிலின் மார்ச் தீர்வுக்கு வெயிட்டிங். மார்ச்சில் தீர்வு, சித்திரையில் சரக்கு கப்பலில் வரும் சரக்கை அடித்து விட்டு… சந்தோசமாக மட்டையாகி விடும் உத்தேசம்🤣
  6. வாழ்த்துக்கள். இவர் யாழ் செஞ் ஜோன்ஸ் கல்லூரி அணி வீரரும் 90ஆம் ஆண்டு சென்ரல்- சென் ஜோன்ஸ் போட்டியில் சதம் அடித்தவருமான சுரேன்குமாரின் மகளாவார்.
  7. நேரடியாக இலங்கை அரசியலில் தலையிட இருக்கும் நாடும் சட்டம் அனுமதித்தாலும் இலங்கை சட்டம் அனுமதியாது. ஆனால் அப்படி நேரடியாக தலையிட தேவை இல்லை. நான் இவர்கள் டயஸ்போரா தமிழர்களின் தலைமையை ஏற்க வேண்டும் என்றே கூறுகிறேன். இலங்கையில் உள்ள தமிழர் தலைமையை அல்ல. அப்படி ஏற்க - உலகளாவிய ஈழத்தமிழ் டயஸ்போராவின் உறுப்பினரான இவர்களுக்கு ஒரு சட்ட சிக்கலும் இருக்கும் நாடுகளில் வராது.
  8. சுரேனை அடித்து விரட்ட தேவையில்லை. ஏனையோரை போலவே அவருக்கு அரசியல் செய்ய உரிமை உண்டு. அதை கேள்வி கேட்க ஏனையோருக்கும் உண்டு. தமிழ் தரப்புகள் இதை செய்ய வேண்டும் எனத்தானே 14 வருடமாய் அனைவரும் எழுதுகிறோம். என்ன செய்வது. சீன அதிகாரி வடக்குக்கு வந்தால் கட்சி வேறுபாடின்றி அனைவரும் போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும் நிலையில்தான் எம் தற்போதைய தலைமைகள் உள்ளனவே. இதை மாற்ற வேண்டும். ஆனால் அந்த மாற்றம் சுரேனின் நகர்வு அல்ல.
  9. நினைவூட்டல்: தமிழர்கள் சிங்களவரோடுதான் பேச வேண்டும். அதேபோல் இந்தியாவை நாம் விரும்பினாலும் புறம் தள்ள முடியாது. இவை நான் அடிக்கடி எழுதுபவை. அதேபோல் முன்னர் சம் சும், சுரேனின் சோனியா காந்தி சந்திப்பு உட்பட பல நகர்வுகளை நானும் வரவேற்றுள்ளேன். இவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை தனியே சிங்களவரோடு மட்டும் பேசுவதால் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புவது ஏமாற்றத்தில் போய் முடியும் என்பதும். இன்னும் ஒரு 2 வருடத்தில் - எதுவும் நடந்திராது. நேரம் மட்டும் ஓடியிருக்கும்.
  10. @ஈழப்பிரியன் - துருவை எவ்வளவுதான் தீயில் போட்டு வாட்டி, பட்டறையில் வைத்து அடித்தாலும் - அதை வைத்து நாம் வாள் செய்ய முடியாது.
  11. உண்மையில் பலதை தெளிவாக எழுதும் நீங்கள் இதில் என்ன அரசியலை கண்டீர்கள். என்ன நகர்வை கண்டீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவே இல்லை. சுரேன் - அல்லது அவரது குழு எமது நியாயத்தை எங்கும் எடுத்துரைக்கவே இல்லை. எமக்கு 48 இல் இருந்து இன்று வரை இழைக்கப்படும் அநீதி பற்றி அதற்கு என்ன தீர்வு என்பது பற்றி ஒரு வரியில்லை. பண்டா, ஜே ஆர், சிறில் மத்யூ, வீரவன்ச, வீரசேகர வரை சிங்கள பேரினவாததிகள் சொன்ன - இலங்கையராக ஒன்று பட்டால் எல்லா பிரச்சனையும் ஓவர் என்ற அதே விடயத்தை புல்லட் பாயிட்ண்ட் போட்டு ஒரு பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்கள். திம்புவில் இருந்தே பேரினவாதத்தின் நிலை இதுதானே. மன்னிக்கவேண்டும் இதில் அரசியல் நகர்வை நான் தேடி, தேடி பார்த்தேன்…கடல்லையே இல்லையாம்🤣 இல்லை. இவர் எல்லருமே உதிரிகள். டயஸ்போரா தமிழரை எந்த தனிநபரோ, அமைப்போ பிரதிநிதிபடுத்தும் நிலை இனி வேண்டாம். இந்த டயஸ்போராவில் இருந்து, வாழும் நாடுகளில் அரசியல் செய்யும் தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும், கூட்டாக. ஏமாந்து விட்டோமா? ஏன் எம்மை ஏமாற்றினார்கள்? எம் இலக்கை தடுக்க அல்லவா? அப்போ ஏமாற்றியோருக்கு நாம் கொடுக்கும் பதில் என்ன? முன்னையை விட வீரியமாக இலக்கை நோக்கி செயல்படுவது. 27/11/23 ஆல் நீங்கள் சோர்ந்து போனால் - அவர்கள் வென்றார்கள் என்றாகிவிடும்.
  12. பாவம் அல்வாயன் மீது ஏன் இந்த அபாண்டம் 🤣 இப்படி ஒரு முயற்சியை @விசுகு அண்ணா போன்ற ஒருவர் ஒருங்கிணைத்தால் (அவர் போல, அவரே அல்ல) சரிவரலாம். அல்லது அமைபுகளில் உள்ள ஏனையோரும் செய்யலாம். குறைந்த பட்சம் கரி போன்றோர் காதிலாவது போடலாம். நமக்கு மிக முக்கிய தேவை புற சக்திகளுக்கு விலை போகாத ஒரு தலைமை. இப்போதைக்கு ஒரு ஜனநாயக வழி தேர்தலில் மேற்கோ வென்ற கூட்டுத்தலைமையாலேயே இது சாத்தியப்படும்.
  13. ஆம் எமது இன்றைய நிலைக்கு 1931-2023 வரையான எல்லோரும் காரணம்.
  14. பிக்குகள் எமது தரப்பு நியாயம் விளங்காமல்தான் இத்தனை காலம் கொடுமையின் ஊற்று கண்ணாய் இருந்தனர் என்றா நம்பச்சொல்கிறீர்கள்? சிங்கள மகக்களுக்கு எமது நியாயத்தை எடுத்து சொல்லாம், ஆனால் மஹாசங்கம் என்பதே பிரச்சனையின் ஊற்று கண். அவர்களுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் ஏறாது. ஏறாது - என்பதற்கான வாழும் உதாரணம்தான் எதுவுமே இல்லாத பிரகடனம். ஒரு பந்தி, ஒரு வசனம், ஒரு சொல் கூட மகாவம்ச பெளத்தசிங்கள மனநிலை கோணுமாறு இல்லாத ஒரு பிரகடனம். எனக்கு சில மாறா அடிப்படைகளில் நம்பிக்கை உண்டு. அவற்றில் ஒண்டு இலங்கை மஹா சங்கத்தின் பேரினவாத மனோநிலை.
  15. அருமையான கேள்வி. காரணிகள் பலவாக இருக்கிறன. ஆனால் அதில் முதன்மையானது…இப்போ இருக்கும் எந்த தலைமைக்கும் இப்படி ஒரு நகர்வை செய்வதில் நாட்டம் இல்லை. நாட்டம் முழுவதும் சுயநலனிலேயே இருக்கிறது என்பதே. இதை நாம் மாற்றி ஒரு நியாயமான தலைமையை உருவாக்க வேணுமா? ஆம். எப்படி? எனது சிற்றறிவுக்கு எட்டிய ஐடியா நான் முன்பே சொன்ன கரி ஆனந்த சங்கரி போன்ற ஒருவர் தலைமையில் உலகளாவிய ஜனநாயக தேர்தலில் வென்ற ஈழத்தமிழர் சம்மேளனனம். இப்படி வேறு ஐடியாக்களும் இருக்கும். ஆனால் நாம் நல்லதாக செய்யவில்லை, செய்ய வேண்டும் என்பதால் - இன்னொரு அரைகுறை முயற்சியை ஏற்க வேண்டுமா?
  16. இந்த தோற்றப்பாட்டுக்கு வருந்துகிறேன். உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு, சுரேனின் நகர்வு என தனித்தனியாக quote பண்ணி எழுதியதால், இரெண்டையும் வேறுபடுத்தி உள்ளேன் என நினைக்கிறேன். இல்லை எனில் “மயக்கத்துக்கு” மன்னிக்கவும்.
  17. ஒப்பரேசன் போலிக்கா ஒப்பரேசன் இமாலய பேய்க்காட்டல் இரெண்டினதும் முத்தாய்ப்பாக ஒப்பரேசம் டம்மி பீசு அதிகாரப்பகிர்வு விரைவில் அரங்கேறும் என இன்னொரு திரியில் எழுதினேன். மார்ச் என நாட்குறித்துள்ளார் நரியார்.
  18. சும்மா இருப்பது பிழை என்பதை ஏற்கிறேன். ஆனால் அவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதால் ஏஜென்டுகள் எமது தலையை கொண்டு போய் தண்டவாளத்தில் வைப்பதை - எதோ செய்கிறார்களே - ஆகவே வரவேற்ப்போம் என்று சொல்ல முடியுமா? இப்போ தீர்வு திட்டம் என நாம், காணி, பொலிஸ் அதிகாரம் அற்ற டம்மி அதிகாரபகிர்வை ஏற்போமாயின் - இலங்கைக்கு அது out of jail card. தமிழருக்கு தீர்வு கொடுத்து விட்டோம், நல்லிணக்கம் ஆகி விட்டது. என எல்லாரும் கேசை மூடி விடுவார்கள். அதன் பின் இலங்கை சோனகர் போல் நாமும் வாழ வேண்டியதே. இதுதான் உங்கள் அபிலாசை என்றால் - நோ பிராப்ளம். ஆனால் இது இப்போ இருக்கு நிலையை விட மோசமானது.
  19. உங்கள் வெளிப்படையான எழுத்துக்கு நன்றி. இலங்கையில் 48 க்கு பின் 3 பெரும் அரசியல் போக்குகள் உள்ளன. 1. பெளத்த பேரினவாத அரசியல் 2. அதை மூர்க்கமாக எதிர்த்த தமிழ் தேசிய அரசியல் 3. பேரினவாதத்துக்கு சலாம் போட்டு அதன் கோபத்தில் இருந்து முடிந்தளவு தப்பும் சோனக-அடையாள அரசியல் நீங்கள் மிக வெளிப்படையாக மேலே பிரேரித்து இருப்பது. போக்கு 2 இல் இருந்து போக்கு 3 க்கு தமிழ் அரசியலை நகர்த்தும் நகர்வு. இதை முன் மொழிவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், 1. இதை தீர்வு பொதி என சொல்லமுடியாது. இதுவரை எம் மக்கள் கொண்டிருந்த அபிலாசைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. இது நல்லிணக்கம் இல்லை. இது விட்டுக்கொடுப்பு அல்லது சரணாகதி அரசியல். இது வழமையாக டக்லஸ், கருணா, பிள்ளையான் அங்கயன் செய்யும் அரசியலின் இன்னொரு வடிவம். அவர்களாவது குறித்த வீத வாக்காளரை பிரதிநிதிதுவம் செய்கிறார்கள். நீங்கள் மேலே சொன்னதைதான் மக்கள் பெரும்பான்மையாக விரும்பின், சுரேன் அல்லது அவரின் proxy கள், தேர்தலில் ஆணையை பெற்று இந்த அரசியலை தொடரலாம். ஆனால் உங்கள் அளவுக்கு சுரேன் குழு வெளிப்படையாக இப்படி சொல்லவில்லை. இமாலய பிரகடனம் ஒரு வெற்றுப்பேப்பர் - அதில் இருந்து இனி வரப்போவது - பொலிஸ், காணி அதிகாரம் அற்ற, டம்மி பீசு அதிகாரப்பகிர்வு. இப்போ இருக்கும் நிலைக்கும், இந்த டம்மி பீசு நிலைக்கும் ஒரு வேறுபாடும் இருக்கப்போவதில்லை. நில அபகரிப்பு தொடரும், சிவில் நிர்வாகம் முழுக்க முழுக்க கொழும்பில் இருந்து இயக்கப்படும், ஆளுனர் முடிசூடா மன்னராக இருப்பார். சிவியை போல் ஒரு நிதியத்தை கூட அமைக்க முடியாத ஒரு முதலமைச்சர் இருப்பார். சுருங்க சொல்லின் - no change. இந்த அபிலாசை அற்ற நிலைதான் உங்களதும் சுரேனினதும் நிலைப்பாடு எனில் - அந்த நிலையை எடுப்பது உங்கள் உரிமை. ஆனால் - இதை மக்களிடம் “தீர்வு” என பாசாங்கு செய்து திணிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மக்களிடம் உங்களை போல் உண்மையை சொல்லி சுரேன் ஆதரவை திரட்டடும். மக்கள் ஆதரித்தால் என் போன்றோரின் எதிர்ப்புகள், சூரியன் எதிர் பனியாக கரையும்.
  20. விஜயகாந்த்துக்கு முழு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் இராஜாஜி மண்டபத்தில் அஞ்சலி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.
  21. இது எப்ப நடந்தது, யார் சொன்னது என எனக்கு தெரியாது. ஆனால் வானிலை அறிவிப்பாளர் ஒன்றும் கடவுள் இல்லை - அவர்கள் சொல்வதை வேதவாக்காக எடுக்க.
  22. நீங்கள் மேலே சொன்ன விடயத்தை அல்ல சுரேன் செய்கிறார். அவர்கள் சிங்கள சிவில் சமூகத்துக்கு எமது கோரிக்கைகள், அதன் நியாயப்பாடுகள் பற்றி எதையும் எடுத்து சொல்லவில்லை. மாறாக அவர்களின் அதிகார மையத்துடன் பேரம் பேசுகிறார்கள். இரெண்டும் ஒன்றல்ல. இங்கே யாரும் வெறுப்பை விதைக்கவில்லை. ஆனால் எதையும் பெற்று கொள்ளாமல் - 87இல் தந்ததையும் இழந்து அதன் விலையாக ஒரு “அமைதியை” பெறுவதுதான் எமது இலக்கு என்றால் - அதை அடைய சுரேனும் தேவையில்லை, சுமனும் தேவையில்லை. சும்மா இருந்தாலே போதும்.
  23. இவர்கள் என்ன அங்கே வாழும் மக்களின் ஆண்டான்களா? தமிழருடனான நட்புறவான சந்திப்பை அல்லவா சகலதுக்கும் முன் இவர்கள் செய்திருக்க வேண்டும். அதை இவர்கள் செய்யாமல் - அத்தனை கெடுபிடிக்கும் மத்தியில் உறுதியாக போராடும் மக்களை ஒரு சொல் கேட்காமல், அவர்கள் தலைகளுக்கு மேலால் இவர்கள் பேரம் பேசினால் - கோவம் வரத்தான் செய்யும். அங்கே சிவில் சமூகம் உள்ளது. கட்சிகள் உள்ளன. போய் சந்திப்புகளை மேற்கொண்டு விட்டு, ஒருமித்த கருத்தோடு பிக்குகளை போய் சந்திதல்லவா இருக்க வேண்டும். 2009 ற்கு பின்னும் பல தேர்தல்களில் மக்கள் தமது அபிலாசையை தெளிவாக புலப்படுத்திய பின்னும், அதை புறம்தள்ளி நடக்க இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது. இவர்களுக்கு புலம்பெயர் தனிழர் மத்தியிலாவது ஆதரவு உள்ளதா? 2009 இல் யுத்த எதிர்ப்பை ஒருங்கிணைத்த போது இருந்தது - ஆனால் இப்போ? யாரைய்யா இவர்கள், எமது மக்கள் சார்பாக பேச?
  24. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நாம் இருப்பதால் - எதையும் தின்றுவிடக்கூடாது. சுரேன் செய்வது = இப்போ இருக்கும் நிலையில் இருந்து 1 இஞ்சி கூட முன்நகராத நிலை மட்டும் அல்ல, 1987 இல் தந்ததை கூட பிடுங்கி கொள்ளும் நிலைக்கு இட்டு போகும் என்பதை மிகதெளிவாக உணர்ந்த பின் அதை எப்படி ஆதரிக்க முடியும்? சுரேன் செய்வதை சம்பந்தர் செய்தாலும் தவறுதான். ஆனால் இப்போதும் பேச்சளவிலாவது சம்பந்தரும், சுமந்திரனும் 13+ என்கிரார்கள். சுரேன் அதை கூட கேட்கவில்லை.
  25. உணவிட்டவர் என பலர் நினைவு கூறும் மனிதர். ஒரு காலத்தில் ஈழதமிழருக்கு அதிகம் உதவியவர். ஆத்மா சாந்தி அடையட்டும்🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.