Everything posted by goshan_che
-
உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு
இந்த துயரம் நடந்து இத்தனை ஆண்டுகள் பின்னும் நீதி இழுத்தடிக்கப்படுகிறது. அதிமுக, திமுக….உதிரிகட்சிகள் எல்லாம் இதில் சாதி அரசியலையே செய்கிறன. இந்த வழக்கை தாமா முன் வந்து விசாரிப்பாரே நீதிபதி ஆனந்த வெங்கடேசன்?
-
பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமன். திமுக ஆட்சிக்கு வந்ததும், எப்படி வழக்குகளை இடம் மாற்றி, அரச வக்கீலை கேனைத்தனமான வாதங்களை எடுத்து வைக்க செய்து, ஆதாரங்களை மழுங்கடித்து, சாட்சிகள் சாகும் வரை கூட இழுத்தடித்து தப்பி உள்ளார் என்பதை கட்டுரை அழகாக விபரிக்கிறது. இதே போல் ஒரு கேவலத்தைதான் அண்மையில் சீமான்-திமுக டீலின் பின், விஜயலட்சுமி வழக்கிலும் செய்தார்கள். சீமான் விடயத்தில் எடப்பாடி, ஸ்டாலின் இரு அரசுகளும் மிக அப்பட்டமாக வழக்கை பொலிஸ், அரச வழக்கறிஞர்களை கொண்டு - வலுவற்ற, ஆதாரமற்ற வழக்காக மாற்றினார்கள். நீதிபதி வெங்கடேசன் கொஞ்சம் நியாயமானவராக தெரிகிறார். ஆனால் பட்டையோடு இருக்கும் அவர் போட்டோ, அநேகமாக திமுகவின் ஊழலை மட்டும் நோண்டுவது (சீமான்-திமுக டீல் வழக்கை நூத்தவரும் இவரே என நினைக்கிறேன்) இவர் சங்கி ஏஜெண்டோ என நினைக்க வைப்பதும் உண்மை. பிஜேபி யோடு கூட்டணி வைக்காவிடிலும், நிதிஷ் குமார் பிரச்சினை போன்றவற்றை வைத்து திமுக இந்தியா கூட்டணியில் இருந்து வெளிவரக்கூடும். அப்போ பொன்முடியும், பாலாஜியும் வெளி வரக்கூடும். நீதிபதியும் முன்னைபோல அமைதியாகி விடக்கூடும். அன்னா ஹசாரே ஊழலை எதிர்கிறேன் என ஆரம்பித்து, அப்படியே ஆர் எஸ் எஸ் சில் கொண்டு போய் முடித்தது நினைவுக்கு வருகிறது.
-
போராளியின் இறுதி வெடி !
தளபதி ஜெயத்துக்கும், நளா அக்கா, கபிலனுக்கும் வீர வணக்கம். உலக அமைதிக்காய் சிலுவை சுமந்தவர் பிறந்த நாளில்… எமது உரிமைக்காய் சிலுவை சுமந்தவகளை நினைவூட்டிய பகிர்வு. அழவைத்தாலும்…பகிர்வுக்கு நன்றி @nunavilan @முதல்வன் உங்கள் பதிவு பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலை தருகிறது நன்றி🙏.
-
மாயாவி எங்கிருந்தாலும் காட்டுக்கு வரவும் டும் டும் டும்- phantom -mayavi comics
நன்றி வெங்கா, எனது அபிமான ஹீரோக்களில் மாயாவியும் ஒருவர். “மாயாவி கும் என குத்தினார்”…. ”கும்”……. எதிராளியின் முகம் …என க்ளோசப்பில் முத்திரை பதிந்த முகத்தை காட்டுவது. இப்போ எல்லாம் தழுவல் என்பது புரிந்தாலும்…அந்த வயதில் அந்த வகை கதை சொல்லல் எல்லாம்….புதிதாய்…அற்புதமாய் இருக்கும். நானும் சில கமிக்ஸ்கதைகளை அப்பியாச கொப்பியில் வரைந்து பார்த்ததும் உண்டு. கதை சொல்லுவது எழிதாக வந்தாலும், சித்திரம் கோணலாகவே வரும்🤣. இதே போல் இஸ்பெக்டர் ஆசாத் என்று ஒரு இந்திய பொலிஸ் பாத்திரம், சம்பல் நதி கொள்ளைகூட்டத்துடன் அடிபடும். லேடு ஹேம்ஸ்பாண்ட் மாடஸ்டி. பெயர்தான் modesty ஆனால் ரொம்ப கிளுகிளுப்பாக இருப்பார். அதேபோல் முத்து காமிக்ஸ் டாக்டர் வாட்சன். இன்னும் எழுதி கொண்டே போகலாம். பகிர்வுக்கு நன்றி.
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
இதை எப்போதும் செய்யலாம். ஆனால் தீர்வு அப்படி அல்ல. அதை காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வருடமும் எமக்குத்தான் ஆப்பு அதிகரிக்கிறது. நாம்தாம் புலிகள் என கருதும் வரைதான் இலங்கை இந்த அட்வாண்டேஜ்ஜை எடுக்க முடியும். புலிகள் பயங்கரவாதிகளா? நாம் அதை பற்றி எங்கே கதைத்தோம்? நாம் 2009 இன் பின்னான தமிழர்கள், எமக்கு நீதியான தீர்வை தாருங்கள் என நாம் கேட்டால், இந்த advantage, neutralize பண்ணபட்டு விடும். ஓம். இராதிகா இந்த கட்சியா?
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
2009 ற்கு பின் தாம் ஆயுதத்தை மெளனித்து விட்டதாக புலிகளே அறிவித்த பின். தலைவரும் குடும்பமும் கூட உயிரோடு இல்லை எனும் போது, புலிகள் என்ற பெயருக்கு நம்பகமான வாரிசுகள் இல்லை என்றாகிவிட்ட பின்பு, புலிகள் மீதான தடையை நாம் ஏன் இத்தனை வருடங்களின் பின்னும் தமிழர் மீதான தடை என கருத வேண்டும்? இது புலிகளின் மெளனிப்பின் பின்னான 15 வருடத்தின் பின் உருவாகியுள்ள புதிய தமிழ் தலைமை - நாம் எமது உரிமைகளை கோருகிறோம் - பழைய சிலுவைகளை நாம் சுமக்கதேவையில்லை என்ற நிலையை நாம் எடுத்தால் - அது வினைதிறனாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
நான் இதை பற்றி மேலோட்டமாக தெரிந்து வைத்திருந்தேன்…..யாழில் விளக்கமாக எழுத அந்த அறிவு போதாது. ஆனால் இதை பற்றி வரும் நாட்களில் கொஞ்சம் நோண்டி பார்க்க உள்ளேன். ஜஸ்டின் அண்ணா எழுதினால் நல்லம், இல்லை என்றால் நான் முயல்கிறேன். கேட்டதும் கொடுப்பவரே @Justin அண்ணா, கேள்வியின் நாயகனே….😀. பிகு கனடாவில் தமிழரை குஷிப் படுத்த ஒரு price war இரு பெரிய கட்சிகள் இடையேயும் வருவது மிக நல்ல அறிகுறி. ஆளும் தரப்பில் கரி போல் பழமைவாதிகளில் இன்னொருவர் தேவை. இருக்கிறார்களா?
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
அடுத்த சந்ததியை யாரும் பேய்க்காட்ட முடியாது என்ற நம்பிக்கை வருகிறது. ஏஜென்ட்டுகளுக்கு அத்தனை முயற்சியும் வீண் என்பதால் ஒரு கோவம், பதட்டம் வருவதும் புரிகிறது.
-
பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை
இவர் மட்டும் இல்லை….இதே போல் தாமாகவே உயர் நீதிமன்றம் வழக்கை மீள திறந்த சொத்து குவிப்பு கேசுகள் இன்னும் 3 திமுக அமைச்சர்கள் மீது பெண்டிங். தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி, கே.கே.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர். அப்படி கைவைத்தால்…ஆந்திராவே….சை…தமிழ் நாடே போர்க்களமாகும்🤣
-
ஐரோப்பிய பிளிட்ஸ் சாம்பியன் தொடரை வென்ற தமிழ்ச் சிறுமி
சீச்சீ….எல்லாம் ஹரோ தண்ணி கண்டியளே🤣
-
விடுதலைப் புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி.
மிக நியாயமான கருத்து.
-
ஐரோப்பிய பிளிட்ஸ் சாம்பியன் தொடரை வென்ற தமிழ்ச் சிறுமி
ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது. இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார். செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது. https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604
-
விடுதலைப் புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி.
பிகு இஸ்ரேலில் இரு நாடுகள் கொள்கையை மேற்கு அண்மையில் வலியுறுத்துவதாக நிக்சன் சொல்வது சரியில்லை. அநேகமாக அத்தனை மேற்கு நாடுகளும் 1940 களில் இருந்து இதையே வலியுறுத்துகிறன. ஆனால் ஒரு ஒப்பீடு சரிதான் ஐக்கியநாடுகள் தீர்மானம் இருந்தும், பலஸ்தீன தனி நாடு அமையாமைக்கு, இஸ்ரேல் + அதன் கூட்டாளிகள் 70% காரணம் என்றால், பலஸ்தீனத்தலைவர்கள், மக்களின் அணுகுமுறை 30% காரணம். அதேபோல், பல வாய்புகள் வந்தும், பாரிய தியாகங்களுக்கு பின்னும், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சி மாநிலம் இன்னும் அமையாமைக்கு, இலங்கை+ கூட்டுகள்+இந்தியா+மேற்கு 80% காரணம் எனில், தமிழ் மக்கள், தலைவர்களை அணுகுமுறை 20% காரணம்.
-
விடுதலைப் புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி.
சில விடயங்களை நிக்சன் மிகவும் எளிமைப்படுத்துகிறார். தமது இந்தோபசிபிக் பிராந்திய நலனே மேற்கு நாடுகளுக்கு முக்கியம் என நிக்சன் சொல்வது சரியே. ஆனால் நிக்சன் சொல்வது போல் மேற்குக்கு இலங்கை மேல் ஒரு பாசமும் இல்லை. இலங்கயில் ஒரு சுயநிர்ணய தமிழ் மாநிலம் அமையகூடாது (தமது நலனுக்கு தீங்கு ஏற்படாவண்ணம்) என்பதிலும் அவர்கள் உறுதியாக இல்லை. ஒஸ்லோ பிரகடனம் மேற்கு அனுசரணையில் வந்ததுதான். இந்தியாவோ, சீனாவோ, ரஸ்யாவோ அப்படி ஒரு தீர்வை இலங்கையில் கனவிலும் நினைக்காது. ஆனால் அது நாம் வலிமையாக இருந்த போது இலங்கையும், மேற்கும், வேறு வழி இன்றி இந்தியாவும் இறங்கி வந்த நிலை. அதன் பின் இலங்கை+இந்தியா தந்திரமாக செயல்பட்டு, மேற்கின் நலனுக்கு புலிகள் அழிப்பு இன்றி அமையாதது என்ற முடிவுக்கு மேற்கை வரப்பண்ணினார்கள். புலிகளின் அனுகுமுறையும் இந்த முடிவுக்கு வருவதை இலகுவாக்கியது. காஸா வில், தமது நலனுக்கு ஹமாஸ் அழியவேண்டும், அதற்காக மக்கள் அழிவதும் ஏற்புடையதே என்ற மேற்கின் அணுகுமுறையை காணும் நமக்கு, 2009 இல் அவர்கள் எடுத்ததும் இதுவே என்பதை புரியமுடியும். புலிகளின் அழிவுக்கு பின், நாம் பலமற்று போன நிலையில் - அவர்களுக்கு எம்மை நோக்கி வர எந்த தேவையும் இல்லை. ஆனால் இலங்கை கிட்டத்தட்ட சகல துருப்பு சீட்டையும் தன்னகத்தே வைத்திருந்தது. தொடர்ந்தும் சீன பூச்சாண்டி காட்டுகிறது. இந்த நிலையில்தான் கொவிட், ஏனைய காரணிகள் + கொவிட்டால் நெருக்கடி அதன் வழியே அறகளை என மேற்கு இலங்கையில் இறங்கி ஆடுகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்பது எப்போதும் மேற்கு வலியுறுத்தியதே. பாலா அண்ணைக்கு கூட இது விளங்கியது. எமது விடயத்தில் மேற்கு ஒருபோதும் ஒரு பிரிந்துபோகும் வாக்கெடுப்பை முன் மொழியவோ, ஆதரரிக்கவோ இல்லை. ஆனால் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்க மேற்கு தயாராக இருந்தது. இப்போ எம்மை மேற்கு அதை கூட கைவிட நிர்பந்திக்கிறது என்றால் - அதற்கு எமது 2009 பின்னான பலமில்லா நிலையே காரணம். 2009 ற்கு பின் நாம் ஆயுதம் இல்லா வழிகளில் எமது கூட்டு பேரம் பேசும் வலுவை அதிகரிக்க என்ன செய்தோம்? எதுவுமில்லை. என்ன செய்யலாம்? 1. எம்மில் எம்பிகள் உள்ள ஒரு கட்சியாவது சீனாவை அணுகியே ஆக வேண்டும். இது இலங்கைக்கு தேள் கொட்டிய நிலையை கொடுக்கும். மேற்குக்கும், இந்தியாவுக்கும் இலங்கையை வழிக்கு கொண்டு வந்து எமக்கு ஒரு நியாமான தீர்வை தர வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கும். 2. புலம்பெயர் நாட்டில் ஏனை நாட்டு உளவு அமைபுகளுக்கு விலை போகாத தலைமைகளை, அடி மட்டத்தில் இருந்து உருவாக்கி (இப்போ உள்ளோர் அனைவரையும் தூக்கி அடித்து விட்டு) அடிப்படைகளை விட்டு கொடாமல் பேரம் பேசலாம். லாபி பண்ணலாம். 3. மேற்கின் பாராளுமன்ற, நிர்வாக, அரச, இராஜதந்திர, பொருளாதார கட்டமைப்பில் தனி நபர்களாக உள்ளிட்டு மேலே வந்து அழுத்தம் கொடுக்கலாம். இவற்றை செய்ய புலத்திலும், மேற்கிலும் நமது தலைவர்கள், பிரமுகர்களாக கொள்கை பிடிப்புள்ள, விலை போகாதோர் தேவை. அதை நாம் செய்யும் வரை நாம் எல்லோருக்கும் கிள்ளுகீரைகள்தான். எமக்கான நியாயமான தீர்வு ஒரு கட்டிடம் என்றால் - அதன் அத்திவாரமாக அமையப்போவது எமது புலம், புலம்பெயர் அரசியலை இனத்துக்கு நேர்மையான மனிதர்கள், வெளிப்படைத்தன்மையுடன் முன்நகர்துவது. அத்திவாரத்தையே நாம் போடாமல், மேற்கு யன்னலை தர மறுக்கிறது, சீனா கூரையை தரவில்லை, இந்தியா சுவரை இடிக்கிறது என்பதில் ஒரு பயனும் இல்லை. மேற்கிற்கு வேண்டப்பட்டவர்களாவதும், ஆகாமல் விடுவதும் எமது கையில்தான் இருக்கிறது. இந்த அத்திவாரத்தை நாம் சரியாக போட்டால், மேற்கே வீட்டை கட்டித்தரும் நிலையை காலம் உருவாக்கும்.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
போலிக்கா வின் வருகை + ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல். இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான். இதன் முடிவில் சுமந்திரன் பங்களிப்போடு ஒரு வெளிப்படைதன்மை அற்ற, “மாவட்ட அபிவிருத்தி சபை” யை விட அதிகாரம் இல்லாத ஒரு பேய்காட்டல் தமிழர் தலையில் தீர்வு/ புதிய அரசியல் யாப்பு என்ற வகையில் இறங்க போகிறது. பொறுப்பு கூறலும் இல்லை, விசாரணையும் இல்லை, தீர்வு தந்தாகிவிட்டது. பிரச்சனை தீர்ந்தது. சுபம். இந்த திட்டத்துக்கு கரி ஆனந்தசங்கரி உடன்படவில்லை போல படுகிறது. ஏலவே ஐ எம் எவ் விவகாரத்தில் இலங்கையை தமிழர் நலன் சார்ந்து அழுத்திய ஒரே நபரும் இவரே. அதைகூட சாத்தியமற்ற நகர்வு என ஏஜெண்ட்ஸ் யாழில் விமர்சித்தார்கள். ஆனால் கடைசியில் ஐ எம் எவ், இலங்கையின் இராணுவ பாதீட்டில் கைவைத்தது. இலங்கைக்கும், ரோவுக்கும் முகத்தில் கரி. இவ்வாறாக சுயாதீனமான, வெளிப்படையான நடவடிக்கைகள் சிலதை கரி எடுப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது. ஆகவேதான் அவர் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
கரி தான் சரியான பாதையில் போகிறார் என்பதை காட்டிய இன்னுமொரு சந்தர்பமாக நான் இதை காண்கிறேன். மேற்கு நாடுகள் ஒவ்வொன்றிலும் இப்படி ஒருவர் வந்து அவர்கள் ஒன்றாகினால் பலதை சாதிக்கலாம். எனக்கு கரியின் அரசியல் பற்றி அதிகம் அல்ல எதுவுமே தெரியாது…ஆனால் தொலைவில் இருந்து பார்க்கும் போது…..2009 க்கு பின்னான புலம், புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் அடிப்படை கொள்கை தெளிவு, நம்பகதன்மை மிக்கவராக கரி எனக்குப்படுகிறார். உண்மையில் கரி ஒரு அடுத்த தலைமுறைத்தலைவர்தான். இலண்டனில் உள்ளவர்கள் எல்லாம் ஊரில் இருந்து வந்த கள்ளர். இங்கேயும் ஒரு அடுத்த தலைமுறை அரசியல்வாதி மிக விரைவு தோன்றக்கடவது.
-
துவாரகா உரையாற்றியதாக...
உழைப்புக்கு நன்றி🙏. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இதை நானும் வழிமொழிகிறேன்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த பேட்டியில் அதை (pray for Sri Lanka) தான் போட்டதாக ஒத்து கொள்கிறார். ஆனால் தானாக அதை உருவாக்கவில்லை, பேஸ்புக் போட்டதை போட்டேன் என்கிறார். இராவணனோ இன்னொரு படி மேலே போய் இலங்கை கொடியை போடவில்லை என கவர் எடுக்கிறார். கார்த்தி இலங்கை கொடியை போட்டு, pray for Sri Lanka என போட்டது உறுதியாகியுள்ளது. முடிவு இதை வைத்து மட்டும் அவரை முத்திரை குத்த முடியாது. ஆனால் நம்பவும் முடியாது. சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நன்றி முதல்வன். பார்க்கிறேன்🙏
-
துவாரகா உரையாற்றியதாக...
https://www.facebook.com/100077415585753/posts/pfbid02GZ4T6uNq4KtxvWVwP3xxNo7uKy4MadXBUny5PBJNBZXJ1kwQupJwibJxQhzjmKel/?app=fbl நன்றி
-
துவாரகா உரையாற்றியதாக...
நன்னி, முடிந்தால் ஒரு fact check உதவி. இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது. இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
இந்திரன்…ரம்பா… சே….தேவையில்லாமல்….கோஷான்…கீஷான் எண்டு கொண்டு…
-
'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
என்னதான் நளபாகம் செய்ய தெரிந்தாலும்…பகலாபாத் எப்படி கிண்டுவது எண்டு யூடியூப்பில் சமையல் குறிப்பு பார்த்து அறிந்து கொள்வதில் தப்பொன்றும் இல்லையே?
-
'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
இல்லியா பின்ன🤣 கிறிஸ்மஸ் என்பதால் இந்த முறை சங்க கூட்டம் விரைவாக கூட்டப்பட்டுள்ளது. சிலதை சொல்ல மனது விழைந்தாலும்…..🤣 நீங்கள் இன்னும் “அமேசிங் இண்டியன்ஸ்” காலத்தில நிண்டு, பாஸ்வேர்ட் கேக்கிறியள்🤣. டாக்டர் பிரகாஷே உள்ளே போய் வெளியேயும் வந்திட்டார். Hint - ட்விட்டரை ஏன் மஸ்கார் X என மாத்தினவர் எண்டு யோசியுங்கோ….