Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. மிக சிலர். மிக குறைவாக. இலண்டனில் இருந்து நோர்வேக்கோ, சுவிசுக்கோ, ஐஸ்லாந்துக்கு அடிக்கடி சுற்றுலா போவதில்லை, ஆனால் ஸ்பெயினுக்கு முனுக்கென்றால் போய்வருவார்கள். அதே கணக்குத்தான்: 1£=1Rs என்ற நிலை வருமாயின், சராசரி மனிதன் பணம் ஈட்டும் இயலுமையும் இலங்கை=யூகே என ஆகிவிடும். அதே போல் நாடும் குறைந்தது மலேசியா அளவுக்காவது சுதந்திர நாடாக இருக்கும். அப்படி நடப்பின், மிக பெருவாரியான முதல் தலைமுறை புலம்பெயர் ஈழத்தமிழர் ஊருக்கே திரும்பி போய்விடுவார்கள் என நினைக்கிறேன். நிச்சயமாக 10 வருடத்துக்குள் வெளிநாடு வந்தோர் திரும்பி விடுவார்கள்.
  2. இது தப்பு. முன்னர் ஒரு பவுண்ட் 270. இப்போ 390. பெறுமதி இரெட்டிப்பு அளவால் கூட அதிககரிக்க இல்லை. ஆனால் இலங்கையில் பொருட்களின் விலை 3 தொடக்கம் 5 மடங்கால் கூடியுள்ளது. ஆகவே எமது காசும் முன்னர் போன அளவு போவதில்லை. அதேபோல் முன்னர் யூகேயில் ஒரு பவுண்டுக்கு வாங்கிய பல பொருட்கள் இப்போ ஒன்று எழுபது. இரெண்டு. ஆகவே இது உலகளாவிய பிரச்சனையும் கூட. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. நீங்களும் திருமண மண்டபங்கள் போன்றவற்றில் செல்வ செழிப்பு உள்ளது என்பதை ஏற்றாலும், ஆனால் அவை வினைதிறனானவையா என எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன். எனக்கு இதில் அதிகம் மாற்றுக்கருத்து இல்லை.
  3. வராது. இப்படியான மனநிலையை, கருத்தியலை, கடந்து போகும் நிலைக்கு மக்கள் புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் வந்து விட்டார்கள். நான் கூட திரியினை தொடங்கியதால் பதில் அளித்தேன். இதைப்போல் சிந்திப்போர் யாழுக்கு வருவது அதிகம். இங்கே கூட உங்கள் கருத்துக்கு நாலு பச்சை மட்டும்தான். ஒவ்வொருவருக்கும் அவரவர் அரசியல் உள்ளது இல்லையா? என்னதான் பைடன் நாட்டை சொர்க்கமாக்கினாலும் டிரம்ப் ஆதரவாளர்கள் குறையாகத்தான் எழுதுவார்கள். ஆனால் நாட்டை அடகு வைத்து வாழ்கிறார்கள் என்பதில் உடன்பாடே. அடகு இல்லை, பலாலியில் இருந்து மத்தள வரை விற்கப்போகிறார்கள். இது எமக்கு நல்லதும்தான் (மறைமுக காலனியத்துவம்).
  4. ஏன் என்றால் அதில் ஒரு நிலம் எனது பாட்டனாரினதும் என்பதால். நான் போய், கண்டு, உண்டு, கேட்டு, உணர்ந்து எழுதியதல்ல… குறிப்பாக நீங்கள் சிலாகிக்கும் அரகளயவுக்கு பின்… நாம் எல்லோரும் இலங்கையர் என்ற ஒரு மனோநிலை வடக்கு, கிழக்கில் மிக விரைந்து உருவாகி வருகிறது. உருவாகி விட்டது. தெற்கிலும் இதே மனநிலை உருவாகதவிடத்து இது தமிழர் இன நலனுக்கு குந்தகமானது. இதை உருவாக்கியதுதான் சிங்களதின் வெற்றி. அதை நான் கண்டு வந்து சொல்வதல்ல.
  5. எது உண்மை என்பது ஒவ்வொரு வாசகரும் தாம் இலங்கை போய் பார்க்கும் போது உணரப்படும். இவை அரசின் சாதனை என நான் எங்கும் கூறவில்லை. மாத சம்பளகாரரின் நிலையை சுட்டிக்காட்டி - அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை, ஆனால் வீதிக்கு வராமல் சமாளிக்கிறார்கள் என எழுதியுள்ளேன். இது இலங்கை போவோர் எல்லாம், அல்லது உண்மையை கண்டு வந்து எழுதுவோர் எல்லாம் துரோகிகள் என்ற உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடே . காப்பெட் ரோட் நல்லாக உள்ளது என்பதால், நடந்த கொடுமைகளை அப்படி எழுதுபவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதல்ல. அதேபோல் கொடுமை செய்தார்கள் என்பதால் மட்டும், நல்ல இருக்கும் காப்பெட் ரோட்டை குண்டும் குழியுமாக உள்ளது என எழுதவா முடியும்?
  6. கொழும்பில் மாநகர எல்லைக்குள் குடிசைகளை காண்பது மிக அரிதென நினைக்கிறேன். தோட்டங்கள் வத்தைகள் உள்ளன. அங்கேயும் கூட அநேகம் கல்வீடுகளும் அஸ்பெஸ்டட் சீட்டுகளும்தான். கோட்ட அபய காலத்திலேயே பலருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் தெகிவளளை, கல்கிசை தாண்டியதும் கடற்கரையோரம், சேரிகள் என சொல்லத்தக்க குடியிருப்புக்கள் உருவாகியுள்ளன. ஆனால் இவை எப்போதும் கொழும்பை அண்டி இருந்தவனவே. இன்னொரு விடயம். வர்க்க ஏற்றத்தாழ்வு எங்கும் உண்டு. இலண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அதிக தூரம் போகத்தேவையில்லை, ஒப்பீட்டளவில் மிகவும் வறுமைப்பட்ட இடங்களை அடைய. மறுக்க ஏதும்மில்லை. உலகில் சகல நாட்டிலும் இது உண்டு. இலங்கையில் முன்புக்கு அதிகமாக இந்த வேற்றுமை அதிகரித்ததாக நான் உணரவில்லை.
  7. மேலே இனாமாக கிடைத்த வி ஐ பி டிக்கெட் என்றேனே அப்போதே நாந்தான் அந்த பனங்காட்டு நரி என்பதை கண்டு பிடித்திருக்க வேண்டும் அல்லவா🤣. கந்தர்மடமும் போனேன் - ஆஸ்பத்திரிகள், ஷோரூம்கள் என லக..லக…என்று இருக்கிறது உங்கள் ஊர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்த (டட்டூ) இப்போ உங்கள் ஊர் கடை ஒன்றுதானாம் பேமஸ். கொழும்பு புதுக்கடையில் சாப்பிட்ட போது, உங்களையும் நீங்கள் சிலாகிக்கும், நான் அனுபவித்திராத மொக்கன் கடையையும் நினைத்துக்கொண்டேன்.
  8. நன்றி சுவை அண்ணா. வரவுக்கும் கருத்துக்கும் மட்டும் அல்ல. நான் எழுதியவை அனுபவபூர்வமானவை என்பதை சொன்னமைக்கும்🙏.
  9. அதிகரித்து 8% வரை போகும் என நினைக்கிறேன். போன சட்டசபை தேர்ததில் திமுக +/அதிமுக + க்கு போட விரும்பாத வாக்குகளை கமல் பிரித்தார். இவை இந்த முறை இவை மீள நோட்டா அல்லது சீமானுக்கு விழும் என நினைக்கிறேன். அதிமுக வாக்கை பாஜக+பாமக கூட்டணி கொஞ்சம் பாதிக்கும். அதே போல் மோடி/பாஜக எதிர் வாக்கை முழுவதும் திமுக போகாமல், அதிமுக, நாதக பிரிப்பார்கள்.
  10. தமன்னா காவோலை தா…காவோலை தா என்றுதானே கேட்டவா? ஏன் மரத்தையே வெட்டி கொடுத்துள்ளார்கள்🤣. பிந்திய செய்தி வெட்டிய மரம் எட்டுக்கோடிக்கு ஏலம் போனது🤣
  11. சாதி அடிப்படையில் அரசியல் இருக்கும் போது - ஒவ்வொரு சாதியும் ஓரளவு தன் பங்கை பெற முடியும். இல்லாவிடில் ஆதிக்க சாதி மட்டுமே அனைத்தையும் அடையும். இந்திய அரசியல் சட்டமே இதை ஏற்கிறது. தமிழ்நாட்டில் 3/39 (என நினைக்கிறேன்) தனி தொகுதிகள். அதாவது எந்த கட்சியிலும் தாழ்தப்பட்டோரே இந்த தொகுதியில் நிற்க முடியும். ஏனைய சாதியினர் கேட்க முடியாது. திருமா நிற்கும் சிதம்பரம் இப்போ தனித்தொகுதி என நினைக்கிறேன் (இது சுழற்சி முறையில் மாறும்). இல்லாமல் இன்னொரு பொது தொகுதியில், திமுக கூட்டணியில் கூட திருமா நின்றால் வெல்வது மிக கடினம். இதுதான் தமிழ்நாட்டில் சாதியின் பவர். இதை நாம் இலங்கை சாதிய அமைப்போடு ஒப்பிட்டு - நிலைப்பாடு எடுக்க முடியாது. சாதியை இட்டு விழித்தால், அல்லது ஒதுக்கினால் நடவடிக்கை எடுக்க தடா தேவையில்லை, வன்கொடுமை சட்டமே போதும். சிலதுக்கு பெயில் கூட இல்லை. இவ்வளவு செய்தும் சாதியின் பிடியை கொஞ்சம்தான் நகர்த்த முடிந்துள்ளது.
  12. அஸ்கு புஸ்கு, பழமைவாதம், தீவிர தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் மறைந்துள்ள சாதிய பூனை எட்டி பார்கிறதோ? ஏன் தலித் கட்சியை தடை செய்ய வேண்டும்? அப்போதான் அவர்களை போட்டு உழக்க வசதியாய் இருக்கும் என்பதாலா? எல்லாமுமே அடையாள அரசியல்தான். நாம் தமிழர் என்பது இன அடையாள அரசியல். ஜெய் பீம் என்பது தாழ்த்தபட்ட சாதிகளின் அடையாள அரசியல். அவரவருக்கு தன் அடையாளத்தை பேணவும், அடையாளம் வழி ஒதுக்கப்படாமல் வாழவும் - முழு உரிமையும் உண்டு. 🤣 அது அண்ணன் சொக்கத்தங்கம், சொங்கத்தங்கம் ஜுவல்லரி என்ற பில்டப்புக்கு கொடுத்த எதிர்வினை.
  13. தளமும் களமும் வேறு என்பதால் வரும் புரிதலின்மை இது. முன்பே விளங்க நினைப்பவனுக்கு இன்னொரு திரியில் எழுதுல்தியதுதான். சாதி சான்றிதழ் கொடுப்பது சில ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவனை மேலே தூக்கி விட மிக அவசியம். அதே போலத்தான் சாதி வழி இட ஒதுக்கீடும். இலங்கையில் கூட மருத்துவ படிப்பில் முழுக்க முழுக்க யாழ்பாணத்தவரின் எண்ணிக்கைக்கு அதிகமான பிரசன்னத்தை குறைத்து மட்டகளப்பு போன்அ மாவட்டகளுக்கு அவைக்குரிய இடத்தை கொடுத்தது இட ஒதுக்கீடே (வெட்டுப்புள்ளி). சாதி வழி ஒடுக்குமுறை தமிழகத்தில் ஆழமானது - அதை விவேக் பாணியில் சொன்னால் “ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது”. முற்றாக அழிக்க முடியாது ஆனால் முடிந்தளவு திருத்தலாம். அதைதான் காங்கிரஸ் அல்லாத தமிழக கட்சிகள், ஏனைய இந்திய மாநிலங்களை விட மிக சிறப்பாக தமிழ் நாட்டில் செய்துள்ளன.
  14. தமிழக அரசியல் எமக்கு தேவை. ஆனால் அவர்கள் எவர் மீதும் விமர்சனம் வைக்கத்தேவையில்லை. பிரித்தானிய அரசியல் கட்சிகள், அமெரிக்க அரசியலை அணுகுவது போல.
  15. Solid shot. இங்கே எல்லாருக்கும் தமிழக அரசியல்வாதிகள் எல்லாரும் பொய்யர்கள், சந்தர்பவாதிகள், ஊழல்வாதிகள் என்பது தெரியும். ஆகவே அதை பற்றி அலட்டி கொள்ள தேவை இல்லை. அது அவர்கள் விடயம், நாம் விலகி நின்று எல்லாருடனும் சம தூரத்தில் நின்று பழகலாம். புலிகள் அப்படித்தான் பழகினார்கள். ஆனால் @பாலபத்ர ஓணாண்டி போன்றவர்களே…சும்மா வாய்ப்பேச்சுக்கு “தலையிடாமை” பற்றி கதைத்தாலும், மிச்சம் எல்லாரும் கள்ளன், சீமான் மட்டுமே சொக்கத்தங்கம் என்ற ரீதியில்தான் எழுதுகிறார்கள். உதாரணமாக பொம்பிளை விசயத்தில் சகல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் மோசம் என நாம் கூறிய போது, விஜி அண்ணி விடயத்தில் ஓணாண்டி எட்டாக வளைந்து சீமானுக்கு முட்டுக்கொடுத்தார். இப்படியாக சீமான் ஏனையோரை விட திறம் என நிறுவ, பிரச்சாரம் செய்ய விழையும் போதுதான், அவரும் இன்னொரு தமிழக அரசியல் கழிசடைதான் என்பதை உரக்க சொல்ல வேண்டியதாகிறது.
  16. அவர் உயிருடன் இருந்த போது…. அவர் தெலுங்கர்… வீட்டில் தெலுங்கு பேசுபவர்…. ”விஜயகாந்துக்கு எல்லாம் தமிழனை ஆளும் ஆசை வந்துவிட்டது எளிய தமிழ் பிள்ளைகளுக்கு கேவலம்” இப்படி அல்லவா ஓட்டி கொண்டு இருந்தார்கள்? தட் நாறவாய், வேற வாய் மொமெண்ட்👇
  17. கச்சதீவு இலங்கையின் வட மாகாணத்தின் ஓரங்கம். எமக்கு ஒரு சுயாட்சி தேசம். அல்லது தனி நாடோ அமைந்தால் அது எம் நிலம். இப்போ கேள்வி… கச்சதீவை இந்தியாவுக்குள் எடுப்போம் என்போர் எம் நண்பர்களா? இந்தியாவின் நண்பர்களா?
  18. அட எப்ப சுட்டுச்சு, இப்ப சுட 🤣. ஆனால் உங்கள் கட்சி சாராமை கருத்துடன் எனக்கும் 100% உடன்பாடே. யாழில் இதை வலியுறுத்தி எழுதிய முதல் ஆளும் நானே. ஆனால் சந்தண வியாபாரம் ஓவராகியதால் எதிர்வினையாற்ற வேண்டிய நிர்பந்தம். பார்க்கலாம், தேர்தல் மட்டுமாவது வகை வகையாக செய்யும் நாதக நூதன பிரச்சாரத்தை கைவிட்ட்டால் - எனக்கும் பர்னிச்சர் உடைக்கும் வேலை மிச்சம்.
  19. அதே… உங்களுக்கு பின் பக்கத்தில் நெருப்பு வைத்த என் பயண கட்டுரை திரியில் - பிற்சேர்க்கையாக இலங்கையில் குப்பை பிரச்சனை பற்றி எழுதியுள்ளேன்.
  20. இப்படி தவக்கை கத்தி சாவது விஞ்ஞான ரீதியில் உண்மையா? @Justin அண்ணா விளக்கவும். என்ன செய்வது, சீமானியர்கள் தவக்கை, ஆமை என ஆரம்பித்தாலே சந்தேகத்துடந்தான் அணுக வேண்டியுள்ளது🤣. நிற்க யாழில் கத்தும் தவளைகளால் மட்டும் அல்ல, 20 வருடமாக கத்தியிம் மைக் தவளையாலும் ஊரை ஏமாற்ற முடியவில்லை என்பதை காண்க. இனியும் கஸ்டம்தான். தமிழ்நாட்டு மக்கள் படிப்பாளிகள், அறிவாளிகள் இல்லை, ஆனால் புத்திசாலிகள். பின்னர் ஏன் இதே போல் இடித்துரைக்கும் ஏனையோரை காழ்புணர்சியால் கத்தும் தவளைகள் என்கிறீர்கள்? நீங்கள் கண்டித்தால் நற்புணர்ச்சி, ஏனையோர் கண்டித்தால் காழ்புணர்ச்சி ?🤣
  21. அதே. ஈழ அரசியல்வாதி என்றால் இடித்துரைப்பீர்கள். தமிழக அரசியல்வாதி என்றால் முட்டு கொடுப்பீர்களா? சீமானின் இந்த கோக்குமாக்கை, அவரின் ஆதரவாளர்கள்தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும். நம்புங்கள். நாம் தமிழர் நிறுவன உறுப்பினர் முதல்….ஐயநாதன் வரை சீமானிடம் தோழமையுடன் சுட்டி காட்டி…கட்சியில் இருந்து துரத்தப்பட்டோர் லிஸ்ட் ரொம்ப நீளம். கட்சி நிர்வாகிகைய…போடா ங்….என போனில் வசைபாடிய, பொட்டம்மான் என் ம** என சொல்லிய சீமான் உங்கள் தோழமை சுட்டலை….சும்மா சிரிப்பு காட்ட வேணாம் ஓணாண்டி. சந்திப்போம்🙏
  22. இவற்றை நான் முன்பு எழுதியும், வரவேற்றும் உள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இங்கே ஒரு சிலர், சீமான் காலையில் சந்தனமாக போகிறார் தெரியுமா? என்ற ரீதியில் எழுதுவதோடு மட்டும் அல்லாமல், அதை தாம் எடுத்து நெற்றியில் தீட்டி கொண்டு, நீங்களும் தீட்டுங்கள் இல்லை என்றால் நீங்கள் 200 ரூபாய் ஊபி என எழுதும் போது…. திமுக/விசிக/மதிமுக/பாமக/திக/நெடுமாறன்/ஏனையோர் என அனைவரையும் சீமானை விட மோசமாக வசைபாடும் போது… நானும் (உம் விகுதியை கவனிக்க) சீமானின் புகழை பாட வேண்டிய தேவை இல்லை. ஆனால் பர்னிச்சரை உடைக்க வேண்டிய கடமை உள்ளது (விளக்கம் மேலே).
  23. ஆனால் ஈழத் தமிழ் இனத்துக்காக பலதை இழந்த தமிழ்நாட்டு தலைவர்கள், உறவுகள், படுக்கையில் உச்சா போகும் வயதில் ஐரோப்பா ஓடி வந்த இணைய போராளிகளால் கொச்சைபடுத்தப்பட்ட போது, நன்றியுணர்ச்சி சிறிதும் இன்றி கள்ள மெளனம் காத்தீர்கள் இல்லையா அன்ணை. வரவேற்கவில்லை என நழுவ வேண்டாம். நீங்கள் கண்டிக்கவில்லை. சீமானின் ஏவல் பேய்களை அவர் எமக்கு உதவியோர் மீது ஏவி விட்டதை கண்டிக்ககாமல் கள்ள மெளனம் காத்தது ஒருவகை துரோகம்தான்.
  24. அதே போல் சீமானின் எச்சிலையும் பன்னீர் தீர்த்தம் என முட்டு கொடுப்பதும், திமுகவின் எச்சிலை எடுத்து வைப்பதும் உங்கள் தொழில். உங்களை போன்றோர் இவ்வாறு நடந்து கொள்வதால் ஏதோ ஈழத்தமிழர் எல்லாரும் சீமான் ரசிகர் என்ற விம்பம் ஏற்படுகிறது. அவ்வாறு இல்லை, ஈழத்தமிழர் ஒரு சாரார்தான் சீமான் ரசிகர்கள் என காட்ட எம் போன்றோர் குரல் ஓங்கி ஒலிப்பது காலத்தின் கட்டாயம். இது பெருமை அல்ல கடமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.