Everything posted by goshan_che
- இன்று மாவீரர் தினம்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதெல்லாம் தெரியா, ஊர் தப்பா பேசும், திரிகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள். போனசாக கிரிப்டோ திரியையும் 🙏. Done deal. 🤝
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வார்டன் என்றால் அடிப்போம். அது போல், மேற்கு என்றால் அடிப்போம். இலங்கைக்கு மேற்கு உதவியமைக்கு பழி தீர்கிறார்களாம். ஆனால் அதே இலங்கைக்கு அதே போல் உதவிய சீனா, ரஸ்யா, பலஸ்தீன், கடாபி, கியூபாவை ஆதரிப்பார்களாம். ஏன்? மேற்கு என்றால் அடிப்போம். இரெண்டும் ஒன்றில்லத்தான். ஆனால் பாரம்பரிய யுத்தத்தில் அணு ஆயுத பிளாக்மெயில் எனப்பார்த்தால் - இரு நாடுகாளும் இதை செய்தது பொறுப்பற்ற செயல்தான். ஆனால் நீங்கள் கூறியபடி சில மாதங்களின் பின் புட்டின் தன் தவறை உணர்ந்து இந்த rhetoric ஐ கைவிட்டு விட்டார். அதே போல் இந்த மூளை பிசகிய சயானிஸ்ட் அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது நல்லதே. ஆனால் இவை பிளாக்மெயில்தான் செய்தன. அமேரிக்கா பாவிக்கவே செய்தது என்பதும் அது ஒரு போர்குற்றம் என்பதும், என்றும் மறக்ககூடாத அமெரிக்காவின் மீது விழுந்த மறு என்பதும் கூட உண்மைதான்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு சவால்….எனது Marketing Territory ஐ உங்களுக்கு தாரை வார்கிறேன். உங்களுக்கு பந்து இருக்கிறதா என பார்ப்போம் (let’s see if you have the balls). என்னை போல் ஒவ்வொரு திரியாக போய் தம்பட்டம் அடிக்க தேவையில்லை. நான் திரும்பி வரும் வரை: உக்ரேன்-ரஸ்யா, இஸ்ரேல்-பலஸ்தீன் இந்த இரு திரிகளிலும் மட்டும்; நேரம் செலவழித்து, தகவல்கள், கருத்துகளை பதிந்து - பலதரபட்ட கருத்தளருடனும் ஒருமித்தும், எதிர்த்தும் கருத்து பரிமாறி, இந்த இரு திரிகளை மட்டும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்? செய்வீர்களா? (ஜெ பாணியில் வாசிக்கவும்). அல்லது வெறும் வாய் மட்டும்தானா? (உங்களால் முடியும்).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி அண்ணா. தோணியா? சீச்சீ அவர் ஹெலிகாப்டர் ஷார்ட்டைதான் அறிமுகபடுத்தியவர்🤣 @Maruthankerny செல்வத்திற் செல்வம் மக்கள் செல்வம். மக்கள் என்றால் பிள்ளை இல்லை. மனிதர்கள். போகும் போது நம்மிடம் இருக்க போகும் ஒரே செல்வம் ஏனையோர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை, நட்பு, மரியாதை, நேசம் இவை மட்டுமே. இன்னொரு முகம் தெரியா கருத்தாளரின் மக்கட் செல்வத்தை க(கா)ண்டு மறுகாமல் …பத்தி பிரிச்சு எழுதுவதில் தொடங்குங்கள். நீங்களும் ஆகலாம் குரோர்பதி.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி. தற்காலிக ஓய்வு எண்ணம் - சில தனிப்பட்ட விடயங்கள் நேரத்தை கோரப்போகிறன - அதற்கான முன்னேற்பாடு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முந்தநாள் திண்ணையில் எழுதினேன். நொஸ்டிரடாமஸ் திரியை மீளாய்வு செய்து விட்டு கொஞ்சம் விலகி இருக்க போகிறேன் என. நேற்று அந்த மீளாய்வை முடித்தேன். இன்று வரை யாரும் திருத்தம் கோருகிறார்களா என காத்திருக்கிறேன். நாளை முதல் கிளம்பும் ஐடியாதான். உங்கள் அட்வைஸை வாசிக்கும் வரை. அதை வாசித்த பின் தான் - என்னை நானே சகலமும் அறிந்தவனாக காட்டி கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், எனது தலைகணத்தை கைவிடா கூடாது என்பதும், எல்லா திரிகளிலும் கண்டபடி பிதற்றுவதிலும் உள்ள அருமை பெருமைகளை புரிந்து கொண்டேன்🤣. நன்றி. ஓம் மருதர் இங்கே எழுதுபவர்கள் ஒன்றில் கடவுளை நம்பும் மோடையர்கள், அல்லது தலைக்கணம் பிடித்த தருக்கர்கள், அல்லது மனித இனப்படுகொலையை ஆதரிக்கும் கயவர்கள் (உக்ரேன் என்றால் பராவாவில்லை அவர்கள் எலிகள் இனம்தானே). உங்களை ஒத்த ஒரு நியாயவானின் பாதம் இங்கே படுவதே நாம் செய்த பூர்வ புண்ணியம்தான். இதில் 4 பந்தியையும் வாசித்து கருத்து வைக்க வேண்டும் என்ற எதிர்பார்பெல்லாம் டூ மச்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இங்கே இன்னுமொரு தக்காளி சோஸ்/ரத்த முரண்நகை. இந்த பைத்தியகார இஸ்ரேலிய சயோனிச வெறி அமைச்சர் அணுகுண்டு போடுவோம் என மோட்டு கதை கதைத்ததை மிக கடுமையாக விமர்சிப்பவர் எல்லாரும் யார் என்கிறீங்க? உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் புட்டின் அப்பட்டமாக அணு குண்டு பட்டனுக்கு பக்கத்தில் இருந்து போட்டோ போட்டபோது, அணு ஆயுத தடிப்பு-பேச்சை (rhetoric) பேசிய போது, அணுஆயுத மிரட்டல் (nuclear blackmail) செய்தபோது - ஒரு அணு ஆயுத நாட்டை சீண்டினால் அது அப்படித்தான் செய்யும் என வக்காளத்து வாங்கிய நம்ம பயலுவதான்🤣. கீழே இரெண்டு நாட்களுக்கு முன் ரஸ்ய அரச தொலைக்கட்ட்சியில் ஒளிபரப்பானதாக சொல்லப்படும் ஒரு அனிமேசன் வீடியோ போட்டுள்ளேன். ரஸ்ய அணு ஏவுகணை ஒன்று எப்படி அமெரிக்கா நகர்களை தாக்கும் என காட்டியுள்ளார்கள். வாயால பேசின அந்த இஸ்ரேல் அமைச்சர்ரையே இந்த வாங்கு வாங்கின நம்ம பயலுவ, இப்படி வீடியோ விட்டு மிரட்டும் புட்டினை, புரட்டி, புரட்டி எடுக்கப்போகிறார்கள் பாருங்களே (don’t hold your breath). 4 பந்தி எழுதினான். 3 வாசிச்சிட்டு, குவோட்டும் பண்ணி, அதை மட்டும் மிஸ்பண்ணி இருக்கிறியள். சோ சாட்🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யானை பார்த்த விழிபுலனற்றோர் எண்டு எழுதினது சுட்டு விட்டதா? காரியமில்லை🤣.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பல ஆயிரம் பலஸ்தீனர்கள் இஸ்ரேலில் வேலை செய்வது வழமை. ஆக் 7 க்கு பின் இதை இஸ்ரேல் சாத்தியமற்றது என மறுத்துள்ளது. இவர்களுக்கு மாற்றீடாக 100,000 இந்தியர்களை அழைக்கிறதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி. குருசோவுக்கு இப்படி ஒரு பதிலை போட எண்ணினேன். அந்த நேரம் ஒரே தூக்க கலக்கம், கூடவே இப்படி ஒரு பதிலை கோபாலகிருஸ்ண பஞ்சாபிகேச சர்மா என்ற பெயரில் எழுதுவதை விட ஜஸ்டீனோ, ஆபிரகாமோ (🤣) எழுதினால் நல்லது என நினைத்தேன். இன்னொரு திரியில் முஸ்லிம்கள் எப்படி யூதர் அழியும் வரை இறுதி காலம் வராது என நம்புகிறார்களோ அப்படி பல கடுமைவாத கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள். ஆனால் பல கிறிஸ்தவர் அல்லாத தமிழர்கள் - மேற்கு நாடுகள் பைபிளில் சொன்னபடிதான் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள் என பிழையாக விளங்கி வைத்துள்ளார்கள். இஸ்ரேலை மேற்கு நாடுகள் உருவாக்கியதன் பின் பல காரணங்கள் உள்ளன. ஆனால் பலரும் இதில் யானை பார்த்த விழிபுலனற்றோர்தான்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப. செ மார்ச் 31 செலென்ஸ்கி உக்ரேன் ஜனாதிபதி தேர்தலை நடத்தப்போகிறாராம். டிஸ்கி கிட்டதட்ட அசோகா ஹோட்டலில் தலைவருக்கு கொடுத்த அளுத்தம் போல, செலன்ஸிக்கு மேற்கு அளுத்தம் கொடுக்கிறது என நினைக்கிறேன். இப்போ இருக்கும் கட்டுப்பாட்டு எல்லை வழி ஒரு போர் தவிர்ப்பு உடன்படிக்கையை மேற்கொள்ள மேற்கு அளுத்துகிறது. இதை தவிர்க்க - ஜனாதிபதி தேர்தலை மக்கள் இதற்கான ஆணையை வழங்கவில்லை என காட்ட பயன்படுத்த போகிறார்? அல்லது இதற்கு உடன்பட்டு - இதற்கு மக்கள் ஆதரவும் இருக்கிறது எனக் காட்ட பயன்படுத்த போகிறார்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் சூரியனில் இருந்து 3 வது கோள் - அந்த உலகில்தான் வாழ்கிறேன். அது பாருங்கோ இப்போ போல் 2009 இல் எல்லாம் நான் யாழில் எழுதி வெட்டியாக நேரம் கடத்தவில்லை. அது போக செய்திகளில் கவனம் செலுத்தவும் நேரம் இருக்கவில்லை. மனநிலையும் இருக்கவில்லை. அதனால் பல இலங்கைக்கு வெளியான விடயங்கள் அப்போ “நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம்” என்ற நிலைதான் எனக்கு. அதுதான் விபரம் கேட்டேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
@பையன்26 க்கு தெரிந்திருக்கும். எப்போ ஜெ போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார் பையா? இது சம்பந்தாமன் செய்தி ஆதாரம் ஏதும் உள்ளதா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எனக்கு கொஞ்சம் மறதியாக உள்ளது. ஜெ எந்த ஆண்டு ஈழதமிழருக்காக, போரை நிறுத்த சொல்லி உண்ணாவிரதம் இருந்தா?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
🤣 எவ்வளவு எழுதினாலும் பழைய அம்புலி மாமா கதை போல வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதா விக்ரமாதித்தன் ……… என்றுதான் முடியும் என்று தெரிந்தே எழுதினேன். ஆனால் இந்த கதை உங்களுக்கு மட்டுமானதல்ல….இதே கேள்வியோடிருந்த அனைவருக்குமானது. உங்களை போல நான் புட்டினுக்கு வாழ்க்கை பட்ட பத்தினி அல்ல. ஆகவே மேற்கின் எந்த குணத்தையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. நரிக்குணம் என்பது மனிதரின் அடிப்படைக்குணம். நாடுகளுக்கு மட்டும் அல்ல, தனி மனிதருக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன் (மேலே உங்கள் பதிலில் கூட அதை வெளிக்காட்டியே உள்ளீர்கள், காட்டுவீர்கள் என்பதும் எதிர்பாத்ததே. சில அடிப்படை இயல்புகள் என்றும் மாறாது🙏). பிபிசி, சி என் என் - அங்கே வேலை செய்வதை விட கூடிய ஊதியத்தை எனக்கு மேற்கின் உளவு அமைப்புகள், யாழில் எழுதுவதற்கு தருகிறன என வைத்துக்கொள்ளுங்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இந்த வீடியோவை பாருங்கள். முதல் சில கிளிப்ஸ் இளமையான புட்டின் தான் எப்படி அரசியலமைப்பை மாற்ற மாட்டேன், அப்படி செய்வது தேச துரோகம் என்கிறார். கடைசி கிளிப் ஒரு ரஸ்ய அரசியல்வாதி இப்போதைய நிலையினை விபரிக்கிறார். அவர் முடிவில் சொல்கிறார் மாவோ போல, ஷி போல புட்டின் சாகும் வரை பதவியில் இருப்பார்…. நாம் இப்போ ஆசியா. ஆசியா ஆகி விட்டோம். இதுதான் உண்மை. ஐரோப்பிய ஜனநாயக ஒழுங்கில் இருந்து புட்டின், ரஸ்யாவை ஆசிய ஒழுங்குக்கு கொண்டு போய்யுள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நிச்சயமாக. அதுதான் ஐரோப்பிய ஒழுங்கு என குறிப்பிட்டேன். சர்வதேச உறவில் எல்லாரும் சர்வாதிகாரம்தான். ஆனால் அமேரிக்க, கனடா, அவுஸ் நாட்டுக்குள், ஈயுவை பொறுத்தவரை கண்டத்தில் ஜனநாயகம் பேணப்படும். அதுவும் மட்டற்ற ஜனநாயம் அல்ல. தேர்தல் ஜனநாயகம் பால்பட்ட ஒழுங்கு. நாளைக்கே, மக்ரோன் பிரான்ஸிஸ் அரசியலமைப்பை மாற்றி. புட்டின் போல நடந்தால் - ஈயூ பிரான்சை தூக்கி வெளியே போட அதன் நடைமுறைகளில் இடம் உண்டு. போலத்தை இப்படி செய்வோம் என கூறினார்கள். நாஜிகளும் தேர்தலில் வென்றார்கள்தான். ஆனால் ஈயூ என்பது ஒரு நாடுகளின் ஜனநாயக கூட்டு, ஆகவே அதன் குமுகாய விதிகளை, உள்நாட்டில் தேர்தலை வெல்வதன் மூலம் மீற முடியாது (இந்த கட்டுப்பாடும் சில படித்தவர்கள் பிரக்சிற்க்கு போட காரணம்.) புட்டின் இரு முறைக்கு மேல் அரசியலில் இருந்து விலகி இருந்தால் - இப்போ சிலவேளை ஈயூ உறுப்பினர் இல்லாவிடினும், சுவிற்சலாந்து போல ஒரு EEA உறுபினராகவோ அல்லது துருக்கி போல் ஒரு customs union இலோ, ஈயுவிடன் ரஸ்யா இணைந்திருக்கலாம். ஒரு வகையில் புட்டின் அமெரிக்காவுக்கு செய்தது மிக பெரும் நன்மை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அயர்சி ஏற்படுவது 3 மாதம் கழித்து அதே கேள்வியை திருப்பி கேட்கும் போதுதான். இப்போ நீங்கள் கேட்டது புதிதாக உள்ளது. ஆகவே போன்வீட்டா குடித்த புத்துணர்சியோடு பதில் சொல்கிறேன். ஆம், மட்டுபட்ட்ட அளவில் சோவியத்துடன் வியாபார தொடர்புகள் இருந்தன. அதே போல் சவுதி போன்ற மேற்கின் ஒழுங்கை கை கொள்ளாத நாடுகளுடன் இன்றும் உள்ளது. ஆனால் சோவியத்துடன் சரி நிகரான எதிரி, நான் மேலே சொன்ன ஐரோப்பிய ஒழுங்கை குலைக்கும் சக்தி என்ற அளவிலேயே டீல் பண்ணினார்கள். அப்போதும் செக், போலந்து, லத்வியா போல இரும்பு திரைக்கு அப்பால் இருந்த நாடுகளை ஒரு நாள் ஐரோப்பிய ஜனநாயக குடும்பத்தில், இணைக்கும் எண்ணம் வேலைப்பாடுகள் நடந்தன. பெர்லின் சுவரின் வீழ்ச்சி, அதன் பின் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அவர்கள் பெரு விருப்பில் இந்த ஒழுங்கில் சேர்த்தது. ரஸ்யா பொருளாதாரத்தில் தள்ளாடினாலும், வரலாற்றில் முதல் முறையாக ஜெர்மனியை, பிரான்சை, பிரிட்டனை போல் பழைய மோதல் போக்கை தவிர்த்து, சூப்பர் பவர் கனவை விடுத்து அதுவும் இந்த ஐரோப்பிய ஒழுங்கில் நாலில் ஒரு பங்காளியாக காலப்போக்கில் வரும் நிலை உருவானது. இதன் வழியேதான் ஐரோப்பாவின் சந்தை ரஸ்யாவிற்கு திறக்கப்பட்டதும். புட்டின் டவுனிங் ஸ்டீடில் வந்து பியர் அடித்தத்தும், ஜேர்மனி எரிவாயுவை மலிவாய் பெற்றதும். இரண்டு முறைக்கு மேல் மெட்வேட்டவை பொம்மை அதிபர் ஆக்கும் போதுதான் விரிசல் முதலில் வருகிறது. இந்த விரிசல் சோவியத்திடமோ, சவுதியிடமோ வராது. ஏன் என்றால் அவர்கள் அப்படித்தான் என்பதை ஏற்றே அவர்களுடன் டீல் பண்ணுகிறார்கள். ஆனால் கோர்பசேவுக்கு பின்னான ராஸ்யா ஐரோப்பிய ஜனநாயக ஒழுங்கை ஏற்கும், அதன் ஒரு தூணாக இருக்கும் என கருத தலைப்பட்ட வேளையில், புட்டின் தன் ஒரு மனிதனின் நீடித்த பதவியாசைக்காக இந்த உறவை குழப்புகிறார். அவரின் பதவியாசை மட்டும் அல்லாமல், பிரிட்டன், ஜேர்மன், பிரான்ஸை போல தானும் ஒரு முன்னாள் சூப்பர் பவர் ஆனால் இப்போ ஒரு முக்கியமான ஐரோபிய நாடு என்ற அந்தஸ்து குறைப்பையும் புட்டின் சகிக்கவில்லை. நிலமை இப்படி போகும் போது ரஸ்யாவை பழைய படி சோவியத்தை டீல் பண்ணியது போல டீல் பண்ணுவதை தவிர ஈயுவுக்கு வேறு வழியில்லை. இதன் வழியே இவங்கள் ரஸ்யாவை ஓரம்கட்ட, புட்டின் முடிந்தளவு ஈயுவை குழப்பியடிக்க - முடிவு இரெண்டாவது இரும்பு திரையில் வந்து நிற்கிறது. இந்த இரெண்டாம் இரும்பு திரை எங்கே விழுவது, உக்ரேன் போலந்து போர்டரிலா அல்லது உக்ரேனுக்குள்ளாகவா என்பதே இப்போ நடக்கும் யுத்தத்தின் முடிவு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஈராக்கில் பிலிங்கின். எறிகணை, டிரோன் தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு கவசத்தோடு. இஸ்ரேல் தாக்கியதற்கு பதிலாக தாம் ஒரு இஸ்ரேலிய கிராமத்தின் மீது எறிகணை வீசியதாக ஹிஸ்புலா அறிவிப்பு.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உ.ப.ப.செ மரியுபோல் அருகில் வெடிப்பாம். Sedovo எனும் ஊரில் உள்ள ரஸ்ய தளமாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் லெபனனிய சிவிலியன்களௌ தாக்காத வரை தாமும் இஸ்ரேலிய சிவிலியன்களை தாக்கமாட்டோம் என்ற தொனியில் நசருல்லா அண்மைய பேச்சில் கூறினார். இப்போ இஸ்ரேல் தாக்குதலில் ஒரு லெபனானிய குடும்பம் மூன்று பிள்ளைகளுடன் கொலையூண்டுள்ளதாம். இதை வைத்து ஹிஸ்புலா தன் நிலையை மாற்ற கூடுமா? அடுத்த சனி 3 மணிக்கு நசருல்லா பேச இருக்கிறாராம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இங்கே மீள மீள சொல்லப்படும் இன்னொரு மொக்கு கதை பற்றியும் சொல்லியாக வேண்டும். முன்னரும் இதை பற்றி எழுதி இருந்தேன். மேற்கில் இருக்கும் ஜனநாயக ஒழுங்கும், வட கொரியா, ஆப்கானிஸ்தானின், இலங்கயின் (உதாரணம்) ஒழுங்கும் ஒன்றுதான் என ஒரு பொய்யான சமன்பாடு போடப்படும். ஆங்கிலத்தில் இதை false equivalence என்பர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஒழுங்கு இருப்பது உண்மை ஆனால் இலங்கையின் ஒழுங்கும், ஜேர்மனியின் ஒழுங்கும் சமனல்ல. அவை சமன் என்றால் தமிழர் நாம் கூட்டமாக இலங்கையை விட்டு ஜெர்மனிக்கு வந்திருக்க வேண்டி வராது. ஆகவே ஜேர்மனியின், ஈயுவின் ஒழுங்கு மேம்பட்டதே. அதை தமது கண்டங்களில்லாவது தக்க வைக்க இந்த நாடுகள் முயல்வதை தவறு என சொல்ல முடியாது. ஆப்கானிஸ்தானுக்கு அல்லது ஈராக்குக்கு இந்த ஒழுங்கை ஏற்றுமதி செய்ய அமேரிக்க முனைவது மொக்குத்தனம்தான், ஆனால் ஐரோப்பாவில் இந்த ஒழுங்கை பரப்பி, கண்டத்தை யுத்தமற்ற கண்டமாக மாற்ற ஐரோப்பிய நாடுகள் முனைவது நியாயமான அணுகுமுறையே.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஐரோப்பியர்களுக்கும் ரஸ்யாவுக்கும்மான பரஸ்பர அவநம்பிக்கையும் மோதல் போக்கும் குறைந்தத்கு ஆயிரம் ஆண்டு வயசு. இதை போல இருந்த பல பிணக்குகளை (பிரிட்டன்-பிரான்ஸ்-ஜேர்மன்) முடிவுக்கு கொண்டு வந்ததே ஈயூவின் சாதனை. இதன் மூலம் குறைந்தது மேற்கு ஐரோப்பாவிலாவது யுத்தத்தை தவிர்க முடிகிறது(வரலாற்றில் முதல் முறையாக). இதே ஒழுங்கில் ரஸ்யா வரும் வாய்பு இருந்தது. ஆனால் புட்டினின் சாம்ராட் கனவு அதை கெடுத்து விட்டது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யேமனில் இருந்து ஹூத்தி கிளர்சியாளர் ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இஸ்ரேல் பூமியின் எல்லைக்கு அப்பால், அண்ட வெளியில் வைத்து தகர்த்ததாம். எங்கே இஸ்ரேலிய பெண்களின் பிறப்புறுப்பிலா? ————- காஸாவில் அமேரிக்கா போர் ஓய்வை ஏற்படுத்தாவிடில் அமேரிக்கா மீது கடும் அடி விழும். ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு.