Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.
  2. நன்றி. யாழில் நீங்க நீடித்து எழுத வாழ்த்து. இணைந்திருங்கள்🙏. நன்றி அக்கா. நெஞ்சை நிமித்தினால், கு…. குப்பிற போட்டு முதுகில் மிதிப்பார்கள் என்பதால் அப்படி போகவில்லை🤣. லேட் ஆகிறது என்ற பாவனையில் இருந்து 5 கிலோவை அனுப்பினேன். முதுகில் தூக்கும் பை அவசியம். இடம் எடாத, சாகிலேட் சிலாப் போன்ற கனமான சாமான்களை செங்கல் அடுக்குமாப்போல் அடுக்கி, பாக்கின் புறத்தோற்றம் “பொம்மாது” பார்ர்துகொள்ளவேண்டும். நிறை அளக்கும் இடத்தில் இந்த பாக்கை கொண்டு போககூடாது, வழி அனுப்ப வந்தவரிடம் கொடுத்து விட்டு போக வேண்டும். ஆனால் hand luggage tag கொடுப்பாதாகின் ஒன்றை வாங்கி வந்து கட்டிவிட வேண்டும். பின்னர் 11 கிலோவை எதோ பஞ்சை சுமக்கும் பாவனையில் முதுகில் சுமந்த படி விமானம் ஏற வேண்டும். மறந்தும் பையை விமான ஊழியர்கள் கையில் கொடுக்க கூடாது🤣. வாவ்…நன்றி ஐயா. 🤣…ஆ…:நல்ல கதை….நான் ஏற்கனவே 4 கொண்டு போனான் (Cadburys fruit and nut ஐ சொல்லுறன் 🤣). நன்றி அண்ணை. பக்கம் பக்கமாகவா🤣. அதுக்கு @Nathamuni வரணுமே🤣 வரணும்🙏 நன்றி நீர்வேலியான். நீருக்கு வேலி போட்டால் வரட்ச்சியாய்தானே இருக்கும்🤣? மடை திறந்து எழுதுவோம்🙏
  3. வணக்கம் பாஸ். அதான் வந்தாச்சில்ல, வச்சு செய்துட்டா போச்சு🤣. வருகை, வரவேற்புக்கு நன்றி நுணா. பனம்பாலும் உண்டு🤣. வருகை, வரவேற்புக்கு நன்றி விளங்க நினைப்பவன். நன்றி அண்ணா. புட்போர்டில் தொத்தி ஏறினாலும், ஒரே இடத்துக்குத்தானே பஸ் போகும்🤣. நன்றி அண்ணா. முடியமுன்னம் பதியும் அவசரத்தில்தான் ஓடி வந்தேன். ஓம்….பார்த்தேன். ஆளில்லா கடை என்றாலும் ஆத்தினாத்தான் கூலி வரும் 🤣. #வாழப்-பாடி
  4. வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
  5. நான் எழுதியமைக்குத்தான் நான் பொறுப்பு. உங்கள் அரை குறை விளக்கத்துக்கு அல்ல. 1. நிசானின் பின் புலத்தை வைத்து நான் அவரை சேறடிக்கவில்லை. அவர் இப்படித்தான் எமது விடயத்தை அணுகுவார் என speculation செய்யவும் இல்லை. 2. அவர் இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார், வெள்ளை அடித்தார் என்பது சரியல்ல என்றெ எழுதி உள்ளேன். 3. ஆனால் அவர் ஒரு கனேடிய அதிகாரியாக, அந்த சீருடையில் வந்து, இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தால்…அதற்கு நாம் எதிர்வினை ஆற்றவே வேண்டும். ஏன் என்றால் அது இலங்கையின் கொலைகார அரச இயந்திரத்துக்கு வெள்ளை அடிக்கும் முயற்சி. அதை நிசான் துரையப்பாவோ…. நிக்சன் டெஸ்ட்மண்டோ…. நிக்கி டூட்வாலாவோ…..எந்த கனேடிய அதிகாரி செய்தாலும் நாம் அதை நோண்ட வேண்டும், எமது அரசியல் பலத்தை பாவித்து எதிர் வினையாற்ற வேண்டும். இப்படி செய்வதுதான் - ஒழுங்கான புலம்பெயர் தமிழ் தேசிய அரசியல். பிகு நான் நினைக்கிறேன்….யாழ்கள ஜாம்பவான்களின் அறிவாற்றல் உங்களுக்கு மிக குறைவாக உள்ளதால்…எழுதியதை கூட சரி வர வாசித்தறிய முடியாமல்…அடிக்கடி…premature புளகாங்கிதம் அடைகிறீர்கள் என.
  6. நீங்கள் காட்டிய மேற்கோளில் முதலாவதை பகிர்ந்தவர் என் ignore list இல் இருப்பதால் அதை நான் இப்போதே காண்கிறேன். ஆனால் இதை வைத்து நிஷான் இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்ததாக என்னால் கருத முடியவில்லை. மாறாக கனேடிய பொலிஸ் உதவியுடன் இலங்கை பொலிஸ் செயற்படுத்திய, இலங்கை உள்நாட்டு அமைச்சர் வழிநடத்திய, community policing units ஐ மேம்படுத்தும் செயற்திட்டம் நடந்தேறிய விதத்தை, நிஷான் பாராட்டியுள்ளார். இது ஒட்டுமொத்த இலங்கை பொலிசிற்கான, அதன் policing ற்கான பாராட்டு அல்ல, மாறாக குறித்த project ஐ, செயற்படுத்திய விதத்துக்கான பாராட்டு.
  7. இதை நான் வாசிக்கவில்லை அல்லது தவற விட்டுள்ளேன் எனில் சுட்டவும். இலங்கையில் வீதி, கட்டிடங்கள் என்பன 2003 இல் தான் வந்தபோது இருந்ததை விட இப்போ அபிவிருத்தி அடைந்துள்ளன என்கிறார். இது சரியான கூற்றுத்தானே (அதற்காக கடன்பட்டனர் என்பது வேறு). ஆனால் இலங்கை பொலிஸ் திறம் என நற்சான்றிதழ் கொடுத்தாரா? அப்படியாயின் எமது கனடிய அமைப்புகள் இதை கையில் எடுக்கலாம். ஏனெனில், 1. இவ்வாறு சர்வதேச அரசியல் பேசுவது ஒரு பிராந்திய பொலிஸ் அதிகாரி தொழில் அல்ல, அவரின் தொழில் முறை கட்டுப்பாட்டை மீறுவதாய் ஆகலாம். கூடவே இவரின் கண்காணிப்பில் வரும் இலங்கை பூர்வீக கனடிய தமிழர்கள் பலர் இலங்கை பொலீசின் கொடுமைக்கு உள்ளானோர் என்ற வகையில், இவரின் பக்கசார்பின்மை பற்றிய நம்பிக்கையீனத்தை இவர் இப்படி சொல்வது ஏற்படுத்தலாம். 2. கூடவே இப்படி சொல்வது இலங்கையின் பொறுப்புகூறல் இன்மை பற்றிய கனடிய அரசின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிராக அமையும். ஒரு அரச உத்தியோகத்தாராய் இவர் இதை செய்வதும் கூடாது. ஆனால் அதற்கு இவர் இப்படி இலங்கை பொலிசை பற்றி சொல்லி இருக்க வேண்டும். இல்லாமல் - கட்டிடம், ரோடு போட்டுள்ளார்கள் என சொன்னதை வைத்து எதுவும் செய்யவியலாது. ஆனால் - சகல காவல்துறையும் ஏதோ ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கட்டுப்பட்டே இருக்கும். அந்தவகையில் parliamentary select committee for home affairs அல்லது இதை ஒத்த பிராந்திய அலகுக்கு, மக்கள் பிரதிநிதிகள் மூலம் இவரை அழைத்து, விஜயம் பற்றியும், கனேடிய அரசுக்கு அறிவித்தா போனார், வெளிவிவகார கோணத்தில் தலையிட்டாரா என்பதையும் கேள்விக்கு உள்ளாக்கலாம்.
  8. 1. நிஷான் துரையப்பா, 1973 இல் கொழும்பில் பிறந்து, கனடா சென்று, யூனிவர்சிட்டியில் இளமானியாகி, 1995 இல் பொலிஸ் கான்ஸ்டபிளாகி, பலவருட சேவையின் பின் 1.6 மில்லியன் மக்கள் வாழும் மிசுசுகா, பீல் பிராந்தியத்தின் பொலிஸ் தலைமை அதிகாரியாகியுள்ளார். 2. முன்னர் கனடாவில் தமிழ் குழுக்களை அடக்க, இலங்கை பொலிஸ் அதிகாரி, சுந்தரலிங்கம் என நினைக்கிறேன், உதவியை பெற்றது கனடா. இதுபோல் பொலிஸ் பிரிவுகள் தமக்கிடையே ஆட்களை, நடைமுறைகளை, தகவல்களை பரிமாறுவதும், விஜயங்கள் செய்வதும் வழமையே. இப்படி வரும் உயரதிகாரிகளுக்கு இப்படி மரியாதை கொடுப்பதும் வழமையே. 3. ஆனால் அல்பிரட் துரையப்பா - சரியாகவோ அல்லது பிழையாகவோ - தமிழின விடுதலை போரினை எதிர்க்கும் தமிழர்களின் முகமாக, தமிழர், சிங்களவரால் நோக்கப்படுகிறார். ஆகவே இந்த வகையில் இவரின் வருகை கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. 4. நிஷான் - இதுவரைக்கும் இந்த துறைசார் வருகையை மீறி எதுவும் சொல்லவில்லை. 5. பார்ப்போம். சொல்வதை, செய்வதை வைத்து இதில் நாம் முடிவு எடுக்கலாம். தனியே துறைசார் நடவடிக்கையுடன் மட்டுப்பட்டால் - அலட்டிகொள்ள வேண்டியதில்லை. இல்லை எனில் எதிர்வினையாற்றலாம்.
  9. சொந்த இடம், நாடு உள்ள இனங்கள், நாடற்ற இனங்கள் என்ற வேறுபாடில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. அழுதாலும், தொழுதாலும், மிரட்டினாலும் யாழ்பாணத்தில் அம்மக்கள் சுய விருப்பில் செண்டை மேளம் அடிப்பதை, டிஜே பார்ட்டிக்கு போவதை யாராலும் நிறுத்த முடியாது. தொடரூந்து பாதையில் விழுந்து படுப்பதால் அதை நிறுத்த முடியாது.
  10. இனிய புத்தாண்டு வாழ்த்து💐
  11. நான் எப்பவும் அப்படித்தான்🤣. #சாப்பாட்டு இராமன்🤣 சாப்பாடும் பண்பாட்டின் ஒரு கூறுதானே?
  12. உண்மை…. ஆனால் ஆறுமுகம் தொண்டமானோடு அவரை வைக்காமல் விட்டதும் சரிதான்.
  13. எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை. பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம். இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை. சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள். வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது. அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர். டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது. உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை. உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.
  14. 🤣 ஒருமுறை @அக்னியஷ்த்ரா எழுதினார். இப்பவே புலம்பெயர்ந்த பலரின் பிள்ளைகள் கலப்பினத்திருமணம். இன்னும் இரெண்டு சந்ததி போக புலம்பெயர் தமிழ் சமூகம், ஒரு கலவை கலரில், கலவை பண்பாட்டுடன், செம்பாட்டு தலையுடன் நிக்கும் என்று. அது உண்மை. அதில் தப்பும் இல்லை. இதுதான் காலம் எனும் காட்டாறின் நியதி. தாங்கள் வெள்ளைகாரன் நாட்டில் அவன் பாணியில் வாழலாம். அங்க செண்டை அடிச்சாத்தான் தப்பு🤣. நாகரும், இயக்கரும், வேடரும், இப்போ மலையாளிகளாய் போய் விட்ட சேரரும், சோழரும், பாண்டியரும், இப்படி பலரும் கலந்த சாம்பாருதான் ஈழத்தமிழர். இனங்களுக்கு தனிதுவம் இருக்கிறது. ஆனால் எந்த இனமும் இந்த உலகில் தனியாக, சுயம்பாக, கலப்பில்லாமல் இருந்ததில்லை. இனகுழுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று பண்பாட்டு கூறுகளை கடன் வாங்கி கொண்டே இருக்கும்.
  15. கேப்டன் …..விஜயகாந்த் பற்றி…..சாக முன்னம் நாற வாய்….செத்த பின்னர் வேற வாய்….🤣
  16. பிளீஸ் மீரா….நீங்களே ஐடியா போட்டு கொடுக்க வேண்டாம்🤣….நேற்று ஒராள் சாமம் 3 மணிக்கு கோல் எடுத்திருக்கு….
  17. இந்திய தீபகற்பத்தின் கிழக்குக்கரையில், வட-கிழக்கு பருவமழையை நம்பி பயிர் செய்யும் பல்வேறு பட்ட மக்கட் கூட்டங்களுக்கு ஒரே சமயத்தில் விளைச்சல் திருவிழா harvest festival வருவது அத்துணை ஆச்சரியமான விடயம் அல்லவே. அத்தோடு வானசாஸ்திரப்படியும் சூரியன் இடம்மாறும் நாள் இது. பல்வேறு ஐரோப்பிய குடிகள்கூட, summer solstice, winter solstice, harvest festival ஐ ஒன்றாக கொண்டாடுவதை காணலாம். மனித குலத்தின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் வரலாறு மிக சிக்கலானது. காலத்தின் படி மாறககூடியது. தொடர்பு வெளி, உள் ஆளுமைகளால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். களப்பிரர் காலத்துக்கு முந்திய தமிழர் பண்பாடு இப்போ இல்லை. அதை இப்போ கொண்டு வந்தால் யாழின் கலாச்சார காவலர்களுக்கு ஜன்னி கண்டு விடும்🤣. அதேபோல் இன்று எதை நாம் தமிழர் கலாச்சாரம் என கருதுகிறோமோ அது நாளை அப்படியே இருக்காது. எமது செண்டையை நாமே தொலைத்து விட்டு, இப்போ அது அந்நிய பண்பாடு என மாரடிக்க்கிறோம் - இதுவும் மேலே சொன்ன மாற்றத்தின் அங்கம்தான். இதை சொல்லியும் விளங்காவிடில் ஒரு விவேக் ஜோக்கை போட்டு கடந்து போகவேண்டியதே.
  18. இப்படி எல்லாம் முழுதும் கோணலாக நினைக்கப்படாது. பார்கேல்லையோ….13 மைனஸ்…மைனஸ்..மைனஸ் ….அட அதுதான் இமாயலப்பேய்க்காட்டல்…. மார்ச்மாதம் 2024 க்கு பின்….வழுக்கையாற்றில் பாலும் தேனும் ஓடப்போது….. ரிக்கெட் போட ரெடியாகுங்கோ…. Raw1 என்ற டிஸ்கவுட்ன் கோர்ட்டை பாவித்தால், கனடாவில் இருந்து புக் பண்ணும் ஆக்களுக்கு 100% விலை கழிவு🤣
  19. Lohri, Lal Loi, Maghe Sankranti, Magh Bihu, Tusu Festival சோனமுத்தா போச்சா!
  20. இல்லை என்றே நினைக்கிறேன். நான் முதலில் சுனாமி என்ற சொல்லை கேட்டது ஜனவரி 2003 இல் அன்பே சிவம் படத்தில். அதில் தன் தந்தை இராட்சத அலையில் அள்ளுண்டு போனார் என கூறும் கமல் பாத்திரம், ஜப்பானில் 50 அடிக்கெல்லாம் அலைவரும், சுனாமி என்பார்கள் என சொல்லுவார். அதன்பின் கூகிளை நோண்டி என்னெவென்று அறிந்தேன். அண்ணளவாக இரு வருடத்தில் எல்லார் வாயிலும் சுனாமி, சுனாமி என்பதே பேச்சாக இருந்தது. ஆனால் இதுதான் தமிழர் தேசத்தின் முதல் சுனாமி அல்ல. ஐரோப்பிய ஆட்சியில் கூட அடித்ததாம். ஆனால் நூற்றாண்டுக்களுக்கு பின் வருவதால், பொது பிரக்ஞையில் சுனாமி மீதான பயம், அக்கறை இருப்பதில்லை. 2010 வரை கூட கரையோத்தில் இருந்து குறித அளவு தூரத்தில் கட்டுமானானம் கட்ட யோசித்தார்கள். ஆனால் இப்போ? துறைமுக நகரம்….தெஹிவளை, கல்கிசையில் கடலுக்குள் உணவங்கள் கட்டாத குறை.
  21. பல வருடங்களுக்கு முன்பே இதை ஒட்டி றோ செய்த ஒரு வேலைத்திட்டத்தின் ஆதாரத்தை உங்களுக்கு சமர்பிக்கிறேன் 🤣. இனி எண்ட மதர் டங் மலையாளம்…. எண்ட ஸ்டேட் கேரளா…. எண்ட சீப் மினிஸ்டர் பின்னராயி விஜயன்…. எண்ட பீடி மலபார் பீடி…. எண்ட நாதம் செண்டை….. எண்ட நடனம் கதகளி……

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.