Everything posted by goshan_che
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இமாலய பிரகடனம் “13ஐ முழுமையாக அமல்படுத்துவோம்” என கூறி இருந்தால் நீங்கள் மேலே சொன்னது சரி. ஆனால் தமிழர்களோடு கதைத்து விட்டார்கள் - கதைத்ததே பெரிய முன்னேற்றம் - ஆகா பார்த்தீர்களா பிக்குகள் மிதவாதிகள் ஆகி விட்டார்கள் என நாம் சொன்னால், அதை யாரும் நம்பபோவதில்லை. இலங்கை தமிழருக்கு நியாயமான தீர்வை தராது - என்பதற்கு எதுவுமே இல்லாத இமாலய பிரகடனமே அண்மைய சாட்சி. பிக்குகளுடன் 2 வருடம் பேசினேன் - அவர்கள் 87இல் தருவதாக சொன்னதை கூட தரவில்லை. உண்மையில் சுரேன் இதைத்தான் வெளி நாடுகளுக்கு சொல்ல வேண்டும். நேரடியாக பிக்குகளுடன் பேசி எமக்கு ஒரு நியாயமான தீர்வை எடுக்கும் திறமை…. சுரேனுக்கு அல்ல….தலைவருக்கே இருந்ததில்லை. ஏன் என்றால்….பிக்குகள் டிசைன் அப்படி. அதனால்தான் தலைவர் பலமாக இருந்த போது கூட இதை முயலவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பதால்….வீட்டு முற்றத்தில் நிண்டு எம்பி, எம்பி குதித்தால் ஒருநாள் பறக்க ஆரம்பித்து விடுவோம் என வீணாக முயலக்கூடாது. ஒரு முயற்சி எடுக்கும் போது அதில் ஒரு realistic prospect of success இருக்க வேண்டும்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நமக்கு முதலில் தேவை நம் தரப்பை சீர்படுத்துவது, ஒருங்கிணைப்பது, ஒற்றுமையாக முன் நகர்வது. எல்லாரும் வாய்சொல்லில் வீரர் என்பதால் - எஜெண்டுகளை தலைவர்களாக ஏற்க முடியாது. பெண்ணுக்கு நல்ல மாப்புள்ளை கிடைக்கவில்லை ஆகவே பிணத்துக்கு கட்டி வைத்தேன் என்பதை போல இருக்கிறது இந்த லொஜிக். எமக்கான தீர்வு - சிங்களத்தை ஆயுத அல்லது மேற்கத்தைய அரசுகளின் ஈடுபாட்டுடன் அரசியல் ரீதியில் அழுத்துவதன் மூலம் மட்டுமே அடையப்படக்கூடும். ஒரு போதும் நாம் நேரடியாக சிங்களதுடன் பேசியோ, அல்லது தனியே இந்திய அனுசரணையிலோ இது நடவாது. பாலா அண்ணை, தலைவர், அமிர், செல்வா, பொன்னர், இராமநாதன் - அத்தனை பேர் காலத்திலும் இதுதான் கள யதார்த்தம். இந்த இமாலய பிரகடனம் இன்னொரு முறை இந்தியாவை இலங்கயில் முன்னிலை படுத்த, பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கையை மீட்க, இலங்கை, இந்தியா சேர்ந்து ஆடும் நாடகம். இதில் தமிழரும் நாமம் 100% உத்தரவாதம்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இது தானும் படான் தள்ளியும் படான் மனநிலை அல்ல. மாறாக இன்னும் ஒரு பேய்காட்டலுக்கு முன்கூடியே ஊதும் அபாய அறிவிப்பு. பேரினவாதிகளை தமிழர் தரப்பு தனியாக கையாள்கிறதா? அது முடியுமானதா? இல்லை ரோ இதை ஒருங்கிணைக்கிறதா? மேற்கில் சுரேனின் அமைப்பு இருந்தாலும் இதில் மேற்கு அரசுகளின் பங்கு இருப்பதாக தெரியவில்லை. இது மிக தெளிவாக இந்திய நிகழ்சி நிரலில் நடக்கிறது. அது கூட ஓக்கே. முயற்சித்து பார்க்கலாம். ஆனால், இரெண்டு வருடம் சுரேன் பிக்குகளுடன் பேசிய பின்னும், ஏலவே இந்தியா 1987 இல் கொடுத்த தீர்வை கூட இமாலய பிரகடனத்தில் சேர்க்க முடியவில்லை. இப்போ இருக்கும் நிலை, status quo வைத்தான் பிக்குகள் தருகிறார்கள் எனும் போது, அவர்களிடம் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன? பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை. ஆனால் காலம் கடத்தப்படும், இன்னொரு “தீபாவளிக்குள் தீர்வு” நாடகம் அரங்கேறும். இதனால் தீமை விளையும்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இல்லை மிக பிழையான புரிதல். சீனா ஒரு பெளத்த நாடே அல்ல. அதன் அரசியலில் பெளத்தத்துக்கு எந்த இடமும் இல்லை. இலங்கயில் மட்டும் அல்ல சீனாவினுள் கூட சீன அரசு பெளத்தத்தை முன்நிறுத்துவது இல்லை. மாறாக, இஸ்லாம், கிறீஸ்தவம், பலுங் கொங், போல பெளத்தம் மீதும் சீன அரச கட்டமைப்பே கொஞ்சம் சந்தேகத்துடந்தான் இருக்கிறது. சீனாவில் CCP தன் அதிகாரத்துக்கு சவாலான ஒரு கட்டமைப்பாக பெளத்த மதத்தை கண்காணிக்கிறது என்பதே யதார்த்தம். பெளத்தம் காரணமாக பர்மா, தாய்லாந்து இலங்கையை நெருங்கி வரும் அளவு கூட சீனா பெளத்தத்தை தன் இலங்கை, சர்வதேச உறவுகளில் முன் நிறுத்துவதில்லை. அதேபோல், 2000 வரை இலங்கயில் மட்டும் அல்ல, தெற்காசியாவிலே சீனாவின் பிரசன்னம் சொல்லும்படி இருக்கவில்லை. ஆனால் அப்போதும் கூட மேற்கும், இந்தியாவும் இலங்கை சார்பு நிலையையே எடுத்தன. இப்போ சீனாவுக்கு இலங்கையில் ஒரு மறுக்க முடியாத வகிபாகம் உண்டு, ஆனால் இது பெளத்தத்துடன் சம்பந்த பட்டதே இல்லை.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இது புரியாமல் இல்லை. ஆனால் சில தந்திரோபாயங்களை வெளிப்படையாக காட்ட கூடாது. அவர்கள் நேரடியாக தீர்வை கோருவது, அல்லது தீர்வுக்கான அரசியலில் தலையிடுவது அவர்கள் கையில் இருக்கு துருப்பு சீட்டின் கனதியை குறைக்கும். அவர்கள் காணாமல் போனோருக்கான நியாயத்தை மட்டும் வலியுறுத்தி கொண்டே வந்தால் - அது இயல்பாகவே தீர்வுக்கு உதவும். வகிபாகப்பிரிப்பு., அவரவர் அவரவர் வேலையை மட்டும் செய்வது மிக அவசியம். சிங்கள அரசியல்வாதிகள் இடைபூசாரிகள் அல்ல. அவர்கள் பிக்குகளின் கையில் இருக்கும், கருவிகள், ஒலிவாங்கிகள், ஒலிபெருக்கிகள். முன்னர் பிக்குகளுடன் இந்த கருவிகள் மூலம் உரையாடினோம். இப்போ நேரடியாக உரையாடுகிறோம். ஆனால் உரையாடலின் தன்மையில், போக்கில் ஒரு சின்ன மாற்றமும் இல்லை.
-
யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
உண்மை. எழுதிவிட்டு இதை நினைத்தேன். Factcheck சிங்கங்கள் இல்லாவிட்டால்- உங்கள் தரவழி கூகிள் டிரான்சிலேட் சிங்கங்கள் காட்டில் மழைதானே. இறங்கி விளையாடுங்கோ🤣.
-
யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
மொக்கு சனம், கண்ட உடனேயே அந்த “சர்வதேச பெளத்த கொடி” இரெண்டையும் கழட்டி எறிஞ்சிருக்க வேணும்.
-
யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தற்கொலை!
தமிழ் மேல புல்டோசர ஏத்தாமல், வானை ஏத்துகிறார்களே என நினைத்து அமைதியடைய வேண்டியதுதான்🤣.
-
யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தற்கொலை!
கட்டுவன்?
-
யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!
2010 வாக்கில் இப்படி ஒரு மூங்கில் மிதக்கும் காட்டேஜ் ( bamboo floating cottage) பருத்திதுறை கடலில் ஒதுங்கியது. அண்மைய புயல் கிளப்பி கொண்டு வந்திருக்கும்.
-
”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்”- சீ.வீ. விக்னேஸ்வரன்
@Kavi arunasalam ஐயா யாழுக்கு மீண்டு, இந்த செய்திக்கு ஒரு கார்டூன் போட வேண்டும்🙏. #80 பதிலும் ஆசை வரும்🤣 பிகு நான் நினைக்கிறேன் AKD வரவை தடுக்க “பழைய காவலர்” (old guard) ஒன்றாக இணைகிறது என. ஆனால் தமிழ் பொது வேட்பாளர் இறங்கினால், அது AKD க்கு சாதகமாகவே முடியும்? வழமையாக பொது தமிழ் வேட்பாளரை நான் ஆதரிப்பதில்லை. ஆனால், 1. இமாலய பேய்க்காட்டல் 2. போலிகா என இருவேறு பட்ட முனைகளில், டெல்லி பிலிம் இன்ஸ்டிடூட் இல் படித்த ஒரே இயக்குனர் இயக்கும் நாடகங்களை பிசுபிசுக்க பண்ண, AKD ஐ வெல்லவைக்க இது உதவும் எனில் அணுகலாம் என நினைக்கிறேன்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அண்ணை, யாழ்களத்தில் மிக அரிதாக நான் காணும் ஒரு விடயம் சிந்தனைத் தெளிவு. Clarity of thought. உங்களிடம் அது மிதமிஞ்சியே உள்ளது.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
யாராவது அல்ல. இனத்தின் நலனில் இதயசுத்தியான அக்கறை உள்ளவர்கள். அதேபோல் புலத்திலோ, புலம்பெயர் தேசத்திலோ கணிசமான மக்கள் ஆதரவாவது உள்ளவர்கள். ஏஜென்டுகள் எம் இனத்தின் பிரதிநிதிகள் அல்ல. மேலே சொன்ன இரெண்டு தகமைகளில், உலக தமிழர் பேரவைக்கு இரெண்டாவது அறவே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. முதலாவது - இல்லை என்ற சந்தேகம், வர வர வலுக்கிறது. 1. அவர்களின் proxy யான சுரேனை வைத்து கொண்டு, இவர்களிருவரையும் தவிர்க்க முடியுமா? 2. தாயகத்தில் மிகபெரும் அரசியல் கட்சியின் தலைமைகளான இவர்களை தவிர்க்க கோரும் நீங்கள், எந்த legitimacy அடிப்படையில் சுரேனை எமக்கான பிரதிநிதி என தீர்மானிக்கிறீர்கள்?
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்தில் இப்போ இலங்கயில் சட்டத்தில் இல்லாத எதுவும் இல்லை. இருக்கும் இலங்கை சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்தி, இலங்கையராக அனைவரும் ஒரு புதிய நாட்டை (ஒற்றையாட்சி) நிர்மாணிக்கவே அது அழைக்கிறது. இங்கே ஒரு விடயம் மிக முக்கியமானது இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழர்கள் இலங்கை நீதி துறையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மயிலத்தமடுவும், வெடுக்குநாறியும், கைதடியும், நாவற்குழியும், இன்னும் பலவும் காட்டி நிற்கும் போது - இந்த நிலையை ஒரு நொடியில் மாற்றும் அதிகாரம் இலங்கைக்கு இருந்தும், அரசும், நீதிமன்றும் எதுவும் செய்யாமல் இருக்கும் போது - சும்மா ஒரு பேப்பரில், ஒரு பிரகடனத்தை எழுதி அதை பிக்குகள் ஏற்பதால் என்ன முனேற்றம் வந்து விடப்போகிறது. யோசிக்கவும் - ஒரு விடயத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒட்டு மொத்த இலங்கை பெளத்த சங்கமும் ஏற்கிறது எனில் - அதில் தமிழருக்கு ஒரு சொட்டு நல்லது கூட இல்லை, சிங்களவர் நலன் ஒரு அங்குலம் கூட விட்டு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. உதாரணமாக மேலோட்டமாக அதிகாரபரவலாக்கம் என்கிறது பிரகடனம். மாநகரசபையின் குப்பை அள்ளும் அதிகாரம் கூட ஒருவகையில் அதிகார பரவல், பகிர்வுதான். ஆனால் நாம் கோரும் அதிகாரப்பகிர்வு அதுவா? இல்லை. குறைந்தபட்சம் இப்போ இலங்கையின் சட்டத்தில் இருக்கும், காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை (அல்லது வடகிழக்கு தமிழர் பெரும்பான்மை பிரதேசம் இணைக்கப்பட்ட அலகு). இதுதான் எமது ஆக குறைந்த அபிலாசை. இது ஏலவே இலங்கையின் அதி உயர் சட்டமாகிய அரசியல் சட்டத்தில் உள்ளது. இதை தர எந்த பிக்கு ஒப்புகொண்டுள்ளார்? பிக்குகளோடு கதைப்பதால் மட்டுமே தீர்வு வராது. என்ன கதைக்கிறோம்? அவர்கள் எதை தர ஒப்புகொள்கிறார்கள் என்பது முக்கியம். லைக்கா சுபாசும் போய் பிக்குக்கள் காலில் உருண்டார் இல்லையா? சுரேன் காலில் உருளவில்லை - அது மட்டுமே ஒரே வேறுபாடு. முதலில் அழுத்தம் திருத்தமாக பிக்குகள் வடகிழக்கு தமிழர் பகுதிகள் இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு தரலாம் என்பதில் தமது நிலைப்பாடு என்ன என்பதை சொன்னால் - அதன் பின் பேசுவதால் பயன் உண்டா இல்லையா என தேடலாம். இப்போ சட்டத்தில் உள்ள இதை கூட அவர்களால் தரமுடியாது என்றால்…பேசுவதால் தமிழருக்கு ஒரு பயனும் இல்லை.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
மிக நியாயமான கருத்து. இப்போ மட்டும் இல்லை. முன்பும் இப்படி இலக்குக்கு அப்பாற்பட்ட விடயங்கள் சிலதை இவர்கள் முன்னெடுத்தார்கள்.
-
மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும் - மனோ கணேசன்
நிச்சயமாக. கரிபியன் நாடுகள் சில பிர்ட்டனிடம் நஷ்ட ஈடு கோருகிறன. இப்போதைக்கு இல்லை எனிலும் மலையகமக்களும் இதை கோர வேண்டும்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
- மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும் - மனோ கணேசன்
ஒற்றுமை கருதி மனோ சொல்லாமல் விட்டாலும், ஆயுத போரட்டத்துக்கு முன்னான, இலங்கை தமிழ் யாழ் மையவாத அரசியல்வாதிகளும் - மட்டுபட்ட அளவில் பொறுப்பே. குறிப்பாக ஜி ஜி பொன்னா.- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Novocherkassk என்ற கிரைமியாவில் தரித்து நின்ற ரஸ்யாவின் பெரிய தரையிறங்கு கப்பல் (landing craft) உக்ரேனால் தாக்கி அழிப்பு என உக்ரேனும், சேதம் என ரஸ்யாவும் அறிவிப்பு.- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இருக்கும்….எங்கட சனம் லேசில சாப்பாட்டை வீணாக்கிறேல்லத்தான்.- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
முட்டை விக்கிற விலைக்கு இதென்ன விசர் வேலை….. மாட்டு சாணி….இப்பவும் free தானே?- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
வராது என்று எதுவும் இல்லை. தடுப்பதை உடைத்து வருவதுதான் இங்கே கிராம் இத்தை பவுண்ஸ் என வீதியில் விக்கிறது. மாறாக நீங்கள் சொல்வது போல் சிலசமயம் சுங்க அதிகாரிகளே விமானநிலையத்தில் இருக்க மாட்டார்கள் என்ற நிலை இருப்பின் - இலண்டன் வீதிகளில் கொக்கேய் சர்வ சாதாரண விலையில் கிடைக்கும். இதில் என்ன தப்பு? ஜேர்மனி போல் அல்ல, யூகேயில் விமான நிலையம் உட்பட எங்கும் வெள்ளை அல்லாதோர் வேலை செய்கிறனர் என்பது நல்லதுதானே. அரபு நாடுகளில் ஏர்போர்ர்ட்டில் உள்ள சகல வேலையிம் ஆசியர்கள் செய்தாலும்…இமிகிரேசன், கஸ்டம்ஸ் மட்டும் எமிரேட்டி, சவுதி, குவைத்திதான். அப்படி பார்க்கையில் தோல் நிறத்தை அன்றி தகுதியை பார்த்து வேலை கொடுக்கும் நாட்டை பாராட்ட அல்லவா வேண்டும்.- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
ஒரு விடயம் தெரியுமா? சார்ஸ்சின் முடிசூட்டுக்குரிய அதிகாரபூர்வ கேக்கை தடுத்து நிறுத்தி விட்டார்கள். காராணம்? அதன் chemical composition உம் பிளாஸ்டிக் வெடிபொருளின் இரசாயன சேர்க்கையும் ஒரே அமைப்பாக இருந்தபடியால். இவ்வாறு, airlines, BAA, சுங்கம், பயங்கரவாத தடுப்பு பொலிஸ் என பல அடுக்கு உண்டு. ஆகவே மொத்த தரவுகளும் தெரியாமல் இதில் என்ன நடந்தது என வெறும் பயணிகள் அனுபவத்தை வைத்து சொல்ல முடியாது.- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
நன்றி மருதர். என்ன மீரா, கமெராக்கள் இருக்கிறன என்பதை மறந்து விட்டீர்களா. அது மட்டும் இல்லை, நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வந்து வரிசையில் சேரும் போதே மேலே இருந்து அவதானிப்பு நடக்கும். அதை விட முக்கியம் சுங்க அதிகாரிகள் இலங்கை போல் வெளியில் நின்று சீன் போடுவதில்லை, மருதர் சொல்லி இருப்பது போல் மிக அதிகமான நடவடிக்கைகள் திரைமறைவில் intelligence led ஆக நடக்கும். அப்புறம் மோப்ப நாய்கள், லக்கேஜ் பரிசோதனை இன்னும் பல விடயங்கள் சாதராண பயணிகளுக்கு எதுவும் தெரியாமலே நடக்கும்.- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
ஓம் ஆனால் துப்பாக்கியோடு பயணித்திருக்க மாட்டார்கள் ஆகவே அந்த நடைமுறை தெரியாது என்பது எழுதிய பதில்களில் தெரிகிறது. ஒரு உதாரணம். அமெரிக்காவில் இருந்து வரும் விமானங்களில் Armed Air Marshals துப்பாக்கி சகிதம் வருவார்கள். ஆனால் ஹீத்துரோ ஓடுபாதைக்கு வெளியே இவற்றை கொண்டு போக முடியாது. இதெற்கென gun handling பயிற்ச்சி பெற்ற போர்டர் போர்ஸ் அதிகாரிகள் விமானத்தில் ஏறி, அந்த துப்பாக்கிகளை வாங்கி, make safe procedures செய்து, ஹீத்துரோவில் இருக்கும் கிட்டங்கியில் வைப்பார்கள். திரும்பி வரும் போது அமெரிக்க அதிகரிகள் ரசீதை கொடுத்து மீள ஆயுதங்களை பெறுவார்கள். அதேபோல் close protection பாடி கார்ட்ஸ்சுக்கும் ஒரு வழி முறை உள்ளது. அநேகமாக துப்பாக்கிகள் நாட்டில் இறங்கியவுடன் கையளித்து பின் மீள தரப்படும். அநேக வெளிநாட்டு அதிபர்களின் யூகே பாதுகாப்பு, இங்கே உள்ள diplomatic protection unitதான் கையாளும். அமெரிக்க அதிபர், சீன அதிபர் போன்றோர் மட்டும் அவர்களின் படையுடன் இராணுவ தளங்கள் ஊடாக பயணிப்பர். ஆகவே முதலில் இங்கே என்ன நடந்தது, என்ற தரவுகள் முக்கியம். அடுத்து துப்பாக்கி எடுத்து செல்ல நடைமுறை என்ன என்பது சாதாரண விமான பயண அனுபவத்தின் மூலம் தெரிய வராது. மேலே நான் சொன்ன அமெரிக்கன் மார்ஷல்களுக்குரிய நடைமுறை பற்றி எத்தனை பயணிகளுக்கு தெரிந்திருக்கும்? இதைதான் நான் சொல்கிறேன். இதை யார் பரிசோக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்? 40% டயட் கோக்+40% சீரோ கோக்+ மீதி ஐஸ் ——- சும்மா ஜுவ்வுன்னு ஏறும் திண்ணையில் வந்து பொன்முடி, பிடரி முடி, பின் முடி எண்டு பினாத்த வைக்கும்🤣. மெரி கிறிஸ்மஸ்🎄 - மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும் - மனோ கணேசன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.