Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமன். திமுக ஆட்சிக்கு வந்ததும், எப்படி வழக்குகளை இடம் மாற்றி, அரச வக்கீலை கேனைத்தனமான வாதங்களை எடுத்து வைக்க செய்து, ஆதாரங்களை மழுங்கடித்து, சாட்சிகள் சாகும் வரை கூட இழுத்தடித்து தப்பி உள்ளார் என்பதை கட்டுரை அழகாக விபரிக்கிறது. இதே போல் ஒரு கேவலத்தைதான் அண்மையில் சீமான்-திமுக டீலின் பின், விஜயலட்சுமி வழக்கிலும் செய்தார்கள். சீமான் விடயத்தில் எடப்பாடி, ஸ்டாலின் இரு அரசுகளும் மிக அப்பட்டமாக வழக்கை பொலிஸ், அரச வழக்கறிஞர்களை கொண்டு - வலுவற்ற, ஆதாரமற்ற வழக்காக மாற்றினார்கள். நீதிபதி வெங்கடேசன் கொஞ்சம் நியாயமானவராக தெரிகிறார். ஆனால் பட்டையோடு இருக்கும் அவர் போட்டோ, அநேகமாக திமுகவின் ஊழலை மட்டும் நோண்டுவது (சீமான்-திமுக டீல் வழக்கை நூத்தவரும் இவரே என நினைக்கிறேன்) இவர் சங்கி ஏஜெண்டோ என நினைக்க வைப்பதும் உண்மை. பிஜேபி யோடு கூட்டணி வைக்காவிடிலும், நிதிஷ் குமார் பிரச்சினை போன்றவற்றை வைத்து திமுக இந்தியா கூட்டணியில் இருந்து வெளிவரக்கூடும். அப்போ பொன்முடியும், பாலாஜியும் வெளி வரக்கூடும். நீதிபதியும் முன்னைபோல அமைதியாகி விடக்கூடும். அன்னா ஹசாரே ஊழலை எதிர்கிறேன் என ஆரம்பித்து, அப்படியே ஆர் எஸ் எஸ் சில் கொண்டு போய் முடித்தது நினைவுக்கு வருகிறது.
  2. தளபதி ஜெயத்துக்கும், நளா அக்கா, கபிலனுக்கும் வீர வணக்கம். உலக அமைதிக்காய் சிலுவை சுமந்தவர் பிறந்த நாளில்… எமது உரிமைக்காய் சிலுவை சுமந்தவகளை நினைவூட்டிய பகிர்வு. அழவைத்தாலும்…பகிர்வுக்கு நன்றி @nunavilan @முதல்வன் உங்கள் பதிவு பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலை தருகிறது நன்றி🙏.
  3. நன்றி வெங்கா, எனது அபிமான ஹீரோக்களில் மாயாவியும் ஒருவர். “மாயாவி கும் என குத்தினார்”…. ”கும்”……. எதிராளியின் முகம் …என க்ளோசப்பில் முத்திரை பதிந்த முகத்தை காட்டுவது. இப்போ எல்லாம் தழுவல் என்பது புரிந்தாலும்…அந்த வயதில் அந்த வகை கதை சொல்லல் எல்லாம்….புதிதாய்…அற்புதமாய் இருக்கும். நானும் சில கமிக்ஸ்கதைகளை அப்பியாச கொப்பியில் வரைந்து பார்த்ததும் உண்டு. கதை சொல்லுவது எழிதாக வந்தாலும், சித்திரம் கோணலாகவே வரும்🤣. இதே போல் இஸ்பெக்டர் ஆசாத் என்று ஒரு இந்திய பொலிஸ் பாத்திரம், சம்பல் நதி கொள்ளைகூட்டத்துடன் அடிபடும். லேடு ஹேம்ஸ்பாண்ட் மாடஸ்டி. பெயர்தான் modesty ஆனால் ரொம்ப கிளுகிளுப்பாக இருப்பார். அதேபோல் முத்து காமிக்ஸ் டாக்டர் வாட்சன். இன்னும் எழுதி கொண்டே போகலாம். பகிர்வுக்கு நன்றி.
  4. இதை எப்போதும் செய்யலாம். ஆனால் தீர்வு அப்படி அல்ல. அதை காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வருடமும் எமக்குத்தான் ஆப்பு அதிகரிக்கிறது. நாம்தாம் புலிகள் என கருதும் வரைதான் இலங்கை இந்த அட்வாண்டேஜ்ஜை எடுக்க முடியும். புலிகள் பயங்கரவாதிகளா? நாம் அதை பற்றி எங்கே கதைத்தோம்? நாம் 2009 இன் பின்னான தமிழர்கள், எமக்கு நீதியான தீர்வை தாருங்கள் என நாம் கேட்டால், இந்த advantage, neutralize பண்ணபட்டு விடும். ஓம். இராதிகா இந்த கட்சியா?
  5. 2009 ற்கு பின் தாம் ஆயுதத்தை மெளனித்து விட்டதாக புலிகளே அறிவித்த பின். தலைவரும் குடும்பமும் கூட உயிரோடு இல்லை எனும் போது, புலிகள் என்ற பெயருக்கு நம்பகமான வாரிசுகள் இல்லை என்றாகிவிட்ட பின்பு, புலிகள் மீதான தடையை நாம் ஏன் இத்தனை வருடங்களின் பின்னும் தமிழர் மீதான தடை என கருத வேண்டும்? இது புலிகளின் மெளனிப்பின் பின்னான 15 வருடத்தின் பின் உருவாகியுள்ள புதிய தமிழ் தலைமை - நாம் எமது உரிமைகளை கோருகிறோம் - பழைய சிலுவைகளை நாம் சுமக்கதேவையில்லை என்ற நிலையை நாம் எடுத்தால் - அது வினைதிறனாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
  6. நான் இதை பற்றி மேலோட்டமாக தெரிந்து வைத்திருந்தேன்…..யாழில் விளக்கமாக எழுத அந்த அறிவு போதாது. ஆனால் இதை பற்றி வரும் நாட்களில் கொஞ்சம் நோண்டி பார்க்க உள்ளேன். ஜஸ்டின் அண்ணா எழுதினால் நல்லம், இல்லை என்றால் நான் முயல்கிறேன். கேட்டதும் கொடுப்பவரே @Justin அண்ணா, கேள்வியின் நாயகனே….😀. பிகு கனடாவில் தமிழரை குஷிப் படுத்த ஒரு price war இரு பெரிய கட்சிகள் இடையேயும் வருவது மிக நல்ல அறிகுறி. ஆளும் தரப்பில் கரி போல் பழமைவாதிகளில் இன்னொருவர் தேவை. இருக்கிறார்களா?
  7. அடுத்த சந்ததியை யாரும் பேய்க்காட்ட முடியாது என்ற நம்பிக்கை வருகிறது. ஏஜென்ட்டுகளுக்கு அத்தனை முயற்சியும் வீண் என்பதால் ஒரு கோவம், பதட்டம் வருவதும் புரிகிறது.
  8. இவர் மட்டும் இல்லை….இதே போல் தாமாகவே உயர் நீதிமன்றம் வழக்கை மீள திறந்த சொத்து குவிப்பு கேசுகள் இன்னும் 3 திமுக அமைச்சர்கள் மீது பெண்டிங். தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி, கே.கே.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர். அப்படி கைவைத்தால்…ஆந்திராவே….சை…தமிழ் நாடே போர்க்களமாகும்🤣
  9. ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது. இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார். செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது. https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604
  10. போலிக்கா வின் வருகை + ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல். இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான். இதன் முடிவில் சுமந்திரன் பங்களிப்போடு ஒரு வெளிப்படைதன்மை அற்ற, “மாவட்ட அபிவிருத்தி சபை” யை விட அதிகாரம் இல்லாத ஒரு பேய்காட்டல் தமிழர் தலையில் தீர்வு/ புதிய அரசியல் யாப்பு என்ற வகையில் இறங்க போகிறது. பொறுப்பு கூறலும் இல்லை, விசாரணையும் இல்லை, தீர்வு தந்தாகிவிட்டது. பிரச்சனை தீர்ந்தது. சுபம். இந்த திட்டத்துக்கு கரி ஆனந்தசங்கரி உடன்படவில்லை போல படுகிறது. ஏலவே ஐ எம் எவ் விவகாரத்தில் இலங்கையை தமிழர் நலன் சார்ந்து அழுத்திய ஒரே நபரும் இவரே. அதைகூட சாத்தியமற்ற நகர்வு என ஏஜெண்ட்ஸ் யாழில் விமர்சித்தார்கள். ஆனால் கடைசியில் ஐ எம் எவ், இலங்கையின் இராணுவ பாதீட்டில் கைவைத்தது. இலங்கைக்கும், ரோவுக்கும் முகத்தில் கரி. இவ்வாறாக சுயாதீனமான, வெளிப்படையான நடவடிக்கைகள் சிலதை கரி எடுப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது. ஆகவேதான் அவர் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
  11. கரி தான் சரியான பாதையில் போகிறார் என்பதை காட்டிய இன்னுமொரு சந்தர்பமாக நான் இதை காண்கிறேன். மேற்கு நாடுகள் ஒவ்வொன்றிலும் இப்படி ஒருவர் வந்து அவர்கள் ஒன்றாகினால் பலதை சாதிக்கலாம். எனக்கு கரியின் அரசியல் பற்றி அதிகம் அல்ல எதுவுமே தெரியாது…ஆனால் தொலைவில் இருந்து பார்க்கும் போது…..2009 க்கு பின்னான புலம், புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் அடிப்படை கொள்கை தெளிவு, நம்பகதன்மை மிக்கவராக கரி எனக்குப்படுகிறார். உண்மையில் கரி ஒரு அடுத்த தலைமுறைத்தலைவர்தான். இலண்டனில் உள்ளவர்கள் எல்லாம் ஊரில் இருந்து வந்த கள்ளர். இங்கேயும் ஒரு அடுத்த தலைமுறை அரசியல்வாதி மிக விரைவு தோன்றக்கடவது.
  12. உழைப்புக்கு நன்றி🙏. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
  13. இதை நானும் வழிமொழிகிறேன்.
  14. இந்த பேட்டியில் அதை (pray for Sri Lanka) தான் போட்டதாக ஒத்து கொள்கிறார். ஆனால் தானாக அதை உருவாக்கவில்லை, பேஸ்புக் போட்டதை போட்டேன் என்கிறார். இராவணனோ இன்னொரு படி மேலே போய் இலங்கை கொடியை போடவில்லை என கவர் எடுக்கிறார். கார்த்தி இலங்கை கொடியை போட்டு, pray for Sri Lanka என போட்டது உறுதியாகியுள்ளது. முடிவு இதை வைத்து மட்டும் அவரை முத்திரை குத்த முடியாது. ஆனால் நம்பவும் முடியாது. சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.
  15. நன்றி முதல்வன். பார்க்கிறேன்🙏
  16. https://www.facebook.com/100077415585753/posts/pfbid02GZ4T6uNq4KtxvWVwP3xxNo7uKy4MadXBUny5PBJNBZXJ1kwQupJwibJxQhzjmKel/?app=fbl நன்றி
  17. நன்னி, முடிந்தால் ஒரு fact check உதவி. இந்த கார்திக் pray for Sri Lanka, என்ற செய்தியுடன், இலங்கை கொடி போட்ட அவரின் முந்தைய முகபுத்தக புரோபைல் என சில படங்கள் கண்ணில் பட்டது. இவை உண்மையா? போட்டோஷாப்ப்பா?
  18. என்னதான் நளபாகம் செய்ய தெரிந்தாலும்…பகலாபாத் எப்படி கிண்டுவது எண்டு யூடியூப்பில் சமையல் குறிப்பு பார்த்து அறிந்து கொள்வதில் தப்பொன்றும் இல்லையே?
  19. இல்லியா பின்ன🤣 கிறிஸ்மஸ் என்பதால் இந்த முறை சங்க கூட்டம் விரைவாக கூட்டப்பட்டுள்ளது. சிலதை சொல்ல மனது விழைந்தாலும்…..🤣 நீங்கள் இன்னும் “அமேசிங் இண்டியன்ஸ்” காலத்தில நிண்டு, பாஸ்வேர்ட் கேக்கிறியள்🤣. டாக்டர் பிரகாஷே உள்ளே போய் வெளியேயும் வந்திட்டார். Hint - ட்விட்டரை ஏன் மஸ்கார் X என மாத்தினவர் எண்டு யோசியுங்கோ….
  20. 3 நாளில் கியவ்… ரஸ்யா டாங்கிகள் மீது உக்ரேனியர் பூங்கொத்து எறிவார்கள்…. ஒட்டுமொத்த உக்ரேனும் ரஸ்யவசமாகும்…. இப்படி பலதை சொன்னதையும் நினைவூட்டுகிறேன்🤣. அமெரிக்காவில் ரிபளிக்கன்ஸ் கை ஓங்கினால் உக்ரேன் பாடு கஸ்டம், டிரம்ப் வந்தால் (அவர் புட்டினிடம் பிடி கொடுத்துள்ளவர்) ஐரோப்பவின் நிலையே கஸ்டம் என்பதை உக்ரேன் போருக்கு முதலே இங்கே பலர் எழுதிய படிதான் இருந்தார்கள். உங்களுக்கு பதிலாகவே இவற்றை நான் எழுதியதும் உண்டு. உங்களைத் தீர்கதரிசி, மற்றவர்களை விடு பேயன் என் நிறுவி விடும் மேட்டுகுடி அந்தரிப்பில் இவற்றை செலக்டிவ் அம்னீசியாவில் விட்டு விட்டீர்கள் போலும்🤣.
  21. ஓம்…ஜனநாயக நாடுகளில் இது ஒரு பிரசிச்சினை. அதிகாரம் கட்சிக்கு கட்சி மாறுவதால் சில விடயங்களில் கொள்கை தளம்பல் இருக்கும். பொதுவாக இது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இருப்பதில்லை. ஆனால் உக்ரேன் விடயத்தில் இருக்கிறது. காங்கிரஸ் மட்டும் அல்லாது பிரெசிடென்சியும் ரிப்பளிக்கன் வசமானானால் செலன்ஸ்கி தலைமையிலான உக்ரேனுக்கு சங்குதான். இது புட்டினுக்கும் தெரியும் - ஆகவேதான் he is playing the long game. விடுதலைபுலிகள் பற்றி முன்னர் எழுதும் போது ஒரு தடவை எழுதினேன். Perfect should never be the enemy of the good. அதாவது நாம் விரும்பும் இலட்சிய தீர்வை அடைவதற்க்காக, கிடைக்க கூடிய நல்ல தீர்வை கைவிடக்கூடாது. செலன்ஸிக்கும் அதுதான். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான் நேரம். அதற்குள் ஒன்றில் இழந்த 20% உக்ரேனை மீட்கவேண்டும், அல்லது மிகுதியையாவது தக்கவைக்கும் ஒரு உடன்படிக்கைக்கு போகவேண்டும். ஆனால் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. புட்டின் உக்ரேனில் இறங்கிய தருணமே, டிரம்ப் இதர தீவிர வலது ரிபப்ளிகன் ஆட்கள் சொன்னதை வைத்து, பைடன் தோற்றால் இப்படி ஆகும் என நான், ஜஸ்டின் போன்றோர் முன்பே எழுதியுள்ளோம். பிகு ஆனால் அரசியலில் எதுவும் விரைவில் மாறலாம். தீவிர வலதுசாரிகளின் டார்லிங் தற்போதைய அர்ஜெண்டீனா அதிபர். அவரின் பதவி ஏற்பில் அவர் செலென்ஸ்கியை கொஞ்சாத குறை அவ்வளவு அரவணைப்பு. செலன்ஸ்கியின் தென், வட அமெரிக்க பயணங்கள் தனியே ஊடகங்களை வாசித்துவிட்டு வாந்தி எடுப்போர் சொல்வது போல் “பிச்சை பயணமாக” மட்டும் இல்லாமல், ஆர்ஜெண்டினா வழியாக, American Right இடம் தன்னை/உக்ரேனை re position பண்ணும் முயற்சியாயும் இருக்கலாம்.
  22. யூகே யிற்கான இஸ்ரேல் தூதர் - “இரு நாடுகள் கொள்கை” இனி சரிவராது என்ற தொனியில் பேட்டி கொடுத்துள்ளார் (இதுவே இப்போதைய இஸ்ரேலிய அரசின் நீண்ட கால நோக்கு). இதை சுனக் மறுதலித்துள்ளார். தீவிரவாத இஸ்ரேலிய குடியேறிகளுக்கு பிரிட்டன் வர தடை என கமரன் அறிவித்தார். https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67709805
  23. யுத்தமுனையிலும், கருத்துக்களத்திலும் stalemate. கூடவே பனிக்காலம் வேற. இரு பக்கத்திலும் பெரிய பீரங்கிகள் ஓய்வில் இருக்கும். சின்ன, சின்ன சில்லறை பிஸ்தோலுக்கள் நாமும் இருக்கிறோம் என்பதை காட்ட இடைக்கிடை வெடிக்கும்.
  24. மேலே சொன்ன பட்டியலில் 87 ஒப்பந்தத்தை வேண்டும் என்றே சேர்க்கவில்லை. அது சம்பந்தமாக என் பார்வை வேறுபட்டது. யாழில் முன்பே பலதடவை எழுதியதுதான். எமக்கு சரியான பொறுப்புக்கூறல், தீர்வு அமைந்த பின் இந்த பொது அடையாளத்தை சுமக்கும் படி கொரோனா அது நியாயம். ஆனால் இவர்கள் அணுகுமுறையோ, பிரச்சனையே நாம் இந்த பொது அடையாளத்தை சுமக்க மறுப்பதுதான் என்பது போல இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.