Everything posted by goshan_che
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது. தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது. குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள். சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣. கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை. சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன. பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
என்னை விட என்னை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்🤣. ஆனால் வேறு எந்த திரியிலும் அல்ல, இந்த திரியில் நீங்கள் என் மீது பாய்ந்தமைக்கு…. இப்படியாக ஊரின் யதர்த்ததுடன் உங்களுக்கு விழுந்து விட்ட 15-20 வருட இடைவெளியே காரணம் என்பதை சுட்டவே அந்த் கேள்வியும், பதிலும். நான் இந்த திரியில் வட-கிழக்கு அரசியலை அதிகம் பேசவில்லை. பொருளாதார விடயங்களை மட்டுமே சுட்டினேன். காரணமாய்த்தான். நான் சொல்ல போவதை ஏற்கும் பக்குவம் பலருக்கு இல்லை என்பதால்தான். ஆனால் நான் கணித்தது சரியாயின். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டம் தமிழ் தேசிய அரசியலுக்கு அல்லது தமிழ் தேசிய அரசியல் செய்வதாக பாவனை செய்வோருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கொழும்பு மக்கள் செல்லமாக OGF என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான். டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு. பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
🤣 நாதம் பாய். நான் மலையாளி. வேற வேற டிப்பாட்மெண்ட்🤣. VPN ல அவர் லங்கா, நான் ஆப்கானிஸ்தான்🤣 @nunavilan @பெருமாள் நீங்கள் கடைசியாக இலங்கை போனது எப்போ? ஒரு தரவுக்காக கேட்கிறேன். —————- நான் எழுதுவதில் தரவுப்பிழைகள் இருந்தால்… ஓணாண்டி, ஏராளன், தனி, சுவை போல ஊருக்கு போய் வருவோர் திருத்த வேண்டுகிறேன்🙏.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பிற்சேர்க்கை 1 துறைமுக நகரம் - யாழில் சில வருடங்களுக்கு முன்பு “சீனா வீசா எடுத்துத்தான் போக முடியுமாம்” என்ற அளவில் பலர் திரிகளில் சிலர் சக்கரை பொங்கல் வைக்க காரணமான இடம். காலி முகத்திடலுக்கும், புதிதாக அமைந்த கொழும்பு துறைமுக தெற்கு முனையத்துக்கும் இடையே ஒரு மணல் திட்டாக விரிந்து கிடக்கிறது இந்த து-மு நகரம். கிட்டதட்ட இதன் அரைவாசி பகுதியை மக்கள் போய் பார்க்க முடிகிறது. வாசலில் தனியார் செக்யூரிட்டிகள் மறிக்கிறார்கள். வாகனச்சோதனை இல்லை. ஆனால் கார்/வான் வகைகளுக்குதான் அனுமதி. ஆட்டோவில் போனால் இறங்கி ஒரு golf buggy போல் ஒன்றில் ஏற்றி உள்ளே அனுபுகிறார்கள். ஆனால் போகும் ஒவ்வொரு வாகனமும் ஒரு அப்பை டவுன்லோடு செய்து அதில் போவோரின் விபரத்தை கொடுத்து, போகும் நேரத்தையும், காரணத்தையும் கொடுத்து - ஒரு QR code ஐ பெற வேண்டும். இந்த கோர்ட்டை வாசலில் ஸ்கான் செய்து உள்ளே விடுகிறார்கள். வீதி வழியே போனால் உள்ளே ஒரு நடை பாதை பாலம் தெரிகிறது. அதனை தொடர்ந்து நன்கு செப்பனிட்ட நடை பயிலும் பாதை, செயற்கை கடற்கரை, அதில் நீர் விளையாட்டு சாதனங்கள் என்பன உள்ளன. பாரிய நிரந்தர கட்டிடம் ஏதும் இல்லை. ஆனால் கடற்கரையோரம் பத்து அளவிலான உணவு விடுதிகள் திறந்து வியாபாரம் நடக்கிறது. கடற்கரையில் மக்கள் குளிப்பது, விளையாடுவது நடக்கிறது. அருகே சொகுசு கப்பல்கள் தரிக்கும் ஒரு இறங்கு துறையும் தயாராகிறதாம். நான் போன சமயம் ஒரு பாய்மரக்கப்பல், இரெண்டு அரைச்சொகுசு Yacht (போல் தெரிந்த) படகுகள் அருகே தரித்து நின்றன. முன்பு சைத்திய வீதியில் கடல் அருகே அமைந்திருந்த புத்த கோவில், மற்றும் கலங்கரை விளக்கு இப்போ தரை நடுவே இருக்கிறது. அதுவும் ஒரு காலத்தில் மிக உயரமாக தெரிந்த அந்த கலங்கரை விளக்கு இப்போ ஏதோ ஒரு மாடி கட்டிடம் போல தெரிகிறது. கோல்பேசில் ஷங்ரிலா ஓட்டலுடன் சேர்த்து கோல்பேஸ் வன் எனும் 9 மாடி சொப்பிங் மால் வந்துள்ளது. சப்வே முதல் கொண்டு பல பன்னாட்டு கடைகள் இருக்கிறன. தலைபாகட்டி பிரியாணியும் உண்டு. அளவில் இலண்டன் Westfield, Dubai Mall போல இல்லாவிடினும், தரத்தில் ஒரு 85% கிட்ட வருகிறார்கள். ஷங்ரிலாவின் அருகே இண்டர்கொண்டினெண்டெல் பாரிய இரெட்டை கோபுர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கிறது. பார்க்க வேலைகள் கிட்டத்தட்ட முடிந்தது போலவே படுகிறது. அடுத்து தாமரைக்கோபுரம். கப்பித்தாவத்த கோவில் எதிர்புறமாக பெய்ரா ஏரிக்கரையில் உள்ளது. வாசல் வரை போய் பார்த்தேன். மேலே போகவில்லை. ஓம்…ரேடியோவில் அடிக்கடி அவுஸ்ரேலிய அரசு கப்பலில் வரவேண்டாம், எதுவும் கிடைக்காது என்று போடும் விளம்பரங்கள் ஓடுகிறது. ஆனாலும் மோகம் குறைவாக தெரியவில்லை. மருத்துவத்துக்கு அடுத்த பெரிய வியாபாரம் - வெளிநாட்டு யூனிகளில் இலங்கையில் இருந்து பின் கடைசி வருடம் வெளிநாடு வந்து படிக்கும் வகையிலான படிப்புத்தான். அதே போல் - ரம்பா புருசர், லைக்கா போன்றோரை தமிழர்கள் பலர், ரிசி மூலம், நதி மூலம் பார்க்காமல் வரவேற்கிறார்கள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அடையாளம் தெரியவரும் என்பதால்… கொழும்பான், தனி, ஏராளன், ஓணாண்டி, இன்னும் எத்தனை பேரை சந்திக்காமல் விட்டேன்….இந்த டிக்கெட் காசுக்காக மாட்டுப்படேலுமே🤣. First class எண்டாலும் பரவாயில்லை. தயவு செய்து இப்படி சொன்னது உங்களை போல அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை என நினைக்கவேண்டாம். நான் புலம்பெயர் சந்தை என சொன்னது அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சாமல் அவர்களுடன் fair trade செய்வோரையும், நேரடியாக அவர்களிடம் வாங்கி செல்வோரையுமே.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
யோவ் என்னையா இது…..ரோதனையா இருக்கு…🤣 நீங்கள் எப்ப இலங்கைக்கு சுற்றுலா போனீர்கள்? அப்படியே போனாலும் கட்டுரை எழுதி தாளிச்சு போடுவியளே🤣. அந்த கொக்கதடி கொமெண்ட் இலங்கை போய் வந்து அனுபவம் எழுதிய வேற ஒருவருக்கு. அது எனக்கும் ஜஸ்டினுக்குமான குழுவுக்குறி. கொக்கதடில மாம்பழம் விழும் எண்டு பார்த்தால்…அணில் எல்லே வந்து கிடந்து உருளுது🤣. நாதம் - ஆள் இல்லாத போது கதைப்பது சரி இல்லை. ஆள் வரட்டும் ஆளை பொரில்கலாம்🤣. இறால் போட்டால் சுறா பிடி படும். திமிங்கிலம்?🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கேள்வி பதிலாக மீதி தொடர்கிறதே அண்ணா. இன்னும் சிலதை பிற்சேர்க்கை போல எழுதுகிறேன். உங்கள் ஆச்சரியம்தான் எனக்கும். ஒரு அளவுக்கு மேல் கேட்பது இங்கிதம் இல்லை. அத்தோடு கஸ்டம்தான் நீங்கள் மாசாமாசம் அனுப்புங்கோ எண்டு சொன்னால் கதை கந்தல் ஆகி விடும். ஆனால் கனவில் இல்லை, நிஜமாகவே சமாளிக்கிறார்கள். பலருக்கு சொந்தமாக ஒரு குடிசைதன்னும் இருப்பதால் அந்த செலவு குறைவாக இருக்கும். ஆனால் வியாபாரிகள், சுயதொழில் செய்வோர், முதலீட்டாளர்கள், digital nomads போல creative, IT industry களில் வேலை செய்வோர் நன்றாக உழைக்கிறார்கள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி நிழலி. இதில் இப்போதைக்கு என்பது முக்கியமான சொல். யாழ்பாணம் பொருளாதாரத்தில் முன்னேற நேரடியான வெளி நாட்டு காசு, என்பதை விட வெளிநாட்டு தமிழர் சந்தை என்பது கொஞ்சம் முன்னுக்கு வர தொடங்கியுள்ளது. பனை அபிவிருத்திச் சபை மிக நேர்த்தியாக கற்கண்டு, பனங்கட்டி, இன்னும் பல பொருட்களை பொதி செய்து விற்கிறார்கள். பண்டதரிப்பில் அவர்கள் அலுவலக கட்டிடம் உள்ள கடையில் பலதையும் வாங்க முடிந்தது. சாவகச்சேரியில் ஜப்னா அராக் என பனஞ்சாராயம் அழகிய போத்தலில் 800 ருபாயில் கிடைக்கிறது. மூலைக்கு மூலை மிக்சர் கடைகள். சுண்டல் வண்டிகள் கூட நேர்தியாகவே உள்ளன. ஆனைக்கோட்டை பக்கம் நல்லெண்ணை, எள்ளு பாகு குடும்ப கைத்தொழிலாக பரவலாக நடக்கிறது. குடும்பங்கள் வறுமையிலும் மானத்தோடு வாழ புலம் பெயர் மக்கள் போய், அல்லது இங்கே இருந்தபடி வாங்கும் பொருட்கள் உதவுகிறன. இது அடி மட்டதில் என்றால் மேல் மட்டத்தில் பல கொழும்பு வாழ் யாழ் மக்கள் மீள வந்து முதலீடுகள் செய்துள்ளார்கள். இவ்வளவு ஏன், புறக்கோட்டையில் ஒரு சுண்டல் வியாபாரி பனங்கிழங்கு விற்றார். யார் என பார்த்தால் யாழ்ப்பாணத்தவர். ஒரு காலத்தில் ஆளை சிஐடி அப்படியே அமுக்கி இருக்கும். காலம் மாறி விட்டது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கடன் - அது வடிவேலு வாடகை சைக்கிள் எடுத்த கதைதான். சைக்கிளை விடும் போது வாடகை கட்டினால் போதும்🤣. உண்மையில் வெளியில் இருந்து நாம் குத்தி முறியும் அளவுக்கு இலங்கை அரசோ, மக்களோ கடனை பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. அவர்களின் ஒரே நோக்கு - அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் சீராக இருக்க வேண்டும். பெளத்த விகாரைகள் - இருப்பன இன்னும் புதுப்பிக்கப்படுகிறன. அனுராதபுரத்தில் அத்தனை விகாரைகளிலும் ஏதோ ஒரு மராமத்து பணி நடந்தபடியே இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சிங்கள பகுதிகளில் கூட கத்தோலிக்கர் இடங்களில் புத்தர் முளைத்துள்ளார். தமிழர் பகுதிகள் பற்றி சொல்லவா வேண்டும். புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுக்க கூடாது, புத்தரை பச்சை குத்த கூடாது, டி சேர்ட் அணிய கூடாது இந்த மொக்குதனங்களும் அப்படியே உள்ளன. மக்கள் நிலங்கள் இன்னும் கொஞ்சம் விடுவிக்கபட்டுள்ளன. ஆனால் சுதந்திரம்? அது எதை நீங்கள் சுதந்திரம் என்கிறீர்கள் என்பதை பொறுத்து உள்ளது. வேலை, வியாபாரம் செய்ய, படிக்க, ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால் உண்மையான ஒரு மக்கள் எழுச்சியை ஏற்படுத்த முனைந்தால் - ஆப்பு நிச்சயம். தமிழர் சிங்களவர் முஸ்லிம் எல்லாருக்கும் இதுவே நிலமை. தமிழரும்கும் முஸ்லீமுக்கும் இன ஒதுக்கல் ஒரு கூடிய பரிமாணம். அறகலவுக்கு சமைத்துக்கொடுத்தோர், மாலுப்பாண் வாங்கி தந்தோர், கோட்டாவின் நீச்சல்ன்குளத்தில் குளித்தோர் என சிலரிடம் பேசினேன். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் பழி வாங்கப்பட்டுள்ளனர், அல்லது மிரட்டவாவது பட்டுள்ளனர். 🤣 நற்சான்றிதழ் இல்லை….மனதில் பட்டதை எழுதியுள்ளேன். நன்றி❤️ என்ன வா செய்ய…எனக்கும் ஆசதான்வா…ஆனா மூஞ்சிய காட்ட ஏலா சுட்டி செட் ஆக முடியலவா. ஆனா புது கடை பெயித்து நல்லா திண்டே தான். ராவுல பெயித்து, அந்த பிட்டுவத்தில் ஈந்து கொண்டு நெய்பரோட்டாவும், குலுக்கி சர்பத்தும் அடிச்சா….செல்லி வேல இல்ல வாப்போ…❤️ இது சும்மா…டிரெயிலர்தான்🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி அண்ணா. பலர் இதைத்தான் சொல்கிறனர். கூடவே ரணிலை வெல்ல வைக்க சில வெளிச்சக்திகள் நாட்டை தேர்தல் வரையாவது ஓரளவு சுமுகமாக வைத்திருக்க முனைவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் போகும் போக்கில் இலங்கையில் எதுவுமே அரசின் உரிமையாக இருக்காது போலவே தெரிகிறது. விமான சேவை, விரைவு நெடுஞ்சாலை சேவை, என இலாபம் தரும் சகலதும் விற்க ஏற்பாடாகியுள்ளது. இலங்கை அரசு என்பது வரியை வசூலித்து, கடனை கட்டும் வேலையை மட்டும் செய்வதாக இருக்க கூடும். எரிபொருளில் இருந்து சகல இறக்குமதியும் தனியார் வசம் இருக்கும். இப்படி நாடு முதலாளிகள்/முதலீட்டாளர்கள் கைக்கு போவது - சிறுபான்மையினருக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் தமிழர்களே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை. கேள்வி கேட்ட என்னை பைத்தியக்காரர் போல தமிழர்கள் சிலர் பார்க்கிறார்கள். சம் சும், கஜே, விக்கி வகையறாக்களின் பைத்தியக்காரத்தனம் = தமிழ் தேசியமே பைத்தியக்காரத்தனம் என நினைக்கும் போக்கு பல தமிழரிடம் கண்டேன். முன்னர் பெரும்பான்மையான தமிழர் அரசியல் உணர்வோடும், ஒரு 25% நழுவும் மனநிலையில் இருந்திருப்பின், இப்போ பத்துக்கு எட்டு பேர் நழுவல் மனநிலையில்தான் உள்ளனர். ஆனால் சிங்கள பெளத்தத்தை மீறி ஒரு அடி நகரவில்லை நாடு. முன்னர் போல சிங்கலே…அடிதடி, வெருட்டு, வெளிப்படையாக இல்லை - ஆனால் பிக்குகளின் சிங்கள மக்கள் மீதான பிடி அப்படியேதான் இருக்கிறது. நான் கதைத்த மட்டில், போர் வெற்றி இறுமாப்பை பொருளாதார அழிவு கொஞ்சம் குறைத்துள்ளது, ஆனால் இன்றும் தமிழர் நிலத்தை பறிப்பது, அரசியல் உரிமையை மறுப்பது, சிங்கள மயமாக்கலை நியாயப்படுத்துவது இப்படியானவற்றில் சிங்கள சமூகம் பழைய மனநிலையில்தான் உள்ளது. நான் நினைக்கிறேன்…. பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம். தமிழர்களும், முஸ்லிம்களும் மனசார தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக உணர்கிறனர். அதுவே உண்மையும் கூட.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….