நான் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்தே வருகிறேன் - இன்னும் ஒரு 3 மாதம் குறைந்தது இழுபடும் போல தெரிகிறது.
Howey test எனும் கிரிப்டோவிற்கு முந்திய வழக்கின் அடிப்படையில் XRP கரன்சியா, security யா என்பதே வழக்கின் அடிப்படை தர்க்கம்.
செட்டில்மெண்டில் அல்லது தீர்ப்பில் XRPக்கு சாதகமானால் - XRP விலை எகிறும், அதே சமயம் கிடைக்கும் legal clarity யால் ஒட்டுமொத்த கிரிப்டோ உலகுக்கும் இது ஒரு பூஸ்டாக அமையும்.
மறுவளமானால் XRP தரை தட்டும். ஆனால் அவர்கள் இப்போ அமெரிக்காவுக்கு வெளியே இருந்து செயல்படுவதை பற்றி (plan B) சீரியசாக யோசிக்கிறார்கள்.